கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2018
பார்வையிட்டோர்: 5,950 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4

சாயங்காலம் நாலு மணிக்கு டீயும் பிஸ்கெட்டும் சாப்பிட்டு விட்டு சரோஜாவை அழைத்துக் கொண்டு அந்தக் கடை ஓனரைப் பார்க்கப் போனார் சிவலிங்கம்.அந்த கடை ஓனர் சிவலிங்கத்தைப் பார்த்தவுடன் “வாங்க ‘அக்ரிமென்ட்’ இப்ப தான் வந்திச்சு.இந்தாங்க நீங்க கேட்ட ‘அக்ரிமெண்ட்’.சரியா இருக்குதான்னு பாத்துக்குங்க” என்று சொல்லி அக்ரிமெண்ட்டைக் கொடுத்தார்.சிவலிங்கம் ஓனர் குடுத்த ‘அக்ரிமெண்ட்டை’ வரி வரியாகப் படித்து விட்டு சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.எல்லா விவரமும் அந்த ‘அக்ரிமெண்ட்டில்’ சரியாய் எழுதி இருந்தது.“எல்லாம் சரியாய் இருக்குங்க.நான் கூடிய சீக்கிரம் வந்து கடையைப் போடறேனுங்க” என்று சொல்லி விட்டு வந்தார் சிவலிங்கம்.

அடுத்த நாள் காலையில் வழக்கம் போல் சிவலிங்கம் காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு, திரு நீர் இட்டுக் கொண்டு கடவுள் படத்தின் முன்பு கடவுளை வேண்டிக் கொண்டு வந்து விட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தார்.சரோஜா கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு “சரோஜா நான் ‘வாக்கிங்க்’ போய் விட்டு வரேன்” என்று சொல்லி விட்டு செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்பினார்.ஒரு அரை மணி நேரம் வாக்கிங்க் செய்து விட்டு ஏதோ யோஜனைப் பண்ணிக் கொண்டே சிவலிங்கம் சாலை ஓரமாக மெதுவாக வந்துக் கொண்டு இருந்தார்.அப்போது தான் புதிதாக ஸ்கூட்டர் கற்றுக் கொள்ளும் ஒரு வாலிபன் வேகமாக வந்து சரியாக ‘ப்ரேக்’ப் பிடிக்கத் தெரியாமல் சாலை ஓரமாகப் போய்க் கொண்டு இருந்த சிவலிங்கத்தின் மேல் மோதி விட்டான். சிவலிங்கம் மோதின வேகம் தாங்காமல் ‘பொத்தென்று’கீழே விழுந்து விட்டார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே சிவலிங்கத்தைத் தூக்கி நிறுத்தி ‘எங்கே அடி பட்டு இருக்குது’ என்று சிவலிங்கத்தை விசாரித்தார்கள்.சிவலிங்கதிற்கு வலது தொடையில் இருந்து பாதம் வரை நல்ல வலி.

“எனக்கு வலது தொடையில் இருந்து பாதம் வரை ரொம்ப வலிக்குது சார்.நான் மெல்ல விட்டுக்குப் போய் விடறேன்” என்று சொல்லி அங்கே வந்த ஆட்டோவில் ஏறி மெல்ல வீட்டுக்கு வந்து சேர்ந்தார் சிவலிங்கம்.வலியொடு ஆட்டோ டிரைவருக்கு பணத்தைக் கொடுத்து விட்டு சிவலிங்கம் விந்தி, விந்தி, வீட்டுக்குள் வந்து சோபாவில் ‘பொத்தேன்று’ உட்கார்ந்தார்.

‘வாக்கிங்க்’ போன கணவன் இப்படி ‘பொத்தென்று’ உட்கார்ந்ததை கவனித்த சரோஜா பதறிப் போய் “என்னங்க ஆச்சு உங்களுக்கு.ஏன் இப்படி காலை நீட்டிக் கிட்டு இருக்கீங்க. வலது கால் இப்படிவீங்கி இருக்கேங்க.‘வாக்கிங்க’ போகும் போது கீழே ஏதாச்சும் விழுந்து விட்டீங்களாங்க” என்று கவலையோடு கேட்டாள் சரோஜா.” நான் கீழே விழலே சரோஜா.யாரோ ஒரு கத்துக் குட்டிபய புதிசா ‘ஸ்கூட்டர்’ ஒட்டக் கத்துக்கிறான் போல இருக்கு,சாலை ஓரமா போய்க் கிட்டு இருந்த என் மேலே மோதி என்னை கீழே தள்ளிட்டான்.நான் அப்படியே கீழே விழுந்திட்டேன்.அவன் என் மேலே ‘ஸ்கூட்டரை’ப் போட்டுக் கிட்டு விழுந்திட்டேன்.எனக்கு இப்போ காலில் தொடையிலிருந்து பாதம் வரை நல்ல வலி.வலி அதிகம் ஆகிக் கிட்டு இருக்கவே நான் உடனே ஒரு ஆட்டோ பிடிச்சு வூட்டுக்கு வந்திட்டேன் சரோஜா” என்று சொல்லி தன் வலது காலைக் காட்டினார்.அவர் வலது கால் தென்னை மரம் அளவுக்கு வீங்கி இருந்தது.வலி பொறுக்க முடியாமல் அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தது.பதறிப் போனாள் சரோஜா.அப்பா காலின் வீக்கத்தை கவனித்த கமலா “அம்மா,அப்பா கால் இவ்வளவு வீக்கம் வீங்கி இருந்துச்சின்னா அது நிச்சியம் ‘ஸ்ப்ராக்ச்சராக’த் தான் இருக்கும்.நீ உடனே அப்பாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிப் போ.நான் நாஷ்டா சாபிட்டு விட்டு வூட்டு கதவை பூட்டிக் கிட்டுப் ஆஸ்பீஸ் கிளம்பிப் போறேன்.நீ உன் வூட்டு சாவியை மறக்காம எடுத்துக் கிட்டுப் போம்மா” என்றாள் கமலா. வாசலிலே போய்க் கொண்டு இருந்த ஆட்டோவில் மெல்ல சிவலிங்கத்தை கைத் தாங்கலாக கமலாவும் சரோஜாவும் ஏற்றினார்கள்.சரோஜா ஹாஸ்பிடலுக்கு உள்ளே வந்து அங்கே இருந்த ஒரு ‘வீல் சேரில் சிவலிங்கத்தை உட்கார வைத்து மெல்ல ‘வீல் சேரை’த் தள்ளி கொண்டு ‘ஹாஸ்பிடலில்’ நுழைந்தாள் சரோஜா.

சிவலிங்கத்தை பரிசோதித்த டாக்டர் அவருக்கு உடனே ‘எக்ஸ்ரே’ எடுத்துப் பார்த்தார்.அந்த ‘எக்ஸ்ரேவை’ப் பார்த்த டாக்டர் அவருக்கு தொடையில் இரண்டு இடத்தில் எலும்பு முறிவு இருப்பதாகச் சொல்லி அவரை உடனே ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப் போனார்.ஐந்து மணி நேரம் ஆனதும்,சிவலிங்கத்திற்கு மயக்கம் தெளிந்த பிறகு,அவருக்கு கால்களில் பெரிய மாவு கட்டிப் போட்டு, அவரை வெளியே அழைத்து வந்தார்கள்.டாக்டர் செய்த ஆபரேஷனுக்கு பணத்தை கட்டி விட்டு,டாகடர் எழுதிக் கொடுத்த வலிக் கொல்லி மாத்திரைகளையும், ரணம் ஆற ‘ஆயிண்ட் மெண்ட்டையும்’ அந்த ஹாஸ்பிடலில் இருந்த மருந்துக் கடையிலேயே வாங்கிக் கொண்டாள் சரோஜா.கணவரை விட்டுக்கு அழைத்து வந்தாள் சரோஜா.வீட்டுக்கு வந்த சிவலிங்கம் “என்ன சரோஜா என் நிலைமை இப்படி ஆயிடுச்சி.இன்னும் ஒரு மாசம் நான் இப்படி பெட்டில் இருந்து வரணுமே.பிறகு தானே நான் கடை போட முடியும்.அது வரை அந்த ஒரு லக்ஷ ரூபாய் ‘அட்வான்ஸ்’ பணம் சும்மாத் தானே முடங்கிக் கிடக்கும்.அதுக்கு வட்டியும் வராதே.எனக்கு இப்படி ஆயிடிச்சே சரோஜா.இப்ப என்ன பண்ணுவது”என்று சொல்லி வருத்தப் பட்டார் சிவலிங்கம்.“இருக்கட்டுங்க.என்ன பண்ணுவதுங்க..நல்ல வேளை இந்த மட்டும் காலில் அடிப் பட்டு நீங்க உயிர் பிழைச்சீங்களே.வேறு விதமா ஏதாவது நடந்து இருந்தா நான் என்ன பண்ணுவேன் சொல்லும்ங்க….” என்று சொல்லும் போதே சரோஜா கண்களில் இருந்து கண்ணீர் முட்டியது.

சாயங்காலம் வீட்டுக்குள் நுழைந்ததும் ”ஹாஸ்பிடலில் என்ன சொன்னாங்கம்மா” என்று கேட்டுக் கொண்டே நுழைந்தாள் கமலா.அப்பா காலில் பெரிய ‘பாண்டேஜுடன்’ கட்டிலில் படுத்து இருப்பதைப் பார்த்த கமலா “அப்பாவுக்கு ஸ்ப்ராக்சரா அம்மா” என்று வருத்தமாக கேட்டாள்.அவர் மனம் ‘இந்த கால் கட்டை எப்போது பிரிப்பாங்க,நாம எப்போ வெளியே போய் இந்த கடையை தொறப்போம்,வியாபாரத்தை ஆரம்பிப்போம்’ என்று ஏங்கிக் கொண்டு இருந்தது.

ஒரு மாசம் ஆனதும் ஹாஸ்பிடலில் சிவலிங்கத்தின் கால் கட்டைப் பிரித்துப் பார்த்து பரிசோதித்த டாக்டர் “இவருக்கு உடைந்த எலும்பு இப்போது நல்லா சேர்ந்திடுச்சிங்க.இவர் இனிமே நார்மலாக இருந்து வரலாம்” என்று சொல்லி விட்டு காலுக்கு சில பயிற்சிகளை சொல்லிக் குடுத்து அவைகளை தினமும் தவறாமல் செய்து வருமாறு சொன்னார் அந்த டாக்டர்.டாக்டருக்கு ‘ஸ்பீஸை’க் கொடுத்து விட்டு சிவலிங்கத்தை ஒரு ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தாள் சரோஜா. டாக்டர் சொன்ன கால் பயிற்ச்சிகளை எல்லாம் தவறாமல் செய்து வந்தார்.அவர் காலில் மெதுவாக பழைய பலம் வர ஆரம்பித்தது.

ஒரு வாரம் ஆனது.அடுத்த நாள் காலையில் நாஷ்டா சாப்பிட்டு விட்டு சிவலிங்கம் வெளியே கிளம்பத் தயாரானார்.சரோஜா அவரிடம் வந்து “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.இன்னும் ஆறு மாசத்துக்க்காவது நீங்க வெளியே போனா ஆட்டோவில் போய் வாங்க” என்று பயத்துடன் சொன்னாள்.ஆட்டோவை விட்டு கீழே இறங்கி ஆட்டோ டிரைவருக்கு பணத்தைக் கொடுத்து விட்டு அவர் நிமிர்ந்துப் பார்த்தார்.அவர் ‘அட்வான்ஸ்’ கொடுத்த கடையில் ஒரு புது ‘மெடிக்கல் ஷாப்’ திறந்து இருந்தார்கள்.சிவலிங்கதிற்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது.சிவலிங்கத்தை பார்த்த அந்த ஓனர் ”வாங்க” என்றார் நிதானமாக.“என்னங்க இது அநியாயம்.நான் கடைக்கு ‘அட்வான்ஸ்’ குடுத்து விட்டுப் போய் இருக்கேன்.நீங்க என்னடான்னா ஒரு ‘மெடிக்கல் ஷாப்’ அங்கே திறக்க விட்டு இருக்கீங்க.நான் என்ன இளிச்ச வாயன்ன்னு உங்களுக்கு நினைப்பா.உடனே அந்த ‘மெடிக்கல் ஷாப்பை’ மூடச் சொல்லி விட்டு அந்த காலி கடையே எனக்குக் குடுங்க.நான் அந்த இடத்திலெ ஒரு மளிகை கடையை உடனே திறக்கணும்” என்று கத்தினார் சிவலிங்கம்.“என்ன பெரிசு,சவுண்ட் பெரிசா விடறே.நீங்க எனக்கு ‘அட்வான்ஸ் குடுத்து ஒன்னரை மாசம் ஆவப் போவுது.இது வரைக்கும் உங்களைப் பத்தி ஒரு செய்தியும் இல்லே.நீங்க உயிரோடு தான் இருக்கீங்களான்னே எனக்குத் தெரியலே.நான் மாச கணக்கிலே வாடகை வராம எத்தினி நாளைக்கு கடையை வச்சு இருக்கிறது.இப்போ ‘மெடிக்கல்’ கடை வச்சு இருக்கிற பார்ட்டி ஆளும் கட்சி M.L.A. யின் சொந்தக்காரர்.அந்த M.L.A.என்னைக் கூப்பிட்டு சொன்னா நான் மறுக்க முடியுமா சொல்லுங்க. நான்அந்த பார்ட்டிக்கு வாடகைக்குக்கு இந்த கடையைக் குடுத்திட்டேன்.என்னே என்னப் பண்ணச் சொல்றீங்க” அந்த ஓனர்.சிவலிங்கத்திற்கு இன்னும் ஆத்திரம் ஆத்திரமா வந்தது.

சிவலிங்கம் யோஜனைப் பண்ணினார். “சரிங்க,நான் ஒன்னரை மாசமா உங்களை வந்து பார்க்கலை.அதுக்கு காரணம் நான் உங்க கிட்டே இப்ப சொல்றேன்.நான் ஒரு நாள் காலையிலே ‘வாக்கிங்க்’ போய் கிட்டு இருந்த போது. ஒரு கத்துக் குட்டிப் பையன் அவன் ஸ்கூட்டரை சரியா ஓட்டத் தெரியாம என் மேலே மோதி என்னை கீழே தள்ளி விட்டுப் போயிட்டான்.என் வலது காலில் ரெண்டு இடத்திலே எலும்பு முறிவு ஆயிடுச்சிங்க.அதுக்கு நான் ஆபரேஷன் பண்ணி கால் எலும்பு சரியாப் போக ஒன்னரை மாசம் ஆயிடுச்சிங்க.தப்பு என்னுடையது தாங்க. நீங்க உங்க கடையை வேறே பார்ட்டிக்கு வாடகைக்கு விட்டு விட்டீங்க.ஆனா நீங்க இப்போ நான் கொடுத்த ஒரு லக்ஷ ரூபாய் ‘அட்வான்ஸ்’ பணத்தை எனக்கு இப்ப திருப்பிக் குடுத்து விடுங்க.நான் வேறே ஒரு கடையை பார்த்துப் போட சௌகா¢யமாய் இருக்குங்க” என்றார் சிவலிங்கம் கண்டிப்பான குரலில்.

அதற்கு அந்த ஓனர் “இப்ப திடீர்ன்னு அந்த ‘அட்வான்ஸ்’ பணத்தைக் கேட்டா எப்படி தர முடுயுங்க.எனக்கு கொஞ்சம் அவகாசம் குடுங்க.நான் எனக்கு பணம் வந்தப்புறம் உங்களுக்குத் திருப்பித் தரேன்” என்றார் கூலாக.கொஞ்ச நேரம் ஆனதும் “உங்க மாதிரி பெரிய மனுஷங்கக் கிட்ட தான் பணம் எப்பவும் இருக்கும் பெரிசு.நான் ரொம்ப செலவாளி.நீங்க குடுத்த அந்த ‘அட்வான்ஸ்’ பணம் செலவழிச்சுப் போச்சு. இப்ப பணம் என் கையிலே இல்லே.பணம் வரட்டும் நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பறேன். அப்போ இங்கே வந்து வாங்கிக் கிட்டுப் போங்க”என்று சொல்லி விட்டு எழுந்து வீட்டுக்கு உள்ளே போக ஆரம்பித்தார் அந்த ஓனர்.“என்னங்க இது நியாயம்.நான் குடுத்த பணத்தை கேட்டா உங்களுக்கு பணம் வரும் போது நான் வந்து வாங்கி கிட்டு போவணுமா.என்னை ஏமாந்தவன்ன்னு மட்டும் நீங்க எடை போடாதீங்க. நான் நல்லவனுக்கு நல்லவன்,பொல்லாதவனுக்கு பொல்லாதவன்.என் பணத்தை உங்க கிட்டே இருந்து எப்படி திருப்பி வாங்கணும்ன்னு எனக்குத் தெரியும்.நான் வரேன்” என்று கோவமாகச் சொல்லி விட்டு எழுந்தார் சிவலிங்கம்.“உன்னால் முடிஞ்சதை நீங்க பண்ணுங்க பெரிசு”என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார் அந்த ஓனர்.

கோவத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தார் சிவலிங்கம். வீட்டுக்கு வந்தவர் தான் கொண்டுப் போன ‘ஹாண்ட் பாக்கை’ வீசி எறிந்து விட்டு ‘தொப்பென்று’ சோபாவில் உட்கார்ந்துக் கொண்டார்.பதறிப் போய் சமையல் கட்டில் இருந்து வெளியே சரோஜா “ஏங்க நீங்க போன விஷயம் என்னாச்சுங்க.ஏங்க இப்படி உங்க ‘ஹான்ட் பாக்கை’ இப்படி வீசி எறிஞ்சுட்டு சோபாவில் ‘தொப் பென்னு உக்காந்தீங்க.என்னங்க சமாசாரம்” என்று கவலையோடு கேட்டாள்.அது வரை தன் கண்ணை மூடிக் கிட்டு உட்கார்ந்துக் கொண்டு சிவலிங்கம், தான் கிளம்பிப் போனத்தில் இருந்து அவங்க பார்த்த கடையிலே ஒரு புது மெடிக்கல் ஷாப் யாரோ ஒருத்தன் போட்டு இருப்பதையும், அதைப் பத்திக் கேட்டதற்கு அந்த ஓனர் சொன்ன பதிலையும்,அதற்கு அவர் சொல்லி விட்டு வந்த பதிலையும் எல்லாம் நடந்தது நடந்தது போல விவரமாகச் சரோஜாவிடம் சொன்னார் சிவலிங்கம்.

“என்னங்க இது அநியாயம்.நாம கொடுத்த ‘அட்வான்ஸ்’ பணத்தை திருப்பித் தர மாட்டேங் கிறாரு அவரு.சுத்த அயோக்கியரா இருப்பார் போல இருக்கேங்க.இப்ப என்னங்க பண்னப் போறீங்க. எப்படிங்க அவ்வளவு பணத்தை அவர் கிட்டே இருந்து நாம திருப்பிப் வாங்கப் போறோம். உங்களுக்கு மட்டும் காலில் அடிபடாம இருந்து இருந்தா, இந்நேரம் நாம அந்தக் கடையை தொறந்து விட்டு இருப்போமேங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்று கத்தினாள் சரோஜா.சரோஜா கத்துவதைக் கேட்ட சிவலிங்கம் அவளைப் பார்த்து “நீ டென்ஷன் படாதே சரோஜா. ஏற்கெனவே உனக்கு ரத்த கொதிப்பு அதிகமா இருக்கு.நான் ஒரு நல்ல வக்கீலைப் பாத்து தான் அந்த ஒனர் மேலே ஒரு ‘கேஸ்’ போடணு.இந்த ‘அக்ரிமென்ட்டை’ வச்சுத் தான் அவரை நாம மடக்கி அந்த ‘அட்வான்ஸ்’ பணத்தைத் திருப்பி வாங்க முயற்சி பண்ணனும் சரோஜா” என்றார் கவலையுடன் சிவலிங்கம்.“நீங்க சொல்றது நல்ல ஐடியாங்க.நான் உடனே சரவணனுக்கு போன் பண்ணி ஒரு நல்ல தெரிந்த வக்கீல் பெயரைக் கேக்கறேன்” என்று சொல்லி சரவணனுக்கு போன் பண்ணி நடந்த கதை எல்லாம் சொல்லி ஒரு நல்ல வக்கீல் பெயரைக் கேட்டாள் சரோஜா.சரவணன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு மிகவும் வருத்தப் பட்டான்.உடனே தனக்குத் தெரிந்த ஒரு நல்ல வக்கில் பெயரைச் சொல்லி ”அக்கா ,நீ கவலையே படாதே.எனக்கு இந்த வக்கீலை ரொம்ப நல்லாத்நான் தெரியும். நான் அந்த வக்கில் கிட்டே மச்சான் ‘ப்ராப்லெத்தை’ விவரமாச் சொல்லி அவரை இந்த கேஸை எடுத்து வாதாடி மச்சானு க்கு அந்த ‘அட்வான்ஸை’ வாங்கிக் கொடுக்க ஏற்பாடு பண்றேன்.அது வரைக்கும் நீயும் மச்சானும் நிம்மதியா இருந்து வாங்க” என்று சொன்னான்.சரோஜா தன் தம்பி சொன்ன வக்கீல் பெயரையும் அவர் ‘அட்ரஸ்ஸையும்’ குறித்துக் கொண்டாள்.சிவலிங்கம் சரவணன் சொன்ன வக்கீலிடம் போய் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தான் வந்த விஷயத்தைச் சொல்லி தான் கொண்டு வந்த ‘அக்ரிமெண்ட்’ பேப்பரையும் காட்டினார்.அவர் முகம் சற்று வாட்டமாகத் தெரிந்தது.

‘அக்ரிமெண்ட்’ பேப்பரை மடித்து சிவலிங்கத்தின் கையில் கொடுத்து விட்டு “மன்னிக்கணும் சார்.இந்த கடை ஓனர் செல்வம் ஆளும் கட்சி மந்திரியின் மச்சான். இவரை எதிர்த்து நான் கேஸ் எல்லாம் போட முடியாது.விஷயம் தெரிஞ்சா என் உயிருக்கே ரொம்ப ஆபத்தா போகும்.நீங்க வேறு வக்கீல் யாரையாவது பார்த்துக்குங்க” என்று சொல்லி விட்டார்.சிவலிங்கம் இடிந்து போய் விட்டார். ‘அக்ரிமெண்ட்’ பேப்பரை அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டு சோர்வாக நடந்து தன் வீட்டுக்கு வந்தார்.வீட்டுக்கு சோர்வாக வந்த தன் கணவனைப் பார்த்த சரோஜாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. சரோஜாவிடம் வல்லீல் சொன்னதை எல்லாம் சொல்லி விட்டு ‘அக்ரிமெண்ட்’ பேப்பரை தரையில் விட்டெறிந்தார்.

.சிவலிங்கம் தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு போன் பண்ணி ஒரு நல்ல வக்கீல் பேரைத் தெரிந்துக் கொண்டு தன் ‘அக்ரிமெண்ட்’ பேப்பரை எடுத்துக் கொண்டு போய் தன் ‘கேஸை’ வாதாடச் சொன்னார்.அந்த வக்கீலும் “நான் உங்க கேஸை எடுத்து வாதாடத் தயார் சார்.ஆனா ஒன்னு.இந்த ஆளும் கட்சிகாரங்க கேஸ் எல்லாம் அடிக்கடி ‘வாய்த்தா’ வாங்கியே கழுத்தறுப்பாங்க.’கேஸை’ முடிக்கவே விடமாட்டாங்க.பாவிங்க.ஒவ்வொரு வாய்த்தாவுக்கும் நீங்க பணம் கட்டியே உங்களுக்கு போதும் போதும்ன்னு ஆயிடும். தவிர நமக்கு வர ஜட்ஜ்ஜும் அவங்க கட்சியை செர்ந்தவரா இருந்திட்டார்ன்னா கேக்கவே வேணாம் ’கேஸையே ‘முடிக்க விடமாட்டார்.இந்த மாதிரி கட்சிக்காரன் கிட்டே ஏங்க நீங்க போய் மாட்டிக்கிட்டீங்க” என்று ஒரு பெரிய லெக்சரே கொடுத்தார் அந்த வக்கீல். வெறுப்படைந்த சிவலிங்கம் “அப்ப என்னங்க பண்ணலாம்.என் ‘அட்வான்ஸ்’ பணத்தை நான் எப்படிங்க திருப்பி வாங்கறது.வழி ஏதாச்சும் சொல்லுங்க’ என்றார் அழ மாட்டாத குரலில்.சற்று நேரம் யோசித்த அந்த வக்கீல் “நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.நீங்க மெல்ல அந்த ஓனரை பகைச்சிகாம அவர் வழியே போய் அவரிடம் இருந்து மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக உங்க பணத்தை நீங்க வாங்க முயற்சி பண்ணுங்க.இதனால் உங்களுக்கு ‘கோர்ட்’, ‘கேஸ்’ன்னு அலையற சிரமமும் இருக்காது.பண செலவும் இருக்காது.எனக்கு என்னவோ அது தான் நல்லதுன்னு தோணு துங்க” என்று ஒரு ஐடியாவைச் சொன்னார்.

மனமுடைந்து போன சிவலிங்கம் ”வேறு வழி ஒன்னும் இல்லையாங்க” என்று பரிதாபமாகக் கேட்டார்.வெறுமனே சிரிச்சிக் கிட்டு இருந்தார் அந்த வக்கீல். அவர் பதில் ஒன்னும் சொல்லாததால் ”நான் வரேணுங்க” என்று அவர் கிட்டே சொல்லி விட்டு வந்தார் சிவலிங்கம்.வீட்டுக்கு வந்த சிவலிங்கம் அவர் போய் கேட்ட வக்கீல் சொன்ன சமாசாரத்தை வருத்ததுடன் விவரமாகச் சொன்னார். சிவலிங்கம் சொன்ன விஷயத்தைக் கேட்ட சரோஜா மிகவும் வருத்தப் பட்டாள்.

’அடுத்த நாள் சிவலிங்கம் கடவுளை வேண்டிக் கொண்டு அந்த ஓனரைப் பார்க்கப் போனார். சிவலிங்கத்தைப் பார்த்ததும் ஒரு வில்லன் சிரிப்பு சிரித்து விட்டு “என்ன பெரிசு, நாம் எந்த கோர்ட்டிலே,என்னிக்கு சந்திக்கணும்ன்னு சொல்ல வந்து இருக்கீங்களா. பாவம் அதைச் சொல்லவா நீங்க இவவளவு தூரம் வந்து இருக்கீங்களே.யார் கிட்டேயும் சொல்லி அனுப்பி இருக்கலாமேங்க” என்று கிண்டலாகக் கேட்டார்.அந்த ஓனர் சொன்னதைக்கேட்டு சிவலிங்கதிற்கு கோவம் கோவமாக வந்தது.அவரை அப்படியே கழுத்தை நெறித்து கொன்று விடலாம் போல் தோன்றியது.பொறுமையக் இருந்தார்.

“இல்லீங்க,நானும் என் மணைவியும் யோஜனை செஞ்சோம்.இந்த கோர்ட், கேஸ்ன்னு, எல்லாம் போனா வீணா பண நஷ்டம் தான் ஆகும்.வீணா வக்கீலுக்கு தான் நாம் பணம் குடுக்க வேணும்.அதனால் நீங்க சொன்னபடியே எனக்கு எவ்வளவு சீக்கிரம் என் அட்வான்ஸ் பணத்தை தர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் என் ‘பணத்தைத் திருப்பி குடுங்க.நான் ‘ரிடையர்’ ஆனவங்க.’ரிடையர்’ ஆன பணத்திலே தாங்க நான் ஒரு கடை போடலாம்ன்னு தாங்க இந்த ‘அட்வான்ஸ்’ நான் குடுத்தேணுங்க. நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவங்க.நீங்க தயவு செஞ்சி உங்க கிட்டே பணம் கிடைக்கும் போது என் ‘அட்வான்ஸ்’ பணத்தை கொஞ்சம் சீக்கிரமா திருப்பிக் குடுத்து விடுங்க” என்று தயவான குரலில் கேட்டார் சிவலிங்கம்.“அதைத் தானே நான் முதல்லே சொன்னே உங்க கிட்டே.நீங்க தான் வீரமா முறுக்கி கிட்டுப் நான் ‘இந்த பணத்தை எப்படி நான் திருப்பி வாங்குவதுன்னு எனக்குத் தெரியும்ன்னு’ சொல்லி சவால் விட்டுட்டுப் போனீங்க.சரி நான் சொன்ன மாதிரி எனக்கு பணம் வரும் போது நான் உங்க பணத்தைத் திருப்பித் தரேன்.எனக்கு கொஞ்சம் அவகாசம் குடுங்க” என்றார் அந்த ஓனர்.“சரிங்க,எவ்வளவு சீக்கிரமா முடியுமோ அவ்வளவு சீக்கிரமா நீங்க என் ‘அட்வான்ஸை’ குடுங்க” என்று சொல்லி விட்டு தன் வீட்டை நோக்கி நடந்தார் சிவலிங்கம்.

வீட்டுக்கு வந்து சரோஜாவிடம் விவரத்தைச் சொன்னார் சிவலிங்கம்.”அது வரைக்கும் பணத்தை திருப்பித் தர ஒத்துக் கொண்டாரே அந்த ஓனர்.அது போதுங்க.நீங்க மெல்ல அடிக்கடி நீங்க அவரைப் பாத்து வந்து பணத்தை வாங்கி வாங்க” என்று சொன்னாள் சரோஜா.தன் விதியை நொந்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார் சிவலிங்கம்.

வாரம் ஒரு முறை அந்த வீட்டு ஓனரைப் பார்த்து தன் அட்வான்ஸ் பணத்தைக் கேட்டு வந்தார் சிவலிங்கம்.மூன்றாவது வாரம் அந்த ஓனர் சிவலிங்கத்திற்கு இரண்டாயிரம் ருபாய் கொடுத்து அதற்கான ‘ஸ்டாம்ப்’ ஒட்டின ரசீதையும் வாங்கிக் கொண்டார்.இது போல் கொஞ்சம் கொஞ்சமாக மீதி பணத்தையும் திருப்பித் தருவதாய் சொன்னார் அந்த ஓனர்.சிவலிங்கத்திற்கும் சரோஜாவுக்கும் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.

இரண்டு நாள் கழித்து கணவன் தன் நாடியைத் தொட்டுப் பார்ப்பதை கவனித்த சரோஜா “ஒன்னும் இல்லீங்க.நீங்க வீணா கவலைப் படாதீங்க.என் உடம்புக்கு ஒன்னும் இல்லீங்க.எனக்கு ரெண்டு மூனு நாளா காலையிலே எழுந்தரிக்கும் போது லேசா தலையை சுத்துது.நான் அதைப் பத்தி கவலைப் படாம இருந்து வந்தேன். ஆனா இன்னைக்கு என் தலை சுத்தல் கொஞ்சம் அதிகமா இருந்துச்சுங்க.எங்கே கீழே விழுந்து விடுவே னோன்னு பயந்துத் தான் நான் உடனே சேரில் உட்கார்ந்துக் கொண்டேங்க.வேறே ஒன்னும் இல்லீங்க” என்று சொல்லி விட்டு எழுந்த்தரிக்கப் பார்த்தாள். உடனே சிவலிங்கம் “கமலா,காலையிலே எழுந்தரிக்கும் போது தலை சுத்தினா நாம் அதை ஒன்னும் இல்லேன்னு சும்மா இருக்கக் கூடாது.உடனே அதை டாகடர் கிட்டே காட்டி தலை சுத்தலுக்கு என்ன காரணம் என்று கண்டுப் பிடிச்சு மருந்து மாத்திரை வாங்கிச் சாப்பிடணும்.எதையும் நாம் ஆரமப த்திலே கவனிச்சுக் கிட்டா அந்த உடம்பு சீக்கிரமா தேவலை ஆகி விடும்.வியாதியை நான் முத்த விடக் கூடாது” என்று சொல்லி விட்டு காஸ்பியை ‘கட’ ‘கட’ என்று குடித்து விட்டு எழுந்துஒ போய் தன் சட்டையை போட்டுக் கொண்டு “வா சரோஜா, நாம உன் உடம்பை டாகர் கிட்டே காட்டி மருந்து வாங்கிட்டு வரலாம்” என்று அவசரப் படுத்தினார்.சரோஜாவுக்கு தன்னை டாக்டர் கிட்டே காட்டிக் கொள்ள விருப்பம் இல்லை.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *