கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 6,373 
 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம் 6

”இது என்ன இக்கட்டுங்க.நாம பாட்டு சிவனேன்னு இருந்தோம். சரவணன் எப்போங்க ‘கேஸ்’ ஜெயிக்கிறது. அவன் எப்போங்க வேறு ‘பிஸினஸ்’ பண்றது, எப்போங்க பணம் சம்பாத்திக்கிறது எனக்கு புரியவே இல்லீங்க.நமக்கும் வயசாகிகிட்டுப் போவுது.இப்போ நாம ‘பிஸினஸ்’ துவங்காமே இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு துவங்க எண்ணும் போது நம்ம கையில் இருக்கும் பணம் எல்லாம் செலவு ஆயிடுச்சின்னா நாம என்னங்க பண்ணுவோம்.எனக்கு பயமாய் இருக்குங்க” என்றாள் சரோஜா.”நீ பபயப்படறது ரொம்ப நியாயமானது தான் சரோஜா.நாம நம்ம கிட்டே இருக்கும் பணத்தை எல்லாம் ‘பிஸினஸில்’ முடக்கி விட்டோம்ன்னு வச்சுக்க, அப்புறம் நம்மிடம் பண நடமாட்டம் கொஞ்சமாய் தான் இருக்கும்.பிறகு உன் தம்பி குடும்பத்து க்கு நாம் எப்படி உதவுறது சொல்லு பார்க்கலாம்” என்றார் சிவலிங்கம். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் சரோஜா.

பண முடை அதிகம் ஆகி வரவே சிவலிங்கம் அந்த ஓனரைப் பாத்து தம் பண முடையைச் சொல்லி தனக்கு சீக்கிரம் மீதி பணம் வேணும் என்று கேட்கப் போனார்.ஆனால் அந்த ஓனரோ “இதோ பாருங்க பொ¢சு.இப்போது இன்னும் ரெண்டு மாசத்துலே ‘எலக்ஷன்’ வரப் போவுதுங்க அதனால்லே எனக்கு செலவு அதிகமா இருக்குங்க. எலக்ஷன் எல்லாம் முடிஞ்சி எங்க கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வரை என்னால் உங்களுக்கு பணமே தர முடியாது.நீங்க வெறுமே வந்து என்னை தொந்தரவு செய்யாதீங்க” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.மனம் மிகவும் வேதனை பட்டார் சிவலிங்கம்.

கமலா ஆஸ்பீஸில் சதா நடராஜனைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு வேலையே ஓடவில்லை.எப்போ வெள்ளிகிழமை சாயங்காலம் வரும் நாம் நடராஜனை மறுபடியும்.சந்திப்போம் என்று அவள் மனது ஏங்கியது.நடராஜனுக்கும் ‘ஸ்பாக்டா¢யில்’ வேலையே ஓடவில்லை.அவனும் சதா கமலாவை நினைத்துக் கொண்டு இருந்தான்.

வெள்ளிக் கிழமை வந்தது.நடராஜன் தன்னை நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ‘சரவண பவன்’ ஹோட்டலுக்குப் புறப்பட்டான்.ஹோட்டல் வாசலில் நின்றுக் கொண்டு கமலாவுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.தூரத்தில் கமலா வருவது தெரிந்தது.அவன் தன் கையை மேலே தூக்கி வேகமாக ஆட்டினான்.பதிலுக்கு கமலாவும் தன் கையை உயரத் தூக்கி ஆட்டினாள்.நடராஜனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.சொன்னபடி தன் ‘காதலி கமலா’ ஹோட்டலுக்கு வந்து விட்டாளே.’மெல்ல அவ கிட்ட நாம் நன்றாகப் பேசி அவ காதலை சம்பாதிச்சுக் கொள்ளவேண்டும்’ என்று ஆசைப் பட்டான்.கமலாவும் நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு வந்து இருக்கவே அவள் நடராஜன் கண்களுக்கு விருந்தாய் இருந்தாள்.தூரத்தில் வந்துக் கொண்டு இருக்கும் அவள் அழகை ரசித்துக் கொண்டே இருந்தான் நடராஜன். கமலா கிட்டே வந்து “ஏங்க, நீங்க வந்து ரொம்ப நேரம் ஆவுது ங்களா.எனக்கு ஆஸ்பீஸில் கொஞ்ச நேரம் ஆயிடுச்சிங்க.இன்னிக்கு பாத்து என் மானேஜர் எனக்கு நிறைய வேலகளைக் குடுத்திட்டாரு.எல்லாத்தையும் முடிக்க கொஞ்சம் நேரம் ஆயிடுச்சிங்க. அதனால் தாங்க லேட் ஆயிடுச்சி” என்று கமலா தான் முதலில் பேச்சை தட்டு தடுமாறித் துவங்கினாள்.நடராஜன் உடனே “அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க,நான் வந்து ஒரு பத்து நிமிஷம் தான் ஆவுது.நீங்க லேட்டே இல்லீங்க” என்றான் சிரித்துக் கொண்டே. அவன் சிரிப்பில் தன்னை பரிகொடுத்தாள் கமலா.“வாங்க, உள்ளே போவலாம்” என்று கமலாவை சகஜமாக அழைத்தான் நடராஜன்.இருவரும் கூட்டம் இல்லாத தனியான இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள். அவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்க முடியாமல் உடனே சர்வர் வந்து விட்டான்.நடராஜன் சர்வரைப் பார்த்து “ஸ்வீட் என்னங்க இருக்கு” என்று கேட்டான்.சர்வர் சுமார் பதினைந்து ஸ்வீட்கள் பேர்களை ‘கட’ ‘கட’ வென்று வாய்பாடு ஒப்பிப்பது போல் சொன்னான்.நடராஜன் “இரண்டு குலாப் ஜாமூன் முதலில் கொடுங்க” என்று கமலாவைக் கேக்காமலே ஆர்டர் பண்ணினான்.”நான் உங்களை கேக்காம ஆர்டர் பண்ணி விட்டேனா சாரி.எனக்கு குலாப் ஜாமூன்னா உயிர்ங்க. உங்களுக்கு குலாப் ஜாமூன் பிடிக்கு ங்களா.இல்லே வேறே ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா” என்று மூச்சு விடாமல் கேட்டான் நடராஜன். “எனக்கும் குலாப் ஜாமூன் ரொம்ப பிடிக்கும்.நான் ஒன்னு சொல்றேன். நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே “ என்று அவள் சொன்னபோது ஒரு நிமிஷத்துக்கு நடராஜன் ‘ஹார்ட் பீட்’ நின்று விட்டது.

‘என்ன சொல்லப் போறாளோ.அவன் முகம் ‘குப்’பென்று வேர்த்து விட்டது.தன் பாகெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.“சொல்லுங்க.நீங்க எது சொன்னாலும் நான் கோவிச்சக்கவே மாட்டேங்க” என்றான் நடராஜன் அசடு வழிய.”நீங்க என்னை இனிமே ‘வாங்க ‘போங்கன்னு ‘ எல்லலாம் கூப்பிடா தீங்க. என்னை நீங்க ‘வா’ ‘போ’ ன்னே சொல்லுங்க” என்று சொல்லி நிறுத்தினாள் கமலா.நடராஜன் தன் இதயத்தை பிடித்துக் கொண்டு ”என் இதயமே நீ இனிமே தயவு செய்து வேலை செய்ய ஆரம்பி.நீ நினைச்சாப் போல ஒன்னும் ‘bad news’ இல்லே. ஏதாவது bad news இருக்கும்ன்னு எண்ணித் தானே என் இதயமே நீ என் மூஞ்சியில் இப்படி வேர்க்க வச்சே” என்று தன் இதயத்தை தொட்டு சொன்னான் நடராஜன். ஒன்னும் புரியாதவதவளா கமலா “என்னங்க,என்ன சொல்றீங்க,எனக்கு ஒன்னும் புரியலீங்களே” என்றாள் கவலையோடு.”பய படாதீங்க, கமலா ஒன்னு மில்லே.நீங்க ’நான் ஒன்னு சொல்றேன்….’ ன்னு சொன்னப்போ என் இதயம் நின்னுப் போச்சு.என்ன சொல்லப்போறீங்களோ ன்னு நினைச்சு அது பயந்து போய் வேலை செய்யாம நின்னுப் போச்சு.முகம் எல்லாம் வேர்த்து போச்சு.’நீங்க’ இல்லே சாரி,‘நீ இந்த ‘ஸ்வீட் நியூஸை’ சொன்னப்போ என் இதயத்தை மறுபடியும் ‘வேலை செய்’ என்று நான் என் கெஞ்சினேன்” என்று விளக்கினான் நடராஜன்.“அப்படியாங்க” என்று சொல்லி விஷயம் புரிந்துக் கொண்ட கமலாவுக்கு சிரிப்பு தாங்க வில்லை.அவ விழுந்து விழுந்து சிரித்தாள்.கொஞ்ச நேரம் போனதும் “கமலா. உன்னை நான் இனிமேல் நீ சொன்ன படியே ‘வா’ ‘போ ‘ன்னே நான் கூப்பிடுகிறேன், சரியா” என்றான் நடராஜன். இருவரும் சந்தோஷமாக நல்ல டிபன், ஐஸ் க்ரீம் காப்பி எல்லாம் சாப்பிட்டார்கள்.சட்டென்று கமலா தன் கைக் கடியாரத்தைப் பார்த்தாள்.அவளுக்கு பகீரெ ன்றது.மணி ஏழு முப்பது.’இன்னேரம் நாம் வீட்டை நெருங்கிகிட்டு இருக்க வேணுமே.இப்போ நாம் இருப்பதோ மவுண்ட் ரோடு சரவண பவனில்’ என்று நினைத்த போது அவள் முகம் பேயறைந்த்து போல் ஆகிற்று.

“உங்க கிட்டே பேசிகிட்டு இருந்ததிலே நான் மணியையே கவனிக்கலேங்க. எனக்கு வூட்டுக்குப் ரொம்ப லேட்டயிடுச்சுங்க.நாம ரெண்டு பேரும் பேசி கிட்டு இருந்தப்ப மணி போனதே தெரியலே.இன்னேரம் நான் வீட்டு கிட்டே போய் கிட்டு இருக்கணுங்க.நான் இன்னும் பஸ்ஸேயே ஏறலே.நான் வீடு போய் சேர மணி ஒன்பது ஆகிடும் போல இருக்கேங்க” என்று பயத்துடன் சொன்னாள்.நடராஜனால் கமலா பயம் நன்றாகப் உணர முடிந்தது.உடனே நடராஜன் கமலாவைப் பார்த்து “நீ கவலைப் படாதே கமலா.நான் உன்னை என் ‘டூ வீலர்’லே,இன்னும் இருபது நிமிஷத்திலே கே.கே நகர்லே ‘ட்ராப்’ பண்றேன் சரியா” என்று கேட்டு எழுந்து விறு விறுவென்று அவளை வெளியே அழைத்து வந்தான்.வெளியே வந்த கமலா முதலில் ‘வேணா¡ங்க,நான் பஸ்ஸில் போய் விடுகிறே னுங்க என்று சொல்ல னும்ன்னு நினைச்சா.ஆனா மணி இப்போவே ஏழரை ஆயிடுச்சி.நாம பஸ் பிடித்து வீட்டுக்குப் போய் சேர பணி ஒன்பதுக்கு மேலே ஆயிடும்.நம்பஅப்ப அம்மா கேட்டால் நாம் என்ன பதில் சொல்வது’ என்று அவளுக்கு பயம் வந்து விட்டது.புது ஆணோடு டூ.வீலா¢’ ல் போகவும் அவளுக்கு பயமாய் இருந்தது.என்ன பண்ணுவது என்று யோஜனைப் பண்ணினாள் கமலா.சரி வேறு வழி இல்லை இன்னிக்கு அவரோடு தான் போய் ஆகணும்.இனிமே நாம் சீக்கிரமே ஹோட்டலை விட்டு கிளம்பி விட வேண்டும் என்று முடிவு பண்ணினாள் அவள்.“சரிங்க நீங்க என்னைக் கொஞ்சம் கே கே நகர்லே ‘ட்ராப்’ பண்ணி விடுங்க” என்றாள் வெட்கப் பட்டுக் கொண்டே.கமலா அவன் ‘டூ.வீல’ ரில் ஏறிக் கொண்டாள். நடராஜன் தன் ‘டூ வீல’ரில் வேகமாக ஓட்டி வந்தான்.வழியில் பல வண்டிகளை எல்லாம் லாவகமாக ‘ஓவர் டேக் ‘பண்ணி கமலாவை கே.கே.நகர்லே அவ சொன்ன இடத்திலே இருபது நிமிஷத்திலே ‘ட்ராப்’ பண்ணி னான் நடராஜன்.அவளை ‘டூ வீல’ரில் இருந்து இறக்கி விட்டு ”இப்ப பரவாயில்லையா கமலா.நீ இப்ப வூட்டுக்கு சீக்கிரமா போயிடலாமே.நாம மறுபடியும் திங்கக் கிழமை சாயங்காலம் மீட் பண்ணலாமா கமலா” என்று கேட்டான் ”சரிங்க,நாம ஹோட்டலில் மீட் பண்ணலாம்” என்று சொல்லிவிட்டு அவள் வேக வேகமாக போனாள்.சற்று நேரத்திற்கெல்லாம் கே கே நகர் இருட்டில் மறைந்து விட்டாள்.

ஹோட்டலில் இரவு ‘லைட்டாக’ச் சாப்பிட்டு விட்டு ‘நைட் டியூட்டிக்கு’ கிளம்பப்¢ போனான் நடராஜன்.ஒரு வாலிபனேடு இவ்வளவு நெருக்கமாக வந்த சுகம் மனதில் சந்தோஷத்தை கொடுத்த போதிலும் கமலா பயந்துக் கொண்டே தன் வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தாள்.‘ரொம்ப லேட்டாகி விட்டதே,அப்பாஅம்மா கேட்டால் என்ன சொல்வது’ என்று யோசித்துக் கொண்டே நடந்தாள். வீட்டு வாசலிலேயே அப்பாவும் அம்மாவும் காத்துக் கொண்டு இருந்தார்கள்.’ஏம்மா இவ்வளவு ‘லேட்’.நாங்க ரெண்டு பேரும் பயந்தே போய் விட்டோம். ஆமாம்மா, நீ ஏன் ‘செல்’லிலே கூட பதில் பேசவே இல்லே.உன் செல் போனை ‘ஆப்’ பண்ணி இருந்தாயா என்ன,இல்லை உன் செல் போன் வேல செய்யலையா” என்று இருவரும் மாறி மாறி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.சட்டென்று “ஆமாம்ப்பா என் ‘செல்’ மதியத்தில் இருந்து சரியாய் வேலை செய்யலே. என்ன ‘ஸ்பால்ட்’ன்னு பார்க்கணும். வந்துப்பா,நான் வந்த பஸ் ‘டயர்’ திடீரென்று ‘பஞ்சர்’ ஆயிடுச்சி.அசோக் நகர் கிட்டே பஸ்ஸை நிறுத்திட்டார் டிரைவர்.எங்க எல்லோரையும் கீழே இறக்கி விட்டார் கண்டக்டர்.சற்று நேரத்துக்கு எல்லாம் கண்டக்டர் “பஸ் போக நேரம் ஆவும்.நீங்க எல்லோரும் இறங்கி வேறே பஸ்ஸ்லே ஏறிப் போங்க” என்று சொல்லி விட்டு ‘டெப்போ’க்கு போன் பண்ண போயிட்டாருப்பா.நாங்கள் எல்லாரும் கிழே இறங்கி நின்னோம்.வர பஸ் எல்லாம் ரொம்ப‘ஸ்புல்லாக’ வந்துகிட்டு இருந்துச்சு.நான் அஞ்சு பஸ்களை விட்டுட்டு ஆறாவது பஸ்லே ஏறி வந்தேம்ப்பா. அதான் ‘லேட்டாயிடிச்சி ‘அப்பா.என் செல் போனை நான் சார்ஜில் இப்போ போடனும்.போனில் சார்ஜ்ஜும் இல்லே”என்று இரண்டு பொ¢ய பொய்க¨ளைச் சொல்லி நிலைமையை மெல்ல சமாளித்தாள் கமலா.கொந நேரம் ஆனதும் “எனக்கு தலை ரொம்ப வலிக்குதும்மா. பசி இல்லேம்மா.எனக்கு ரொம்பத் தூக்கம் வருதும்மா.நான் படுக்கப் போறேன்ம்மா” என்று சொல்லி கையை கழுவி விட்டு எழுந்து அவள் படுக்கப் போய் விட்டாள். பெற்றவர்களிடம் பொய் சொன்னதை எண்ணி மிகவும் வருத்தப் பட்டாள் கமலா. கடவுளிடம் மன்னிப்பு கேட்டாள் கமலா. தூக்கம் வராததால் அவள் புரண்டு புரண்டு படுத்தாள்.

காலையில் எழுந்து கமலா தன் பாட்டுக்கு தன் வேலைகளை கவனித்துக் கொண்டு இருந்தாள்.குளித்து விட்டு நாஷ்டாவை சாப்பிட்டு விட்டு ‘லன்ச்’ பாக்சை எடுத்துக் கொண்டு அவள் ஆஸ்பீஸ் கிளம்பினாள்.அவள் தன் உடலில் ஒரு புது உணர்ச்சி வந்து இருப்பதாய் உணர்ந்தாள்.’நாம நடராஜனை காதலிப்பதும்,பழகுவதும் சரியா,அவரை நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியுமா,அவர் நம் குடும்பத்தை ஏத்துக் கொள்வாரா.அவர் தன்னைக் காதலிக்கிறாரா, அவர் குடும்பம் நம் குடும்பத்தைப் போல் நடுத்தர குடும்பமா.இல்லை பணக்கார குடும்பமா’போன்ற பல கேள்விகள் அவள் மனதை வாட்டியது.அவளுக்கு குழப்பமாய் இருந்தது.நைட் டியுட்டி முடித்து விட்டு வந்த நடராஜனுக்கும் தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுத்தான்.அவன் மனதில் ‘எது எப்படி இருந்தாலும் நாம் கமலாவை இழக்கக் கூடாது,அவளை நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று ஆசைப் பட்டது.

நடராஜனுக்கு அப்போது வயது பன்னிரண்டு இருக்கும்.அவன் அரியலூர் உயர் நிலைப் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படித்து வந்தான்.பள்ளிக்கூடத்தில் லாங்க் ஜம்ப்,ரன்னிங்க் ரேஸ்,ஹை ஜம்ப்,சடு குடு ஆட்டம், வெயிட் தூக்குதல்,பாட்மென்டன்,கிரிகெட், போன்ற எல்லா ஆட்டங்களிலும் அவன் தான் முதல் பரிசு வாங்கி வந்தான் நடராஜன்.நடராஜன் படிப்பில் ரொம்ப சுமாராகத் தான் இருந்தான். இருந்தாலும் வருடா வருடம் அவன் தான் சிறந்த ‘ஆட்ட நாயகன் ‘பரிசை பெறுவான்.அவன் அக்கா சரஸ்வதி ‘ப்ளஸ் டூ’ வில் படித்து வந்தாள்.தங்கை பவானி மூன்றாவது க்ளாஸில் படித்து வந்தாள்.அக்கா படிப்பில் நடராஜனைப் போல் ரொம்ப ரொம்ப சுமார் தான்.கணக்கு அவளுக்கு வரவே வராது.பாஸ் மார்க்கு வாங்கவே கஷ்டப் படுவாள்.

நடராஜன் அப்பா பரமசிவம் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.அரியலூரில் அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது.அதில் நெல் பயிரிட்டு ரெண்டு போக சாகுபடி செய்து வந்தார். விவசாயத்தில் வரும் நெல்லில் பாதியை தன் குடும்பத்துக்கு வைத்துக் கொண்டு மீதி பாதியை வித்து தான் மற்ற வருடாந்திர செலவுக்கு வைத்துக் கொள்வார்.அவருக்கு உறுதுணையாக இருந்துக் கொண்டு அவருக்கு வரும் பணத்தில் குடும்பத்தை நல்லபடி நிர்வாகம் பண்ணி வந்தாள் அவர் மணைவி பார்வதி.பார்வதிக்கு ரெண்டு அண்ணன்கள், ரெண்டு தம்பிகள்,ஒரு அக்கா,ஒரு தங்கை என்று நிறைய பேர்கள் அதே ஊரில் இருந்தார்கள்.எல்லோருக்கும் விவசாயம் தான் தொழில். யாரும் வெளியில் வேலைக்கு என்று போகவில்லை.எல்லோரும் ஒத்துமையாக ஒன்றாய் பயிர் செய்து இருந்து வந்தார்கள்.அவசியம் ஏற்பட்டால் ஒருவர் நிலத்தை மற்றொருவர் பயிர் செய்து உதவி வந்தார்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த குடும்பம் நடராஜன் குடுமம்.

‘ப்ளஸ் டூ’ பரீட்சை வந்தது.சரஸ்வதி கணக்கு பேப்பர் சுமாராய் தான் எழுதி இருந்தாள் ’ரிஸல்ட்’ வந்தது.சரஸ்வதி கணக்கில் பெயில் ஆகி இருந்தாள்.அவள் அப்பாவுக்கு ரொம்ப கோவம். “நல்லா படிச்சு ‘பாஸ்’ பண்ணக் கூடாது.நீ பெயில் ஆகக் கூடாதுன்னு தானே நான் உனக்கு கணக்கு ‘ட்யூஷன்’ வேறு வச்சு இருந்தேனே. இப்படி ‘பெயில்’ ஆயி¢ட்டு வந்து நிக்கறேயே” என்று ‘கன்னா பின்னா’ ன்னு சரஸ்வதியை திட்டி,நல்லா அடித்தும் விட்டார்.அழுதுக் கிட்டே இருந்தாள்.ஒரு நாள் வீட்டில் ஒருவரும் இல்லாத சமயம் பார்த்து ,துக்கம் தாளாமல் அவள் தூக்கு போட்டுக் கொண்டு இறந்து விட்டாள்.பெண் இறந்து போன அதிச்ர்ச்சி அவரை மிகவும் வாட்டியது.தன் பெண்ணையே நினைத்து நினைத்து அழுது,வருத்தப் பட்ட அவருக்கு நெஞ்சு வலி அதிகமாகியது.அவர் மயக்கமாகி கிழே விழுந்து விட்டார்.நடராஜனும் பார்வதியும் உடனே அவரை அருகில் இருந்த ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்தார்கள். இரண்டு நாட்கள் அவரை I.C.U.வில் வைத்து வைத்தியம் பண்ணினார்கள்.அவருக்கு ரத்த கொதிப்பு அதிகமாகி அவர் மூளைக்குப் போகும் ரத்தக் குழாய் பாதிக்கப் பட்டு அவருக்கு வலப் பக்க கையும் காலும் செயல் இழந்து விட்டது.மருந்து இஞ்செக்ஷன் மூலம் அவர் ரத்த கொதிப்பைக் கட்டுப் படுத்தி அவரை ‘வார்டு’க்கு அனுப்பினார்கள் டாக்டர்கள்.‘நன்றாக இருந்த அப்பா இப்படி ஆயிட்டடாரே,இனி இந்த நிலன் புலன்களை யார் கவனிப்பாங்க,இனிமே நம்ப குடும்பத்தை யார் கவனிச்சுப்பாங்க’ என்று சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தது அவன் ஞாபகத்துக்கு வந்தது.அதை நினைத்து அவன் கண்கள் குளமாயின.‘வீல் சேரில்’ வீட்டுக்குஅனுப்பி வைத்தார்கள் டாக்டர்கள்.எல்லா உறவுக் காரங்களும் பார்வதயுடன் இருந்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.”அந்த ரெண்டு ஏக்கர் நிலத்தை மச்சான் உயிரோடு இருந்த போது செய்து வந்தது போல் ரெண்டு போக சாகுபடி செய்து நெல்லை நாங்க கொடுக்கிறோம். தேவைப் பட்ட போது பணமும் கொடுத்து உதவுறோம்.நடராஜனும் பவானியும் நல்லா படிச்சு வரட்டும் “என்று சொல்லி அவர்கள் நிலத்தின் மொத்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

நடாஜன் அரியலூரில் ‘ப்ளஸ் டூ’ பாஸ் பண்ணினான்.அவன் அம்மா நடராஜனை “நீ படிச்சது போதும்டா.இங்கேயே இருந்துக் கொண்டு நம்ம நிலன் புலன்களை எல்லாம் அப்பா பார்த்துக் கிட்டு வந்தது போல பார்த்துக் கிட்டு வாப்பா” என்று சொல்லி வந்தாளள்.ஆனால் நடராஜனுக்கோ சின்ன வயதில் இருந்தே இந்த கார்,லாரி,ஆட்டோ ரிக்ஷா இவைகளைப் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசை.அவன் அப்பா அவனை அரியலூரிலேயே மேல் படிப்பு படிக்கச் சொன்னார்.ஆனால் நடராஜன் ‘தனக்கு இங்கே மேல் படிப்பும் வேண்டாம் நில புலன்களை கவனிக்கும் வேலையும் வேண்டாம்.தான் திருச்சி போய் ‘ஆட்டோமொபைல் இஞ்சினி யரிங்க்’ ‘டிப்ளமா’ படிக்க மிகவும் ஆசைப்படுவதாய் சொல்லி வந்தான்.அவன் அம்மாவுக்கு என்ன பண்ணுவது என்றே தெரியவில்லை. உடனே அவன் பெரிய மாமா தான் முன் நின்று பார்வதியிடமும் மச்சானிடமும் நிறைய சொல்லி “நாங்க இருக்கோம்.இந்த நிலன் புலன்களை கவனிச்சு கிட்டு வர. நடராஜன் எதுக்கு இங்கு இருந்துக் கிட்டு அவைகளை கவனிக்கணும். நாங்க இந்த நிலன் புலங்களை கவனிச்சு கொள்கிறோம்.அவனை திருச்சி அனுப்பி அவன் ஆசை பட்டது ‘ஆட்டோமொபைல் இஞ்சனியரிங்க்’ படிக்க வக்கலாம்.நடராஜன் தனக்குப் பிடிச்ச படிப்பு படிக்கட்டும்.நாங்க தான் படிக்காம இந்த விவசாயம் ஒன்னு தான் செஞ்சு கிட்டு வருகிறோமே.நடராஜன் வேறு புதிசா ஏதாவது படிப்பு படிக்கட்டும். படிச்சு நல்ல வேலை செஞ்சு வரட்டும்” என்று பிடிவாதமாகச் சொன்னார்.பொ¢ய மாமா சொன்னால் அந்த குடும்பத்தில் வேத வாக்கு.சாதாரணமாக எல்லோரும் கேப்பாங்க அவர் சொல்வதை. “சரி” என்று சொல்லி பார்வதியும் பரமசிவமும் நடராஜனை திருச்சி அனுப்பி ‘ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்க் ‘ படிப்பு படிக்க அனுப்பி வைத்தார்கள்.

திருச்சி வந்து நடராஜன் மூன்று வருஷ ‘ஆட்டோமொல் இஞ்சினியரிங்க்’ படிப்பில் சேர்ந்தான்.நடராஜனுக்கு இந்த படிப்பில் சேர்ந்ததை பற்றி மிகவும் சந்தோஷம்.அவன் கஷ்டப்பட்டு மிகுந்த ஆர்வத்தோடு அந்த படிப்பைப் படித்து வந்தான்.மூன்று வருஷ படிப்பு முடிந்து நடராஜன் ‘ஆட்டோமொபைல் இஞ்சனியரிங்க்’ ‘டிப்லமா’வில் நல்ல மார்க்கு வாங்கி ‘பாஸ்’ பண்ணின திருச்சியில் நடராஜனுக்கு தன் படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை.அவன் தன் பெற்றோரிடம் வந்து “எனக்கு திருச்சியில் நல்ல வேலை ஏதும் கிடைக்கலே. நான் சென்னைக்குப் போய் நல்ல வேலை தேடலாம் ன்னு இருக்கேன்” என்று சொன்னான்.பரமசிவமும் பார்வதியும் நடராஜனை “சென்னைக்கெல்லாம் நீ போய் வேலை தேட வேண்டாம்.திருச்சியில் என்ன வேலை கிடைக்குதோ அதை பண்ணு.அதுவே நமக்குப் போதும்” என்று சொல்லி விட்டார்கள்.மனம் உடைந்துப் போனான் நடராஜன்.

நடராஜன் ஆசையை புரிந்துக் கொண்ட அவனுடைய பொ¢ய மாமா மறுபடியும் பரமசிவத்தி டமும் பார்வதியிடமும் மெல்ல சொல்லி “நாம நடராஜன் ஆசையை நல்லா புரிஞ்சக்கணும்.அவன் படிச்ச படிப்பு வீணாகம இருக்கணும்னா அவனை நாம சென்னைக்குத் தான் அனுப்பணும். திருச்சியிலே கார் ,பஸ், மோட்டார்,தயாரிக்கும் கமபனிகளெ இல்லையே.அவைகள் எல்லாம் சென்னையிலே தான் இருக்கு.அங்கு தான் நடராஜனுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று அவன் சொல்றானே,நாம அவனை அனுப்பித் தான் பார்க்கலாமே.அப்படி அங்கு நல்ல வேலை ஏதும் கிடைக்கலேன்னா நடராஜன் திருச்சி வந்து வேலை பார்க்கட்டுமே” என்று விவரமாகச் சொன்னார். எல்லோரும் ஒத்துக் கொண்டு விடவே நடராஜன் சென்னைக்கு வேலைக்குப் கிளம்பிப் போனான். சென்னை வந்த ஒரு மாதத்திற்கெல்லாம் அவனுக்கு ‘அசோக் லேலண்ட் ‘கம்பனியில் சூப்பர்வைசராக வேலை கிடைத்தது.பரமசிவதிற்கும் பார்வதிக்கும் தன் மகன் சென்னையில் ஒரு பொ¢ய மோட்டார் கம்பனியில் நல்ல வேலை கிடைத்து இருக்கிறது என்று கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

நடராஜன் எத்தனை முறை சென்னைக்கு வந்து அவர்களை ‘தன்னுடன் வந்து தங்குங்க’ என்று கூப்பிட்டாலும் ”அங்கே எனக்கு என்ன இருக்குடா.இங்கேன்னா இவ்வளவு உறவுக் காரங்க இருக்காங்க.உங்க அப்பாவுக்கு ரொம்ப தூரம் எல்லாம் நடக்க எல்லாம் முடியாது.இங்கேயே மெல்ல நடமாடிக்கிட்டு இருந்து வருவாரு. இங்கு நாங்க என் அண்ணன்,தம்பி, அக்கா, தங்கை பசங்களுடன் பேசிக்கிட்டு இருந்தாலே எங்க பொழுது போயிடும்.தவிர பவானி படிச்சு முன்னுக்கு வரணும்.இந்த நல்ல காத்து, காவோ¢ தண்ணி இதெல்லாம் சென்னையிலே கிடைக்குமா.இங்கு இருக்கும் பிள்ளையார் கோவிலு க்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு வருவோம். எங்களுக்கு இந்த இடம் தான் சௌகரியம் நடராஜா.நீ முடிஞ்சப்போ வந்து எங்களையயும், நம் உறவுக்காரங்களையும் பார்த்து விட்டுப் போப்பா. அது தான் நல்லது” என்று சொல்லுவாள் பார்வதி.’அவங்க அங்கேயே சௌகரிய மா தங்கை,மற்ற உறவுக்காரங்களுடன் இருந்து வரட்டும்’ என்று நினைச்சு அவர்களை ‘சென்னைக்கு வாங்க’ என்று கூப்பிடுவதை விட்டு விட்டு அவன் மட்டும் முடிந்த போது தன் அப்பா அம்மா உறவுக்காரங்களை பார்த்து விட்டு வந்துக் கொண்டு இருந்தான்.தங்கை பவானியை அரியலூரில் கல்லூரியில் B.Sc.’பயாலஜி கோர்ஸில்’ சேர்த்தான் நடராஜன்.

நடராஜன் தன் தங்கை பவானியைப் பாத்து “பவானி நீ B.Sc. ‘பயாலாஜி’ படிச்சு முடிஞ்சதும் நான் உன்னை டாக்டருக்கு படிக்க வைக்கனும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன்.நீ இந்த ‘கோர்ஸில்’ நல்லா படிச்சு முதல் வகுப்பில் ‘பாஸ்’ பண்ணினா உனக்கு டாக்டர் படிப்பு படிக்க ‘ஈஸி’யாக சீட் கிடைக்கும். நான் சொல்வது உனக்கு புரிதா பவானி” என்று கேட்டான் நடராஜன்.“சரி அண்ணா நான் நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கி முதல் வகுப்பில் நான் பாஸ் பண்றேன்.நீங்க கவலைப் படாதீங்க” என்றாள் பவானி.“ரொம்ப சந்தோஷம் பவானி” என்று சொல்லி விட்டு தன் பெற்றோர்களுக்கும் இந்த ‘ஐடியாவை’ச் சொன்னான் நடராஜன்.தன் தங்கை டாக்டர் படிப்புக்கு நாம் நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்று எண்ணினான் அவன்.தன் சம்பள பண மீதியை சேர்த்து வச்சு கிட்டு இருந்தான் நடராஜன்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *