தொலைந்தவர்கள்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 4,538 
 
 

9.30 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டும். அப்பொது தான் அவன் காலையில் சென்னையில் இருக்க முடியும். செந்தில் பெங்களூரில் உள்ள சாஃட்டுவேர் நிறுவணத்தில் வேலையில் செய்கிறான். சனி, ஞாயிறு வந்ததும் சென்னைக்கு வந்து விடுவான்.

9.25க்கு ரயில்வே ஸ்டேஷனில் அவசரமாக ஏறும் போது ஒரு உருவம் மீது இடித்துவிடுகிறான்.

“சாரி சார் !”

“ஹாய் செந்தில் .. உன்ன பார்ப்பேன் நினைக்கல ”

செந்தில் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

“என்ன தெரியுல”

செந்தில் சற்று யோசித்து..” ஏய் நீ சிவா தானே..எப்படி இருக்க”

“ம்ம்ம்…. நல்ல இருக்கேன்…நீ எப்படி இருக்க”

” நல்ல இருக்கேன்.. இங்க சாப்டுவேர் கம்பேனியிலே வேலை செய்றேன்.ஆமா நீ எங்க இங்க…”

“ஒரு வேலை விஷயமா.. வந்தேன்.”

“சரி..டைம் ஆச்சி வா போவோம்.”

இருவரும் ஒரே ரயில் பெட்டியில் பயணம் செய்தனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு 7 வருடம் கழித்து இருவரும் இன்று தான் சந்திக்கிறார்கள். இருவரும் பள்ளியில் படித்த உயிர் நண்பர்கள். இன்று ஒருவருக்கொருவர் எந்த திசையில் இருக்கிறோம் என்று தெரியாமல் வாழ்கிறார்கள். கணிபொறி யுகத்தில் சில சந்திப்புகள் கூட விபத்துப் போல் தான் நடக்கிறது.

“அமா.. சிவா நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க..”

“நான் எம்.ஏ ஆங்கீலம் முடிச்சேன். கிராமத்துல அப்பாவுக்கு உதவியா விவசாயம் பார்த்தேன். இங்க ஒரு கம்பேனி இன்டர்வியூகாக வந்தேன், உனக்கு வேலைப் எப்படி போகுது…?”

“நல்ல போகுது…”

“ஆமா… நம்ம ஸ்கூல்ல படிச்சாலே பத்மா… இப்போ என்ன பண்றா…?”

“அவ.. மாமா பையனே கல்யாண பண்ணிக்கிட்டா… சொந்த ஊருல செட்டுலைய்டா…”

“சரி விடு.. நம்ம சந்தானம் சார் எப்படி இருக்காரு…”

“அவர பார்த்து ரொம்ப நாளாச்சு….”

இருவரும் தங்கள் பள்ளி கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் பள்ளிப் பருவத்தில் பார்த்த தாவணி அழகிகள், வகுப்பெடுத்த ஆசிரியர்கள், சக நண்பர்கள் எல்லாம் கதைகளை பேசிக் கொண்டு சென்னை வரை வந்தனர். இருவரும் அவர்கள் வாழ்ந்த நாட்களை நிளைத்து பேசிக் கொண்டு இருந்தார்கள். வேறு என்ன செய்வது மீண்டும் அந்த நாட்கள் சென்று வாழ முடியவில்லை ?

நினைவலைகள் ஒடிக் கொண்டு இருக்கும் போது சென்னை என்னும் கரை வந்துவிட்டது. இருவரின் நினைவலைகளும் ஒய்ந்தது.

“சரி சிவா ! எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்.. கண்டிப்பா நீ வரனும்….”

“ஹாய் ! வாழ்த்துக்கள்…இவ்வளவு நேரம் சொல்லவே இல்ல…”

“நம்ம ஸ்கூல் கதையில சொல்ல மறந்திட்டேன்” என்று சொல்லி முடித்து தன் திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுத்தான். சிவா வாங்கிக் கொண்டு பிறகு, இருவரும் கூட்ட நெரிசலில் ஒவ்வொரு திசை சென்றனர்f.

கூட்ட நெரிசலில் செந்தில் கொடுத்த அழைப்பிழை சிவா தவரவிட்டான். சிவாவுக்கு செந்தில் திருமணம் எங்கு நடக்கிறது என்று கூட தெரியாது. இருவரில் யாரும் போன் நம்பர் கூட கேட்கவில்லை. விபத்தாய் வந்த இவர்கள் சந்திப்பு இன்னொரு சிறு விபத்தில் இவர்களின் அடுத்த சந்திப்பு தடுக்கப் பட்டது. எனோ தொலைந்த இவர்கள் நினைவுகள் இன்று சந்தித்து மீண்டும் தொலைந்தது. ஆழைப்பிதழ் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், சிவா அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

– குகன் [tmguhan@yahoo.co.in] (ஜூன் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *