கொப்பி கொப்பியாக, எழுதி, முடித்த, காலம் போய் இன்று கணனித் திரைக்கு முன்னால் அவளுக்கு ஒரு புது யுகம். கண்ணை மறைக்கும் நீர் வெள்ளத்தை, துடைத்து எறிய, அவளுக்கு ஒரு தவக் கோலம் .சாந்தி வேள்வி. இனி நன்மையே நடக்கும், கடவுளும் வருவார். காட்சி மாறும் . ஆம். அவளை சூறையாடி கொன்று தீர்த்த, வாழ்க்கையெனும் வரட்சி காயும் போர்க் களம் மறைந்தே போக அவள் ஒரு தபஸ்வினியாக எழுந்து நிற்க, வேதம் சொல்ல இதோ திரை விரிகிறது அவள் பரிசுத்தமான, பளிங்கு வார்ப்பான எழுத்து யுகம் அதன் புனிதம் எழுச்சி எவர் கண்ணிலும் படாமல் காட்சிக்கு வராமல் , அன்று பொய்த்துப் போன கதைக்கு, இது ஒரு சாந்தி பரிகாரமல்ல எவரையும் தோலுரித்துக் காட்டுவதற்காக இதை அவள் தொடங்கவில்லைஅவள் புது ஜென்மம் எடுத்து மீண்டு வருவதற்கே, சடுதியாய் நேர்ந்தது இந்தத் தவக் கோலம்.
எதிலே தவக் கோலம்? சுற்றும் சூழ வருகின்ற, உறவும் அதன் மனிதர்களும் போன பின் , அவள் உள்ளூலகில் நேர்ந்த கோலம் ஹோமில் கொண்டு சேர்த்த மகள், இனி மீண்டு வரமட்டாள் என்பதை ஜீரணிக்கவே முடியாமல் காற்றில் உதிர்ந்து பறக்கும் தூசிக்கு சமமான வெறும் சருகு போலாகமல் உள்ளூலகம் கண் திறக்க உன்மையான ஒளிப் பிரகாசத்தில் அவள் ஏற்றுக் கொண்டு விட இத் தவக் கோலம் இதற்கு ஈடு இனையாக இனி எதுவும் வரப் போவதில்லை பாசாங்கிப் போன, அவள் இது வரை வாழ்ந்து கழித்த பொய்யான உறவும் அதன் மனிதர்களும் சூழ்ந்த அந்த உறவு வட்டமும் அதன் இருப்பும் இன்று வெறிச்சோடிக் களையிழந்து காலியாகிக் கிடக்கிறது எதற்காக எந்த உறவு மனிதர்கள்ள்ளை பெற்ற பிள்ளைகளை என்ணி அவல் உயிரையும் உடலையும் பயணாம் வைத்து அந்த மிகப் பெரிய தியாக வேள்வியில் அவள் நெருப்பாற்றையே கடந்து தீக்குளித்து மீணடு வந்தாளோ அதெல்லாம் வெறும் கனவாகிப் போச்சு.
இப்போது அந்தத் தியாக வேள்வியிலும் ஒரு கரும் புள்.
வைத்தியா ரோட்டை அடையும் போது மணி ஒன்பதாகி விட்டது முழுச் சிங்கள இடம் தமிழ் குடியிருப்பே முழுவதுமாக வியாபித்து விட்ட, பாவனையில் காலம் போய்க் கொண்டிருந்தது முடிவுக்கு வராத காலம் பிறவி இருக்கும் வரை இதுவும் தொடரும். மாதவிக்கு கண்ணைக் கட்டிற்று. காட்சி மாறிய ஒரு சிதைந்த கோலம் . வழி தவறி விட்ட மாதிரி மனம், கனத்தது அவள் அங்கு வந்து அந்த அவலக் காட்சியைப் பார்த்திருக்குக் கூடாது தான் வரவிழைத்து விட்டதே சூழ்நிலை அப்படியென்ன பாரதூரமான சூழ்நிலை? இப்படி எததனை அவல சூழ்நிலைகளை மோசமான சரிவுகளையெல்லாம் அவள் கண்டிருப்பிருப்பாள். அது நெருப்பாற்றையே கடந்து வந்த அனுபவம் இது அதை மோசம் கண்ணையே குத்திக் காட்டில் விட்ட மாதிரி ஒரு அனுபவம் எது கண்? எது காடு /கண் என்பது உயிருக்குயிராய் நேசித்த ஒன்று. உலக அரங்கில், களியாட்ட மேடையில் காட்சி வராமலே போய் விட்ட அவளின் ஒரேயொரு தீனமுற்ற மகள். பெயர் திவ்யா அவளைப் பார்க்கத்தான் அவள் அங்கு வந்திருக்கிறாள். அவள் உயிருடன் இருக்கும் போதே, இந்தக் கொடுமை விதி வசத்தால் நேர்ந்து விட்டது.
இப்போது அழுகிறாள். தினமும் அழுகிறாள். மனநலம் பாதிக்கப்பட்ட திவ்யாவிற்கு இது தானா கடைசி விதி? இந்த விதியை, இனி யார் மாற்றி எழுதுவது? இது நடக்குமா என்று தெரியவில்லை. தூண்டில் புழு மாதிரி மாதவி நிலைமை.
எப்படியோ போராடி அந்த முதியோர் இல்லச் சிறையிலிருந்நு, திவ்வியாவை மீட்டெடுத்து அவள் வீட்டிற்குக் கூட்டி வந்ததே, பெரும் சாதனை தான். அவளூக்கு நேரம் போனதே தெரியவில்லை. ஒரு புது தனையே கிடைத்த மாதிரி பெரிய சந்தோஷம். இதில் சந்தோஷப் பட என்ன இருக்கிறது? திவ்வியாவிர்கு வாழ்க்கையே மறை பொருள் தான், கல்யானமில்லை காட்சியுமில்லை. அந்தக் கனவும் உக்கி உலர்ந்து தோர்ந்து போக உடைந்து நொறுங்கிப் போன, அவள் இதயத்துடிப்பைக் கூட இப்போது கேட்க முடிவதில்லை. யார் இட்ட சாபம் இது? யார் கொடுத்த வரம்? இதற்குக் காரணத்தைக் கண்டு, பிடித்து என்ன ஆகப் போகிறது? விதி மீதே பழியை போட்டு விடலாம். அப்படிச் சொல்லியே குற்றவாளியும் தப்பித்து விடுவது சுலபம் . ஆனால் கொடிய பாவத்தைச் செய்தவர்களூக்கு இது பொருந்துமா என்று தெரியவில்லை . திவ்யா முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் இக் கேள்வியே அலை புரண்டு வரும் . இதற்கும் பதில் இல்லாமலே போகலாம் ஆனால் நிதர்ஸனம் விழித்துக் கொள்ளூம் போது, இதற்கான திவ்யாவின் இந்தப் பேரழிவிற்கு ஆன காரணகர்த்தாவைக் கழுத்தையே நெரித்துக் கொன்று விட வேண்டும் போல், மாதவிக்கு வெறி வருகிறதே, படித்த ஆன்மீக ஞானமெல்லாம், கை கொடாமல் அவள் சகதியில் மூழ்கி கரை ஒதுங்கிப் போக நேர்கிறதே, ஆனால் திவ்யாவோ எதுவுமே நடவாத மாதிரி, ஒரு தபஸ்வினி மாதிரியல்லவா அவள் சாந்த இருப்பு. அவளுக்கு நரகமும் சொர்க்கமும் ஒன்று தான். திடீரென்று ஏதோ விழிப்பு வந்த மாதிரி அவள் சாவகாசமாக இருக்கையில், அவளின் தோள் மீது , கை போட்டு வாஞ்சை, மேலிட மாதவி கேட்டாள்.
பிள்ளை! உனக்கு எங்கை இருக்க விருப்பம்? ஹோமா? வீடா?
இதற்கு அவள் குரலை உயர்த்திச் சொன்னாள். நான் இனி அங்கை போக மாட்ட மாட்டன். ஐராங்கினி எனக்குக் குட்டுறவ.
யார் இந்த ஐராங்கினி. அந்த முதியோர் இல்லத்தில் அவர்களைப் பாராமரிக்க ஆக மூன்று பேர் மட்டும் தான். அவர்களில் ஒருத்தி தான் இந்த ஐராங்கினி , ஒரு சிங்களப் பெண், இந்த த இடத்திலும் இன வன்மம் வேறுபாடு அவளுக்கு இல்லாமல் போகுமா? சதிராடும் வாழ்க்கையில் இது சகஜம் . திவ்யாவை இங்கு கொண்டு வருவதில் ஒரு தர்ம யுத்தமே செய்ய வேண்டி வந்ததே. உறவுகள் முகம் சுழிக்க, தீக்குளித்தே இதை செய்ய நேர்ந்தது .இது பழைய பாடம் தான். வேதம் கற்க, வாழ்க்கையிலும் போராட நேர்ந்தது . இதனால் உச்ச கட்ட பலன் மாதவிக்கு மட்டுமே., வேதம் அவளை நன்றாகவே புடம் போட்டு வைத்திருக்கிறது. ஒரு தபஸ்வினி மாதிரி அவள் மீண்டு வர, நேர்ந்த, விதியின் விளையாட்டு இது . திவ்யா நிர்மலமான வானம் போல மாதிவி மாதிரி ஊனம் சுமப்பவர்க்கே இந்த வலியெல்லாம்.