நரகாசுரா

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 20,006 
 

பூமியில் எய்திய அம்புகளை விழுங்கிக் கொண்டிருந்தான் கதிரவன். பச்சைப் பசேல் மரங்களும்இ செடிகளும் இனிய தென்றல் காற்றிற்கு பக்க பலமாயிருந்த வேளையில் குழந்தைகளின் குதூகல விளையாட்டும்இ பெரியவர்களின் நடைபயிற்சியும் மனம் துள்ளும் மலர்களின் வாசனையும்இ அந்தப் பூங்காவின் பாரம்பரியத்தைக் காட்டியது. சில சில்மிஷ ஜோடிகளும் இதற்கு விதிவிலக்கல்ல என காட்டியது.

பூங்கா பெஞ்சியில் ரமேஷின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள்இ திவ்யா. “அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப் போல்அவள் கண்களில் பயம் தொற்றிக்கொண்டது. நித்தம் இருபதுக்கும் மேற்பட்டு கைபேசியில் அழைக்கும் ரமேஷ்இ ஒரு வாரமாக திவ்யாவை சந்திக்க வரவேயில்லை. தகவல் எதுவுமே இல்லை. இன்றாவது வருவானா? என மனம் ஏங்கியது. எல்லாவற்றிற்கும் காரணம் ‘அது’ தள்ளிப்போனதுதான். மருந்துக்கடையில் விற்கும் சிறுநீரகப் பரிசோதனையில் ஊர்ஜிதம் ஆகிவிட்டது.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட திவ்யா உதவித்தொகைப் பெற்று பள்ளியிலேயே தங்கி பள்ளி இறுதிவரை படித்தாள். பின் படிப்பினைத் தொடர முடியாத சூழ்நிலையில், ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யும் கடையில் “சேல்ஸ் கேர்ள்” வேலை கிடைக்க, மகளிர் விடுதியில் தங்கியிருந்தாள். முதன்முதலில் ரமேஷினை தான் வேலைபார்க்கும் துணிக்கடையில் சந்திக்க நேர, நட்பு தொடர, காதல் மலர பின் காமமும் ஒரு சேர இன்று கருஉருவாகிவிட்டது கழுத்தில் தாலி இல்லாமல்! கைபேசியில் தொடர்பு கொண்டால் “நோ ரெஸ்பாண்ஸ்” என தானியங்கி குரல்கேட்ட திவ்யா வெதும்பினாள். மலர்களில் மது இருக்கும்வரை தான் வண்டுகள் மொய்க்கும். பின் வீதியில் மிதிபட வேண்டியதுதான். எனது நிலைமையும் இதுதானா? காதல் எனும் வலையில் சிக்கிக் கொண்ட இளம்பெண்களின் வரிசையில் நானும் உண்டா?அவன் கொடுத்த தகவல் அனைத்தும் பொய்யாக உள்ளதே! என திவ்யாவின் மனத்தில் ஆயிரம் கேள்விக்கணைகள் தொடுக்க பூங்கா வாட்ச்மேன் விசில் சப்தம் கொடுக்க சற்றே கைக்கடிகாரம் இரவு மணி எட்டைக்காண்பிக்க விடுதிக்குப் பயணித்தாள்.

“வேலை பார்க்கும் மகளிர் விடுதி” என்ற போர்டு நிலவின் தாக்கத்தில் பளிச்சிட்டது. விடுதியில் நுழைந்து “உள்ளே –வெளியே” எனும் ரிஜிஸ்தரில் தன் பெயர் எழுதிய பக்கத்தில் விடுதியில் நுழைந்த நேரம் பதிவு செய்துவிட்டு அறைக்குத் திரும்ப திவ்யா யத்தனித்த போது இ வா! திவ்யா! எனக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு என்று விடுதித்தோழி வசந்தி கையில் இனிப்பினைக் கொடுக்க, வாங்கிக் கொண்டு அகமகிழ்ந்தாள். தனக்கும் தாய் என்ற பதவி உயர்வு கிடைத்திருக்கிறது என கூறமுடியாமல் தவித்தாள். ரூமில் சகவிடுதித் தோழிகள் துயில் கொண்டிருக்க திவ்யா மட்டும் சன்னலருகில் வந்து நின்றாள். வெள்ளைத் தாமரையில் மாசில் வீணையை மீட்டுக் கொண்டிருந்தாள் சரஸ்வதி தேவி இ நாட்காட்டியில்! மணி சரியாக 11.20. எங்கும் இருட்டு. ஆங்காங்கே விடுதியைச் சுற்றி சிறு குழல்விளக்குகள் பளிச்சிட்டது. மாசுடன் இனி எப்படி வாழ்க்கையைத் தொடர்வது? அவள் கண்கள் உறக்கம் கொள்ள மறுத்தது.

விடிந்தால் தீபாவளி ! எங்கும் மக்கள் கூட்ட நெரிசல்! மூக்கைத் துளைக்கும் மைசூர்பாகு வாசனையுடன் அடையார் பேக்கரியின் வாசலில் நின்றிருந்த கிருஷ்ணப்பிரேமா தன் மொபைலில் கார்த்திக்கிற்கு மிஸ்டு கால் கொடுக்க சிறிது நேரத்திற்கெல்லாம் கைபேசி ஒலிக்க எதிர்முனையில் கார்த்திக்.

ஹலோ! கிருஷ்ணா! சிக்னல்கிட்டே வந்துட்டேன். அங்கேயே இரு!

அதோ சற்றே தூரத்தில் கார்த்திக் தனது மஞ்சள் நிற பல்சர் வண்டியில் கிருஷ்ணாவை
ஏற்றிக் கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் வேகத்தை அதிகரித்தான்.

என்ன கார்த்திக் ! மணி 8 ஆச்சு இனிமேல் எப்படி மகாபலிபுரம் போறது?

கிருஷ்ணா! கமான்!கூல்யா! டென்ஷன் ஆகாத.நாளையோட நாம காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப் போறது! இந்த தீபாவளியை ஜாலியா என்ஜாய் பண்ணுவோம்!

ஊர்லேர்ந்து அப்பா லெட்டர் போட்டிருக்கார். நல்ல வரனா அமைஞ்சுதுன்னா வரத் தையிலேயெ முடிச்சிறலாம்ன்றாரு. எனக்கென்னவோ பயமாயிருக்கு கார்த்திக். இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு… என இழுக்க

இதபாரு கிருஷ்ணா! நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே! நானே நேர்ல உங்க வீட்டுக்கு வந்து பேசறேன். கொஞ்சம் பொறுமையாயிரு! என சமாதானப்படுத்த ஸ்பீடு பிரேக் வர கிருஷ்ணா அவன் தோளைப்பற்றினாள்.

அடுத்த சில மணிநேரங்களில் பல்லவர்களின் சிற்ப கலைக்கு உதாரணமான மகாபலிபுரத்தை அடைந்தார்கள். எல்லையில்லா வானத்தில் வண்ண வண்ண மயமான பட்டாசுகள் அரங்கேறியது. சுற்றுலாப் பயணிகள் ரிசார்ட்ஸில் ஐக்கியமாயிருந்தார்கள். நிலவின் ஒளி மங்கியிருந்தது. எங்கும் நிசப்தம். கடற்கரையில் காற்று வாங்க கிருஷ்ணாவும் கார்த்திக்கும் உட்காரஇ எதிர்ப்பட்;ட காவலாளி இந்நேரத்துக்கெல்லாம் இந்த பக்கம் உட்காரக்கூடாது என விரட்ட தலைமறைந்தபின் கடற்கரைக் காற்றை வாங்கிக் கொண்டிருந்தார்கள். காதலுக்கு பேச்சுதான் இணக்கத்தை ஏற்படுத்தும் என உணர்ந்திருந்தார்கள். அருகில்இ மடியில் என பலவித பரிமாணங்களைக் கொண்டிருந்தார்கள். நித்திரையில் இருவரும் அந்த அலைகளின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே கடற்கரையில் கால் பதிக்க சற்றே அவர்களை நீர் வந்து தழுவிக் கொண்டது.

எதிர்பாராதவிதமாய் கிருஷ்ணாவின் கண்கள் சிவந்து கொலை வெறித்தனம் ஓடியது. அவளின் கைகள் கார்த்திக்கை கடலினில் தள்ளி விடஇ கார்த்திக்கோ கிருஷ்ணா! கிருஷ்ணா! என கதற அவனின் தலையை கடலுக்குள் அமுக்கினாள். அவனின் மூச்சுத்திணற, ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிக் கொண்டே மூச்சு நின்று போன அந்த சடலத்தை தள்ளிவிட்டு கரையோரம் வெறித்துப்பார்த்தாள்.

திவ்யா! என்னை மன்னிச்சிடு ! உன் தற்கொலைக்கு இவன்தானே காரணம்.! உயிரோடு இருக்கும்போதே ஒரு வார்த்தை உன்உயிர்த்தோழி என்கிட்ட சொல்லியிருந்தீனா…………. அந்தக் கடிதமும் , போட்டோவும் போலிசுக்கு முன் நான் பத்திரப்படுத்தினேன் இப்போ , உன் காதலனை உன்கிட்டே சேர்த்துட்டேன். உனக்கு ரமேஷாக, எனக்கு கார்த்திக்காக இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையில் அவன் விளையாடினானோ? விளையாடுவானோ? அதனால்தான் அவனை கொன்னுட்டேன். அந்த நரகாசுரனை அழித்த அதே நன்னாளில் கார்த்திக் எனும் மாஅரக்கனை இந்த கிருஷ்ணா அழித்துவிட்டாள் என வெறித்தனமாக பார்க்க சாட்சியாய் இருந்த கடல் அலைகளும் ஒப்புதல் தெரிவித்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நரகாசுரா

  1. Hallo sister, kathai சூப்பர். Konjam இன்னும் கோர்வையா எழுதிருந்த ஈஸியா புரிந்திருக்கும். இருந்தபோதிலும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *