சோலையப்பனை அரசு அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்து விட்டனர்.
புயலால் தொலைந்துபோன மீனவர்களில் ஒருவன் சோலையப்பன். எங்கோ கரைசேர்ந்து உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்து, இரண்டு மாதம் கழித்து தமிழ் நாட்டுக்கு வந்துசேர்ந்த கதையை விவரித்துச் சொல்ல அவனுக்கு மனசு இல்லை. ஓரிரு வார்த்தைகளாக ஏதோ சொல்லி விட்டு அவர்களிடமிருந்து விடுபட்டுத் தன் குடும்பம் இருக்கும் குடியிருப்பை நோக்கி விரைந்தான்.
தன்னுடைய குடிசையில் எவரும் இல்லாதது கண்டு அதிர்ந்து போனான், பக்கத்து வீட்டுக் கிழவி கண்களை இடுக்கிக் கொண்டு இவனைப் பார்த்தாள். இவனைப் புரிந்து கொண்டு தங்கம் இங்கிருந்து போய் நீண்ட நாட்களாகி விட்டதைச் சொன்னாள் அதற்குமேல் கிழவிக்கு வேறு எந்த விவரமும் தெரிய வில்லை.
குடியிருப்பை விட்டுப்போன இளம் மனைவியும் குழந்தையும் என்ன பாடு படுகிறார்களோ என்று எண்ணித் துடித்துப் போனான். கால் போன போக்கில் நடந்தான். கடற்கரையை அடைந்தான்.
திரும்பிப் மாலை மங்கிக் கொண்டிருந்த நேரம். அலைகளைத் பார்த்து அமர்ந்திருந்த சோலையப்பன் திடீரென பார்த்தபோது ஓர் படகின் அருகில் தன் மனைவி தங்கம் இன்னொரு டிப்டாப் கணப்பொழுதில் ஆடவனுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். மனதுக்குள் வெறி பொங்க அவர்களை நோக்கி விரைந்தான்.
தெளிவு இல்லாமல் அந்த ஆடவனைத் தாக்க கை ஓங்கிய போது “என்னாங்க இவரு தீனா ஸாரு. ‘நேசம்’ என்ற பேர்ல அநாதைகளையும் வயசானவங்களையும் காப்பாத்திக்கிட்டு வர்றாரு. தற்கொலை பண்ணிக்கப் போன என்னையும் நம்ம செல்வத்தையும் இவர்தான் தடுத்துக் காப்பாத்தினாரு” என்றாள் தங்கம் அவசரக் குரலில்.
சோலையப்பன் பேச வாயெடுத்த போது, மூன்று முதியவர்கள் இவன் “இருட்டப் போவுது போலாம் தீனா ஸார்” என்றார்கள். கைகளைக் கூப்பி நின்றான்.
– டிசம்பர் 1999, முல்லைச்சரம்
கண்ணால் காண்பது ஒரு பக்கக் கதை அருமை. எதிர்பாராத முடிவு ! வாழ்த்துகள்
கதாசிரயருக்கு.