சுனாமியே வந்து கதவைத் தட்டினாலும் தலையைப் பத்து முறை வாரிக் கொண்டு இரண்டாம் தடவையாக ஃபேர் அண்ட் லவ்லியை அப்பிக் கொண்டு சாவகாசமாகத்தான் வருவான் ப்ரதீப்.
காரை ஸ்டார்ட் பண்ணி உட்கார்ந்து ஐந்து நிமிஷங்கள் ஆகி விட்டன. பொறுமை இழந்து செல்போனைத் தடவினேன். கையில் சில பூங்கொத்துக்களோடு ஒரு வழியாய் வந்தே விட்டான்.
” இதை விட்டுட்டோம். ” சொல்லிக் கொண்டே அவசர அவசரமாய்க் காரின் உடம்பில் பூக்களை ஒட்டினான். ஏற்கெனவே கார் பூக்களாலும் பலூன்களாலும் நிரம்பி ஜிகுஜிகுவென இருந்தது.
எங்களோடு பர்கரும் பிட்ஸாவும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒரே படுக்கையில் உருண்ட மாணிக் இன்றைக்கு புத்தம்புது மனைவியோடு இந்தியாவிலிருந்து வருகிறான். அவனை வரவேற்கத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம். போன வாரமே அபார்ட்மென்ட் பார்த்து கட்டில் மெத்தை, கவுச், டிவி, நான்-ஸ்டிக் பாத்திரங்கள் என்று சகலமும் வாங்கிப் போட்டாயிற்று. மாணிக் வந்து குடித்தனம் நடத்துவதுதான் பாக்கி.
முன்னிருக்கையில் அவன் உட்கார்ந்த பின் பெல்ட் போட்டானா என்று பார்த்துக் கொண்டு காரை நகர்த்தினேன். ” ஏர் இந்தியா அரைவல் டைம் செக் பண்ணிட்டியா ப்ரதீப்? ”
” கரெக்ட் டயத்துக்கு வருது. அஞ்சு நாப்பது. ”
ல·பாயட் ரோட் தாண்டுவதற்குள் எதிரே வந்த இரண்டொருவர் பூக்களால் அலங்கரித்திருந்த எங்கள் காரைப் பார்த்து விட்டு உற்சாகமாய்க் கையசைத்தார்கள்.
” ப்ரதிப், இந்த வெள்ளைக்காரங்க சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்ணறாங்க. மாணிக் ஒரு சுத்து பெருத்திருப்பானா? ”
” நிச்சயம் ஆனவுடனேயே ஆள் வெயிட் போட்டுட்டான். அஞ்சு வருஷமா ஒர்க் அவுட் பண்ணின உடம்பில் அஞ்சே வாரத்தில் தொந்தி விழுந்தாச்சு. ”
நெடுஞ்சாலை 65-ஐ எட்டியபோது – எதிரே வருபவர்களில் சிலர் கார் ஜன்னலை இறக்கி விசிலடித்து கையசைத்து விட்டுப் போனார்கள். எனக்கு முதல் முறையாக ஏதோ நெருடியது.
அடுத்த சிக்னலில் ஒரு மூத்த குடிமகள், ” இந்த முறை புஷ் உங்களுக்கெல்லாம் வெக்கப் போறார் ஆப்பு. ” என்று ஆங்கிலத்தில் கத்தினார். அவர் காரிலிருந்த இளம்பெண்கள் களுக் மளுக்கென்று சிரித்தார்கள்.
” ப்ரதிப், ஸம்திங் ராங். ”
காரை அடுத்த ரெஸ்ட் ஏரியாவில் ஓரங்கட்டி நிறுத்தினேன். இறங்கிப் பார்க்கிற போதே, ப்ரதீப் ஞாநோதயம் வந்தவனாய் அலறினான்.
” மாணிக்குக்காக காரைச் சுத்தியும் ஜஸ்ட் மேரீட் ஸ்டிக்கர் ஒட்டி வெச்சேண்டா. ”
- மே 11, 2006
தொடர்புடைய சிறுகதைகள்
ஈரக் கோழி மாதிரி வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தான் அனந்து.
அவ்வப்போது விலுக் விலுக்கென்று உடம்பு தூக்கிப் போட்டது. சிவந்த கண்களும், உலர்ந்த உதடுகளும் ஒரு மாதிரி கோணிக் கொண்டிருக்க, போர்வைக்குள் சன்னமாய் அனத்திக் கொண்டிருந்தான்.
இரண்டு மாதங்களாகத்தான் அவனை எனக்குத் தெரியும். அமெரிக்காவுக்குப் புதுசு ...
மேலும் கதையை படிக்க...
அவன் செத்துக் கிடந்தான். அரசாங்க ஆஸ்பத்திரியின் அழுக்கான வார்டு.
" ஸ்டார்வேஷன் டெத். நாலு நாளா கொலைப்பட்டினி கிடந்திருப்பான் போல. பசி மயக்கத்தில் கிறங்கி, நடு ரோட்டில் மயங்கி விழுந்துட்டான். "
ஏட்டிடம், " இவன் பாக்கெட்டை சோதனை போடு. " என்றார் இன்ஸ்பெக்டர்.
சர்ட் ...
மேலும் கதையை படிக்க...
வெள்ளைப் பனிக்குவியலில் ஆப்பிள் போல சற்றே வெளியே தெரிந்தது லேகாவின் முகம். கண்கள் பாதி திறந்திருந்தன. அமெரிக்க போலீசார் அந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்தார்கள். போலீசின் பிடியிலிருந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் லேகாவின் முகத்தைச் சுற்றிச் சுற்றி வந்து குரைத்தது. உள்ளே புதைந்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
மேலாடை இல்லாத பெண்கள்.
ரத்தீஷ் உற்சாகத்தில் துள்ளினான். அவனைக் கூட்டி வந்தது இமாலயத் தவறு என்பதை தாமு தாமதமாய் உணர்ந்தான்.
நரிக்கொம்பு ஃபாரஸ்ட்டின் மையத்தில் காட்டிலாகா ஜீப் குலுங்கி்க் குலுங்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரிய வெப்பம் விழாத அடர்த்தியான காட்டுப் பிரதேசம்.
ரத்தீஷ் படபடத்தான்.
” தாமு, ...
மேலும் கதையை படிக்க...
வராந்தா முழுவதும் விரக்தியான முகங்கள். "மக்கள் குறை தீர்க்கும் நாள்" வெள்ளை நிறப் பின்னணியில் நீலவர்ண எழுத்துக்களோடு பேனர் காற்றில் நெளிந்தது. எல்லோருமே கலெக்டரிடம் கொடுப்பதற்காகக் கையில் மனு வைத்திருந்தார்கள்.
'......உயர்திரு கலெக்டர் சமூகம் அவர்களுக்கு, எனது கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
சவிதா பாலாவை சந்தேகப்பட்டதில்தான் எல்லாமே ஆரம்பித்தது.
எந்நேரமும் ஃபோனை நோண்டிக் கொண்டே இருந்தான். மறைத்து மறைத்து அதைப் படிப்பதும், ரிப்ளை செய்வதும், திடீரென ராத்திரி வெடுக்கென விழித்து போர்வைக்குள் வைத்து ஃபோனை ஆன் பண்ணிக் கொள்வதும் சந்தேகத்தைக் கிளப்பத்தான் செய்யும்.
ஐந்து வருஷமாய்க் காதலித்த ...
மேலும் கதையை படிக்க...
” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா.
ஸ்கூல்ன்னா எனக்குக் கொள்ளை இஷ்டம்.
” அஸ்மிதா, நீ படிக்கப் போற கான்வென்ட் இதான். ” ஸ்கூட்டர்ல முன்னாடி நிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போறப்ப அப்பா ...
மேலும் கதையை படிக்க...
05 செப்டம்பர் 2009
அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும்.
வெட்கமாயிருந்தது. அமெரிக்கா வந்த பின்னும் இண்டியன் பங்ச்சுவாலிட்டி. ஹெட்மாஸ்டர் தங்கதுரையின் அறுக்கும் பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
யார்க், பென்சில்வேனியாவில் காலை பத்து மணி்க்கு அவரை ...
மேலும் கதையை படிக்க...
இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள்.
" கண்டிப்பா நாம நியுஜெர்ஸியிலிருக்கும் உன்னோட அண்ணன் குடும்பத்தோட ஒரு வாரம் தங்கியிருக்கப் போறோம். இந்தியக் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
மின் நகரைக் கடக்கும்போது ஒரு கும்பல் பாதி ரோட்டை மறித்து வேகமாகக் கையை அசைத்தது. தயானந்த் அவசரமாய் பிரேக்கை மிதித்தான். ஜன்னலைப் பார்த்தான் வரது.
ஜன்னல் கண்ணாடியில் தலைகள் திரண்டன. நாற்பது வயதுக்காரர் ஒருவர் பதட்டத்துடன் சொன்னார். " தண்ணித் தொட்டிக்குள்ள குழந்தை ...
மேலும் கதையை படிக்க...