கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 1,671 
 
 

ராகுல்-ப்ரீத்தி தம்பதிகள் Plus1 படிக்கும்  தங்கள் ஒரே பெண் திவ்யாவுடன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்..

புகாரை வாங்கிப் படித்த இன்ஸ்பெக்டர் விஷ்ணு, நீங்க இதை பள்ளி நிர்வாகத்திடம் சொன்னீங்களா என்று கேட்க..

சொல்லியாச்சி சார்..அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கல..

கான்ஸ்னபிள் வண்டி எடுங்க.. ஜீப் வேண்டாம். T-board வண்டி சொல்லுங்க. மஃப்டி dress போடுங்க என்று சொல்லி தானும் மஃப்டியில் மாறினார்..

பள்ளி காவலரிடம் அடையாளத்தை காட்டி காரை பார்க் செய்துவிட்டு தாலாளர் அறைக்கு சென்றனர்..

சார்.. இவங்க சொல்றது உண்மையா? புகார் குடுத்தாங்களாமே.. என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. 

சார்.. அது…வந்து.. வந்து.. 

கூப்பிடுங்க அந்த டீச்சர..நான் படிக்கிற காலத்துல என்  அப்பா எங்க வாத்தியார் கிட்ட ரெண்டு கண்ண மட்டும் விட்டுட்டு தோல உரிச்சிடுங்கன்னு சொல்லுவார்.. இப்ப அதெல்லாம் மாறி வேற விதமான சைலன்ட் டார்ச்சர் படிக்கிற பசங்களுக்கு. 

School uniform dress உங்க கிட்டேயே வாங்கணும்..நீங்கள் சொல்ற டைலர்கிட்ட தான் தைக்கணும். எதுக்கு school உள்ளேயே stationery ஷாப். எல்லாவற்றிலும் லாபம் சம்பாதிக்கணும் இல்ல..அந்த டீச்சர் private ஆ டியூஷன் சென்டர் வேற வெச்சி நடத்தறாராமே. அதுல சேராத பசங்கள எல்லாம் இந்தமாதிரி குறி வைக்கிறாராமே. ஏன் க்ளாஸ்லேயே ஒழுங்கா பாடம் நடத்தலாமே..

சரி நம்ம பாயின்டுக்கு வருவோம். எதுக்கு kneel down பண்ண சொலறாரு அந்த டீச்சர்  இவரோட period வரும்போதெல்லாம். அதுவும் class time முடியிற வரைக்கும்.. இந்த பொண்ணோட medical history தெரியுமா அவருக்கு? 

டாக்டர் ரிப்போர்ட் பாருங்க. முட்டி எலும்பு ரொம்ப வீக் ஆயிருக்காம்  திவ்யாவுக்கு. ப்ராக்டிகல்ஸ் மார்க் குறைச்சிடுவேன்னு மிரட்டறாராமே.. பிரம்பு எடுத்து அடிச்சி தழும்பு காயம் ஏற்படுத்துவது மட்டும் தான்  தண்டனையா? .

இது தொடர்ந்தால் நாங்க next time uniform ஓட வருவோம். போலீஸ் ஜீப் உங்க காம்பவுன்டுக்குள்ள நுழையறதும் நுழையாம இருகறதும்  இனிமேல் உங்க கையில்..  

நீங்கள் எல்லாம் இந்த மாதிரி டீச்சர்ஸ protect பண்றது மறைமுகமா encouragement பண்றதுக்கு சமம்.. By the bye அந்த டீச்சர்தான் திவ்யாவோட ட்ரீட்மென்ட் செலவு மொத்தத்தையும் ஏத்துக்கணும்.. மன உளைச்சல் அது இதுன்னு சொல்லி எதாவது ஏடாகுடமா ஆயிருந்தா என்ன செய்வீங்க..

சாரி சார்.. நாங்க immediate ஆ  action எடுக்கிறோம் என்று தாலாளர் சொல்லும் அதே சமயம் excuse me என்று ஒரு டீச்சர் உள்ளே நுழைய.. இன்ஸ்பெக்டர் விஷ்ணு அவரின் தோளை தட்டி be serious.. மத்ததெல்லாம் உங்க principal சொல்லுவாரு என்று கிளம்பினார்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *