கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2023
பார்வையிட்டோர்: 1,033 
 

மாடியில் உள்ள படுக்கை அறை கட்டிலில் படுக்கையில் அமர்ந்து இருந்த இளம்பெண் ஷீலா, லேப்டாப்பில் மூழ்கி இருந்தாள். அருகில் அவளுடைய பெண் குழந்தை மீரா உறங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று அறை வாசலில் ஓர் உருவம் தெரிந்ததைப் பார்த்த ஷீலாவின் கண்கள் சிவந்தன.

‘நில் உள்ளை வராதே நீ என் கணவர் ராஜேஷ் இல்லை ன்னு எனக்கு தெரியும்’ என்றாள். அந்த உருவம், அவளது கணவனைப் போல் உருவம் கொண்ட ஓர் இளைஞன். அவன் பேசினான் –

‘கத்தாதீங்க மேடம், குழந்தை தூங்கறா இல்லை. ராஜஷை வளர்த்த பெரியப்பா பெரியம்மா தாத்தா பாட்டி, டிரைவர், பணியாளர்கள் யாரும் கண்டுபிடிக்கலை நீங்க கண்டுபிடிச்சுட்டிங்க அதுலயே நீங்க அந்நியோன்னியமான ஜோடி ன்னு தெரியுது பாராட்டுக்கள்’

ஷீலா சிடுசிடுத்தாள் – ‘ யாருக்கு வேணும் உன் பாராட்டு.. என்ன திட்டத்தோடு இந்த வீட்ல நுழைந்து இருக்கே. உன் குட்டை உடைச்சா கீழே இருக்கிறவங்க தாங்க மாட்டாங்கன்னு அமைதியா இருக்கேன் ‘

குழந்தை மீரா எழுந்து உட்கார்ந்து இருவரையும் பார்த்து விட்டு மறுபடியும் படுத்துக் கொண்டது.

இளைஞன் பேசினான் :’ ரெண்டு நிமிஷம் நான் பேசுவதை பொறுமையா கேளுங்க. என் பேரு கணேஷ், நேத்து ராஜேஷ் சார், அவரோட ஆசிரியரின் மணி விழாவுக்காக விழுப்புரம் போய் இருந்தாரு இல்ல. இவரை மாதிரி பிசினஸ் மேக்னட் கூட ஒருத்தர் ரெண்டு பேர் இருப்பாங்க இல்ல. ஆனால் இவர் தனியாக ஒத்தையா வந்தாரு போல அறுபதாம் கல்யாணம் , விருந்து எல்லாம் முடிஞ்ச பிறகு அவருக்கு திடீரென ஸ்ட்ரோக் வந்திடுச்சு… ‘

ஷீலா இடை மறித்தாள்

‘என்ன கதை… இந்த வயதில் ஸ்ட்ரோக்கா? ‘

கணேஷ் பேசினான்’ இதுக்கு பதில் சொல்ல நான் என்ன டாக்டரா? நான் மண்டபத்தில் வாசலில் இருந்தேன். நான் சார் மாதிரியே இருந்ததால் சில பேரு ஒங்க அண்ணனுக்கு உடம்பு சரியில்லை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போன்னு சொன்னாங்க நான் உள்ளே போனேன் நான் அவரை மாதிரியா ன்னு நெனக்க கூட நேரம் இல்லை. கார்ல அவரை ஏத்திகிட்டு பாண்டிச்சேரி போகலாம் ன்னு யோசிச்சேன். நேரம் வீணாக கூடாது விழுப்புரத்தில் இதற்காக ஸ்பெஷலிஸ்ட் இருக்கிற மருத்துவமனையில் சேர்த்தேன்… ‘

‘நீ சொல்றதை நம்பலாமா? ‘ ஷீலா கேட்டாள்.

‘இதுக்கு தான் நான் அவர்கிட்ட நீங்க வீடியோ கால்ல பேசுங்க.. ன்னு சொன்னேன். அவரு வாய்ஸ் கால்ல பேசினாலும் வீடியோ கால்ல பேசினாலும் என் மனைவி என் குரல் ஈன ஸ்வரம் ஆக இருக்கறத பார்த்து பேனிக் ஆயிடுவாங்க ன்னு சொன்னாரு.. நீங்க போய் பக்குவமாக சொல்லுங்க ன்னாரு’

ஷீலா கவலையுடன் கேட்டாள் : ‘ நான் என்னதான் பண்ணனும்னு சொல்றாரு.. எப்படி இருக்காரு இப்ப… ‘

கணேஷ் பதில் சொன்னான்

‘அவருக்கு பரவாயில்லை வலது கை அசைக்க முடியல என் நண்பன் ஜீவா வை அவருக்கு துணையாக வெச்சிட்டு நான் சென்னை வந்தேன். இப்படி ஆச்சு ன்னு பெரியவங்களுக்கு தெரிஞ்சு அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா ஒங்களால சமாளிக்க முடியாது வீட்டில் பணியாளர்களுக்கு தெரிஞ்சா அவங்க ஊரு முழுக்க சொல்லிடுவாங்கன்னு பயப்படறாரு.. இப்படி ஆயிரம் எண்ணங்கள் அவர் மனசுல ஓடுது. நாளைக்கு காலைல நீங்களும் நானும் குழந்தையும் கடலூரில் இருக்கிற அவருடைய தாய் மாமா வீட்டுக்குப் போறதா பெரியவங்க கிட்ட சொல்லிட்டு விழுப்புரத்திற்கு வரணும் ன்னு சொல்லி இருக்காரு.. நீங்க ரூம் கதவை சாத்திக்கங்க நான் வெளியே இருக்கும் சோபாவில் படுத்துக்கறேன். ‘ என்ற கணேஷ் அறையை விட்டு வெளியேறினான்.

ராஜேஷின் வீடு விழாக் கோலம் பூண்டிருந்தது. அவனை வளரத்த பெரியப்பாவின் மணி விழா. ராஜேஷும் அவன் மனைவி ஷீலாவும் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்கள்.

விழா தொடங்காத காலை நேரம். நிலைக் கண்ணாடி முன் அலங்காரம் செய்து கொண்டிருந்த பெற்றோர் அருகில் புத்தாடை அணிந்து இருந்த குழந்தை மீரா வந்தாள்

‘தாத்தா பங்க்சன்ல என்னைப் பார்க்க கூட மாட்டேன் ங்கறீங்க’ வாயாடினாள் மீரா. இருவரும் சிரித்தார்கள்.

‘ஏன் கணேஷ் சித்தப்பா வை கூப்பிடலை இந்த பங்சனுக்கு..’

‘ யாரை சொல்றே’ கேட்டான் ராஜேஷ். ‘ ஒன்ன மாதிரி இருப்பாரே அன்னிக்கு நம்ம வீட்டுக்கு நைட்ல வந்தாரே கணேஷ் சித்தப்பா அவரை கூப்பிடலியா அவர் தானே ஒனக்கு உடம்பு சரியில்லாதப்ப காப்பாத்தினாரு..’ குழந்தை கேட்டாள்.

‘ அப்பா பாருங்க மீரா குட்டிக்கு அறிவு எல்லாத்தையும் கவனிச்சிருக்கு பாருங்க தங்கம்’ குழந்தையின் கன்னத்தைத் தொட்டு கொஞ்சினாள் ஷீலா.

‘ நான் ஒண்ணு கேட்டா நீங்க ஏதாவது பேசுவீங்க போங்க ரெண்டு பேரும் ‘ என்று கூறி அங்கிருந்து ஓடினாள் மீரா. ஷீலாவும் ராஜேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

****

( குறிப்பு :Stoke பற்றி கூறப்படுபவை :

ஒருவருக்கு stroke ஏற்பட்டுள்ளதன் அறிகுறிகள் துவளும் கைகள், சரியும் வாய், வார்த்தை பேசுவதில் தடுமாற்றம் /குழறும் பேச்சு

வீட்டில் / பணியிடங்களில் / விசேஷ நிகழ்ச்சிகளில் அருகில் இருக்கும் உறவினர்கள் / நண்பர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். துரித நடவடிக்கை / நேரம் இரண்டும் முக்கியமானது)

– என்னைப் போல் ஒருவன் – உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட 10 கதைகள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *