அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 4,553 
 

அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 | அத்தியாயம்-22

சாயங்காலம் மீரா வந்ததும், ‘நர்ஸிங்க் ஹோமில்’தான் பட்ட கஷ்டத்தை சொன்னாள் ராதா. மாமியார் சொன்னதைக் கேட்ட மீரா மிகவும் வருததப் பட்டாள்.

ராகவன் தவறாமல் அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ரெண்டு வேளையும் BP மாத்திரை களையும்,சக்கரை ‘லெவல்’ குறைய மாத்திரைகளையும் கொடுத்து வந்தார்.
“நாங்க இத்தனை வருஷமா ரெண்டு வேளையும் ‘காபி’லே சக்கரைப் போட்டு குடிச்சுண்டு வந்தோம்.ரெண்டு வேளையும் சாம்பார் சாதமும்,ரசம் சாதமும் தயிர் சாதமும் சாப்பிட்டுண்டு வந்தோம்.இந்த கோதுமை சாதமும் பிடிக்கலே,சப்பாத்தியும் பிடிக்கலே.நாங்க என்ன பண்ணட்டும் சொல்லு.எங்க ரெண்டு பேருக்கும் நரக வேதனையா இருக்கேடா.நாங்க ‘காபி’லே மாமி கிட்டே ரகசியமா கேட்டு சக்கரையை போட்டுண்டு தான் வறோம்.ராத்திரியும் சாதம் தான் சாப்பிடறோம்’ என்று உண்மையை சொன்னார் சுந்தரம்.

ராகவன் சமையல் கார மாமியைப் பார்த்து “நான் ‘நீங்கோ இனிமே எங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சக்கரையே இல்லாத ‘காபி’யே ரெண்டு வேளையும் குடுங்கோ.ரெண்டு பேருக்கும் ஒரு வேளை தான் சாதம் போடுங்கோ.ராத்திரி வேளேலே கோதுமை சாதமோ,இல்லே சப்பாத்தியோ பண்ணிக் குடுங்கோ’ன்னு தானே சொன்னேன்.ஆனா நீங்கோ அவாளுக்கு ரகசியமா ‘காபி’லே சக்கரையை யும்,ராத்திரியிலே சாதமும் ஏன் தறேள்” என்று கத்தினான்.

உடனே அந்த சமையல் கார மாமி “நான் உங்காத்லே கையை நீட்டி சம்பளம் வாங்கற ஒரு சமையல் கார மாமி.அந்த பொ¢யவா ரெண்டு பேரும் என் கிட்டே ரகசியமா கேட்டா,நான் எப்படி இல்லேன்னு சொல்றது சொல்லுங்கோ.நீங்கோ உங்க அம்மா அப்பா கிட்டே கண்டிப்பா இருக்கலாம். நான் கண்டிப்பா இருக்க முடியுமா சொல்லுங்கோ.இருக்க முடியாதே” என்று சொன்னாள்.

ராகவன் கோவம் வந்து ”நீங்கோ பண்றது கொஞ்சம் கூட நன்னா இல்லே.டாக்டர் கண்டிப்பா சொன்னதே நான் உங்க கிட்டே சொன்னேன்.நீங்கோ இப்படி சொல்றேள்.நான் டாக்டர் சொன்னதே தான் உங்களுக்கு சொல்ல முடியும்.நான் வேறே என்ன பண்றது” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

“ யாருக்கு BPயும்,‘சக்கரை லெவலும்’ஜாஸ்தியா இருக்கோ,அவா டாக்டர் சொன்னபடி தான் சாப்பிட்டுண்டு வரணும்.நீங்கோ ரெண்டு பேரும் தயவு செஞ்சி டாக்டர் சொன்னா மாதிரி சாப்பிட பழகிண்டு வாங்கோ.வேறே வழியே இல்லே.தயவு செஞ்சி ‘காபி’லே சக்கரை போட்டுக்காதேள். ராத்திரி சாதம் சாப்பிடாதேள்.கோதுமை சாதமோ,இல்லே சப்பாத்தியோ மட்டும் சாப்பிடுங்கோ” என்று கெஞ்சினான் ராகவன்.

ராகவன் வாரத்தில் ஒரு நாள் லீவும்,மீரா வாரத்தில் இரண்டு நாள் லீவும் போட்டு விட்டு, ராதாவையும்,சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு ‘நர்ஸிங்க் ஹோமுக்குப் போய் ராதாவுக்கு ‘கெமியோ தெராபி’ கொடுத்து வந்தாள்.

மூன்று மாதம் ஆகி விட்டது.

ராதா சாப்பிடவே கொஞ்சம் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தாள்.அவளால் எதையும் முழுங்க மிகவும் கஷ்டப் பட்டாள்.அவள் கணவனிடமும் ராகவன் இடமும் “மாமி குடுக்கற குழஞ்ச சாதத்தை முழுங்கவே எனக்கு ரொம்ப கஷடமா இருக்கு.நான் கொஞ்ச கொஞ்சமாத் தான் அந்த சாதத்தே முழுங்கிண்டு வறேன்.இந்த வேதனை இப்போ புதுசா வந்து இருக்கு.இன்னும் எத்தனை நாளுக்கு இருக்குமோ இந்த வேதனை” என்று சொல்லி அலுத்துக் கொண்டாள்.

அந்த தடவை ராகவன் அம்மாவையும்,அப்பாவையும் ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு அழைத்துக் கொண்ட போன போது,லேடி டாக்டரிடம் “டாக்டர்,எங்க அம்மா சாப்பாட்டை முழுங்க கஷ்டமா இருக்குன்னு சொல்றா.அது ஏன்னு கொஞ்சம் பாருங்களேன்” என்று வருத்தப் பட்டுக் கொண்டே கேட்டான்.

உடனே அந்த லேடி டாக்டர் ராதாவின் உணவு குழாயை ‘எக்ஸ் ரே’ எடுத்துப் பார்த்து விட்டு “ரொம்ப சாரி சார்.’கான்ஸர்’ வியாதி இவங்க உணவுக் குழாயிலே ரொம்ப பரவி இருக்கு.இனிமே இவங்க எதையும் முழுங்க ரொம்ப கஷ்டப் படுவாங்க.நாங்க குடுத்த ‘கெமியோ தெராபி’ இவங்க உடம் ப்லே வேலேயே செய்யலே.நீங்க இனிமே இவங்களே இங்கே இட்டு கிட்டு வர வேணாம்.வீட்லேயே வச்சுக் கிட்டு,இவங்களே கவனிச்சுக் கிட்டு வாங்க.இவங்க உணவு குழாய் ‘எக்ஸ் ரே’க்கு மட்டும் ‘ரிசப்ஷன்லே’ பணம் கட்டுங்க” என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட ராகவனும்,சுந்தரமும் மிகவும் பயந்துப் போய் விட்டார்கள்.

‘ரிஸ்ப்ஷன்லே’ பணம் கட்டி விட்டு ராகவன் அம்மாவையும்,அப்பாவையும் வீட்டுக்கு அழைத்து வந்தான் ராகவன்.

வீட்டுக்கு வந்த ராகவன் மீராவிடமும்,பரமசிவத்திடமும்,சரோஜவிடமும்,வரதனிடமும் அம்மாவின் உடம்பைப் பற்றிச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டான்.அவர்கள் எல்லோரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

ஒன்றும் சாப்பிட முடியாமல் கஷ்டப் பட்டு வந்தாள் ராதா.

சமையல் கார மாமி ராதாவுக்கு சாதத்தை நனறாகக் கறைத்து கொடுத்து வந்தாள்.சுந்தரம் தன் மணைவியின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு,அவள் படும் ‘கஷ்டத்தை’ப் பார்த்து வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தார்.

சமையல் கார மாமியும் ராதா படும் கஷ்டத்தைப் பார்த்து “மாமி கறைச்சுக் குடுத்த சாதத்தை முழுங்க இவ்வளவு கஷ்டப் படறதேப் பாத்தா நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.பாழும் அந்த வியாதி மாமியின் உணவு குழாயிலே வந்து இருக்கே.ஒன்னும் சாப்பிடாம எப்படி ஒருத்தர் உயிர் வாழ்ந்துண்டு வறது.நேக்கு ஒன்னும் புரியலையே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டாள்.

நாளடையிலே கறைத்த சாதத்தை கூட முழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப் பட்டு வந்தாள் ராதா.அவள் சாப்பாடு குறைந்துக் கொண்டு வந்து,அவள் மிகவும் ’வீக்காகி’க் கொண்டே வந்தாள். ராதா சாப்பிடுகிற உணவு தொண்டை குழாய்க்கு கீழே மிக மெதுவாகத் தான் இறங்கிக் கொண்டு இருந்தது.சில சமயங்களில் உணவு தொண்டையிலே இறங்காததால்,வாயிலேயே வைத்துக் கொண்டு இருந்தாள் ராதா.

ராகவன் ‘லீவு’ போட்டு விட்டு அம்மா கூட இருந்து வந்தான்.

ஒரு வாரம் பசியால் கஷ்டப் பட்டு வந்த ராதா,அடுத்த நாள் துக்கத்திலேயே இறந்து விட்டாள்.

“இப்படி எங்களே தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டேளே.சரோஜாவும் வரதனும் இன்னும் சின்னவாளா தானே இருக்கா.நீங்கோ எங்க கூட இன்னும் கொஞ்ச வருஷமாவது இருந்து வந்து இருக்கக் கூடாதா” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்கள் ராகவனும்,மீராவும்.

சமையல் கார மாமியும் அழுதுக் கொண்டு இருந்தாள்.

சுந்தரமும் விக்கி,விக்கி,அழுதுக் கொண்டு இருந்தார்.

விஷயம் கேள்விப் பட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் ராகவன் வீட்டுக்கு வந்து ராகவனையும்,மீராவையும் துக்கம் விசாரித்து விட்டுப் போனார்கள்.

சமையல் கார மாமி பன்னிரண்டு நாளைக்கும்,அவள் வீட்டில் இருந்து சாப்பாட்டை பண்ணீக் கொண்டு வந்துக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

ராகவன் வாத்தியாரை வீட்டுக்கு வரச் சொல்லி அம்மாவை ‘தகனம்’ பண்ணி விட்டு வந்தான்.

ராகவன் அம்மாவுக்கு பன்னிரண்டு நாட்கள் எல்லா ஈமக் காரியங்களையும் பண்ணி விட்டு, பதி மூன்றாம் நாள் வீட்டை ‘புண்யாவசனம்’ பண்ணீனான்.அன்று சமையல் கார மாமி எல்லோருக் கும் ‘கல்யாண சமையலை’ப் பண்ணீக் கொண்டு வந்து இருந்தாள்.அந்த கல்யாணச் சாப்பாட்டை எல்லோரும் சாப்பிட்டார்கள்.

சாப்பாடு கொண்டு வந்த பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு சமையல் கார மாமி வீட்டுக்கு ப் போனாள்.

அன்று மத்தியானமே சுந்தரம ராகவனைப் பார்த்து “ராகவா,ராதா ‘பரலோகம்’ ‘போயிட்டா. நீங்கோ ரெண்டு பேரும் நாளைலே இருந்து ஆபீஸ்க்குப் போயிடுவேள்.சமையல் கார மாமி,ஆத்து சமையலைப் பண்ணீ வச்சுட்டு பதினோரு மணிக்கு எல்லாம் ஆத்துக்குக் கிளம்பிப் போய் விடுவா. அப்புறமா நாலு மணிக்குத் தான் இந்த ஆத்துக்கு வருவா.இவ்வளவு பொ¢ய ஆத்லே இத்தனை நேரம் நான் தனியா எப்படிடா இருந்து வறது.என் உடம்பு முன்னே போல இல்லேயேடா”என்று அழமாட்டாத குரலில் கேட்டார்.

உடனே ராகவன் மீராவைப் பார்த்து ”மீரா,அப்பா நிறைய நேரம் படுத்துண்டே இருக்கார். அவருக்கு BPயும்,சக்கரை ‘லெவலும்’ஜாஸ்தியா இருக்கு.நீயும் நானும் ‘ஆபீஸ்’க்குப் போய் விடப் போறோம்.சரோஜாவும்,வரதனும் பள்ளீ கூடம் போயிடுவா.பரமசிவன் காலேஜ்க்கு போயிடுவான். என்ன பண்ணலாம்”என்று கேட்டு விட்டு,யோஜனைப் பண்ணினார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நான் என்ன சொல்றேன்னா,நாளேலே இருந்து சமையல் கார மாமியே நம்ம ரெண்டு பேர்லே ஒருத்தர் ஆத்துக்கு வர வரைக்கும்,நம்ம ஆத்லே இருந்துண்டு வரசொல்லலாம். மாமிக்கு சம்பளத்தே இன்னும் ரெண்டாயிரம் சேத்துத் தறதா சொல்லலாமா” என்று கேட்டார் ராகவன்.

உடனே மீரா “நானே உங்க கிட்டே இந்த மாதிரி பண்ணலாமான்னு கேக்கலாம்ன்னு நினைச்சு ண்டு இருந்தேன்.அந்த மாமி ஆத்லே இருந்தா,ஒரு அப்பாவுக்கு அவசரம்ன்னா,நமக்கு உடனே ‘போன்’ பண்ணீ சொல்வாளே.நம்ம ரெண்டு பேர்லே ஒருத்தர் ஆத்துக்கு ஓடி வரலாமே இல்லையா சொல்லுங்கோ.நமக்கோ மனுஷான்னு யாரும் இல்லையே” என்று சொன்னாள்.

“ஆமாம் மீரா.நான் இதையும் மனசிலே வச்சுண்டு தான் சொன்னேன்.அப்பா இப்படி கண்ணே மூடிண்டு படுத்துண்டு இருக்கும் போது,அந்த சமையல் கார மாமி நம்மாத்லே இருக்கிறதே எல்லாம் எடுத்துண்டு ஓடிப் போயிட்டா,அப்புறமா நாம ரெண்டு பேரும் ‘போலிஸ் ஸ்டேஷனுக்கு‘ இல்லே ஓடிப் போய் ‘கம்ப்லெயிண்ட்’ எழுதிக் குடுக்கணும்.’தலை வலி போய் திருகு வலி’ வந்தா மாதிரி ஆயிடப் போறதே மீரா.இந்த சமையல் கார மாமியே நம்பி ஆத்தே விட்டுட்டு போறது ‘சிலாக்கியமா’. நீ இதே யோஜனைப் பண்ணயா” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார் ராகவன்.

“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது.அந்த சமையல் கார மாமி ரொம்ப நல்லவ மாதிரித் தான் தோன்றது.திருடறவா எப்பவும் திருருடுவா.எங்கேயும் திருடுவா. நீங்கோ வீணா சந்தேகப் படறேள். அந்த மாமியேப் பாத்தா அந்த மாதிரி பண்றவளா நேக்குத் தோனலே.நீங்கோ தைரியமா அந்த மாமியே ஏற்பாடு பண்ணுங்கோ” என்று சொன்னாள் மீரா.

” ராகவா,மீரா சொல்றது ரொம்ப சரி.அந்த மாமியே பாத்தா திருடற மாமி மாதிரி தெரியலே. அந்த மாமி நம்ம ஆத்லே முழு நேரமும் இருந்து வரட்டும்.இப்போ குளிர் காலம் ஆரம்பிடிச்சுடுத்து. நான் பதினோறு மணிக்கு சாப்பிட உக்காரும் போது சாம்பார்,ரசம் எல்லாம் ரொம்ப ஆறிப் போய் இருக்கும்.நான் எழுந்து,அதே சுட வச்சுப் சாப்பிடணும்.அந்த மாமி நம்ம ஆத்லே இருந்தா எனக்கு சுட வச்சுப் போடுவா” என்று சொன்னார் சுந்தரம்.

”நான் அந்த சமையல் கார மாமியே நம்ம ஆத்லே முழு நேரத்துக்கு ஏற்பாடு பண்ணீடறேன்” என்று சொன்னார் ராகவன்.

அன்று சாயந்திரம் நாலு மணிக்கு அந்த சமையல் கார மாமி வீட்டுக்கு வந்ததும் ராகவன் மாமியைப் பார்த்து “மாமி,அப்பா நிறைய நேரம் படுத்துண்டு இருக்கார்.நானும்,மீராவும் நாளைலே இருந்து ‘ஆபீஸ்’க்குப் போய் விடப் போறோம்.இப்போ குளிர் காலம் ஆரம்பிச்சுடுத்து.அப்பா பதினோறு மணிக்கு சாப்பிடறப்ப,நீங்கோ அவருக்கு இந்த சாம்பார்,ரசம் ரெண்டிடையும் சுடப் பண்ணிப் போடுங்கோ.எங்க ரெண்டு பேர்லே ஒருத்தர் ஆத்துக்கு வர வரைக்கும்,இந்த ஆத்லே நீங்கோ இருந்து ண்டு வாங்கோ.நாங்க உங்க சம்பளத்தே இன்னும் ரெண்டாயிரம் சேத்துத் தறோம்” என்று சொன்னார்.

“சரி,நீங்கோ சொன்னா மாதிரி,உங்க ரெண்டு பேர்லே ஒருத்தர் ஆத்துக்கு வர வரைக்கும் இந்த ஆத்லே இருந்துண்டு, பதினோறு மனிக்கு அப்பாவுக்கு சாம்பார்,ரசம் எல்லாம் சூடு பண்ணிப் போடறேன். கூடவே அப்பாவுக்கு ஏதாவது ஒரு அவசரம்ன்னா,உங்க ரெண்டு பேருக்கும் ‘போன்’ பண்ணீ சொல்றேன்.எல்லாத்துக்கும் சேத்து நீங்கோ என் சம்பளத்தே மூவாயிரம் ரூபாய் ஏத்தீ குடுங் கோ.விலை வாசி எல்லாம் ரொம்ப ஏறி இருக்கு” என்று கேட்டாள் அந்த சமையல் கார மாமி.

“சரி மாமி,நான் உங்க சம்பளத்தே மூவாயிரம் ரூபாய் ஏத்தீத் தறேன்” என்று ஒத்துக் கொண்டார் ராகவன்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராகவன் “மாமி எனக்கு ரெண்டு ‘போன்’ நம்பர் இருக்கு.ஒன்னு 56756742.இன்னொன்னு 56756743.மீராவோட ‘போன்’ நம்பர் 45674567” என்று சொன்னதும் அந்த மாமி” நீங்கோ அந்த மூனு நம்பரையும் தனித் தனியா ரெண்டு காகிதத்லே எழுதிக் குடுங்கோ. நான் அந்த காகிகதங்களை அஞ்சரைப் பெட்டியிலே வச்சுக்கறேன்.அவசியம்ன்னா நான் நிச்சியமா போன் பண்றேன்” என்று சொன்னாள்.

ராகவன் ஒரு காகிதத்தில் தன்னுடைய ‘போன்’ நம்பர்களையும், இன்னொரு காகிகத்தில் மீராவின் நம்பரையும் எழுதிக் கொடுத்தான்.அந்த மாமி அந்த இரண்டு காகிதங்களையும் சமையல் அறையில் இருந்த அஞ்சரைப் பெட்டியில் வைத்துக் கொண்டாள்.

அடுத்த நாளில் இருந்து சமையல் கார மாமி,அந்த வீட்டுக்கு காலை ஆறு மணீக்கு வந்து, வீட்டு சமையல் எல்லாம் பண்ணி விட்டு,பதினோறு மணிக்கு சுந்தரத்துக்கு சாம்பார்,ரசம் ரெண்டை யும் சூடு பண்ணிப் சுந்தரத்துக்கு பறிமாறினாள்.தேவைப் படும் போதெல்லாம் சுந்தரத்துக்கு வென்னீ ரும் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.சமையல் கார மாமி அந்த வீட்டிலேயே மத்தியானம் சாப்பிட்டுக் கொண்டு வந்தாள். சாயங்காலம் மீ£ராவோ,இல்லை ராகவனோ வீட்டு வரும் வரையில் வரையில் இருந்து விட்டு,பிறகு தன் வீட்டுக்கு கிளம்பிப் போய்க் கொண்டு இருந்தாள் மாமி.

சுந்தரம் சாப்பிட்டு விட்டு நிறைய நேரம் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.

சுந்தரத்துக்கு சரியாக நாலு மணிக்கு அவருக்கு சூடாக ‘காபி’யையும் போட்டுக் கொடுத்து விட்டு ‘பிஸ்கெட் டப்பாவையும்’ கொண்டு வந்து வைத்தாள்.

மொத்தத்தில் அந்த வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருந்து வந்தார்கள்.

இரண்டு நாள் ஆனதும் சுந்தரம் ‘பிஸ்கெட்டை’ சாப்பிட்டுக் கொண்டே” மாமி உங்களுக்கு சொந்த ஊர் எது” என்று கேட்டார்.

“நேக்கு சொந்த ஊர் கும்பகோணம்”

“பின்னே நீங்கோ எப்படி சென்னையிலே இருந்துண்டு வறேள்”

“எங்க அப்பா என்னே சென்னையிலே அவருக்கு தெரிஞ்ச ஒரு எங்க ஊர் சமையல் காரர் ஒருத்தருக்கு என்னே கல்யாணம் பண்ணீ குடுத்தார்” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

சுந்தரம் பயந்துப் போய் ”ஏம்மாமி,நீங்கோ அழறேள்” என்று கேட்டார்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டே “அது ஒன்னும் இல்லே.அவர் இப்போ என்னோட இல்லே.அவர் வேறே ஒரு பொம்மனாட்டியேக் கல்யாணம் பண்ணீண்டு என்னேயும்,ரெண்டு குழந்தே களையும் வீட்டுட்டுப் போயிட்டார்.விஷயம் கேள்விப் பட்டு உடனே எங்க அப்பா,கும்பகோணத்லே அவர் செஞ்சிண்டு இருந்த வேலேயே விட்டுட்டு,சென்னைக்கு வந்து இப்போ என்னோட இருந்து ண்டு வறார்.எனக்கு அம்மா கிடையாது.அவ நான் சின்னவளா இருந்த போதே,என்னையும் என் அப்பாவையும் தவிக்க விட்டுட்டு இந்த ‘லோகத்தே’ விட்டுப் போயிட்டா” என்று சொன்னாள் அந்த சமையல் கார மாமி.

“உங்க குழந்தைங்க ரெண்டு பேருக்கும் என்ன வயசாறது”

“பையனுக்கு பன்னண்டு வயசறது.பொண்னுக்கு எட்டு வயசாறது.பொண்ணு மூனாவது படிக்கறா.பையனுக்கு படிப்பு ஏறலே.அவன் வெறுமனே ஊரே சுத்திண்டு இருந்தான்.என் அப்பா என் கிட்டே வந்த அப்புறமா அவன் அவர் கிட்டே சமையல் வேலேயேக் கத்துண்டு வறான்” என்று சமையல் கார மாமி சொன்னாள்.

“எல்லா குழந்தேகளுக்கும் ‘சரஸ்வதி கடாக்ஷம்’ இருக்கிறது இல்லே.சில குழந்தைகள் இப்படித் தான் படிப்பே இல்லாம சாதாரண வேலேயே பண்ணீண்டு வறா.உங்க பையனுக்கு படிப்பு ஏறலேன்னு கேக்க நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொன்னார் சுந்தரம்.

கொஞ்ச நேரம் போனதும் “உங்க கிட்டே வறதுக்கு முன்னாடி,உங்க அப்பா கும்பகோணத்லே என்ன வேலேப் பார்த்துண்டு வந்து இருந்தார்” என்று கேட்டார் சுந்தரம்.

“அவரும் ஒரு சமையயல் கார வேலேயேத் தான் செஞ்சிண்டு வந்துண்டு இருந்தார்.இப்போ ஆத்லே எலுமிச்சை ஊறுகாய்,கடறங்கா ஊறுகாய்,நெல்லிக் காய் ஊறுகாய்,அப்பளாம்,கை முறுக்கு, சீடை,தேங்குழல் எல்லாம் பண்ணிண்டு வறார்.என் பையன் அதே எல்லாம் தெரிஞ்சவா ஆத்லே வித்துண்டு வறான்.வெய்யில் காலத்லே கருவடாம்,அரிசி வடாம் எல்லாம் போட்டு வருவார்.என் பையன் ஆத்லே சமையல் பண்ணீண்டு வந்து,பக்ஷணங்கள் பண்ண வேண்டிய சாமாங்களை எல்லாத் தையும் கடைக்குப் போய் வாங்கிண்டு வந்துண்டு இருக்கான்”என்று சொன்னாள் சமையல் கார மாமி.

‘இந்த மாமி கிட்டே ரொம்ப நேரமா பேசிண்டு இருக்கோமே.இந்த மாமி போய் ‘காபி’ குடிக்கட் டுமே’ என்று நினைத்தார்.

சுந்தரம் “மாமி,நான் இப்படித் தான் ஏதாவது உங்க கிட்டே அவசியம் இல்லாம பேசிண்டே இருப்பேன்.நேரம் ஆறது.நீங்கோ போய் ‘காபி’ குடிங்கோ” என்று சொன்னதும்,உடனே அந்த மாமி “அதனால் என்ன.மனுஷான்னு இருந்தா பேசத் தானே தோனும்.நீங்களே என் கிட்டே இத்தனை நாளுக்கு அப்புறமாத் தான் கொஞ்ச நேரம் பேசினேள்.அதிலே ஒரு தப்பும் இல்லே” என்று சொல்லி விட்டு,சுந்தரம் குடித்து விட்டு வைத்த ‘காபி’ ‘டம்டரை’யும் ‘பிஸ்கெட் டப்பாவையும்’ எடுத்துக் கொண்டு சமையல் ‘ரூமு’க்குப் போனாள்.

சுந்தரத்திற்கும் ‘டயற்டா’ இருக்கவே அவரும் படுத்துக் கொண்டார்.

ராகவன் வீட்டுக்கு வந்ததும் சுந்தரம் “ராகவா,நீ அந்த சமையல் கார மாமிக்கு சம்பளத்தே மூவாயிரமா ஏத்திக் குடுத்தது ரொம்ப சரிடா”என்று சொல்லி விட்டு சமையல் கார மாமி தன்னைப் பற்றி சொன்னதை சொன்னார்.

சுந்தரம் சொன்னதைக் கேட்டு ராகவனும்,மீராவும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

உடனே மீரா “அவ ஆத்துக்காரர் பண்ணது ரொம்ப தப்பு.கல்யாண பையன் விரதம் இருந்து, காசி யாத்திரைக்குப் போகக் கிளம்பும் போது,கல்யாணப் பொண்ணின் அப்பா அவா¢டம் வந்து ‘நீங்கோ காசிக்கு எல்லாம் போக வேணாம்.நான் என் பொண்ணே உங்களுக்குக் கல்யாணம் பண்ணித் தறேன்”ன்னு சொல்லி அழைச்சுண்டு வந்து,பிறகு அந்த கல்யாண பொண்னின் அஞ்சு விரல்களையும்,கல்யாணப் பையன் பிடிச்சு ‘பாணிக்கிரஹணம்’ பண்ணீண்டு,,ஐஞ்சு வேத பிராமணா வேத மந்திரம் சொல்லி ‘மாங்கல்ய தாரணம்’பண்ண பிற்பாடு,கல்யாணப் பையன் கல்யாண பொண் ணின் வலது கால் கட்டை விரலைப் பிடிச்சுண்டு,‘சப்த படி’என்கிற விதிப் படி ஏழு தடவை காலை வைக்க சொல்லி விட்டு,கல்யாணப் பொண்ணு அம்மி மிதித்து,அருந்ததி பார்த்து கல்யாணம் பண்ணீ ண்ட பிறகு எந்த பிராமணனும்,கல்யாணம் பண்ணீண்ட பொண்டாட்டியே விட்டுட்டு போகறது “மஹா பாவமான” செயல்.அப்படி பண்ணவே கூடாது.அவா ரெண்டு பேரையும் பகவானாப் பாத்து ‘பிரிச்சா’த் தான் ஒருத்தரே விட்டு ஒருத்தர் பிரியணும்.அதுக்கு முன்னம் ஒருத்தரே ஒருந்தர் பிரியறது ‘இந்து தர்ம சாஸ்திரத்துக்கு’ ரொம்ப விரோதாமானதுன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார்” என்று சொன்னாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் “மாங்கல்ய தாரண மந்திரத்தின் அர்த்தம்.’ஓ பெண்ணே,நான் இன்று முதல் உங்களுடன் என் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கறேன்.ஒரு நல்ல திருமணமான குடும்ப வாழக்கைக்காக எனது முழு பங்கையும் பங்களிப்பேன் என்று என் பக்கத்தில் இருந்து உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.இந்த உத்திரவாதத்துடன் நான் உங்கள் கழுத்தில் இந்த ‘மாங்கல்யத்தை’ கட்டிக் கொண்டு இருக்கிறேன்.என் வாழக்கை கூட்டாளராக இருங்கள்.நாம் இருவரும் நீண்ட காலமாக ஒரு செழிப்பான வாழக்கையை வாழ்வோம்’ன்னு சொல்லிட்டு,அந்த தாலியயே கட்டினவரே,தாலி கட்டின பொண்டாட்டியே விட்டுட்டுப் போறது என்ன நியாயம்.இது ரொம்ப சரியே இல்லே.ரொம்ப,ரொம்ப ‘பாவமான காரியம்’” என்று சொல்லி விட்டு,தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் மீரா.

“நீ ஒரு குருக்கள் ஆத்லே வளந்த பொண்ணு.உனக்கு எல்லா ‘இந்து தர்ம சாஸ்திரமும்’ நன்னா தெரிஞ்சு இருக்கு.’மாங்கல்ய தாரணம்’ பண்ற நிறைய பிராமணா உண்மை அர்த்தமே தெரியாமலே கல்யாண பொண்ணு கழுத்லே தாலியே கட்டிடறா.நீ சொன்ன உண்மைஅர்த்தம் தெரிஞ்சாத் தானே அதே அவா கடைப் பிடிச்சுண்டு வறதுக்கு”என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார் சுந்தரம்.

“மாங்கல்ய தாரண மந்திரத்லே இத்தனை அர்த்தம் புதைஞ்சு இருக்குன்னு எனக்கே இப்பத் தான் தெரியும்.நான் அந்த மந்திரத்தை ஒரு சாதாரண மந்திரம்ன்னு தான் நினைச்சுண்டு இருந்தேன் இத்தனை வருஷமா.எல்லாம் வேத மந்திரங்களுக்கு உள்ளேயும்,நிறைய அர்த்தம் புதைஞ்சு இருக்கு போல இருக்கு” என்று சொன்னார் ராகவன்.
என்ன சௌகா¢யம் எல்லா ராகவன் பண்ணிக் கொடுத்தும்,சுந்தரம் ஒரு ‘நடைப் பிணம்’ போல இருந்து வந்தார்.

அவருக்கு தன் மணைவி இறந்துப் போன துக்கம் அவரை மிகவும் வாட்டி வந்தது. அவர் எப்பவும் மிகவும் சோர்வாகவே இருந்து வந்தார்.

‘ஆபீஸ்’ விட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்த ராகவனும்,மீராவும் சுந்தரம் மிகவும் சேர்வாகப் படுத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டு,அவரைப் பார்த்து “அப்பா,அம்மா தான் பாழும் ‘கான்ஸர் வியாதி’வந்து, நம்மே எல்லாம் விட்டுட்டுப் போயிட்டா.இப்போ ‘பொ¢யவா’ன்னு நீங்கோ ஒருத்தர் தான் எங்களுக்கு இருக்கேள்.நீங்கோ ரொம்ப சோர்வா இருந்துண்டு வறேளே. கொஞ்ச சந்தோஷமா இருந்துண்டு வர பழகி வாங்கோ” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

“அவ போனப்புறம் எனக்கு எதுக்கு சந்தோஷம் ராகவா.நாங்க ரெண்டு பேரும் நாப்பத்தி அஞ்சு வருஷமா ‘இணை பிரியா ஜோடிப் பறவே’ போல வாழ்ந்துண்டு வந்துண்டு இருந்தோம்.எனக்கு இந்த BPவியாதியும்,சக்கரை வியாதியும் வேறே இருந்துண்டு வறது.வாய்க்கு பிடிச்சதே ஒன்னுத்தையும் சாப்பிட முடியலே” என்று சொல்லி சுந்தரம் முடிக்கவில்லை,உடனே ராகவன் “அப்பா,இனிமே நீங்கோ உங்களுக்கு என்ன,என்ன,பிடிக்கறதோ அதே எல்லாம் சாப்பிட்டுண்டு வாங்கோ.நான் உங்களே ‘இதே சாப்பிடுங்கோ’ ‘அதே சாப்பிடாதீங்கோன்னு’ சொல்லவே மாட்டேன்” என்று அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதுக் கொன்டே சொன்னான்.

“ஆமாம்ப்பா. நீங்கோ உங்களுக்கு என்ன,என்ன,பிடிக்கறதோ அதே எல்லாம் சாப்பிட் டுண்டு வாங்கோ.இனிமே நாங்க உங்களே ஒன்னும் சொல்ல மாட்டோம்.நீங்கோ எங்க கூட சந்தோஷமா இருந்துண்டு வந்தா அதுவே எங்களுக்குப் போதும்” என்று சொல்லி விட்டு அழுதாள் மீரா.

சுந்தரத்துக்கு அடிக்கடி அவர் மணவியின் ஞாபகம் வந்துக் கொண்டு இருந்தது.அந்த ஞாபக மே அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்துக் கொண்டு வந்தது.
அவர் ராகவனிடம் ”உங்க அம்மா இப்படிஎன்னே தனியே தவிக்க விட்டுட்டு,அநியாயமாப் போயிட்டாளே.அவளுக்கு இந்த பாழாப் போன ‘கான்ஸர் வியாதி’ ஏன் தான் வந்ததோ.எல்லாம் நான் பூர்வ ஜென்மத்லே பண்ண பாவம்.பகவான் என்னே இப்படி ‘தனியா’ இருந்துண்டு வரணும்ன்னு என் தலையிலே எழுதி இருக்கார்” என்று அடிக்கடி சொல்லி கொண்டு வந்தார்.

ராகவனும்,மீராவும் அவருக்குத் தேத்தறவு சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

அன்றில் இருந்து சமையல் கார மாமி சுந்தரம் எதைக் கேட்கிறாரோ,அதை எல்லாம் அவருக்குக் கொடுத்து வந்தாள்.சுந்தரமும்,மீராவும் சமையல் கார மாமியை ஒன்றும் சொல்லாமல் இருந்தார்கள்.

மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டுக் கொண்டு வந்தும்,சுந்தரத்தின் BPயும் சக்கரை வியாதி யின் ‘லெவலும்’ நாளுக்கு நாள் அதிகம் ஆகிக் கொண்டு இருந்தது.அவர் நாளுக்கு நாள் மிகவும் மெலிந்து ‘வீக்கா’கிக் கொண்டு இருந்தார்.

அவர் ஒரு நாள் காலையில் எழுந்ததும் ராகவனைப் பார்த்து “ராகவா,எனக்கு அடிக்கடி நெஞ்சு ரொம்ப வலிக்கறது.ஏன்னே தெரியலே.நான் நீ குடுக்கற மாத்திரைகளை எல்லாம் ஒழுக்கத தானே சாப்பிட்டுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு நெஞ்சைப் படித்துக் கொண்டு இருந்தார்.

உடனே ராகவன் ஒரு நாள் லீவு போட்டு விட்டு அப்பாவை டாகா¢டம் அழைத்துப் போய் காட்டி னான்.அந்த டாக்டர் சுந்தரத்தை நன்றாக ‘செக் அப்’பண்ணி விட்டு,ராகவனைப்பார்த்து “இவரோட BP ரொம்ப ‘ஹையா’ இருக்கே.இவர் நான் எழுதிக் குடுத்த BP மாத்திரைகளை தவறாம சாப்பிட்டுக் கிட்டு வறாரா.சாப்பாடும் நான் சொன்ன படி சாப்பிட்டுக் கிட்டு வறாரா” என்று கேட்டதும் ராகவன் கண்களில் கண்ணீர் வந்தது.

ராகவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே” சார்,மூனு மாசத்துக்கு முன்னாடி என் அம்மா தொண்டைக் குழாயிலே ‘கான்ஸர்’ வந்து ஒரு நாள் ‘திடீர்’ன்னு செத்துப் போயிட்டா. அந்த வருத்தம் தாங்காம,அப்போதில் இருந்து இவருக்கு ரொம்ப மன அழுத்தம் இருந்துண்டு வறது.இவர் நீங்கோ குடுத்த எல்லா மாத்திரைகளையும் ஒழுங்கா சாப்பிட்டுண்டு வறார்.ஆனா சாப்பாடு தான்…. என்று சொல்லி நிறுத்தினார்.

உடனே அந்த டாக்டர் “சாப்பாடு தாங்க ரொம்ப முக்கியம்.நான் முன்னமே சொன்னேனே. சாப்பாடிலே ‘கன்ட்றோல்’ இல்லேன்னா,ரெண்டும் குறையவே குறையாது. நான் இவருக்கு இன்னும் ‘பவர்புல்’ மாத்திரையே எழுதித் தறேன்.அதே நீங்க ‘மெடிக்கல் கடைலே’ வாங்கிட்டுப் போய் இவரு க்குத் தவறாம குடுத்து கிட்டு வாங்க” என்று சொல்லி அவர் ‘லெட்டர் ஹெட்டில்’ மாத்திரைகளின் பேரையும்,ஒரு நாளைக்கு எத்தனை தடவை சாப்பிட வேணும் என்பதையும் எழுதிக் கொடுத்தார்.

ராகவன் டாகடருக்கு ‘பீஸை’க் கொடுத்து விட்டு,ஒரு ஆட்டோவில் அப்பாவை அழைத்துக் கொண்டு,வரும் வழியிலே டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

சுந்தரம் டாக்டர் எழுதிக் கொடுத்த புது மாத்திரைகளை தினமும் தவறாமல் சாப்பிட்டுக் கொண்டு வந்தார்.அவர் ரொம்ப ‘வீக்காக’ இருந்ததினால்,அவர் நிறைய நேரம் படுத்துக் கொண்டே இருந்தார்.அப்பாவின் ‘கண்டிஷனை’ப் பார்த்த ராகவன் கவலைப்பட்டார்.

பரமசிவம் BA வில் ‘ஹை பஸ்ட் க்ளாஸ்’ மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான்.பரமசிவத்திற்கு சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டான்.இந்த ஆசையை தன்,அக்கா,அத்திம்போ¢ டமும்,சுந்தரத்திடமும் சொன்னான்.உடனே ராகவன் “பரமு,உனக்கு இருக்கும் மூளைக்கு, நீ சட்டப் படிப்பு படிச்சேன்னா,நீ நிச்சியம் ஒரு பொ¢ய வக்கீலா வருவே” என்று ஊக்கப் படுத்தினார்.

அத்திம்பேர் கொடுத்த ஊக்கம் பரசிவத்திற்கு சந்தோஷத்தை கொடுத்தது.அவன் தன் மனதில் சந்தோஷப் பட்டான்.’நாம எப்படியாவது இந்த வருஷ லீவு முடிஞ்சதும்.சட்டக் கல்லூரி ‘பிரின்ஸிபா லை’ சந்திச்சு,நம்முடைய BA ‘மார்க்கு’ ‘ஷீட்டை’,அவர் கிட்டே BL படிக்க ஒரு ‘சீட்’ கேக்கணும்’ என்று ஆசைப் பட்டான் பரமசிவம்.

சரோஜா அந்த வருஷம் ‘டெந்த்’ படித்து வந்தாள்.சரோஜா ரெண்டு வேளையும் அம்மா சொல்லிக் கொடுத்த அம்பாள் ‘ஸ்லோகங்களையும்’ சொல்லி விட்டு,தவறாமல் நமஸ்காரத்தை பண்ணி வந்தாள்.

வரதன் அந்த வருஷம் எட்டாவது பெயிலானான்.

அவன் சுவாமிக்கு எந்த மந்திரமும் சொல்லாமல் ஒரு நமஸ்காரத்தை மட்டும் பண்ணிக் கொண்டு இருந்தான்.இதைப் பார்த்த ராகவனும்,மீராவும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

மீரா தனியாக இருக்கும் போது அவள் கணவனிடம் “வரதன் சுவாமிக்கு ஒரு மந்திரத்தையும் சொல்லாம வெறுமே ஒரு ‘மொட்டே நமஸ்காரத்தே’ப் பண்றானே.நீங்கோ சித்தே அவன் கிட்டே ’வரதா,நீ சில சுவாமி மந்திரங்களே சொல்லிட்டு சுவாமிக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணு.அப்போ தான் உனக்குப் படிப்பு நன்னா வரும்’ன்னு சொல்லக் கூடாதா” என்று கேட்டாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *