பரத்தை விற்ற பணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 3,909 
 
 

மனைவியோடு இருக்கிறானே தவிர, சவக்களை படிந்த முகத்தோடு திரிந்த கார்மேகம், ரிட்டயர்டு ஆனதிலிருந்து நிரம்ப சோம்பிப் போய் விட்டான். மகன் மரணம், மருமகன் உயிரிழப்பு போன்ற சம்பவங்களால், சில நாட்கள் முகத்தில் கவலை தோய்ந்திருந்தாலும், மகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை, அவனைக் கடுமையாக ஆகர்ஷித்திருந்தது.

மறுபுறம், மகனை இழந்து விட்ட, பாகம்மாளின் தத்துமகள் ஜான்ஸி போஸ், வரும்படி வளர்ச்சிக்காக, சம்பந்தி வீட்டுக்கு அடிக்கடி விஜயம் செய்து கொண்டிருந்தாள். அப்போது யதேச்சையாக அங்கு வந்த, நொண்டிக் கர்ணனின் மனையாட்டி, பெருத்த உடம்புடன், அறுத்து விட்ட அக்கா ம்ருமகள் வீட்டுக்குள் பிரசன்னமானாள்.

திண்ணையிலிருந்த ஜான்ஸிபோஸ், தங்கையை கேள்வியோடு வரவேற்றாள்.

“இங்கே வாடி, விளக்கு வைக்கிற நேரத்தில, எங்கே போய்ட்டு வர்றே, அந்த நொண்டிப்பய வரலையா”

“சாமான் வாங்குறதுக்காக போனேக்கா, பஸ்ஸூ இல்லை, அதான் இங்கு வந்தேன். ஏக்கா மருமகளை இப்டியே விட்றாதக்கா, மூத்தவனுக்காவது ரெண்டாவதா, இவளை முடிச்சி வச்சிடு,

“அவளோட அப்பன், ஆத்தாளே எதுவும் சொல்லலையே” என்று சம்பந்தியைப் பார்த்தாள்.

” ஒங்ககிட்ட கல்லாணமாகாத புள்ளைக இருந்தா சொல்லலாம், எங்களுக்கும் ஆசைதான், எப்புடிச் சொல்றதுன்னுதா யோசிக்கிறோம்”

“எதுக்கு யோசிக்கிறே, சொத்துக்கார புள்ளைய இன்னோருத்தருக்கு விட்டுக் கொடுக்க முடியுமா” என்று கூறிய ஜான்ஸிபோஸ், சாப்பிட வருமாறு கணவனை அழைத்தாள்.

“ஒருவழியாக, யாருக்கும் தெரியாமல் மணமுடித்து வைத்த சம்பந்திகள், இரண்டாந்தாரம் என்ற சட்டச் சிக்கலில், நீதிமன்றப்படியேறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில், ஒருநாள் கார்மேகத்திடம் நியாயம் கேட்கச் சென்றவர்கள் மீது, தாக்குதல் நடத்தப் பட்டது.

நியாயம் கேட்கச் சென்ற, முதல் மனைவியின் சகோதரனுக்கு தலையில் காயம்.இவன், கார்மேகத்தின் சிறிய தாயாரின் மகளைத் திருமணம் செய்தவன்.இதனால், ஆக்ரோசமடைந்த கார்மேகத்தின் தங்கை செல்லமாள் கனகசபை, மருத்துவமனையில் அவனிடம் நலம் விசாரிக்கவில்லை. இதையறிந்த கார்மேகம், தங்கையின் மீது, வரம்பு கட்டமுடியாத பாசத்தைப் பொழிந்தான்.

அவ்வப்போது,ரபரஸ்பரம் விருந்தாளி யாக வீடுவரை சென்று, இந்த பிரச்சினை குறித்துப் பேசினார்கள். அப்போது கார்மேகம் மைத்துனன் வெங்கடாசலத்திற்கும், செல்லம்மாளு ககும் இடையே, கள்ள உறவு ஆழமாக வேரூன்றியது. கடைந்த மோரிலே குடைந்து, வெண்ணெய் எடுக்கும் பேர்வழியான மைத்துனனிடம், கட்டிய கணவனின் கையாளாகாத்தனத்தையும், இந்தப் பிரச்சினை குறித்தும் வக்கீலைப்போல கொட்டித் தீர்த்தாள்.

பேரன், பேத்திகளின் பிறந்த நாளில், சிறப்பு அழைப்பாளராக வரும் வெங்கடாசலத்திற்காக, கேக்கைக்கூட காயப்போட்டார்கள். வந்ததும் கேக் வெட்டப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பிறகு, மாடியிலிருந்த அந்தரங்க அறைக்கு வெங்கடாசலம் , செயலில்லாமல் உட்கார்ந்திருந்தான். வழிக்கு கொண்டுவரும் முடிவோடு, பிரச்சினைக்கு தீர்வாக புதிய உபாயத்தைச் சொன்னாள் செல்லம்மாள்.

“மச்சான், மெட்ராஸ்ல இருக்காள்ல ரோசா, அவ மடில கையை வச்சிடலாமா? ஏன்னா நம்ப வீட்லே அதோகதியாக் கெடக்கா”

“ஒத்துக்குவாளா?”

“நாஞ்சொன்னா ஏத்துக்குவா, அத்தாச்சி மாலதிக்கிட்டேக் கூட பேசிட்டுத்தா இருக்கா, நம்ம பிரச்சினைக்கு காரணமான அவ புருசனை, நம்ம வீட்டு வாசலல மிதிக்காதபடி பண்ணிடலாம்?

“இது நல்ல யோசனைதா, முடிஞ்சா அதைப் பண்ணு, ஒரே கல்லுலே ரெண்டு மாங்கா அடிச்சமாதிரி இருக்கும், ஏற்கனவே அவ சொத்தை ஓந்தங்கச்சிதா வச்சிருக்கா, இத முடிச்சா மொத்தமா ஆட்டையப் போட்டுடலாம், போகப்போக வீட்டைக் காலி பண்ணச் சொல்லி, ஓடவிட்றளாம்””

“இதற்கு அச்சாரம்போட்டு ஆரம்பிச்சிட்டுட்டேன். அவ புருசன்ட்டே பேசிட்டேன். அவங்கெளம்பிடுவான். அப்டிப் போய்ட்டா, அவ சொத்தை ஏம்மகளுக்கு மாத்திடனும். இப்ப நீங்க எனக்கு பாதிப்புருசனா வேற ஆகீட்டீங்க, இதில மாறக்கூடாது”

“நீ சொன்னபின்னே மாறுவேனா, முடிஞ்சா நாம ரெண்டு பேரும் ஒரே வீட்லெ வாழுவோம். இது ஆத்தா பாகம்பிரியா மேலே சத்தியம் என, வாக்குறுதியளித்து விட்டான்

அவர்கள் நினைத்தபடியே, ஊருக்கு வந்த செல்லம்மாளின் சின்னாத்தா மகள் ரோசா, நடந்த விவரங்களைப் பட்டியல் போட்டாள்.” நானே போகச் சொல்லிட்டேன் என, வீரவசனங்களையும் நினைவு கூர்ந்தாள்.

இப்போதுதான் சம்பவத்தை புதிதாக அறிந்தவள்போல, ரோசாவின் கணவனை ஆக்ரோசமாக திட்டியவள், கண்மாய்க்கரைக்குச் சென்று, கள்ள உறவில் உள்ள, வெங்கடாச்சலத்திடம் பேசினாள்.

“என்னோட வேலை முடிஞ்சது, அவ ஊருக்கு வந்திட்டா. நாஞ்சொன்னதை நீங்க முடிச்சித் தரனும்”

“ஓகே நா மச்சானுக்கிட்டே சொல்லிடுறேன். சொத்து விசயத்துலெ உன்னோட மாமங்கெ ஒத்துக்குவாங்கெளா”

“அவங்கெ முட்டாப்பயலுக, இப்பக் கஞ்சிக்கே அடிபடுறாங்கெ, சம்பந்தி வீட்லெதா சாப்டுறாங்கெ, அவங்கட்டெ சொன்னா, ஈஸியா கையெழுத்தை வாங்கி முடிச்சிருவாங்க, அங்கே நீங்களும் இதைப்பத்தி பேசுங்க”

“ஒத்து வருமா இது. இப்பவே சம்பந்தம் பேசுனாதா தகவல் வருது, சிநேகாவோட மகளை, ரோசா மகனுக்கா முடிக்கப் போறாங்க”

“ஆமா பேசி முடிச்சாச்சு, இதையும் ஏம்மருமகந்தான் முடிச்சிருக்காரு, அவரு தலையிட்டா மந்திரியென்ன, ஓபாமாகூட நெருங்க முடியாது, நீங்கதா உறுதியா இருக்கணும். துரை மாமாட்டைச் சொல்லி வாயைக் கட்டிக்கச் சொல்லுங்க”

“சரி நா சொல்லிடுறேன், ஆனா உன்னோட தங்கச்சியும், மகளும் ஒரு பலான விசயத்திலே சிக்கியிருக்கிறதா கேள்விப்பட்டேன், முதல்லே நா நம்பலை, ஆனா என்னோட ப்ரண்டு ஒருத்தன் போட்டோ காட்டுனான், அதைப் பாக்குற மாதிரி இல்லை, அந்தப் பிரச்சினை வெளியேறாமப் பாத்துக்க..இல்லேனா ஒம்பாடு திண்டாட்டம் ஆயிடும்’

“எனக்கும் தெரியும். இவ்ளோ நாள் மறைச்சாச்சு, இனிமேயா பிரச்சினையாகப் போகுது” என்று போனைக் கட் செய்தாள் செல்லம்மாள்.

ஆனால், அனைத்தையும் அதார்ப்பூர்வமாக சேகரித்து வைதுள்ள ரோசாவின் கணவன், இதை வாட்ஸ் ஆப்பில் அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக தகவல் கசிகிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத செல்லம்மாள், பயணம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றாள்.

அப்போது குறுக்கே சென்ற ஆட்டோவின் பின்புறம், ” அறிந்தறிந்து செய்கிற பாவத்தை, அழுதழுது தொலைக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது. அவள் எழுத்துக் கூட்டி வாசிப்பதற்குள், ஆட்டோ பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. இதனால் எதிர்காலக் கனவு, கற்பனை குறித்த சொல்லம்மாளின் உள்ளப் பூரிப்பிற்கு, இந்த வாசகம் மண்ண அள்ளிப் போடடுவிடவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *