கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 7, 2023
பார்வையிட்டோர்: 2,099 
 
 

புஷ்பாவுக்கு குடிகாரக் கணவன் பார்த்திபன். மலடி பட்டம் வேறு. கேலி பேச்சுக்கள் மாமிரிடமிருத்து உதிரும். 

தினமும் அடி உதை தான்.   சொல்லொணாத் துயரம் அவளுக்கு.

குழந்தை இல்லாததால் புஷ்பாவின் தங்கை கனகாவையும் கல்யாணம் செய்து கொள்ளவேண்டுமென்ற வெறி பார்த்திபனுக்கு. உசுப்பி விடுவாள் அவனது அம்மா அடிக்கடி.  (அவர்கள் என்ன இலவசு இணைப்பா) 

அக்கா படும் கஷ்டத்தை நேரில் பார்க்கிறாளே. எப்படி ஒத்துக் கொள்வாள். பார்த்திபன் இப்போதெல்லாம் வீட்டிலேயே பாட்டிலை திறந்து விடுகிறான். புஷ்பாதான் அவனுக்கு side dish செய்து வைக்கவேண்டும். ஊற்றிக்கொடுக்க வேண்டும். 

அவளையும் குடிக்கச்சொல்லி கட்டாயப் படுத்துவான். புரியாத புதிர் படத்தில் வரும் ரகுவரன் கேரக்டர்தான் கிட்டத்தட்ட. பசி தாங்க மாட்டான். Non veg வேண்டும் தினமும். ஏண்டி சமையல்கட்ல ரெண்டு எலி சுத்திகிட்டிருக்கே. சாகடிக்க மாட்டியா. சாப்பாட்ல விழுந்து வைக்கப் போவுதுடி. கருமம் எல்லாம் சொல்லித் தொலைக்கணும் உங்கிட்ட சொல்புத்தி, சுயபுத்தி ஒரு மண்ணும் கெடையாது. உன்ன ஒழிச்சிக்கட்றேன் இரு. 

ஒருமுறை அவளது தங்கை கனகா இங்கு வந்த போது அத்து மீறிய பார்த்திபன் மீது போலீஸ் ஸ்டேஷனில்  புகார் தந்து பஞ்சாயத்தான கேலிக்கூத்துக்களும் உண்டு.

அன்று ஒரு நாள் ஏண்டி.. என்னடி குடும்பம் உங்க குடும்பம். த்த்தூ.. கேவலமா இல்ல. அது எப்பிடிடி அம்மாவுக்கே சக்காளத்தியா.. அதுவும் ஒரே வீட்ல.. என்று மிகவும் தகாத வார்த்தைகளால் ஊரே பார்த்து சந்தி சிரிக்கும் அளவுக்கு திட்டிவிட்டு, இரு வரேன் ஒரு ரவுன்டு போட்டுட்டு வந்து லாடம் கட்றேன் என்று டாஸ்மாக் சென்றான். மனமுடைந்து போனாள் புஷ்பா.

வீட்டுக்கு வந்த பார்த்திபன்.. டீ நாயே எங்கடி போன. ஓடுகாலி எங்க பொறுக்க போயிட்ட. எனக்கு பசிக்குதுடி. சமையல் கட்டு பக்கம் போனவன் அங்கு இவனுக்காக தயாராக செய்து வைத்திருந்த மீன் வறுவல், கறிக்குழம்பு சோறு, மசால் வடை என்று ஒரு கட்டு கட்டினான்.  

மறுநாள் காலை..வெகு நேரமாகியும் பார்த்திபன் எழுந்திருக்கவில்லை. அய்யோ பார்த்திபா போய்ட்டியா..வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக இருந்தவனை பார்த்து கதறி அழுதாள் அவனது அம்மா. பாவி மவ என் மகன விஷம் வெச்சி கொன்னுட்டா என்று கதை கட்டி விட்டாள். 

போலீஸ் கேஸ் ஆனது. விஷ சாராயம் அருந்தி சென்ற வாரம் தான் சிலர் இறந்து போனார்கள் அந்த ஊரில். அந்த கோணத்திலும் விசாரித்தது போலீஸ். பிணக்கூறாய்வு ரிப்போர்ட் வந்தது. சில திடுக்கிடும் தகவல்கள் வந்தன. 

போலீஸ் விசாரணை வளையத்தில் புஷ்பா சேர்க்கப்பட்டு விசாரிக்கப் பட்டாள். அவன் அருந்திய உணவில் எலி பாஷாணம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு மிச்சமிருந்த உணவை பரிசோதனைக்கு அனுப்பினார்கள். உணவில் எவ்வித விஷக்கலப்படமும் இல்லை என்று ரிப்போர்ட் வர போலீஸ் குழம்பியது. 

புஷ்பாவை துருவித்துருவி விசாரித்த போலீஸ் ஒரு உண்மையை கண்டுபிடித்தது. ஆமாம் புஷ்பா சொன்னது  வாக்குமூலம் இது தான். 

அய்யா வீட்ல ஒரே எலித்தொல்ல  தாங்க முடியல. அதை எல்லாம் சாகடிக்க மசால்வடை செஞ்சி அதுல எலி பாஷானம் கலந்து  தனியா வெச்சிருந்தேன். இவரு போதையில அதை எடுத்து தின்பாருன்னு எனக்கு எப்படி அய்யா தெரியும். கோர்ட்டில் புஷ்பா குற்றவாளி இல்லை என்று விடுவிக்கப்பட்டாள்.

ஆனால் மசால் வடை எலிகளுக்கு வைத்த பொறி இல்லை, அவளது மாமியார் சொல்லியது கதையல்ல, நிஜம் என்ற  உண்மையை  புஷ்பா மட்டுமே அறிவாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *