விற்பனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 4,217 
 

அது ஒரு கம்ப்யூட்டர் விற்பனை கடை .கணினி, மடிகணினி, அவை சார்ந்த உபரி பாகங்கள், துணை கருவிகள் போன்றவை விற்பனை செய்யும் கடை.

காலை நேரம் . கடையில் இரண்டு சிப்பந்திகள், வாடிக்கையாளர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.

மணி பதினொன்று . ஒரு நடுத்தர வயது மனிதர் கடைக்குள் நுழைந்தார் . நேராக முதல் சிப்பந்தியிடம் சென்றார். “ எனக்கு இரண்டு மணிக் கணினிகள் வேண்டுமே ! டெல் கம்புட்டர் காட்டுங்கள் “

“இதோ சார், இதை பாருங்கள் இது 38,000/- ரூபாய். இது டெல் வாஸ்ட்ரோ 54000/- இது இன்ஸ்பிரான் 2 இன் 1 , 75000/- இந்த மாடல் இன்ஸ்பிரான் 2 இன் 1 வாங்கிக்கோங்க சார், . இதிலே நிறைய அம்சங்கள் இருக்கு, இது வாங்கினா, டிஸ்கௌன்ட் 10 பெர்சென்ட் தரோம்” என்று பொழிந்து தள்ளினார்

“எனக்கு அதெல்லாம் வேண்டாம். அந்த சிம்பிள் மாடல் 38000 /- போதும். அதை செக் பண்ணி இரண்டு பீஸ் கொடுங்க”

சிப்பந்தி விடவில்லை. கஸ்டமரை இன்ஸ்பிரான் வாங்கிக்கொள்ள தொல்லை படுத்தினார் “இந்த மாடல்லே இது இருக்கு சார், அது இருக்கு சார்” என்று.

கஸ்டமர் அதிலெல்லாம் விருப்பம் காட்டவேயில்லை. “எனக்கு தெரியும் எனக்கு அந்த 38000 ரூபாய் மாடல் போதும். வேறே எதுவும் வேண்டாம்!”

சிப்பந்தி கஸ்டமரிடம் “சரி சார், நீங்க இந்த கணினி துணை கருவியை வாங்கிக்கோங்க. மடிகணினி கடின ஷெல். இது ரொம்ப உபயோகமாக இருக்கும், லாப்டாப் கீழே விழுந்தாலும், பாதுகாக்கும் . இதை பாருங்க. இந்த மடி கணினி, மடிக்கும் டேபிள், எங்கே வேணாலும் பயன் படுத்திக்கலாம் . ரொம்ப உபயோகமாக இருக்கும்” என்று அடுக்கி கொண்டே போனார்

கஸ்டமர் வேண்டாம் வேண்டாம் என்று நிராகரிச்சும் விடவேயில்லை.

கடைசியில் கஸ்டமர் கோபப்பட்டு கடையை விட்டு வெளியே வந்து விட்டார், எதுவும் வாங்காமலே .

அந்த சமயம் . கடையிலிருந்து ,இரண்டாவது சிப்பந்தி ஓடி வந்தார். “சார், சார், போகாதீங்க! உங்களுக்கு டெல் 38000 ரூபாய் மாடல் தனனே வேண்டும்?. நான் தரேன் வாங்க சார்”

கஸ்டமர் மீண்டும் கடைக்குள் நுழைந்தார்.

முதல் சிப்பந்தி பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இரண்டாவது சிப்பந்தி, “இது டெல் 38000, ரூபாய் இதுவும் இன்ஸ்பிரான் மாடல் தான் சார். பெஸ்ட் சார். இதிலே நிறைய வசதி இருக்கு, உங்க உபயோகத்திற்கு இது தாரளமா போதும் சார்” என ஐஸ் வைத்து இந்த இரண்டு லாப் டாப்களை விற்று விட்டார். கூடவே, இலவசமாக, இரண்டு லேப்டாப் பையும் கொடுத்தார். கஸ்டமரும் மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்று விட்டார். இனி இந்த கடைக்கு தான் அவர் மீண்டும் வாங்க வருவார்.

***

முதல் சிப்பந்தி , கடையின் மாத சம்பளத்தில் வேலை செய்பவர் . பெரிய பிசினெஸ் பிடித்தால் அவருக்கு இன்சென்டிவ். அதனால், விலை உயர்ந்த பொருளை விற்க நச்சரித்தார். கூடவே உப ககரணங்களை விற்க முயற்சித்தார். அதிலே தான் அவருக்கு கமிஷன் உண்டு. பிசினெஸ் போனா அவருக்கென்ன, வந்தா அவருக்கென்ன?

இரண்டாம் சிப்பந்தி கடை பார்ட்னெர் . கஸ்டமர் அவருக்கு முக்கியம். அதனால், கஸ்டமர் கேட்டதை கொடுத்தார். கஸ்டமர் மீண்டும் வருவதை உறுதிப் படுத்தி கொண்டார்.

The Winner is always part of the answer;
The Loser is always part of the problem.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *