சிவில் சிங்கராயர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 5,448 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தற்காப்புப் பாயிரம்:

இது ஒரு கதையுமல்ல; இதில் வரும் சம்பயங்கள் பெயர்கள் எவையும் கற்பனையுமள்ள. அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை, எதற்குச் சொல்கிறேன் என்றால், இதைப் படித்து முடித்து விட்டு, கதைக்குரிய அந்த அம்சம் இல்லை, என்று யாரும் சண்டைக்கு வரக் கூடாது. இதில் சுவாரசியமான பகுதிகள் எதுவுமில்லாவிட்டால், நமது நாயகர் திரு சிங்கராயர் அப்படிப்பட்ட காரியம் எதுவும் செய்யவில்லை என்றுதான் நினைத்துக் கொள்ள லேண்டுமே யொழிய என் மீது சொல்லலாகாது. ஒரு வேளை ரசிக்கக் கூடிய அம்சங்கள் ஏதாயினும் இருந்தால், தயவு செய்து அந்தப் பெருமையை அடியேன் பக்கம் தள்ளி விடுங்கள். திரு சிங்கராயர் அது விஷயத்தில் தகராறுக்கு வரும் பட்சத்தில் நானே என் செலவில் சுப்ரீம் கோர்ட் வரையில் போய்ப் பார்த்துக் கொள்கிறேன்!

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்திரண்டாம் வருஷம் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியன்று மகர ராசியில் எட்டுக் கிரகங்கள் கூடிய போது பெரிய பெரிய மாறுதல்கள் சம்பவிக்கப் போகின்றன என்று அனைவரும். எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தார்களல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அழகனூரி வாசிகள் மட்டும் துளிக்கூட அந்த ஏமாற்றத்தை அனுபவிக்கவில்லை, மாறாக, எதிர்பார்த்ததை விட மகத்தான பல பலன்களை அனுபவிக்கும் பேற்றை எய்தி உய்யுற்றனர். அதற்குக் காரணம் அக்கிரகச் சேர்க்கையின் பலன் எதுவும் அழகனூருக்கு மட்டுமென்று பிரத்தியோகமாக ஏற்றுமதி செய்யப்பட்டதா என்ன; மகர ராசியில் அந்தக் கிரகங்கள் பிரவேசித்துக் கொண்டிருந்த போது, வான சாஸ்திரக் கணக்குக்கு வராத கிரகம் ஒன்று அழகனூகுக்குள் பிரவேசித்ததே காரணம், அந்தப் புதிய கிரகம் பூர்வீகத்தில் அவ்வூர்வாரியாகவும், நடுவில் சென்னை ஹைகோர்ட்டில் பெஞ்ச் கிளார்க்காகவும் இருந்து மேற்படி தினத்தில் ரிட்டையராகிச் சொந்த ஊருக்குத் திரும்பிய திருவாளர் ‘சிவில்’ சிங்கராயர்’ அவர்களே!

இராயரின் சாதனைகளைப் பற்றித் தெரிவிக்கு முன் அவருடைய பிறப்பைப் பற்றிய தேவரகசியம் ஒன்று பூலோகத்தில் திண்ணைப் பேச்சாகப் பிரஸ்தாபப் பட்டு வருவதைக் குறிப்பிட்டுத் தான் ஆகவேண்டும். அதாவது, மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்த போதெல்லாம் அவருக்குப் பிரைவேட் செக்ரட்டரி யாக இருந்து காரியாதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த நாரத முனிவருக்குத் தாமும் ஓர் அவதாரம் எடுக்க வேண்டும் என்று ஆசை பிறந்ததாம். உடனே அவர் தம் திரிலோக சஞ்சார வேலைக்கு ஓர் அறுபது எழுபது வருஷங்கள் லீவு போட்டு விட்டு அழகனூருக்கு வந்து சிங்கராயராக அவதாரம் எடுத்து விட்டாராம்! இதை நம்புபவர்கள் நம்பலாம்; நம்பாதவர்கள் தள்ளி விடலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. பிள்ளைப் பிராயத்திலிருந்தே சிங்கராயருடைய நடவடிக்கைகளில் காணப்பட்ட ‘நாரதரிஸ்’ முத்திரைகளைக் கொண்டு ஊரார் அனுமானித்ததே அந்த ஊகம்.

அழகனூரை விட்டுச் சென்னை ஹை கோர்ட்டில் கிடைத்த பெஞ்ச் கிளார்க் உத்தியோகத்தை மேற்கொள்ளச் சிங்கராயர் பயணமான போதே அத்தக் கல்யாண குண விசேஷங்கள் அவரிடம் பொருந்திலிருந்தன. அவர் ரிடையராகி மீண்டும் ஊருக்குள் காலெடுத்து வைக்கும் போது வெறுமனே அந்தக் குணங்களோடு மட்டும் திரும்பியிருந்தாள் அவரால் எந்த ஒரு பிரயை மாற்றத்தையும் ஊருக்குள் உருவாக்கி யிருக்கு முடியாது. ஆனாம் அவரோ இருதய சுத்தியோடு அரிதொரு கிராம சேவைவில் தம்மை ஈடுபடுத்த மகத்தான திட்டங்களுடன் பிறந்த மண்ணில் இறங்கினார். பென்ஷன் வாங்கியவர் கடைசிக் காலத்தை நிம்மதியாகக் கழிக்காது அந்தக் கிராம சேவையில் ஈடுபட முனைந்ததற்குச் சில சந்தர்ப்ப விசேஷங்களால் அவருக்குத் தம் சொந்த ஊர்க்காரர்களுடன் ஏற்பட்டிருந்த ஒரு மனத் தாங்களே காரணமாக இருந்தது. புராதன காலம் தொட்டு அழகனூர்வாசி ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் பின்தங்கிய வகுப்பினராக இருந்து வந்தனர். சிங்கராயர் ஒரு வரைத் தவிர அவ்வூர்வாசிகளில் வேறு எவரும் எந்தமொரு அற்பக் கேஸுக்காக வாவது கோர்ட் வாசற்படி மிதித்தவர்களல்லர். வருடந்தோறும் எவ்வளவோ வக்கீல்கள் பட்டம் பெற்று நாட்டுக்குள் இறங்கி வேலை செய்தும், சட்டசபையில் தினந்தோறும் புதுப்புதுச் சட்டங்கள் மசோதாக்கள் பிறப்பிக்கப்பட்டும் தம் ஊர்வாசிகளுக்குச் சட்ட ஞானம் ஏற்படவில்லையே என்று சிங்கராயருக்கு வெகு நாட்களாக மனக்கிலேசம் சொல்லி முடியாது. தமது முப்பது வருட ‘சர்விஸில்’ தினத்தோறும் தம் சொந்த ஊரிலிருந்து ஒரு வழக்காவது வராதா என்று எதிர் பார்த்து எதிபார்த்துக் களைத்துப் போய் விட்டார். ஒவ்வோர் ஊரிலும் மனிதர்கள் எப்படி முன்னேறியிருக்கிறார்கள்! அடுத்த வீட்டுப் பையன் கோலி விளையாடியதால் தன் வீட்டுச் சுவரிலுள்ள சாரை பெயர்ந்து விழுந்த சங்கதியை கோர்ட் வரை விசாரனைக்குக் கொண்டு கொண்டு வரக் கூடிய சட்ட ஞானிகளைப் பெற்றுப் பல பெருமையடைந்து கொண்டடிருக்க, நம் ஊர் மக்கள் மட்டும் இப்படி சட்ட ஞான சூன்யர்களாக இருப்பதைக் கண்டு அவருடைய கிராமப் பற்று ரோஷத்தால் பொங்கி எழுந்தது. அப்பொழுதே அவர் தமது பென்ஷன் கால வேலைத் திட்டத்தை வகுத்து விட்டார், கடந்து போனது போகட்டும், இனித் தம்மாலாவது தம் கிராம மக்கள் நாலு ஊர் வாசிகளைப் போல் நாலு கோர்ட்டு களைப் பார்க்க வேண்டும்; அதுவே தாம் நமது கிராமத்துக்குச் செய்யும் சேவை என்று விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டு விட்டார்.

இப்படியொரு புனருத்தாரணத் திருப்பணித் திட்டத்துடன் திரும்பிய சிங்கராயர் உடனடியாகத் தம் எண்ணத்தைச் செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டார். அவருடைய வைராக்கிய சேவையில் வெகு விரைவில் அழகனூரில் பெரும் வியாஜ்ஜியப் புரட்சி உருவாகி அதன் பலனாக மகத்தான ”சிலில் சகாப்தம்’ மலர்ந்தது.

தம் வீட்டுக் கொல்லைப் புறத்தில் காய்த்துக் தொங்கும், புடலங்காயை – அடுத்த வீட்டுக்காரி பறித்துக் கொண்டால், அதிகபட்சம் திருடியவரை ஜாடையாக நாலு வைவு வையலாம் என்று தான் வெகு காலமாக அழகலூர்ப் பெண்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை முதல் தர வியாஜ்ஜியமாக்கி ஜில்லா கோர்ட் வரை கொண்டு போகலாம் என்ற விவரத்தை முதன் முதலாகத் திரு சிங்கராயர்தான் அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினார். புடலங்காயைப் பறி கொடுத்தவரிடம் போய், ‘உன் கொல்லைப் புறத்துக்குள் அடுத்த வீட்டுக்காரியின் கை அத்துமீறிப் பிரவேசித்தது ஒரு சிவில் பாயிண்ட், புடலங்காயை பிடுங்கியது ஒரு கிரிமினல் லா பாயிண்ட். இரண்டு பாயிண்டுகளுக்கும் அவளை ஆறு மாசமாவது கம்பி எண்ண வைத்து விடலாம்!’ என்றார். புடலங்காயைப் பறித்தவளிடம் போய், ‘நன்றாகக் காய்த்த பிறகும் காயைப் பறிக்காமல் விட்டு வைத்திருந்து உன்னைப் பறிக்கத் தூண்டியது அவளுடைய குற்றம். நிமிமினஸ்படி குற்றம் செய் வதையிடக்குற்றம் செய்யத் தூண்டுவது தான் பெரிய குற்றம். அவள் வழக்குப் போட்டால் நீயும் விடாதே!’ என்று யோசனை கூறினார், மறுநாள் பார்க்க கோண்டுமே! பெண்கள் இருவரும் பிராதும் கையுமாகப் பஞ்சாயத்துக் கோர்ட்டு வாசலில் நின்றார்கள்!

முன்பெல்லாம் வயற்புறத்தில் ஒருவருடைய வயலுக்குப் பாய்ந்த தண்ணீரை இன்னொருவர் அடைத்துத் தம் வயலுக்குப் பாய்ச்சினால், சம்பத்தப்பட்டவர்கள் இருவரும் பரஸ்பரம் மண்வெட்டிக் காம்புகளால் அடித்துக் கொண்டு நான்கு நாட்கள் காயத்தோடு கிடப்பார்கள். ஐந்தாம் நாள், ஒடிந்த மண்வெட்டிகளைச் சரி செய்யத் தர்கப்பட்டறைக்குப் போகும் இடத்தில் நடந்ததை மறந்து ஒருவர் மடியிலிருந்து இன்னெருவர் ஓசி வெற்றிலைப் பாக்கு எடுப்பதன் மூலம் சமரசமாகி விடுவார்கள். இப்படி அநாகரீகமாக மண்வெட்டியால் அடித்துக் கொள்வதும் உடனடியாக ‘மான ரோஷமில்லாமல்’ சமாதானமாகி விடுவதுமான பழக்கங்களை அறவே ஒழித்துக் கட்டிய பெருமை சிங்கராயரைச் சாரும். அவருடைய சகாப்தம் உருவான நாள்முதலாக முற்றிலும் புதிய முறையில் இந்த மாதிரிப் பிரச்சைகள் கையாளப்பட்டு வந்தன. ஊருக்குள் இப்பொழுது எந்த மண்வெட்டிக் கலவரமும் கிடையாது. வயற்புறத்தில் இன்று சண்டை போடுபவர்கள் நாளைக் காலையில் அந்த வயல்களை ஒத்தி வைத்துப் பணம் பெற சப் ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் வாசவில் நிர்பார்கள், அதக்கு மறுநாள் வக்கில் வீட்டுத் தாழ்வாரத்தில் குந்திக் கொண்டிருப்பார்கள் – சிங்கராயரின் ஆலோசனைப்படி ‘ஹைகோர்ட்’ வரையில் போய்ப் பார்த்து விடுவதற்காக!

வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது. ஒரே குடும்பத்திலுள்ள நபர்களும் தம் சிவில்தனத்தின் பலனை அனுபவித்தால் தான், சிவில் சகாப்தம் ஒரு பூரண வெற்றியை அடைய முடியும் என்பதற்காகக் குடும்ப உள் விவகாரங்களுக்குள்ளேயும் அதைத் தீவிரமாகப் பிரயோகிக்கச் சிங்கராயர் தவறுவதில்லை. உதாரணத்துக்கும் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

அன்று உள்ளூர் வெற்றிலை பாக்கு அண்ட் மளிகைக்கடை வாசலில் கிடந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டிருந்தார் சிங்கராயர் அப்போது கோடரியைத் தோலில் போட்டுக் கொண்டு காட்டுக்கு விறகு வெட்டப் புறப்பட்ட சுப்பன் ‘போயிலைக் கட்டை’ வாங்க கடை வாசலுக்கு வந்தான், அவனைக் கண்டதும் சிங்கராயரின் சிவில் மூளை சிலிர்த்தெழுந்தது.

“என்ன சுப்பா, ஒரு மாதிரியா மெலிந்திருக்காப் போலிருக்கியே?” என்று கடையை விரித்தார் சிங்கராயர். எவனை எப்படிப் பேச்சுக்கிழுத்துக் குறைய வைப்பது என்ற மனுேதத்துவம் சிங்கராயருக்குத் தலைக்கீழ்ப் பாடம். பொதுவாகவே எல்லாருக்கும் தாம் தினம் தி ம் மெளிந்து கொண்டிருப்பதாக ஓர் அபிப்பிராயம் இருக்கும். அதுவும் இப்படியொரு ‘பெரிய மனுஷரே’ கண்டு பிடித்துச் சொல்ல வேண்டுமென்றம் அப்பாவிப் பாமரனாகிய சுப்பனுக்கு எப்படி யிருக்கும்!

“என்னங்க செய்றது?” என்று அசட்டுச் சிரிப்புடன் காலைத் தேய்த்துக் கொண்டு அவர் முன் வந்து நின்றான்.

“ஏன் அப்பா?” என்று அவன் வாயைக் கிளறினார் சிவியார். சுப்பன் பதில் சொல்லத் தெரியாமல் திணறினான். சிங்கராயர் அவனை விடவில்லை “வீட்டில் உன் சம்சாரம் சரியா சம்ரக்ஷ்ணை பண்ற தில்லையா?’ என்று அடியெடுத்துக் கொடுத்தார்.

சுப்பனுக்கு ‘அப்படித்தான் இருக்கும்!’ என்று தோன்றியது. அதோடு ஒருநாள் அவன் மனேவி அவனிடம் சண்டை பிடித்துக் கொண்டு சமையல் செய்யாமலிருந்து அவனைப் பட்டினி போட்ட விஷயமும் ஞாபகத்துக்கு வந்தது. உடனே குமுறலுடன், ‘ஆமாங்க, வீட்டிலே கட்டினவள் சரியில்லை! நாம ஓடம்பை முறிச்சு ஒண்ணு அரை சம்பாரிச்சுக் கொண்டு கொடுக்கிறதை வச்சி நமக்குச் சரியா ஆக்கிப் போட்டாத்தானே?” என்றான்.

“அப்படியா?” என்று அவனிடம் வார்த்தையை வாங்கிக் கொண்டு ஆளை அனுப்பி விட்டார் சிங்கராயர்.

சாயங்காலம் சுப்பனின் மனைவி காளியாத்தா உப்பு, புளி வாங்க வரும் நேரத்தை அனுசரித்து அவர் கடை வாசலுக்கும் போய் விட்டார். அவள் வந்ததும் மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.

“என்ன காளி! ஒரு சேதி கேள்விப் பட்டேலே, உண்மைதானா?” என்று ஆரம்பித்தார்.

“என்ன சொல்றிய நயினா?” என்று பரபரப்புடன் கேட்டான் காளி.

“ஏதோ என் காதிலே விழுந்ததைச் சொல்றேன், நீ என் பெயரைச் சந்தியிலே இழுக்கப் படாது. ஆமாம், நீ உன் புருஷனுக்குச் சரியா சோறு போடாமல் அவனுடையதையும் சேர்த்து நீயே துன்னுடயாமே, அப்படியா?” என்று பாணத்தை வீட்டார் சிங்கராயர்.

உடல் பதற, “எந்தப் பேமானி சொன்னான்?” என்று கொதித்தாள் காளி.

“நான் என்னத்தைக் கண்டேன்! என் புருஷன்தான் ஊரிலே எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறனாம், காதிலேயும் விழுந்தது” என்று தம் பணியைச் செய்துமுடித்தார் சிங்ராயர்.

அவ்வளவுதான்; ஓரணாவுக்கு உப்பு வாங்கி வீட்டு நாலணா கொடுத்த காளி, கடைக்காரரிடம் மீதிச் சில்லறையைக் கூட வாங்கிக் கொள்ள நிதானமில்லாமல் வீட்டை நோக்கில் படபடப்புடன் விரைந்தாள்.

அற்றிரவு சுப்பன் வீட்டில் ஏக ரகளை. உனக்கு போடாமல் நானே எல்லாத்தையும் துன்னுடறேன்னு ஊர் முழுக்கச் சொன்லியாமே” என்று காளி கத்த, “எந்தப் பயல் சொன்னான்?” என்று சுப்பன் திரும்பிக் கத்த, “எவனும் சொல்லான், நீ சொன்னாயா, அதைச் சொல்” என்று அவள் குரைக்க ”ஓகோ, எந்தப் பயல் கிட்டேயும் போய்க் கேட்கிற அளவுக்குப் போயிட்டியா?” என்று அவன் ரசாபாசமாகக் கேட்க விஷயம் வேறு பாதையைப் பிடித்து வெகுவாக முன்னேறி விட்டது. கடைசியில், “இப்படி அசிங்கம் பீடிச்ச புத்திக்காரனேட வாழறதைவிடப் பிச்சை எடுத்துக் காலத் தல்லலாம்” என்று வயிற்றெரிச்சலுடன் கத்தி வீட்டுத் தன் ஆயா வீட்டுக்கு நடையைக் கட்டி விட்டாள் காளி.

இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பின் சிங்கராயர் மீண்டும் சுப்பனைத் தேடிப் பிடித்துத் துக்கம் விசாரிப்பது போல் எல்லாவற்றையும் விசாரித்து விட்டு, “நீ கவலைப்படாதே. உன்னை மதிக்காமல் ஆத்தா வீட்டுக்குப் போயிட்டாளில்ல, நீ அவளை வகை வைக்காதே, பேசாமல் இன்னொரு கலியாணம் பண்ணிக்கோ” என்றார். அவனும், ”அதுதான் சரிங்க. அடுத்த அறுவடையாகட்டும், நெய்து விற்று உங்க கையிலே கொடுத்துடறேன், நீங்களே பார்த்து முடித்து வைத்து விடுங்க” என்று சொல்லியிருக்கிறான். இந்த விஷயம் அக்கம் பக்கம் இல்லாவிட்டாலும் உள்ளூர் பஞ்சாயத்துக் கோர்ட் வரையாவது போகும் என்பது சிங்கராயரின். அபிப்பிராயம். அதற்குத் தோதாகக் காளியின் அண்ணன் ‘ரவுடி’ செங்கானுக்குச் சுப்பனுடைய இரண்டாம் கலியாண யோசணையைப் பற்றிச் செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறார். அவருடைய அபிப்பிராயப்படி உடனடியாகக் காரியம் நடக்காத பட்சத்தில், உண்மையிலேயே சுப்பன் இரண்டாம் கலியாணம் பண்ண வைத்து விவகாரத்தை ‘ஜீவனாம்சக் கேஸாக’த் தள்ளி விடலாம் என்ற யோசனையும் அவர் வசம் இருந்து வருகிறது.

ஒன்றா, இரண்டா இப்படிப் பலப்பல.

எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தம்முடைய அபரிமிதமான வெற்றியைக் கண்டு சிங்கராயர் நூற்றுக்கு நூறு பூரித்துப் பெருமைப்படலாம் என்றாலும் அவருடைய ஒன்பது சதுர அங்குல பரப்புள்ள இதயத்தில் ஒரு சதுர அங்குலப் பரப்பு சூன்யமாகவே இருந்தது. அதற்குக் காரணம் இதுதான்? அவர் உருவாக்கியுள்ள எண்ணிடங்கா வழக்குகளில் எந்த வழக்கை எடுத்துக் கொண்டாலும் நவரசங்களுக்குள் ஒரே ஒரு ரசத்தைத் தவிர மற்ற எட்டு ரசங்களிலொன்றைப் பற்றியதாகவே இருந்தது. அந்த ஒரே ஒரு ரசம் மட்டும் ஒரு வழக்கிலும் இடம் பெறவில்லை. அதுதான் சிருங்கார ரசம்! அதனால் தான் அவர் புகழில் ஒன்பதில் ஒரு பாகம் நிறைவெய்தாமலே இருந்தது.

அவருடைய சிவியில் சகாப்தம் தொடங்கிக் கிட்டத்தட்ட ஆறுமாத காலத்துக்குப் பிறகுதான் அந்தக் குறை நிவர்த்தியானது!

அன்றொரு நாள் பொழுது சாய்ந்த வேளையில் ஊர் குளத்தங்கரை வழியாக வந்து கொண்டிருந்த சிங்கராயர் முற்றிலும் எதிர்பாராமல் ஒரு ரம்மியமான காட்சிக்குச் சாட்சியானார்.

குளத்தங்கரைச் சரிவிலிருந்த நந்தவனத்தின் மறைவில் உள்ள புல்வெளியில் அந்தக் காட்சி நடந்து கொண்டிருந்தது.

இரண்டு கைப்பிடி புல்லை அரிவதும், ஒரு முறை நாலடித் தொலைவில் நின்று கொண்டிருந்த ‘அவனை’க் கடைக்கண்ணால் பார்த்து முறுவலிப்பதுமாக ஒரு பெண்ணும், அவள் கூடையில் அரிந்து போட்டிருந்த புலி ஒவ்வொன்றாக எடுத்து வாயில் வைத்துக் கடிப்பதும் பின் அதை எடுத்து அவள் மீதே விளையாட்டாக எறிவதுமாக ஓர் இளைஞனும் , கிராமத்துச் சொல் வழக்குப்படி ‘இஷ்டமாகப் பேசிக் கொண்டிருந்த’ காட்சியே அது.

“போ மாமா! நீ இப்படி நேரங் கெட்ட தேசத்தில் பக்கத்திலே நின்னுக் கிட்டிருக்கிறது எனக்கு ஒருமாதிரியா யிருக்கு. யாராவது பார்த்தா வசையாப் போயிடும்” என்று சிணுங்கினாள் அந்தப் பெண்.

“என்ன, பிள்ளே! இதுக்கெல்லாம் பயப்படுறியே. நீ என்ன நாலுகோட்டை விரைப்பாட்டுக்கும் சொந்தக்காரியா இல்லே நான்தான் பத்தாயிரம் ரூபாயை ரொக்கமா பாங்கிலே கட்டி வைச்சிருக்கேனா? பணம் இருந்தாத்தான் பகை வரும். நமக்குக் குறுக்கே எவன் வருவான்?” என்றான் அவன்,

“தைரியத்தைப் பாரு! எல்லாம் பெரிய நினைப்புத்தான்!” என்று சிரித்தாள் அவள்.

இது நாகரிகமுள்ள எந்த மூன்றும் மனிதனும் கண்டும் காணாததுபோல் ஒதுங்கிப் போக வேண்டிய காட்சிதான். ஆனால் சிங்கராயர் நாகரிக, அநாகரிகப் பேதங்களைக் கடந்த நிலையில் லோக உபகாரத் திருச் சேலையில் ஊறிக் கிடப்பவராதலால் மறைவிலிருந்து அதைக் கவனித்துக் கொண்டு நின்றார்.

அன்றிரவு சிங்கராயர் தூங்கவில்லை. எப்படி. அவரால் தூங்க முடியும்? அந்த ஊரில் அவர் ஒருவர் இருப்பதையே மதிக்காமல் அவருடைய திறமைக்குச் சவால் விடுவது போலல்லவா அவன் பேசினான்! அவர்களுடைய இஷ்டத்துக்குக் குறுக்கே எவனும் வரமாட்டானாமே! சிங்கராயர் தம் ஜீவன் இருக்கும். வரை அழகனுரை அப்படி நாதி யற்றுப் போக விடுவாரா?

சிங்கராயரின் தரத்துக்கும் இது ஓர் அற்பமான கேஸ்தான், அந்தப் பெண் தேவானையின் தாய் பொன்னம்மாள் ஒரு விதவை. அதுவும் வருமானத்தைப் பொறுத்த அளவில் பாரத நாட்டின் உண்மையான பிரஜை, இந்தியாவில் மாதாந்திர தேசிய வருமானமாகிய இருபத்து நான்கு ரூபாய்தான் அவளுடைய வருமானம். தேவானையின் தாய்தான் இப்படி யென்றல் அவளை மாலையிடுவதற்காக முண்டாசை உயர்த்திக் கட்டிக் கொண்டு வலைப் பனியனும் வாயில் ஜிப்பாவுமாகத் திரிகிறானே ‘நந்தவனக் காதலன்’ வேணு, அவன் நீலை இன்னும் ஒரு படி இறக்கம், அவன் வெளியூரிலிருந்து பிழைக்க வந்து அவ்வூர் மைனர் பஞ்சாயத்தில் பதினெட்டு ரூபாய் சம்பளத்தில் பியூன் வேலை பார்ப்பவன். மொத்தத்தில் இரு தரப்பாரும், மானம், வெட்கம், ஊர்ப் பகை இத்தியாதி சங்கதிகளுக்கு மற்றவர்களைவிடச் சற்று அதிகமாகவே பயந்தாக வேண்டிய ஜென்மங்கள். பொன்னம்மாலிடம் போய், ”இத்தாம்மா, உன் மகள் நடக்கிற நடை சரியில்லை” என்று ஒரு மிரட்டல் மிரட்டி விட்டு, வேணுவிடம் வந்து, “இந்தா பயலே, எக்குத் தப்பா நடந்தியானால் உன் வேலை போயிடும் ஆமா!” என்று ஓர் அதட்டலும் போட்டு விட்டால் விவகாரம் ஒரே நாளில் பைசலாகி விடும். சாமான்யர்கள் யாரும் இப்படித்தான் செய்வார்கள். இப்படித்தான் செய்யத் தோன்றும், ஆனால் சிங்கராயரோ தம் இயல்புக்கும் பெருமைக்கும் உற்றதாகப் புதுமையானதொரு திட்டத்துடன் அந்த விவகாரத்தைக் கையாண்டார்.

மறுநாள் காலையில் தூங்கி விழித்ததும் முதல் வேலையாக வேணுவை அவன் இருப்பிடத்துக்குச் சென்று பேட்டி கண்டார் சிங்கராயர். எழுபத்தைத்து நிமிடங்கள் நீடித்த அந்தப் பேட்டியின் போது பிரகாசித்ததைப் போல், அவ்வளவு ஜாஜ்வல்யமாக வேறு எத்தச் சந்தர்ப்பத்திலும் சிங்கராயருடைய ராஜ தந்திரம் ஓளிவிட்டதில்லை.

ஆரம்பத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வேணுவுடைய கடந்த கால தேக சௌக்கியத்தைச் சிலாகித்தும், தற்கால அசௌக்கியத்துக்கு வருத்தம் தெரிவித்தும், அவனுடைய சம்பளத்தை உயர்த்தி கொடுக்கத் தவறிய பஞ்சாயத்து நிர்வாகத்தை, அவசியமானால் பஞ்சாயத்தையே ஒழித்துக் கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் லோகாயதமாகப் பேசி அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பின்னர் தான், “ஏம்பா, எத்தனை நாட்கள் இப்படி ஒண்டியாக் கஷ்டப்படுவே, உனக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணி வச்சுடலாம்னு பார்க்கிறேன், நீ ஏதாவது பெண் பார்த்திருக்கிறாயா?” என்று காரியாம்சத்துடன் வார்த்தை கொடுத்தார். ”பொண்ணு கிடைக்க வேண்டாமுங்களா?” என்று நாசுக்காக மழுப்பினான் பையன்.

“அப்போ அந்தப் பெண் தேவானையைக் காதல் பண்ணினியே, அதைக் கைவிட்டுட்டியா?” என்று திடுமெனக் குறுக்கே இறங்கினர் சிங்கராயர்.

பையன் மிரண்டு விட்டான் மிரண்டு, “தேவானையையா, உங்களுக்கு எப்படி?…” என்று குழறினான்.

சிங்கராயர் தோள் குலுங்கச் சிரித்த வாறு, “என்னப்பா, இந்த ஊரிலே எது எது நடக்குதுன்னு கண்டுபிடிச்சு அதது எப்படியெப்படி நடக்கணும்னு யோசனை சொல்லிக் கவனிச்சுக்கிறதைத் தவிர எனக்கு வேறே என்ன வேலை? நீ என்னைப் பற்றிக் கவலைப்படாதே! நீ சரின்னு சொல்லு, உனக்கும் தேவானைக்கும் நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்'” என்றார்.

அது வரை ஏனோதானோ வென்று நினைத்துக் கொண்டிருந்த வேணு, ”எல்லாம் உங்க தயவுங்க” என்று தலைக்கு மேல் கையை உயர்த்திக் கும்பிட்டே விட்டான். ‘நேற்று சவுடால் பேசின பயல் இப்போ கும்பிடுகிறானா. கும்பிடட்டும், கும்பிடட்டும்’ என்று பெருமிதத்துடன் தலைமைக் கம்பீரமாக ஆட்டிக்கொண்டு அடுத்தபடியாக ஒரு ‘சுயம்பாக’ வெடி குண்டை வீசினார்.

“இந்தாப்பா வேணு, நான் என்னவோ சுலபமாச் சொல்லீட்டேனே தவிர, தேவானை விஷயம் அவ்வளவு இலேசுப்பட்டதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னாலே அவ ஆத்தா பொன்னம்மாள் என்னண்டை வந்து லபோ லபோன்னு அழுதாள். ‘நீங்க இருக்கிற இடத்தியே இப்படி அதியாயம் நடக்கலாமா? அந்த ஊர் பேர் தெரியாத வேணுப் பயல் கெட்ட எண்ணத்தோட என் மவளைச் சுத்துறானும், அவனை இந்த ஊரை விட்டே விரட்டுங்க’ அப்படின் னாள், நான்தான் அவளைச் சமாதானப்படுத்தி, ‘கவலைப்படாதே, பஞ்சாயத்து போர்டு பியூன் வேலைக்கு இன்னோர் ஆள் கிடைச்சதும் அவனை ஊரை விட்டுத் துரத்திடுவோம் அப்படின்னு சொல்லி அனுப்பினேன்” என்றார்.

“என்னங்க, இப்படிச் சொல்றீங்களே!” என்று அவறினான் வேணு.

சிங்கராயர் அவனுடைய தோள்களைத் தட்டி, “பயப்படாதே! அவளைச் சமாதானப்படுத்தத்தான் அப்படிச் சொன்னேன். ஆனால் அப்பவே என் மனசிலே எப்படியும் உன் பக்கம் இறங்கி வேலை செஞ்சு காரியத்தை மங்களமா முடிச்சுடனும்னு முடிவு பண்ணி விட்டேன். ஏன்னா உலகம் நல்லாயிருக்கணும்…உண்மையான காதல் ஜெயிச்சாகனும்” என்று காதல் பேரிகை கொட்டி விட்டு. “ஆனா ஒண்ணு” என்று நிறுத்தினார்.

“என்னங்க?” என்று ஆவலுடன் கேட்டான் வேணு.

“உன் காரியம் வெற்றி பெறணும்னா பழைய காலத்திலே காதல் பண்ணினவங்க மாதிரி நீ கோழையாயிருக்கப் படாது. நீ பயந்தாங்கொள்ளியா இருந்தால் காரியத்தைச் சாதிக்க முடியாது.”

“எல்ல செய்யணும், சொல்லுங்க?”

“பேசாமல் தேவானையைக் கூட்டிக் கொண்டு ஒரு நாள் ராத்திரி உன் சொந்த ஊரைப் பார்த்துக் கிளம்பி விடு, அந்தக கிழவி பொன்னம்மாவை நான் கவனிச்சிக் கிறேன், வேணும்னா உன் கைச் செலவுக்குக்கூட ஒரு ஐம்பது ரூபாய் தருகிறேன்” என்று உருவேற்றினர் சிங்கராயர்.

காதல் இளைஞனே அதைக் கேட்டுப் பாகாய் உருகி, “நீங்கதான் கடைசிவரை எனக்குத் துணையாக இருந்து காப்பாற்றணுமுங்க” என்று நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தான்.

“அப்படியே காப்பாற்றுரேண்டா, எழுந்திரு” என்று அவனுக்கு வரம் கொடுத்து ஆட்கொண்ட சிங்கராயர், உடனடியாக அவனை ‘மதுரை வீரன் வேலைக்குத் தயார் பண்ண ஆரம்பித்தார். தேவானை பயப்படாமல் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, ஒவ்வொரு கட்டத்திலும் எழக் கூடிய நெருக்கடிகளையும் அவற்றைச் சமாளிக்க வேண்டிய வழி முறைகளையும் எடுத்துரைத்து வீட்டு, சூட்டோடு சூடாக ‘ஓட்டத்’துக்கு ஒரு நாளையும் குறிப்பிட்டுக் கொடுத்து விட்டு விடைபெற்றுக் கிளம்பினர்.

சிறிது தூரம் வந்ததும், அந்தக் கிழவி பொன்னம்மாவையும் முன்னேற்பாடாக ஒரு கலக்குக் கலக்கி வைக்கலாமா? என்றோர் எண்ணம் அவருக்குத் தோன்றியது, மறுவினாடியே மனத்தை மாற்றிக் கொண்டார். ‘சேச்சே! இப்பவே அவளிடம் சொன்னால் ஊர் முழுக்க ஒப்பாரி வைத்துக் காரியத்தை நடக்க விடாமல் பண்ணி விடுவாள். முதலில் அந்தப் பயல் பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடட்டும். அப்புறம் நாலு ஆட்களை விட்டு வீரட்டிப் பிடித்து, இந்தக் கிழவியை ‘பதினாறு வயதான என் பெண்னை ஏமாற்றிக் கடத்திக் கொண்டு போனான். அப்படின்னு போலிசிலே சொல்ல வைத்து ‘ஏ’ கிளாஸ் கிரிமினல் கேஸாக்கி விடலாம்!’

குறிப்பிட்ட சுபயோக சுபதினமும் வந்தது. மாலையிலேயே, வேணுவை ரகசியமாக அழைத்து மீண்டும் ஓட வேண்டிய வழிகளைத் தெளிவாகக் கூறிக் கைச்செலவுக்கும் பணத்தைக் கொடுத்து அவனைத் தயார் பண்ணி விட்டார் சிங்கராயர். இரவு மூன்று மணிக்குக் காதவர்கள் ஊர் எல்லையைக் கடந்து விட வேண்டும் என்று திட்டம்.

இரவு இரண்டரை மணிக்கெல்லாம் தம் திட்டம் செயலானதைக் கண்கூடாக் கண்டு மகிழ ஊரை யொட்டியிருக்கும் ரோட்டுப் புறத்தில் சற்று மறைவாகக் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் காத்து நின்றார் சிங்கராயர்.

சரியாக மூன்று மணிக்கு ‘வீர்’ரென்று ஒரு கார் அவரைக் கடந்து ஊருக்குள் ஓடியது. காருக்குள்ளிருந்த நபரை அடையாளம் தெரிந்து கொண்டதும். அவருக்குத் திக்கென்றது. அது வேணுவே தான். ”சே. என்ன முட்டால்தனமாகப் போச்சு. கூவிருட்டிலே ஆளரவம் தெரியாமல் கூட்டிக் கொண்டு போடா என்றால் ஊரை எழுப்புகிறாற்போல் காரைக் கொண்டு போகிறானே!’ என்று ஒருகணம் குழம்பினார், ஆனால் உடனே மனத்தைத் தேற்றிக் கொண்டார். ‘பரவாயில்லை, கடத்தா விட்டாலும், கடத்த முயற்சி செய்து பிடிபட்டாலும் அதுவும் ஓர் கிரிமினலுக்குள்ளே வருமே!’ என்று அவர் கிரிமினல் செக்ஷன்களை ஆராய்ந்து கொண்டிருந்த போதே போன கார் திரும்பி விட்டது.

கட்டுக் கடங்கா ஆர்வத்துடன் கவனித்துப் பார்த்தார், பையன் சூரன் தான்? காரில் ஓர் ஓரத்தில் தேவானை இருந்தது தென்பட்டது!

வெற்றிப் பெருமிதத்துடனும், உடனடியாக அடுத்த நடவடிக்கையை மேற் கொள்ளும் உத்தேசத்துடனும் பொன்னம்மாளின் குடிசையருகே சென்ற சிங்கராயரைக் கதவில் தொங்கி ஆடிக் கொண்டிருந்த பூட்டும். பக்கத்துக் குடிசையிலிருந்து எழுந்த ஒரு பெண் பேச்சுக் குரலும் வரவேற்றன.

“என்னடி, பொள்னம்மா ஆச்சி தேவானை கல்யாணத்தை இப்படிக் காதும் காதும் வச்சாப்போல் முடிச்கட்டாளே!”

“பாவம், அவ என்னடி செய்வா? ஊருக்கெல்லாம் தெரிவிச்சு வெற்றியை பாக்கு வைக்கணுனாலும் பத்து ரூபாய் செலவாகும். அதுக்கு எங்கே போவாள்? எல்லாச் செலவையும் மாப்பிள்ளை வேணு தான் செய்யறான்”

“இருந்தாலும் இப்படித் திடுமன்று ஒரு நாளைக்குள்ள முடிஞ்சது பெரும் ஆச்சரியம்தான்,”

“திமுென்னு ஒண்ணுமில்லை, இது மாப்பிள்ளை அது பொண்ணுன்னு ஆச்சி ரொம்ப நாட்களாகவே முடிவு பண்ணினதுதானாம். வேணு பொன்னம்மா ஆச்சிக்கு உறவுகாரன்தான், அவனுக்குத் தாய் தகப்பன் கிடையாது. தேவாைனைக் கட்டிக்கிட்டுப் போயிடலாம்னு இங்கே வேலை பார்த்துக் கிட்டிருந்திருக்கிறான். வயசுப் பொண்ணு இருக்கிற வீட்டிலே இருக்கப்படாதுன்னு ‘யாரோ எவரோ’ மாதிரி தனியா இருந்திருக்கிறான். இரண்டு பேர்கிட்டேயும் பணம் திரண்டு வராமல் கல்யாணம் தள்ளிக் கிட்டே இருந்ததாம். கடைசியிலே இன்னிக்குத்தான் வேளை வந்திருக்கு. எல்லா விவரமும் ஆச்சி இப்பத்தான் சொன்னாள்”

“இன்னிக்கு எப்படியடி திலர்னு முடிவாச்சு?”

“அது பெரிய கூத்து, இப்ப புதுசா ‘பிஞ்சன்’ வாங்கிக்கிட்டு ஊரோடு வந்து, இங்கேயிருக்கிற புத்தி கெட்ட ஆம்பிளைகளைக் கலக மூட்டி கோர்ட்டு, வாய்தான்று அலைய வச்சிக் கொண்டிருக்குதில்லே ஒரு நாரத முனி, அது அந்தப் பையன் வேணுகிட்டே போய் விஷயம் தெரியாம் என்னென்னவோ புளுகிக் கிட்டு, ‘நான் பணம் தரேன், அந்தப் பொண்ணைக் கட்டிக் கொண்டு ஓடி போயிடு’ன்னு சொல்லிச்சாம். அவனும் உடனே ராத்திரியே போய் வாடகைக்குக் காரை அமர்த்திக் கொண்டு வந்து பொண்ணையும் தாயாரையும் அழைச்சுக் கிட்டுப் போயிட்டான், இனிமே அங்கேயே ஒரு வேலை வெட்டி செஞ்சுக்கிட்டு இருந்துடுவாங்க போலிருக்கு”.

“பயல் கெட்டிக்காரன் தாண்டி. அந்தக் கலகக்காரக் கிழவன் தலையிலேயே கையை வச்சுட்டானே! நல்லா வேணும் அந்தக் கோன்மூட்டிக்கு” என்று கெக்கலி கொட்டிச் சிரித்தாள் ஒருத்தி. மற்றவஞம் அவளுடன் சேர்ந்து பலமாக சிரித்தாள்.

அந்தப் பெண்களின் சிரிப்பொலி வேய்ங்குழல் நாதமாக அந்த வட்டார மெங்கும் பாய்ந்து பரவியது. ஆனால், பொன்னம்மாவின் குடிசைப் பக்கமாக வரும்போது ஆறடி உயரமாக இருந்து அச்சமயம் நாலே கால் அடி உயரமாகக் குன்றிக் குறுகி நின்று கொண்டிருந்த உருவத்தில் காதுகளில் மட்டும் அந்தச் சிரிப்பொலி அசல் வேய்ங்குழலாக அதாவது மூங்கில் குழலாகப் பாய்ந்தது! அத்துடன் அந்தக் கணத்திலேயே அழகனூர் கிராமம் என்றென்றும் மறக்க முடியாத மாபெரும் சரித்திர மாற்றம் ஒன்றும் சம்பவித்தது.

பெண்களின் சிரிப்பால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அழிந்ததாகச் சரித்திரம். அந்த நியதியே அன்றும் பலித்து விட்டது. நிறுவப்பட்ட ஆறு மாத காலத்துக்குள் அழகனூரில் மகோன்னதமாகப் பிரகாசித்த சிவில் சகரப்தம் மேற்படி பெண்களின் மேற்படி சிரிப்பால் மேற்படி வினாடியில் அஸ்தமனமாகியது?

நெஞ்சையடைக்கும் வேதனையுடன் தான் அந்த அஸ்தமனத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதிருக்கிறது. அதோ, பொன்னம்மாவின் குடிசை மறைவிலிருந்து வெளியேறித் தள்ளாடித் தள்ளாடி நடந்து போகிறாரே அந்த சகாப்த கர்த்தாவாகிய சிங்கராயர், அவர் இனி மீண்டும் ஊருக்குள் நடமாடப் போகிறாரா? மாட்டவே மாட்டார்!. ஹே. பரிதாபத்துக்குரிய அழகனூர்வாசிகளே! உங்களிடையே தோன்றிய சட்ட ஞானம் ஒழிந்தது! பஞ்சாயத்துக் கோர்ட் கட்டிடமே, உன் தாழ்வாரம் இனி வெறிச்சோடிப் போய்விடும்!

விளைவு தெரியாமல் சிரித்து விட்ட, பொன்னம்மா குடிசைக்கு அடுத்த குடிசைவாழ் பெண் பேதைகளே! இனி உங்கள் கணவர்கள் கோர்ட், வாய்தா என்று வெளியே போக மாட்டார்கள். அதனால் அவர்களுக்குப் பொழுது போக வேறு வழியில்லாமல் உங்கள் சமையலை குறை கூறி வம்புச் சண்டை போட்டே பொழுதைப் போக்க போகிறார்கள்! அனுபவியுங்கள்! இதுவே உங்கள் அறியாமைக்குச் சாபமாகும்!

– 01-01-1962

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *