டூப்ளிகேட்ஸ்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 3,550 
 

அறுவடை முடிந்துவிட்ட மணமங்கலம் கிராம வயல்வெளிகள், காய்ந்த சருகுகளோடு காட்சியளித்தன. விவசாயப் பணிகள் நிறைவடைந்த பிறகும், நரி ஓடும் அளவுக்கு, வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வயல்வெளியே கதி என பழகிப் போனவர்கள், அரசின் நூறுநாள் வேலைக்குச் சென்று விட்டார்கள், எஞ்சியவர்கள் வேப்பமுத்து பொறுக்கி கொண்டிருந்தார்கள். ஒரு சிலர், ஆடுமாடுகளை அவிழ்த்து விட்டு, பயங்கர மிருகங்களிடம் பாதுகாப்பது போல், ஆங்காங்கே இருந்த மர நிழல்களில் பம்மியிருந்தார்கள். சோமுசுப்பரம் சம்சாரம் சாந்தா மட்டும், தனது ஆடுகளுடன், தனக்குப் பிடித்த எருதுகளையும் மேய்சசலிலேயே விட்டுவிட்டு, வீதியில் நடந்து சென்றாள்.

கொன்னக்குடி சாலையி்ல், அனாமத்தாக பைக்கில் வந்த இளைஞர் மணமங்கலம் கிராமத்திற்குள் நுழைந்தான். தபால்காரன் மோகன் வீட்டருகே, ஸ்டாண்ட் போட்டு பைக்கை நிறுத்தியவன், புறவழியி்ல் நடந்து, நெல் வியாபாரி, வெங்கடேஷ் வீட்டின் பின்வாசலில், சிகரெட்டும், புகையுமாக நின்று கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த தர்ஷினி, சுவரோர மறைவில் எட்டிப் பார்த்து நலம் விசாரித்தாள். நின்றுவிட்ட ரயில் வண்டியைப் போல, புகையின்றி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவன்,, ‘ ஏன் அங்கே நின்னுட்டிருக்கே,, சுவரைத் தாண்டி இங்கு வா’ என்றான்.’ ஏங்க சும்மா இருங்க.. யாராவது வந்திடப் போறாங்க.. சுவரில் மறைந்தபடி, ‘ நாம லவ் பண்றதை , உங்க வீட்லெ சொல்லிட்டீங்களா’ என ஒரு செல்லச் சிணுங்கலோடு உரிமையாய்க் கேட்டாள் தர்ஷினி.

‘அவங்கட்டெ சொல்லிக்கலாம் ஒத்துக்குவாங்க, ஏம் பொண்டாட்டிக்கி தெரிஞ்சா, பிரச்சினையாயிடுமோன்னு பாக்குறேன். சரி போகட்டும், நாம யாரைப்பத்தியும் கவலைப்படாம, ஓடிப்போயி கல்லாணம் பண்ணிக்கலாம்…’

“எங்க அம்மா கூட இதைத்தான் சொன்னாங்க, அப்படியே அம்மாவுக்குப் பக்கத்திலெ இருந்த மாதிரி சொல்றீங்க, இந்த விசயத்திலெ நீங்க என்ன பண்ணுவீங்களோ, அதுக்கு நாங்க சம்மதிக்கிறோம்னு ஒங்க வீட்லேயும் சொல்லிட்டாங்களாம், கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அப்பாதான் இதைச் சொன்னாரு..”

“ஓகே, அடுத்த வாரமே, எங்கேயாவது ஒரு கோயில்லெ போயி கல்லாணம் பண்ணிக்கலாம்’ ஸீ யு” என்று சொல்லிவிட்டு சாக்ரடீஸ் புறப்பட எத்தனித்தான். அப்போது அவ்வழியாக வந்த கணேசன், ‘ என்னது துப்புக்கெட்ட பொண்ணா இருக்கே, வீட்டுக்கு கூட்டிப் போகாமெ, இப்படி தெருவுலெ நின்னு பேசிட்டு இருக்கே’ என்றார்

‘நெல்லு போடணுமாம், அதான் வெலையைக் கேட்டுட்டு இருக்காரு. எடை என்னனனு கேக்குறாரு, அதைப்பத்தி எனக்கென்ன தெரியும்”

‘உன்னோட எடையவா..?’

‘என்னோடது தெரியாமலா இருக்காக, ஒரு மூட்டை நெல்லுக்கு எவ்வளவு எடைன்னு கேக்குறாரு…’

‘சரி உன்னோட மாமன்டெ கேட்டுச் சொல்லு… நெல்லையாவது வீட்டுக்குள்ளே நிறுத்துப் போடுங்க.. இப்டி வெட்டவெளில போட்டுக்கிட்டு இருக்காதீங்க, யாராவது பாத்து, ‘ எவ்ளோ பெரிய எடமுன்னு கண்ணு வச்சிறப் போறாங்க’ என்று கூறிய கணேசன், நடந்து கொண்டே நின்ற இடத்தைக் காலி செய்து விட்டுப்போனார். தொடர்ந்து சாக்ரடீசும் ‘வரவா’ எனப் புறப்பட்டான்.

‘கோவைப்பழம் போன்ற தன் சிவந்த அதரங்கள் விரிய, ‘ஐ லவ் யூ’ என்று கீழே விழுந்த மணிப்பர்ஸை எடுக்க குனிந்தாள் தர்ஷினி. அப்போது கனத்து தொங்கிய மார்பகங்களை, எதிர்பாராத விதமாக கண்ணுற்ற சாக்ரடீஸ், “ஐ லவ் யூ டூ” என்று, மாங்கனியைச் சுவைப்பதுபோல நாவின் நுனியால், கருத்து கிடந்த தன் உதட்டை, தடவி ஈரமாக்கிக் கொண்டான்.

அப்போது, ராணி மகன் போண்டா மாதவன், ரேடியோ சவுண்டை இங்க்ரீஸ் செய்ய, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாட்டு தெருவையே கூட்டி, ‘ இதான் என்னோட ரசனை’ என்று கூவும் அளவுக்கு அதிர்ந்தது.

“இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே” என வெங்கலக் குரலில் ஒலித்தது பாட்டு

அப்போது “சூ சூ,” என்று ஆட்டை ஓட்டி வந்த, சோமுசுப்பரத்தின் மனையாட்டி சாந்தா, ” இது என்னது எனக்குப் போட்ட பாட்டாடடம் இருக்கு’ என்றாள்.

“இட்லி சுடடு விக்க வந்த மூதேவி நீ, நீ கெட்ட கேட்டுக்கு பாட்டு வேறயா” என்று சொன்னாள் ராணி.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பழம் பெருமை பேசித் திரிந்த, இரண்டு குடும்பங்களின் விஷமத்தை, விவகாரமாக ஊர்வாய் பேசியது. குலநாத்தி, குளத்தூரில் கூட, வழிப்போக்கர்களை கூப்பிட்டு, ‘ கேட்டியா இந்தக் கொடுமையெ, கல்லாணமான ரெண்டு பேரு ஓடிப் போய்ட்டாங்களாமே’

‘அந்தச் சீப்பட்ட சங்கதியைத்தான், ஊருபூராம் பேசுதே, ஆனா என்ன, காதுல் போட்ட அளவுக்கு, எங்க ஏத்தனத்துலெ, சோறு தண்ணிய கொட்டலை’ என்றபடி, கிழிந்த சேலையுடன் வந்தவள்’ ஹூம் ககும்’ என்று முகத்தை கோண வைத்துக் கொண்டே, நடையைக் கோணலாக்கி நகர்ந்தாள்.

‘விடுமுறையாதலால், பாலத்தில் உட்காந்திருந்தவர்கற், இதனைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டார்கள்.

‘ஸ்கூல் கொடௌன்லெ வச்சிருக்கிற, அரிசி, பருப்பைததான் காக்கை குருவி தூக்கிட்டுப் போகுது, இப்ப மனுசங்களே மனுசாளைத் தூக்க ஆரம்பிச்சுட்டா போல்..’

‘அங்கன்வாடிலே வேலை பாக்குறதும் போதும், காக்கை, குருவிய பத்தியே பேசுறாண்டா இந்தப்பய’

‘ஆமாடா, நாட்டு நடப்பை பாத்தா, அப்டித்தா இருக்கு, இந்த ராமநாதப்பய அக்கா இருக்கால்ல, இதுக்கு அவ்ளோ சப்போட் பண்றாரடா அவ..’

‘என்ன சொல்றா..?

‘வெறும் வாய மொல்ற பயலுக இப்டித்தான் பேசுவாகெளாம், இதிலெ என்ன தப்பு இருக்குங்கிறா..’ பொம்பளப் புள்ளையப் பெத்தவ சரியா சல்லிவாரி முண்டையா இருக்கா.. ச்சீ… ச்சீ..

‘பால்மாடு மாதிரி திங்கு திங்குனு இருப்பாளே அவளா, அங்க கூட இன்னும் ரெண்டு உருப்படி இருக்குல்ல.. அதுகளுக்கோ இல்லை, அவளுக்கோ கூட இப்டித் தேடிக்கிறளாம்னு ஒரு நெனைப்பு இருக்கலாம்லடா…அவ புருசன் வீடே கதின்னு கெடக்கான், பொண்டாட்டி வீட்லெ இருந்தாலும் காஞ்சு போய்த்தான் இருப்பாம்போல இருக்கு. கட்டைப் பீடியத்தான் பத்த வச்சுக் குடிச்சுக்கிட்டு கெடக்கான்’

‘ இவ்ளோதான் ஒனக்குத் தெரியுமா..?’ பக்கத்தூர்ல சின்னாம்பலம் வீட்லெயும் இதைத்தா பெருமையா பேசுறாளுக, குடும்பம் புள்ளைகன்னா இப்டித்தா இருக்கணுமாம், அங்கெதா இனிமே சம்பந்தம் பண்ணணப்போறோம். எங்களெ யாரு கேக்கப்போறான்று, வெட்டிச்சவடால் விட்டுக்கிட்டு இருக்காளுக… இதைக் கேள்விப்படலையா..?’

‘ அட அந்த ஊழ முண்டையள விட்றா, யாராவது பங்காளியக் கெடுக்கவா இருக்கும்டா’ என்று கூறினார் காளிமுத்தன். பின்னர் ஒருவழியாக பசி வயிற்றைக் கிள்ள, காலைச் சாப்பாட்டை நினைத்து, சபையைக் கலைத்துவிட்டு, இருக்கவே இருக்கிறது கோப்பை என்பது போலக் காலைச் சவட்டிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்கள்..

சிறிதுநாட்களுக்குப் பிறகு, கள்ளக்காதலை கல்யாணம்வரை கொண்டு சென்ற சாக்ரடீஸ் மீது, முதல் மனைவி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கம்போல் வலைவீசி தேடிய போலீஸ், அரை நிர்வாண கோலத்தில் சிறையில் அடைத்தது. வீடே வெறித்துப் போன நிலையில், தர்ஷினியின் புது மாமன், மணமங்கலம் கிராமத்தில், சம்பந்தி வீட்டில் முகாமிட்டான். முதல் இரண்டு நாட்கள் ஆறு வகை கறியோடு சாப்பாடு போட்ட மாலதி, நாட்கள் ஆக ஆக, கோப்பையில் ஊற்றும் காபியையும், சாப்பாட்டுத் தட்டில் போடும் பருக்கையையும் குறைத்தாள். தனது மகனின். இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சை, இடைமறிக்க இயலாமல் திகைத்துப் போனவன், பேண்ட் ஷர்ட்டுடன், கேமராவுடன் நிற்கும், மகனின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டான்.’ நானும் படித்தவன்தான் என்பதைக் காட்டிக் கொள்ள , இதில், இது ஒரு புதிய புரட்சி என்று பதிவிட்டிருந்தான்.

இதைப்பார்த்த மாலதி, காபி தம்ளரை கொடுத்து விட்டு, ‘ பேசுப்புக்குலெ சூப்பரா எழுதிருக்கீங்களே, ஒங்களைப் பத்தி எல்லாரும் பேசிக்கிறாங்க, நாந்தான் புத்தி கெட்டவரைக் கல்லாணம் பண்ணி, ஒரு சொகத்தையும் அனுபவிக்கலை, இப்ப மக மூலமா, எனக்கும் ஒரு, விமோசனம் கெடைக்கும்னு நினைக்கிறேன்’ என்று, நன்றாக இருந்த முந்தானையை மீண்டும் விலக்கி, சரி செய்து கொண்டாள்.

‘இந்த மானங்கெட்ட பொழப்புக்கு, தூக்குப்போட்டு நிக்கலாம், புரட்சியாமுல்ல புரட்சி.. என்று நலுப்பாயி கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், உமிழ்நீரை துப்பி வீணாக்கினார்கள். பஸ்ஸூக்காக காத்திருந்த மாலதி சம்பந்தி, இதைப் போயி பெருமையாப் பேசிக்கிறதா சொல்றா.. இவ ஒரு முட்டா முண்டையா’ என்று நினைத்துக் கொண்டு பஸ் ஏறினான்.

ஒரு தவறை மறைக்க, இன்னொரு தவறைச் செய்பவர்கள் விளைவை யோசிக்கவில்லை. பெருமை பேசும் பெருச்சாளிகளின் அருமை, தலைவிரி கோலமாக ஆடுகிறது அவமானமாக… இது ஒரு பக்கம் இருந்தாலும், வாயை மூடினார்களே தவிர, வேட்டி, சட்டை, சேலை, ஜாக்கெட்டுகளுடன்தான் திரிகிறார்கள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “டூப்ளிகேட்ஸ்

  1. என் காதலியே திருமணம் செய்து கொள்வேன் என, என்னை ஏமாற்றிவிட்டுச் சென்றாய். உன்னை யாரோ ஒருவன் ஏமாற்றியது வருத்தமாக உள்ளது. இந்தக்கதை நமது காதல் வாழ்க்கையை நினைவுபடுத்துவதாக உள்ளது. கதையைப் படிக்க நேர்ந்தால், உனது மொபைல் நம்பரை அனுப்பு. முதல் திருமணத்தின்போது நீ அனுப்பிய நம்பரை மாற்றிவிட்டாயா..

    ஐலவ்யூ ப்ரியா
    இப்படிக்கு உன் நினைவில் வாழும்
    சகாதேவன்
    வாலாந்தரவை

  2. தென்மாவட்டம் ஒன‌றில‌ கல்லூரியில் படிக்கும்போது ,ஒரு பெண்ணை காதலித்தேன்‌
    . என் வீட்டேக்கு வந்து தங‌கியுள்ளால். அப்போது திருமணம் செய‌து கொள்ளலாம் என்றவர் ,எனக்குச் சொல்லாமல். இன்னொருவனை திருமணம் செய்து கொண்டார். அவளுக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். சிறுகதை தளம் மூலம் ஒரு வேண்டுகோள். ப்ரியா சிறுகதை தலத்தில் இந்தக் கதையைப் படித்தால் எப்படி இருக்கிறாய் என்று போன் பண்ணு. இந‌த சிறுகதைக்கு பாராட்டுக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *