மாஸ்டர் ஹெல்த் செக்கப் பரிசோதனை முடிந்து வெளியே வந்து டாக்டரின் அழைப்பிற்காகப் பதட்டத்துடன் காத்திருந்தாள் மங்கை.
“உட்காருங்கள் என்ற டாக்டர், ரிப்போர்ட்டை நன்றாகப் பார்த்தபிறகு “மேடம் உங்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை யு.ஆர். ஆல்ரைட் ஃபர்பெக்டலி என்றார்.
மங்கையின் முகத்தில் மகழ்ச்சி “டாக்டர் மிக்க நன்றி இன்று டிவியில் ஒரு புது மெகாத்தொடர் ஆரம்பாமாகப் போகிறது.
புது மெகாத்தொடரை பார்க்க உயிரோடு இருப்பேனா என்ற பயத்துடன் இருந்தேன். நல்லவேளை என் வயிற்றில் பாலை வார்த்தீ.ர் இனி நிம்மதியாக டி.வி. சீரியல் பார்ப்பேன்!.
டாக்டர் திடுக்கிட்டார். கடவுளே இதற்காகவா இந்த மாஸ்டர் ஹெல்த் செக்..!
– கஞ்சநாயக்கன்பட்டி மணியன் (நவம்பர் 2011)