அந்த மரத்தை நீங்கள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 4,865 
 

எங்களது எஸ்டேட்டில் எங்கே இருந்து பாத்தாலும் முழுமையாக  தெரியூம். கறுப்பு நிறத்தில், ஒரு சொட்டு பச்சையை தவறுதலாக கலந்துவிட்டது போன்ற நிறத்தில் இலைகள்.அந்த மரத்தின் அடர்ந்த கிளைகளை என்றைக்குமே சூரியகதிர் ஊடுறுவியதில்லை.எவ்வளவு  மழைபெய்தாலும் ஒரு துளி தவறி கூட அந்த இடத்துல ஒழுகமுடியாத மாதிரி அவ்வளவு அடர்த்தியான மரம்.அங்கிருந்து தான் பலவருடம் யாருக்கும் எந்தகுறையூமில்லாமல் குசும்பன் மாடன் அருள்பாலித்து கொண்டிருந்தார்.

இது அவருடைய ஆயிரம் புனைப்பெயர்களில் ஒன்றுதான்.அவருடைய  உண்மையான பெயர் என்னவென்று கண்டுபிடிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.கேள்வி கேட்க யாரும் இல்லையென்ற  தைரியத்தில் எஸ்டேட்டுல இருக்குற ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கொரு பெயர் வைத்து குமபிட்டாங்க.பெயர்களின் எண்ணிக்கை கூடினால்  மரியாதையூம்,பூசையூம்  நகரத்தில் இருக்கும் சாமிகளுக்கு கிடைக்கும் அளவிற்கு தனக்கும் கிடைக்கும் என நம்பி அவரும் அனைத்து பெயர்களையூம் ஏற்றுக்கொண்டார்.அவரும் கொஞ்சம் அடிக்கடி பக்தகோடிகளுக்கு உண்மையாவே அருள்பாலித்ததால் மற்றைய காவல் தெய்வங்களோட ஒப்பிடும்பொழுது இவரை கொஞ்சம் வசதி வாய்ப்போடத்தான் வைத்திருந்தார்கள்..

வருசம் தவறாம எல்லா சனமும் கூடி படையல் போட்டு பெரிய திருவிழா மாதிரி பூசை செய்யப்பட்டு, ஒரு குறையூம் இல்லாம சந்தோசமா தான் இருந்தாரு.போன வருசம்; கூட வெளிநாட்டு நிதியூதவியில்  புதிதாக  சவூண்ட் சிஸ்டம் ஒன்றும் கொடையளிக்கப்பட்டது.நம்ம மாடனுக்கு சின்னதா ஒரு கோபுரம் கூட கட்டபோறதா ஊருக்குள்ள ஒரு பேச்சும் இருந்தது.அதுTk;  ஒருவகையில் நல்லது தான்.ஊரை காக்கிற சாமிய, இந்த காக்காய்களிடமிருந்து காப்பாற்ற பண்டாரம் பெரும்பாடு பட்டார்.இதனால் தனக்கே மாசத்துக்கொருதரம் மட்டுமே தண்ணி காட்டுற பண்டாரம் எந்தநாளும் சாமிய குளிப்பாட்ட வேண்டியதா இருந்த கொடுமையூம் நடந்தது.

சடங்குக்கு வந்த இளம்பெண்ணுக்கு எந்தளவூக்கு முகத்துல பவூடர்பூசி நம்ம ஊருல கூத்து காட்டுவாங்களோஇ அதே மாதிரி சாமி முகத்திலயூம் மஞ்சள் இகுங்குமம் என பூசி அவரு முகத்த அவராலேயே கண்டுபுடிக்க முடியாதமாதிரி செய்துவைத்திருந்தார்கள்.சாமுத்ரிகா லட்சணங்களுடன் அந்த சிலையை புதிதாக செய்ய போவதாகவூம் காற்றில் கதையொன்று இருந்தது.அவரது செல்வச்சௌpப்புக்கும் எந்த குறையூம் இருக்கTமில்லை.அந்த உண்டியல் இரண்டு திங்களுக்கொருமுறை நிரம்பிஇ புதிய உணடியல் பிரதிடை செய்யப்பட்டு வந்தது.அந்த பணத்துல சாமியூம் கொஞ்சம் கலராகி போனமாதிரி இருந்தது.

ஆனா இப்ப கொஞ்ச காலமாக சாமிக்கு இருக்குற மவூசு கொஞ்சம் குறையத்தொடங்கியிருந்தது.சாமியை விட சாமியார்களை நம்பும் காலம்.இங்கேயூம் சாமிக்கு வில்லனா ஒரு சாமியார் வந்தார்.சாமிக்கு எதிர்மரத்துல கடையை போட்டார்.கொஞ்சம் கொஞ்சமா சாமியூடைய பக்தகோடிகளை எல்லாம் தட்டிப்பறிச்சிக்கிட்டாரு.சிவலிங்கத்தை வாயில இருந்து எடுக்குறதுஇ பச்சை மரத்தில்  இருந்து பால்இகுங்குமம் வரவைக்கிறதுஇ நடக்காத குழந்தைய நடக்க வைக்கிறதுஇஊமைய பேச வைக்கிறதுஇசாத்தான் என கொஞ்சம் பேரை நடிகக வைத்து அவர்களிற்கு நரகத்தில் சிட்டிஸன்~pப் பெற்றுதருதல்இசொர்க்கத்தில்  அவரது பக்தகோடிகளுக்கு இடம்பிடித்து தருதல் போன்ற ரியல் எஸ்டேட் வியாபாரம் என பல உத்திகளை கையாண்டு சாமிக்கு பலமான போட்டியாக மாறினார்.

நம்ம சாமியூம் ஒரு காலத்துல இந்த மாதிரி அற்புதம் எல்லாம் செய்திருந்தார் என்பதையெல்லாம் மக்கள் மறந்தே விட்டிருந்தார்கள்.வயதாகி விட்டால் இடத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு கௌரவமாக அவரே விலகிக்கொள்ள வேண்டும் என அவர்கள் எண்ணிணார்கள்.அதிலும் உண்மை இருக்கதான் செய்கிறது.சாமியார் பெண்பக்தகோடிகளுக்கு  குழந்தை பாக்கியம் கூட கொடுக்கத் தொடங்கியிருந்தார். இந்த வயதில் அவரிடம் இதுபோன்ற சாகசங்களை எதிர்பார்க்கமுடியாதென்று தெரிந்த மக்கள் அவரை மறக்கத் தொடங்கியிருந்தததில் ஆச்சரியமில்லை.(இந்த வரிகள் சிலேடை நோக்கத்தில் எழுதப்படவில்லை என்பதை கதாசிரியர் இங்கு பதிவூ செய்து கொள்கிறார்)

இங்க இருக்கிற எல்லோருக்கும் தனிப்பட்ட வகையில் எவ்வளவோ உதவிசெய்திருக்கிறார். எனக்கு  கூடஇ எனது பல நாள் வேண்டுதல்களுக்கு இணங்கி இன்னமும் பாடசாலைக்கு ஒரு இங்கிலிஸ் டீச்சரஇ;மெக்ஸ் சர் என யாருமே கடந்த நான்கு வருடகாலமாக அரசாங்கத்தை நியமிக்காமல்  செய்திருக்கிறார்.நீண்ட நாட்களாக எங்களை கொடுமைபடுத்திய கணித பாட ஆசிரியரை அங்கிருந்து விரட்டியமைஇஎனக்கு சரியாக பரீட்சைக்கு முதல் நாள் காய்ச்சல் உருவாகியதாக அம்மாவை நம்ப வைப்பது என அவர் செய்த சேவைகள் ஆயிரம்.

நான் மட்டுமே நன்றிக்கடனை மறக்காமல் இப்பொழுதும் சாமியை அடிக்கடி பார்த்து வந்தேன். எந்த நாளும் காலையில் அந்த வழியால போறப்ப கும்பிட்டுவிட்டு போவேன். அந்திக்கு சூரியன் மறையூற வரைக்கும் அவரேட உட்கார்ந்து இருப்பேன்.அவரோட பேசிக்கொண்டு  இருப்பேன்.அவரும் எல்லாவற்றையூம் கேட்டு தலையாட்டிக்கொண்டு இருப்பார்.

சாமியார் சாமிக்கு எதிராக புதிய ஆயூதத்தை எடுத்திருந்தார்.சாதி மனினுக்கு மட்டுமல்ல சாமியை கூட கட்டிபோடக்கூடியது.அதுவரைக்கும் அவருடைய வரலாறு எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை பற்றி யாரும் ஆராய்ந்;ததில்லை.சாமியார் இந்தியா வரை அவரது குடும்ப வேர்களை தோண்டி சென்று அவரது சாதியை கண்டறிந்தார்.சாதியை வைத்துஇஅவரை மறுபயூம் விழுத்தினார்அந்த சாமி நம்ம சாதிக்குரியதல்ல என சொல்லி புதுசா ஓர குண்டை போட்டார் சாமியார்.சாதியை வைத்து அவரை கடவூள் என்ற படிமத்தில் ஒதுங்க கூட இடம் கொள்ள முடியாதவாறு அளவிற்கு வாதங்களை நிறுவினார்.மொத்தமாக சாமி கீழே விழுந்தார்.

சாமியூம் சளைக்காமல்இ இறுதியில் பழைய கஸ்டமரஸ்ஸ பிடிக்க புது உத்தியை கண்டறிந்தார்.எந்த நாளும் நடுநிசியில்இ கையில் அருவாளுடன்  ஊரை சுற்றிவரத்தொடங்கினார்.பயத்தின் மீதே எல்லா நம்பிக்கைகளும் மரபுகளும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.இந்த தத்துவத்தை நம்பி அவரும் வாழைப்பழம் கூட வெட்டமுடியாத அந்த அருவாவை துhக்கிகக்கொண்டு ஊரில எல்லாத்தையூம் பயமுறுத்த கிளம்பினார்.இராத்திரியில் வேலை முடித்துவிட்டு வருகிற கொஞ்சம்பேர்  குசும்பன் மாடன் அருவாளுடன் நடந்து செல்வதை பார்த்துவிட்டு மூர்ச்சசையாகினர். சிலர் அருள் வந்து ஆடி மாடனையே பயமுறுத்தினார்கள்.கொஞ்சம் ஊருக்குள் பயம் வந்தது போல இருந்தது.

‘சாமியின் கோபம் கூடி ஊர் அழியபோகுது.நூறு வருசத்துக்கு முன்னுக்கயூம் இதே மாதிரி நடந்து ஊருக்குள்ள எல்லாரும் நோய் வந்து செத்தாங்க’ என ஊரி;ல் இருக்குற அத்தனை பல்லு போன வாயூம் அசைந்தது.கொஞ்சம் மாடன் பக்கம் காற்று வீசுவது போல தென்பட்டது.பெரும்பாலானோருக்கு சாமி பற்றிய நினைவூ மீண்டும் வந்தது.ஒன்றிரண்டு குடு;ம்பம் சாமியிற்கு படையல் வைக்க ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள்.

சாமியின் திடிர் செல்வாக்கு அதிகரிப்பை  உணர்ந்த சாமியர்இஅவருடைய டகால்ட்டி வேலையை கட்டுபடுத்த தன்பக்தகோடிகள் எல்லோருக்கும் வீட்டின் கதவில் கட்டசொல்லி தாயமொன்றை கொடுத்தார்.தாயம் அவரை தெருமுனைக்குள் கூட நுழையவிடாமல் தடுத்தது.அதையூம் மீறி சில இடங்களில் நுழைந்தபொது பைரவவகவானை ஏவி சதித்திட்டம் தீட்டினார்.அவருடைய இந்த திட்டமும் கடைசியில் தோற்றுபோனது.சாமியாரை விடவூம் பயங்கரமான சக்தி எங்கவீட்டுபக்கம் வரவிடாம தடுத்துக்கொண்டிருந்தது.ஒன்னு அப்பாவூட்டு கொறட்ட சத்தம் அதுவூம் இல்லாட்டி  அம்மாயி ராத்திரில போடுற குசு நாத்தமா இருக்கனும்.ராத்திரில மாமாpயாரும் மருமகனும் சேந்து சாமிய கொல்லபக்கம் கூட வராமவிரட்டிக்கிட்டு இருக்காங்க.

கொஞ்சநாள் கழித்து சாமிய பார்க்க மரத்ததடிக்கு போனேன்.அந்த இடமே மாறி இருந்தது.பழைய மாதிரி இருக்கவில்லை.புதுசா போட்டிருந்த பல்ப்செட்ட கூட கழட்டிவிட்டிருந்தார்கள்.ஒரு வருசத்துக்கு முன்னாடி இதே இடத்துல இதே நாள்ல திருவிழா நடந்துத சொன்னா யாருமே நம்பமுடியாத அளவூக்கு அந்த இடம் பாழடைந்துபோயிருந்தது. மரத்துல இருந்து இலைகள் எல்லாம் விழுந்து மாடனையே முழுசா மூடியிருந்தது.மாடனை பார்க்கவே பாவமா இருந்துது.;என்ன தான் இருந்தாலும் ஒரு காலத்தில் சகல மரியாதைக்கும் பாத்திரமாணவாக இருந்துருக்காருல்ல.மனசு அவரை அப்படி பார்க்க படபடத்தது.மரத்தடிய கூட்டத்தொடங்குனேன்.

அப்பொழுது பின்னால் நின்று யாரோ பார்ப்பதும்ப போலிருக்க திரும்பிபாரத்த்தேன்.குசும்பன்  மாடனுக்கு முன்னால் ஒரு எண்பது வயசு இருக்ககூடிய தாத்தா உட்கார்ந்திருந்தார்.அவருடைய முகம் ஒரு வித்தியாசமான மஞ்சள் நிறத்தில் இருக்க கை கால்களோ அதற்கு தலைகீழாக கறுப்பில் முக்கியெடுக்கப்படவை போல இருந்தன.ஒழுங்காக போட்டோப் படிக்காத ஒருவன் வெள்ளை காரனுடைய முகத்தை ஒரு நீக்ரோ உடலோடு மார்ப்pங் செய்யப்பட்டது போல அவருடைய உடம்பு இருந்தது.நெத்தியில பெரிச விபூதி பூசி பெரிய குங்குமபொட்டோடு வெறும்மார்போடு உட்கார்ந்திருந்தார்.அந்த வயசுலயூம் வயிறு இறுகி கட்டுகட்டாக இருந்தது.

அவர் என்னை பார்த்து சிரித்தார்.ஆம். ‘இப்ப என்னா! அந்த சாமி அங்க எந்திரிச்சு வந்துருக்காருனு சொல்லப்போறான் இவன்’ என நீங்கள் முணுமுணப்பது சரி.அவரே தான் வந்தார்.புதுமைபித்தனை சந்திக்க சிவபெருமான் வந்தார்.இந்த எளிய எழுத்தாளனை (புதுமைபித்தன் போல சிவபெருமானை வரவைக்க சக்தி இல்லை என்பதனாலும்இ எழுத்தாளனுக்கு கொஞ்சம் எழுத்து வரட்சி மிகுதியாய் இருப்பதனாலும்) காண இந்த குசும்பு மாடனே வந்தார்.

‘இந்த இளவெயிலும் புனல்காற்றும் புணரும் வேளையில் நீ காணும் காட்சி நிந்தன் பூர்வபலன் என்ற ஞானமுணராமல் எந்தன் முன்னால் நிற்கும்இ உலகியல் துன்பங்களில் கட்டுண்டு நிற்கும் நின்னால் என்னை உணர முடிகிறதா?’ என கேட்டார்

அவர் சொன்னது சத்தியமா ஒன்னும் வெளங்கல.நம்ம கமலஹாசன் பேசுறது கூட கொஞ்சமாவது எனக்கு  வெளங்கும்.இரண்டு பக்கத்துக்கும் சேர்த்துவைத்த மாதிரி தலைய ஆட்டினேன்.அவர் புரிந்துகொண்டு மறுபடியூம் சிரித்துககொண்;டு என் பக்கத்தில் வந்து உட்கார்நதார்.நான் அவரையே கண் அசைக்காம பாரத்துக்கிட்டிருந்தேன்.மறுபடியூம் அதே மாதிரி பேசுவாரோ? என மனசு வேற திக்கு திக்குனு இருந்தது.

‘பல திங்கள் நீ என்னுடன் கழித்த கணங்களின் நீட்சியாய் இங்கு திருமுகம் அருளியிருக்க நீ ஏன் அச்சமென்னும் இருளுக்குள் உன்னை ஒளித்துக்கொள்கிறாய்.அஞ்ஞானம் உன்னை தடுத்து நிற்கிறதா இல்லை அந்த போலி சாமியாரின் கபளீகர ஊழ்பிடியில் நீயூம் சிக்கிக்கொண்டாயா? என்றார்.

சத்தியமா எனக்கு அதுக்கமேல அவரை சகிக்கமுடியல.முடிஞ்சவரைக்கும் பல்ல கடிச்சிக்கிட்டு கேட்டுக்கிட்டு இருந்தேன்.பொறுக்கமுடியாம ‘எப்பயூம் நீங்க இப்படி பழைய ப்ளக் அண்ட் வயிட் படத்துல வார மாதிரி சுத்தமிழ்லல தான் பேசுவிங்களா?  உங்களுக்கு எங்கள மாதிரி பேச வராதா?’ கேட்டேன்.

அவர் மறுபடியூம் சிரிச்சிக்கிட்டே ‘குழந்தாய் உலகின் செம்..’ என தொடங்கினாரு.சாமி இதுக்கு எங்க இங்கிலிஸ் டீச்சரே பரவாயில்ல.சொல்றது ஒன்னும் வெளங்காட்டியூம் கேட்டுக்கிட்டாவது இருக்கலாம்.

‘குழந்தாய் நான் சிறுதெயவம்.கடவூள் எல்லாம் இப்படித்தான் பேச வேண்டும் என்பது தானே விதி.அப்படித்தானே இத்தனை காலமும் எல்லா இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த மொழியில் அல்லவா உரையாடுகிறார்கள். ஏன் கடைசியாக சிவபெருமான் புதுமைப்பித்தனுடன் கூட செம்மொழியில் தானே பேசனார்! இப்படித்தானே திரைப்படங்களில் கூட பேசியிருக்ரோம்.இதுதானே உலக நடைமுறை: கடவூள் செம்மொழியிலே பேசவேண்டும் எனபது  கதைகளிலும் நாவல்களிலும் இப்படித்தானே பேசியூள்ளோம்..நான் இப்போது இப்படி பேசுவதில் என்ன தவறு?’ எனறார்.

‘ஆமா அதுவம் உணம தான்..சிவன்!பார்வதி!விஷ்ணு மாதிரி பெரிய தலைக்கட்டுங்க இப்படி பேசியிருந்தா பயந்துருக்கமாட்டேன். இல்லைதானே.நீங்க கிராமத்து தெய்வம் தானே! அதுல வேற நம்ம எஸ்டேட்முகாரர். அதான் டக்குனு வெளங்காத  தமிழ்ல  பேசுனதும் பயந்துட்டேன். கோவிச்சுகாதீங்க.சரி என்னா இந்த பக்கம்? ஏதாவது முக்கிய வேல ஏதும் இருக்கோ?’ என்றேன்.

‘இல்லை சிறுவனே. உடம்பு வலி நோகுகிறது.அதுதான் கொஞ்சம் காற்று வாங்கலாம் என வந்தேன்.இந்த சிலைக்குள்ளேயே அமர்ந்து ஒரே வலி..இந்த சிறிய சிலைக்குள் என்னை வடித்த அந்த சிற்பி மட்டும் கிடைத்தான் என்றால் கண்டிப்பாக  கழுமரமே ஏற்றிவிடுவேன்.அய்யோ என்ன வலி ‘என இடுப்iபில் கைகளை வைத்துக்கொண்டு களைப்பாக சொன்னார்.

தெடர்ந்து ‘அம்மா என்ன வலி.கை கால்களை வசதியாக நீட்டி தூங்கவழியில்லை.அதில் தங்கியே பாதிநோய் வந்துவிட்டது.கால்களை  மடக்கி  ஒடுக்கி உட்கார்ந்து  முழங்கால்  எப்படி வீங்கியூள்ளதென்று பார்.இதில் முதுகுவலி  இடைநடுவே பிராணனை வாங்குகிறது.. சிலவேளைகளில்  வலி கூடி தலையை ஐந்தாறு நாட்களுக்கு நிமிர்த்தகூட முடிவதில்லை..கண்பார்வையூம் மங்கி கொண்டு வருகிறது.முன்னை மாதிரி சாப்பிடவூம் முடிவதில்லை பற்கள்வேறு ஆடிக்கொண்டிருக்கின்றன. இந்த கொடுமையில் இந்த காக்காய்கள் வேறு அடிக்கடி மலஜலத்தை பண்ணி விடுகிறது.’ என கிட்டதட்ட ஐந்து நிமிசத்திற்கு அவருக்கிருக்க வலிகளை பட்டியலிட்டுகொண்டிருந்தார்.ஒரு டொக்டர் பல  தலைமுறைகளக்கு சொத்து சேகரிக்க கூடிய அளவூ பெரிய லிஸ்ட்டாக அது இருந்தது.அம்மாச்சியிற்கு இருக்கும் வலிகளெல்லம்  வெட்கி சிலவேளை தற்கொலை செய்து கொள்ளலாம்இ இவரின் இந்த லிஸ்டை பாரத்ததால்..

நான் ‘உங்களுக்கு ஏதும் பிரச்சினை இல்லைனா நான் எங்க அம்மாச்சியோட மருந்து எல்லாத்தயூம் எடுத்துட்டு வந்து தாரேன் அவளுக்கும் இதே பிரச்சினதான்.அவளுட்டு பாம் எல்லாம் பூசினா உங்க வலி பறந்துரும்’ என்று அந்த வலிகளின் லிஸ்டை முடிவூக்கு  கொண்டுவந்தேன்.

‘நன்றி சிறுவனே நான் மீண்டும் பீடத்தில் அமரும்பேHது அதனை மறக்காமல் எடுத்து தந்துவிடு.அங்கு தேவலோகத்தில் மருந்துகளுக்கு பற்றாக்குறை.மருந்துகளும் பெரிய வீரியமில்லை.மனிதர்கள் உபயோகிக்கும் மருந்துகள் போல இல்லை.இங்குள்ள மருந்துகளுக்கு நல்ல பலன் உண்டு.கொஞ்சம் அதிகமாகவே  மருந்துகளை தா சிவபெருமானுக்கும் ஒரே முதுகு குத்தல்.அப்படியே அவருக்கும் ஒரு பொட்டலம் கொடுத்துவிட வேண்டும்’ என்றார்.

நான் சிரித்துகொண்டே ‘சரி சாமி மிச்ச நேரமா நிக்கிரிங்க வந்து உக்காருங்க’ என்றேன்.

அவர்  முட்டிக்கால்களை பிடித்து;கொண்டு  மெல்ல உட்கார்;ந்தார்.அதற்கே அவருக்கு மூச்சு வாங்கிவிட்டது.

‘வந்த காரியத்த சொல்லவேயில்ல.சும்மா வலி அது இதுனு சொல்லி மசப்பாதிங்க.வேற எதோ காரணம் இருக்கணும்.ஏதும் தேவ ரகசியமா?’

‘நானும் ஒரு தேவனாக இருப்பதால் வேண்டுமானால் தேவ ரகசியம் எனலாம்;.உன்னிடம் சொல்வதற்கென்ன சரியாக சாப்பிட்டு பல நாட்கள் ஆகின்றன.ஒரு சொட்டு தண்ணீர் வைக்க கூட யாரும் இங்கே வருவதில்லை.மதிப்பு மரியாதையே போய்விட்டது.இந்த காகம் கூட மதிப்பதில்லை.யாரும் இந்த பக்கம் கூட வருவதில்லை.எல்லாம் அந்த சாமிளார் செய்த வேலை.தனிமையூம் பசியூம் வாட்டி வதைக்கின்றன.அதுதான் உன்னை பார்த்ததும்இஉன்னிடம் பேசினாலாவது ஆறுதலாக இருக்கும் என வெளியே வந்துவிட்டேன்’ என்றார்.

நான் லேசாக சிரித்தேன்.

‘முன்நாளில் நான் வாழ்ந்த வாழ்க்கை வேறு.இப்போது இந்த வயது போன காலத்தில் நான் படும் வேதனைகளை உனக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.இந்த வீணா போன பண்டாரம் கடைசியாக அவன் எப்பொழுது வந்தான் என்று கூட ஞாபகமில்லை.அவனும் அந்த சாமியார் பக்கம் போய்விட்டான்’ என பேசிதீர்த்து கொண்டிருந்தார்.

‘இப்போ அவரு முன்னமாதிரி பண்டாரம் இல்ல! இப்ப அவரு அய்யரு. தப்பி தவறிகூட பண்டாரம்னு சொல்லிடாதீங்க.’

‘எல்லாவற்றுக்கும் காரணம் அந்த சாமியார்த்தான்.அவனை என்ன செய்கிறேன் என்று பார்’ என கோபத்தில கத்தினாரு.

ஆனால் கொஞ்சநேரத்துலஇ அவருக்கு ஒன்னும் பண்ணமுடியாது என்பதை உணரந்து சாதுவா அடங்கினார்.பிறகு மெல்ல நடந்துக்கொண்டே கடந்த வாழ்க்கையின் பசுமையான கணங்களை மனதில் ஓட்டிப்பாரத்து நிறைடைந்தார்..அப்பபொழுதுதான் அவர் கால் நொண்டுவதை பார்த்;தேன்.

‘காலுக்கு என்னாச்சி? என்னமோ கடிச்ச மாதிரி இருக்கு’

‘அதுவாஇகடந்த இரண்டு மாதமாக! கொஞ்சமாவது பழைய செல்வாக்கை மீட்டெடுக்கலாம் என்று ஊர் காவல் போகத்தொடங்கினேன்! என்னை ருத்திர கோலத்தில்  பார்த்து பயந்தாவது மீண்டும் என்னை பார்க்க வருவார்கள்  என்ற ஒரு நட்பாசையில்.அதற்கும் அந்த சாமியார் ஆப்பு வைத்தான்.நாய்களை ஏவிவிட்டு என்னை கடிக்க வைத்துவிட்டான்.’

‘இங்கே பார் என வேட்டிய தொடை வரை தூக்கி காட்டினாரு.கால்ல பத்து பதினைஞ்சு இடத்துல நாய்ப்பல்லு பதிஞ்ச அச்சு.கொஞ்சம் பாக்க பாவமா தான் இருந்துச்சி.

‘வேற எதாவது டரை பண்ணி பாக்கலாம் தானே’

எல்லாம் செஞ்சி பாத்துட்டேன்.இனி செய்றதுக்கு ஒன்னும் இல்ல’

‘நீங்க முன்ன மாதிரி நாங்க வேண்டுறத எல்லாம் குடுத்தீங்கனா சில வேள பழைய மாதிரி எல்லாம் மாறலாம்’

‘அதில் ஒரு சின்ன சிக்கல.ஞாபகசக்தி மிகக்குறைந்துவிட்டது. யார் என்ன வேண்டினார்கள் என்பதே மறந்து போய்விடுகிறது.இதில் எவ்வாறு சரியாக அவரவர் வேண்டுதல்களை நிறைவேற்றுவது.’

‘கொப்பி ஒன்னுலயாவது எழுதி வச்சுகலாம் தானே’

‘அட போஇ படிக்க தெரிந்திருந்தால் நான் இந்த காட்டில் தனியாக நின்றுக்கொண்டிருக்கிறேன்.இந்நேரரம் நம்மதியாக தேவருலக அரசவையில் கௌரவமாக ஒரு வேலை பார்த்துக்கொண்டிருக்கமாட்டேனா?

‘அப்புடி ஒரு பிரச்சினை இருக்குல்ல?’

‘ம்ம்ம் ….’ என்றார்.

‘சாமியாரு  மாதிரியே நீங்களும் எதாவது மெஜிக் செஞ்சிங்கனா ஜனங்களுக்கும் உங்க மேல ஒரு ஆர்வம் வரும்;’

‘அப்படியா சொல்கிறாய். ஆனால் அவன்தான் இருக்கிற எல்லா வித்தைகளையூம் செய்துவிட்டானே.நாம் புதிதாக அல்லவா ஏதாவது செய்ய வேண்டும்?’

‘ஆமா அதுவூம் உண்ம தான்.நாம புதுசா தான் எதாது செய்யணும்.இல்லாட்டி முடியாது தான். வாங்களே அப்படியே பொடிநடையா போயிட்டு வருவோம்.நல்ல யோசணை எதாச்சும் கிடைக்கும்’

‘சரி வா போய் வருவோம்.அந்த நாய்கள் வந்தால் மட்டும் காப்பாற்றி விடு.’

‘இப்புடியே வாறீங்களே ஜனங்க உங்கள அடையாளங்கண்டுகிட்டா பிரச்சினை வந்திராது?’

‘இல்லைஇ பிரச்pனை ஒன்றும் வராது. நான் உன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவேன்.எந்த மனிதர் கண்ணுக்கும் தெரியமாட்டேன்.வா போகலாம்’ என்றார்.

எஸ்டேட் உள்ளே வந்தோம்.சாமி என்Nhல் மேல் கையை வைத்துகொண்டு ஊன்றி ஊன்றி வந்தார்.சூரியன் அன்று கடுமையாக இருந்தான்.

‘நீங்க எப்பயூம் இப்படி எங்க தமிழ் பாடபுத்தகத்துல இருக்குற  தமிழ்ல தான் பேசுவிங்களா? என பேச்சு கொடுத்தேன்.

‘இல்லை குழந்தை. இல்லை இல்லை நான் இறப்பதற்கு முன் இந்த மொழிநடையில் பேசியதில்லை..ஆனால் இறந்து சிறு தெய்வமாகிய பின்பு அதே கொச்சை மொழியில் பேசுவது  நமக்கு கொஞ்சம் கொஞ்சம் கௌரவக்குறைச்சல் தானே.அதுவூமில்லாமல் நானும் உங்கள் மொழியில் பேசும்போது நீங்களும் எங்களை மதிக்க மாட்டேன் என்கிறீர்கள்.அதான் நாங்களெல்லாம் சிறுதெய்வ மாநாடு நடத்தி நாங்களும் இனி சுத்த தமிழில் பேச தீர்மானம்  எடுத்துள்ளோம்.முடிந்தவரை இதே மொழியிலேயே எல்லா நடவடிக்கைகளையூம் சுத்த தமிழிலே மேற்கொள்கிறௌம்.சில சிறு தெய்வங்கள் இப்போது தூய தமிழில் முன்வைக்கப்படும் பிரார்த்தணைகளுக்கு மட்டுமே காது கொடுத்து கேட்கின்றன. காத்தவராயன்இ மாடன் முதற்கொண்டு  முனி வரை எலலாருமே தீவிர மொழிப்பயிற்சியிலே இருக்;கிறார்கள்.

என்னதான் எளிய மனிதனின் கடவூளாய் இருந்தாலும் வாழ வழி இல்லாமலாகும்போது என்ன செய்வது? யார் இக்காலத்தில் எங்களை மதிக்கிறது? ஒரு காலத்தில் எப்படி பெரும் செல்வாக்குடன் வாழந்;தேன்.இங்க சுற்றி உள்ள எல்லா ஊர்களுக்கும் ஒரே தெய்வம் என ராஜதிகாரத்துடனல்லவா வாழ்ந்தேன்.என் வாக்கை கேட்டல்லவா வருணண் எந்த திசையில் செல்வது என தீர்மானிப்பான்.என்னை கேட்டல்லவா ஒவ்வொரு மொட்டும் புன்னகைக்கதொடங்கும்’ என அடித்து விடத்தொடங்கினார.

‘சாமி எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டிங்கனா இதுல எதும் உள்நாட்டு சதி எதும் இருக்கும்னு நெனக்குறீங்களா? என்றேன்.

‘என்ன உள்நாட்டு சதியா? ‘

‘இல்லை சாமி நீங்க கொஞ்சம் வாய்ப்புவசதியோடு இருக்கத பாரத்து மத்த சாமிங்க தான் அந்த சாமியார ஏதும் அனுப்பி வைச்சிருப்பாங்களோ’

இதைக் கேட்டுவவிட்டு கொஞ்;சம் அப்படியூம் யோசிச்சுபார்க்க தாடங்கினாரு.’ சில வேள அப்படியூம் இருக்கலாம் இந்த காலத்துல யார நம்புறது’ என்றார்.

அதைபப்ற்றிய சிந்தiயில் ஆழ்ந்து இருந்தவிரின் மூக்கு திடீரென்று விடைத்தது.மூக்கு துவாரம் பெரிசாகி கிழக்கு பக்கத்தை நோக்கி முகதi;த திருப்பினார்.கோழி வாசம் எங்கோ இருந்து வந்து கொண்டிருந்தது.கம்பர்இபாரதியார் அளவூக்கு தமிழ பேசிக்கிட்டிருந்தவருடைய மொழிப்பற்றை அடித்து தூளாக்க பக்கத்துல எங்கேயோ தாச்சியில் கொதித்துகொண்டிருந்த கோழியே போதுமா இருந்தது.

கடைசியா அவருக்கு நாட்டுக்கோழி அறுத்து படையல் போட்ட காட்சி அவர்முன்னால விரியத்தெடங்கியிருந்தது.கோழிகறிவாசணை அவரை பழைய வசந்தகாலத்திற்கு அழைத்துச்சசெல்லத்தொடங்கியிருந்தது.அவரின் மொழி மாறுபடத்தொடங்கியது.தனது கட்டுபாட்டை இழந்தார்.தான் இப்போது தெய்வமென்பதையூம் அங்கு மறந்தார்.

‘நான் சாப்பிட்டே ஆகணும்.என்னால பொறுக்க முடியாது.கொண்டுவந்து வைக்க சொல்லு.’ என சாமிக்கே சாமி வந்து ஆடத்தொடங்குனார்.கூடவே கசிப்பு ஞாபகமும் வந்து விடவே அதையூம் கேட்டு உக்கிரமாக தொடங்கினார்..எனக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.அவரை என்னால தனியா கட்டுபடுத்த முடியவில்லை.கண்ணெல்லாம் பெரிதாக நரம்புகள் புடைக்க பல்லைக்கடித்துகொண்டு சாமியாடத்தொடங்கினார்.

கசிப்பு மற்றும்  கோழிக்காக அங்கே சிவதாண்டவம் நடந்துகொண்டிருந்தது..ஆட்டம் மெல்ல மெல்ல  உக்கிரமாக மாறத்தொடங்கியது.தெரு நாய்;கள்இ இவரை மோப்பம் பிடித்துவிட இஒரேடியாக ஊளையிட தொடங்கின.

தெரு நாய்கள் அவரை சூழ்ந்து கொண்டன.அநேகமா இது அந்த சாமியார் ஏவிவிட்டவையாக தான் இருக்க வேண்டும்.நான் கல்லடித்து விரட்ட பார்த்த்தேன்.அவை மசியவேயில்லலை.நிச்சயமாக நாய்களுக்கு சாமி தெரியவில்லை.தெரிந்திருந்தால் அந்த சிவதாண்டவத்தை பார்த்து கொண்டு அவ்வளவூ நேரம் அவற்றால் இருந்திருக்கமுடியாது.நிச்சயமாக அவை தலைதெறிக்க ஓடியிருக்கும்.எனக்கும் நாய்களை விரட்ட கஷ்டப்பட வேண்டி வந்திருக்காது.

கடைசியா அவரோட ஆட்டத்த முடிவூக்கு கொண்டுவர  அவருடைய இடுப்புவாதத்திற்கு தான் முடிந்தது.இடுப்பில் வலி கூடி கால்கள் பிசைந்து சுளுக்கிக்கொண்டு அந்த அற்புத நடனத்துக்கு ஒரு முடிவூ வந்தது.அப்பவூம் அவருடைய தன்நம்பிக்கையை பாராட்டி தான் ஆகணும்.நடனத்திற்கப்புறம் கோழியூம் கசிப்பும் படைக்கப்பட்டிருக்கும் என ‘எங்கே என் கோழி எங்கே என் கசிப்பு’ என்பது போல ஒரு பார்வைய பாத்தாரு பாருங்க.செத்துட்டேன்.

‘எதுக்கு இந்த ஆட்டம்இ இந்த வயசுபோன காலத்துல.  நீங்க இங்க என்ன டான்ஸ் ஆடுனாலும்! உங்களுக்கு கோழி கறி கிடக்கபோறதில்ல. டான்ஸ் ஆடினா;இ அப்படியே கோழி ஆடுனு அடிச்சி இபடையல் போட்டு அப்படியே உங்கள குளிர வச்சிருவாங்னு நினைப்போ? நினைப்புதான் ;இ சும்மா வயசு போன காலத்துல துள்ளிக்குதிச்சு இடுப்ப ஒடச்சிகிட்டு.’ என்றேன்.

மெல்ல எழுந்தார்.வேட்டியை அவிழ்த்து மறுபடியூம் நல்லா இறுக்கமா கட்டிக்கொண்டு சட்டையை சரி செய்துகொண்டார்.முகம் கொஞ்சம் தொங்கிபோன மாதிரி இருந்தது.முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கி கொண்டார்.

‘என்னா சாமி கோவிச்சிக்கிட்டிங்களா?’

‘இல்லை’

‘அது இல்ல சாமி.அப்ப காலம் மாறிப்போச்சி.உங்கவூட்டு உக்கிரத்த அணைக்க படையல் போடுறது எல்லாம் பழைய காலம்.இப்பவெல்லாம் ஓவரா போனீங்கனா சாமியவே மாத்திருவாங்க.இங்க சாமியாகுறதுக்கு பலபேரு வரிசைல இருக்காங்க.நீங்க சும்மா வெளங்கிக்காம.வேசம் கடடணும்னு வந்ததுக்கப்புறம் மீசைய எடுக்க மாட்டேண்ணா எப்புடி? .இதையெல்லாம் பொறுத்துதான் போவணும்’

‘எவ்வளவூ நாள் நானும் பொறுக்குறது.வர வர ஒன்னுமே கிடைக்குதில்லை.சரி கொஞ்சம் கசிப்பாவது படைக்கிறானுங்களா? மூணு வரும் ஒன்னுமே சாப்பிடாம இருந்துபாரு உனக்கு புரியூம்’

‘என்னா சாமி கசிப்பு அளவூக்கு எறங்கிட்டீங்க’

‘மறந்துடாத சக்தியூள்ள கடவூளாக்கும்.பொறுமைக்கும் ஒரு அளவூ உண்டு.அப்புறம் கைவித்தைய காட்ட வேண்டியிருக்கும்.அத நீங்க தாங்க மாட்டீங்க.கடைசியா ஒரு கோழிக்காக ஊர அழிக்கவச்சிராதீங்கடா சொல்லிட்டேன் அவ்வளவூதான்.’

‘என்னா சாமி இதுக்கு போயிட்டு இப்படி பேசுறீங்க.உங்களுக்கு இப்ப கோழிகறிஞம் கசிப்பும் தானே வேணும்.வாங்க ஊருக்குள்ள போயி பார்ப்போம்.’

தேயிலை தோட்டத்துக்கு உள்ளே இருந்த ஒத்தையடி பாதைக்குள் இறங்கினோம்.பெரும்பாலும் இங்கு எங்கேயாவது தான் கசிப்பு விற்றுக்கொண்டு இருப்பார்கள்.ஆறுமணிக்கு சரியாக வந்து நிற்பார்கள்.இன்றைக்கு யாரையூம் காணவில்லை.

களைப்படைந்திருந்தோம்.தூரத்தில் கசிப்பு வித்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு கத்தினார்.

‘அங்க பாரு அங்க கசிப்பு விக்கிறானுங்க’

‘ஆமா இதுக்கு மட்டும் உமக்கு கண்ணு நல்லா தெரியூம்’ என்றேன்.

கசிப்பு வற்குமிடத்திற்கு விரைந்து ஓடினார்.பிறகு சூட்சும உருவூக்கு மாறி அங்கே நின்ற ஒருவனுக்குள்  இறங்கினார்.அஙூN;க இருந்த அத்தனை போத்தலையூம் ஒரு நிமிசத்துக்குள்ளே காலிசெய்தார்.அவனுடைய சட்டையில் இருந்த அவ்வளவூ காசையூம் கீழே வீசினார். பல வருடங்களுக்கு அப்புறம் குடித்ததனால் போதைக்கு அளவூக்கதிகமாக தலைக்கேறியிருந்தது.தள்ளாடி தள்ளாடி  நடந்தார்.சாமியேறிய  உடம்பு  ஒரு பித்த உடம்பு போல கொஞ்ச நேரத்துலயே வாந்தி எடுத்துட்டான்.அவனை திட்டிக்கொண்;டே என்னிடம் வந்தார்.

‘சீ நிம்மதியா குடிக்க உடுறானுங்களா பாரு.கொஞ்சம் போதை ஏறுறதுக்குள்ளேயே வாந்தி எடுத்துட்டான்.இவன்லா என்னா ஆம்பிள? நான் அந்த காலத்துல ஒரு பெரல் கசிப்பை ஒரு மடக்குல குடிசச்pட்டு அடுத்த பெரல் எங்கனு கேப்பேன்’ என்றார்.

கொஞ்ச நேரம் அங்கே நின்றுகொண்டிருந்தார்.ங்கேயோ பார்த்தார்.திடீர்னு கீழ விழந்தார்.நான் அவரை பிடிக்க ஓடினேன்.அடிபடவில்லை.சௌகரியமாக தேயிலைசெடி கிளையில் முதுகை சாய்த்து கொண்டு கால்களை பரப்பி அமர்ந்துகொண்டார்.வெறி தலைக்கேறியிருந்தது.தேயிலை கொழுந்தை வெறித்து பார்த்துக்கொண்;டிருந்தார்.

‘சும்மாவே போதைல இருக்குற மாதிரி தான் சலம்புவாரு.இதுல இப்ப உண்மையாவே போதைல  இருக்காரு. என்ன பேசி கொல்ல போறாரோ?’ என லேசா கொஞ்சம் பயம் வேற வந்தது.

ஆனா நான் நினைத்த  மாதிரி ஒன்றும் ஆகவில்லை.அவரு பாட்டுக்கு அமைதியா உட்கார்ந்து இருந்தார்அவர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தது எனக்கு ஆச்சரியமளித்தது.அரைமணித்தியாலத்திற்கும் அதிகமாக அப்படியே இருந்தார்.எனக்கு கொஞ்சம் பயம் வர ஆரம்பித்தது.’சிலவேளை போதை கூடி இறந்துவிட்டாரோ’ என எண்ணம் வந்தது.ஆனால் தெய்வங்கள் சாகாவரம் என்னும் சாபம் பெற்றுள்ளமை ஞாபகத்துக்கு வர அமைதியடைந்தேன்.

அவர் அழுவது போல இருந்தது. ‘போதை கூடிட்டா இப்படித்தான் ஏதாவது கூத்து பண்ணிக்கிட்டு இருப்பாங்க என்பதனால் நான் அப்படி ஏதோ ஒன்று என நினைத்துகொண்டேன்.நன்றாக பேசிக்கொண்டே இருக்கும் ஒருவன் திடிரென்று பேசுவதை நிறுத்தினால் அந்த நொடியை எவ்வளவூ அடர்ந்த மௌனத்தாலும் நிரப்பமுடியாது.அதவே தான் அங்கும் நிகழ்ந்தது.எனககு அந்த மௌனம் இனம்புரியா பயத்தை தந்தது.அந்த கணங்களை தவிர்க்க வாpல் சினிமா பாடலொன்றை முணுமுணுத்தேன்.பாதிக்கு மேல் வரிகள் ஞாபகம் வரவில்லை.அவரிடம் பேச்சுக்கொடுத்து பார்த்ததேன்.அவர் இன்னும் தேயிலைக்கொழுந்துகளையே வெறித்துக்கொண்டிருந்தார்.

அவரை கூர்ந்து பார்த்தேன்.அவர் என்னை கேட்கவில்லையே தவிர வாயில் ஏதோ முணுமுணத்த கொண்டிருந்தார் புதிதாக துளிர்விட்ட இலை நுனியை பார்த்துக்கொண்டே.அவரின் உதட்டசைவூகளை உன்னிப்பாக பாரத்தேன்.ஏதாவது போதைல சொல்லிக்கிட்டிருக்காரு என தோன்றினாலும் அவருடைய முகம் தீவிரமாக இருந்ததனால அவர் என்ன சொல்கின்றார் என அவரின் அருகெ சென்று கேட்டேன்.

‘அட்டை ‘

ஆம் அதை தான் அவர் திரும்ப திரும்ப சொல்லிக கொண்டு இருந்தார்.அவரை மெல்ல உலுக்கினேன். தளிரிலையை காட்டி ‘அங்க பார் அந்த அந்த அட்டை நிற்கிறது ‘ என்றார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.என்ன சால்வதென்று தெரியவில்லை.அமைதியாக நின்றேன்.

‘அந்தா பார் நிக்குது.அதே அட்டைதான் எனக்கு  நல்லா தெரியூம்.அதுவூட்டு சைஸ வைச்சே நான் கண்டுபுடிச்சிடுவேன்.’ என்றார்.

தேயிலை செடியின் அந்த இலையின்மீது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.போதை ரொம்ப கூடிவிட்டது போல.

‘எந்த அட்டை? சாமி அங்க அட்டையே இல்லை.வாங்க உங்களுக்கு போதை கூடிருச்சி.உங்கள மரத்தடில விட்றேன்.வானம் இன்னும் கொஞ்சநேரத்துல மூடிரும் போல’ என்றேன்

‘அங்க பாரு அந்த இலைமெல அட்டை நிக்குறத.உனக்கு என்ன கண்ணு கெட்டுபோச்சா?’

‘இல்ல இங்க இருக்கு.நான் இப்ப பாத்தேன்.அதே அட்டைதான்.எனக்கு நல்லா தெரியூம்.அதே அட்டைதான்.’

‘இல்ல அங்க ஒண்ணுமே இல்ல.வாங்க போவோம்.’

‘எனக்கு தெரியாத அந்த அட்டைய.நான் எத்தன வரு~மா பாத்துக்கிட்டு வாரேன்.பாரு அதே கண்.’

‘அடடைக்கு கண்ணிருக்கா?’ என்றேன்.

‘தெரியல.ஆனா இந்த அட்டைக்கு இருக்கத நான் பாததிருக்கேன்.அதை நான் கடைசியா பாரத்தப்ப அது என்ன இதே மாதிரி தான் பாத்திட்டு போனிச்சி.இப்பயூம் அந்த பர்வை அப்படியே இருக்குது’

‘சாமி இது சாதாரண அட்டை.நீங்க செத்து இப்ப நூறு வரு~சத்துக்கு மேல ஆகுது.அட்டைங்க என்ன ஆவூpயாவா வரும்.அந்த அட்டை இப்ப செத்pதருக்கும். வாங்க போவோம்.

‘இல்லை அந்த அட்டை சாகாது.அது எப்பயூமே சாகாது.இன்னும் அப்படியே தான் இருக்கு.எனi;னய கொண்ணுட்டு போனப்ப எப்படி இருந்துச்சோ அதே மாதிரி தான் இன்னும் இருக்கு’

‘நீங்க அட்டை கடிச்சா செத்தீங்க???.’ என்றேன்.

நான் கேள்விப்பட்ட சாமிகளெல்லாம் ஏதாவதொரு சாகசம் செய்து அல்லது புரட்சி செய்து கொல்லப்பட்டு அல்லது இறந்து  கடவூளாகி இருக்கிறார்கள்.இப்பொழுதுதான் அட்டை கடிப்பட்டு சாமியான கதையை கேள்விப்பட்டேன்.

அவர் ஒன்றும் பேசவில்லை.தவறாக ஏதாவது சொல்லிவிட்டோமோ என பயந்தேன்.அவர் கொஞ்ச நேரம் அமைதியா இருந்தார்.இப்ப கொஞ்சம் போதை தௌpந்த மாதிரி இருந்தது.அவர் ஏதொ சொல்ல விரும்புகிறார் என அவரது கண்கள் அடையாளம் காட்டின. நீண்ட பெருமூச்சுக்கு பின் கதைக்க தொடங்கினார்.

‘இது இப்ப  இல்ல! நூறு வருசத்துக்கு முன்னாடி நடந்த கதை.இந்தியாவூல நாமக்கல் பக்கத்துல தான் சொந்த ஊரு. அப்ப வந்த பஞ்சத்த பத்தி உனக்கு தெரிஞ்சிருக்குமே.கடி நாய்க்கிட்ட இருந்து தப்பிச்சி வெறிநாய்க்கிட்ட மாட்டிக்கிட்ட கதையா பஞ்சத்துல இருந்து தப்பிக்க அம்மா அப்பாவோட என்னுட்டு பத்து வயசுல இங்க வந்து சேந்தோம்.எங்;களோட வந்தவூங்கள்ள முக்காவாசி பேர் இங்க வார வழியிலேயே இறந்துட்டாங்க..இன்னும் கொஞ்சம் பேர் மட்டும்தான் இங்கவந்து சேர்ந்தோம்.அந்தா தெரியூதே அந்த லயத்துலதான் நாங்க தங்கி இருந்தோம்.அப்ப இந்த மாதிரி பெரிய அளவூக்கு சனமில்லை.ஊரு வேற புதுசு.வந்தவங்கல்ல கொஞ்சம் பேரு குளிரு தாங்கமுடியாம இறந்தாங்க.அப்பாவூம் அம்மாவூம் வேலைக்கு போவாங்க.நான் மட்டும் தான் தனியா இருப்பேன்.என் வயசுல யாரும் அப்ப ஊருல இருக்கல.அந்த முழு லயத்தையூம் நான் சுத்தி வந்திக்கிட்டு இருப்பேன்.அப்புறம் தூங்கபோயிடுவேன்.அம்மா அப்பா ரெண்டு பேரும் எப்பவூம் வேலை செஞ்சிக்கிட்டிடே இருந்தாங்க.முழுகாடா இருந்த இந்த ஊர நல்லாக்குனது எல்லாம் அவூங்களும் அவூங்களோட இருந்தவூங்களும் தான்.

எனக்கு ஒரு பதினொரு வயசாகிறப்ப அப்பாவூக்கு மலேரியா காய்ச்சல் வந்துஇவேலைக்கு போகமுடியாம லயத்துலயே இருந்தாரு.nரும்பாலும் பாயில படுத்திருப்பாரு.நானும் சில நேரத்துல அங்கேயே எங்கேயாவது படுத்துக்கிடுவேன்.ஒரு நாள் இப்படி படுத்துருக்கப்பபையே இறந்துட்டாரு.அவர் சாகிறத நான்  நேரடியா பாரத்த்தேன்.உடம்பு துடிச்சது.கை கால் இரண்டும் பாயை இறுக்கி புடிச்சிக்கிட்டது.அவருட்டு சாரம் நனைஞ்சது.கொஞ்சநேரத்துல துடிப்பு அடங்கியது.அவர போய் பாரத்தேன்.முகம் கோணலா இழுபட்டு கிடந்தது.ஆனாலு அந்த கண்ணுல மட்டும் ஒரு சிரிப்ப தெரிஞ்சது.

அது என்னைய என்னமோ பண்ணுச்சி.செத்துபோறவரு எப்படி சிரிக்க முடியூம்.அப்படியே மயங்கி விழுந்தேன்.மயக்கத்துல இருக்குறப்ப என் மூக்குகுள்ள என்னமோ பூந்த மாதிரி இருந்துச்சு.எதோ பூச்சி மாதிரி.கனவூ என நினைச்சு எந்திரிச்சி பார்த்தா அப்பா அங்க  அப்படியே கிடந்தாரு.மூக்குள ஏதோ ஊர்ர மாதி இருந்துச்சு.மூக்கை சிந்தி சிந்தி பாரத்தேன்.ஒன்னுமே வெளிய வரல.ஆனா என்னமோ இருக்கமாதிரி இருந்துச்சு.அது உடம்புல குடைய ஆரம்பிச்சி இருந்துச்சு.அப்பா செத்து கொஞ்ச நாள்ளேயே அம்மாவூம் இறந்தா.நான் வெளிய போறத குறைச்சிக்கிட்டு வீட்டுலேயே கொஞ்ச நாள் இருந்தேன்.உடம்பு முழுக்க ஊர தொடங்குன  ஏதோ ஒன்னு ஊரத்தொடங்கினமாதிரி இருந்துசசு.பன்னிரெண்டாவது வயசுல வேலைக்கு போனேன்..

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.பக்கத்துல இருந்த தேயிலை கொழுந்தை அநாயசமாக பிடுங்கி அதை கையினால் கசக்கி முகர்ந்தார்.துளிர் விட்டிருந்த தேயிலை இலைகளை மெல்ல வரடிக்கொடுத்தார்.

‘எப்பயூமே இந்த மலைகள்ளேயே கிடந்ததுனால கல்யாணம் ஏதும் பண்ணிக்கல.இன்;னமும் உடம்பு முழுக்க அது ஊரந்து கிட்டு தான் இருந்துச்சு.சில வேளை ஒன்னுமே செய்ய முடியாத அளவிற்கு களைப்பாவேன்..யாரோ உடம்புல இருந்துகிட்டு  இரத்;த்த குடிக்கிறத போல.வலி இல்லாம இரத்த்த எடுக்குற மாதிரி.ஒரு அட்டைய போல.ஆமா அட்டையேதான் அது தான் உடம்புக்குள்ள இருந்து என்ன பாடுபடுத்துது.அப்ப என் மூக்கின் வழியா நுழைஞ்சது அட்டைதான்.முதன்முறையா அப்பதான் மூக்குல இருந்து இரத்தம் வந்திச்சு.நான் பெருசா எடுத்துக்கல.நா எப்பயூம் போல எஸ்டேட்ல வேலை செஞ்சிக்pட்டு இருந்தேன்.இருந்திருந்தவாக்குல இரத்தம் வரும்.சிலவேள காதுல இருந்தும் இரத்தம் வருத்தொடங்கியிரும்.போக போக உடம்பு  முழுக்க வெளிற தொடங்கிச்சி..

உடம்பு அடிக்கடி களைப்பாக தொடங்கிச்சு.கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிச்சு.மண்வெட்டிய புடிச்சி ஒரு குழி கூடவெட்ட முடியல்ல.உடம்பு ரொம்ப மௌpஞ்சு போச்சு.எலும்பும் தோலுமா ஆனேன்.இருமும்போது எச்சிலோட இரத்தம் வரத்தொடங்குணிச்சி.சில நேரம் அப்படியே இரத்தம் தேயிலை செடி மேல விழுந்து இலைகளே முழுக்க சிவப்பாயிரும்.நாளாக நோய் ரொம்ப முத்தி போகத்தொடங்கினுச்சி.மூச்சுவிடறது கூட கஷ்டமா இருந்துச்சி.

சின்ன சின்ன வேலைகளை செய்றதுக்கு கூட என்னால முடியாம போனிச்சி.அந்த அட்டையை நான் வெறுத்தேன்.அது தான் என்னையே முழு நோயாளி ஆக்கிச்சு.கட்டிலுக்கேயே கிடக்க வேண்டியதா போச்சு.அது கால்ல இருந்து மூளை வரை மெல்ல மெல்ல ஊரந்து நடக்குறது எனக்கு எனக்கு தௌpவா கேட்டுச்சி.அது ஒவ்வொரு உறுப்பா இரத்தத்த குடிச்சிக்கிட்டு வந்ததது.முதல்ல கால்.கொஞ்ச நாள்ல நடக்க இயவாம போனது.அடுத்து வயிறு.அடுத்து கை.இப்படி எல்லாமே அது கடிச்சி முடிக்க அது செயலிழந்துகிட்டு வந்ததது.அது ரத்தத்த குடிக்கிற சத்தம் கூட எனக்கு தௌpவா கேட்டுச்சி.

கட்டில்ல நாள்முழுக்க கிடந்தேன்..பக்கத்து வீட்டுகாரங்க பாவம்னு சோறுபோடுவாங்க.அடடை என்னை முழுசா ஆக்கிரமிச்ச மாதிரி இருந்துச்சு.அட்டைகள் எப்பவூம் என்னையே சு+ழ்ந்து இருக்க மாதிரியே தோண ஆரம்பிச்சிச்சி.எல்லாம் அட்டையாவே தெரிய தொடங்கிச்சி.பயத்துல கண்ண மூடிக்கிடுவேன்.அங்கயூம் கறுப்பு அட்டையா மாறி வரத்தொடங்கிச்சி.கடைசியா அட்டை என் மூளையில் இருந்து உறியத்தொடங்கியிருந்துச்சு..நான் அடடைய வெறுத்தேன்.மூளைக்குள் குடைஞ்சுக்கிட்டிருக்கது போதை தார மாதிரி இருக்கும்.அதை மடடும் தான் அட்டைக்கிட்ட இருந்து விரும்புனேன்.அந்த போதைல இருக்குறப்ப மட்டும் தான் நான் சந்தோசமா இருந்தேன்.அப்ப மட்டும் தான் எனக்கு தூங்க முடிஞ்சது.கண்ணை மூடுவேன்.

‘நான் எங்கேயோ ஒரு தேயிலை தோட்டத்துல வேல செஞ்சிக்கிட்டு இருக்கிறேன்.முழுக்க பச்சையான ஒரு தோட்டம்.எதபத்தியூம் சிந்தiயில்லாம பித்து புடிச்சவன போல வேலை செஞ்கிட்டு இருக்கேன்.அங்க இருந்து எனக்கு எங்க வீட்ட பாக்கமுடியூது. பக்கத்துல இருக்குற மாதிரி அவ்வளவூ தௌpவா விளங்கிச்சு.அப்பா அதே பாயில் படுத்து இருக்காரு.அவருக்கு முன்னுக்க ஒரு பெரிய அட்டை நிக்குது.அப்பாவை விட பெரிசா இருக்கு.அவரையே பாத்துக்கிட்டு இருக்கு.அவர்கிட்டே என்னமோ கேக்குது. அவரும் உடனடியா கவ்வாத்து கத்தில காலை வெட்டிக்கொடுக்குறாரு.காலெல்லாம் ரத்தம் ஊத்துது.அட்டை முழுசா அவ்வளவூ இரத்தத்தையூம் உறியூது.அப்புறம் வயித்த குத்துராரு.நான் உடனடியா வீட்டுக்கு ஓடுறேன்.ஓடிக்கொண்டிருக்கப்பயூம் வீட்ல நடக்கறது எல்லாம் எனக்கு நல்லா தெரியூது.இதயத்தைஇ கண்களைஇமூளையை என எல்லாத்ததையூம் வெட்டிக்கொடுக்குறாரு.நான் வீட்டுக்குள்ள வாரதுக்கு முன்னாடி அட்டை எல்லாத்தையூம் உறிஞ்சி முடிச்சிட்டு வெளிய போயிருந்துச்சு.அப்பா பாயில கிடந்தாரு.தலை  மட்டும் தெரிஞ்சது.உடம்பு முழுக்க எலும்பு கூடாக இருந்தது.அவர பாக்க பக்கத்துல போனேன்.தலைய திருப்புனேன்.அது அப்பா இலை. அது என் முகம்.அப்பா சிரிச்சமாதிரியே நான் அங்கே சிரிச்சிக்கிட்டு இருந்தேன்.’

கனவூ கலைஞ்சது.கடைசியா நான் சாகுறதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் அட்டை  உடம்புல இருந்து வெளிய வந்துச்சு.அப்ப தான் அதே பாத்தேன்.கண்ல இருந்து வெளிய வந்தச்சு.இதே மாதிரி தான் அதுவூம் இருக்கும்.எனனைய மூக்கின்மேல நின்னு பாரத்துச்சு.அப்புறம் திரும்பி பார்க்காம போனுச்சி..அதற்கப்புறம் அந்த அட்டைய எப்பவூம் பார்க்கல.இப்பதான் பாக்குறேன்.இரண்டு மூணு நாள்ல நானும் செததுபோனேன்.’

நான் அமைதியாக நின்றேன்.மறுபடியம் தரையை வெறித்து கொண்டிருந்தார்.அவர் கண்கள் சிவப்பாக இருந்தது.கண்கள் கலங்கியவை போல இருந்தன.

‘சாமி நேரம் ஆகுது.சூரியன் மறையத்தொடங்கியிருச்சு.இதுக்கு மேல இங்க இருக்குறது நல்லது இல்ல.வாங்க எங்க வீட்டுக்கு போவோம்.அந்தா தெரியூதே அந்த லயம் தான்.பத்து நிமிசத்துல போயிரலாம்’

அவர் ஒன்றும் சொல்லவில்லை.எழும்பி  லயம் இருக்குற திசையை பார்த்தார்.அங்கேயே யோசித்து கொண்டு நின்றார..பிறகு சட்டென்று திரும்பி என் தலைமேல கைவைச்சு ஆசிர்வாதம் செய்றமாதிரி என்னமோ செய்துவிட்டு வந்த வழியே நடந்துபோனார்..நேரா தான் நடந்தார்.போதை தெளிந்துவிட்டது போல.

நான் திரும்பி வீட்டுபக்கம் நடக்கதொடங்குனேன்.அம்மா இன்னும் வேலைமுடிந்து வந்திருக்கவில்லை.கை கால் கழுவிட்டு சாமிக்கு விளக்கு போடபோனேன்.அம்மாவூம் அப்பாவூம் வருகிற சத்தம் கேட்டு கதவை திறந்தேன்.இரண்டுபேரும் தேயிலைகூடைய கழட்டி ஆணியில் மாட்டிட்டு வீட்டுக்குளளே போனார்கள்.அவர்களின் கால் சுண்டுவிரலின் மேல் அட்டை கடித்த காயத்திலிருந்து வந்த இரத்தம் அவர்களை பின்தொடரந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *