இந்த பத்தாம்தேதி சம்பளம் கொடுக்கற வழக்கத்த யாரு பழக்கபடுத்தியது, என்று எனக்கு தெரியல, அவன் மட்டும் கையில கிடைச்சான் ஒங்கி ஒரு குத்து குத்தலாம் போல இருந்தது எனக்கு, பத்து தேதிய அதிகம்தான் பத்து தேதிக்கு மேல் ஆகியும் சம்பளம் கொடுக்காம டேக்கா கொடுத்துட்டுருந்தார் என்னோட ஓனர்,
சார் அம்மா பத்து தடவை மேல போன் பண்ணிட்டாங்க சார், குழுவுக்கு பணம் கட்டணும்மா, ரொம்ப கஷ்டம் சார்… என்றேன்..
நான் என்ன வச்சிகிட்ட வஞ்சனம் பண்றேன், இருந்த கொடுத்தற போறேன், இன்னைக்கு ஒரு பார்டியிடம் ராத்திரி 8.00 மணிக்கு பணம் வரவேண்டி இருக்கு, அந்த பணம் வந்த உன்னிடம் கொடுத்துறேன், அதுவரையிலும் கொஞ்சம் பொறுத்துக்க, இப்ப போய் டிசைன் பண்ணு, கஸ்டமர் வெயிட் பண்றாங்க… ப்ளீஸ் என்று முகத்துக்கு நேரா கும்பிடு போட்டார் ஓனர், அதனால கம்யுட்டர்ல போய் டிசைன் பண்ணேன்.
ஓனர் சரியான ஏமாத்துகாரர், ஒரு மாதம் கூட சம்பளத்தா ஒழுங்கா கொடுத்ததே கிடையாது. அவர் மேல எனக்கு நம்பிக்கையை இல்ல, இருந்தாலும் வேற வழி தெரியல.
ஓனர் சொன்ன அந்த நேரமும் நெருங்கி வந்தது, நான் அப்ப ஒரு ப்ளக்ஸ் டிசைன் செய்துகொண்டுருந்தேன். டிசைனிங் முடிந்து கஸ்டமர் வெளியே போனபோதுதான் மணியா பாத்தேன்,
ராத்திரி மணி பத்து, நான் உடனே எழுந்து சம்பளம் கேட்க ஓனர் ரும்க்கு போனேன், ஓனர் இல்ல. ஓனர்க்கு போன் போட்டு பாத்தேன், அவர் போனையும் அட்டென்ட் பண்ணவே இல்ல. நொந்து போனேன். நானே அதிகமா டென்ஷன் ஆகாத ஆளு, என்னயே ரொம்ப டென்ஷன் ஆக்கிவிட்டார் ஓனர், அப்ப எனக்கு அம்மாவிடம் இருந்து போன் வந்தது,
என்னடா சம்பளம் வாங்கிட்டியா, பணம் வாங்கிட்டியா என்று கேட்டுது அம்மா, ஆத்திரத்துல போன்ன தூக்கி விசினேன். அது சுவர்ல மோதி இரண்டு மூணா உடைந்து தரையில விழுந்தது, எனக்கு அன்னைக்கு சந்திராஅஷ்டம், சந்திரஅஷ்டம் வந்தாலே முதல்ல செல்லுதான் பலியாகுது. மறுநாள் என்னோட வேல பாக்குற ஒருத்தன், நான் செல்போன் உடைத்ததா ஓனரிடம் சொல்லிவிட்டான்.
ஏண்டா செல்போன்ன உடைச்ச, என்றார் ஓனர்,
இல்ல சார் கீழ விழுந்து உடைஞ்சிடுச்சி, என்றேன்
டேய் எனக்கு என்ன, தெரியாதுன்னு நினைச்சியா, உனக்கு கோவம் வந்த என்ன வேணாலும் பண்ணுவியா, எது வந்தாலும் Gun மாதிரி நிக்கணும்டா. அவன்தான்டா மனுசன், நி என்னவோ இந்த சின்ன விஷயத்துக்கே செல்ல தூக்கி போட்டு உடைக்கிற.
நான் Gun மாதிரி நிக்கிறேன், நீ முதல்ல சம்பளத்தா கொடு, என மனசுக்குள்ளே நினைத்து கொண்டேன். அதன் பிறகு கூட என் ஓனர்க்கு சம்பளம் கொடுக்க மனசு வரல. ஒரு ஒரு வாரம் இழுத்து அடிச்சா பின்புதான், சம்பளத்தா கொடுத்து தொலைச்சார், அந்த சம்பளமும் அரைகுறையாதான் வந்தது, அத்தோட உனக்கு ஒரு கும்பிடு, உன் வேலைக்கு ஒரு கும்பிடு என்று அந்த வேலைக்கு முழுக்கு போட்டேன்.
என்னிடமும் ஏதோ ஒரு குறை இருந்தது, எந்த இடத்துலயும் நிரந்தரம்மா வேலைக்கு போகமாட்டேன், அவன் திட்றான் இவன் திட்றான் என்று பாதிலே வேலையை விட்டு ஒடி வந்துருவேன், என்னால என் குடும்பத்துக்கு எந்த பயனும் இல்ல, என் குடும்பத்துல கஷ்டபட்டு வேலைக்கு போனாதான் சோத்த பார்க்க முடியும், அப்படிபட்ட ஒரு குடும்பத்துல பிறந்து வேலைக்கு போக துளியும் விருப்பம் இல்லாம இருந்தேன்,
பத்து வருஷதுக்கு முன்னாடி ஒரு செப்டம்பர் மாசத்துல, என் அப்பா செத்துபோனார். என் அப்பா உயிரோட இருக்கும் போதுகூட என் குடும்பம் கஷ்டபட்டுட்டுதான் இருந்தது. என் அப்பா இறந்த பிறகு இன்னும் அதிகமா வறுமை வந்து சூழ்ந்தது. இப்ப எல்லா கஷ்டமும் என் அம்மா தலைமேல்தான் இடிபோல் இறங்குது,
அந்த வேலையை விட்டதால வீட்ல சும்மாதான் இருந்தேன், மாடு அசை போட்டுகொண்டு இருந்தது, கன்னுகுட்டியும் அசை போட்டுகொண்டு இருந்தது,
கண்மனி கண்மனி என ஏதோ ஒரு குருவி சத்தம் கேட்டுகொண்டுருந்தது.
அன்று மதியம் வீட்டு கொல்லபுறம் வாசல்படியில சாப்பிட்டு ஒரு குட்டிதூக்கம் போட்டுவிட்டு உட்காந்திருந்தேன். குட்டி தூக்கம் போடுறவன் எல்லாம் குட்டி சுவராதான் போவான். ஆமாம் என் Friend எல்லாம் மாடி வீடு கட்டிட்டாங்க. என்னால மாட்டு கொட்டைக்கு கீத்து கூட போடமுடியல. வேலைக்கு போகாதால ஒரே வெறுப்பா இருந்தது. நேரமே போகல. டைம்பாஸ் பண்ண என்னிடம், நல்ல ஒரு செல்லு கூட இல்ல. வீட்டு உள்ள போய் டிவிய ஆன் பண்ணேன். டிவி ஆன் ஆனது, ரிமோட்ட தேடுனேன், ரிமோட்ட காணும், எங்க தேடியும் காணல. அம்மா நாடகம் பாத்து முடிந்ததும் ரிமோட்ட தூக்கி எங்க போட்டது என்றே தெரியல,
டைனிங் டேபிள் மேல, டிவி மேல என எல்லா இடத்துலயும் ரிமோட்டை தேடிப் பாத்தேன், அடுப்பெடி உள்ளேயும் போய் பாத்தேன், அங்கேயும் காணும், வீட்டை சல்லடை போட்டு தேடுனேன், கிடைக்கவே இல்ல. பத்தயாத்து மேல ஏறி பாத்தேன், அங்க ரிமோட் இல்ல. வேற ஒண்ணு இருந்தது, யாருக்கும் தெரிய கூடாது என, முன்ன நான் மறைத்து வைத்த டைரி ஒண்ணு அங்க இருந்தது. அந்த டைரி நான் ப்ளஸ் ஒன் படித்தபோது எழுதின டைரி. டைரி ஒரே தூசியாய் இருந்தது. தூசியை துடைத்துவிட்டு பத்தயாத்து மேலே உட்கார்ந்தே, டைரில உள்ளத படிக்க ஆரம்பித்தேன்….
ஏற்கனவே நேரம் ஆகி இருந்தது, நான் சைக்கிளுக்கு வேற காத்து அடிச்சேன் அது இன்னும் நேரத்தா தாமதபடுத்துனது, நான் ஸ்கூல் உள்ள போன போது, மதியம் சாப்பாட்டு பெல் அடித்து முடிந்து பத்துநிமிஷம் ஆகி இருந்தது, கேட் வாட்ச்மேன் என்னை உள்ளேயே விடல, சார்தான் மெடிக்கலுக்கு போக சொன்னார் என்றேன், எந்த சார்,… என்றார் அவர்
நான் வடிவேல் சார், என்று பொய் சொன்னேன்.
சந்தேகமா….
சரி போ போ…..என கேட்ட திறந்துவிட்டார், வாட்ச்மேன்.
சைக்கிள்ள தள்ளிகொண்டு, உள்ள போனேன். பேஸ்கட் பால் கிரவுண்ட ஓரம் சைக்கிள்ள நிறுத்தி பூட்டி விட்டு, வேக வேகமா ஸ்கூல் உள்ள நடந்து போனேன்,
ஹெட்மாஸ்டர் ரூமை தாண்டி போனபோது, டேய் நில்றா என்று ஒரு குரல் தடுத்தது,
நான் திரும்பி பாத்தேன்.
பீட்டி வாத்தியார்.
எங்கடா டைய் என்றார்.
பாண்ட் பாக்கேட் உள்ள கைய்ய விட்டு, டைய்யை வெளில எடுத்தேன், வெளில எடுத்து சட்ட காலர்ல மாட்டுனேன்.
எங்க பெல்ட், இன்நெல்லாம் பண்ணமாட்டியா, நி என்ன பெரிய ரவுடியா, என்று அதட்டுனார்.
சாரி சார்.., சாரி சார்…, என்று சட்டையை பாண்ட் இடுக்குல திணித்தேன்.
அப்பதான் வயித்துல சொருகி வைத்துருந்த மேட்டர் ஒண்ணு வெளில தெரிந்தது.
பாத்ததும் பீதியானேன், அது பீட்டி வாத்தியார் கண்ணுக்கும் தென்பட்டுவிட்டு, என்னடா அது என்றார்…
நான் ஒண்ணும் இல்ல சார் என்று மழுப்புனேன்.
இங்க வாடா என்று என்ன பிடித்து இழுத்தார், இழுத்து வயித்துல நான் சொருகி வைத்துருந்ததை வெளில எடுத்தார்.
அது ஒரு சிடி, பிளாஸ்டிக் கண்ணாடி கவர்ல இருந்தது, என்ன சிடிடா …. என்றார்.
என் மாமா கல்யாண சிடி சார் என்றேன்.
அதயேன் இங்க எடுத்துட்டு வந்த?
எங்க சொந்தகார பையன் ஒருத்தன், இங்க படிக்கிறான், அவனிடம் கொடுக்கதான் எடுத்துட்டு வந்தேன் என்றேன்.
சரி வா பாத்துருவோம், என்று பீட்டி வாத்தியார் கம்ப்யூட்டர் ரூம்க்கு போனார்.
அவர் பின்னாடியே நானும் நடந்து போனேன்.
கம்ப்யூட்டர் ரூம் நாலவது மாடியில இருந்தது.
இரண்டாவது மாடிபடில ஏறும்போதே சொல்லிவிட்டேன்.
சார் இது பிட்டு படம் சிடி என்று…
காதுல விழல போல, என்னை பாத்து என்ன? என்றார்.
சார் இது பிட்டு படம் சிடி என்றேன் சத்தம்மா.
அவ்வளவுதான், அவருக்கு வந்ததே கோவம், ஓங்கி ஒரு அறைவிட்டார்.
நான் மாடிபடில சுருண்டு விழுந்தேன்.
பொட்டுனு டைரிய முடுனேன், முகமெல்லாம் வேர்த்து போய் இருந்தது. அங்கேயும் இங்கேயும் திரும்பி திரும்பி பாத்தேன். மறுபடியும், அந்த டைரிய திறந்த படிச்ச அந்த பக்கத்த எல்லாம் கிழிச்சி போட்டேன்.
கிழிச்சி போட்ட பேப்பர் எல்லாம், பத்தாயத்து மேல இருந்து அழகா பறந்து, கீழ தரைல போய் விழுந்தது.