உணர்வுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 1,621 
 

“ஏய்… ! இந்தச் சனியனை விரட்டப் போறாயா இல்லையா நீ… ” களைப்பில் கண்ணயர்ந்திருந்த முத்து, குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தான். கண்களைத் துடைத்துக் கொண்டு, “என்னங்கம்மா!”

“என்னன்னா கேட்கிறாய்! இந்த பிசாசு பண்ணி வெச்சிருக்கிற கூத்தைப் பார்” என்று முதலாளியம்மாள் தோட்டத்தைக் காட்டினாள். அவள் பிசாசென்றது மணியை-அதாவது அவனுடைய நாய்குட்டியை.

மணி அங்கே செடிகொடிகளைக் கடித்துக குதறிக் கொண்டிருந்தது. பூக்களை துவம்சம் பண்ணியிருந்தது.

“ஏய்.. ராஜாமணி!”

அவன் ஓட அது மண்ணைப் பிறாண்டிவிட்டு தாவிற்று. கொஞ்சம் போய் குதித்துத் திரும்பிப் பார்த்தது. வாலை ஆட்டிக் கீச்சு குரலில் முனகிற்று.

“ஏய்! நில்லு நில்லு! என் கோபத்தைக் கிளப்பாதே” என்றதும் – முதுகைச் சுருட்டிக் கொண்டு சரணம் என்று தரையில் கவிழ்ந்தது.

அவனுடைய காலை மோந்து நக்கிற்று. வாலை ஆட்டிக்கொண்டு மேலே தாவ. ஓங்கி அறை கொடுத்தான்.

மணி சுருண்டு கொண்டு போய் பலகீனமாய் விழுந்தது. உடன் கண்களிலிருந்து நீரும் பரிதாபமும் கசிய ஆரம்பித்தது. ஓடிப் போய் அதன் காதைப்பிடித்து இழுத்து வந்து ஷெட்டிலிருந்த சங்கிலியில் கட்டினான்.

மெல்லிய குரலில் மணி கெஞ்ச, “பட்டினியாய்க் கிட, அப்போதான் உனக்குப் புத்தி வரும்!”

“வள்.. வள்..!”

“அதெல்லாம் முடியாது. உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்!

முதலாளியம்மா எத்தனை உசிராய் பூச்செடிகளை வளக்கிறாங்க.. உனக்கென்ன வேலை அங்கே?”

“மன்னிச்சுக்கோ!”

“முடியாது!” என்று வேலையைக் கவனிக்கச் சென்றான்.

அவனுக்கு பதின்மூன்று வயது.

சின்ன வயதிலிருந்தே முத்துவிற்கு நாய் என்றால் உயிர். வீட்டில் வறுமை. தாயும் தகப்பனும் கூலிக்குப் போய் கால் வயிறு அரைவயிறுக் கஞ்சி ஊற்றினால் அதிலும் பாதியைத் தெரு நாய்களுக்கு விதரனம் பண்ணி விடுவான்.

பள்ளிக்கூடத்திலும கூட அப்படித்தான். சாப்பாட்டு மணியடித்தால் போதும். அங்கே நாய் படையே திரண்டு விடும் – சத்துணவிற்கு! நாய்களின் தொல்லை தாங்காமல் கடைசியில் ஸ்கூலிலிருந்து அவனுக்குக் கல்தா கொடுக்க வேண்டியதாயிற்று.

அவன் ஒன்றும் படிப்பில் அத்தனை சமத்தோ கெட்டியோ இல்லை. ஏஙறகனவே வகுப்பிற்கு இரண்டு வருடம் என்றுதான் ஒப்பேற்றிக் கொண்டிருந்தான். பாடத்தை நினைத்தாலே மனது கசந்தது. மூளையில் பதிவேனாயென்றிருந்தது.

வாத்தியாரின் அடிகள் படிப்பின் மேல் விரோதத்தையே கிளப்பின. “ஏன் படிக்க வேண்டும்? படித்து என்ன கலைக்டராகவாப் போகிறோம்? எலிமென்ட்ரியையே தாண்டினால் பெரிது” என்று நினைக்க வைத்தது.

இந்த உலகம் பெரிது. வானம் பரந்து விரிந்திருக்கிறது. கவலையில்லாமல் காற்று கிடைக்கிறது. விளையாடலாம். ஓடியாடலாம். கூலி வேலைக்குப் போனாலாவது நான்கு காசு கிடைகும். கடலை மிட்டாய் வாங்கித் தின்னலாம். பீடி புகைக்கலாம், சினிமாப் போகலாம்.

அதையெல்லாம் விட்டு விட்டு வகுப்பில் ஏன் அடைந்து கிடக்க வேண்டும்? ஸ்கூலே ஒரு நரகம். உபாத்தியாயர்களெல்லாம் உபத்திரவர்கள். அவர்களுக்குப் பசங்களின் அவஸ்தை புரியாது. புரிவதில்லை. படிப்பில் வெறுப்பும் சலிப்பும் வருவதிற்குப் பெரும்பாலும் அவர்கள்தான் காரணம்.

முத்து ஸ்கூலை துவேஷிக்க, தாய் கோபமுற்றாள், அவனுடன் இரண்டு நாட்களுக்குப் பேசவில்லை. “நாங்கதான் படிப்பில்லாம கஷ்டப்படறோம்னா உனக்கும் ஏண்டா தலையெழுத்து…?”

“என்னால் படிக்க முடியலைம்மா!”

“ஏன்..”

அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. “அக்ரஹார குட்டிச்சுவரில் நாலு நாய்க்குட்டி இருக்கும்மா” என்றான்! எல்லாமே ஆண். நக்லியூண்டாக அழகாய் கரணை கரணையா இருக்கும்மா”

“உன் நோக்கம் தான் என்னடா..?”

“அதுல ரெண்டு குட்டியை எடுத்து வளர்ப்போம்மா”

‘ஆமா! இப்படி நாய் நாய்ன்னு நாயா அலைஞ்சிட்டுரு! உருப்பட்டிரலாம்!”

“அம்மா! பத்து ரூபா காசு கொடு!”

“எதுக்கு?”

“நாய்க்குச் சங்கிலி வாங்கணும். பெல்ட்!”

தாய் ஓங்கி அறைந்தாள். “நான்பாட்டிற்கு மாடாட்டம் கத்திகிட்டிருக்கேன். உன்னோட எதிர்காலத்துக்காக கவலைபட்டுகிட்டிருக்கேன். நீ எபன்னடான்னா… மனசுல என்னதான்டா நினைச்சுகிட்டிருக்கே..?

“எனக்கு நாய்க் குட்டி வேணும்”

“அப்போ நாங்கள் வேணாம்? உனக்கு நாங்கள் வேணாம்னா எனக்கும் நீ வேண்டாம்! எங்க முகத்திலேயே விழிக்காதே!”

“அம்மா நான் போயிருவேன்!”

“எங்காவது போய் ஒழி! அப்போதான் புத்தி வரும். கஷ்டபட்டு குண்டி காய்ஞ்சால்தான் எங்களோட வார்தை புரியும்.

அன்றே வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அக்ரஹாரத்திற்குப் போய் தேடினதில் இந்த ராஜாமணி மட்டும்தான் கண்கூடச் சரியாய் திறக்காமல் கிடந்தது. தாய் நாய் அசந்த நேரத்தில் தூக்கிக் கொண்டு டவுனிற்கு வந்துவிட்டான்.

ஒரு மாதம் வேலை தேடிக் கடைசியில் இங்கே கிடைத்தது. முத்து, ராஜாமணியைச் சங்கியில் கட்டி காலைரயிலும் மாலையிலும் வாக் போவான். அதனுடன் விளையாடுவாட்ன, அச்சுவெல்லாம், பிஸ்கெட்டெல்லாம் வாங்கி தருவான்.

அவன் எந்த அளவிற்கு அதனுடன் கொஞ்சுகின்றானோ அந்த அளவிற்கு முதலாளியம்மா ராஜாமணியை வெறுத்து வந்தாள். அவளுக்கு நாய் என்றாலே அலர்ஜி.

பத்து வருடம் முன்பு அவருடைய கணவரை வெறிநாய் ஒன்று கடித்து நாற்பது நாட்கள் குலைத்துக் குலைத்து இறந்து போனாராம். அதிலிருந்து நாய் என்று கேட்டாலே எரிந்து விழுவாள்.

முத்து கெஞ்சிக் குலாவ, காலில் விபந்து ராஜாமணியையும் தன் கூட வைத்துக் கொள்ளச் சம்மதம் பெற்றிருந்தான்.

அப்படியிருக்கும்போது இப்படியெல்லாம் நடந்துக் கொண்டால் என்ன செய்வதாம்! இன்றென்றில்லை, அந்தம்மாள் தூங்கும்போது ராஜாமணி சும்மா இருப்பதில்லை. ஓணானையோ, வெட்டிக்கிளியையோ துரத்திக் கொண்டு குலைக்கும். அது அவர்கள் தூக்கத்தைக் கெடுக்கும்.

உடனே ஒரு போர் மூளம்.

நாய் என்றால் குரைக்கதான் செய்யும். அதன் வாயைக் கட்டிப் போடவா முடியும்? மனிதர்களைத்தான் சட்டம் என்றும். பணபலத்தைகக் காட்டியும் அடக்கி ஒடுக்கி மிரட்டி வைத்திருக்கிறோம். நாய்களுக்கு கூட சுதந்திரம் கொடுக்காவிட்டால் எப்படியாம்!

அந்தச் சுதந்திரம் நாய்க்கு நாய் வேறுபடும்.

ஏழை – பணக்காரர் வித்தியாசம் மனிதர்களிடம் மட்டுமில்லை நாய்களிடமும் நிறையவே இருக்கின்றது.

தெரு நாய்க்கு உண்ண உணவில்லை. உறங்க இடமில்லை. ஆகாயம்தான் கூரை. மழையில் நனைந்து வெயிலில் காயவேண்டும். எங்கு வேண்டுமானாலும் போகலாம்.

ஆனால் கவனிப்பாரில்லை. எச்சிலைக்கு அடித்துக கொள்ள வேண்டும். சோறு கிடைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் நரகலை தேடிப் போக வேண்டும். சொறி, சிரங்கு என கஷ்டப்பட்டு கார்ப்பரேஷன்காரர்களுக்குப் பயந்து ஓடி ஓளிந்து கடைசியில் வெறிபிடித்து… பரிதாபமாய் முடிய வேண்டும்.

பணக்கார நாய்களுக்கு அந்தப் பிரச்னையில்லை. பதவிசு. பரமசுகம், கார் பங்களா! மொசைக்கில் உறங்களலாம். சுதந்திரம் இல்லாவிட்டால் கூட வேளாவேளைக்கு சாப்பாடு! மட்டன் பிரியாணி.

முதலாளியம்மாள் ராஜாமணியை மன்னிக்கத் தயாராயில்லை. கரிச்சுக் கொட்டிக் கொண்டேயிருந்தாள்.

“இந்தச் செடிகள் எத்தனை விலையுயர்ந்தது தெரியுமா? அநியாயமாய் இப்படி நாசம் பண்ணி விட்டதே” என்று திட்ட ஆரம்பித்தாள்.

முத்துவிற்கு எரிச்சலாய் வந்தது. ‘ராஜாமணி தெரிந்தா செய்தது? ஏதோவிளையாட்டு ஜீவன்! வாயில்லாத பிராணி!

மனிதர்கள் உயிரில்லாத செடிகளையும் பூக்களையும் மதிக்கிறார்கள். ஆனால் உயிருள்ள பிராணிகளை மதிக்கத் தெரியவில்லை. செடிகள் எதற்கு? அழகுக்காகத்தானே! வீட்டில் கொஞ்சம் அழகு குறைந்தால் தான் என்னவாம்! உயிருள்ள நாயைக் காட்டிலும் செடியா பெரிசு? இங்கே உயிருக்கு விலையில்லை.

‘பிராணிகளைக் காப்போம், வதைகளைத் தடுப்போம்’ என சுவருக்கு சுவர் எபதி வைத்திருக்கிறார்களே… அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எல்ல்மே ஏட்டுச சுரைக்காய்தானா..?

ராஜாமணி அத்தோடு திருந்திவிடும் என்று தான் முதது நினைத்தான். ஆனால் அது திருந்துவதாகவே தெரியவில்லை. மறுபடி மறுபடி பூச்செடிகளை மிதித்து துவட்டவே செய்தது. வீட்டில் ஓடிப் போய் ஆசிங்கம் பண்ணி வைத்தது. முதலாளியம்மால் கடைசியில் “இந்தச் சனியன் இங்கே இருக்கவே கூடாது!” என்று உத்தரவு பிறப்பித்துவிட அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

ராஜாமணி அழைத்து போய் ஊரின் ஒதுக்கில் குடிசை ஒன்றில் கட்டிப் போட வேண்டியதாயிற்று. தினம் காலையிலும மாலையிலும் சோறு எடுத்துப் போய் அதற்கு போட்டுவிட்டு, அதனுடன் வாக் போய்விட்டு முத்து திரும்புவான்.

அவன் ராஜாமணிக்கு வேண்டித் தேர்ந்தெடுத்த இடம் சரியில்லையோ இல்லை நேரம் சரியில்லையோ தெரியவில்லை – டவுனில் கட்சி மாநாடு நடத்த வேண்டி மந்திரி அங்கு வந்து காம்ப் அடித்திருந்தார்.

அவரின் ரெஸ்ட் ஹவுஸ் அந்தக் குடிசைக்கு மிகச் சமீபத்தில்தான் இருந்தது. ஊரில் நிதி வசூல் செய்து (சுரண்டி) மாநாட்டைச் சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு அவர் தலையில்.

அதற்கு வேண்டி ராத்திரி பகலாய் அலைந்துவிட்டு கிடைக்கிற சொற்ப நேரத்தில் தூங்காமல் என்று வந்தால்-

அருகிலேயே ஆட்டுமந்தை! அங்கே எப்போதும் ஆடுகளின் அணிவகுப்பு நடக்கும். ஆடுகள் விலை பேசப்பட்டு அங்கேயே அப்போதே கசாப்பு செய்யப்படும்.

விற்பனை போக எஞ்சிய எலும்புத் துண்டுகளும், மாமிசமும் குப்பையாய் தூக்கி ஏறியப்பட அங்கே தெரு நாய்கள் எப்போதும் உரிமைப் போர் தொடுத்துக் கொண்டிருக்கும்.

அவற்றின் குரைப்பும் இரைச்சலும் மந்திரியைக் கோபப்பட வைத்தன. தூங்கமுடியாத ஆவேசம் நாய்களின் மேல் திரும்பிற்று. உடனே அவர் பி.ஏவை அழைத்து “இங்கே ஏன் ரைச்சல்..?” என்றார்.

“பக்கத்துல கசாப்புச் சந்தை இருக்கு சார். அங்கே நாய்கள்!”

“கசாப்பு சந்தை! நாய்கள்! சை! மனுசனைத் தூங்கவிடாத பொறுக்கிகள்!” என்று எரிந்து விழுந்தார்.

“உடனே கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணி லைசென்சில்லாத நாய்களையெல்லாம் பிடிச்சு அப்புறப்படுத்தச் சொல்லு! நியூசென்ஸ்!”

“சரிங்கய்ய.இப்பவே சொல்லிர்றேன்!”

பி.ஏ உடனே கார்பரேஷனுக்கு உத்தரவிட, கார்ப்பரேஷன் வேன்கள் டவுன் முழுக்கப் புயலாய்ப் பறக்க ஆரம்பித்தன.

அன்று மாலை வழக்கம்போல் –

வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, முதலாளியம்மாள் தனக்கு வேண்டி கொடுத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு முத்து குடிசையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

அன்று சம்பள தினம். பாக்கெட்டில் சுளையாய் நூறு ரூபாய் இருந்தது. ராஜாமணி பாவம்! நாள் முழுக்கக் கட்டி கிடக்கிறது. பகலில் பட்டினியாய் கிடக்கிறது. சம்பள தினத்தில் மட்டுமாவது அதற்கு மட்டன் வாங்கிப் போடுவோம் என்று முனியாண்டி விலாசில் நுழைந்தான்.

மட்டனும், சிக்கன் பிரியாணியும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். தென்றல் காற்று ரம்மியமாய் அடிக்க. அதில் பிரியாணி மணத்தது. விசிலடித்துக கொண்டு, “ராஜாமணி!” என்று செல்லமாய் அழைத்தப்படி குடிசைக்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி.

அங்கே ராஜாமணியைக் காணவில்லை. வெறும் சங்கிலிதான் கட்டபட்டது அப்படியே கிடந்தது.

“ராஜாமணி.. ராஜாமணி!” என்று சுற்றுமுற்றும் கூவிப் பார்த்தான். தேடிப்பார்த்தான் தென்படவில்லை. “ராஜாமணி, ராஜாமணி… என்னைவிட்டு போயிட்டியா நீ..! எப்படி உன்னால் போக முடிந்தது..? என் மேலே கோபமா? கட்டி போட்டுட்டேன்னு கோவிச்சுகிட்டுதான் போயிட்டியா நீ..” ராஜாமணி நீயில்லாம நான் எப்படி இருப்பேன்? உனக்கு வேண்டித்தானே வீட்ட விட்டே வந்தேன்? என் படிப்பையும் விட்டேன்! என் சொகுசையும் விட்டுக் கொடுத்து உனக்கு உனக்கென்று உனக்காகவே வாழ்கின்றேனே… !” என்று சங்கிலியை அவிழ்த்தான்.

ரோடோரத்தின் புதரில் கார்பரேஷன்காரர்களால் அடிபட்டு மூளை சிதறி ராஜாமணி இறந்து கிடக்க.

முத்து அதைக் கவனிக்காமல் “ராஜாமணி! ராஜாமணி!” என்று புலம்பிக் கொண்டு சங்கிலியை பிடித்தபடி நடக்க ஆரம்பித்தாள்.

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *