கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 13,404 
 
 

முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார்.

அவருடன் அவருடைய நாயும் இருந்தது.

வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.

முல்லா, ”நாய் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,” என்றார்.

மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘முல்லா, உன் நாய் அழகாக இருக்கிறது. அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும். ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்?. தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,” என்றார்.

முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து, ”நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும், யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார். எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது. எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன். ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும். அதற்காகத்தான் இந்த ஏற்பாடு,” என்றார்.

Print Friendly, PDF & Email

1 thought on “நாய் வால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *