நீதிக்கதை – 1

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 260 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

(காப்பு)

வெண்பா

ஒற்றை விடைய னொளிசே ரிளம்பிறையன்
கற்றைச் சடையன் கனமழுவோன் நெற்றிக்கண்
ஒண்ணுடையான் றேவி யுமையவளே பெற்றெடுத்த
கண்ணுடையா னிக்கதைக்கே காப்பு

(நூற்பெயர்)

வெற்புதனில் வேங்கையினால் மெய்ஞ்ஞான
மும்புகழுஞ்
சொற்கபிலை வாசகத்தைச் சொல்லவே – நற்பினுடன்
பூணார மார்பன் புலித்தோ லுடையழகன்
காணாத கண்ணே கருத்து

(நூல்)

உத்திரா பூமியிலே காம்பீலி நாட்டிலே செங்கை யாத்துக்கும் வட கரையிலே தெய்வநாயகபுர மென்னும் ஒரு அக்கிராகர முண்டு. அந்த அக்கிராகரத்திலே குடிவிளங்கினா னென்குற ஆயன் மேய்க்குற பசுக்கள் நானூறு முன்னூறுண்டு. அந்தப் பசுக்களுடைய பேர்களென்ன வென்றால் பச்சை வல்லியென்றும், முத்துவல்லியென்றும், நீலவல்லி யென்றும், வச்சிரவல்லியென்றும், வயிடூரியவல்லியென்றும், வல்லியென்றும், கோமேதகவல்லியென்றும், மாணிக்கவல்லி யென்றும், மரகதவல்லியென்றும், நாகவல்லி யென்றும், சிவனேசவல்லியென்றும், குங்குமவல்லியென்றும், அபிராமி யென்றும், ஆனந்தாளென்றும், ஆதிசக்தியென்றும், அற்புத வல்லியென்றும், வந்தவினை தீர்த்தாளென்றும், தீராத வினைதீர்த்தாளென்றும், வாழவந்தவளென்றும் அன்ன பூரணியென்றும், சிவகாமியென்றும், நாரணியென்றும், ஆரணியென்றும் காரணியென்றும், அரிசகோதரியென்றும், கமலையென்றும், விமலையென்றும், பொறுமைபொறுத்தா ளென்றும், பிழைபொறுத்தாளென்றும், பாகம்பிரியா ளென்றும், பரஞ்சோதியென்றும், பசுபதியென்றும், பராசக்தி யென்றும், சிவசக்தியென்றும், உண்ணாமுலையென்றும், அன்புடையாளென்றும், பஞ்சவர்ணியென்றும், சவுந்தரி. யென்றும், கலிதீர்த்தாளென்றும்,பெரியநாயகி யென்றும், மங்கைநாயகியென்றும், காவேரியென்றும், கோதாவரியென்றும், கன்னியாகுமரியென்றும், திருநீல வேணியென்றும், தாம்பரவேணியென்றும், துரந்தரி யென்றும், நிரந்தரி யென்றும், திரிசூலியென்றும், கௌரியென்றும், புரந்தகி யென்றும், சோமகேசரியென்றும், சடாதரியென்றும், வர்தனி யென்றும், மரகதவல்லியென்றும், மகாதேவியென்றும், அகிலாண்டநாயகியென்றும், நல்ல நாயகியென்றும், இரட்சிக்கவந்தாளென்றும், அமிர்த வல்லியென்றும், அகிலாண்டமென்றும், ஆதிசக்தியென்றும், கமலவல்லியென்றும், தெய்வநாயகியென்றும், வடிவுடையா ளென்றும், கௌகரியென்றும், காமாஷியென்றும், காவேரி யென்றும், கோதாவேரியென்றும், சரஸ்வதி யென்றும், கிருஷ்ணவேணி யென்றும், நாராயணி யென்றும், காள மேகமென்றும், கோமளவல்லியென்றும், வச்சிர மென்றும், முத்துநாயகி யென்றும், கைலாமென்றும், வள்ளியம்மை யென்றும், தெய்வநாயகியென்றும், பெருந்தேவியென்றும், முத்துகுலுக்கியென்றும், பெருந்தலைச்சியென்றும், சூடிக் குடுத்தாளென்றும், சிவகாமி யென்றும், மீனாஷியென்றும், கனகவல்லியென்றும், மங்கைநாயகியென்றும், சுந்தர மென்றும், மோகாம்புரியென்றும், முத்தம்மாளென்றும், மதுரநாயகமென்றும், தாண்டாயி யென்றும், பவழவல்லி யென்றும், பத்திரகாளி யென்றும், உண்ணாமுலை யென்று தயிலம்மை யென்றும், மயிலம்மையென்றும், மகாலட்சுமி யென்றும், பொன்னம்மை யென்றும், பூமாலை யென்றும், புண்ணியகோடியென்றும்,பூம (ஈ) தேவி யென்றும்,நடுநாயக மென்றும், துரோபனாத ருக்குமணி யென்றும், சத்தியபாமை யென்றும், காமகோடி யென்றும், அன்னநடையா ளென்றும், ஆகாச கெங்கையென்றும், அருந்துதி யென்றும், அழகம்மை யென்றும், அதிரூபவல்லி யென்றும், சீதாங்கனியென்றும், செல்லியம்மை யென்றும், செண்பகவல்லியென்றும் செந்தாமரையென்றும், செகசால் மென்றும், பூமடந்தை யென்றும், (தி)ருமலைச்சியென்றும், குழந்தைச்சியென்றும், குடப்பாலழகியென்றும், குப்பாயி யென்றும், கூனியென்றும், முத்துவல்லி யென்றும், பவழவல்லி யென்றும், ஆனந்தவல்லி யென்றும், மலைமருந்தென்றும், மாணிக்கத் தாவடமென்றும், மகாமேரு வென்றும், மாஞ்சோலை யென்றும், மாங்கணி யென்றும், (முத்)துத் தாவடமென்றும், (வ)ஞ்சிக் கொடியா ளென்றும், (ப)ச்சை நிறத்தா ளென்றும், பால் குடமென்றும், யிரிசம்மை யென்றும், குயிலம்மா ளென்றும், தங்கம்மை யென்றும், தாளாண்மை யென்றும், பூலோகமென்றும், சாலோக மென்றும், பூவல்லியென்றும், சர்க்கரையென்றும், தாமோதரி யென்றும், தர்ம தேவதையென்றும், சகலகலையென்றும், சருவலோகமென் றும், பூவல்லி யென்றும், சர்க்கரை யென்றும், தாமோதரி யென்றும், சருவலோக மென்றும், பரமேஸ்வரியென்றும், திரிசூலி யென்றும், சங்கரி யென்றும், உமையவ ளென்றும், அலங்கிருத மென்றும், அல்லி யரசாணியென்றும், சூலபாணியென்றும், சுப்பி யென்றும், சுரமடந்தையென்றும், அம்பிகை யென்றும், வசந்தமென்றும், வாடாமல்லிகை யென்றும், தேசமாரி யென்றும், பொன்னு மாரி யென்றும், முத்துமாரி யென்றும், வல்லபை யென்றும், வண்ணச் சுடராயியென்றும், திருச் சடையாளென்றும், சிலம் பாயி யென்றும், செகசோதி யென்றும், வீர வசந்த மென்றும், வீர கோலா கலி யென்றும், மெல்லியா ளென்றும், காளமேக மென்றும், திரிலோக மென்றும், யிளங்கொடியா ளென்றும், உத்தமி யென்றும், அமராவதி யென்றும், அனந்தசயன மென்றும், பரிமள மென்றும், அலமேலு மங்கை யென்றும், அஷ்ட லஷ்சுமி யென்றும், தனலஷ்சுமி யென்றும், சாம்பிராச்சிய லஷ்சுமி யென்றும், கலியாணி யென்றும், நேரிழையா ளென்றும், மாதங்கி யென்றும், தில்லை நாயகி யென்றும், நாகம்மை யென்றும், விசைய லஷ்சுமி யென்றும், வீர லஷ்சுமி யென்றும், கற்பூர மென்றும், காந்தாரி யென்றும், கோகனக மென்றும், பார்வதி யென்றும், காளி யென்றும், குந்தமாதேவி யென்றும், கும்பகோண மென்றும், வேடச்சி யென்றும், கன்னிகை யென்றும், அருந்தாமலை யென்றும், தர்மதேவதை யென்றும், பிழை பொறுத்தா ளென்றும், திருவேங்கி மென்றும், விசாலாஷி மென்றும், விசாலாஷி யென்றும், பாகீரதி யென்றும், சுந்தரி யென்றும், சவுந்தரி யென்றும், பரமாநந்தி யென்றும், மலை முறித்தா ளென்றும், பூங்கோதை யென்றும், பூங்காவன மென்றும், துர்க்கையம்மை யென்றும், காந்தாரி யென்றும், நற்கீரை யென்றும், பெண்ணைக்கரை யென்றும், கெங்கைக் கரை- யென்றும், தீர்த்த(க்) குளமென்றும், தீர்த்தமலை யென்றும், வேங்கை மலை யென்றும், கெருடக் கொடியா ளென்றும், காமதேனு வென்றும், கற்பக மென்றும், பிள்ளை வளத்தா ளென்றும், புலிமுட்டி யென்றும், கண்ணாட்டி யென்றும், யென்றும், தவளரூபி யென்றும், மயிலை நிறத்தா ளென்றும், மானுடப் பிராவென்றும், குடமுருட்டி யென்றும், குண்டிக் கலங்கி யென்றும், மண்டல மென்றும், சடைகோப மென்றும், பரதேசி யென்றும், திருக்கோள மென்றும், யிளைய பெருமாளென்றும், வெள்ளைத் தரவட மென்றும், ஆதிமூல மென்றும், ஓடுகாலி யென்றும், கபுலை யென்றும்,இப்படி அநேகம் பசுக்களுண்டு.

அந்தப் பசுக்களை யெல்லாம் குடிவிளங்கினானெக்குற ஆயன் ஓட்டிப்போய் நீர்ச்சுரப்பும் புல்லுமுள்ள விடத்திலே ஓட்டிப்போய் மேய்த்து, மூன்று நேரமும் தண்ணீர் கட்டி, வயறு நிரம்பினவுடனே, காத்தொதுக்கமான மலையடி வாரத்திலே கிடையுங்கட்டி, கூலியுள்ளதும் பத்திக்கொண்டு, யிந்தப் பசுக்களுக்கு ஒரு நாள் சிலவூ வந்தால், தன்னுடம்பிலே பார்த்து பரிகரித்துக்கொண்டு, யிப்படி நடக்குற நாளையிலே,

ஒரு நாள், அந்த ஆயன், ஒரு கடுவெளியிலே, மேச்சலுள்ளவிடத்திலே பசுக்களையெல்லாம் ஓட்டிப்போய் மேயவிட்டு தானொரு மரத்தின் கீழே நிழலுக்கு யிருந்தான். அந்த வேளையிலே பசுக்களெல்லாம் முகமிட்ட வாக்கிலே போய் மேயச்சே, அதிலேயோரு சுபிலை யென்குற காராம் பசுவும் தன்னினத்தை விட்டு, பிரிந்து சில தூரம் செடியும் புல்லுமுள்ள இடத்திலே போய் மேய்ந்தது.

அந்த வேளையிலே, ஒரு மிருகேந்திரன் யென்குற வேங்கைப்புலி, முன்னெட்டு நாளாய் யிரை கிடையாமல் எங்கும் அலைந்து திரியா விடமெல்லாம் திரிந்து, நாவறண்டு, பசவாய்க் கொண்டு, மகா பசி தாகத்துடனே வரச்சே, யிந்த கபிலை யென்குற காராம்பசுவும் மணியாடுகுற சத்தங்கேட்டு வந்து பார்த்து, பதுங்கி, பசுவைக்கண்டு யின்னைக்கி யிரை கிடைத்துதென்று கடைவாயை நக்கி, வாலை முறுக்கி, தண்டையடித்து, திக்கெனப் பாய்ந்தது.

யிந்த மாத்திரத்திலே பசுவானது பயந்து, நினை வழிந்து, நடுநடிங்கு, மெய் கலங்கி, முழிபிரண்டு, மனந்தடு மாறி, சரீரம் வேர்த்து, கண்ணுகுன்னி, கோசல கோமியம் விட்டு சுரணையில்லாமல், விழுந்தது. விழுந்த பசுவை மிருகேந்திரன் வேங்கைப்புலி, ஒரு மலை முழைஞ்சுக்குள்ளே கொண்டு போச்சுது.

அப்போது, அந்தப் பசுவுக்குக் களை தெளிந்து, நினைவுவந்து, கண்ணை முழித்துப்பார்த்து, உடனே பயம்பிடித்து, ஓகோ வேங்கைப்புலியின் கையிலே அகப் பட்டுக் கொண்டோமென்று, காலும் காலும் உடம்பும் நடுக்க மெடுத்துக் கொண்டு, அய்யோ சிவனேயென்று, விசனப்பட்டு, கண்ணீர் சொரிந்து பெருமூச்சு விட்டுது. அது அறிந்து அப்போது வேங்கைப்புலி, பசுவை(ப்)பார்த்து(ச்) சொல்லும், “யேன் கபிலாய், நீ பெருமூச்சு விட்டத்தினாலே ஆகுற காரியமென்னா? இனிமேல் உன்னை விட்டுவிடப் போறேனோ” வென்று மிருகேந்திரன் சொல்ல, அது கேட்டு கபிலையான காராம் பசுவும் சொல்லும், வாருமையா மிருகேந்திரனே, நானொரு வசனம் சொல்லுகிறேன்; நான் சாகுறேனென்று விசனப்படவில்லை. இந்தச் சரீரம் நீரின் மேல் குமிழி, நிலையத்த வாழ்வு நிச்சயமில்லை. நிலத்தி லெழுந்த பூண்டு நிலத்திலே மாயவேணும் அல்லாமல் (என்றும்) நிற்கப் போறதில்லை. யிந்த சரீரம், அநித்திய மல்லாமல் நிச்சய மல்லவே. அதுவுமல்லாமல் கோமாரி, வெக்கை, வெதுப்பு, குண்ணோவு, சுழல்நோவு, மின்னடைப்பான், பின்னடைப்பான், பெருவலி, தேளேரி, தொண்டை யடைப்பான், யிப்படிப்பட்ட நோவுகளிலே சாகாமல், உமக்கு யிரையானது நான் செய்த புண்ணியம். அதுவுமல்லாமல், நான் சாகுறேனென்று விதனப்பட இல்லை. நான் அநேக நாளாய் மலடாயிருந்து என்னோடொத்த பசுக்கள் யீன்றத்தைக்கண்டு, ஏக்கத்திருந்து, கண்டகண்ட கோவிலெல்லாம் கும்பிட்டு நின்று, தெய்வ கடாச்சத்தினாலே யீன்றதொரு செங்கன்னுண்டு.

அது, யின்னம் புல்லுபிடித்து மேயவறியாது. நான் வருமளவும் வழிபார்த்துக் கொண்டு யிருக்கும் அதுக்குத் துணையில்லையென்குற விசனமல்லாமல் வேறே இல்லை. அகோ வாரும் மிருகேந்திரனே, உன் கையிலே அகப்பட்ட நான், யினிமேல் தப்பி(ப்) பிழைக்கப் போறேனோ? இந்த எண்ணம் கைவிட்டேன். யிதினாலே ஆசையில்லை யென்று யெண்ணிவிட்டேன். யென் சுன்னுக்கு ஊட்டக் குடாமல் வந்துவிட்டேன். நான்போய் கன்னுக்கு ஊட்டக்கடுத்து, புத்திமதிகளுஞ் சொல்லி, கூட மேயுற பசுக்களண்டே காட்டிக்குடுத்து வருகுறேன். அந்தப்படிக்கித் திருவிளம் பத்தினால் உமக்கு அனேகம் புண்ணிய முண்டு, துணிந்து அனுப்புமையா, ஒரு நாழிகைக்குள்ளே வருகுறேன். வராமல் நின்னேனேயாகில், நன்றி மறந்தவன், செய்நன்றி குன்றி னவன், பொய் சொன்னவன், பொய் சாட்சி சொன்னவன், குருநிந்தை செய்தவன், அடைக்கலங் கைவிட்டவன், மண்ணோரஞ் சொன்னவன், குலைபாதகம் பண்ணினவன், பூதானங் கோதானம் விரதங்களை மாத்தினவன், நம்பின பேரைக் கெடுத்தவன், பொல்லாதவரைப்பத்தி நல்லோரைத் தூஷணித்தவன், தெய்வத் துரோகம் பண்ணினவன், பிராமணரைப் பழித்தவன், அற்பரை ஆளாக்கினவன், வஞ்சனை நிந்தணை பண்ணினவன், கறந்த பாலைக் காலா லுதைத்தவன், விற்கும் பண்டத்தை விலையைக் குறைத்தவன், முறைபிசகினவன், அம்மணமாக(த்) தண்ணீரில் குளித்தவன். அக்கிரகாரங்களை யிடித்து வைத்தவன், குருத்துரோகம் பண்ணினவன்; சாமத் துரோகம் பண்ணினவன்; விசுவாச பாதகம் பண்ணினவன்; குலைபாதகம் பண்ணிணவன்; தன்னுட இனத்தாரை விட்டு, பிறத்தியாரைத் தாங்கினவன்; கூலி குறைத்தவன், குறை மரக்கால் வைத்தவன், அங்காடிக் கூடையை அதிரவிலைக்கு யிட்டவன், பங்கில்லாப் பங்கைப் பதறி யெடுத்தவன், தாய் தகப்பனை நிந்தை பண்ணினவன், தனி வாழமரத்தைத் தரித்தவன், தெய்வதாயம், பிரம தாயம், மடாலயங்களைப் பிடிங்கினவன். அகுதி பரதேசிகளை அடித்துப் பறித்தவன், அய்யம் பிசை விலக்கினவன், ஞானிகளைப் பழித்தவன், ஓதிவைத்த வாத்தியார் கூலியின்று நாளையென்று சொன்னவன்; வண்ணான், நாவிதன், மருத்துவச்சி. பண்டிதன், இவர்கள் கூலி குடாதவன், படுகுழி பாச்சினவன், பெண்சாதியைக் குதிரைமேலேற வைத்து, பெத்ததாய் தலைமேலே சுமையை வைத்தவன், நடு(க்)காட்டிலே பயங் காட்டினவன், மாறாட்டம் பேசினவன், சிவபத்தாளை யுதாசினம் சொன்னவன், நல்லோரை மனங்கண்ண கற்பு டைய மாதரைக் கலந்தவன், யிப்படிப்பட்ட துரோகிகளுக்கு யெந்த நரகமுண்டோ, அந்த நரகத்திலே போகக் கடவோனன்று கபிலை சொல்ல, மிருகேந்திரன் கேட்டு, மனமிரக்கமாய், யிந்தக் கபிலை யென்னும் காராம் பசுவினிட அறிவும் ஞானத்தையும் மனதிலேதானே எண்ணிக்கொண்டு மகா சந்தோஷப்பட்டு யிதுவந்தாலும் நல்லது வரா விட்டாலும் நல்லதுயென்று மனதிலெண்ணி, கபிலையைப் பார்த்துச் சொல்லும்,

“வாராய் கபிலாய் யெனக்கோவென்றால் பசி யின்ன மட்டென்று சொல்லி முடியாது. நீ கடுகப் போய் உன்னு டைய கன்னுக்கு ஊட்டக்குடுத்து, சீக்கிரமாக ஒரு நாழிகை யிலே திரும்பி வரவே(ண்டு)மென்று அனுப்ப.

அப்போது, அந்த(க்) கபிலையும் அனுப்பிவித்துக் யென் செல்வமே, கொண்டு தன்னினத்துடனே கூடாமல் யென் கண்மணியே, ஒன்றுமில்லாலை, நான் கானகமான காட்டுக்குள்ளே போய் மேஞ்சேன், அந்த முள்ளுக்கிழுத்து தென்று சொல்லி, கண்ணை அணைத்துக்கொண்டு,யிப்படி(ப்) புத்தியுள்ள கண்ணை முட்டமுடியவிழ்க்க(ப்) பாக்கிய மத்து விட்டெதென்று திக்கித்து அழுதுகொண்டு நின்னது.

அப்போ கன்னும் தாய்முகத்தைப் பார்த்து, “தாயே யெனக்கு உள்ளவாறு சொல்லுமென்று கேழ்க்க, ஆனால், கேளாய் மகனே, நான் மேயப்போன விடத்திலே ஒரு மிருகேந்திரனான வேங்கைப் புலியின் கையிலே அகப்பட்டுக் கொண்டு அது என்னைக் கொல்லப்போற சமயத்திலே உனக்கு ஊட்டக் குடுத்து வருகிறேனென்று அவருக்கு சத்திய பிரமாணிக்கம் செய்துகுடுத்து வந்தேன்.

அந்தப்படிக்கி, அவருக்குச் சத்தியந் தப்பாமல் நான் இரையாகப் போகவேணும். போகவேணும். நீ புத்தியுண்டாய் நீ கன்னு களுடனே கூடப்போய் மேயாது அமரிக்கையாய் நீருக்குள்ளே விழுந்துவிடாதே. அந்திக்கி முன்னே வீட்டே போய் சேரு; பெரிய கன்னுகளுடனே தலையிட்டுக் கொள்ளாத, ஓடியாடி தெருவிலே காலை முறித்துக்கொள்ளாதே; யுலர்ந்த நெல்லைத் தின்னாதே, சிறு கயறு கொண்டு கட்டினால் அறுத்துக்கொள்ளாதே, ஒருவன் கொல்லையிலே மேயாதே, கண்டால் சிறுபிள்ளைகளைக் பாயாதே, ஆமென்றால் அந்தமட்டிலே நில்லு, தீயென்றபோதே போ, என்னை நினைந்து விசாரப்படாமல் யிருமென்று யிப்படியாகக் கன்னுக்குப் புத்துமதிகளுஞ் சொல்லி, கூட மேயுற பசுக் களண்டையிலே கன்னை அழைத்துக்கொண்டு போய், யேதென்று சொல்லும்,

“யென் கூட்டமே, யென் சாதியாரே கேளுங்கோள். நான் மேயப்போன விடத்திலே ஒரு மிருகேந்திரன் கையிலே அகப்பட்டு, அது யென்னைக் கொல்லவருமளவில் யென்னு அதுக டைய கன்னுக்கு ஊட்டக்குடுத்து வருகிறேனென்று அவருக்குச் சத்தியபிரமாணிக்கம் பண்ணிக் குடுத்து வந்தேன். ஆனபடி யினாலே அவருக்கு(ச்) சத்தியந் தப்பாமல் யிரையாகப் போக வேணும்.” நீங்க ளென்னுடைய கன்னைக் கூட்டிக்கொண்டு மேயப்போறது, மூன்று நேரமுந் தண்ணீர் குடிக்கச் சொல்லியும் யிப்படியாகக் காப்பாத்திக் கொண்டு, உங்கள டைக்கலமாக வைத்துக் கொண்டு, அப்ப நான் பெத்த தெல்லாம் பொய், யிப்ப நீங்க பெத்த தென்று சொல்லி, கன்னையுங் காட்டிக் கொடுத்து, பசுவும் நடக்க அப்போ கன்னும் பசுவுக்கு முன்னே துள்ளிக் குதித்தோடி,”யேனம் மாள், சிவசிவா, நானுன்னை விட்டு ஒருநாழிகை நிற்குற தில்லை; என்னையிரையாகக் கொள்ளுகிற மிருகேந்திரன் யென்னையும் யிரையாகக் கொள்ளாரோ வென்று சொல்லி, தாய்கூடக் கன்னும் நடக்க, அப்போ பசுக்களெல்லாம் கன விசாரப்பட்டு, நீ போகவேணுமோ கபிலா யென்று கேட்க, அப்போ கபிலை தன்னுட யினத்தைப் பார்த்து, நகைத்து, வாருங்கோள் யென் சாதியாரே யிந்த சரீரத்தை சத்தியந் தப்பினால் புண்ணிய மறியாத மிருகமென்று சொல்லு வார்கள் அப்படி(ச்) சொன்னால் நம்முட சாதியாருக் கெல் லாம் யீனமல்லவோ, நீங்களொன்றுஞ் சொல்ல வேண்டாம் யென்று கபிலை சொல்லியென்னுடைய கன்னை நன்னாய் வளர்த்துக் கொள்ளுங்கோள் யென்றுசொல்லி நடக்க,

அப்போ, இனத்தாருங் கன்னை நிறுத்திக் கொண்டார் கள். அதுக்குமேல் பசுவும் நேரமாச்சுதென்று சீக்கிரத்துக்குப் பிறப்பட்டு வந்து மிருகேந்திரன் யிருக்குற மலைக் குகைக் குள்ளே பசுவும் போய்ப் புகுந்து, அய்யா மிருகேந்திரரே நான் வருந்தனிலும் வெகு பசிதாகத்துடனே யிருந்தீரே சுவாமி, அடியேன் பேரிலே கோபிச்சுக் கொள்ளவேண்டாம்; யினியாகிலுங் கால தாமிஷம் பண்ணாமல், பசியாரிவிடு மென்று கபிலை சொல்ல, அந்த வசனத்தைக் வசனத்தைக் கேட்டு மிருகேந்திரன் வெகு சந்தோஷப்பட்டு யிப்படி விவேகத்தையும் ஞானத்தையுங் கண்டதில்லை யென்று. கபிலையைப் பார்த்து மிருகேந்திரன் சொல்லும் வாராய் கபிலாய், யின்னமொருவிடத்திலே நான் யிரைதேடிக் கொள்ளுகிறேன், நீ சத்தியந் தப்பாமல் வந்ததே போதும், நீ திரும்பிப் போய், உன்னுட கன்னும் நீயும் யினத்துடனே கூடி, சுகத்திலே இருந்து, வாழுங்கோளென்று மிருகேந்திரன் சொல்ல,

அப்போ, கபிலையும் பார்த்து, வாருமையா, மிருகேந் திரனே, நான் வரத் தேசகால மாச்சுதெனறு கோபிச்சுக் கொள்ளுகுறீரோ? யினி நான் திரும்பிப் போனால் என்னுடைய இனத்தே(ா) ரெல்லாம், யித்தினைப் பொய் சொல்லி சாகுறேனென்று நாடகம் அடித்துக் கொண்டு அவடத்துக்குப் போகாமல் நடுவழியிலேதானே பயந்து வந்து விட்டாயென்று யேசுவார்கள். ஓய், புண்ணியவானே, உம் முடைய பசி தீர யென்னுடைய ரத்தத்தையும் மாங்கிஷத் தையும் என்னுடைய குருதியையும் நிணமும் தின்னு, பசியாறினால் உமக்கு மகா கீர்த்தியுண்டு, புகழுமுண்டாம் யெனக்குக் கெதிமோக்ஷ முண்டு அய்யனேயென்று, கபிலை சொல்ல, அப்போ மிருகேந்திரன் கபிலையைப் பார்த்துச் சொல்லும், வாராய் கபிலாய், உன்னை முன்னமே நான் திங்குறதில்லை யென்று சொல்லி இருக்கு, யினிமேல் உன்னைப் பொசிக்குறதில்லை யென்று மிருகேந்திரன் சொல்ல, யிப்படி பசுவும் புலியும் ஒன்றுக்கொன்று போராடி. நிற்குந்தறவாயிலே,

கயிலாயத்திலே இருந்து பரமேஸ்வரரும் பார்வதா தேவியும் ரிஷப வாகனத்தின் பேரில் யேறிக்கொண்டார்கள். மகாவிஷ்ணுவும் லக்ஷ்மி தேவியும் கெருடவாகனத்தின் பேரிலேறிக்கொண்டார்கள். விக்கினே(ஸ்)வரரும் மூஷிக வாகனத்தின் பேரிலேறிக் கொண்டார்கள். யிப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் சித்தர்களுந் தபோதனர்களும் சின்னர, கிம்புருடர், கெருட கந்துருவர், தும்புரு நாரதர், அஷ்டதிக்குப் பாலகர் யிப்படி(ச்) சகலருமாக(க்) கூடி, தேவ துந்துமி முழங்க, தேவர்கள் புஷ்ப மாரி பொழிய, யிப்படி யிந்த மகா தேவராகிய பரமேஸ்வரர் வந்து, பசுவுக்கும், புலிக்கும், கன்னுக்கும், ஆயனுக்கும் காக்ஷி கொடுத்து, கயிலாய கிரிக்கி அழைத்துக்கொண்டு போனார்கள்.

இந்தக் கதையைப் படித்தபேரும், கேட்டபேரும், யெழுதினபேரும், சகல சவுபாக்கியத்தையும் அனுபவித்து, பின்பு கயிலாச பதவியை அடைவார்க ளென்றவாறு.

திருச்சிற்றம்பலம்.

– தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வரிசை எண்: 73, நீதிக் கதைகள், பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ, (தமிழ்), எம்.ஏ, (ஆங்.), பி.எட், டிப்.வ.மொ, பிஎச்டி, காப்பாட்சியர், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை, தமிழ்நாடு அரசு, 1992

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *