விவா-கேம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 1,034 
 

பொண்ணுக்கும் பையனுக்கும் மொதல்ல பிடிக்கட்டும். மத்ததெல்லாம் பிறகு பேசிக்கலாம் – இது ராகுலின் தந்தை சுந்தரேசன்.

Yes sir..நீங்க சொல்றது தான் சரி. ஏதாவது பொதுவான இடத்தில உங்க பிள்ளை ராகுலை வரச்சொல்லுங்க U.S.  போறதுக்குள்ள.  நானும் ப்ரீத்தியை வந்து பார்க்க சொல்றேன்  – இது பெண்ணின் தந்தை சரவணன்..

இருவரும் பரஸ்பரம் சந்தித்தார்கள் ஒரு நாள். அவரவர் பெற்றோரிடம் பிடிச்சிருக்கு என்று சொல்ல.. கோலகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது. ஒன்றாக போட்டோ எடுத்துக் கொண்டனர் ராகுலும் ப்ரீத்தியும். உறவினர்களும் ஒருவருக்கொருவர் அன்னியோன்னியம் ஆனார்கள். ஒரு மினி கல்யாணம் என்றே சொல்லலாம்..

இரு வீட்டார் கல்யாணம் என்பதால் செலவுகளும் 50-50 ஆனது. ஜவுளி, சத்திரம், சாப்பாடு, போட்டோ, வீடியோகிராஃபி, மேக்கப், கச்சேரி என்று எல்லாவற்றிலும் investment லட்சக்கணக்கில் செலவு செய்தனர் சுந்தரேசன் மற்றும் சரவணன் குடும்பத்தார்..

ராகுல் பறந்தான் அமெரிக்காவுக்கு.போன மூன்றே மாதத்தில் திரும்பி வந்தான். கல்யாணத்துக்காக என்று நினைக்காதீர்கள். அதை நிறுத்துவதற்காக. 

அப்பா..அந்த பொண்ணு வேண்டாம்ப்பா. செட் ஆகாது. ரொம்ப டார்ச்சர்ப்பா போன் பண்ணி. என்னால வேலையில concentrate பண்ணவே முடியல.

என்னடா இப்படி குண்டு தூக்கிப் போடற. போய்ப் பாத்து பேசி ஓக்கேன்னு சொன்ன பிறகுதானடா proceed பண்ணோம். 

அய்யோ அப்பா.. அதெல்லாம் இல்லேன்னு சொல்லல. ஒரே நாள்ல ஒருத்தரோட character அ எப்படி புரிஞ்சிக்க முடியும். Please stop the marriage. எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க. அதுக்கு வேற ஏதோ affair  இருக்கும் போலிருக்கு.  என் character.  மோசம்ங்கிறா. அவ்வளோ தான் சொல்ல முடியும். 

கல்யாணம் ஆயிருந்தாலும் divorce ல தான் முடிஞ்சிருக்கும். Mutual னா கூட one year wait பண்ணனும். அதுக்கு இதுவே மேல். நான் ஒரு வக்கீல் கிட்ட பேசிருக்கேன். Legal ஆ பண்ணித்தரேன்னு சொல்லிருக்காரு. Please புரிஞ்சிக்கோங்கப்பா. 

அங்கு.. ப்ரீத்தி வீட்டில்..

என்னடி.. பத்திரிக்கை எல்லாம் அடிச்சி distribute பண்ற நேரத்தில இப்படி சொல்ற. எவ்வளோ செலவு ஆயிருக்கு தெரியுமா.  இப்பப்போய் கல்யாணம் வேணாங்கிற. 

அப்பா..அவன் மோசம்ப்பா. அப்பா அம்மாவை விட்டுட்டு வெளிநாட்ல வேலை செய்ற பசங்க character பத்தி இப்பத்தான் தெரியுது. வீடியோ கால்ல வாங்கிறான். எத்தன பேர கூப்டானோ அப்படி. ஏன் போன் engage  ஆ இருக்கூங்கிறான். துப்பட்டா போட்டியா வெளியில் போகும்போதுன்னு கேக்கிறான்.  எங்க இருக்கேன்னு எவிடன்ஸ் வேணுமாம் அவனுக்கு. தாலியா கட்டிட்டான்? My god.. தப்பிச்சேன். போடா..போய் வேற எவளையாவது பாத்துக்கோன்னு சொல்லிட்டேன்.

வழக்கறிஞர் ஆபீசில் இரு வீட்டார் பஞ்சாயத்து. ராகுல் வீட்டார் அவனுக்குப் போட்ட bracelet  chain ring dress க்காக தந்த பணம் திருப்பித் தந்தனர்.

ப்ரீத்தி வீட்டார் அவளுக்கு வாங்கித் தந்த நிச்சயதார்த்த புடவை (கட்டியது)_ 5 சவரன் செயின், மோதிரம் திருப்பித் தந்தனர். எடுத்துக் கொண்ட போட்டோஸ்,  ஆல்பம், pendrive, பத்திரிக்கை எல்லாம் அழிக்கப்பட்டது. ஆனால் அவரவர் மொபைலில் க்ளிக்கியதை என்ன செய்ய முடியும்?

Legal document தயார் செய்து பரஸ்பரம் இரு வீட்டுத் தலைவர்களும் கையொப்பமிட்டு, சாட்சிக் கையெழுத்திட்டு முறையே நடந்த நிச்சயதார்த்த வைபவம் முறிக்கப்பட்டது. விவாக ரத்து கேள்விப் பட்டிருக்குறோம். இங்கு நடந்தது நிச்சயதார்த்த ரத்து.  

சத்திரக்காரன், சமையல் காரன், மற்ற பிற விஷயங்களுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்பப் பெற அலைகிறார்கள். அவர்கள் கொடுக்கும் போதுதானே  திரும்பக் கிடைக்கும். இல்லேன்னா அதுக்கும் கேஸ் கோர்டுன்னு அலையணும்..

கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் தான். ஆனால் சிலருக்கு அது ஒரு GAME.

கடைசி வரை ஏன் நிறுத்தினார்கள் என்ற உண்மை அவரவருக்கே வெளிச்சம். இவர்கள் சொல்லும் காரணங்களின் உண்மைத் தன்மையை பரிசோதிக்கவா முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *