இளவரசி வடிவுக்கரசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 28,573 
 

இரத்தினக் கற்கள் அதிகம் காணப் படும் நாடான இரத்தினபுரி மன்னர் இரத்தினசிங்கத்தின் ஒரே மகள் வடிவுக்கரசி. பெயருக்கு ஏற்ப அழகானவள் . அவளுக்கு நீண்ட கூந்தல். கயல்விழிகள் முத்து போன்ற பற்கள் அவளின் அழகை வர்ணித்து கவி பாட வார்த்தைகள் தேடினார் அரச கவி ஆதித்தர். அதை இட்டு மன்னர் பெருமை பட்டார் . தன் மகளுக்கு ஏற்ற அழகுள்ள ஒரு இளவரசனை மன்னர் தேடினார் அதற்கு முன் ஓவியர் வரைந்த தன் மகளின் படத்தை பல இராஜ்ஜியங்களுக்கு அனுப்ப மன்னர் முடிவு எடுத்தார் ஒரு ஓவியரை அழைத்து தன் மகளின் தோற்றத்தை சித்திரமாக வரையும் படி கட்டளை இட்டார் . ஓவியரும் அந்த சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார் ஓவியர் நம்ப முடியாத அளவிற்கு அழகாக இளவரசி இருந்தாள். இளவரசி வடிவுக்கரசியின தோற்றதினை ஓவியத்தில் பார்த்து பலர் வியந்தன்ர் எங்கள் இளவரசியை விட பேரழகி இந்த உலகில் ஒருத்தி இல்லை என்றனர் தன் அழகை பற்றி பலர் விமர்சித்தது அவளுக்குள் பெருமையை கொடுத்தது .மிடுக்கு அகங்காரம் ஆகியவற்றை தோற்றுவித்தது . அவளும் தனக்கு வரும் கணவன் தன்னிலும் சற்று அழகு குறைவாக இருக்க வேண்டும் என்றும், தன் அழகை அவன் ரசிக்க வேண்டும் என்றே அவள் விரும்பினாள் அதே நேரம் வருபவன் தான் கேட்ட எதையும் தருபவனாக இருக்க வேண்டும் என்று தன் மனதுக்குள் தீர்மானித்தாள்;

அவளின் ஓவியம் பல இராஜ்யங்கக்ளுக்கு மன்னரால் அனுப்பப்பட்டது

அவள் பல இராஜ்ஜியங்களில் அழகு ராணி என புகழ் பெற்றாள். இராஜ்யங்களின் இளவரசர்கள் அவளை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதை அறிந்த அவள்,தன்னை மணக்க வந்த அழகானவர்களை நிராகரித்தாள். தன் மனதுக்கு பிடித்த இளவரசனின் வருகைக்காக காத்திருந்தாள். அவளைத் தேடி ஒரு அழகான இளவரசன் வருவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.

***

வைரபுரி செல்வம் படைத்த நாடு அங்கு வைரச் சுரங்கங்கள் பல இருந்தன அந்த நாட்டின் இளவரசன் பெயர் வடிவழகன். செல்வச் செருக்கு உள்ளவன். ஏழை மக்களை தூசியாக மதிப்பவன், அவன் தந்தை முதுமை அடைந்த படியால் அரசின் எல்லா அதிகாரத்தையும் அவனிடம் கொடுத்திருந்தார் . அவனின் அந்தப்புரத்தில் பல பெண்கள் அவனுக்கு பணிவிடை செய்ய இருந்தனர்

வடிவழகன் இரத்தினபுரி இளவரசி வடிவரசியின் ஓவியத்தைப் பார்த்தவுடனேயே அவன் பிரமித்து போனான். அவளைத் தன் மனவியாக்க முடிவெடுத்தான் அவளைத் தேடி இரத்தினபுரி சென்று, மன்னர் இரத்தினசிங்கதை சந்தித்து பேசி, அவரின் மகளை திருமணம் செய்ய அனுமதி கேட்டான். அவரும் தன் மகளை படைப் பலம் அதிகமான வைரபுரிக்கு பெண் கொடுக்க சம்மதித்தார் . வடிவழகன் இளவரசியின்அழகை பற்றி புகழ்ந்தான் . அவளை போன்ற அழகி உலகில் ஒருத்தி இல்லை என்றான். மற்றும் விலை உயர்ந்த வைர நகைகள் பட்டு ஆடைகள் அவளுக்கு கொடுத்தான். அவளும் அவனது பேச்சில் மயங்கி அவனை திருமணம் செய்ய சம்மதித்தாள், அவர்களுக்கு ஆடம்பரமாக திருமணம் நடந்தது . திருமணத்தைப் . பார்த்தவர்கள் , சரியான ஜோடிப் பொருத்தம் என்று எல்லோரும் சொன்னார்கள்.

தனக்கு கணவன் தந்த ஆடை ஆபரணங்கள் அணியத் தொடங்கியபோது, காலப் போக்கில் ​​இளம் இளவரசி தனது அழகான இளம் கணவர் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல குணம் உள்ளவன் அல்ல என்பதைக் கண்டுபிடித்தாள். தன் கணவர் தனது நாட்டு மக்கள் மீது பாசம் இல்லாத கொடுங்கோலனைப் போல நடந்து கொண்டதை கண்டாள். அவன் தனது மனைவியை தான் நினைத்ததை சாதித்து பெற்ற வெற்றிக் கோப்பை எனவும்அவளின் அழகு தோற்றத்தை பாவித்து பல இராஜ்ஜியங்களைத் தன் இராஜ்ஜியத்தோடு சேர்க்கப் போவதாக சொன்னான் , கணவனின் சுயநலமான தீய குணம் அவளுக்கு புரிந்தது . தன் அழகை புகழந்து தன்னை ஏமாற்றி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்த கணவரைப் பற்றி எல்லாம் ஒரு தவறான தோற்றம் என்று அவள் அறிந்த போது, ​​இதை அவனுடைய முகத்துக்கு நேரே “ நீ ஒரு கெட்டவன். கொடுங்கோலன். ஏமாற்றுக்காரன் உன் மனைவியின் அழகைப் பாவித்து அரசுகளை கைபற்ற நினைப்பவன் நம்பிக்கை துரோகி நீ எனக்கு கணவனும் இல்லை நான் உனக்கு இனி மனைவியும் இல்லை” என்றாள் வடிவுக்ரசி கோபத்தோடு, வடிவழகனின் குணம் அறியாத அவள். அவன் சிரித்த படியே அவள் சொன்னதுக்கு பதிலளித்தான்,

“ நான் உன் அழகை பாவித்து மற்றைய மன்னர்களை மயக்கி போரில் இல்லாமல்அந்த அரசுகளைக் கைப்பற்றுவது என் திட்டம், வெகு சீக்கிரம் உன்னை பாவித்து சக்ரவர்த்தி ஆவேன் அழகுக்காக மட்டுமே உன்னை நான் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உனக்கு நினைவூட்டுகிறேன்” என்றான் வடிவழகன்.

இளவரசி தனது கணவரின் கொடூரமான வார்த்தைகளில் உண்மையைக் கண்டு பல நாட்கள் அழுதாள். அவளை திருமணாம் செய்ய கேட்ட பல நல்ல மற்றும் நேர்மையான நல்ல குணமுள்ள இளவரசர்களை தன் அகங்காரத்தால் நிராகரித்ததை நினைவில் கொண்டு கவலைப் பட்டாள். அழுதாள்,, அதனால் தனது தவறை உணர்ந்து கணவனின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி அரண்மனையை விட்டு வெளியேற முயன்றாள், அது நடக்க வில்லை இளவரசி தப்பிக்க பல முயற்சிகளை மேற்கொண்டாள், முடிவில் அவள் சிறை வைக்கப்பட்டாள். தொடர்ந்து இரு காவலர்களால் அவள் கண்காணிக்கப் பட்டாள். .

வடிவுக்ரசியை காவல் காத்த காவலர்களில் இருவரில் ஒருவனான திருமணமாகாத காசிநாதன் என்ப வனின் முகம் போரில் ஏற்பட்ட வடுக்களால் பயங்கரமான தோற்றம் உள்ளது அவன் வடிவுக்கரசியின் கதை கேட்டு அவள் மீது பரிதாபப்பட்டான், அவள் சிறைபிடிக்கப்பட்டதில் அவர் அவளை உற்சாகப்படுத்தவும் அவளுக்காக சில நல்ல புத்திமதிகளை வழங்க முயன்றான். காலப் போக்கில் அவர்களிடையே நட்பு வளர்ந்தது. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைத்தனர் அத்தகைய நம்பிக்கையைப்பெற்றபின் , ஒரு நாள் இளவரசி காசிநாதன் காவலரைத் தப்பிக்க அனுமதிக்கும்படி கேட்டாள். ஆனால் தனது இளவரசனுக்கு விசுவாசமும் கீழ்ப்படிதலும் உள்ள காவலன் இளவரசியின் வேண்டுகோளுக்கு உடன்படவில்லை. ஆயினும்கூட, அவன் அவளுக்கு சொன்னான் ,

– “நீங்கள் இங்கிருந்து தப்பி ஓட விரும்பினால், அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியும், ஆனால் அதுக்கு நீங்கள் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டி வரும் உங்களால் முடியுமா “?

“நான் இந்த சிறையில் இருந்து தப்பிச் செல்ல எந்த தியாகமும் செய்யத் தயார் . நான் என்ன செய்யவேண்டும் சொல் காசிநாதா” .

அவள் எதையும் செய்ய தயாராக இருப்பதை உறுதிப்படுத்தினாள், எனவே காசிநாதன் தொடர்ந்து சொன்னான் :

– “இளவரசி உங்கள் அழகுக்காக மட்டுமே உங்களை விரும்புவது போல் காட்டி உங்கள் அழகை தன் திட்டத்துக்கு பயன் படுத்த நினைக்கிறார் இளவரசன் . உங்கள் முகத்தை நீங்கள் சிதைத்தால் அவரின் திட்டம் சரி வராது. அவர் உங்களை அரண்மனையிலிருந்து வெகு தொலைவில் அனுப்புவிடுவார். அதனால் யாரும் உங்களைப் பார்த்து வெறுப்பார்கள் ”

அதற்கு இளவரசி வடிவுக்கரசி சொன்னாள்

– “என் முக அழகை நான் சிதைக்கவா சொல்லுகிறாய் ? நான் அதன் பின் எங்கு செல்வேன் என் தந்தையின் இராஜ்ஜியத்துக்கு நான் திரும்பி போக முடியாதே ?அவர் என்னை அடையாளம் காண மாட்டார் என் அழகை சிதைத்தபின் , ஒரு பயங்கரமான அசிங்கமான ,வெறுக்கத் தக்க. முகத்தை பார்த்து ரசிக்க முடியாத பெண்ணை யார் விரும்புவார்கள். எனக்கு துணை இனி யார் இருப்பார்கள் ? ”

– ”நான் உங்களை உங்கள் சிதைந்த அழகோடு விரும்புகிறேன்,”

காசிநாதன் நம்பிக்கையுடன் பதிலளித்தான். இளவரசியுடன் அவன் தினசரி பேசியது அவனுக்கு அவளை காதலிக்க வழிவகுத்தது., ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர்

:”என்ன நீ சொல்கிறாய் . என்னால் நம்ப முடியவில்லை “

– “என்னைப் பொறுத்தவரை உங்கள் வெளி அழகை இருப்பதை விட உங்கள் மனம் அழகாக இருக்கிறது .அது தான் எனக்கு தேவை ”

அந்த நேரத்தில் இளவரசி தனக்குள் நேர்மையான காவலன் காசிநாதனை நேசிக்கிறாள் என்பதை உணர்ந்தாள். அவள் கண்களில் கண்ணீருடன் அவள் காச நாதனின் கையில் இருந்த கத்தியை , பறித்து தன் முகத்தில் கீறி தன் அழகை சிதைத்தாள் இளவரசி வடிவுக்கரசி அவளின் தான் அழகி என்ற அகங்காரம் நீங்கியது

( யாவும் புனைவு) )

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *