கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 18,223 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று திங்கள் கிழமை. ஆறாம் வகுப்பு மாணவியர் குதூகலமாய் இருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவியல் நோட்டைப் பிரித்து அதில் தாங்கள் வரைந்து கொண்டு வந்திருந்த படத்தினை மற்றவரிடம் காண்பித்தனர்.

“என் படம்தான் நல்லா இருக்கு. மிஸ் ‘குட்’ போடுவாங்க” என்றாள் கீதா.

“என் படத்துக்கு’வெரிகுட்’ போடு வாங்க” என்று கூறி மகிழ்ந்தாள் ப்ரியா.

ஐந்தாம் வகுப்பு வரை அவர்சுளுக்கு அறிவியல் பாடத்தில் படம் போடும் வேலையில்லை. ஆறாம்வகுப்பில்தான் அறிவியல் நோட்டில் படம் வரைய வேண்டும். முதன் முதலாக அறிவியல் டீச்சர் வெள்ளிக்கிழமை அன்று சில படங்களை வரைந்து வரும் படி ‘வீட்டு வேலை’ கொடுத்திருந்தார். இன்று திங்கள், அனைவரும் படம் வரைந்து தோட்டை எடுத்து வந்திருந்தனர்.

அதில் உள்ள படங்களைத்தான் மற்றவரிடம் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தனர். மாலினி மட்டும் பேசாமல் இருக்கக் கண்டு “ஏய், மாலினி, நீ படம் போடலையா? எங்கே உன் நோட்டைக் காட்டு” என்று அவள் தோட்டை வாங்கிப்பார்ததனர். நேர்க்கோடு அழுத்தம் இல்லாமலும், வளைவுகள் அவ்வளவு சீராக அமையாமலும், புள்ளிகள் பிசிறாகவும், சுமாராகத்தான் மாலினி படம் போட்டிருந்தாள்.

“ஐய்யே, என்னடி உன் படம் இப்படி இருக்கு! எங்க நோட்டை எல்லாம் பாரு. எப்படி ஜோரா இருக்கு” என்றாள் மெர்சி.

“உன்னை மிஸ் நல்லாவே திட்டப் போறாங்க” என்றாள் ஆனந்தி. மாலினி அமைதியாகவே இருந்தாள்.ஆசிரியை வரவும் அரவம் அடங்கிற்று. அட்டென்டென்ஸ் எடுத்து முடித்ததும் “அறிவியல் நோட்ல எல்லோரும் படம் வரைஞ்சுக்கிட்டு வந்தீங்களா?” என்று கேட்டார்,

“வரைஞ்சிட்டோம் மிஸ்” என்றனர் மாணவிகள் கோரஸாக,

“சரி. எல்லோரும் ஒவ்வொருவரா நோட்டைக் கொண்டு வாங்க” என்றார் ஆசிரியை. ஒவ்வொரு நோட்டாகப் பார்த்து அனுப்பினார்.

மாலினி முறை வந்ததும் நோட்டைப் பார்த்துவிட்டு மாலினியைப் பார்த்தார். மாலினி நன்றாகத் திட்டு வாங்கப் போகிறாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அப்படி ஏதும் நடக்க வில்லை. ஆசிரியை மாலினியின் நோட்டை மேஜை மீது வைத்துக் கொண்டு. “நீ போகலாம். அடுத்தது?” என்றார். அனைவரின் நோட்டையும் பார்த்து முடித்ததும், “அவரவர் நோட்டில் நீங்களே படம் வரைந்தீர்களா?” என்று கேட்டார்.

“ஆமாம் மிஸ்” என்றனர் எல்லோரும் கோரஸாக.

“உண்மையாகக் கூறுங்கள். நிச்சயமாய் நீங்கள் தான் வரைந்தீர்களா?”

வகுப்பில் அழுத்தமான அமைதி நிலவியது.

“சொல்லுங்க! கீதா, உனக்கு வரைந்து கொடுத்தது யார்?”

“எங்க பக்கத்து வீட்டு அக்கா”

“அந்தப் பக்கத்து வீட்டு அக்கா பரீட்சையில் வந்து உனக்கு வரைந்து தருவாளா?” என்று கேட்டார் ஆசிரியை.

கீதா எதுவும் பேசத் தெரியாமல் நின்றாள்.

“மெர்சி, உனக்கு யார் வரைந்து கொடுத்தது?” என்று ஆசிரியை வினவினாள்,

“நான்தான் மிஸ் வரைஞ்சேன்” என்றாள் நடுக்கத்துடன் மெர்சி.

“சரி, அப்படியானால் போர்டில் புத்தகத்தைப்பார்த்து அந்தப்படத்தை அப்படியே வரை.”

மெர்சி மெல்ல வந்து சாக்பீசை எடுத்து போர்டில் புக்கைப் பார்த்து வரையத் தொடங்கினாள். நேர்க் சோடு அப்படியே கோணலாய் வந்தது! படத்தின் கால் பகுதிக்கே கால் மணி நேரம் சுடந்தது. அப்படியும் பிரயோஜனமில்லை.

“நோட்ல வரைஞ்சது உணமையாகவே நீயா இருந்தால் ஏன் போர்டில் வரையலே? உண்மையைச் சொல், யார் வரைந்தது?” என்றார் ஆசிரியை.

“எங்க அண்ணன் மிஸ்” என்று கூறவே, ஆசிரியை கோபத்தோடு திட்டிய பின் மாலினியை, “உனக்கு வரைந்தது யார்?” என்றாள், மாலினி தான் தான் வரைந்தது என்று கூறவும் அவளை போர்டில் வரையும்படி கூறினார்.

அவளும் வரைய ஆரம்பித்தாள். சிறிது நேரத்திலேயே சுமாராக முழுப் படமும் வரைந்து விட்டாள்!

“குட்! மாலினி ஒருத்திதான் உண்மையாகத் தானே நோட்டில் வரைந்து வந்து இருக்கிறாள், அவளும் நினைத்து இருந்தால் வேறு யாரையும் வரையச் சொல்லி வாங்கி வந்து இருக்கலாம். ஆனால் படிப்பின் ஆர்வம் காரணமாகத்தானே சுமாராக இருந்தாலும் பரவாயில்லை என்று வரைந்து இருக்கிறாள். எனவே, அவள் படத்துக்குத்தாள் ‘வெரிகுட்’ போடுகிறேன்.”

“மற்ற அனைவரும், நோட்டின் அடுத்த பக்கத்தில் அதே படத்தை நீங்களே உண்மையாக வரைந்து எடுத்து வர வேண்டும்” என்று கூறிச் சென்றார் ஆசிரியை.

மாலினியைத் தவிர மற்ற அனைவரும் தலை குனிந்தனர்.

– 1991-05-01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *