கேரளத்தில் எங்கோ…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2023
பார்வையிட்டோர்: 996 
 
 

(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம்-11

கூடத்தில் ரகளை தாங்க முடியவில்லை. ரேடியோ கிராமை முழுசத்தத்துக்குத் திருப்பியாச்சு. “ஸாச்மோ” அவன் எட்டிப் பிடிக்கும் ஸ்தாயிகள் உண்மையாகவே பயமாயிருக்கின்றன. கூடவே ப்ரபு கிதாரில் சமாளித்துப் பார்க்கிறான். ஒவ்வாத போட்டியென்று அவனே அறிவான். லூலுவும், சாமாவும் தனித்தனியாக ஆடுகிறார்கள். எனக் காகப் பார்க்கிறார்கள். (கொஞ்சம் இடது கண், வலது கண்) இல்லாவிடில் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆடுவார்கள் என்றே தோன்றுகிறது. அடே, பாஸின் பெண்ணை காக்கைப் பிடிக்க வேண்டுமென்றால், உன் கதி இப்படியும் ஆகணுமா? 

மதுரம் அடுப்பங்கரையில் ஒழித்துப் போட்டு அலம்பி விடும் காரியத்தில் இருக்கிறாள். 

‘திக்குத் தெரியாமல் – இல்லை, திக்கில் அக்கறை யிலாது சலனம் மட்டும்தான் எங்கள் தத்துவம், தரம்,எல் லாமே’ என்று அவன் தலைமுறையின் சின்னமாய் அவனை இப்படிப் பார்க்கையில் எனக்குத் தோன்றுகிறது. 

உர்ஸ் – இந்தப் புயலின் மத்தி அமைதியில் அமர்ந்து விழி கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

கொஞ்ச நேரத்துக்குப் பின் எனக்குத் தாங்க முடிய வில்லை. மண்டையுள் ஏதேதோ முள்சக்கரங்கள் சுற்ற ஆரம்பித்து விட்டன. விரைந்து எழுந்து வீட்டின் மூன்று அறைகளில் ஒன்றில் தஞ்சம் புகுந்து விட்டேன். முன்னாலேயே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கை அணைப்பது, வேணும் போது போடுவது, எலெக்ட்ரிக் பில்பற்றி பிள்ளைகளுக்கு என்றுமே கவலை கிடையாது. 

ஒரு மூலையில் இரண்டு, மூன்று கிதார்கள், ஒரு ஆர்மோனியம், ஒரு மூலையில் தம்பூரா (எதற்கு?) மேசை மேல் அலங்காரமான அலங்கோலத்தில் புத்த கங்கள் – ஐந்தாறு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஒரு கலில் கிப்ரான் (?) ஒரு ப்ரெஞ்ச் இலக்கணப் புத்தகம் (?) நாலைந்து பால்பாயின்ட் பேனாக்கள், ஒரு கறுப்பு மசிக்கூடு, கோல்டுஃபிளேக் சிகரெட்பெட்டி, மேசை மேலே இரண்டு, மூன்று சிகரெட்டுகள் அல்க்ஷியமாகச் சிதறியிருக்கின்றன – ‘லக்மே’ கூந்தல் தைலம், இரண்டு, மூன்று ‘லோஷன்’ பாட்டில்கள்,இரண்டு,மூன்று நோட் புத்தகங்கள், ஒரு ‘போட்டோ’ ஆல்பம், இத்யாதி, இத்யாதி. 

திடீரென ஒரு அசதி; சுவரோரமாக விரித்திருந்த பிரம்புப் பாயில், சுவரில் சாய்ந்தபடி சரிந்தேன். 

காசிக்குப்போகும் பிராம்மணனுக்குத் திண்ணையில் சொம்பைப் பற்றிக்கவலை ஏன்? இதையெல்லாம் பார்ப்ப தால்தானே பரிதவிப்பு? 

பார், ஆனால் பட்டுக் கொள்ளாதே. படிப்பதைக் கடைப்பிடிப்பது சுலபமாயிருக்கா என்ன? வயது போதா தென்று ஜன்மங்களாக அதற்குத்தானே கொடுத்திருக் கிறது? 

கீதை படிக்காமலே பையன்களும் தங்கள் நடத்தையில் அதைத்தான் போதித்துக் காட்டுகிறார்கள். 

“கண்ணை மூடிக் கொள்வது ஒரு பயங்கொள்ளித் தனம். ஆகையால் காணத்தான் வேணும். ஆனால், கவனிக்காதீர்கள். கவனித்தால் கஷ்டப்படுவது நீங்கள் தான். பரிதாப நரம்பு என்பதே எங்களில் இல்லை.முதலில் முளைத்திருந்தால்தானே வளர?” 

எதிரே சுவரில் ஒரு காலண்டரிலிருந்து ஒரு புலி ஒரு கவுதாரியைக் கவ்வியபடி என்னைப் பார்த்துக் கொண் டிருக்கிறது; எத்தனை நாழியாக? இந்தக் காலண்டரை எங்கு பிடித்தான்? இதற்காகத்தான் பிடித்தானா? புலிப் பசிக்குக் கவுதாரி கடைவாய் காணுமா? 

“ஆனால் இப்போ இதுதான். இவ்வளவுதான் தினே தினே மானும், வரிக்குதிரையும் கிடைத்துக் கொண்டி ருந்தால் சம்மதந்தான். ஏன் நீயே கிடைத்தாலும் எலும்பும் தோலுமானாலும் கிடைத்தவரை லாபம். வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் இந்நாளில், தேடும் இரையைத் தேர்ந்து எடுக்க முடியுமா என்ன? புலி பசித்தாலும் புல்லைத் தின்னாததெல்லாம் அந்தக்காலம். தம்பி அல்லது அண்ணா அல்லது தாத்தா அல்லது கிழவா. 

ஆளரவம் கேட்டு நிமிர்ந்தேன். ப்ரபு அவசரமாக உள்ளே வந்தான். என்னைக் கண்டதும், ஒரு கணத் தயக்கம். மேசை மேல் கண்களில் மின்னோட்டம். என் வேவு எந்த மட்டும் என்று அவன் வேவு. இதெல்லாம் வேணுமேன்றே அல்ல. கணநேரம் பெரு நேரம். மின் நேரம். அதுவும் அதிகம்.(ஒ! விட்டுத்தொலை…) நேரே என்னிடம் வந்து என் மாதிரியே சுவர் மேல் சாய்ந்து அமர்ந்தான். 

”உஸ்!”-ஒரு ‘தம்’முக்கு வந்திருப்பான், (வந்திருப்பான் என்ன?எனக்கு அவன் கொடுத்திருக்கும் இந்த மரியாதையை நான் மறுப்பானேன்!) 

“என்ன ப்ரபு. வந்து ஓஞ்சு உட்கார்ந்திட்டே கச்சேரி ஒரு வழியா ஓஞ்சுதா?” 

“இல்லையே நடந்துண்டிருக்கே!” 

“ஏன், நீ சேர்ந்துக்கல்லியா?” 

கையை வெறுப்பில் உதறினான். ”படுபோர்!” 

“நீ ஆடின சாமியாட்டத்தைப் பார்த்தால் இரண்ட கலந்திருந்தையே!” 

“எல்லாம் ‘டூப் அப்பா! இந்த மியூஸிக்கின் ஜீவநாடியே பாசாங்கு தான். 

“புரியல்லே” 

“எல்லாம் முடுக்கிவிட்ட கோரணிகள். மேனாட்டில் செய்கிறான்கள். கோட்டையும் சூட்டையும் மாட்டிண்டு இந்த ஆட்டமும் பாட்டமும், அவர்களைப் பார்த்து நாம் காப்பியடிக்கிறோம். 

காதில் வாங்கிக் கொள்ளாமலே, ”அவர்கள் செய்வதே பொய், அதனால் நாம் பொய்யிலும் பொய்.” 

“அப்போ எது நிஜம்?”

“இதன் அயன், ஆப்பிரிக்காவின் காடுகளில் அவர் களுடைய தாரை, தமுக்கு தப்பட்டைகளுடன், தோலையும் எலும்பு மாலையையும் மண்டையோடு களையும் மாட்டிக் கொண்டு. மாட்டிக்கொண்ட நரபலியைக் கட்டிப் போட்டு அதைச்சுற்றி நீக்ரோ ஆடுகிறானே, அல்லது ஆடினானே, அல்லது இன்னும் நம் நாகரிகங்களின் அடிச்சுவடு படாத இடங்களில் அவன் பண்புகள், நம்பிக்கைகள் கலப்படமாகாமல் எங்கோ ஆடிக் கொண்டிருக்கிறானே – அது அசல். நான் சொல்வதை அல்ல சொல்ல முயல்வதை நம்மவன் எவன் பார்த்திருக் கிறான்? பார்த்தவன் மீள்வானா? எல்லாம் அனு மானத்தோடு சரி. அதிலும் இது எத்தனாவது வண்டலோ? என்னவோ அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக் கிறோம். விட்டுத் தள்ளுங்கோ அப்பா! வேறேதேனும் பேசுவோம்-” 

“நான் வந்து உங்களுடன் ஒழுங்காகப் பேசக்கூட இல்லை.” அவன் கண்கள் என்னத்தையோ தேடி அலைந்தன. எனக்கு அடக்க முடிய வில்லை. “எனக்காகப் பார்க்கவேண்டாம் ப்ரபு” என்றேன். 

புன்னகை பூத்தான். “அதான் பார்த்தேன், இன்னும் வரல்லியேன்னு. எனக்குப் பழக்கம் கிடையாது. உங்க ளுக்கேத் தெரியும்.” 

“அப்புறம் அஞ்சு வருஷம் ஆச்சு அப்பா! இப்போ இருக்கக்கூடாதா?” 

“மறுபடியே விட்ட இடத்திலிருந்து அதே தப்பைத் தான் தொடர்கிறோம். 

“அப்போ” என் கண்கள் வினாவில் மேசைமேல்- சிதறியிருக்கும்-? தொட்டன. 

“அது எனக்குமல்ல, என்னுடையதுமல்ல எனக் கெங்கே கட்டுபடியாகும்? நானே நாயுண்ணி மாதிரி என் தம்பியை ஒட்டிக் கொண்டு அவன் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். இது இங்கே ஒத்திகைக்குச் சில சமயங்கள் வந்து ஊதிவிட்டு இங்கேயே மிச்சத்தை உதறி விட்டுப் போகிறான்களே ஒண்ணுரெண்டு மைனர்கள், கோஷ்டி சகாக்கள், அவர்களுடைய ப்ரசாதம்! இதுவும் நான் சொல்வது தான். நீங்கள் ஏற்றுக் கொண்டால் உண்டு. இல்லையேல், அப்பவும் சந்தேகம் உங்களுடையது. உண்மை என்னுடையது, அவ்வளவுதான். 

அதே வக்கிரஸ்வர, நாடக பாணி, புது ‘டிஷ்’ பேச் சுத்தான். புன்னகை புரிந்தேன் 

“ரத்தத்தில் ஊறிப்போச்சு!”

“சொல்திறன் எல்லாம் முன்னேறிப் போச்சு அல்லவா?” 

“சிந்தனைத்திறனை ஏன் விட்டு விட்டீர்கள்?” 

“ஹும்…சிந்தனையும்தான்! உணர்ச்சியில் நாணயம், இதயத்தில் ஈரம் – அதெல்லாம் வறண்டு போச்சு. 

“நீங்கள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையின் போக்கில் ஒரு எதிரோட்டம், ஒரு சுழிப்பு, பெரியவர்களுக்குப் பொறுக்காது” 

“உனக்குச் சரியாக இருக்கலாம் நீ சொல்வது, சரி தப்புகளின் பங்குகளை நீ வகுத்துக் கொண்டிருக் கிறபடி!” 

சந்தேகமில்லாமல் சில சமயங்களில் கயிற்றை நீள மாக்கி மேய விடுகிறீர்கள், அவ்வளவுதானே! கன்றுகுட்டி கயிறு மறந்து தடுக்கித் தடாலென்று விழுந்தால்- விழணும்- அப்பவே சொன்னேன் கேட்டையா என்று நீங்கள் கொக்கரிக்கணும், அதானே? பெரியவர்கள். எங்களை எங்களுக்காகவே எங்கே செயல்பட விடுகிறீர்கள்?” 

“சமுதாயத்தின் கட்டுக்கோப்பு, கட்டிடமே ஒரு கட்டுப்பாடுதானே தம்பி! இல்லாவிட்டால் எங்கும் விலங் கின் ஆட்சிதான். ஏன் சாவே உனக்கு ஒரு கட்டுத்தறியாகப் படவில்லையா? நினைத்ததெல்லாம் சாதித்துவிட முடிகிறதா? சமுதாயத்தின் விளைவு நாம், சமுதாயத்தில் வாழ்கின்றோம். தொடர்ந்து வாழ்கிறோம். ஆகையால் அதன் விதிகளுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதற்குச் சேர வேண்டிய கப்பத்தை செலுத்தித்தான் ஆக வேண்டும். இல்லாவிடில் அது உன்னைச் சிலுவையில் அறைந்துவிடும். ப்ரபு, உன் பாடங்களை இந்த ஐந்து வருடங்களில் கற்றுக்கொண்டிருப்பாய் என்று நினைத் தேன். ஆனால், நீ கொஞ்சம்கூட மாறவில்லை. ஏன்? யாருமே திருந்தவில்லை. 

“அப்போ, அஞ்ஞாதவாசத்தில் திடீரென்று மறைந் தீர்களே, நீங்கள் மாறியிருக்கிறீர்களா? திருந்தியிருக்கிறீர் களா? என்று பிள்ளை அப்பனைக் கேட்டால் மரியாதைக் குறைவு. அப்பன் பிள்ளையைக் கேட்டால் புத்திமதி. இதுவே ஒரு பங்கீடு. சமுதாயத்தின் பங்கீடு அல்லவா? நாங்கள் திருந்த வேண்டும் என்கிற எண்ணத்திலா எங் களை விட்டுப் போனீர்கள்?” 

“உங்கள் நடைமுறை, வீட்டுக்குள்ளேயே அட்டஹாஸம், போக்கின் வேதனை பொறுக்க முடியாமல் ஓடிப்போனேன் என்றே சொல்கிறேன். நீங்களே உங்கள் நிலைமையுணர்ந்து திருத்திக் கொள்வீர்கள் என்று நினைத் தேன். நான் எதைச் சொன்னாலும் உங்களுக்கு மூக்கணாங்கயிறாயிருக்கிறதே!” 

“ஆமாம், திருந்துவதென்றால் நாங்கள் உங்கள் வழிக்கு வந்துவிட வேண்டும் அதானே!’ 

“அப்படி என்ன அப்பா, நாங்கள் காட்டும் வழி அவ் வளவு பொல்லாதவழி?’ 

“ட்ராக்கை மாற்றாதேயுங்கள் அப்பா! அப்போ எங்களுக்கு எங்கள் வழியென்று கிடையாதா? முள்ளும் புதரும் ஆனாலும்; நீங்கள் வகுத்தது.அது ஒத்தையடிப் பாதையோ, ராஜ பாட்டையோ, அதுதானா எங்கள் விதி? அப்பா, உலகம் ஏற்கெனவே போட்டிருக்கும் ராஜ பாட்டையை மீதிப்பவர்களுக்கு அல்ல. கல்லும், மண்ணும், பள்ளங்களும், பறிக்காத குழிகளும் பறித்த குழிகளும்… 

என் தலையை இறுகப் பிடித்துக் கொண்டேன். இவன் என்ன உளறிக் கொண்டே போகிறான்? உருவக பாஷை யில் ஊரை ஏமாற்றிக் கொண்டு, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு – இது தான் ப்ரபு. உழைப்புக்கு உடம்பு வணங் காமல், வெட்டிப் பேச்சே பிழைப்பு என்ற சித்தாந்தத்துக்கு வந்து விட்ட ப்ரபு. வாயில் வந்ததெல்லாம் இவர்களுக்கு பொன்னான வார்த்தை; மூதாதையர்களும் முன்னோடி களும் இவாகளுக்கு மடையர்கள். இவர்கள்தான் புது ஞான ஜோதிகள். 

நான் பேசவில்லை. தட்டாமாலைத் தாமரைப்பூ, சுத்திச் சுண்ணாம்பு வந்தாச்சு. என் மானம், கௌரவம், உறவு, எல்லாமே ப்ளாட் பாரத்துக்கு. 

“அப்பா இப்படியெல்லாம் எனக்குத் தோணுவதே உங்களுக்குப் பிடிக்க வில்லை, எனக்குத் தெரியும். இத்தனை நேரம் நாம் பேசினது அத்தனையும் பழைய பாடம், அலுத்துப் போன பாடம், உளுத்துப் போன லெக்சர், லெக்சர், லெக்சர்! என்னைச் சொல்கிறீர்கள். நீங்களும் அதே, அப்போ போட்ட கிராமப்போன் பிளேட்டைத் தான் வாசிக்கிறீர்கள். அப்பா. நான் நினைக்கி றேன், இல்லை எனக்கு அப்படித் தோணறது.நாம் – இல்லை மனிதன், சொன்னதையே சொல்லி, எண்ணி எண்ணி, மிதித்ததையே மிதித்துக் கொண்டு, தன்பாதத் தையே பள்ளமாக்கிக் கொண்டு, அந்தப் பள்ளத்தினுள் ளேயே சுற்றிச் சுற்றிக் கொண்டு வரும் நிலைமாற வேண்டும். அவன் காலகள் அரித்த பள்ளத்தின் பக்கவாட்டு கள் மதில்களாக அவனைச் சிறை வைத்து விட்டன. அந்த மதில்களைத் தகர்த்தெறிய வேண்டும். அதற்கு நீங்கள் பெரியவர்கள் எங்களுக்கு என்ன உதவி செய்யப் போகிறீர்கள்?” 

எனக்கு தலை சுற்றுகிறது. இவன் என்னை என்ன வசூல் கேட்கிறான்? 

“ப்ரபூ, இந்தச் சக்கர வட்டப்பேச்செல்லாம் விட்டுத் தள்ளு. உன்னுடைய அசல் ப்ரச்னைதான் என்ன?” 

அதுவே எங்களுக்குத் தெரிந்தால் தானே! ஒண்ணு தெரிகிறது. எங்கு நான் ஓடினாலும் ஓட்டத்தின் முடிவில், எனக்கு முன்னால் நான் எனக்காகக் காத்திருக்கிறேன். இதற்கு விமோசனம் என்ன? 

“ப்ரபூ, ப்ரபூ, ப் – ர – பூ – ஊ ஊ ஊ” 

“கம்மிங் லீ…லீ…” 

என் கைவிரல்களை ஒருதரம் அமுக்கிவிட்டு, என் தைரியத்துக்கு வெளியே சென்றான். 

அப்போ இதுதான் உன் விமோசனம். மத்யான வாய்க் காலில், உண்டையும் உருளையுமாக, வாலும் நீளமுமாக நீரோட்டம் செல்லும் வழியில் மிதந்து செல்லும் மத்தி யானப்பாசி. ஆனால் பேச்சென்னவோ எதிர் நீச்சலைப் பற்றி; இவர்களுக்கு மிதக்குமிடம் பாற்கடல். ஒதுங்கிய விடம் உத்தியானவனம். மரத்தடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தை நோக்கி எச்சில் உமிழ்வார்கள். இவர்களும் ஒரு விதத்தில் சன்னியாசிகள் தான். பகல் வேஷ சன்னியாசிகள்.

நான் ஏன் இங்கு வந்தேன்? நான் இங்கு வேண்டப் படாதவன். என் வயதில் அந்த நிலைமை கஷ்டமாயிருக் கிறது. வயதானவர்கள், அவர்கள் வீட்டிலேயே, அழையா வீட்டுக்கு நுழையாச் சம்பந்தி. இங்கு வந்து இன்னும் கடியாரத்தின் இரண்டாவது வட்டம் முழுதாக முடிய வில்லை. நான் என் குடிசைக்கு ஏங்க ஆரம்பிச்சாச்சு. 

அத்தியாயம்-12

நுண்ணறிவின் உள் உணர்வின் தட்டி எழுப்பலில் விழித்துக் கொண்டேன். அறையில் நான் தனியாகயில்லை. ‘யாரது?’ நாக்கு எழவில்லை. கேள்வி நெஞ்சிலேயே சுருண்டு கொண்டது. சுவர்கள் ஒட்டிய மூலையிருளினின்று உருவம் பிரிந்து வந்து கட்டிலில் என்னருகே, ஒருக் களித்திருந்த என் உரு வளைவு கொடுத்த இடத்தில் அளவு பிடித்தாற்போல் உட்கார்ந்து கொண்டது.ஆனால்,என் உள் நினைப்பின் அடித் தடத்தில் கமழும் எண்ண மண்டலத்தில் உன்னை எதிர்பார்த்துக் கொண்டு தானிருந்தேன். 

அசதி வடிய உருவி விட்டாற் போன்ற அயர்ந்த நித்திரையினின்று துல்லியமான விழிப்பு. விரல் நுனிகள் என்முகத்தைத் தொட்டன. வானில் நிலாக்கொம்பு முளைத் திருக்கிறது. நீலம் பூத்த பனி மூட்டத்துள் மோனம் ஸ்புடம் வைத்திருக்கிறது. 

என்னையறியாமல் என்னின்று- 

“என்ன பெருமூச்சு? யாரென்று நினைத்தீர்கள்? கள்ளப் புருஷனிடம் வந்திருக்கேனா? கணவனேதான கள்ளப்புருஷன் எனக்கு!” 

“சீ, இதென்ன பேத்தல்?” 

பெருமூச்செறிந்தாள். மறுபடியும் கன்னத்தை வருடல். ஜன்னலிலிருந்து (கை நீண்டால்) எட்டிப் பிடிக்க லாம் போல், ரஸகுண்டு போல் வானத்தில் தொங்கிய ஒரு நக்ஷத்திரம் சிவந்து தணல் கட்டியாக மாறியது போல் எனக்குத் தோன்றிற்று. 

“மறுபடியும் நமக்கு வாழ்வு கிடைக்குமா?”

“எந்த சினிமா? வயதுக் கேற்ற மாதிரி நடந்து கொள்ள மாட்டோமா?” 

“சத்யமா ஹ்ருதயத்திலிருந்து வர வார்த்தை.”

“இந்த வயசில் வாழ்வென்று என்னிடம் என்ன எதிர் பார்க்கிறாய்?” எனக்கு ஒரு கண் ஜன்னலுக்கு வெளியே தான். பப்பாளிப் பழத்தில் ஏறிய கத்திபோல், ‘கீச்’ என்று கூர்ப்பாய், கூம்பியதோர் பக்ஷி சப்தம் வான்மெத்தில் செருகிக் கொண்டது. குன்னக்குடி வயலின் ஸன்னம் போல்… ”உனக்கு ஒரு பாட்டுத் தெரியுமா? மீசை நரைச்சு போச்சே கிழவா -” முதலடி மட்டும் எடுத்துக் கொடுக்கி றேன். “பாட்டு ரொம்பப்பழசு. ஆனால் உங்களுக்குப் புதுசு.உங்களுக்குப் பழசெல்லாம் புதுசுதான். 

“எப்பவும் கேலிதானா?” 

“என்னைப் பார்த்தால் கேலி பண்றவன் மாதிரியா யிருக்கு? நடை நாலு அடி கூட ஆகி விட்டால் புறங்கால் அப்பம் கண்டு கொள்கிறது. நாலு படி கூட ஏறினால் மூச்சு இறைக்கிறது”. 

“என்னைச் சொல்லிட்டு நீங்கள் இப்போ லிஸ்ட் போடறேளா?” 

திடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது- 

-“உர்ஸ்?” 

“அவளுக்கென்ன, அசந்து தூங்கறாள். என்பக்கத்தில் தான் படுத்திருக்காள்.நான் நம்மைப்பத்திப் பேசிண்டிருந் தால் அவளைப்பத்தி இப்போ என்ன நினைப்பு?” 

”வழியாதே. எனக்குப் பொறுப்பில்லையா? அவளை அவள் வீட்டில் போய் ஒப்படைக்க வேண்டாமா?” 

“அப்போ திரும்பிப் போகப் போறேளா?’ 

“சிரிப்பு மூட்டாதே. இதென்ன கழைக் கூத்தாடித் தனம்?” 

“அப்படின்னா புரியல்லியே!” 

“கழைக் கூத்தாடி மேளம் அடித்துக் கூட்டத்தைக் கூட்டுகிறான். வித்தை காண்பிக்கிறான். வித்தை முடிஞ்சது. வந்தவாள் எல்லாம் அவனிடத்திலேயே தங்கிட றாளா? தங்கிட முடியுமா? அதுதான் கழைக் கூத்தாடியின் எண்ணமா? வேடிக்கை பார்க்க வந்தால் எல்லாருமே விரிச்ச துணி மேல் காசைப் போடறாளா?”

செவிகளைப் பொத்திக் கொண்டாள். “என்ன கொடுமை, என்ன கொடுமை?” 

“என் பாஷை பிடிக்கவில்லை போலும். உடம்பு சுக மில்லையென்று கடிதாசு போட்டு வரவழைத்துவிட்டு, உடனே பிள்ளைக்குக் கலியாணம் என்கிறாய். திரும்பிப் போகப் போறாயா என்று கேட்கிறாய். “தோ தோ’ன்னா நாய்க்குட்டி வரணும், தூ தூன்னா நாய்க்குட்டி போகணும், வாட் இஸ் திஸ்?” கோணி ஊசி குடைந்து கொண்டு எனக்கு உச்சி மண்டைக்கு ஏறிற்று. 

”உஷ்!-” 

”சரி!” 

மோனம். 

நூலின் சிக்கலில் நுனியைத் தேடி இன்னொரு சரடை இழுத்தாகிறது. குரல் அது மாதிரி ஸன்னமாய்,தயக்க மாய், முனகலாய்:- 

“நீங்கள் நினைச்சுண்டிருக்கிற நினைப்பில் நான் வரல்லே. எனக்குத் தெரியாதா? நான் மட்டும் குமரியா? பகலெல்லாம் உழைச்சிட்டு உடம்பு செத்துக் கிடக்கு. நம் மிடையில் இனி என்ன, ஒருத்தருக்கொருத்தர் துணைப் பேச்சுத்தான். 

“நம்மிடையில் பேச்சுக்கு என்ன இருக்கிறது?’ 

“அப்படி சொல்லிட்டா?”- திடீரென்று அவளுக்கு அழுகை வந்து விட்டது. எனக்கு உடம்பும் சரியில்லை. இத்தனை நாள் கழிச்சு வந்தும் இப்படி விஷத்தைக் கக்கணுமா?’ 

“பிறவிக் குணம் பிறவியோடு தான் போம். சரி நான் இங்கு வந்து ஒரு பகலுமாச்சு. ஒரு இரவுமாச்சு. இன்னொரு பகல் வரப் போறது. இந்திரக் கோழி கத்தப் போறது. உனக்கு என்ன உடம்பு என்று இன்னும் தெரிஞ் சுக்கப் போறேன். இல்லை, ஒருவேளை நான் வந்தவுடனே சரியாய் போயிட்டுதா?” 

“அப்படியே உங்கள் புண்ணியத்தில் குணமானால் நல்லதுதான். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உடனே சிரித்தாள். அவளுடைய பலவீனம் அது தான். பலமும் அதுதான். பலவீனமே பலம்-கவர்ச்சி. 

”மதுரம் நீ இன்னும் கொஞ்சம் ரோசத்தைக் கொண்டாடினால் உனக்கே நல்லது. 

“என்னால் அது முடியாத காரியம். உங்களுக்கே தெரியும். உங்கள் மாதிரி நினைச்சுண்டேளா? பாம்பு புத்துக்குள்ளேயே தன் குரோதத்தைத் தவங்கிடக்கே, அது போல – என்ன உடம்பை சிலிர்த்துக்கறேள்?” 

”நீ பாம்பு என்றதுமே எனக்கு ஏதோ ஞாபகம் வந்தது. முந்தாநாள் இரவுதான் ஒரு நாகம் பார்த்தேன் 

“கடிச்சுடுத்தா? திடீரென்று பரபரப்பானாள். 

“கடிச்சுட்டால் உன்னோடு இங்கே இப்போ உதவாக் கரையா – என்னமோ அத்தைக்கு மீசை முளைத்தால் என்ப பதைப்போல – இந்த வெட்டி பேச்சு பேசிண்டிருக்க முடியுமா?” 

“நீங்கள் பாம்பு என்றவுடனேயே பயந்து போயிட் டேன். இப்படித்தான் சில சமயங்களில் அசடாயிடறேன்.’ 

“ஆமாம்,சீதை அரண்மனை தாண்டியவுடன் இது தானா ஆரண்யம்னு கேட்டாளாம். அதுபோல ஒரு அசடு. நடிப்புக்கலை நாட்டில் அந்த அளவுக்கு முன்னேறியிருக் கிறது. நாங்கள் அதை மேடையில் மட்டும் கண்டு ரசிச் சோம். அது இப்போ வீட்டுக்குள்ளேயே வந்து விட்டது. இதிலிருந்து நான் தப்பி ஓடினேன். திரும்பி வந்தால் இன்னும் கெட்டியா வேரோடு கூரையைப் பிளந்துண்டு இலையும் கிளையுமா பரவி – 

“ஆமாம், நீங்கள் பேசறது மட்டும் நாடக பாணியா இல்லையா?” 

அவள் சொல்வது சரிதான். மௌனமானோம். 

“நாம் புட்டுக்கணும்.”

“இப்போ என்னவாயிருக்கோம்? ஒற்றுமையாவா இருக்கோம்?” 

தலையிலடித்துக் கொண்டாள். “நம்மையா சொன்னேன்? ராமா, நாம் இங்கிருந்து புட்டுக்கணும்”. 

“ஓ!” 

“அந்த ‘ஓ வுக்கு என்ன அர்த்தம்?” 

“உஷ்”!- 

பித்தளைப் பாத்திரத்தில் மழை ஜலம் விட்டு விட்டு இனிமையான சொட்டு சொட்டு. 

“ப்ரபு”. 

கொட்டின தேன் மேல் உதிர்ந்து ஒட்டிக் கொண்ட பூவிதழ்கள். 

“இப்படித்தான் சில சமயங்களில் அவனுக்குத் தூக்கம் வராவிட்டால் கிட்டாரைத் தட்டிண்டிருப்பான்.”

இட்ட கோலம் சோம்பல் முறித்தாற் போல் முனகல்கள். 

இருளோடு இழைந்த சிறுத்தை புள்ளிகள், மீசை அசைவுகள், திடீர் திடீர்ச் சீறல்… 

அடங்கி ஓயும் உறுமல்கள், அதிலிருந்து வெடிக்கும் தும்மல்கள்… 

இத்தனையும் ஒன்றுசேரப் பார்க்கும் ஒரே கோடருவி. அதனுள் ஆங்கும் ஈங்கும், ஒற்றையும், இரட்டையு மாய் முளைத்துப் பூக்கும் நீலக் குபீர்குபீர்கள். 

”மதுரம், ப்ரபு என்ன வேதனைப் படுகிறான். வேதனை உறுத்துகிறான்; என்னத்தைத் தேடுகிறான்? 

“அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து அர்த்தம் பண்ணக் கேட்க வேண்டாம். பண்ணின் அர்த்தமும் உங்கள் ரெண்டு 
பேருக்குத்தான் புரியும். உங்களுக்குப் பதில் சொல்லணும்.” 

“அவன் கெட்டான் குடிகாரன் எனக்கு ஒரு மொந்தை போடு – “

“ரொம்ப சரி. எனக்கு என் அர்த்தம். என்ன சொல்கிறீர்கள்?’ 

இ.சி.ஜி.நீல ஓட்டத்தில் துடிப்பு தடுமாறுவது போல், கிதார் நாதம் தத்தளித்தது. 

என் கட்செவியில் அதை பார்த்த வண்ணம் அல்ல, கேட்ட வண்ணம் அல்ல, பார்த்த வண்ணம் கேட்ட வண்ணம், “என்ன சொல்லணும்?” 

“நம் புது வாழ்க்கை-” 

”மதுரம், நாம் என்ன சின்னக் குழந்தைகளா, சொப்பு வைத்து விளையாட? நான் வீட்டை விட்டு ஓடிப் போனவன் என்று பேரைக் கட்டிக் கொண்டபின், என்னோடு புது வாழ்க்கை தேடுவதன் அர்த்தம் என்ன? நம் பாதைகள் பிரிந்து போயாச்சு-” 

“பிரிஞ்சால்,பிரிஞ்சே போயிடுமா? போயிடணுமா? திரும்பி சேர்வது கிடையாதா? அப்படி நீங்கள் ஓடிப்போ னேன்னு சொல்றதுக்கு நாங்கள் என்ன புலியா சிங்கமா? அப்படி என்ன செய்து விட்டோம்?” 

“இந்தப் பழைய பாடம் திருப்பல் உனக்கு அலுத்துப் போகல்லியா? எனக்கு அலுத்துப் போச்சு.” 

“சொல்லுங்களேன், கேட்டுக்கறேன். கேட்டு நாளாச்சு -“

”ஒஹோ, கேலி வேறா? ஒரே வார்த்தையில் சொல்கிறேன். ஏற்கெனவே சொன்ன வார்த்தைதான். உங்க ளுக்கு வேர் கிடையாது. எனக்கு என் வேர்களைப் பிடுங்கிக் கொள்ள முடியவில்லை- 

சிரித்தாள். “அதுக்குத்தான் சொல்லச் சொன்னேன். உங்கள் பாஷை எங்கே புரியறது?” 

”உனக்குப் புரிஞ்சுக்க இஷ்டமில்லையென்று சொல். இதென்ன, கூடைக்காரியுடன் கத்திரிக்காய் பேரமா? இதோ பார் மதுரம், வெட்கத்தை விட்டால் எப்படி வேணு மானாலும் வாழலாம்.” 

“என்ன பெரிய பேச்சாப் பேசறேள்? நாங்கள் என்ன அவிழ்த்துப் போட்டுண்டு ஆடறோமா?” 

“சரிவிடு, நீ இப்பேர என்ன புதிதாய் வாழ்வைத் தேடறே? “

னக்கு இங்கே பிடிக்கல்லே. 

வந்தையா வழிக்கு? உனக்கு இப்போ பிடிக்கல்லே. எனக்கு அப்பவே பிடிக்கல்லே. அவ்வளவுதான் விஷயம். 

“சரி இப்போ என்ன சொல்றேள்?” 

“என்னோடு வரேன் என்கிறாயா?” 

அவள் தலையை ஆட்டுவது தெரிந்தது. 

”மதுரம், இந்த உர்ஸ் பண்ணும் சமையல் வாயில் வைக்க வழங்காது. 

தலையில் அடித்துக் கொண்டாள். 

“நான் வந்தப்புறம் கூட அவள் சமைத்து நாம சாப பிடணுமா?’ 

“அங்கு என் வாழ்க்கை மட்டம் உனக்குத் தெரியாது. ஏதோ வீம்புக்கு வாழறேன். நீ தாளமாட்டாய். அந்தக் களனே வேறு”. 

“அப்போ அப்படியாவது அங்கே இருந்தாகணுமா? நீங்கள் திரும்பிட வேண்டியதுதானே! உங்கள் பிள்ளைகள் உங்களைப் போபோன்னு விரட்டினாளா? நீங்களாத்தானே ஒரு நாள் திடீர்னு காணாமல் போயிட்டேள்? உங்களைத் தேடாத இடம் பாக்கியில்லை. குழந்தைகளும் நாங்களும் எப்படித் தவிச்சுப் போயிட்டோம் தெரியுமா? மூணு நாளைக்கு யார் ஒழுங்கா சாப்பிட்டா? இது வீம்பு பிடிக்கற வயசா உங்களுக்கு? யோசித்துப் பார்த்தேளா? நமக்கு உடல் ஒடுக்கம் ஓங்க ஆரம்பிச்ச பிறகு சிறுசுகளின் தயவு நமக்கு இனி மேல்தான் தேவை.” 

உனக்கு எத்தனை நாக்குப் பேசும்? மடக்குக் கத்தி மாதிரி உன் வாயில் பன்னிரண்டு ப்ளேடா-இன்னும் கூடவா? ஒண்ணு தெரியறது. என்னை நீ உடம்புன்னு ஏமாற்றி வரவழைத்து விட்டாய்.” 

“அதில் என்ன ஏமாத்தல் இருக்கு? உடம்பு எனக்கு சரியாத் தானில்லை. 

“இருக்கலாம், ஆனால், உன் உண்மைக் காரணம். சாமாவின் கலியாண சமயத்துக்கு, நீ மஞ்சள் குங்குமத் துடன் தனியா நிற்க முடியுமா/புருஷன் என்கிற பேரில் ஒரு தவிட்டுப் பொம்மையானும் உன் பக்கத்தில் நின்றால்தான் உனக்கு மவுசு – அல்லவா?’ 

பதில் சொல்லத் தவித்தாள். ஆனால் வாய் வரவில்லை. ‘குபுக் குபுக் குபுக்” கிதார் கொந்தளித்தது. 

நான் இரக்கமற்றுத் தொடர்ந்தேன், “என் மேல்தான் தப்பு. நீ வரவழைத்தால் நான் வரணுமா? இத்தனை நாட்கள் ஒண்ணுமில்லாமல், இன்னிக்கு உனக்குப் புரைக் கேறினால் அது என்ன நினைப்பால் என்று நீ சொன்னால் நான் நம்பணுமா? காரணம், நீ பண்ணின புளிக் கீரையா யிருக்கும். அந்த இடத்தில் தான் பழக்கத்தின் பலவீனம் ஓங்குகிறது.மதுரம், நாம் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொள்ளும் இந்தப் பாசம் அன்பு என்பதெல்லாம் பாதித்த ஒரு சூழ்நிலையின் பழக்க தோஷம். நித்த நித்தம் சில முகங்கள், சில நடமாட்டங்கள், நடத்தைகளுக்கு மனசு பழக்கப் பட்டு விடுகிறது அவ்வளவு தான். அதுவேதான் நுகத்தடியாகவும் மாறி விடுகிறது. உள்ளே இருக்கவும் முடிய வில்லை. வெளியே வரவும் தைரியமில்லை. என் மாதிரி “லக்னத்தில் குரு ஜாதகங்கள் ஒன்று அரைக் கேஸ். திமிறும் போது கெட்ட பேரை வாங்கிக் கொள்கிறோம்.’ 

”உங்கள் கொடுமை கொஞ்சம் கூட மாற வில்லை, இந்த வயசில் இந்தப் பிடிவாதம் வேண்டாம் உங்களுக்கு.’ 

“எல்லாம் நடக்கற வரையில் தான். செல்லும் வரை என் செயல், மிச்சம் நாராயணன். செத்த பிறகு, கார்ப்பொரேஷன் தொட்டியில் எறிஞ்சாலும் சரி, பூப்பல்லக்கு கட்டினாலும் சரி. பிணத்துக்குத் தெரிஞ்சு என்ன ஆகணும்? அதுக்கு இரண்டும் ஒண்ணுதான்.’ 

“பஞ்ச பாண்டவா மாதிரி, மூணு அர்ச்சுனனைப் பெத்துட்டு இந்த அதிகப் பாட்டு ஏன் பாடணும்?” 

“சரியாப்போச்சு, நெருப்பு குச்சியை யார் கிழிச்சு வெச்சாலும் எரியும்னு என் அம்மா ஒரு சமயம் எனக்குச் சொல்லியிருக்கா. இத்தனைக்கும் நான் என் அம்மாவுக்கு ஒரு பிள்ளை. நீ மூணுக்குக் கணக்கு பண்ணப் போயிட்டே!” 

“நாம் என்ன பேசிண்டிருக்கோம்?’ 

“ஒருவரையொருவர் ஆழம் பார்த்துண்டிருக்கோம். இதைவிட வெறுக்கத்தக்க விஷயம் இருக்க முடியாது- ஆமாம், நம்முடைய பின்னணி சங்கீதத்தில் என்ன திடீர் ப்ரேக்?’ 

மதுரம் எழுந்து விரைந்து சென்றாள். 

நான் தலையணையில் சாய்ந்தேன். களைப்பு மிகுந்தது எனக்கு. ஏன் இப்படி நெஞ்சொன்று நினைக்க, நா ஒன்று பேசுகிறது? நான் ஏன் பிளந்த மனிதனாகி விட்டேன்? 

தடதடவென ஓடி வந்து விளக்கைப் போட்டாள். மதுரத்தின் முகம் சுண்ணாம்பாய் வெளுத்திருந்தது. 

”உர்ஷ்- உர்ஷ்ட” 

“என்ன? என்ன?” அலறி புடைத்துக் கொண்டு எழுந்தேன். 

காணோம் என்கிற சைகையில் அவள் கைகள் சிலம் பாடின். 

– தொடரும்…

– கேரளத்தில் எங்கோ… (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணை பதிப்பகம், சென்னை. 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *