போதையின் பாதையில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 1,911 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா…நான் இனிமே காலேஜ்க்கு போவமாட்டேம்மா.”

“ஏண்டா….ஏண்டா திடுதிப்னு இப்டி வந்து சொல்ற…? எதுக்குடா…? சொல்லுடா”

“அம்மா…எல்லாரும் என்னை கிண்டல் பண்றாங்கம்மா; அதான்..”

“எவண்டா அது அப்டி பண்றது…எம்மவனுக்கென்ன அ..ழகில்லயா? அ…ந்தஸ்தில்லியா அல்ல புத்திசாலித்தனந்தான் இல்லயா எம் முன்னால அவனுங்கள் கூட்டியாந்து காட்டுடா! ஒரு கேள்வியாவது நறுக்குனு கேக்கறேன்” என்றார், அந்தக் காளையைப் பெற்ற வீரத்தாய்.

“ம்மா….அவன்க என்ன மாதிரி புதுசாச் சேந்தவனுங்கள் எல்லாம் இப்டித்தான் ‘ராக்கிங்’ பண்றாங்க. எனக்கு இதெல்லாம் இதுவரைக்குந் தெரியாது. ஹாஸ்டல்லயும் இதே பாடுதான். விட்டா கால் சட்டயக் கூட களட்டிடுவானுங்க போலருக்கு”

“ஏப்பா…. தம்பி… இதெல்லாம் கொஞ்ச நாள் தான்ய்யா இருக்கும்” எதிர்காலக் கனவுகளைக் கண்களில் தேக்கியவளாய்க் கூறினார், அம்மா.

“ஆமாம்..மா…கொஞ்ச நாளக்கித்தான். பெறவு, சரியாய்டுவாங்கன்னாங்க” மகனும் ஆமோதித்தான்.

“அப்போ… நீ கொஞ்சநாள் கஸ்டப்பட்டுக் காலத்தைத் தள்ளிடு. பெறவு கவலையில்ல. ஏன்னா உங்க ஐயா சேத்து வச்ச சொத்து சொத்து ரெண்டு தலமொறைக்குக் காணும். அவர் போனதுலருந்து ஏதோ ஒந்தங்கச்சி புருசன் பாத்துகிட்டு வாரான். அதக் கட்டிக்காக்கதுக்காவது நீ படிச்சாவணும்லயா? அதுக்குத்தான்” மகனின் மனத்தை அறிந்து, படிப்பதன் காரணத்தை விளக்கினார்.

“ம்….ஒனக்காகத்தான் பாக்கேன்” கூறிய மகனைக் கண்டு மகிழ்ச்சியைப் புன்னகையில் தெரிவித்தார், தாய். அதைப் பார்த்து, “சரி நான் இன்னும் ரெண்டு நாளய்ல பட்டணம் போறேன்” என்றான்.

“நானும் வேண்டியது எல்லாத்தயும் சந்தைக்கிப் போயி வாங்கிட்டு வாரேன். நீ ஒரு நடை, அசலூர்ல இருக்க தங்கச்சியப் பாத்துட்டு வா பிள்ள ஒன்ன போவய்க்கி ….. மின்ன ஒருவாட்டி பாக்கணும்னா… போப்பா” உறவைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க மகனுக்கு வழி கூறினார்.

வீரண்ணன், தன் சொந்த மண்ணிலிருந்து புறப்பட்டுச் சென்னை வருகிறான். வரும் வழியெல்லாம் அன்று, “ஏலே வீரண்ணா முடிஞ்சவரைக்கும் நாக்கக் கடிச்சிட்டு காலத்தக் கழிச்சிடுப்பா… நீ படிச்சிட்டு வந்தா இனிமே நான் எவந்தயவயும் நாட வேண்டாம் நாட பாரு” அன்னை சொல்லிய வார்த்தைகளை மனனம் செய்து கொண்டே வந்தான்.

அன்று திங்கட்கிழமை. கல்லூரியில் ‘ராக்கிங்’ இன்னும் முடிந்த பாடில்லை என்பதற்குப் புதிதாகச் சேர்ந்த மாணவர்கள், பயத்துடன் தன்னைப் போலவே ஓரமாக, நடுங்கி ஒடுங்கிச் செல்வதிலிருந்து அறிந்தான். எப்போது எவன் கூப்பிட்டுக் “கமல் மாதிரி டான்ஸ் ஆடுடா, ரஜினி மாதிரி ஃபைட் பண்ணுடா, இல்லாட்டி அமலா மாதிரி பரதநாட்டியம் ஆடுடா”ன்னு சொல்வாங்களோ என்று பயந்தே செல்கிறார்கள்.

வகுப்புக்குள் செல்லாமல், வகுப்பில் உள்ள மாணவர்கள் எவ்வளவு பேர் என்று பார்த்தான். கையிலுள்ள விரல்கள் அளவுகூட மாணவர்கள் இல்லை. ஓரமாக ஒரு மாமரத்தடியில் வந்து உட்கார்ந்தான். கையோடு கொண்டு வந்த ஒருசில பக்திப்பாடல் புத்தகங்களை விரித்துப் படித்துக் கொண்டிருந்தான். அன்னையின் அன்புக் கட்டளை இது. பயம் வரும் போதெல்லாம் படிக்கச் சொன்னார்.

அவனைவிட இரண்டு வருடம் ‘சீனியரா’ன, நரேஷ் குமார் இவனிடம் வந்தான். அவனும் இவனைப்போல் கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பவன். கோடீஸ்வரர் ஒருவரின் ஏக புத்திரன். அக்கா தங்கை என்று சொல்ல யாருமில்லை. இந்தக் கல்லூரியில் சேர்ந்தது முதல் அவன் எல்லாவிதக் கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகிவிட்டான் எனலாம்.

அவன் இவனருகில் வர வர இவன் நடுங்காமல் நடுங்கினான்.

‘ஹலோ வீரண்ணே! என்ன இங்க உக்காந்துட்டுருக்கே, வணக்கம்!” கூறியவனைப் பார்த்தவன், எங்கே கையைக் கொடுக்கச் சொல்வானோ என்று வார் போட்ட செருப்புக்குள் இருக்கும் விரல்கள் தந்தியடிக்க, கை விரல்களோ வைத்திருக்கும் புத்தகங்களை உடும்புபோல் கெட்டியாய்ப் பிடிக்க, “வ…..ணக்கம்! சும்மாதான்” என்றான். மனத்துக்குள், “ஐயோ, வந்து ரெண்டுநாள் கூட ஆவலே! இதுக்குள்ள இவங்கிட்ட மாட்டிக்கிட்டமே!” பேசிக்கொண்டான். அவன் கண்கள் கொலையைப் பார்த்ததுபோல வெளிற, வயிற்றிலிருந்து அவன் விட்ட பெருமூச்சில் வியர்வைத் துளிகள் முகத்தில் முத்துமுத்தாய் எழும்பப் பேயறைந்தவன்போலக் காட்சியளித்தான். எதைப் பேசினாலும் தெளிவாகச் சொல்லமுடியாத தவிப்பில் வசனம் பேசினான்.

“அட என்னப்பா தயவுசெஞ்சி, அது இதுன்னு சொல்லிக்கிட்டு. சே சே! இதெல்லாம் ஓல்ட் ஃபேஷன். அழகாக, ப்ளீஸ்னு ஸ்டைலாச் சொல்லு. சரி வா உன் கதயக் கொஞ்சம் சொல்லு”

அன்றைய நாள் வரையிலான தனது வரலாற்றைச் சொல்லி முடித்தான். சொல்லி முடிக்குமுன் இருவரும் மெல்ல தேநீர்க் கடைக்குச் சென்றனர்.

“இந்தா ஒரு காஃபி 40 காசு……ம்…காசெல்லாம் வேணாம்…அதெல்லாம் தரக்கூடாது. அதுதான் ஃபேஷன்” என்று கடைக்காரனிடம் பேசியபடி, வீரண்ணனிடம் நாகரிகத்தைப் பற்றி எடுத்துரைத்தான்.

“சரிங்க”

“ம்..பாத்தியா…இப்பதானே சொன்னேன். இந்த சும்மா மரியாதை, பந்தா இதெல்லாம் வேணாம்னு. வா…போ…ன்னு சொல்லு. அதுபோதும்!” என்றான் நரேஷ்.

மதியம் அவனும், இவனும் காஸினோ தியேட்டரில் ஒரு படத்துக்குச் சென்றார்கள். படம் துவங்கியது.

“ஏ ஒன்’ ப்லிம்! இது மாதிரி படத்தயெல்லாம் மிஸ் பண்ணக்கூடாது. பை சான்ஸ் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறையும் பாக்கணும். எனக்கு இது முப்பத்தி மூணாவது முறை”

வீரண்ணனுக்குப் பார்க்கப் பிடிக்கவேயில்லை கதாநாயகி இவன் எதிர்பார்த்த கலாசாரப் பெண் போல இல்லை. என்ன செய்ய, நரேஷின் சுவையுணர்வைப் பற்றி அறிய வைத்ததே இந்தப் படம்தானே! இடையிடையே, “உய்…ய்ங்…..” விசிலடித்தனர் பலர். இவை எல்லாவற்றையும்விட நரேஷின் வார்த்தைகள் அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் எதிர்க்கவும் முடியவில்லை. இடையிடையே ஏதேதோ பேசிய நரேஷிடம் தென்பட்ட ஏதோ ஒரு வசீகரம் அவனைக் கவர்ந்திழுத்தது.

ஒருவழியாகப் படம் முடிவடைந்தது. வெளியே வருகையில், “ஹௌ ஈஸ் இட்?”

“பைன்!” உதட்டால் பேசினான். பேச்சு பலப்பலவாக நீண்டது.

இருவரும் விடுதிக்கு வந்தனர். இரவுச் சாப்பாட்டைத் துவக்குமுன்பு, நரேஷ் ஒரு சில போதைகளைப் பற்றி இவனுக்குச் சொன்னான்.

“இங்க பாரு வீரண்ணா! நான் சொல்ற பொருள்கங்க எல்லாம் பூலகத்துல இருந்துட்டே உன்ன சொர்க்கலோகத்துக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க! அப்டிப்பட்ட பவர்ஃபுல் திங்ஸ்!”

“என்னங்க அது?”

“எனக்கு ஒன்னு தெரிஞ்சிடுச்சி. நீ சாமானியமா பொழைக்க முடியாதுன்னு. ஏன்னா, எத்தனமுறை சொன்னாலும் நீ மாறவே மாட்டேங்கிறியே?” என்றவனைக் க் கண்ணால் என்ன என்று கேட்பதுபோல் கேட்ட வீரண்ணனுக்கு,

“என்ன ‘இங்க’ல்லாம் போட்டுட்டு? சும்மா வா போன்னு கூப்பிடு. ஆங்… இந்த ஜின் இருக்குல்ல ஜின்! அதக் கொஞ்சம் கலரோட சேத்து சாப்ட்டா நீ ரொம்ப ‘ஆக்டிவ்’வா ஆகிடலாம். அப்புறம், கொஞ்சம் அபின் சாப்ட்டா உன்னை மன்மதன் மாதிரி மாத்திடும். அதோட கொஞ்சம் போதை மாத்திரை எடுத்துட்டியானா, கல்லூரி விடுதியில் நீ விரும்பியபடி கனவுலகில் மிதக்கலாம்!” என்று கூறியது பதிலாகவும் கூடுதல் இனாமாகவும் தென்பட்டது. மேலும் ஜீன் போன்ற மதுபான வகைகளின் பெயர்கள் கிராமத்திலிருந்து வந்த அவனுக்கு வியப்பைத் தந்தன.

“அட அப்டியா ஆனா எனக்கு எதுவுமே எதுவுமே இதுல தெரியாதே நரேஷ்!”

“இரு…இரு…எல்லாம் தெரிய வக்கிறேன். இதெல்லாம் முடியாட்டிப் போனா ஒரு பதினஞ்சு ரூபாய்க்குப் ஏதாவது குடிக்கலாம். அதுவும் இல்லாட்டி ஒரு நல்ல கெமிஸ்ட்கிட்டப் போயி ஒரு பார்முலா செஞ்சுத்தரச் சொன்னா அவங்க ஒரு மருந்து தருவாங்க!”

“அதுவும் முடியலன்னா..?” கேள்வி கேட்ட வீரண்ணனிடம்,

“ம்…கொஞ்ச நேரத்திலேயே தேறிட்டியே!” என்று பாராட்டிய நரேஷ்,

“டோண்ட் ஒர்ரி. இருக்கவே இருக்கு லோ கிளாஸ் பொருள்ங்க! கஞ்சாவை சிகரெட்ல வச்சி ஸ்மோக் பண்ணலாம் ரௌடீஸ் மாதிரி டிரஸ் பண்ணிட்டு, ஒரு ‘அரக் ஷாப்’ல போய் ஒரு டம்ளர் அட்ச்சிட்டு வரலாம். இந்த வகையெல்லாம், நம்ம கைல அதிகம் பணம் பொரளாதப்போதான்! ஓ கே!”

“ம்…. ஏதோ நல்லபடி செஞ்சா சரிதான்!” வீரண்ணன் சலித்தது கேட்டு, நரேஷ் வியந்தான். ஏன் இப்படிச் சலித்துக் கொள்கிறான் என்று எண்ணினான். சொல்வதில் நம்பிக்கையில்லை என்று தான் அவன் நினைப்பதுபோல் நரேஷிற்குத் தோன்றியது.

அடுத்த நாள், முதல் தேதி. தேதி. அப்பாவிடம் இருந்து நரேஷிற்கு ஆயிரத்தைநூறு ரூபாய் வந்தது. மணியார்டரில் கையெழுத்துப் போடும்போதே ஒரு விதமாய் அசடு வழியும் ‘போஸ்ட்மேனு’க்குப் பத்து ரூபாய் தந்தான். பயங்கர குஷிதான் அவனுக்கு. அதேநாள், வீரண்ணனுக்கு இருநூறு ரூபாய் வந்தது. அதோடு, தங்கை, அம்மா பற்றிய சுகச்செய்திகளும் அவனுக்கு வந்தன. தங்கையின் வாழ்வில் வசந்தம் தென்படுவதை அவள் புதுவீடு கட்டிப் பால் காய்ச்சுவதைப் பற்றி அறிந்ததும் உணர்ந்தான்; மகிழ்ந்தான்.

அன்று மாலையே, நரேஷ் இவனை அழைத்துக் கொண்டு,ஒரு மருந்துக்கடைக்குச் சென்றான். கடைக்காரரிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னான். அவரும் ஒரு பாக்கெட்டில் சில மாத்திரைகளை எடுத்துச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே தந்தார்.

விடுதிக்கு வந்தார்கள். இருவரும் குறைவாகவே சிற்றுண்டி சாப்பிட்டார்கள். பின்பு, ஒரு மாத்திரையை இவனும் மற்றொன்றை அவனும் எனச் சாப்பிட்டார்கள். பத்து நிமிடங்கள் ஆகியிருக்கலாம். வீரண்ணன், “நரேஷ்….ஃபைண்டா எப்டி எப்டி இது கெடச்சது உனக்கு? எப்டியோ இருக்கு? ஆனா பயங்கர குஷியா இருக்குடா!”

“அனுபவம் புதுசுதானடா! நான் நேத்திக்கு நம்ம பாத்த பிக்சர்ல வர்ற நடனத்தை ஆடுறது மாதிரி இருக்குடா!” தொடர்ந்த வீரண்ணனின் பேச்சைக் கேட்டு நரேஷுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி; மறுபுறம் வியப்பு! கெட்டவனுக்கு இதுதானே முதல் வசியம்!

நரேஷும் மகிழ்ந்தான். தனது குழுவில் மற்றோர் ஆள் சேர்ந்ததற்காக. அவன், ‘வீரண்ணா நீ ரொம்ப மீறிட்டே நான்லாம் நம்ப தமிழ் நடிகைகளைத் தாண்டா விரும்பறேன். ஏன்னா அவங்கதான் மண்ணுக்கேத்தா மாதிரி கொஞ்சமாவது வெக்கப்படுவாங்க. அதுதான் நல்லா இருக்கும்”

“எப்டியோ போ!” வீரண்ணன் மயக்கத்தில் தன்னிச்சைப்படி உளறினான். அருகில் யாராவது சென்றால் கொன்றே போட்டுவிடுபவன் போல் புரண்டான்; படுக்கையில் உள்ள துணிகளை எல்லாம் கலைத்து விட்டான்.

அவனது பழக்கம் அன்றுடன் முடிந்துவிடவில்லை. அடுத்த நாளும் அபின் சாப்பிட்டான் அன்று அவன் ஏகவசனத்தில் சற்று அவநாகரிகமாகவே பேச ஆரம்பித்தான்.

மற்றொரு நாள் பிராந்தி. பின்பு விஸ்கி, ஜின் இப்படி ஒவ்வொன்றாக அனுபவித்தான் கல்லூரிக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் கூட ஒழுங்காகச் செல்ல மாட்டான் அதைவிடப் பெரிய கல்லாரி இங்கே நடக்கிறதல்லவா?

அம்மாவிடம் இருந்து கடிதம் வரும்போது இவன் சுய நினைவோடு இருந்தால்தான் பதில்; இல்லாவிட்டால் அம்மாவுக்குக் கடிதம் ‘அம்போ’தான்! மதுவுடன் நிற்காதவன் மாது பலருடனும் தொடர்பு கொண்டான். ஆனால் இது பல மாதங்களுக்குப் பின்தான் நடந்தது. தனது தீய பழக்கங்களிலும் அவ்வப்போது புதுமையைத் தேடி ஓடினான். விளைவு, தன் குடும்பத்தை அறவே மறந்தான். இவனை இவனது உறவினர்கள் யாரும் விடுதிக்கு வந்து பார்க்காததால் இவனது ஒழுக்கக்கேடு யாருக்கும் தெரிய நியாயமில்லை.

இடையில் ஒரு மாதம் நரேஷ் கல்லூரியில் இல்லை. திடீரென அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை எனத் தந்தி வர, ஊருக்குச் சென்றான். மாதாமாதம் இருநூறு ரூபாயைப் பெற்றவனுக்கு அது போதவில்லை. நரேஷும் இல்லை. ஆசைப்பட்டான், அனுபவிக்க; ஆனால் முடியவில்லை தினமும் புத்தகங்களைப் படித்தான். அந்த ஒரு மாதத்தில் பலவற்றைப் படித்து முதலாண்டுப் பரீட்சைக்குத் தயாராகிவிட்டான்.

போதைப்பொருள்களுக்கு அடிமையாகுபவர்கள், மூளை சற்று அறிவு மங்கிப் போய்விடும் நிலைய அடைவர் என்பர். இவன் அந்த விஷயத்தில் விதிவிலக்கு. உடைகள் எடுக்கவும், புத்தகங்கள் வாங்கவும் பணம் வேண்டும் என்று அம்மாவுக்குப் பொய்க்கடிதம் எழுதினான். பணம் வந்தது. அன்றே நரேஷும் வந்தான்.

இத்தனை நாள் அனுபவிக்க வைத்தவன், இந்த ஒரு மாதம் தவிக்க வைத்தான். அதுவே நரேஷுக்கு முழு வெற்றி.

“என்னடா நரேஷ்! அம்மா எப்டிருக்காங்க? தேவலயா?”

“அட..அவருக்கென்னா…. சும்மா உருளக்கெழங்கு மாதிரி இருக்காங்க! ஏதோ பொண்ணு பாக்கணுமாம்! அப்டியே லேசா அப்பாக்கும் கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. தந்தியடிச்சிட்டாங்க!”

“பொண்ணப் பாத்தியா?”

“ம்..பாத்தேன்…புடிச்சிருக்கு! ஆனா, நான்தான் ஒரு பொண்ணு கூடவும் லைஃப்லாங்கா இருக்க விரும்பலியே! சரி பாக்கறேன்னுட்டு வந்துட்டேன்”

“டே..எனக்கு ஏதாவது வாங்கித்தாடா! இல்லாட்டி எங்கியாவது கூட்டிட்டுப் போ!”

“இந்தாடா கொஞ்சம் புக்ஸீ! எல்லாம் ‘அந்த’ விதமான கதைகள்! ரீட் தெம்! நான் அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துட்றேன்!”

ஆர்வத்துடன் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்த வீரண்ணனுக்கு, அதில் உள்ள சில சில செய்திகள் இன்னும் புரியவில்லை. நரேஷிடம் கேட்டான். அவன்தான் சகலகலாவல்லவன் ஆயிற்றே. எடுத்துக் கூறினான். கேட்கக்கேட்க வீரண்ணனுக்கு ஆவல் அதிகமாயிற்று! அவனுள்ளும் சபலம் பரவியது.

இப்போதெல்லாம் நரேஷ் மட்டும் பணம் செலவு செய்வதில்லை. பணம் செய்வதில் சில உத்திகளைக் கையாண்டான்.

“டே…வீரண்ணா எங்கைல காசு இல்ல… கொஞ்சம் இருக்குமாடா? மணியார்டர் வந்தா தர்றேன். இல்லாட்டா எங்கியாவது லோ கிளாஸுக்குப் போவமா” பணம் இல்லாவிடில் தரம் தாழவும் மனிதன் தயங்கமாட்டான் என்பதை எடுத்துக்காட்டியது அவனது பேச்சு.

“ஐயையோ வேணாண்டா மேலே இருந்துட்டு லோ கிளாஸ்க்குப் போறதுன்னா கஷ்டம். நாந்தர்றேன்” என்று உடுக்கையிழந்தவன் கைபோல உதவிட முன்வந்தான். இப்படியே பணம் கறக்கும் வழியையும் கையாண்டான் நரேஷ். கொடுப்பது போல் கொடுத்துக் கரைப்பது போல் கரைத்தான். இப்போதெல்லாம் ஊருக்கு லட்டர் போடுவது வீரண்ணனுக்குப் பிடிக்காததாகி விட்டது. தூக்கி வளர்த்தவளைவிடக் கெடுத்து வளர்த்தவன் பெரியவனாகத் தெரிந்தான்.

தேர்வும் வந்தது. ஒரு மாதம் முன்பு உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான். நரேஷும் இப்படித்தான். இதில் மட்டும் அவன் புத்திசாலித்தனமாய் இருந்ததால்தான், ‘அரியர்ஸ்’ இல்லாமல் இரண்டாம் வகுப்பிலேயே தேர்ச்சி பெற்று வந்துள்ளான். அதே போல், வீரண்ணனையும் படிக்கச் சொன்னான். சில டுடோரியல் காலேஜ் ஆசிரியர்களைப் பழக்கப்படுத்தினான். வீரண்ணன், சந்தேகம் வரும்போதெல்லாம் அவர்களை நாடினான்; சந்தேகங்கள் தீர்ந்தன. தொடர்ந்து படித்தான் முயன்று படித்தான். ஆனாலும் அவ்வப்போது தனக்குப் பழக்கமான பொருள்களை நாடினான்; அப்பொதெல்லாம், நன்கு சிந்திக்க வைக்கும் என்று ஆண்களால் புகழப்பட்ட சிகரெட் ஒன்றைத் தருவான், நரேஷ். இல்லாவிட்டால் இவன் வாழ்வும் வீணாகும். இதனால்தான் அப்படிச் செய்தான்.

தேர்வு முடிந்தது.

“என்ன நரேஷ்…எப்டி எழுதியிருக்க…யூனிவர்சிடி ரேங்கா…”

“அட…நீ வேறப்பா…..நமக்கேம்பா அதெல்லாம்; சீக்கிரம் ஏழைங்களுக்குக் கெடச்சாலும் வேலை கிடைக்கும்… நமக்கு அதெல்லாம் இல்லாம பணம் வரும்…ஏதோ பாஸ் பண்ணுவேன்…அடுத்த வருஷம்
படிப்பேன்…நீ எப்டி எழுதியிருக்க…அபோவ் செவண்டி பர்செண்ட்டா….?”

“நானும் பாஸ் ஆயிடுவேன்….முடிச்சிட்டு ஊருக்கு எப்பப் போகப்போறே? நான் போகப் போறேன்…”

“தோ… நாளைக்கி… டிக்கெட் எடுத்தாச்சு… எங்கப்பா வீட்டுல வேலை செய்யிற சர்வண்ட்கிட்ட சர்வண்ட்கிட்ட டிக்கட்டை நேத்திக்கே குடுத்தனுப்பியிருப்பாரு… நீயும் கெளம்பு…ஊர்ல இருக்கவங்கள நல்லா சந்தோஷப்படுத்தறதுக்கு இதுதான் டைம். அடுத்த வெகேஷன்ல நீ எங்க வீட்லதான் ஹால்ட்…என்ன சரியா?”

“சரி…அப்ப வா…ஏதாவ்து அம்மாவுக்கு வாங்கிட்டுப் போவோம். எங்க அம்மாவும் இன்னிக்கு லட்டர் போட்டாலும் போடுவாங்க…ஆமாம்… நீ எனக்கு ஆசை காட்டிட்டே…ஊருக்குப் கழிக்கறது….கொஞ்சம் போனா நான் எப்டி காலத்தக் வாங்கித் தாயேன்; பெட்டியில் போட்டுக்கறேன்”

“அய்யய்யோ….அதெல்லாம் தப்புடா…அப்புறம் அம்மா அக்கா எல்லாரும் அப்டியே நசுங்கிடுவாங்க; டெய்லி அங்க இங்க போ…வயலுக்குப் போ…நைட் வரைக்கும் யாரோடயாவது பேசிட்டிரு…அப்றம் தூங்கு… இப்படியே நாளைக் கழி”

“சரி நரேஷ்…ட்ரை பண்றேன்” வீரண்ணன் தலையை மட்டும் ஆட்டினான்.

தேர்வு முடிந்த மறுநாளே எழும்பூர் ரயில் நிலையத்தில் தன் உறவைப் பார்க்கத் தயாராக நின்றான் நரேஷ். பக்கத்தில் வீரண்ணன் முதல் விடுமுறையை எப்படி நரேஷ் இல்லாமல் நட்டநடு கிராமத்தில் கழிக்கப் போகிறோமோ என்ற பெரிய கேள்விக்குப் பதில் தேடியவாறு நின்றான்.

உரிய ரயில் வருவது தெரிந்ததும் அவனது மனத்தில் பெரிய நடுக்கம் தோன்றியது. அதை வெளிப்படுத்துமுன்,

“வீரண்ணா! நான் கெளம்பறேன்…. அங்க பாரு நம்ம.. ட்ரெய்ன் ஸ்டார்ட் ஆகிடுத்து… சீரியோ…பை…பை…” நரேஷ் கூறியபடி உள்ளே போய்த் தனது இருக்கையில் அமர்ந்தபடி ஜன்னலில் கை காட்ட, வீரண்ணனும் பதிலுக்குக் காட்டினான், உயிரற்ற உடல் போல. ஜிக்குபுக்கு ஜிக்குபுக்கு என்று ரயில் கூவியபடி அவனைவிட்டு வெகுதூரம் நகர்ந்தது.

உரிய நாளில் வீரண்ணனும் தனது ஊர் வந்து சேர்ந்தான். அம்மா ஓடிவந்து ஆரத்தி எடுத்தார்.

“வாடா…என் ராசா…ஏ..ராமாயி…புள்ளக்கி வெந்நீ வையி….களப்பா இருக்கான்…அப்புடியே சருவத்துல அரிசியப் போட்டுட்டு, மாவை ஊத்தி வய்யி”

“ஏம்மா…எப்டி இருக்கீங்க…நல்லாருக்கீங்களா? அங்க என்ன, தங்கச்சி நடக்க முடியாம் நடந்து போறாப்ல இருக்கு?”

“ம்…நீதான் போட்ட காய்தத்துக்கு மறு காய்தம் போடலியே…அவ பிள்ளை உண்டாகியிருக்கா… இதுதான் மாசம்…அதான் இங்கருக்கா”

குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்த தங்கை, “ஏ…அண்ணே… சொகமா இருக்கியாண்ணே… எப்டிருக்கு படிப்பெல்லாம்?” நலம் விசாரித்தாள்.

“நீ நல்லாருக்கியா?…ஒம்புருசன் நல்லாருக்காரா?…”

சுகம் விசாரித்தவன், பட்டணத்தைப் பற்றி ஓகோ என்று புகழ்ந்தான்; குளித்தான்…அப்படியே வயலுக்குச் சென்று வேலைக்காரர்களைப் பார்த்துப் பேசினான். அன்றைய நாள் அப்படியே கழிந்தது. அன்று இரவு ‘எதுவும்’ இல்லாமல், வந்த களைப்புத் தீர நன்றாகத் தூங்கினான்.

காலையில் நான்கு மணியிருக்கும். “ம்…ம்மா…மாரரரரர்வயித்த வலிக்குதே…. ஏ…அய்யா.. இடுப்பு ஒடியுதே….ம்மா…” தங்கை இடுப்பைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

“இந்தா வாரேன்… இஞ்சிச் சாறு கசாயம் கொண்டாறேன்… ஐயனாரே…புள்ள ஒளுங்கா பிரசவம் ஆவணும்யா…” அம்மா மனத்துள் வேண்டினாள். அதற்குள், வேலைக்காரி உறங்கிக் கொண்டிருந்த வீரண்ணனை உசுப்ப வந்தாள்.

“சின்னய்யா…சின்னய்யா எந்திரிங்கய்யா..சின்னம்மாவுக்கு வலி வந்தாச்சு… நீங்க வந்த நேரம்… ஒடனே வண்டி பிடிச்சிட்டு வாங்க” என்று கெஞ்சும் குரலில் பணிவுடன் கூறினாள்.

“அப்டியா….ந்தா போய்ப் பிடிச்சிட்டு வாரேன்” தூக்கம் ஓடிப்போன இடம் தெரியவில்லை. மகிழ்ச்சியோடு, சைக்கிள் மிதித்துக் கொண்டு விரைந்தான். வயல் வழியாகப்போய்த் தான் பிளசர்கார் எனப்படும் வாடகைக்கார் வண்டியைப் பிடித்துவர முடியும். விரைவாகச் சென்றான்.

“ஏலெ…எனக்குக் எப்டில் கெடச்சுது கொஞ்சம் ஊத்துல…சீமசரக்கு ஒனக்கு… ஏ…அய்யா….சொகம்மாயிருக்கு….” சத்தத்தைக் கேட்டு நின்றவன், ஒரு வாலிபன் கொண்டுவந்த கொண்டுவந்த ஜின்னுக்கும், பிராந்திக்கும் தன் ஊர்க்காரர்கள் போட்டிபோடக் கண்டான்.

அமாவாசையைப் பார்த்தால் பைத்தியம் பிடித்தவர்களுக்கு உணர்வு அதிகமாவதுபோல, இவனுக்கும் பழைய நினைவுகள் வர, தன் மானம் மரியாதையை வயலிலேயே விட்டுவிட்டு,

“எனக்கும் கொஞ்சம் ஊத்துப்பா…நா அவசரமாப் போறேன்” என்றான்.

“அட…நம்ம சின்னய்யா…”

“ஏம்யா….ஒங்களுக்கு இந்தப் பளக்கம்லாம் உண்டா?”

“வேணாங்கய்யா…இதெல்லாம் தப்பய்யா”

நகர்ப்புறத்து மதுவகைகளுக்குச் சண்டை போட்டவர்கள் தன் வீட்டு வேலைக்காரர்கள்தாம் என்பதை அவர்களது கரிசனமான சொற்களைக் கேட்டுப் புரிந்துகொண்டான் வீரண்ணன்.

எனினும், சிறிதும் அஞ்சாமல், “ஊத்துப்பா….ஆம்..நல்லாருக்கு..ஏ…ஒன்” என்று மேலும் சிறிது அருந்தியவன், அந்த வேகத்தில் தடால்படால் என்று கண்மண் தெரியாமல் சைக்கிள் ஓட்டினான். எல்லாம் மதுவின் வேகமா? மருமகப்பிள்ளையின் வரவு குறித்த வேகமா? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

கண்மண் தெரியாமல் ஓட்டியவன், “டங்…டமால்… ஐயோ…” பள்ளத்தில் விழுந்தான். அது கிணறு வெட்டத் தோண்டப்பட்டிருந்த பள்ளம். அவனது சத்தம் இருட்டுக்கு மட்டுமே கேட்டிருக்கும்.

“பெரியம்மா….நான்போய் வண்டி கொண்டாரவா?”

“நாம்போறம்மா”

பலரும் கேட்க, அன்புத் தாயோ தன் மகன் போயிருக்கிறான் என்று கூறி அவர்களது அன்பு வேண்டுகோளை மறுத்தாள். அவர்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை அந்த உத்தமி.

“இன்னும் வரலியே… பிள்ளைக்கி என்னாச்சோ… இங்க வேற கொளந்த எக்கச்சக்கமா அளுவுதே…ஐயனாரே!” துடித்தாள் புழுவாய். உள்ளத்திலிருப்பதை வெளியே கூற இயலாத அளவுக்குத் துடித்தாள். காலமாகிவிட்ட தன் கணவனது இழப்பு அவளுக்குப் பெரும்பாரமாக இருந்தது. யாருமே இல்லாவிட்டால் ஒருவரது நிலைமை பெரும்பாடாகிவிடும் என்பதை நன்கு உணர்ந்தாள். பிரசவத்துக்குத் தயாரான மகளோ மெல்ல மெல்லத் தெம்பு இழந்து கிடந்தாள்.

சுமார் இரண்டு மணிநேரம் ஆன நிலையில், வண்டி எப்போது வர? மகள் எப்போது மருத்துவமனைக்குச் செல்ல? என்ற நிலை வந்துவிட்டது. மேலும், உள்ளூரில் உள்ள மருத்துவச்சி அப்போது அயலூரில் நடந்த கோயில்கொடைக்குப் போயிருந்ததால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

மெல்ல மெல்லத் தன்னை அசையாநிலைக்குக் கொண்டு சென்றாள் மகள்.

“ம்மா..ஆ…” கையையும் காலையும் வெட்டுவெட்டென்று வெட்டியவள் மெல்லத் தலை சாய்த்தாள்.

ஆம்! வீரண்ணனின் தங்கை மரணத்துடன் இணைந்துவிட்டாள். பெற்றவளோ, ஒருபானை நெருப்பை வயிற்றில் கொட்டியவள் போல, “அய்யோ…எங்கண்ணே… பேரன் பெறப்பான்னு நெனச்சனே…நீணே போய்ட்டியா….பாவிப்பய போனபய…வாரலியே…ய்யோ… என்ன செய்வேன்….” உச்சஸ்தாயியில் ஒப்பாரி வைத்தழுதாள்.

காலையில், அடுத்த ஊர்க்காரர்கள் வயலுக்கு உழவு வேலைக்கு வந்தபோது, மயக்கத்துடன் வீரண்ணனை வெளியே தூக்கித் தண்ணீர் தெளித்தனர்.

“நா…நான் எங்கருக்கேன்… அங்க என்னாச்சோ…ஐயோ…” புலம்பினான்.

“என்னங்கய்யா…நீங்க யாரு….? எந்தஊராயிருந்தாலும் இந்த கீளவூருக்கா போவாதீங்க…அங்க ஒரு பொம்பளப் பிள்ளை, பிரசவவலியோடப் போராடிப் போராடி, வயத்துப் பிள்ளையோட செத்திட்டா…பாவம்…”

“அய்யோ” மண்டையில் பொறி தட்டியவனானான். மனத்துள் நன்கு புலம்பினான், அவன். சத்தமிட்டால் எங்கே சாகடித்திடுவார்களோ என்று அஞ்சினான். ஓடியோடி வந்தான். வீட்டின் முன் ஒரே கூட்டம். யாரும் தன்னைப் பார்க்காத அந்தக் கணநேரத்தில் எட்டிப் பார்த்தான்; தங்கையைப் பார்த்தான்.

தங்கையின் உடலில் அவள் கட்டியிருந்த அந்தச் சாயம் வெளுத்த சேலையில், இப்போது மரணக்குழந்தை இரத்தச் சாயத்தைத் தோய்த்திருந்தது. கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு, “அம்மா….” சாஷ்டாங்கமாய்ச் சடலத்தின்மேல் விழுந்தான்.

– 1988, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *