கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 2,349 
 

என்ன சுந்தரேசா ரெண்டு வாரமா வாக்கிங்கே வர்ல. உடம்புக்கு முடியலையா..

அதெல்லாம் ஒண்ணுமில்ல வரதா. பையன், மருமகள், பேத்தி அமெரிக்காலேந்து வந்திருக்காங்க. நாளைக்கு கெளம்பராங்க. பேத்தி ஒரே அட்டகாசம். நல்லா பொழுது போச்சு. வீட்டுக்கு வா வரதா முடிஞ்சா நாளைக்கு. அவங்கள Introduce பண்றேன்..

தாத்தா.. தாத்தா.. உங்க friend வரதன் தாத்தா வந்திருக்காங்க.. வாங்க வெளியே.. 

வரதா..வா வா.. உட்காரு.. 

ராகுல்.. ப்ரீத்தி.. கொஞ்சம்  இங்க வாங்க.. இவர் தான் என் பெஸ்ட் friend வரதன்.  வாக்கிங்ல பழக்கம்.. 

வரதா இவதான் சொன்னேனே என் பேத்தி மகாலட்சுமி. பயங்கர சுட்டி..

தெரியும்.. எங்க introduction முடிஞ்சுது.. வணக்கம் தம்பி.. நல்லாருக்கியாம்மா.. இவர் மட்டுமே கேட்டார்.. 

வாக்கிங் friend எல்லாம் வாக்கிங்கோட இருக்கணும். வீட்டுக்கெல்லாமா கூட்டிட்டு வருவாரு உங்கப்பா.. வெவஸ்த இல்லையா.. இந்தப் பெருசும் கைய வீசிட்டு வந்திரிச்சி.. அமெரிக்காலேந்து வந்திருக்காங்கன்னு டம்பம் அடிச்சிருப்பாரு இவரு.  எதாவது கிடைக்கும்னு வந்திருப்பாரு அவரும்..

சுந்தரேசா.. நான் கெளம்பறேன்.. உங்க வீட்ல சூழ்நிலை சரியில்லேன்னு தோணுது..

சாரி..வரதா.. கொஞ்சம் வெயிட் பண்ணு  இதோ வரேன்..

என்னம்மா இப்படியா பேசுவ… ராகுல் இப்பத்தான் ரெண்டு வருஷமா அமெரிக்கால இருக்கான். இவரோட பையன் 18 வருஷமா அமெரிக்கா தான். Green card holder. சொந்தமா பங்களாவே இருக்கு அங்க அவங்களுக்கு.. 

அவரு ஒண்ணும் கைய வீசிட்டு வர்ல. மகா பாக்கெட்ல பாரு பெரிய சாக்லெட் பார்.. அவரு குடுத்தது தான். உங்க ஊர் சாக்லெட் தான் சாப்பிடணும்னு நீ மெரட்டி வெச்சிருக்கியாம். அதான் வெளிய எடுக்காம வெச்சிருக்கா.. நீ பொறந்து வளர்ந்த ஊரா அது. பொழைக்கப் போன எடந்தானே.. அமெரிக்கான்னா ரெண்டு கொம்பா மொளச்சிடும்.. சின்ன பசங்க மனசில எதுக்கு இந்த வயசிலேயே வன்மத்த விதைக்கரீங்க.. Status ங்கிறது பணத்துல  இல்ல. மனசில. போய் சாரி கேளு என் friend கிட்ட..

குற்ற உணர்ச்சியால் வெளியே வந்த ப்ரீத்தி, சாரி அங்கிள். Extremely சாரி..  கொஞ்சம் இருங்க காபி தரேன்..

பறவால்லம்மா.. என் பையனும் அடுத்த வாரம் வரான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. சொர்கமே என்றாலும் என்ற காலர் ட்யூன் ஒலிக்க.. வரதன் மொபைலை எடுத்து பேசினார்.. இதோ வந்துட்டேம்மா என்று சொல்லியபடி  நடையை கட்டினார்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *