புண்ணியனைக் கண்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 5, 2022
பார்வையிட்டோர்: 1,326 
 

(1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவையாற்றுக்கு அருகில் திருப்பூந்தருத்தி என்ற தலம் இருக்கிறது. திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான உற்சவத்தில் கலந்து கொள்ளும் ஏழு மூத்திகளில் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருசகும் பெருமானும் ஒரு வர். அத்தலததில் திருநாவுக்கரசருக்கு ஈடுபாடு மிகுதியாக உண்டு. அங்கே அவர் ஒரு திருமடம் அமைத்துக் கொண்டு பல காலம் தங்கி இறைவனைப் பல பதிகங்களால் துதித்து, வழிபட்டார்.

திருப்பூந்துருத்திக்கு முதலில் வந்து திருக்கோயிலுக்குள் சென்றார். அவருடைய உள்ளத்தே அன்பு பொங்கியது உண்ர்ச்சி விஞ்சியது. ‘நேர்நத பரிவொடும் தாழ்ந்து நிறைந் தொழியா அன்பு பொங்க, வார்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர், ஆனார்.

உணர்ச்சி பொங்கும் பொழுது மனமுருகிக் கவிபாடும் வாகீசர் இறைவனைக் கண்ட பேரானந்தத்தை ஒரு திருத் தாண்டகத்தால் வெளியிடத் தொடங்கினார். “திருப்பூந் துருத்தியில் நான் கணடேன” என்று பெருமிதத்தோடு பாடி னார். “என்னை ஆட்கொண்டு, என்னுடைய மனத்தைப் பக்குவப்படுத்தி மெய்யான அருளின்ப அநுபவத்தை வழங் கிய பெருமானைக் கண்டேன்”என்று ஆராமைமீதூரப் பத்துப் பாடல்களைப் பாடினார். முதல் பாசுரத்தை இங்கே பார்க்கலாம்.

*பெரிய புராணம். திருநாவுக்கரசர் புராணம், 388-390

நாவுக்கரசர் பேசுகிறார்.

என் மனம் காற்றாய்ச் சுழன்று பேயாய் அலைந்தது. அது பற்றாத பொருள் இல்லை: பற்றி ஒரு கணம் நின்ற இடமும் இல்லை. ஒரு கணம் பற்றியதை மறுகணம் பற்றாமல், ஓரிடத் தில் நில்லாமல் அலைந்து திரிவதையே தன் இயல்பாகக் கொண்ட இந்த மனத்தை நிறுத்துவ தென்பது என் ஆற்ற லுக்குள் அடங்கியதாக இல்லை அது போன வழி யெல்லாம் நான் போய்க் கொண்டிருந்தேன். அதனால் நான் கண்டது துன்பந்தான்.

இத்தகைய பேய் மனம் நின்றது; ஒன்றையே பற்றி நின் றத; இறைவனுடைய தியானத்திலே ஒன்றி நின்றது, அவனை நினைக்கும் நிலை என் நெஞ்சுக்கு உண்டாயிற்று. அந்த நிலையை அது தன் முயற்சியால் பெறவில்லை, அது முன்பு என்றும் நினையாத நெஞ்சு ஆயிற்றே! நானும் முயன் றிலேன், இறைவனே தன் கருணை மிகுதியால் என் நெஞ்சை வழிப் படுத்தித் தன்னை நினைக்கச் செய்தான்,

நினையா என் நெஞ்சை நினைவித்தானை.

இந்த நிலையை நான் பெற்ற போது எனக்கே வியப்பாக இருந்தது. மனத்தை எப்படி இறைவன் நிறுத்தினான் என்று ஆராயந்தேன். அவனுக்கு இதைப்போன்ற செயல்களே விளையாட்டாக இருக்கின்றன என்று உணர்ந்தேன். ஓரிடத் தில் நில்லாமல் ஓடி அலை கொந்தளிக்கப் பாய்ந்து வந்த கங்கையைத் தன் சடையிலே நிற்கச் செய்தான். “என்னைத் தாங்குவார் யார்?” என்று அது கொந்தளித்து வந்தது. அப்போது அதனத் தன் சடையின்மேல் அடங்கி நிற்கும்படி செய்தான. நில்லாத நீரைச் சடையின் மேல் நிற்பித்த பெரு மானாதலினால் நினையா என் நெஞ்சை நினைவித்தான.

எப்போதும் திரிந்து உழன்ற மனத்தைத் தன் அருளால் நிறுத்தித் தன்னை நினைக்கச் செய்த அந்தப் பெருமானை நான் பூந்துருத்தியில் கணடேன்.

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாஎன் நெஞ்சை நினைவித் தானை

பூந்துருத்திக் கண்டேன் நானே.

அவனை நினைக்கப் பண்ணிய தனால் என்ன பயன்? எங்கும் சென்ற மனம் ஓரிடத்தில் நின்று இறைவனை நினைப் து வியப் பான செயல்தான். அந்த வியப்பு ஒன்றுதான் கண்டப யனா? அப்பர் சுவாமிகள் மேலே சொல்வதைக் கேட்போம்.

நான் எத்தனையோ கற்றேன். சமய நூல்களைக் கற்றேன் சமண நூல்களைக் கற்றுப்பலரும் வியக்கும் புலமை உடையவ னாக விளங்கினேன். இலக்கிய இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தேன். என் மனம் அலைந்திருந்த காலத்தில் அந்த அலைச்சலை அடக்கி அமைதி பெற வழி தெரியாமல் ஏதேதோ கற்றேன். ஆனால் நானாகக் கற்ற அப்போது உண்மையில் நான் ஒன்றும் கற்கவில்லை, என் மனத்தை நிறுத்தித் தன்னை நினைக்கச் செய்தானே, அப்போது நான் புதிதாக ஏதும் கற்க முயலவில்லை. ஆனால் அப்போதுதான் முன்பு கல்லாத கல்வியை யெல்லாம கற்றுக் கொண்டேன். என் முயற்சி யின்றியே தன் கருணை மிகுதியால் எனக்கு அநுபவத்தின் மூலமாகக் கற்பித்தான். அதுகாறும் நான் கற்ற கல்வி பயனில்லாத கல்வியாக ஒழியக் கல்லாத கல்வியைக் கற் பித்து இன்புறுத்தினான் இறைவன் அவனை அல்லவா நான் பூந்துருத்தியில் கண்டு உருகிப் போனேன்?

கல்லாதன எல்லாம் கற்பித்தானை ….
பூந்துருத்திக் கண்டேன் நானே.

‘மனம் நின்றது, அவனை நினைந்தது; கல்லாத கல்வியைக் கற்றேன்’ என்ற அளவில் நின்றால் சருகு அரித்தபடி தானே ஆகிறது? இவைகளெல்லாம் சாத்திய நிலை அல்லவே? சாத. னந்தானே? என்ன லாபம் கைமேல் கிடைத்தது?

இப்படிக் கேட்டுப் பார்க்கலாம். அப்பர் கூறும் விடையை இப்போது கேட்கலாம்:

ஆம். அவன் அருளே கற்பிக்க நான சல்லா தன வெல்லாம் தெரிந்து கொண்டேன். அதற்குமேல் இதற்கு முன் அறியாத இன்பத்தை யெல்லம் கண்டு கொணடேன். அமைதி பெறாத மனத்தை வைத்துக் கொண்டு, கல்வி யென்னும் காட்டில் உழன்று திரிந்து, மேலும் மேலும் கவலைக்கு ஆளாகி, அநுபவத்தில் ஒன்றையும் காணாமல் நூலறிவோடு நிறை எனக்குக் கல்லாக கலவியாலே வரும் வாலறிவைத் தந்தான்; அதன் பயனாகிய இன்ப அநுபவத் தைக் காட்டினான்; காணாத இன்பங்களைக் காட்டி, அருளினான், பூந்துருத்தியிவ் அத்தகைய அருட்கடலைக் கண்டேன.

காணாதன வெல்லாம் காட்டி னானை
பூந்துருத்திக் கண்டேன் நானே.

இன்னும் என்ன அநுபவம் கிடைத்தது?- இந்தக் கேள் விக்கு நாவுக்கரசர் விடை கூறுகிறார்:

அவன் என்னோடு பேசினான், நானும் நீங்களும் பேசுவது போன்ற பேச்சா அது? சொல்லின் அளவைக் கடந்த இன்பச் சூழலிலே நின்ற என் தனிநாயகனாகிய ஐயனுடைய பேச்சு, பேசாத பேச்சு அல்லவா? அங்கே மற்ற யாரும் சொல்ல முடி யாதவற்றைச் சொன்னான்; என்னை உணர வைத்தான். வாய் படைத் தார் சொல்லும் சொற் கூட்டத்துக்குள் அடங் காத சொல்லை அவன் சொன்னான்; சொல்லாமல் சொன்னான்.

அப்படிச் சொன்னதை நான் முதலில் கவனிக்கவில்லை. காது கேட்க, வாயாலே சொல்வதைக் கேட்டுக் கேட்டுப் பழகிய எனக்கு அவன் மொழி புரியவில்லை. ஆனாலும் அவன் என்னை விடவில்லை, என்னைத் தொடர்ந்து வந்தான். சொல் லாதன வெல்லாம் சொன்னான்.* அடியேனை ஆட்கொண்டான்.

அவனுக்கு ஆளாகிய அப்பொழுதே என் நோய்கழன்றது, மணி மந்திர ஔஷதங்களால் தீராத பொல்லாத நோய் அது. அதைத் தீர்த்தான் புனி தனாகிய எம் பெருமான்.

அவன் மாசற்றவன்; தூயவன்; புனிதன்; என் மாசை அறுத்து நோய் நீக்கிய பெருமான். பாவத்தால் துன்புற்று அலையும் என்போலியரை ஆட்கொண்டு இன்பூட்டும் புண்ணி யன் அவன். அந்தப் புண்ணிய மூர்த்தியைத்தான் நான் திருப்பூந் துருத்தியில் கண்டேன்.

சொல்லா தனஎல்லாம் சொல்லி என்னைத்
தொடர்ந்திங்கு அடியேனை ஆளாக் கொண்டு
பொல்லாஎன் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

‘இறைவன்பால் மனம் ஒன்றி அவனை எப்போதும் நினைக் கும் திருவுடையாருக்கு உயிருக்குள் இன்பம் ஊட்டுகின்ற கல்வியும் காட்சியும் கிடைக்கும். எங்கும் பரந்து நிறைந் துள்ள இறைவன் அவர்தம் உள்ளத்துள்னே இருந்து யாவற் றையும் குறிப்பாற் புலப்படுத்துவான். தன்னை உண்மையன் போடு பற்றினவரை அவன் என்றும் பிரியாமல் அருள் புரிந்து அவர்களுடைய இடர்களைப் போக்கியருள்வான்’ என்ற கருத்துக்களை நாவுக்கரசர் இப்பாடலால் புலப்பட வைக்கிறார்.

*’சொல்லாத. வார்த்தையைச் சொன்னாண்டி தோழி’ என்பார் தாயுமானவர்.

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாஎன் நெஞ்சை நினைவிற் தானைக்
கல்லா தனஎல்லாம் கற்பித் தானைக்
காணா தனஎல்லாம் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாம் சொல்லி என்னைத்
தொடர்ந்திங் கடியேனை ஆளாக் கொண்டு
பொல்லாஎன் நோய்தீர்த்த புனிதன் தன்னைத்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

[நில்லாத நீர் – கங்கை. நினைவித்தானை – நினைக்கும்படி செய்தவனை. புனிதனை – தூயவனை.]

இந்த அருமைப் பாசுரத்தோடு மாணிக்க வாசகப் பெரு மான் அருளிய பின்வரும் திருப்பாட்டு ஒப்பு நோக்குதற்கு உரியது.

கேட்டுஆரும் அறியாதான், கேடொன் றில்லான்.
கிளை இலான், கேளாதே யாவும் கேட்டான்,
நாட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டா தனஎல்லாம் காட்டிப் பின்னர்க்
கேளா தனஎல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்தாட் கொண்டான்;
எம் பெருமான் செய்திட்ட விச்சை தானே!
(திருச்சதகம்.)

முன் உள்ள நாவுக்கரசர் பாசுரம் ஆறாம் திருமுறையில் 43-ஆம் பதிகத்தில் முதற்பாட்டாக அமைந்திருக்கிறது.

– பேசாத நாள் (திருமுறை மலர்கள்), முதற் பதிப்பு: ஜூலை 1954, அமுக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *