கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 2,578 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்கத்துக் காணிக்குள் இருந்த பனையிலிருந்து பனம்பழம் ஒன்று எங்கள் வீட்டு முற்றத்திற் பொத் தென்று விழுந்தது. தாழ்வாரத்திற் கிளித்தட்டு விளை யாடிக் கொண்டிருந்த நான் ஓடிப்போய் அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்து அதன் தோலை இழுத்துப் பிய்க்கத் தொடங்கினேன். அப்போது விறாந்தை மூலை யிற் செபமாலையை உருட்டிக் கொண்டிருந்த என் பாட்டி தன் பஞ்சடைந்த கண்களை அகலத் திறந்து கொண்டே எங்காலடா மோனை பனம்பழம்?” என்று கேட்டாள். ”அந்த மரத்திலிருந்து விழுந்திச்சு” என்றேன் நான். பாட்டி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டாள்! சாம்பல் பூத்க் கிடந்த அவள் கண்களிலே ததும்பிய நீர், மூப்எருக்கம் விழுந்து தொங்கிக்கொண்டிருந்த அவள் – ளின் வழியாகச் சொட்டத் தொடங்கிற்று. யப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. பெத்தா அழுகிறாய்?” என்று பரிவோடு ன் நான். அதற்கு பதிலாகப் பாட்டி எனக்கு தையையே சொல்லி விட்டாள். இருபது வருடங் முன்னர் நான் சிறுவனாக இருக்கையிற்கேட்ட தக் கதையைப் பாட்டி சொன்னபடி அப்படியே உங்கட்குச் சொல்ல முடியாமைக்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

பொன்னம்பலம் பிள்ளை திரவியத் தேடத் திரைகட லோடியவர்தான், யாழ்ப்பாணத்து ஓடியலையும் பனாட டையும் மட்டக்களப்பிலே காசாக மாற்றிய அசகாய சூரர்தான். ஏன்-கொட்டியாபுரத்துக் களிமண்ணையே கீரிமலை ஆடி மாதத் தீர்த்தக் கரையிற் தங்கமாக மாற் றிய ரசவாத பண்டிதர் தான்! ஆனால் அவர் திடீரெ ன்று இவ்வுலகத்தை விட்டே போனபோது வெறும் பொன்னம்பலமாகத்தான் இருந்தார். ‘மேட்டு வயலும் நாட்டு உறவும் கைகொடுக்காது’ என்பது அவ்வூர்ப் – பழமொழி. பொன்னம்பலத்திற்கு மேட்டு வயல் கிடை யாது. ஆகவே பழமொழி பொய்த்துப் போக விடக் கூடாதே என்ற காரணத்தினால் பொன்னம்பலம் இப் படியாகக் கை நொடித்துப் போனதற்குக் காரணம் நாட்டுறவு தான் என்று ஊரிலே பேசிக்கொண்டார்கள். ஊர்ப்பேச்சிலும் ஓரளவு அர்த்தம் இருந்தது. பொன் னம்பலம் காலமாகிவிட்டதைக் கேள்விப்பட்ட யாழ்ப் பாணத்து வாடிக்கைக்காரர் எவரும் இந்தா” என்று நிலுவையைக் கொண்டு வந்து கொடுக்கவில்லை. அவர் கடல் கடந்து போய்த் திருகோணமலையிலும் மட்டக் களப்பிலும் நெல்லுக்கு என்றும் வைக்கோலுக்கு என்றும் கொடுத்த பணம் கடலில் போட்ட கல்லைப் -ே எவர்க்கும் தெரியாமலே இருந்தது! அவரின் ெ பனவு . கொள்வனவு எதற்குமே எழுத்துக் கா இருக்கவில்லை. எல்லாமாகச் சேர்ந்து, அவர் தம்க்கு-இல்லை தம் மருமகன் குமாரசாமிக்கென்று-வ. சென்ற தாவர சங்கமச் சொத்தெல்லாம் வீமன்க தில் இங்கிலீசில்’ விலாசம் எழுதத் தெரிந்தவர்கள் ‘மெயின் றோட்’ என்ற பிரதாபத்தைப் பெற்று கொண்டு, பிச்சைக்காரனின் முதுகெலும்பைப்போல மேடும் பள்ளமுமாய் ஓடும் கிரவல் ரோட்’டின் கிழக் கிலே அவர் குடியிருந்த காணியும், தம் இரு பையன் கள் மேல் இருந்த ‘மைனர் தத்துவமும்’ தான்.

ஆனால் அந்தக் குடியிருந்த காணிகூட ஆயிரம் ரூபாய் அடைமானத்தில் இருந்ததென்பது அவர் சிவபதஞ் சேர்ந்த மூன்றாம் நாள் வெளியாகி விட்டது! அந்தக் காணியை அடவு பிடித்திருந்தவர், ”ஒரு மாதத்திற்குட் கடனை அடைக்காவிட்டாற் காணியை ஏலத்தில் விட்டு விடுவேன்” என்று அறுதியிட்டுச் சொன்ன போது குமார சாமி ‘இல்லிடமில்லாதவனுக்கு நல்லிடமில்லையே’ என் றெண்ணி அசந்து போனார்! தன் மாமனார் திடீரென்று வாயைப் பிளந்தபோது கூட அவர் அவ்வளவாகக் கவ லைப் பட்டிருக்க மாட்டார்.

இந்த நிலையிற் தான் இருபத்தைந்து வருடங்கட்கு முன்னே சிங்கப்பூருக்குச் சென்று அங்கே புகையிரதப் பகுதியில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த சிற்ற ம்பலம் அவர்கள் பென்ஷன் பெற்றுக்கொண்டு தமது பிறந்த பொன்னாடான வீமன்காமத்திற்குக் குடும்பத் தோடு வந்து சேர்ந்தார்.

சிற்றம்பலத்தின் குணவிசேடங்களைப் பற்றி வீமன் காமம் அறியாது. ஊருக்குத் திரும்பி வந்த பிறகும் அவர் ஊரவர்களோடு ஓடும் புளியம்பழமும் போலத் * பழகிக் கொண்டார். சிங்கப்பூர் கோட்டும் சூட்டு’ ‘காட்சி கொடுத்தாலும், அவர் வழுக்கைத் தலை அபாரமான திறமையோடு முடிந்து வைத்திருக் குடுமி, தலைப்பாகையைக் கழற்றியபோதெல்லாம் சிந்து விடும். ஏறு நெற்றியில் எப்போதும் துலாம்ப மாகத் திருநீறு சாத்தியிருப்பார். அவரை நல்லவர் என்று சொன்னாற் பாதகமில்லை. ஆனால் வாழ்க்கையில் வெற்றி கண்டவர் என்று சொல்வது தான் சாலப் பொருந்தும். அந்தச் சிற்றம்பலம்பிள்ளை தம் பிதிரார்ச்சித வீட்டில் இருந்து கொண்டு, தம் பெண்கட்குச் சீதனங் கொடுப்பதற்காகத் தம் கிராமத்திலேயே வேறுகாணி கள் வாங்கக் கண்ணிலே எண்ணெயை ஊற்றிக் கொண்டு காத்திருந்தார். அவர் காதிலே பொன்னம்பலத்தின் குடி யிருக்கும் காணிச் சங்கதி அடிபடாமல் இருக்குமா? அவர், குமாரசாமியிடம் காணியைத் தமக்கு விலைக்கிரயமாக விற்பதானால் தாம் மைனர்’ தத்துவம் பெற ஒழுங்கு செய்வதாகவும், கடன்காரனின் பணத்தைக் கொடுத்து விட்டுக் காணியை மீள்வதாகவும் சொன்னார்.

குமாரசாமியிடம் கடனை அடைக்க வக்கில்லாமல் இருந்தது. கடன்காரன் கோட்டு உத்தரவைக் கொண்டு வந்து குடியிருக்கும் காணியை ஏலத்தில் விற்பதற்குப் படலையில் நின்று பறையைத் தட்டினான் என்றால் அதன் பின் வீமன்காமத்தில் அவர் தலை நிமிர்ந்து வாழமுடி யுமா? தொட்ட தெல்லாம் பொன்னாக மாற்றிய பொன் னம்பலத்தின் ஆத்மாதான் சாந்தியடையுமா? யோசித்து யோசித்துக் குழம்பிய குமாரசாமி கடைசியாய் மூன் றாம் பேர் அறியாத வண்ணம் சிற்றம்பலத்துக்குக் காணியை இரண்டாயிரத்துக்கு விற்று விட்டு மீதிப் பணத்தோடும் அதாவது முத்திரைச் செலவும், எழுத் துக் கூலியும் போக மீதிப் பணத்தோடும் தன் மனைவி மைத்துனப் பிள்ளைகள் சகிதம் தன் தாய் வீட்டிற் குடியேறினார். அந்தக் காணியை விட்டுக் கடைசியாய் வெளியேறிய போது, அவர் மனைவி சிவபாக்கியம் விட் கண்ணீர் நான் ஒரு கடதாசிக் கப்பல் விட்டு விலை டப் போதுமான தாயிருந்ததாம்.

காலம் கடந்தது. குமாரசாமி ஓரளவுக்கு அதி விஷயங்களை எல்லாம் மறந்து போனார். சிங்கப்பூ பென்ஷனர் சிற்றம்பலமும் தாம் புதிதாக வாங்கிய காணிக்குள் இருந்த பழைய வீட்டைத் திருத்திக்கொண்டு தம் குடும்பத்தோடு குடியேறினார். அவர் வாழ்வைக் காணும் போதெல்லாம் சிவபாக்கியத்தின் மனது புகையும் ; அகாரணமான கோபம் ஒன்று சிற்றம் பலத்தின் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் எழும். உடனே அவள் கண்கள் கண்ணீரை உகுக்கும். இந்த மனோவேதனை பொன்னம்பலத்தின் உடன் பிறந்த தங் கையான சிவபாக்கியத்தின் மாமியாருக்கும் இருக்கும்.

காலப்போக்கிற் குமாரசாமி தன் மாமனாரின் செல் வாக்கைப் பயன் படுத்திக்கொண்டு, அவர் செய்த தொழிலையே விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்திக் கையிலே நாலுகாசு சம்பாதித்துக் கொண்டார். இந்தப் புதுப்பணத்தைக் கண்ட அவர் மனைவி சிவபாக்கியம் திரும்பவும் தன் தகப்பனாரின் காணியை விலைக்கிரய மாக வாங்கி விடவேண்டும் என்று எண்ணத் தொடங் கினாள். தலைமுறை தலைமுறையாக ஆண்டனுபவித்த காணியல்லவா? அந்தப் பாசம் விட்டுப் போகுமா? தன் ஆசையைப் பேச்சுவாக்கிற் சிற்றம்பலத்திடமே ஒரு நாட் கேட்டுவிட்டாள் சிவபாக்கியம்! ஆனால் எவனாவது வாங்கிய காணியைத் திருப்பிக் கொடுப்பானா? அதுவும் சிங்கப்பூர் சிற்றம்பலத்திற்கென்ன, அதை விற்க வேண்டிய தரித்திரமா வந்து விட்டது?

சுவபாக்கியத்தின் ஆசை நிராசையாகிவிட்டது. தக்கு ஒரே புகைச்சலாகப் புகையத் தொடங்கிது. அந்தக் கோபத்தை எல்லாம் எல்லை கடந்து ‘ன மாமியாரின் காணிக்குள் வரும் சிற்றம்பலத்தின்டு, கோழி போன்ற வாயில்லாப் பிராணிகளிடம் பாட்டத் தொடங்கினாள். பதிலுக்கு மிசிஸ் சிற்றம்பலம் என்கிற செல்லம்மாவும் இந்தக் கைங்கர்யத்தை நடத்தினாள்.

இப்படியாகத் தொடர்த்த துவத்த யுத்தம் ஒரு நாள் முற்றிவிட்டது. அதன்பலனாக அவ்விரு பெண்களினதும் ஏட்டிலே எழுதாத பிள்ளைத் தமிழாயிருந்த வம்சாவழி யையும், பூர்வாசிரம இரகசியத்தையும் இதமான வாய் வார்த்தைகளில் வீமன்காமத்தினர் தெருவிலே நின்று காது குளிரும் படியாகக் கேட்டு ரசித்தனர். இந்தப் பிள்ளைத் தமிழைக் கேட்க வசதியிராததால் சிற்றம் பலமும் குமாரசாமியும் தற்கொலையினின்றும் தப்பித்துக் கொண்டனர்!

கடைசியாய் இந்தச் சொற்போரைக் கேள்விப்பட் டார் சிற்றம்பலம். அவர் எதிலுமே நறுவிசானவர். பிறர் சோலிக்குப் போகாதவர். எனவே இந்தத் தகராறைத் தீர்த்துக்கொள்ள இரு காணிக்கும் இடையில் இருக்கும் பொது வேலியை மதிலாகக் கட்டிவிட்டாற் போகிறது என்று எண்ணிக்கொண்டார். அவர் நினைத் தாற் பிறகு என்ன? அடுத்த நாளே யாழ்ப்பாணப் பட்டி னம் போய் உலாந்தாவைக் கூட்டிக்கொண்டு வந்து உறு தியிற் சொல்லப்பட்ட தன் காணியை அளந்து பிரி விட்டுக் கயிறு போட்டுக்கொண்டார். குமாரசாமி இப் போது குடியிருக்கும் அவர் தாயாரின் காணிக்கும், சிற் றம்பலம் வாங்கியிருந்த பக்கத்துக் காணிக்கும் ஒரே உறுதிதான்! இரண்டையும் பொன்னம்பலத்தின் தகப் பனார் தன் மகளுக்கும் மகனுக்கும் ஆளுக்கு அரைவாசி யாகக் கொடுத்திருந்தார்.

உலாந்தா பிரிவிட்டுக் கொடுத்துக் கட்டியிருர் கயிற்றின் படி, குமாரசாமியின் தாயாரின் காணி ருந்த விடலிப் பனை சிற்றம்பலத்தின் காணிக்குட்போ. விட்டது. அதைப்பார்த்த குமாரசாமியின் தாய் பதறிப் போனாள். தன் சொத்து, சுதந்திரம் எல்லாமே பறி போய்விட்டதாகத் துடித்தாள், அழுது புரண்டாள்!

என்ன செய்தும் என்ன? சிற்றம்பலம் சற்றுமே அசைந்து கொடுக்கவில்லை. அன்றைக்கே அவர் அத்தி வாரம் போட்டு வளவின் தெரு மூலையிலே மதிலைக் கட்டுவதற்காகத் தூணை எழுப்பிவிட்டார். ‘அரசாங்க மதிப்பான இருபது ரூபாவை விடவிப் பனைக்குக் கொடு ப்பேன்’ என்றபோது அவர் முகத்திலே வெற்றிப் புன் னகை சுடர் விட்டது; நெற்றியிற் துலாம்பரமாகத் – தீட்டியிருந்த திரு நீற்றுக்கும் முன்னே தெரிந்தது!

அதைத் தொடர்ந்து எழுந்த போர் வீமன்காமத் தையே அங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது. குமார சாமியின் தாயாரின் புலம்பலைக் கண்ட ஊர்ப் பெரிய மனுஷர்கள் சிலர், குறைந்தது அந்த விடலிப் பனையை யாவது விலக்கி வைத்து மதிலைக் கட்டும்படி சிற்றம் பலத்தை வேண்டிக்கொண்டனர்!

அதற்குள் அப்போது தான் படகால் இறங்கி வந்த குமாரசாமி அங்கு வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் வராததுமாக, அவர் தாயாரும் மனைவி சிவபாக்கியமும் குய்யோ முறையோ என்று தலையிலடித்துக்கொண்டே எல்லாக் குற்றத்தையும் சிற்றம்பலத்தின் மீது சுமத்தி ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்கள்!

எதிர்க்கட்சியை ஆராயாமலே சிற்றம்பலத்தின் மீது சீறினார் குமாரசாமி. இந்த நிலையில் அந்த விட விப் பனையை விட்டுக்கொடுப்பது பகைவனுக்கஞ்சிப் னிவது போற் தோன்றியது சிற்றம்பலத்திற்கு, எனவே உறுதியிற் சொல்லப்பட்ட காணியில் ஒரு அங்குலத் தைக்கூட விட்டுத் தரப்போவதில்லை; நீர் செய்கிறதைச் செய்யுங்காணும்” என்று எழுந்தமான மாகவே பதிலளி த்தார் அவர். அதற்கு மேல் எவருடைய சமரசமும் அவரிடம் செல்லுபடியாகவில்லை.

ஆத்திரம் மேலிட்டுப் பிரளயகால ருத்திரனைப்போ லாகிவிட்ட குமாரசாமி ஓடிப்போய் ஓர் அலவாங்கை எடுத்து வந்து கட்டி யெழுப்பப்பட்டிருந்த தூணை இடி த்துத் தரைமட்டமாக்கினார்! உலாந்தா கட்டியிருந்த கயிற்றைப் பிய்த்து எறிந்தார். வேலி ஆமணக்குகளை எல்லாம் வெட்டிச் சங்கரித்தார். அதற்குமேல் ஏதும் விபரீதம் நேராவண்ணம் ஊரவர்கள் தடுத்து விட்டனர்.

ஆனாற் சட்டந் தெரிந்த சிங்கப்பூர் சிற்றம்பலம் சும்மா இருப்பாரா? கிராமாதிகாரியிடம் முறைப்பாடு பண்ணினார் அவர். எல்லை மீறிப் பயங்கரமான ஆயுதத் தோடு வந்து கலகம் பண்ணியதாகச் சிற்றம்பலத்தின் செல்வாக்கில் அரசாங்கமே குமாரசாமியின் மீது வழக் குத் தொடர்ந்தது. குமாரசாமியும் பணத்தை பணம் என்று பாராமல் இறைத்து வழக்காடினார். கடைசியாய் ஓட்டாண்டியாய் விட்ட நிலையில் அவருக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனையுங் கிடைத்தது.

சிறை சென்ற குமாரசாமி மறுபடியும் வீமன்காமத் திற்குத் திரும்பி வரவில்லை. மறியலுக்குப் போய்விட் டேனே என்ற அவமானத்தில் திரும்பவும் வீமன்காம த்தவர் முகத்தில் விழிக்காதபடி மலேயாவுக்கோ , எங் கேயோ போய் விட்டார்.

பாட்டி இவ்விடத்திற் கதையை முடித்துவிட்டு என் னைக் கட்டித் தழுவிக்கொண்டு அழத் தொடங்கினாள். எனக்கு ஒன்றுமே விளங்காமல் ‘ஏன் பெத்தா அ கிறாய்?” என்று கேட்டேன். அதற்குப் பாட்டி சொ’. விடை, இருபது வருடங்களின் பின்னால் இன்றைக் என் காதுகளில் ஒரு அட்சரங்கூடப் பிசகாமற் சே டுக்கொண்டிருக்கின்றது. அவள் சொன்னாள்: ‘ அந்த குமாரசாமி தான்ரா உன்ரை அப்பா. நான் தான்ரர் அவனை மறியலுக்குக் கொடுத்த அவன் அம்மா. அந்த விடலிப்பனை தான்ரா இதோ இங்க நிற்கிற இந்தப்பனை.

“அதின்ர பழத்தாண்டா இது.”

என் தலை சுற்றியது. நான் கையிலே வைத்துக் கொண்டிருந்த அந்தத் தேம்படு பனையின் திரள பழம் எனக்கு ஆலகால விஷ உருண்டைபோலத் தோன்றிற்று. கோபத்தோடு அதைத் தூர எறிந்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன். வானுற வோங்கி வளம்பெற வளர்ந்த கற்பக தருவான அந்த ஒற்றைப் பனை தன் ஓலைகளைக் காற்றிலே சலசலக்க விட்டுக்கொண்டே நின்றது. ஒரு சிறிய விஷயத்தைத் தங்கட்குள்ளே சமரசமாகத் தீர் த்துக் கொள்ள முடியாத ஊரவரின் அறியாமைக்காக அது அழுததோ சிரித்ததோ என்று எனக்கு விளங்க வில்லை.

– ஈழகேசரி-10-5-53

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *