கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 7,104 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் – 5

அவள் உடனே ”வேணாங்க இந்த டாக்டர் கிட்டேஎல்லாம் போக வேணாங்க. அவர் உடனே இந்த ‘டெஸ்ட் எடு’’அந்த டெஸ்ட்’ எடுன்னு சொல்லி பணத்தைக் கறப்பாருங்க.என்னால் உங்களு க்கு வீண் செலவு வேணாங்க. நான் வரலைங்க டாக்டர் கிட்” என்று பிடிவாதம் பிடித்தாள். ஆனால் சிவலிங்கம் சரோஜா சொனதை ஒத்துக் கொள்ளாமல் “அடம் பிடிக்காதே சரோஜா. டாக்டர் எல்லா ‘டெஸ்ட்டும்’ எடுக்த்துப் பார்க்கட்டும்.அவர் அந்த ‘டெஸ்ட்’ எல்லாம் எடுத்து பார்த்து விட்டு உனக்கு உடம்பு ஒன்னும் இல்லே என்று சொல்லட்டும். அப்போ நான் சும்மா இருந்து வரலாம்.இப்போ என்னுடன் நீ வந்தே ஆகணும்” என்று கண்டிப்பாகச் சொல்லி விடவே சாரோஜா வேறு வழி இல்லா “சரிங்க நான் வரேனு ங்க” என்று சொல்லி விட்டு தன் ரூமுக்குப் போய் புடவை ‘ப்லவுஸை’ எல்லாம் மாத்திக் கொண்டு கணவருடன் ஒரு ஆட்டோவைப் பிடித்து பக்கத்தில் இருந்த டாக்டர் கிட்டே சரோஜாவைக் காட்டினார். டாக்டரிடம் சரோஜா ‘ரெண்டு மூனு நாளா தனக்கு காலையில் எழுந்தரிக்கும் போது அதிகமாக தலை சுத்துது என்றும் இன்னைக்கு கொஞ்சம் அதிகமாக சுத்தவே வந்து இருக்கேன்’ என்றும் சொன்னாள்.உடனே டாகடர் சரோஜாவை ‘ஸ்டெத்’ வச்சி ‘செக்’ அப் பண்ணி விட்டு BPயைப் பார்த்தார்.உடனே டாகடர் “சார், இவங்களுக்கு BP ரொம்ப அதிகமா இருக்கு.நான் இவங்களுக்கு உடனே ECG எடுத்து பார்ககணும்.அப்போ தான் இவங்க உண்மையான உடம்பு நமக்கு தொ¢ய வரும்” என்று சொல்லி விட்டு நர்ஸை கூப்பிட்டு “நர்ஸ்,நீங்க இவங்களை ‘லாப்புக்கு’ அழைச்சுக் கிட்டு போய் இவங்க ‘ ECG எடுத்துக் கிட்டு வாங்க” என்று சொல்லி சரோஜாவை நர்ஸ¤டன் அனுப்பினார். அந்த நர்ஸ¤டன் சிவலிங்கமும் சரோஜா கூட லாப்புக்கு’ப் போய் ECGஐ எடுத்துக் கொண்டு வந்து டாக்டரிடம் காட்டினார்.

ECG ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர்” சாரி, இவங்க ECG ரிப்போர்ட் அவ்வளாக நல்லா இல்லை. இவங்க ளுக்கு BP அதிகமா இருக்கு.அதனால் இவங்க தினமும் நான் எழுதித் தரும் மாத்திரைகளை தவறாமல் ரெண்டு வேளை சாப்பிட்டு விட்டு ரெண்டு வேளையும் நடந்து வர வேண்டும்.இவங்க சாப்பாட்டில் உப்பும் காரமும் கூடவே கூடாது. இவங்க ஊறுகாயை தொடவே கூடாது.எண்ணை பண்டங்கள் கூடவே கூடாது.அப்படி இருந்து வந்தாத் தான் BPஐ நாம ‘கன்ட்ரோலுக்கு’க் கொண்டு வர முடியும்.இவங்களை மூனு மாசம் கழிச்சு மறுபடியும் இங்கே அழைச்சுக் கிட்டு வாங்க.நான் மறுபடியும் ‘ECG டெஸ்ட்’ எடுத்துப் பார்க்கிறேன்.அப்போ தான் அவங்களுக்கு BP லே ‘இம்ப்ரூவ் மென்ட்’ இருக்குதானான்னு தொ¢யும்” என்று ஒரு பெரிய ‘லெக்சரே’கொடுத்து விட்டு தன் ‘·பீஸ¤ம்’, ‘ECG டெஸ்ட்’ ‘சார்ஜும்’ சேர்த்து ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டார். சரோஜா அவர் கேட்ட ரெண்டாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு, கணவனை அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு வரும் போது மருந்துக் கடையில் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.வீட்டுக்கு வந்ததும் வராததும் சரோஜா “பாத்தீங்களா.நான் சொல்லலே.அந்த டாகடர் நம்ம கிட்டே இருந்து ரெண்டாயிரம் ரூபாயை கறந்து விட்டார்.என்னால் உங்களுக்கு இந்த தண்ட செலவு” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.

ஏற்கெனவே கொஞ்சம் அழகாக இருக்கும் கமலா தன்னை இன்னும் அழகு படுத்திக் கொண்டு ஆ·பீஸ் போய் வந்தாள்.தன் ஆ·பீஸில் இருக்கும் எல்லோரிடமும் நன்றாக பழகி வந்தாள்.வேலையிலும் கவனமாக இருந்துக் கொண்டு சீக்கிரமாக மானேஜரின் நன் மதிப்பையும் பெற்று வந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் ரொம்ப ‘போராக’ இருந்ததினால் சிவலிங்கம், சரோஜா, கமலா மூவரும் ‘டைம் பாஸ்’ பண்ண பீச்சுக்கு கிளம்பி போனார்கள்.பீச்சில் அவர்கள் மூவரும் மணலில் உட்கார்ந்துக் கொண்டு அங்கு சந்தோஷமாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.கமலா கொஞ்சம் பசி வந்து விடவே அவள் ”அப்பா நான் போய் அதோ அந்த ப்ஜ்ஜி போடும் அம்மாவிடம் நம் எல்லாருக்கும் சூடா பஜ்ஜி வாங்கி வரேன்’”என்று சொல்லி விட்டு தன் துணி களை தட்டி விட்டு டிரஸ்ஸை சரி செய்துக் கொண்டு எழுந்தாள்.“அம்மாவுக்கு பஜ்ஜி வேணாம் கமலா.வெறுமே வேக வச்ச சுண்டல் மட்டும் வாங்கி வா” என்றார் சிவலிங்கம்.“சரிப்பா” என்று சொல்லி விட்டு பஜ்ஜி கடையை நோக்கிப் போனாள் கமலா.பஜ்ஜி போடும் அம்மாவிடம் “எனக்கு எட்டு பஜ்ஜி கொடுங்க.அந்த கடலை சுண்டல் ஒரு பத்து ரூபாய்க்கு கொடுங்க” என்றாள் கமலா.அந்த அம்மா எட்டு பஜ்ஜியை ஒரு பொட்டலத்தில் கட்டினாள்.பிறகு சுண்டலை ஒரு பொட்டலத்தில் கட்டிக் கொடுத்தாள்.அவைகளை வாங்கிக் கொண்டு கமலா ஒரு நூறு ரூபாய் நோட்டை அவளிடம் கொடுத்து “மீதி சில்லரையைக் கொடுங்க” என்று சொல்லி நின்று கொண்டு இருந்தாள்.அந்த நேரம் பார்த்து ஒரு ஆள் வந்து “எனக்கு முப்பது பஜ்ஜி சீக்கிரமா வேணுங்க.நல்லா சூடா போட்டு தாங்க. நேரமாகுங் களா” என்று கேட்டு பஜ்ஜி போடும் அம்மாவை அவசரப் படுத்தினான்.பஜ்ஜி போடும் அம்மாவுக்கு வந்த ஆள் முப்பது பஜ்ஜி கேக்கவே சந்தோஷம் தாங்கலே.

“இதோ ரெண்டு நிமிஷத்திலே சூடா போட்டுத் தரேன் தம்பி. எண்ணே சூடா இருக்கு.சீவின வாழைகாய் ரெடியா இருக்கு.காஸ் எரிஞ்சிகிட்டு இருக்கு.ஏன் தம்பி லேட்டாவும்.இதோ ரெண்டு நிமிஷத்திலே நான் தரலே ன்னா,நீ பணமே தர வேணா. சும்மா எடுத்துக் கிட்டுப் போ.நான் முப்பது வருஷமா இந்த தொழில் பண்றேன்” என்று தன் பெருமை அடித்துக் கொண்டே சீவின வாழைக்காய் களை மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு விட்டு காஸை பெரிது பண்ணினாள். அதுவரை பொறுமையாக இருந்த கமலா,அந்த பஜ்ஜி போடும் அம்மா தன் கையை தண்ணியிலே கழுவி ஒரு துண்டில் துடைத்துக் கொண்டாள். இது தான் சரியான சம்யம் என்று நினைத்து கமலா அந்த பஜ்ஜி போடும் அப்பாவைப் பார்த்து ”எனக்கு மீதி சில்லரையை கொடுங்க” என்றாள்.”என்னம்மா நீ இன்னும் பணமே தரலே.நீதான் எட்டு பஜ்ஜிக்கு நாப்பது ரூபா,சுண்டலுக்கு பத்து ரூபா,ரெண்டு சேத்து ஐம்பது ரூபா தரணும். என்னைப் பாத்து என்னமோ மீதி சில்லறைக் கேக்கறே.நான் என்ன காதுலே பூவா வச்சுக் கிட்டு இருக்கேன்” என்றாள் அந்த பஜ்ஜி கடைக்காரி.”எல்லாத்துக்கும் சேர்த்து தாங்க நான் நூறு ரூபாய் நோட்டு உங்க கிட்டே குடுத்தேனே. நீங்க தான் எனக்கு பாக்கி ஐம்பது ரூபாய் தரணும்” என்றாள் கமலா.“யாரை ஏமாத்தப் பாக்கிறே சின்னப் பொண்ணு அதுக்கு வேறு யாராச்சும் காதுலே பூ சுத்திக் கிட்டு இருப்ப.அவ கிட்டே போய் உன் கை வா¢சையை காட்டு.எடு பணத்தை” என்று மிரட்டினாள் அந்த கடைக்கார அம்மா.கமலாவுக்கு அழுகையே வந்து விட்டது.“நான் பொய் சொல்லலேங்க,நான் இவர் வருவத்க்கு கொஞ்ச முன்னாலே உங்க கிட்டே ஒரு நூறு ரூபாய் நோட்டை கொடுத்தே ங்க.நீங்க அதை பணடப்பாவிலே போட்டீங்க. இந்த நேரம் பாத்து இவர் வந்து உங்களை முப்பது பஜ்ஜி கேட்ட பிறகு,நீங்க நான் கொடுத்த நூறு ரூபாயை மறந்துட்டீங்க” என்றாள் அழாக் குறையாக. “பஜ்ஜியையும் சுண்டலையும் இங்கே வச்சுட்டு ஓடிப் போ.உனக்கு உதை கிடைக் கிறதுக்கு முன்னாடி” என்று மிரட்டினாள் கடைக்கார அம்மா.

பின்னால் நின்றுக் கொண்டிருந்த நடராஜன் ”அந்த அம்மா நூறு ரூபாய் நோட்டை உங்க கிட்டே கொடுத்த தை நான் பாத்தேங்க.நீங்க தான் சில்லறை பாக்கி அவங்ககளுக்குத் தரணும் என்றான்.“இதோ பார் தம்பி, இந்த வயசு பொண்ணுங்க¨ளை நீ ‘டாவு ‘ கட்டு. அவங்களுக்கு நீ ‘சப்போர்ட்டா’ பேசு.நான் வேணாங்கலே.ஆனா அந்த வேலை எல்லாம் இங்கே வேணாம்.வேறு இடம் பாரு அதுக்கு.உன் வேலையை பாத்துக் கிட்டு நீ போ.நீ ‘டாவு’ கட்ட வந்தியா இல்லே பஜ்ஜி வாங்க வந்தியா தம்பி.வேலையே பாத்துகிட்டு போ. இல்லேன்னா அப்புறமா நா வாய்லே வந்த படி கண்ட வார்த்தையாலே உன்னெத் திட்டுவேன்” என்றாள் அந்த அம்மா. பயந்து போனாள் கமலா. நடராஜனும் அந்த அம்மா தன்னை கண்டபடி திட்டுவாங்களோன்னு எண்ணி சும்மா இருந்து விட்டான்.வேறு வழி இல்லாமல் கமலா தன் பர்ஸை திறந்து இன்னொறு நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தாள்.

நோட்டை வாங்கிக் கொண்டு அந்த கடைக்கார அம்மா ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை திருப்பிக் கொடுத்து ”உன்னெ போல நான் தினமும் எவ்வளவு பேரைப் இந்த பீச்சிலே நான் பாக்கறென்.என்னை ஏமாத்த முடியாது தொ¢ஞ்சிகோ” என்றாள் அந்த பஜ்ஜிக் கடைக்கார அம்மா திமிராக.பணத்தை வாங்கிக் கொண்டு கோவத்துடன், அவமானம் தாங்காமல் வேகமாக திரும்பினாள் கமலா.அந்த வேகத்தில் அவள் நடராஜன் மேல் மோதி விட்டாள். “சாரிங்க,ரொம்ப சாரிங்க” என்று சொல்லி அவனைப் பார்த்தாள் கமலா.நல்ல வாட்ட சாட்டமான உடல் கட்டு,சுருள் சுருளாய் தலை முடி.நன்றாக டிரஸ் பண்ணி ஒரு சினிமா நடிகனைப் போல இருந்தான் நடராஜன்.“அதனாலென்ன பரவாயில்லீங்க” என்று சொல்லி தன்னை கொஞ்சம் பின்னுக்கு தள்ளிக்காண்டு அவளுக்கு வழி விட்டான் நடராஜன்.கமலாவும் வெட்கப் பட்டுக் கொண்டே வேகமாகப் போனாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டு இருந்தான் நடராஜன். ‘டாவு’ கட்டிடினது போதலையா தம்பி,அங்கேயே பாத்திகிட்டு இருக்கே.பஜ்ஜி வேணுமா வேண்டாமா தம்பி.இல்லேன்னா இந்த இடந்தை காலி பண்ணு. அவ பின்னாலே போய் அந்த பொண்ணை டாவு கட்டு” என்று அந்த கடைக்கார அம்மா குரல் கேட்ட போது தான் நடராஜன் தன் நினைவுக்கே வந்தான்.

பிறகு “நாலு பஜ்ஜி குடுங்க” என்று சொல்லி ஒரு இருபது ரூபாய் நோட்டை கடைக்கார அம்மாவிடம் நீட்டினான்.பஜ்ஜியை வாங்கிக் கொண்டு அவன் கமலா எந்த பக்கம் போய் இருப்பாள் என்று தேடிப் பார்த்தான்.அந்த கூட்டத்தில், அந்த மங்கலான இருட்டிய வேளையில்,அவன் கண்களுக்கு அவள் எப்படிப் போனாள் என்றே தெரியவில்லை.அவன் போய் உட்கார்ந்துக் கொண்டு பஜ்ஜியை ரசித்து சாப்பிட ஆரம்பித்தான். அவன் மனம் அவன் பார்த்த பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது.

பஜ்ஜி கடையில் சந்தித்த ஆளை மனதில் கொண்டு வந்து ரசித்தாள் கமலா.என்ன பர்சனாலிட்டி அவருக்கு.. நல்ல அழகு.பார்க்க சினிமா நடிகரைப் போல இருந்தார்.’பாவம் நமக்கு சாதகமாகச் அவர் அந்த பஜ்ஜி போடும் அம்மாவிடம் சொல்லப் போய் அந்த அம்மா அவரை கண்டபடி திட்டுவேன்னு சொல்லி விடவே பாவம் அவர் பயந்துப் போய் சும்மா இருந்துட்டார்.அவர் நல்லவராய் இருந்ததினால் தான் உண்மையை அந்த அம்மாவிடம் சொல்ல வந்தார் ஆனா அந்த அடாவடிப் பொம்பளே அவரை ‘இல்லாது பொல்லாதாதை’ எல்லாம் சொல்லித் திட்டுவேன்’ என்று சொன்னதால் அவர் பாவம் சும்மா இருந்து விட்டார்.நடந்த இந்த சம்பவத்தை எண்ணியபடி அவள் படுத்துக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு தூக்கம் வர நிறைய நேரம் பிடித்தது.

‘பீச்சில் சந்தித்த பெண்ணைப் பற்றி எண்னமிட்டவாறே ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான் நடராஜன்.

அன்று ஆ·பீஸ் விட்டு வெளியே வந்ததும் கமலாவுக்கு தலையை வலித்தது.பஸ் ஏறி வீட்டுக்குப் போய் காப்பி குடிக்கும் வேளைக்கு தலை வலி அதிகமானால் கஷ்டம் என்று எண்ணி எதிரே இருக்கும் ‘சரவண பவனில்’ ஒரு காப்பி குடித்து விட்டுப் போகலாம் என்று எண்ணி அவள் சரவண பவனில் நுழைந்தாள்.காலியாக இருக்கும் ஒரு சீட்டில் வந்து உட்கார்ந்தாள்.சர்வர் யாரும் சீக்கிரம் வரவே இல்லை.அவளுக்கு தலை வலி அதிகமாகிக் கொண்டு இருந்தது.தலையை அமுக்கிய வாறே “இங்கு யாருங்க சர்வர்” என்று கண்ணை லேசாக முடிய வண்ணம் கூப்பிட்டாள் கமலா. சர்வர் யாரும் வராது இருக்கவே கமலா நிமிந்து பார்த்தாள்.எதிரில் சேரை இழுத்துக் கொண்டு உட்கார இருந்தான் நடராஜன்.அவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தால்” நீங்களா” என்றாள் கமலா அவசரத்தில்.

அப்போது தான் அவளை கவனித்தான் நடராஜன்.அவனுக்கும் ஆச்சரியமாய் இருந்தது. ”ரொம்ப சாரிங்க, நான் உங்களை கவனிக்கவே இல்லை” என்றான் நடராஜன்.“நானும் உங்களை கவனிக்கவே இல்லைங்க.எனக்கு தலை வலி அதிகமா இருந்திச்சுங்க. முதல்லே சர்வரிடம் காப்பி ஆர்டர் பண்ணனும் என்ற யோசனையில் நான் இருந்தேங்க.ரொம்ப சாரிங்க.நீங்க இங்கே,,,,” என்று இழுத்தாள் கமலா.”எனக்கும் நல்ல தலை வலி.நானும் ஒரு காப்பி சாப்பிடலாம்ன்னு நினைச்சு தான் இங்கே வந்தேன்.ஒரு சர்வரும் இதுவரை வரவில்லையே….” என்று நடராஜன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது “என்ன சாப்பிடுறீங்க” என்று குரல் கொடுத்துக் கொண்டே ஒரு சர்வர் வந்து நின்றான்.நடராஜன் கமலாவைக் கேக்காமலே” ரெண்டு காப்பி சூடா கொடுங்க.கொஞ்சம் சீக்கிரமா குடுங்க” என்று ஆர்டர் பண்ணினான் நடராஜன்.பிறகு தன் தப்பை உணர்ந்தவனாக “சாரிங்க.நீங்க ஏதாச்சும் டிபன் சாப்பிட்டு விட்டு காப்பி குடிக்கலாம்ன்னு இருந்தீங்களா. நான் ‘தட’ ‘தட’வென்னு ரெண்டு காப்பி ஆர்டர் பண்ணி விட்டேனே” என்றான் கவலையோடு.

“அதனால் என்னங்க பரவாய் இல்லே.நானும் காப்பி தான் சாப்பிடலாம்ன்னு இருந்தேன்” என்றாள் கமலா.சர்வர் இரண்டு காப்பியை கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான்.இருவரும் காப்பியை மிகவும் ருசித்து குடித்தனர். சர்வர் பில்லை கொண்டு வந்து தந்தவுடன் சட்டென்று அந்த பில்லை அதை தன் கையில் எடுத்துக் கொண்டான் நடராஜன்.“நான் தரனேங்க பில் பணத்தை” என்று சொல்லி அவள் அவனிடம் கையை நீட்டினாள் கமலா. “பரவாயில்லீங்க,நானே தரேன்.உங்களுக்கு ஏற்கெனவே அந்த பஜ்ஜிகார அம்மாவாலே நூறு ரூபாய் நஷடமாச்சு” என்று சொல்லி அந்த பீச்சு கதையை ஞாபகப் படுத்தினான் நடராஜன்.பிறகு இருவரும் எழுந்தார்கள். “வாங்க போகலாம்” என்று சொல்லி பில் கவுண்டருக்குப் போனான் நடராஜன்.“நம்லெ யார் பில் பணம்.கொடுத்தா என்னங்க.அடுத்த தடவை நாம மீட் பண்ணும் போது நீ£ங்க பணம் குடுங்களேன்” என்று சொல்லி அவன் பில் பணத்தை கவுண்டரில் கொடுத்து சில்லறையை வாங்கி தன் பர்ஸில் போட்டுக் கொண்டான் நடராஜன்.

பிறகு ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு “என்னங்க ரொம்ப தீவிரமா யோசனை பண்ணிகிட்டு இருக்கீங்க” என்று பேச்சு கொடுத்தான் நடராஜன்.”ஒன்னு¢மில்லீங்க” என்றாள் கமலா அசடு வழிய.”நீங்க ‘ஒர்க்’ பண்றீங்களா இல்லை படிச்சுக்கிட்டு இருக்கீங்களா? என்று கேட்டான் நடராஜன்.”நான் ஒர்க் பண்றேனுங்க.’மெட்ராஸ் ஸ்டீல் கம்பனி’யில் க்ளார்க்காக வேலை செய்யரேனுங்க’ என்று சொல்லி நிறுத்தினாள்.”ஓ அப்படியா,வேலை செய்யறீங்களா,நான் நீங்க படிச்சுக்கிட்டு இருப்பீங்களோ ன்னு நான் நினைச்சேன்.ரொம்ப ‘யங்கா’ தொ¢யறீங்க.”என்று சொல்லி நிறுத்தினான். கமலாவுக்கு அவர் புகழ்ச்சி மிகவும் பிடித்து இருந்தது.அவள் முகம் குப்பென்று சிவந்தது. நடராஜன் இதை கவனிக்கத் தவறவில்லை.

சற்று நேரம் கழித்து ”நான் அசோக் லேலண்ட் ·பாக்டரியில் ஒரு சூப்பர்வைசரா வேலை பண்றேனுங்க.என் பேர் நடராஜன்,உங்க பேர்….” என்று இழுத்தான் நடராஜன்.“என் பேர் கமலாங்க.” என்றாள் கமலா.“உங்க வீடு எங்கே இருக்கு சொல்லுங்க நான் வேணா போகும் போது உங்களை ‘ட்ராப்’ பண்றேன்” என்றான் நடராஜன்.“என் வீடு கே.கே.நகர்ல்ல இருக்குங்க.நீங்க ‘ட்ராப்’ எல்லாம் பண்ண வேணாங்க. நான் பஸ்லே போய் விடுவேங்க.நீங்க சிரமப் படவேண்டாங்க” என்றாள் சிரித்துக் கொண்டே.“சரி உங்களுக்கு பிடிக்கலேன்னு தோணுது. நான் மாம்பலத்தில் ஒரு ‘ஜெண்ட்ஸ் ஹாஸ்டலில்’ தான் தங்கி இருக்கேன்.சரி ‘ட்ராப்’ தான் வேண்டான்னு சொல்லிட்டீங்க இப்போது சந்திச்ச மாதிரி நாம் இந்த சரவண பவனில் அடிக்கடி சந்திக்கலாமா” என்று கேட்டான் நடராஜன். கமலாவுக்கு அவன் பேசியது மிகவும் பிடித்து இருந்தது. இனி அடிக்கடி நாம சந்திக்க இவர் வழி பண்றார் என்று புரிந்துக் கொண்டாள். சந்தோஷத்துடன் “சரிங்.ஆனா நான் தான் பில் பணம் கொடுப்பேன் சரியா?” என்று கேட்டு அவன் முகததைப் பார்த்தாள் கமலா.”எனக்கு ஓ.கேங்க. அப்படின்னா நான் ¨தா¢யமா மசால் தோசை,பூரி, பொங்கல், வடை, குலாப் ஜான், காப்பி, எல்லாம் ¨தா¢யமா,பர்ஸில் பணம் இருக்ககுறதான்னு கூட பார்க்காம பணத்துக்கு கவலை படாம, நான் சாப்பிடலாம்” என்றான் சிரித்துக் கொண்டே.“சாப்பிடுங்க நான் பில் பணம் தரேன்” என்றாள் கமலா. “நான் அப்படி எல்லாம் செய்யமாட்டேங்க.நீங்க கவலைப் படாதீங்க.நான் பணக் கஷ்டம் தொ¢ஞ்சவங்க.பணம் என்பது எல்லோருக்கும் கஷடப்பட்டா தாங்க வரும்.நான் தமாஷ்க்கு சொன்னேன்” என்றான் நடராஜன்.நடராஜனின் இந்த இதமான பேச்சும் பணத்தைப் பற்றி அவன் பேசினதையும் எண்ணி இவர் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்று தன் மனதில் எண்ணிக் கொண்டாள் கமலா.

“நாளைக்கும்,நாளன்னைக்கும்,எனக்கு ஈவினிங்க் டியூட்டி தாங்க.நான் ·பாக்டரியில் இருப்பேன். வெள்ளிக்கிழமை எனக்கு நைட் டியூட்டி.நான் அன்னைக்கு ஹோட்டலுக்கு வரேன்.நீங்களும் வரீங்களா” என்று கேட்டு கமலாவை ஆர்வத்துடன் பார்த்தான்.“நிச்சியம் வரேனுங்க” என்றாள் பளிச்சென்று.நடராஜனுக்கு கமலாவின் பதிலைக் கேட்டதும் அளவு கடந்த சந்தோஷம். ”ரொம்ப தாங்க்ஸ்ங்க” என்றான் நடராஜன். “இதில் என்னங்க இருக்கு என்னை தாங்க் பண்ண” என்று கமலா வெக்கத்துடன் சொன்னபோது நாம் கேட்டவுடனே அவள் சம்மதம் சொன்னதைப் பார்த்தால் அவளுக்கும் இதில் சந்தோஷம் என்று புரிந்துக் கொண்டான் நடராஜன்.இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு சிரித்து கொண்டே விடை பெற்றார்கள்.

நடராஜன் கமலாவின் அழகு,அவள் பழகிய விதம்,அவளின் அந்த அடக்கம், முன் பின் தொ¢யாத ஆடவனுடன் பைக்கில் போக மறுத்தது,ஆனால் அதே சமயம் அடுத்த முறை சந்திக்க லாமான்னு கேட்டதுக்கு ‘சரி’ன்னு பட்டென்று பதில் சொன்னது இவை எல்லாம் எண்ணி எண்ணி தனக்குள் மகிழ்ந்தான்.தன் வாழ்க்கையில் வந்திருக்கும் ‘கனவுக் கன்னி’ அவள் தான் என்று முடிவு பண்ணினான்.கமலாவை இனிமேல் அடிக்கடி சந்திக்க வேன்டும் என்று விரும்பினான் நடராஜன் கமலாவுக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் அவரை சந்தித்து பேச வேண்டும் என்று ஆசை பட்டாள்.வீட்டுக்கு வந்த கமலா மிகவும் சந்தோஷாக இருந்தாள்.எப்போது வெள்ளிக் கிழமை வரும், நாம் மறுபடியும் நடராஜனை சந்திக்கலாம் என்று அவள் மனம் ஏங்கியது.நடராஜனும் ‘லாட்ஜில்’ படுத்துக் கொண்டு கமலாவைப் பற்றியே யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தான்.

ஒரு நாள் காலை.மணிஎட்டு இருக்கும். காலிங்க் பெல் அடித்தது.சரோஜா தான் கதவைத் திறந்தாள்.வாசலில் சரவணனின் மணைவி உமா வந்து நின்றுக் கொண்டு இருந்தாள்.அவளைப் பார்த்ததும் சரோஜாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.என்னவோ ஏதோ என்று பயந்தாள்.தன்னை சுதாரித்துக் கொண்டு “உள்ளே வா உமா” என்று கூப்பிட்டாள் சரோஜா.உள்ளே வந்த உமா ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தாள்.அவள் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு இருந்தாள். ஒருவழியாக அவளை சமாதானப் படுத்தினாள் சரோஜா.“அக்கா நானும் என் பெண்களும் சாப்பிட்டு மூனு நாள் ஆவுது.வீட்டில் ஒரு மணி அரிசி கூட இல்லே.கையில் காலணா கூட இல்லே.போலீஸ்க்கு பயந்து அவர் எங்கேயோ ஒரு நண்பர் வீட்டில் தலை மறைவா இருக்கார்.வீட்டுக்கே வருவதில்லே நீங்க தான் அக்கா எங்களை காப்பாதணும்” என்று சொல்லி சரோஜவின் கால்களில் விழுந்தாள்.அவள் தோளை பிடித்து எழுப்பினாள் சரோஜா.”வீட்டு வாடகை கொடுத்து நாலு மாசம் ஆவுது.வீட்டு ஓனர் எங்களை உடனே காலி பண்ணனும்,இல்லாட்டி சாமான்களை எல்லாம் வெளியே தூக்கி எறிஞ்சிடு வேன்னு மிரட்றார்.நான் என்ன பண்ணுவது அக்கா.என்னிடம் சல்லி காசு கூட இல்லையே” என்று சொல்லி விட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள் உமா.

அவளை அமைதி ஆக இருக்கச் சொல்லி விட்டு சரோஜா உள்ளே வந்து தன் கணவனிடம் “நாம என்ன பண்ணலாம்ங்க.எனக்கு ஒன்னும் தோணலையேங்க” என்று கவலையுடன் கேட்டாள் சரோஜா.”சரோஜா அவளுக்கு நாஷ்டா காப்பி கொடு முதல்லே.அப்புறம் நாம பேசலாம்” என்றார். கணவன் என்ன சொல்கிறார் என்று புரிந்துக் கொண்ட சரோஜா “வா உமா, கொஞ்சம் நாஷ்டா சாப்பிடு.நான் கமலாவை ஆபீஸ்க்கு அனுப்பி விட்டு வறேன்” என்று சொல்லி கமலாவுக்கு நாஷ்டா காப்பி எல்லாம் கொடுத்து விட்டு கையில் சாப்பாடு ‘பாக்ஸ¤’ ம் ரெடி பண்ணிக் கொடுத்து அவளை ஆ·பீஸ்க்கு அனுப்பி விட்டு உள்ளே வந்தாள் சரோஜா. “மூனு மாச வீட்டு வாடகை பாக்கியும்,வீட்டு சாமான்கள் வாங்கி சாப்பிடவும் நான் இப்போ பணம் தரேன்.அப்புறமா நான் அடுத்த மாச வீட்டு வாடகை பணம், வீடு செலவுக்கு பணம் தரேன்.வாங்கிக் கிட்டு போய் மேலே ஆக வேண்டியதை செய் உமா” என்று சொல்லி விட்டு உள்ளே போய் இருபதாயிரம் ரூபாய் பணத்தை கொண்டு வந்து உமாவிடம் கொடுத்தார் சிவலிங்கம். “ரொம்ப நன்றிங்க,நீங்க தெய்வங்க,எங்களை காப்பாத்தின தெய்வங்க நீங்க” என்று கையைக் கூப்பி வணங்கினாள் உமா. “அப்படி எல்லாம் சொல்லாதே.போய் ஆக வேண்டியதை கவனி” என்று சொல்லி உமாவை அனுப்பி வைத்தார் சிவலிங்கம். சற்று நேரம் கழித்து “சரோஜா, என்ன உன் தம்பி இப்படி தன் குடும்பத்தை நடுத் தெருவில் கொண்டு வந்து விட்டு விட்டானே.பாவம் உமா என்ன பண்ணுவா. வீட்டில் மணி அரிசி கூட இல்லேன்கிறாளே உமா.சரவணன் ‘கேஸ் ‘எல்லாம் ஜெயிச்சு,அவன் மறுபடியும் ஏதாவது ‘பிஸினஸ்’ பண்ணி பணம் சம்பாத்திக்கும் வரை நாம தான் அந்த குடும்பத்துக்கு பணம் கொடுத்து உதவணும்.அது நம்ம கடமை சரோஜா.அதனால் நாம இப்போ எந்த கடையும் போட முடியாதுன்னு எனக்கு தோணுது.நீ என்ன நினைக்கிறே சரோஜா” என்று கேட்டார் சிவலிங்கம்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *