கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 21,579 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

She was a phantom of delight
When first she gleamed upon my sight;
A lovely apparition, sent
To be a moment’s ornament.
-William Wordsworth – 1770. 1850.

ராஜீவுடைய பார்வை உஷாவின் மீது பட்டது. அங்கேயே நின்றுவிட்டது. ஏன் நிற்காது? நட்சத்திரங்கள் நிறைந்த வானில் முழு நிலவைப் போல் அந்த ஒன்பது கல்லூரி மாணவிகளின் நடுவே அவள் தனித்துக் காட்சியளித்தாள்.

ராஜீவ் தனது வாழ்நாளில் எத்தனையோ அழகிகளைக் கண்டிருந்தான்.ஆனால் இவள்! இவள் உண்மையிலேயே வித்தியாசமானவள், ஓர் அபூர்வப் படைப்பு!

பால் வடியும் கபடமில்லாத முகம்; மழ மழவென்ற வெள்ளைத் தோல்; நீளமான கருத்த தலைமுடி; அதைப் பின்னுக்குப் படித்து வாரி கழுத்துக்குப் பின் ஒரு கிளிப் மாட்டி முடியை இடுப்பு வரை தொங்க விட்டிருந்தாள். அகன்ற கருவிழிகள் – அவற்றின் ஓரத்தில் பட்டும் படாதவாறு கறுப்புமைப் பென்சிலால் லேசாகச் சிறு கோடு வரைந்திருந்தாள், செழுமையான உதடுகளின் மேல் லேசாக ஆரஞ்சு லிப்ஸ்டிக்கின் சாயம், சங்கு போன்ற காதுகளில் எளிமையான ஒத்தை முத்துத் தோடுகள். மற்றபடி வேறு எந்த நகைகளையும் அவள் அணிந்திருக்கவில்வெள்லை ஆர்கண்டி புடவை உடுத்தியிருந்தாள். அதன் மீது சிறிய பச்சைப் பூக்கள் அச்சிடப்பட்டிருந்தன, அதே பச்சை நிறத்தில் மேட்சிங் டூ பை டூ சோளி, இடது கையில் வெள்ளைலேடீஸ் சீக்கோ கைகடிகாரம் அணிந்திருந்தாள். ‘இளமை’, ‘அழகு’ என்ற இரண்டு வார்த்தைகளுக்கு அகராதி விளக்கமாய்த் தோற்றமளித்தாள் உஷா.

கொடி போன்ற ஒல்லியான உடல். உட்கார்ந்திருந்ததால் அவளுடைய உயரத்தைச் சரியாக யூகிக்க முடியவில்லை. ஆனால் எப்படியும் ஐந்து அடி ஆறு அங்குலத்துக்குக் குறைந்திருக்காது என்று ராஜீவ் நினைத்தான்.

வெறும் கேலண்டர் படம் போன்ற உயிரற்ற அழகு அல்ல அவளுடையது. இளமையின் துடிப்பு: வேகம், உயிருடன் இருக்கிறோமே என்ற வெகுளித்தனமான ஆனந்தம், உற்சாகம் – அவள் உருவம் பூத்துக் குலுங்கும் உயிரோவியமாக இவற்றைத் தெளிவாகப் பிரதிபலித்தது.

அவளைக் கண்டதும் ராஜீவுக்குத் தன்னை அறியாமலேயே ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. பெரும் முயற்சி செய்தும் அவள் மீது இருந்த தன் பார்வையை அவனால் வேறு பக்கம் திருப்ப இயலவில்லை.

கல்லூரி ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்குமாறு உஷா கேட்டதற்குப் பதிலாக ”வெல்….ஐ…டோன்ட் நோ..” என்று தயங்கியபடி ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

அதற்குள் உஷா குறுக்கிட்டு, “ப்ளீஸ் சார். முடியாதுன்னு சொல்லிடாதீங்க சார், உங்களுக்கு எத்தனையோ எங்கேஜ்மென்ட்ஸ் இருக்கும்னு எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் எப்படியாவது பெரிய மனசு பண்ணி எங்க பங்க்ஷனுக்கு வந்திங்கன்னா நாங்க ரொம்பப் பெருமைப்படுவோம். சார்! நாங்க எல்லோருமே உங்க விசிறிகள்: ப்ளீஸ் டோன்ட் டிஸப்பாய்ன்ட் அஸ் ” என்றாள் அவசரமாக.

தனக்கு எங்கிருந்து இவ்வளவு துணிச்சல் வந்ததென்று உஷாவுக்கே ஆச்சரியமாய் இருந்தது. சுட்டித்தனமும், துணிவும். புத்திக்கூர்மையும் அவளது பிறவிக் குணங்கள். இருந்தாலும் ராஜீவைப் போன்ற ஒரு பெரிய புள்ளியைச் சந்திக்கும் போது, இவ்வளவு தூரம் தைரியமாகப் பேச முடியுமென்று அவளே நம்பியிருக்கவில்லை.

ஆரம்பத்தில், மாணவியரின் விண்ணப்பத்தை ஏற்கும் எண்ணம் சிறிதளவும் ராஜீவுக்கு இருக்கவில்லை. கல்லூரி ஆண்டு விழா தினத்தன்று தான் வெளியூர் போய் விடுவதாகவும்: ஊரில் இல்லாத காரணத்தால் அவ்விழாவில் கலந்துகொள்ள இயலாது என்றும் ஏதாவது சாக்குக் கூறி விடலாம் என்று முதலில் திட்டமிட்டிருந்தான். அப்படிச் சொல்வதால் ஒரே கல்லால் இரு கனிகளை வீழ்த்தலாம். ஒன்று – அவ்விழாவில் கலந்து கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம். இரண்டு – மாணவியரின் கோரிக்கையை நிராகரிக்கும் போதிலும் அவர்கள் மனத்தைப் புண்படுத்தாமல் அதிலிருந்து நழுவிக் கொள்ளலாம். “ஊரில் இருந்தால், நிச்சயம் வந்திருப்பேன்” எனச் சொல்லலாமில்லையா?

அப்படி எண்ணியிருந்த ராஜீவுக்கு, ஏனோ அவ்வாறு கூற மனம் ஒப்பவில்லை. உஷாவையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இந்தப் பெண் ஏனோ அவனை அப்படி வசீகரித்தாள். அவள் விழிகளின் மின்னல் பார்வை அதற்குள் புதைந்து கிடக்கும் குறும்புத்தனம், தண்ணீர் விழுங்கினால் அதுகூடத் தொண்டையில் இறங்குவது கண்ணுக்குத் தெரியுமோ என்று நினைக்கத் தூண்டும் அந்த ஒளி கசியும் தோல் நிறம்!

இவளை மறுபடியும் காண வேண்டும்; எப்படியாவது சந்திக்க வேண்டும் இப்போதைக்கு அதற்கு ஒரே சந்தர்ப்பம். அந்தக் கல்லூரி விழா அதற்குத் தலைமை வகிக்க மறுத்தால், மீண்டும் இவளை எங்கே. எப்படிக் காண்பது?

தன்னையே கேட்டுக் கொண்டான். ‘டேய் ராஜீவ்! உனக்கு என்ன ஆகிவிட்டது? ஏன் இவளை மறுபடியும் அவசியம் சந்தித்துத்தான் ஆகணுமா?” தனக்கே பதில் கூறிக்கொண்டான் “ஆமாம்! ஆமாம்!’

‘இவள் சாதாரணமானவள் இல்லை. பார் ராஜீவ், நீயே பார்! பக்கத்தில் இருக்கும் மற்றப் பெண்களையும் பார். அவர்களுக்கும் அழகில்லை என்று சொல்ல முடியாது, ஆனால், இவளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது? அவர்கள் எங்கே. இவள் எங்கே! எப்பேர்ப் பட்டவர்களும் இவள் பக்கத்தில் நிற்கும் போது, மங்கித்தான் தெரிவார்கள்!’

‘”ப்ளீஸ் சார் வறேன்னு சொல்லுங்க சார்” உஷா குழந்தைத்தனமாக வற்புறுத்தினாள்.

திடீரென்று அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் ராஜீவுக்கு ஓர் உணர்வு, ‘டேய் ராஜீவ்! பெண்களிடம் அலுப்புத் தட்டித் திகட்டிப்போன உனக்கு, ஒரு பெண்ணிடம் இப்படியொரு பவர்ஃபுல் அட்ராக்ஷன் உண்டாகி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன? அந்த உணர்வே செத்துவிட்டது என்று நினைத்திருந்தாய். இனி எவளாலும் அதை மீண்டும் ஏற்படுத்த முடியாது என நினைத்தாய்! ஆனால் இவள் அந்த உணர்வை மீண்டும் பிறப்பித்திருக்கிறாள்: டேய் ராஜீவ் இவளை விட்டுவிடாதே!’

தன் உணர்ச்சிகளின் வேகம், தன் எண்ணங்களின் போக்கு.அவனுக்கே பெரும் வியப்பைத் தந்தது. திடீரெனக் கரகரத்துப் போன குரலில் “உங்க காலேஜ் பங்ஷன் என்னிக்கு?” என்று விசாரித்தான்.

“இந்த மாசம் 15ந் தேதி சார்!” மீண்டும் உஷாவே பதில் சொன்னாள்.

“சரி, நான் உங்க பங்க்ஷனுக்கு வரேன்”

ராஜீவுக்கே ஆழ்ந்த வியப்பு! ‘என்ன ஆகிவிட்டது எனக்கு?’. புரியவில்லை.

“ஓ! தேங்க்யூ சார், தேங்க் யூ!”. உஷா மட்டும் வேறு இடத்தில் இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பாள். ஒரு டான்ஸே ஆடியிருப்பாள்! அவ்வளவு எளிதில் ராஜீவ் ஒப்புதல் தெரிவிப்பானென்று அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.


உஷாவின் மனத்தில் சொல்லில் அடங்காத உத்வேகம் பொங்கி எழுந்தது. அவளுக்கு வயது பதினெட்டு. அவள் பி.ஏ. இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள், அவள் ராஜீவ் குமாரின் தீவிர ரசிகை, முதன் முதலாக சினிமா பார்க்கத் தொடங்கிய வயதிலிருந்தே, ஞாபகத்துக்கு எட்டிய வரை அவள் ராஜீவின் ரசிகையாக இருந்தவள், அவன் படம் எதையும் இயன்றவரை பார்க்காமல் அவள் விட்டுவைக்கமாட்டாள். ராஜீவ் என்றால் உஷாவுக்குச் சாதாரண அபிமானம் இல்லை, ஒரே ஹீரோ வொர்ஷிப்தான்! அவனை எந்த வகையிலும் மிஞ்சக்கூடிய ஆண்மகன் உலகத்திலேயே இருக்க முடியாது என்பது உஷாவின் அசைக்க முடியாத அபிப்பிராயம். அதுவரை அவனைத் திரையில் பார்த்திருத்தாள். நேரில் காண்பது இதுவே முதன் முறை, “எவ்வளவு அழகாக இருக்கார்! படங்களிலே இருக்கிற மாதிரியே இருக்காரே!” என நினைத்து வியந்தாள்.

திடீரென்று ஹால் முழுதும் “தேங்க்யூ! தேங்க்யூ சார்” என்ற கோஷ்டி கானம் ஒலித்தது. அங்கே கூடியிருந்த மற்ற பெண்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் புத்துயிர் பெற்று விட்ட மாதிரி வீழித்துக் கொண்டனர்.

சிரித்துக் கொண்டே, தன் விரிவான பார்வையால் ராஜீல் அனைவரையும் ஒரு முறை தழுவினான். ”மை ப்ளெஷர்” என்றான். மறுபடியும் உஷா பக்கம் விழிகளைத் திருப்பினான்.

“உன் பெயர்?”

“உஷா”

“லவ்லி நேம்” இந்த வார்த்தைகளுக்குத் துணையாக அவளை ஓர் உருகவைக்கும் பார்வை பார்த்தான். அந்தப் பார்வை உஷாவை மெய்சிலிர்க்கச் செய்தது.

எங்களை யெல்லாம் விட்டுவிட்டு உஷாவுடன் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறாரே என்ற பொறாமை உள்ளத்தை உருத்த, “ரியலி சார், வீ ஆர் த்ரில்ட்! நாங்க கேட்டவுடனே நீங்க இவ்வளவு பெருந்தன்மையோட ஒத்துக்குவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவேயில்லை” என்றாள் கமலா.

தான் மட்டும் சும்மா இருப்பதா என்பது போல இன்னொரு மாணவி ராதா, ”ஆமாம் சார்! இட் ஈஸ் வெரி க்ரேஷியஸ் ஆஃப் யூ! தேங்கியூ சார்” என்று தன்பங்கிற்கு இரண்டு வார்த்தைகளைக் கொசுறாகக் கொட்டினாள்.

”இத்தளை சார்மிங் யங் லேடீஸ் வீடு தேடி வந்து என்னை அழைக்கும்போது, என்னால் மறுக்க முடியுமா?” என்று ராஜீல் பதில் அளித்தான். மேலெழுந்தவாரியாக அந்த வார்த்தைகள் அங்கிருந்த பெண்கள் அனைவருக்கும் மொத்தமாகக் கூறப்பட்ட பதிலாக அமைந்தாலும், அவன் பார்வை மட்டும் உஷாவின் மீதே இருந்தது.

உஷாவும், ”இட்ஸ் ரியலி வெரி கைன்ட் ஆஃப் யூ சார்” என்று கூறிக்கொண்டே, பரவசமடைந்த நிலையில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவளுடைய கள்ளங் கபடமில்லாத கண்கள், அவன்பால் அவளுக்கிருந்த மோகத்தை வெளிப்படுத்தின. ராஜீவுடைய நடை, உடை பாவனை எல்லாமே அவளை மிகையாகக் கவர்ந்தன.

காந்தக் கல் மாதிரி உஷாவின் மீதே ஓட்டிக் கொண்டிருந்த தனது பார்வையை ராஜீவ் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு தனது கைக்கடிகாரத்தின் மீது திருப்பினான். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. “ஏற்கனவே நான் இன்னிக்கு ஷாட்டிங்குக்கு லேட், ரொம்ப நேரமாச்சு. இஃப் யூவில் எக்ஸ்கியூஸ் மீ, நான் இப்போ கிளம்பறேன்”.

ராஜீல் எழுந்து நின்றான். உஷா உட்பட ஒன்பது பெண்களும் கூடவே எழுந்தனர்.

“சுரேஷ்” ராஜீவ் சற்று உரக்கக் குரல் கொடுத்தான்.

”சார்?” மறு விநாடியே அவன் பக்கத்தில் சுரேஷ் தோன்றினான்.

“சுரேஷ், இவங்க காலேஜ் பங்க்ஷனுக்குத் தலைமை தாங்க ஒத்துக்கிட்டிருக்கேன், தேதி, டைம், இடம் எல்லா டீடேய்ல்ஸையும் குறிச்சு வச்சுக்க, பங்க்ஷன் அன்னிக்கு எனக்கு ஞாபகப்படுத்து”

“சரி சார்”

“மை டியர் சார்மிங் யங் லேடீஸ், இன்னும் கொஞ்ச நேரம் உங்க கூட பேசிக் கிட்டு இருக்கலாம்னு தோணுது. அன் ஃபார்ச்சுனேட்லி, வேலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம். நேரமில்லை. எக்ஸ்யூஸ் மீ, உங்களை யெல்லாம் சந்திச்சதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்”. மீண்டும் கூறிய வார்த்தைகள் மொத்தத்தில் எல்லோருக்கும் என்றாலும், ராஜீவுடைய கண்கள் நேராக உஷாவை மட்டுமே நோக்கின.

“பை” ராஜீவ் ஹாலை விட்டுப் போய் விட்டான்.

“குட் பை சார்”

“தேங்க்யூ சார்!”

“தேங்க்யூ மிஸ்டர் ராஜீவ்!”

உற்சாகம் நிறைந்த அந்த இளம் குரல்கள் வராந்தாவரை அவனைப் பின்தொடர்ந்தன. பளிங்கு வராந்தாவிலிருந்து மூன்று படிகள் போர்ட்டிகோவுக்கு இறங்கின. அங்கே அவனுடைய பெரிய வெள்ளை நிற பென்ஸ் 600 அவனுக்காகக் காத்திருந்த்து.

முதல் படியில் ராஜீல் நின்றான். திரும்பினான், சிரித்த படியே கையை உயர்த்தி, ஒன்பது பெண்களிடமும் விடைபெறுகின்ற தினுசில் கையை அசைத்த போதிலும், அவன் விழிகள் மீண்டும் ஒருமுறை உஷாவை நாடின. கண்டுபிடித்தன. சந்தித்தன.

நட்சத்திரங்கள் போல் பிரகாசித்த தனது விழிகளை அவன் விழிகளோடு இணைய விட்டாள். அவன் தன்னையே உற்றுப் பார்ப்பதை உணர்ந்து அவனுக்காகத் தனியாகப் புன்னகைத்தாள். தன் கையை உயர்த்தி மெல்ல அசைத்தாள்.

அதன் பிறகுதான் ராஜீவ் திரும்பினான். படிகளில் இறங்கி காரின் பின்ஸீட்டில் அமர்ந்தான், டிரைவர் வேகமாகக் காரை ஓட்டிச் செல்ல, ஒரு நொடியில் கார் கேட்டைத் தாண்டி மறைந்துவிட்டது.

அத்தியாயம்-4

The ruling passion, be it what it will
The ruling passion conquers reason still.
-Alexander Pope 1688 – 1744.

ராஜீல் புறப்பட்டுப் போனவுடன் மாணவிகளுக்குள் ஒரே சலசலப்பு, கலகலப்பான பேச்சு.

“ஏய். படங்கள்ளே இருக்கிற மாதிரியே இருந்தாருடீ!”

“ஆமாண்டீ! ஹவ் சார்மிங் ஹீ இஸ்!”

”அது மட்டுமில்லேடீ. எவ்வளவு மரியாதை, என்ன பண்பு! அவர் எவ்வளவு பெரிய நடிகர்! இருந்தாலும் அவருக்குக் கொஞ்சம்கூட ஹெட்லெயீட் கிடையாதுடீ!”

“நம்ம கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியலையேன்னு ஸாரி, எக்ஸ்யூஸ்மீன்னு வேறே சொல்லிட்டு போனார். கவனிச்சியாடி”

”ஐ ஸே. தேர் கான்ட் பி எனிபடி லைக் ராஜீவ் குமார்!”

”ஏய். இந்த விஷயத்தை நம்ம பிரின்ஸிபால் கிட்டே சொன்னா நம்பவே மாட்டாங்க டீ”

“நம்பாமே என்ன! சொன்னதும் அவங்களே டான்ஸ் ஆடப் போறாங்க, வேணுன்னா பாறேன்!”

அதுவரை உஷா மட்டும் பேசாமல் இருந்தாள், அவளைப் பார்த்து மற்ற பெண்கள்-

”உஷா! நீ கெட்டிக்காரி டி! நாங்க எல்லாரும் எப்படிக் கேக்கறதுன்னு தயங்கிக் கிட்டு இருந்தோம், நீ தைரியமாக் கேட்டு அவரை ஒப்ப வைச்சுட்டே! எல்லாம் உன்னாலேதான் டீ” என்று அவளைப் புகழ்ந்தனர். உஷா சிரித்தாள், “இதிலே என்ன டீ பிரமாத தைரியம்? நாம வந்ததே அதுக்காகத்தானே? வந்த விஷயத்தைச் சட்டு புட்டுன்னு சொல்லாமே, நாமும் சும்மா இருந்து அவர் நேரத்தையும் வீணாக்கலாமா? அதான் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டுக் கேட்டுட்டேன்! எப்படியோ, வந்த காரியம் சக்ஸஸ்! கம் ஆன் லெட்ஸ் கோ!” சுரேஷிடம் விழா விவரங்களைத் தெளிவாகக் கூறி விட்டு மாணவிகள் புறப்பட்டு விட்டனர்.


கல்லூரி ஆண்டு விழா தினத்தன்று கல்லூரி முழுவதும் ஒரே பரபரப்பு, நாள் முழுவதும் கல்லூரி எங்கும் ஒரே அமளி துமளி, இளம் மாணவிகள், முதிர்ந்த ஆசிரியைகள் ஒருவரை யொருவர் முட்டிக் கொண்டு மோதிக்கொண்டு அங்கும் இங்குமாய்க் குழம்பி ஓடினார்கள். ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாகக் கட்டளை இட்டுக் கூச்சல் போட்டார்கள்; தலையைப் பிய்த்துக்கொண்டார்கள். திடீர் திடீர் என்று சிலர் அழுதே வீட்டார்கள். எல்லோருக்கும் நெஞ்சுக்குள் ஒரே படபடப்பு.

ராஜீவ் குமார் வரப் போகிறார்! ராஜீல் குமார் வரப்போகிறார் – அய்யோ! இன்னும் எதுவுமே ரெடி ஆகவில்லையே! சாயங்காலத்துக்குள் எல்லா ஏற்பாடுகளும் முடியுமோ இல்லையோ!

மாலை ஆறரை ஆகிவிட்டது. எதோ தெய்வ சங்கல்பமோ என்னவோ என்று வியக்கும் வண்ணம், நாள் முழுதும் நிலவிய குழப்ப நிலை நீங்கி, இடி இடித்து மழை பொழிந்து பின்பு தோன்றும் அமைதியைப் போல் எல்லோரும் ஒரேவிதமாய் அடங்கிப்போனார்கள். விழாவுக்கான எல்லா ஏற்பாடுகளுமே கன கச்சிதமாக அமைந்து விட்டன.

கல்லூரிக் கட்டிடங்கள், காம்பவுண்டில் உள்ள மரங்கள் அனைத்துமே வண்ண மீன்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன, கல்லூரி முன் வாசலில். மெயின் கேட்டுக்கு மேல் வெள்ளைத் துணியால் ஒரு பேனர், இரு கேட் தூண்களுக்கும் மத்தியில் இறுக்கி இழுத்து மாட்டப்பட்டிருந்தது. அதன் இருபுறமும் நீளமான ட்யூப் லைட்கள் பொருத்தப்பட்டிருந்தன. பேனரில் கொட்டைக் கறுப்பு எழுத்துக்களில் “ராஜீவ் குமார் – வி லவ் யூ!” என்று மாணவியர் வரைந்து வைத்திருந்தார்கள்.

கல்லூரி பிரின்னிபால், மிஸ் மைத்ரேயி ராமகிருஷ்ணுவுக்கும் மாணவிகளுக்கும் இந்த பேனரைக் குறித்துக் காலையில் நீண்ட வாக்குவாதம் நடைபெற்றிருந்தது. ஓல்லியாக, காய்ந்துபோன கொத்தவரங்காய் வத்தல் போன்ற தோற்றம் கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணா, மாணவிகளிடம் அந்தப் பேனரை வேறு விதமாக “ராஜீவ் குமார்- வி வெல்கம் யூ” என மாற்றி எழுதினால் இன்னும் சற்றுக் கண்ணியமாய் இருக்கும் என்று எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லிப் பார்த்துவிட்டார். அவர் முயற்சிகள் பயன் பெறவில்லை. மாணவியர் தங்கள் விருப்பப்படியே பேனரைத் தயாரித்து மாட்டியும் விட்டார்கள். அதற்கு மேல் மிஸ் மைத்ரேயி யால் என்ன செய்ய முடியும்?

வெளியே பார்ப்பதற்குச் சிடுசிடுவென்று சதா காரமாகவும், கடுமையாகவும் தோற்றம் அளித்தாலும், உள்ளுக்குள், ராஜீவின் வருகையை எதிர்பார்த்து மற்ற ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் எவ்வளவு உற்சாகமும் குதூகலமும் இருந்ததோ, அதை விடச் சற்று அதிக அளவிவேயே அதே உணர்ச்சிகள் மிஸ் மைத்ரேயியின் வறண்டு போன நெஞ்சுக்குள் தாண்டவமாடின. ஆனால் ஒரே வித்தியாசம். உயிரே போனாலும் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்!

மிஸ் மைத்ரேயிக்கு வயது ஐம்பது. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆயுசு முழுவதும் கல்வி சேவைக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு விட்டார். மிகவும் கண்ணியமானவர். ஆனால், அவருக்கு ஒரு ரகசிய பலவீனம் இருந்தது. அவருடைய மாசில்லாத வாழ்க்கையில் யாருக்கும் தெரியாத ஒரு துர்க்குணம். ஒரு தீய வழக்கம். வெளியில் சொல்ல முடியாத ஒரு களங்கம் இருந்தது. ஆம்! மிஸ் மைத்ரேயிக்கு சினிமா படம் என்றால் பித்து! வேரூன்றிவிட்ட மோகம்! இதுவே அவர் வாழ்க்கையில் வெளியில் தெரியக்கூடாத திகிலூட்டும் மர்மம்!

சினிமாப் படம் பார்க்காமல் ரொம்ப நாள் மிஸ் மைத்ரேயியால் தாக்குப் பிடிக்க முடியாது, அடிக்கடி யாருக்கும் தெரியாமல் கடைசிக்காட்சி, நைட் ஷோவுக்குக் கிளம்பி விடுவார் தன்னத் தனியாக. சினிமா மீது அவருக்கு இருந்த மோகம் இதுவரை ஒருவருக்கும் தெரியாமல், அந்தப் பயங்கர ரகசியத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வந்திருந்தார். அதிலும், மிஸ் மைத்ரேயியின் அபிமான நடிகர் – சொல்லத்தான் வேண்டுமா? நீங்களே யூகித்திருப்பீர்களே! ஆம் – வேறு யாருமில்லை, சாக்ஷாத் ராஜீவ் குமாரே தான்!

ராஜீவ் குமார் மிஸ் மைத்ரேயியின் அபிமான நடிகர் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டால் எப்படி? உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ராஜீவ் குமார் மீது மிஸ் மைத்ரேயிக்கு ஒரு வெறி – நிறை வேறாத காதல்! காவியங்களில் வருகின்ற மாதிரி, மௌனத்திலேயே வாடுகின்ற ஒரு பட்ச ஊமைக் காதல்! ஆனால். கருக் மொருக் கென்று கஞ்சி போட்டதால் விறைப்பாக நிற்கும் அவர் கைத்தறிச் சேலையின் மடிப்புக்களின் கீழ் புதைந்து கிடக்கும் பரம ரகசியம் இந்தக் காதல்! ‘சிடு முஞ்சீ’ என்று முதுகுக்குப் பின்னால் செல்லமாக மாணவிகள் அவரை அழைப்பார்கள். அந்தச் ‘சிடு மூஞ்சி’க்குக் கூட இப்படிப்பட்ட எண்ணங்கள் மனத்தில் இருக்கக்கூடும் என்று, மாணவியரில் ஒருவர் கூடக் கனவிலும் நினைத்திருக்க முடியாது.

முதுக்குக்குப் பின்னால் ஒரு கம்பைக் கட்டி வைத்தாற்போல், நெட்ட நேராக, நிமிர்ந்தபடி மிஸ் மைத்ரேயி, ராஜீவை வரவேற்பதற்காக, கல்லூரி அரங்கு வாசலில் தயாராக நின்றார்.

நெருப்புக் கல் போன்ற கடுகடுப்பான முகத்துக்குப் பின் புது மணப் பெண் சாந்தி முகூர்த்த இரவின்போது கணவனுக்காகக் காத்திருக்கும் தருணத்தில் நெஞ்சத்தில் ஏற்படும் படபடப்பு, மிஸ் மைத்ரேயிக்கு இருக்கும் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா?

ராஜீவ் வந்துவிட்டான். உடனே மகளிர் கல்லூரி மகிழ்ச்சி ஆரவாரத்தில் பொங்கித் துள்ளி எழுந்தது. ராஜீவ் தனது பென்ஸ் காரை விட்டு இறங்கியது தான் தாமதம் நெருக்கி தள்ளிக்கொண்டு, மாணவிகள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரே சப்தம், கூச்சல், கை தட்டல். கலாட்டா!.

இந்தக் குழப்பத்தில் நடுலே, மிஸ் மைத்ரேயி மாணவிகளை முறைத்து முறைத்துப் பார்த்தார். “நல்ல குடும்பப் பெண்கள் நடந்து கொள்ளும் விதமா இது! இந்தப் பெயர் போன கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நடந்து கொள்ள வேண்டிய விதமா இது!” என்று உரக்கக் கருமல், கோபமான பார்வையாலேயே மாணவிகளைக் கண்டிக்க முயன்றார். ஆனால் அவரை யார் சட்டைப்படுத்துவார்கள்! ராஜீவே நேரில் வந்துவிட்ட பின், மிஸ் மைத்ரேயி யார் கண்ணுக்குத் தெரிவார்?

ராஜீவை அரங்கினுள் அழைத்துக்கொண்டு போய் உட்கார வைப்பதற்குள், மிஸ் மைத்ரேயிக்கும், வரவேற்புக் குழுவின் மற்ற அங்கத்தினர்களுக்கும் பெரிய பாடாகப்போய் லிட்டது.

ராஜீவ் காலேஜ் அரங்கினுள் பிரவேசித்தவுடன் பலத்த கைதட்டல்களால் அரங்கமே அதிர்ந்து போய்விட்டது. முன் வரிசையில் தன் ஸீட்டுக்குப் போய்ச் சேரும்வரை, ராஜீவ் தன்னைச் சுற்றியிருக்கும் மனிதக் கடலை பார்த்துப் புன்னகைத்து. கையை அசைத்துக் கொண்டே ஒவ்வொரு அடியாய் மெல்ல நகர்ந்து நடந்து சென்றான். முன் வரிசையில் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த நகரத்தின் மற்ற சில பெரிய புள்ளிகளும் அமர்ந்திருந்தனர். ராஜீவுக்கு அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள். மற்ற பிரமுகர்களுடன் கைகுலுக்குவதும், கேட்கப்பட்ட கேள்விகளுக்குத் தகுந்த பதில் அளிப்பதும், தன் பெயரைக் கூவி ஆரவாரம் செய்யும் மாணவிகளைத் திரும்பிப் பார்த்துக் கை அசைப்பதும், புதிதாகச் சந்தித்த பெரியவர்களிடம் ஆளுக்குத் தக்கபடி ஓரிரு வார்த்தைகளை மரியாதைக்காகக் கூறுவதும். இதையெல்லாம் வெகு பக்குவமாக, நாசுக்காக, தானே இயங்கும் இயந்திரம் போல் ராஜீவ் செய்து வந்தான், இத்தகைய சூழலை பழகிப் பழகி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வித்தையை நன்கு கற்று மெருகேற்றி வைத்திருந்தான்.

இத்தனை நபர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதிலும், அவன் உதடுகள் சிரித்துச் சிரித்து ஏதோ வார்த்தைகள் கூறிக்கொண்டிருந்த போதிலும், அவன் மனம் அதில் இல்லை. அவன் கண்கள் அங்கும் இங்கும் பாய்த்தன. நான்கு திசைகளிலும் சுற்றின. தேடின, தேடிக்கொண்டே இருந்தன.

அந்த அரங்கில் சுமார் இருபத்தி ஐயாயிரம் பேர்களாவது இருந்திருப்பார்கள். ஆனால் அவன் கண்கள் தேடிய அவள் எங்கே? அவளைக் காணவில்லையே!

உஷா! எங்கே அவன்? இத்தனை பேருக்கு மத்தியில் அவளை மட்டும் காணோமே! யாருக்காக அந்த விழாவுக்குத் தலைமை வகிக்க ஒப்புக்கொண்டானே, யாரைக் காண்பதற்கென்றே பிரத்தியேகமாக அந்த பங்க்ஷனுக்கு ராஜீவ் வந்திருந்தானோ அந்த உஷா தென்படவில்லையே!

ராஜீவ் மனத்தில் பெருத்த ஏமாற்றம் தோன்றியது. ‘சே! அவளுக்காகத்தானே வந்தேன், அவளையே காணோமே! எங்கே போய்வீட்டாள்?’

தனக்கு ஏற்பட்ட ஆசை பங்கத்தின் ஆழம் அவனையே அதிர வைத்தது.


இரண்டு வாரங்களுக்கு முன்னால், உஷா அவனை அழைக்க வந்த நாள் முதல், அவளை முதன் முறையாகக் கண்டதிலிருந்து, ராஜீவ் மனத்தில் என்றும் தோன்றாத புதிய கலவரம் தோன்றியிருந்தது.

சிந்தனைகளை வேறு திசையில் திருப்ப எவ்வளவோ முயன்றான். ஆனால் பலனில்லை, செக்குமாடு மாதிரி அவன் மனம் உஷாவையே சுற்றிச் சுற்றி வந்தது. அவளைப் பற்றி நினைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

ராஜீவுக்குத் தன் மீதே அளவற்ற வியப்பு உண்டாயிற்று, ஒரே ஒரு முறை பார்த்த ஓர் இளம் பெண் – அவளிடம் ஏன் இந்த விசித்திர மோகம்? அவன் ஒன்றும் அனுபவம் இல்லாத இளங்காளை இல்லையே! காதலில் ஏங்கித் தவிக்கும் இளம் காலேஜ் ரோமியோ அல்லவே!

ராஜீவுக்கு வயது 45, பழுத்த அனுபவஸ்தன், அறிவு முதிர்ச்சி உள்ளவன். உலகத்தை எல்லாச் கோணங்களிலிருந்தும் பார்த்து நன்கு உணர்ந்தவன். அதுவுமில்லாமல் அவன் பார்க்காத பெண்ணா? அவன் அனுபலிக்காத அழகியா? பின்பு ஏன் இவளிடம் இந்த விசித்திர ஏக்கம்?

தன்னைத் தானே பலமுறை எச்சரிக்கை செய்துகொண்டான், ‘டேய், ராஜீவ் ஜாக்கிரதை! இந்தப் பெண்ணுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள முயன்றால் அது பெரிய வம்பாக மாறிவிடக் கூடும்!’

உஷாவைப் பார்த்தால், அவள் நல்ல குடும்பத்தைச் சேர்த்தவள் என்பது வெட்ட வெளிச்சமாகப் புரிந்தது. யார் கண்டார்கள்? வயதான யுத்தக் குதிரை போன்ற தகப்பனாரும். பயமூட்டும் யுத்தக் கப்பல் போன்ற தாயாரும் இருப்பார்களோ என்னவோ?. அவர்களுடைய கைப்படாத பொக்கிஷமான பெண்ணின் மீது ராஜீவின் கைவிரல் லேசாகப் பட்டதாகத் தெரிந்தால் கூட, ஊரைக் கூட்டி குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பார்களோ என்னவோ! வம்பை விலை கொடுத்து வாங்குவானேன்!

ராஜீவ் தன் வாழ்நாளில் எண்ணற்ற பெண்களோடு தொடர்பு வைத்துக் கொண்டது என்னவோ உண்மைதான். ஆனால் அவன் இமேஜ் பாதிக்கப்படும் வகையில் எந்த விவகாரத்திலும் அகப்பட்டுக் கொள்ளாமல். பொதுமக்களிடையில் அவனுக்கிருந்த உயர்வான நல்ல பெயருக்கு எந்த அவதூறும் ஒட்டிக் கொள்ளாதபடி, இதுவரை மிகவும் எச்சரிக்கையாகத் தப்பித்துக் கொண்டு வந்திருந்தான்.

இதை அவனால் எப்படிச் சாதிக்க முடிந்தது என்றாள் ஆரம்பத்திலிருந்து அவன் தனக்கு லட்சுமண ரேகையைப் போன்ற ஒரு வீதிமுறையைத் தானே விதித்துக் கொண்டிருந்தான். அந்தக் கோட்டை அவன் இன்றுவரை தாண்டியிருக்கவில்லை. அது என்ன? மிக எளிமையான சட்ட திட்டம் – எந்த நல்ல, கெரவமான குடும்பப் பெண்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்.

இதுவரை அவன் பழகியதெல்லாம் வேறு ரகத்தைச் சேர்ந்த பெண்களோடு. கால் கர்ல்ஸ்; மாடல்கள்: முன்னுக்கு வரத் துடிக்கும் புதிய நடிகைகள்; இது தற்காலிக உறவு என்று உணர்ந்து அதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்காத சில மேல் தட்டு சொஸைட்டி பெண்கள் – இப்படிப்பட்டவர்களுக்கு உலகில் பஞ்சமே இல்லாதபோது, நல்ல குடும்பப் பெண்களோடு வம்பில் மாட்டிக் கொண்டு வீண் பழியைத் தலை மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு, தனது இமேஜையும் நம்பர் ஒன் நட்சத்திரம் என்று அந்தஸ்தையும் ஆபத்தில் சிக்க வைத்துப் பறி கொடுப்பானேன்?

அது மட்டுமே பிரதான காரணமில்லை. ராஜீவ் தனக்குத் தானே எந்தச் சிக்கல்களையும் உண்டு பண்ணிக் கொள்ள விரும்பவில்லை, கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்துக் கொண்டால் அதனால் வேறு விதமான விளைவு களையும் சந்திக்க நேரிடலாம். அப்பெண்ணின் பெற்றோர்கள், “பணம் வேண்டாம், எங்களுக்கு மானம்தான் பெரிது. குடும்பு கௌரவத்தைக் காப்பாற்ற எங்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தால் அப்பப்பா! நினைப்பதற்கே பயமாக இருந்தது. ‘திருமணம் செய்துகொள்ள முடியாது போங்கள்’ என்று விரட்டிவிடலாம். ஆனால் அப்பெண்ணின் பெற்றோர்கள் மானமே பெரிதெனக் கருதுபவர்களாக இருந்தால் வாயை மூடிக் கொண்டு விட்டு விடுவார்களா? அவனை நடுத் தெருவில் இழுத்துச் சந்தி சிரிக்கும்படி செய்துவிட மாட்டார்களா? சரி. பெற்றோர்கள் ஊர் வாய்க்குப் பயந்து மௌனமாக இருந்தாலும் கைவிடப்பட்ட பெண் தற்கொலை அது இதுவென்று ஏதாவது விபரீத முடிவுக்கு வந்துவிட்டால் அதில் அவன் பெயர் அடிபட்டு ஊரே நாறிப் போய் விடுமே! அய்யய்யோ! இந்தக் குடும்ப பெண்களோடு தொடர்பு வைத்துக்கொண்டாலே ஆபத்துத்தான், நமக்கு இந்த வம்பே வேண்டாம்! இப்படியே சுதந்திரப் பறவையாக இருப்போம்!’ என்ற அடிப்படையில் தான் இதுவரை ராஜீவ் தனது உல்லாச வாழ்க்கையை நடத்தி வந்தான். இந்த மாறாத கொள்கையை முதன்மையாக மனத்தில் கொண்டு பின்பற்றி வந்ததால் இதுவரை தனது நல்ல பெயரையும் வெற்றிகரமாகக் காப்பாற்றி வந்தான்.

என்ன இருந்தாலும் அவன் வாழ்வது தென் இந்தியாவில் இது ஹாலிவுட் அல்லவே! அதனால்தான், இவ்வளவு அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆனால் உஷா – அவள் அவன் அணுகக் கூடாத வர்க்கத்தைச் சேர்ந்தவள் ஆயிற்றே. ‘வேண்டாம், ராஜீவ், வேண்டாம்! சொன்னால் கேளுடா! அவளைப் பற்றியே நினைக்காதே! அவளை மறந்துவிடு!’ ஆனால் முடியவில்லையே! இந்தப் பாழும் மனசு அவளையே பற்றிக் கொண்டு விடமாட்டேன் என்கிறதே! ஏன்? தெரியவில்லை! புரியவில்லை!

எங்கே? அவள் எங்கே? “உஷா! இரண்டு வாரங்களாக உன்னையே நினைத்து நினைத்து, உன்னைக் காண வேண்டும் என்றே வந்தேனே! எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய்?”

விளக்குகள் குறைக்கப்பட்டன. திரை உயர்த்தப்பட்டது. கலை நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று.

வேண்டா வெறுப்புடன், பெருத்த ஏமாற்றத்துடன், ராஜீவ் இருட்டில் மேடையை நோக்கினான் “ஏன் இதில் மாட்டிக்கொண்டேன்! சுத்த போராக இருக்கும் போலிருக்கு! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து கழட்டிக்கணும்” என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் கண்கள் விரிந்தன. உள்ளம் குபீரென்று துடித்தது. அதோ உஷா! மேடையில்! நடைபெற்றுக்கொண்டிருப்பது காளிதாசனின் ‘சாருந்தலம்’ அதோ சகுந்தலை வேடத்தில். அந்த எழிலான உடையில் உஷா!

வர்ணிக்க முடியாத கிளர்ச்சி உள்ளத்தில் துள்ளி எழ, ராஜீவ் மெய் மறந்து அவளையே உற்றுப் பார்த்தான். ரத்த ஓட்டம் வேகமடையவே, அவன் உடல் முழுவதும் பற்றி எரிவது போல ஓர் உணர்வு, ‘அட! அதற்குள் அவசரப்பட்டு விட்டேனே! இவ்வளவு துடிப்புள்ள பெண் நிச்சயம் நாடகத்தில் பங்கு பெறுவாள்! அதை நான் நினைத்துப் பார்க்கவில்லையே! மேடையில் தோன்றாமல் அதன் பின் ஒளிந்து கொண்டா இருப்பாள்?

அதுதான் இவ்வளவு நேரம் அவளைக் காணவில்லை!’. பரவாயில்லை! அவன் வந்ததற்கும் பலனில்லாமல் போய்விடவில்லை.

அவனுக்குத் தெரியாமலேயே இடைவேளை வந்துவிட்டது. திரை இறக்கப்பட்டது.

“சார், மேடைக்கு வறீங்களா?”

மேடைக்குச் சென்றன், மிஸ் மைத்ரேயி வரவேற்புரை வழங்கினார். மாணவியருள் ஒரு சலசலப்பு, பல புருவங்கள் உயர்த்தப் பட்டன. பல ஓரக் கண் பார்வைகள் பார்க்கப்பட்டன.

”அட! நம்ம ‘சிடு மூஞ்சி’க்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா?” என்ற வியப்பு. தன்னையும் மறந்து, தன் இரும்பு கட்டுப்பாட்டையும் மீறி, வரவேற்புரை நிகழ்த்தும்போது, மிஸ் மைத்ரேயி ராஜீவ் பக்கம் திரும்பி ஒரு முறை புன்னகை புரிந்து விட்டார்! ராஜீவின் வருகையால் அந்தக் கல்லூரியே பெருமை அடைந்தது என்று கூறிவிட்டார்!

”ஏய்! நம்ம சிடுமூஞ்சிகூட ஹியூமன் பீயிங் தான் டீ!”

”ஆமாம் டீ! இன்னி வரைக்கும் தான அப்படி நினைக்கலை! பட் ஐ வாஸ் ராங்!”

ராஜீவுக்கு ஆள் உயரத்தில் ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டது. மைக் அருகில் வந்தான். நீன்றான், பேசினான். அங்குள்ளவர்கள் அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டான்.

சிரிப்பூட்டும் புத்தி நுட்பமுள்ள பேச்சால் அவர்களைச் சிரித்து மகிழ வைத்தான். ஆழ்ந்த சில கருத்துக்கை வெளியிட்டு அவர்களை வியப்பில் ஆழ்த்தினான். ஆண் அழகு ததும்பும் தோற்றத்தால் அவர்களைச் சொக்கவைத்தான். அதுதான் ராஜீவ் குமார் – என்ரிபடீஸ் ட்ரீம் மேன்! ராஜீவ் – லேடி கில்லர்!

தனது உரையின்போது உஷாவின் நடிப்பை வெகுவாகப் பாராட்டினான். அதை மற்றவர்கள் தவறாக யூகித்து விடக் கூடாதென்று நாடகத்தில் நடித்த மற்ற பெண்களைப் பற்றியும் ஒப்புக்காகச் சில பாராட்டு மொழிகளைக் கூறினான். உண்மையில், மற்றவர்களின் நடிப்பு என்ன, அவர்களையே அவன் பார்த்திருந்தால் தானே! உஷா மேடையில் தோன்றிய கணம் முதல் அவன் கண்ணுக்கு வேறு யாரும் எதுவும் தெரியவே இல்லை!

உரையாற்றல் முடிந்தது. ராஜீவைச் சுற்றி ஒரே கூட்டம், நெரிசல், அவன் உதடுகள் சிரித்துக் கொண்டே இருந்தன. உள்ளம் ஏமாற்றத்தால் புகைந்து புகைந்து எரிந்தது.

எப்படியாவது, ஒரு நிமிடமாவது உஷாவோடு தனியாகப் பேச வேண்டும். ஆனால் எப்படி முடியும்? இந்தக் கூட்டத்தின் மத்தியில் அது எப்படிச் சாத்தியமாகும்? அவனுடைய ஒவ்வொரு செய்கையையும், ஒவ்வொரு அசைவையும் ஆயிரம் கண்கள் ஆவலோடு இமைக்காமல் கவனித்து வருகின்றனவே!

இந்த மாதிரி நேரங்களில்தான், தன் புகழே தனக்கு ஒரு பெரிய இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்தான்.

சுற்றிச் சுற்றி விழிகளை உலவ விட்டான். உஷா கண்ணுக்குத் தென்படவில்லை. அவளுடன் பேச வேண்டும். ஆனால் எப்படி?

– தொடரும்

– உறவின் கைதிகள், கல்கி வார இதழில் (22-06-1980 – 26-10-1980) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

3 thoughts on “உறவின் கைதிகள்

    1. Please wait until its published, you can subscribe in WhatsApp, Telegram, Facebook to get notified. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *