துணிக்கடை துச்சாதனர்கள்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 3,597 
 
 

பிரபல துணிக்கடையில் சேலை வாங்க நுழைந்தாள் ஷீலா. ஆயிரக்கணக்கில் சேலைகளைப் புரட்டி புரட்டிப் பார்த்தும் ஒன்றும் பிடிக்கவில்லை.

‘சே! என்ன கடை இது?! ஒண்ணுமே பிடிக்கலை.

வெறுத்துப்போய் வேறு கடைக்குப் போனாள். அங்கும் எதுவும் பிடிக்க வில்லை. வெளியேறினாள். 

ஷீலா போல ஆயிரம் பேர். தினசரி வாடிக்கையாய் நடப்பது இதுதான்.

கடை சேல்ஸ் மேன்களைப் பற்றி இந்த பெண்கள் ஏனோ கவலைப்படுவதே இல்லை.

எந்த ஜென்மத்தில் என பாவம் செய்தார்களோ, இப்படி சேல்ஸ் மேன்களாய் வேலை பார்க்க!

பின்ன என்ன ??

பாபநாசம் அன்று பாடினார் 

‘என்ன தவம் செய்தனை யசோதா..?
எங்கும் நிறை பர பிரம்மம்
‘அம்மா..!’ என்றழைக்க
என்ன தவம் செய்தனை?!’ என்று.

அன்றைய துச்சாதனர்கள்தான்  இன்று துணிக்கடை சேல்ஸ் மேன்களாக அவதரித்திருக்க வேண்டும்?!

அன்று திரெளபதி சேலைகளை உரிந்து உரிந்து போட்டு களைத்துப் போனார்கள். இன்று அவர்கள் கலைத்துக் கலைத்துப் போட்டவற்றை மடித்து மடித்து வைத்தே மாண்டு போகிறார்கள்.

சிவன் பாட வேண்டாம்! எந்த ஜீவனாவது இன்று துச்சாதன சேல்மேன்களுக்காகப் பாடக்கூடாதா? 

‘என்ன பாவம் செய்தனை துச்சோதனா..?! இப்படி திரெளபதிகள் சேலை செலக்ட் செய்யும் சாக்கில் ரேக்கிலிருக்கும் சேலைகளை உருவி உருவிப்போட்டுவிட்டு ஒன்றும் வாங்காமல் போக! அவற்றை மடித்தே நீ… மாண்டுபோக! என்ன பாவம் செய்தனை?’ என்று பாடவில்லையே ஏன்?

யாரும் பாடவில்லை என்பதற்காக நாம், சும்மா விட்டுவிடுவதா?!

‘ஓ! தெய்வம் நின்று கொல்லும்!’ என்பது இது தானோ? நாமாவது கதையாக்கி கருணை காட்டுவோம்!

‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!’

கிருஷ்ண…! கிருஷ்ண…! கிருஷ்ணா!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *