அங்கம் 5 | அங்கம் 6
அவளைப் பொறுத்தவரை கந்தசாமி வீடும் மனிதர்களும் இருண்ட குகைக்குள் வாழ்கின்ற காட்டுமிருகங்கள் மாதிரி. மனிதத்தன்மையின் சுவடுகளே அறியாதஅவர்களை வேறு எப்படி நினைவு கூர்வதென்று அவளுக்குப் பிடிபட மறுத்தது. இந்நிலையில் அவர்களோடு ஒன்றுபட்டுக் கலக்க முடியாமல் மறுதுருவமாய் பிரிந்து வாழும் அவளுக்கு அம்மாவைத் திடீரென்று காண நேர்ந்தால் நடைஇடறும்,அம்மா அவள் மீppதுள்ள பாசத்தால் தனியாகவே பஸ்ஸில் பயணம் செய்து அவர்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவள் ஏன் வந்தாள் என்று ஆகிவிடும், அவளுக்கல்ல அந்தப் ;புறம்போக்கு மனிதர்களுக்குத்தான். அவர்களின் அந்தக் குறுகிய வட்டத்தினுள் அகப்படாத அப்பா ஒரு தனிமனிதர். பண்பட்ட ஆசிரிய திலகமாய் துலங்கியவர்.
அந்த ஒளிக்கிpற்றைச் சுமந்தவாறே அவரின் இருப்புக்கள், வாழ்வின் கறைகள் விட்டுப்போன பிரகாசக்களையுடன் அதை எதிர்கொள்வதில் கூடப் பின் நிற்கும் நடேசன் உட்பட அந்த வீட்டு மனிதர்கள் குறித்து அவள்
கவலைப்படாத நாட்களே கிடையாது. இதை அறிந்துதானோ, என்னவே,அப்பா அங்கு வந்து போவதையே அடியோடு குறைத்துக் கொண்டு விட்டபோதிலும் அம்மாவால் அப்படி இருக்க முடிவதில்லை. அவளுடைய எல்லையற்ற பாசம் அத்தகையது. சாரதாவின் முகம் பார்காமல், அவளால் இருக்க முடிவதில்லை. அவளை என்ன செய்வதென்று புரியாத நிலையிலேயே ஒருநாள் அபூர்வமாகச் செந்தூரன் வந்து சேர்ந்தான். சாரதாவின் உண்மை நிலையறிய, முதன்முறையாக வந்திருக்கிறான்.சாரதா எது செய்தாலும் அங்கு எடுபடுவதில்லை. எப்படியும் அவளிடம் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். இதற்கு நடேசன் விதிவிலக்கல்ல. செந்தூரன் முதன்முறையாக அங்கு வந்தபோது அவனும் வீட்டில்தான் இருந்தான். செந்தூரனுக்கு முகம் கொடுக்க விரும்பாமல் அந்தச் சிறிய வீட்டின் பின்வாசல் வழியாகப் போய் அவன் தெருவில் மறைந்து போய்க் கொண்டிருப்பதை எதிர்கொள்ள முடியாமல் சாரதா முகம் கறுத்து, முன் வராந்தாவில் உறைந்து போய் நிற்பதை எதிர்கொண்டவாறே செந்தூரன் உள்ளே படியேறிவரும் போது மௌனம் கனத்தது. அவனைக்கண்டதும் கந்தசாமியும் சடாரென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே போய் விட்டார். அவன் முன்னிலைக்கு வரமுடியாமல் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்ற நிழற்கோலங்களாய் மனிதர்கள். இதையெல்லாம் ஜீரணித்து உள்ளுரச் சுவாலை விட்டெரியும் அக்கினிக்குழம்பாய்க் கொதித்தவாறே சாரதா அவனை மனம் திறந்து வரவேற்கக் கூட நா எழாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தாள். வயிற்றின் சுமை வேறு அவளுக்கு. அவன் அவ்வாறு அவளைக் கண்டு இருக்கையில் அமர்ந்தவாறே கவலை கொண்டு கேட்டான்.
‘என்ன சாரதா.? நான் இதை எதிர் பார்க்கேலை. இது நீயா என்று கூடச்சந்தேகமாக இருக்கு.என்ன இப்படி இளைச்சுப்போனாய்?’
தான் வாழ்க்கையின் பாரதூமான சவால்களை எதிர்கொள்ளமுடியாமல் கைவிலங்கு இறுகித் தோற்றுப் போய்விட்டதை, வாய்ப் பிரகடனமாக எப்படி அவனோடு மனம்திறந்து பேசுவதென்று புரியாமல், அவள் தலை கவிழ்ந்து மௌனம் கனத்துப் போய் நின்றிருந்தாள் அந்த மௌனத்தைக் கலைத்துக் கொண்டு அவள் உண்ச்சிவசப்பட்டுத் தன்னை மறந்து உரத்த குரலெடுத்து அழுவதைக் கேட்டவாறே, அவன் உறைந்து போய் அமர்ந்திருந்தான். அக்குடும்பத்தில் நடேசனென்ற தனிமனிதனுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்த அவளுடைய அந்த மனம் சரிந்து போன விபரீத விளைவுகள் குறித்து அவன் உள்ள10ர உருகிக் கண்கள் கலங்கியவாறே நிறைய யோசித்து மனம் வருந்திக் கொண்டிருந்த போது, இடையில் குறுக்கிட்டு ஆவேசமாக அவள் கேட்டாள்.
‘அண்ணா! நான் ஆரம்பரத்திலிருந்தே இந்தக் கல்யணத்தை மட்டுமல்ல. ஏனைய அவலைப் பெண்களின் கல்யாண உறவுகள் குறித்தும், எதிர் மறையான நினைவுகளைக் கொண்டிருந்தது இதுக்குத்தான். அதையும் மறந்து, இப்படி ஒரு தப்பான மனிதனின் உறவு விலங்கை நான் கழுத்தில் மாட்டிக்கொள்ள நேர்ந்தது. என்னைச்சரி செய்யவல்ல அதையும் தாண்டி ஒரு முக்கியகாரணமிருக்கு. என் கண் முன்னாலேயே சுபாவக்காவின் கல்யாண வாழ்க்கை கறைபட்டுத் திpப்பற்றி எரியுதே. இந்தப்பாவக் ;கறையைப் போக்க ஒரு புண்ணிய புருஷனின் காலடிச் சுவடுகளை எதிர்பார்த்துத்தான் எனக்கு இந்தக் கல்யாண உறவு சரிப்பட்டு வந்தது. நான் கனவு கண்ட மாதிரி இங்கு எதுவும் நடக்கேலையே, இவருக்கு நான் ஒரு வேண்டாத விருந்தாளியாக மட்டுமல்ல ஒரு பகையாளி கணக்கில் நான், இந்த நிலையில் ஒட்டாத உறவின் நிமித்தம் அருவருக்கத்தக்க உடல் உறவின் குரூர வெளிப்பாடாக, எனக்குள் குழந்தை வேறு. இதை எப்படியண்ணா நான் தாங்குவேன்’.
அவள் கண்களிலிருந்து பெருகியோடும் கண்ணீர் நதியை ஆறாத மனத்துயரத்துடன் பார்த்தவாறே சூனிய இருப்பாக உறைந்து போய் நின்று கொண்டிக்கும் அவளை எதிர்கொள்ளத் திராணியற்று, அவன் பேச்சிழந்த மௌனத்துடன் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்தபடி சிலையென அமர்ந்திருந்தான். அந்த வீட்டு மனிதர்களின் குணவிசேஷங்கள் குன்றிய மனக்கறுப்புப் போலவே, அந்த வீடும் நித்திய இருள் சாக்கடைக்குள் புதைந்து கிடப்பதாய் அவனுக்கு உணர்வு தட்டிற்று. ஆணாதிக்க சமூகத்தின் அடிமைச் சாதனம் எழுதப்பட்டு விதியின் ஒரு பாவக் கணக்காய் வருந்தியழுதே,வாழ்நாளைத்தீர்த்துக் கொள்ளும் பேதைப் பெண்களின் வரிசையில் இப்போது இவளும் என்று நினைக்கும் ;போது அவனே தன்னை மறந்து வாய்விட்டு அழுது விடுவான் போலிருந்தது. மறைந்து நின்று வேடிக்கை பார்க்கின்ற, அங்குள்ள மனிதர்களுக்கு அதுவே தீனியாக அமையவும் கூடும் எனக்கருதித் தன்னைத் தேற்றியவாறே அவளை நிமிர்ந்து பார்த்து உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டான்அவன்.
‘சாரு! எனக்கு என்ன சொல்லுறதென்று புரியேலை.இப்ப இந்த நிலையில் விட்டு விலக முடியாமல் கற்பு என்ற முட்கிரீடம் உனக்கு. இதை நீ சுமந்து தானாக வேண்டுமென்றால் யாரால் என்ன செய்ய முடியும்,? சொல்லு சாரு’
‘அண்ணா! சுபாவக்காவின் வாழ்க்கையில் அவளை மட்டும் குறி வைத்துத்தான் அந்தப்பயணம். இங்கேயோ அபத்தமான, சுற்றி வரும் இந்த உறவுச்சில்லினுள் அகப்பட்டு, என் தலைமட்டுமல்ல என் உறவு சார்ந்த மனிதர்களையும் அது காவு கொள்வதை நினைத்துத்தான் இந்த உறவை அறுத்துக்கொண்டு விட்டுவிடுதலையாவதையே, என் மனம் விரும்புதண்ணா.’ என்று கூறிவிட்டு அவள் அழுகையைத் தொடர்ந்தாள்.அவன் தாங்க முடியாத மனவருத்தத்தோடு, அவளைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.
‘சாரு! நீ நடேசனைப் பிரிந்து தனியாக வந்து விட்டால், எல்லாம் சரிப்பட்டு வருமா? பிறகு உன்ரை வாழ்க்கையே முடிந்த மாதிரித்தானே. நீ ஒரு வாழாவெட்டியென்று இந்தச் சமூகம் உன்னைப் பழிக்குமே. இதுக்கு நீ சம்மதமோ?’
‘அண்ணா, ஏற்கனவே அதாவது எனக்கு இப்படியொரு விபரீத உறவு ஏற்படுவதற்கு முன்பே நமது பெண்களின் கல்யணங்கள் குறித்து நான் கொண்டிருந்த அவநம்பிக்கை எதிர்மறையான எண்ணஅலைகள் இவற்றை மெய்யாக்கவே இப்ப இந்த என்னுடைய கல்யாண வாழ்க்கையும் அதனால் உண்டான உறவுகளும் என்னைப்பல வழிகளிலும் பங்கமுற வைத்து, வேரோடு பிடுங்கியெறியவே என்னை இப்படியொரு பலிபீடத்தில் கொண்டு வந்து. நிறுத்திவிட்டிருக்கு. நான் களங்கமற்ற நிரபாரதியாக இருந்தும், என்னைக் கருவறுத்துக் கழுவிலேற்றவே. இவர் ஒவ்வொரு கணமும் துடித்துக்கொண்டிக்கிறார் .சுபாவக்கா பாவம்.எத்தனையோ கனவுகளுடன் அவள் வாழப்போனாளே அவளையும் தீக்குளிக்க வைத்துத் தோலுரித்துவிட்டு, இனிப்பேச என்ன இருக்கு? அவளோடு மட்டும் தான் இந்த முரண்பாடான யுத்தம் அவள் கணவருக்கு. அதில் ஏற்பட்ட ரணங்கள் போகத்தான். நான் இந்தக் கல்யாணத்துக்கே சம்மதிக்க நேர்ந்தது. ஆனால் எனக்கு நேர்ந்ததோ அதைவிடக் கொடுமை நீங்கள்தான் பார்க்கிறியளே. என்னோடு மட்டும் இந்தக்கறை போகேலை. என்னைச் சார்ந்த உறவு மனிதர்களையும் இவர்கள் விட்டு வைக்கேலையே. உயிரின் கொடியே அறுந்து ஒரேயடியாய் விழுக்காடு கண்டமாதிரி நானாகி விட்டிருக்கிறன். பிறந்த வீட்டுத் தொடர்பே,எனக்கு அடியோடு விட்டுப் போச்சு. இப்படி ஒரு குருஷேத்திரப் போருக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. நான் பட்ட துயரம் ரணகளம் கொண்ட ஒரு சோகவலாறு. இந்த இலட்சணத்தில் அவரின் ஒட்டாத உறவைப் பிரதிபலிக்க எனக்குள் குழந்தை வேறு. ; மனதாலோ உணர்வுகளாலோ நான் அவரோடு வாழ்ந்தேயில்லை. உடம்பிலே தழும்படிபட்டது தான் மிச்சம். இதை இதன் போக்கிலேயே விடலாமா? ஓரு மனிதனை மனித குணங்களோடு ஏற்றுக்கொள்ள நே;ந்திருந்தால் நான் இப்படி உருக்குலைந்து போயிருக்கமாட்டன். பதிலாக வக்கிரபுத்தி கொண்ட, அன்பற்ற ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? இதை நியாயப்படுத்தி இப்படியே நான் அம்புப்படுக்கையிலே கிடந்து சாகவேண்டியது தானா? இதுக்கு ஒரு விமோசனம்தான் இப்ப எனக்குத் தேவைப்படுகுது’
‘சாரு! நீ என்ன சொல்கிறாய்? இதுதான் உன்ரை முடிவா? எத்தனை கனவுகளோடு அப்பா அம்மா உன்னைத் தாரை வார்த்துக் கொடுத்திருப்பினம். நீ இப்படி வெறும் மனுஷியாய், அறுத்துக் கொண்டு திரும்பி வாறதை அவர்களால் தாங்க முடியுமா?’
‘அண்ணா! மற்றவர்களுடைய திருப்திக்காகவோ சந்தோஷங்களுக்காகவோ என்னை விட்டுக் கொடுத்து இவரின் கொடுமைகளுக்குப் பலியாகி நான் இப்படி அழிஞ்சு போறதையே தர்மமென்று நீங்கள் சொல்ல வாறியளே? இந்தத் தர்மத்துக்கு உடன்பட்டுக் கற்பு என்ற கௌரவத்துக்காக என்னைப்போல, இந்தச்சமூகத்தில் எத்தனை அபலைப் பெண்கள் பலியாகியிருப்பினம். தாலி கட்டிய புருஷன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி. அவன் இளகாத கல்லாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அவனோடு முட்டி மோதிச் செல்லரித்துப் போய், காலம் முழுக்கக் கண்ணீர் நதி குளித்துக் கொண்டு வாழ்ந்து முடிப்பதே பெரிய கற்பின் சாதனை மாதிரி, இந்த அஙகீகாரத்தைப் பெறுவதற்காக ஓர் ஆணின் காலடியில் அவள் புழுவாகவே இருந்து மரித்துப் போவதையே, பெருமை என்று கருத என்னால் முடியேலை இதற்காக இந்தச் சாஸ்திர விதியை உடைத்தெறி;யவும் நான் தயங்கமாட்டேன். ‘ பொல்லாத சாஸ்திரவிதி’.
இதை அவள் சொல்லி முடித்து விட்டுத் தேம்பித்தேம்பி அழ நேர்ந்ததை, அவன் கனத்த துயரத்துடன் எதிர்கொள்ள நேர்ந்தது. நடேசனுடனான அவளுடைய உறவு முறிந்து போனதற்கு அவளின் விதி எழுதிய பாவக்கணக்கு மட்டுமல்ல காரணம். அதற்கு மேலாக ஓர் உண்மை,அவன் நெஞ்சை உறைய வைத்தது. மேலான குணங்களைக் கொண்ட பண்பட்ட வாழ்க்கையின் உத்தம குணாதிசயங்களையே பிரதிபலிக்கும் ஒரு துருவ சோதி மாதிரி அவள்.ஒட்டுமொத்தப் பாவங்களின் சாக்கடை போன்றே, குட்டை குழம்பிக் கிடக்கும். ஒரே குடும்பத்தில் தலையெடுக்க நேர்ந்த நடேசன் இப்படிப்பட்ட இவளுக்கு, மறு துருவம் போன்றே,மனதாலேபெருமையிழந்து நின்ற அவனை மணம் முடிக்க நேர்ந்த பாவம் மட்டும் தான் இவளுக்கு. அந்த பாவக்கறையைப் போக்க, அவனைத் தலை முழுகநேர்ந்த அவசியம் இவளுக்கு.அதன் பொருட்டு இந்த விலகலும் சரணாகதி மறுப்புக்களும் இவளால் மனம் துணிந்து ஏற்றுக்கொள்ள நேர்ந்த இவளின் இந்தப் புனிதமான உயிரின் மறுபிரசவத்திற்கு முன்னால், சமூகத்தால் அங்கீகரிக்க முடிந்த ஓர் ஆணுக்காக அடிமை விலங்கு பூட்டிக்கொள்ளும் கற்பு என்ற சாஸ்திர விதியும் அதன் தாற்பரியக் கோட்பாடுகளான சத்திய உண்மைகளும் தலைகுனிந்து நிற்க நேர்ந்ததை, ஊர்அறியப் பிரகடனமாகப்போகிற,அவளுடைய உயிர் பங்கமுறாத நிதர்சன வெற்றியாகவே, அவனால் உணரமுடிந்தது.
மூட்டை முடிச்சுகளுடன் அவனுடன் புறப்படவே தயாராகிப் புறப்பட்டு வந்திருக்கிற அவளைக் கைவாகு கொடுத்து அணைத்த வண்ணம் அவன் வாசலைத் தாண்டிப் ;புறப்படும் போது, ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்த நடேசனும் அவனது உறவு மனிதர்களும் அவள் அப்படிச்சொல்லாமலே, புறப்பட்டுப் போவதைப் பின்னாலிருந்து, ஓடிவந்து தடுப்பதற்குக் கூட மனம் வராமல் கோடியில் மறைந்து நின்றவாறே அதை வேடிக்கை பார்ப்தை அவன் மிகவும் கசப்புடனேயே எதிர்கொள்ள நேர்ந்தது. ஒழியட்டும்
சனியனென்று நடேசனுக்குத் தோன்றியிருக்கும். அவளை மனப்பூர்வமாக நேசிக்க முடியாமல் போன அவனுடைய கறைபட்ட மனம் அப்படித்தான் நினைத்திருக்கும்.
துரதிஷ்டவசமாகப் பொய்யின் கறைபட்டுப் புரையோடிப்போன தனது அர்த்தமற்ற திருமணவாழ்க்கையைத் துச்சமென உதறித்தள்ளி விட்டுப் போக நேர்ந்த பெருமிதக்களை மாறமல் சாரதா விடிவு காணத்துடிக்கும் ஒரு புதிய சகாப்த யுகத்தைநாடிக் கால் இடறாமல், வெற்றி நடைபோட்டுக் கொண்டிப்பதாய் அவனுக்கு உணர்வு தட்டிற்று. அவளுடைய அந்தப் பிரவேசமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூகம் சார்ந்த ஒழுக்க விழுமியங்களுக்கு மாறான ஒரு புரட்சிகரமான உயரிய கொள்கைப் பிரகடனமாக வெளிச்சம் போட்டுக் காட்ட நேர்ந்த உறுதி குலையாத துணிச்சல் மிக்க அவளுடைய அந்த உயிர் தீர்க்கமான மனோபலம் குறித்து அவன் தனக்குள்ளே கொண்டிருந்த சந்தோஷத்தையே வெளிக்காட்டிப் பிரதிபலிப்தைப் போல் அவன் முகம் ஒளிக்களை கொண்டு மின்னிற்று.
யாவும் கற்பனை
-முற்றும்-