அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 6,617 
 
 

அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 | அத்தியாயம்-28

ரமேஷ¤க்கு ஜூலி சொன்னதே கேட்டதும்,ஒரு பக்கம் சந்தோஷமாகவும், இன்னொரு பக்கம் ‘இதுக்கு அப்புறமா ஜூலி கிட்டே இருந்து வேறே என்ன ‘ப்ராப்லெம்’எல்லாம் வருமோ’என்கிற பயமும் இருந்து வந்தது.அதனால் அவன் வெறுமனே ”’ஐ ஆம் க்லாட் டு ஹியர் திஸ் ஸ்வீட் நியூஸ்’ ஜூலி” என்று ஜூயைப் பார்த்து சொல்லி விட்டு சும்மா இருந்தான்.

ஜூலி தன் உடம்பை தவறாமல் டாக்டட் கிட்டே காட்டி ‘செக் அப்’ பண்ணீக் கொண்டு வந்து, டாக்டர் கொடுத்த மாத்திரைகளை எல்லாம் தவறாமல் சாப்பிட்டுக் கொண்டு வந்து,டாக்டர் சொன்ன ‘அட்வைஸை’’ஸ்டிரிக்டாக’ கடைப் பிடித்து வந்தாள்.உடம்புக்கு நிறைய உடல் பயிற்சிகளை எல்லாம் பண்ணீ வந்தாள்.

ஜூலிக்கு பிரசவ வலி வந்ததும் ரமேஷ் ஜூலியை ஒரு ‘ஹாஸ்பிடலில்’ சேர்த்தான்,ஆறு மணி நேரம் ஆனதும் ஜூலிக்கு ஒரு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது.

குழந்தைப் பிறந்து எட்டு மணி நேரம் ஆனதும் டாக்டர் ரமேஷ் கிட்டே“நீங்க இவங்களே வீட்டு க்கு அழைச்சுக் கிட்டுப் போகலாம்” என்று சொன்னதும்,ஜூலியையும்,குழந்தையையும் ‘ப்லாட்டு’ க்கு அழைத்து வந்தான் ரமேஷ்.

ஜூலி ‘மடர்னட்டி லீவில்’ இருந்து வந்தாள்.

ஒரு பத்து நாள் போனதும் ஜூலி ரமேஷைப் பார்த்து “ரமேஷ்,நான் இப்போ ரொம்ப ‘பைனா’ இருக்கேன்.நாம ரெண்டு பேரும் இந்த ‘சண்டே சர்ச்சுக்கு’ப் போய் ‘பேபி’க்கு ஒரு நல்ல பேரா வச்சுக் கிட்டு வரலாமா”என்று ஆங்கிலத்தில் கேட்டதும் ரமேஷ¤க்குத் தூக்கி வாரிப் போட்டது.
“வேணாம் ஜூலி,நான் இந்தக் குழந்தைக்கு ஒரு இண்டியன் பேரே வச்சு,ஒரு இண்டியன் குழந் தையைப் போல வளத்து வர ரொம்ப ஆசைப் படறேன்” என்று ரமேஷ் ஆங்கிலத்தில் சொன்னதும் ஜூலிக்கு கோவம் வந்தது.

“நான் இந்த குழந்தைக்கு ஒரு அமொ¢க்கன் பேரே தான் வக்க ஆசைப் படறேன் ரமேஷ்.சில மாசம் போனா,நான் என் ‘ப்ரெண்ட்ஸ்’ எதிரில் எல்லாம்,ஒரு இண்டியன் பேரே சொல்லி என் குழந் தையைக் கூப்பிட முடியாதே.அவங்க எல்லாம் என்னேப் பாத்து சிரிப்பாங்களே ரமேஷ். Try to understand my difficulty.நீ அவனுக்கு ஒரு அமொ¢க்கன் பேரே வை ரமேஷ்.Please” என்று ஆங்கிலத்தில் சொல்லி அவன் தோளைக் கட்டிக் கொண்டு கெஞ்சினாள் ஜூலி.

“நான் நம்ம குழந்தைக்கு ஒரு இண்டியன் பேரேத் தான் வக்கப் போறேன்.அந்த குழந்தையை ஒரு இண்டியன் பையனைப் போலத் தான் வளத்து வரப் போறேன்.அவனுக்கு நான் அமொ¢க்கன் பேரே வக்க மாட்டேன் ஜூலி” என்று ஆங்கிலத்தில் தீர்மானமாகச் சொல்லி விட்டான் ரமேஷ்.
ஜூலிக்கு கோவம் கோவமாக வந்தது.

ரமேஷ¤டனும்,அந்தக் குழந்தையுடனும் அந்த ‘ப்லாட்டி’லே மூன்று மாதம் தான் இருந்து வந்தாள் ஜூலி.

குழந்தைக்கு மூனு மாதம் ஆனதும் ரமேஷைப் பார்த்து “ரமேஷ்,நீ இந்த குழந்தையை உன் இஷ்டப் படி வளத்து வா.I don’t care.“ஐ டோன்ட் வாண்ட் டு லிவ் வித் யூ எனி மோர்.ஐ வில் மாரி an American ஆண்ட் லிவ் வித் ஹிம் லைக் an American.பை பை.ஐ ஆம் லீவிங்க் யூ,ஆண்ட் தி சைல்ட் ‘பார் குட்’ “என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு,ரமேஷ் அவளுக்குப் போட்ட மோதிரத்தை கழட்டி ரமேஷ் மேல் எறிந்து விட்டு,ஜூலி தன் துணி மணீகளை எல்லாம் ஒரு ‘சூட் கேஸில்’ எடுத்து க் கொண்டு,கோவமாக அந்த ‘ப்லாட்டை’ விட்டு போய் விட்டாள்.

ஜூலி அவள் ‘சூட்’ கேசை எடுத்துக் கொண்டு போவதையேப் பார்த்துக் கொண்டு இருந்தான் ரமேஷ்.

’நீ என் மேலே வச்சு இருந்த ஆசை எல்லாம்,என்னேயும்,நமக்குப் பொறந்த குழந்தையையும் ஒரு அமொ¢க்கனா மாத்தத் தானா.என் மேலே உனக்கு உண்மையான ஆசை இல்லையா.நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கலே ஜூலி’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டான் ரமேஷ்.

ஜூலி தன் விரலிலே போட்ட மோதிரத்தையும்,ஜூலி கழட்டி எறிந்த மோதிரத்தையும்,தன் ‘ப்¡£ப் கேஸில்’ வைத்துக் கொண்டான் ரமேஷ்.

ரமேஷ் யோஜனைப் பண்ணினான்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை பண்ணி வந்த சாம்பசிவ குருக்கள் வாழ்ந்து வந்த ‘ஸ்ரேஷ்டமான குடும்பத்தில் பிறந்த பையன் தானே ரமேஷ்.அந்தக் ‘ஸ்ரேஷ்டமான குடும்பத்தின் ‘ஜீன்ஸ்’ அவன் உடம்பில் ஓடிக் கொண்டு தானே இருக்கிறது.

ரமேஷ் ‘நெட்டை ஆன்’ பண்ணிப் பார்த்தான்.

பிராமணர்கள் கல்யாண சடங்குகளைப் படித்தான்.’அது வரை ‘தொடாத’ ஒரு பெண்ணின் கையை, முதல் முதலாப் பிடித்து ‘பாணிக்கிஹணம்’ பண்ணிக் கொளவது,’அக்னியை’ மூன்று முறை வலம் வந்து,’அக்னி சாட்சியாக’ வேத பிராமணர்கள் வேத மந்திரங்கள சொல்லி ‘மாங்கலய தாரணம்’ பண்ணிக் கொள்வது,’மாங்கலய தாரண மந்திரத்தின்’ அர்த்தம்,அம்மி மிதித்து,அருந்ததி நக்ஷத்திரம் பார்ப்பது,‘சப்த படி’ செய்வதின் அர்த்தம் எல்லாவற்றையும் படித்தான்.

‘நம்ம பிராமணாக் கல்யாணத்திலே கணவனுக்கும்,மணைவிக்கும் இத்தனை “பந்தம்” இருக்கா’ என்று நினைத்து ஆச்சரியப் பட்டான் ரமேஷ்.’நாம இப்படி எல்லாம் பண்ணிக்காம,’சர்ச்சிலே’ வெறும னே ஒரு மோதிரத்தை மாத்திண்டு ‘கணவன் மணைவி’ ஆனோமே.இது எவ்வளவு பொ¢ய தப்பு. ஒரு பிராமணக் குடும்பத்லே பொறந்த நாம அந்த வழக்கப் படி கல்யாணம் பண்ணிக்காம,இந்த ஊர் வழக் கப் படி கல்யாணத்தே பண்ணிண்டோமே.அது ரொம்ப ‘தப்பு’ இல்லையா’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டான்.

‘நம்ம பிராமண வழக்கப் படி நம்மே கல்யாணம் பண்ணிக்க,நல்ல குலத்லே பொறந்த எந்தப் பிராமண பொண்ணும் ஆசைப் பட மாட்டா.நாம வேறே ஜாதிப் பொண்ணேத் தான் ‘டேட்’ பண்ணீக் கல்யாணம் பண்ணிக்கணும்.அப்படி பண்ணிண்டா,அவ இந்த குழந்தேயே ஏத்துப்பாளோ, மாட்டா ளோ.அவ இந்தக் குழந்தேயே ஏத்துண்டா சரி.ஒரு வேளே அவ இந்த குழந்தேயே ஏத்துக் காட்டா, நாம இந்த குழந்தேயே ஒரு அனாதை இல்லத்லே தானே விட வேண்டி இருக்கும்.எனக்குப் பொறந்த குழந்தேயே ஒரு அனாதை இல்லத்லே விட்டுட்டு,என் சந்தோஷத்துக்காக இன்னொரு கல்யாணம் பண்ணி கொள்றது சரியா.பாவம் இந்தக் குழந்தை.அவன் பண்ண தப்பு என்ன.தப்பு நாம தானே பண் ணோம்.இல்லே நாம ஒரு கல்யாணமே பண்ணீக்காம,இருந்து வந்து,இந்த குழந்தயே வளத்து வறது சரியா.எப்படி பண்ணா சரியா இருக்கும்.நாம கொஞ்சம் வருஷம் கழிச்சு சென்னைக்கு போனா அம்மா அப்பா கிட்டேஎன்ன சொன்னா அவா ஏத்துப்பா’ என்று நினைத்து குழம்பினான் ரமேஷ்.

அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

நாம இந்த கல்யாண ஆசையை மூட்டைக் கட்டி வச்சுட வேண்டியது தான்.நம்ம சதோஷம் இனிமே முக்கியமே இல்லே.நாம இனிமேல் ஒருவரையும் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இந்த குழந்தேயே நாம வளத்து முன்னுக்குக் கொண்டு வரணும்.இது நம் கடமை.ஒரு தடவைப் ‘தப்பு’ப் பண்ணிடோம்.முன்னே யோஜனைப் பண்ணீனா மாதிரி நாம கொஞ்ச வருஷம் போனதும்,இந்தக் குழந்தேயே அழைச்சுண்டு சென்னைக்குப் போய் அம்மா,அப்பா கிட்டே மன்னிப்பு கேட்டு விட்டு,அவாளோட இருந்துண்டு வந்து அவா ரெண்டு பேரையும் சந்தோஷமா வச்சுண்டு வரணும்’ என்று ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தான் ரமேஷ்.

அடுத்த நாளே ரமேஷ்,தன் குழந்தையை எடுத்துக் கொண்டு,‘டல்லஸ்லே’ இருந்த ‘சின்மயா மிஷனுக்கு’ப் போய், அங்கே இருந்த வாத்தியாரிடம் தன் கதையை பூராவும் சொல்லி விட்டு,அவரைப் பார்த்து “வாத்தியார்,நான் என் குழந்தேயே, நம்ம ‘காலாசாரப் படி’ வளத்து வர ஆசைப்படறேன். நீங்கோ என் குழந்தைக்கு ‘சதாசிவம்’ என்கிற பேரை கொஞ்சம் ‘நாமகரணம்’ பண்ண முடியுமா” என்று தன் கைகளை கூப்பி கெஞ்சினான்.

அந்த வாத்தியார் ரமேஷ் மேலே பா¢தாப்பட்டு “உங்க வேதனை எனக்கு நன்னாப் புரியறது. நான் உங்க குழந்தேக்கு நீங்கோ ஆசைப் பட்டது போல ‘நாம கரணம்’ பண்றேன்” என்று சொல்லி விட்டு,ரமேஷ் குழந்தைக்கு ரமேஷ் ஆசைப் பட்டது போல, ‘சதாசிவம்’ என்கிற பெயரை ‘நாம கரணம்’ பண்ணி விட்டு,தக்ஷணையை வாங்கிக் கொண்டார்.

ரமேஷ் குழந்தையை அழைத்துக் கொண்டு ‘ப்லாட்டுக்கு’வந்தான்.அவன் தினமும் ரெண்டு வேளையும் சந்தியாவந்தனம் பண்ணி விட்டு,நிறைய சுவாமி மந்திரங்களை எல்லாம் சொல்லி நமஸ்கா ரத்தைப் பண்ணிக் கொண்டு வந்தான்.

ரமேஷ் காலையிலே ’காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு,வேலைக்கு போகிற வழியிலே இருந்த ஒரு ‘க்ரெச்சீல்’ குழந்தையை விட்டு விட்டு,வேலைக்குப் போய்க் கொண்டு இருந்தான்.சாயங்காலம் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது, குழந்தையை ‘க்ரெச்சில்’ இருந்து ப்லாட்டு’க்கு அழைத்து வந்துக் கொண்டு இருந்தான் ரமேஷ்.

சதாசிவத்துக்கு மூனு வயது ஆனதும் ரமேஷ் அவனை ஒரு ‘நர்ஸா¢’ பள்ளி கூடத்திலே சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வந்தான்.பள்ளி கூடம் முடிந்ததும் சதாசிவம் பள்ளி கூடம் நடத்தி வரும் ‘க்ரெச்சில்’ இருந்து வந்தான்.ரமேஷ் ‘ஆபீஸ்’ வேலை முடிந்ததும்,சதாசிவத்தை வீட்டுக்கு அழைத்து வந்துக் கொண்டு இருந்தான்.

ஒரு நாள் சதாசிவம் ரமேஷைப் பார்த்து “அப்பா,எனக்கு அம்மா இல்லையா” என்று சதாசிவம் கேட்ட போது “சதா,உன் அம்மா,நீ மூனு மாச குழந்தையா இருந்தப்ப,நம்ம ரெண்டு பேரேயும் வீட்டு ட்டுப் போயிட்டா.நீ பொ¢யவன் ஆன பிற்பாடு, நான் உனக்கு எல்லா விவரமும் சொல்றேன்” என்று சொன்னான்.

உடனே சதாசிவம் “Ok dad” என்று சொல்லி விட்டு, ரமேஷ் வாங்கிக் கொண்டு இருந்த ‘க்ரேயான்’ பெட்டியைத் திறந்து ‘ட்ராயிங்க்’ போட ஆரம்பித்தான்.

ஒரு வாரம் ஆனதும் பரமசிவம் ‘பாங்கு’க்குப் போய்,தன் மணைவி சரோஜா ‘பாங்க் அக்கவு ண்டை’ தன் போ¢ல் மாற்றிக் கொண்டார்.அவர் வசித்து வந்த ‘ப்லாட்டையும்’ சரோஜா பெயரில் இருந்து தன் பெயா¢ல் மாற்றிக் கொண்டார்.தான் செய்த இந்த இரண்டு செயலையும் நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு வந்தார்.அவர் கண்கள் குளம் ஆயிற்று.

சரோஜா தன்னை விட்டுப் போன துக்கம் பரமசிவத்தை வெகுவாக பாத்தித்து வந்தது.அவர் அந்த மாதிரி ‘மூடில்’ போகும் போது எல்லாம் சுந்தரமும்,வரதனும் அவருக்குத் தேத்தறவு சொல்லி வந்தார்கள்.பரமசிவத்தை சந்தோஷமாக வைத்துக் கொண்டு வர இருவரும் பாடு பட்டு வந்தார்கள்.
ஒரு மாசம் பரமசிவம் கோர்ட்டுக்கே போகவில்லை.

வரதன் அவா¢டம் வந்து “அத்திம்பேர்,நீங்கோ கோர்ட்டுக்குப் போய் ஒரு மாசத்துக்கு மேலேயே ஆறது.நீங்கோ ஆத்லேயே இருந்தா என் அக்கா ஞாபகம் வந்துண்டே தான் இருக்கும்.அதே நினைச் சிண்டு நீங்கோ வேதனைப் பட்டுண்டே இருப்பேள்.இப்படி ‘பராக்கா’ நீங்கோ கோர்ட்டுக்குப் போய் ஏதாவது ஒரு ‘கேஸை’ வாதாட ஆரம்பிச்சா,உங்க மனசு அதிலே லயிச்சு,அக்கா ஞாபகம் அதிகமா வராம இருக்கும்.நாளேலே இருந்து நீங்கோ கோர்ட்டுக்குப் போய் வாங்கோ” என்று சொன்னான்.

“ஆமாம் மாமா.வரதன் சொல்றது ரொம்ப சரி.நீங்கோ கோர்ட் டுக்கு நாளைலே இருந்து போய் வாங்கோ.உங்களுக்கு நிச்சியமா கொஞ்ச மாறுதலா இருக்கும்”என்று சுந்தரமும் சொன்னதும் “சரி நீங்கோ ரெண்டு பேரும் இவ்வளவு சொல்றேள்.நான் நாளையிலே இருந்து கோர்ட்டுக்குப் போய் வறேன்” என்று ஒத்துக் கொண்டு,அடுத்த நாளில் இருந்து பரமசிவம் கோர்ட்டுக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார் பரமசிவம்.

கோர்ட்டுக்குப் போன பரமசிவத்தை அவர் நண்பர்களும்,ஜூனியர் வக்கீல்களும் ஆசையுடன் வரவேற்றார்கள்.“சார்,உங்க ‘வைப்’ தவறிப் போன துக்கத்திலே,எங்கே நீங்கோ மறுபடியும் கோர்ட்டுக் கு வராம இருந்து விடப் போறீங்களோன்னு,நாங்க பயந்துண்டே இருந்தோம்.இந்த ஒரு மாசத்திலே உங்க உதவி இல்லாம நாங்க ரெண்டு மூனு ‘கேஸை’ தோத்துட்டோம்.நீங்கோ மட்டும் எங்க கூட இருந்து இருந்தா,நாங்க அந்த ‘கேஸ்’களை நிச்சியமா தோத்தே இருக்க மாட்டோம்” என்று பரமசிவத் தின் கைகளைப் பிடித்துக் கொண்டு,வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு பரமசிவம் மிகவும் வருத்தப் பட்டார்.

“இனிமே நீங்கோ எல்லாம் கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ.நான் தினமும் இனிமே கோர்ட்டுக்கு வருவேன்.என் மச்சினன் வரதனும்,சமையல் கார சுந்தரமும் தான் என் கிட்டே ‘நீங்கோ கோர்ட்டுக்குப் போய் ஒரு மாசத்துக்கு மேலேயே ஆறது.நீங்கோ ஆத்லேயே இருந்து வந்தா,உங்களுக் கு சரோஜா ஞாபகம் வந்துண்டே தான் இருக்கும்.அதே நினை ச்சி நீங்கோ வேத¨னைப் பட்டுண்டே இருப்பேள்.‘பராக்கா’ நீங்கோ கோர்ட்டுக்குப் போய் ஏதாவது ஒரு ‘கேஸை’ வாதாட ஆரம்பிச்சா,உங்க மனசு அதிலே லயிச்சு இருக்கும்.சரோஜா ஞாபகம் அதிகமா வராம இருக்கும்.நாளைலே இருந்து நீங்கோ கோர்ட்டுக்குப் போய் வாங்கோ’ன்னு என்னை ‘கம்பெல்’ பண்ணீ அனுப்பி இருக்கா” என்று சொல்லி சிரித்தார் பரமசிவம்.

உடனே பரமசிவத்தின் ஜூனியர் வக்கீல்கள் ”நாங்கோ,உங்க ஆத்துக்கு வந்து உங்க மச்சினரு க்கும்,சமையல் கார மாமாவுக்கும் ரொம்ப ‘தாங்ஸ்’ சொல்லப் போறோம்” என்று சந்தோஷமாகச் சொன்னார்கள்.

அது வரை பொறுமையாக காத்து இருந்த மூன்று பியூன்களும் பரமசிவத்தின் பக்கத்தில் வந்து அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு “சார்,உங்க சம்சாரம் ‘அகாலமா’ இறந்துப் போயிட்டாங்கன்னு கேக்க எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னார்கள்.
‘ஜட்ஜ்’ வந்து தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டு,தன் மூக்கு கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கோர்ட்டை இந்த கோடிக்கு அந்த கோடி ஒரு பார்வைப் பார்த்தார். சீனியர் வக்கீல் பரமசிவம் கோர்ட்டுக்கு வந்து இருப்பதை பார்த்த ‘ஜட்ஜ்’ தன் ‘பியூனை’ அழைத்து பரமசிவத்தை தன் அருகில் வரச் சொன்னார்.‘கோர்ட் பியூன்’ வந்து சொன்னதும்,‘ஜட்ஜ்’ முன்னால் போய் நின்றுக் கொண்டு அவருக்கு வணக்கம் சொன்னார் பரமசிவம்.

‘ஜட்ஜ்’ தன் சீட்டில் இருந்து எழுந்து பரமசிவத்தின் பக்கத்தில் வந்து “மிஸ்டர் பரமசிவம்,நீங்க என்னே மன்னிக்கனும்.உங்க ‘வைப்’ இறந்த அன்னிக்கு எனக்கு நல்ல ஜுரம்.என்னால் உங்க வீட்டு க்கு வர முடியலே” என்று சொன்னதும் பரமசிவம் “பரவாயில்லை சார்.நான் உங்களுக்கு ஜுரம் என்கிற சமாசாரத்தே கேள்விப் பட்டேன்.இப்ப நீங்க சுகமா இருக்கீங்களா” என்று கேட்டார்.

“ஜுரம் தேவலை ஆன பிற்பாடு,உடனே நான் கோர்ட்டுக்கு வராம ஒரு வாரம் ‘ரெஸ்ட்’ எடுத்து கிட்டு இருந்தேன்.இன்னிக்கு தான் கோர்ட்டுக்கு வந்து இருக்கேன்” என்று சொல்லி சிரித்தார் ஜட்ஜ்.

பரமசிவம் தனக்கு புதிதாக வந்த ‘கேஸ்’களை எல்லாம் எடுத்து வாதாடி ஜெயித்து வந்தார். அவர் ஜூனியர்களுக்கு எல்லாம் மிகவும் சதோஷமாக இருந்தது.

பத்து வருடங்கள் ஓடி விட்டது.பரமசிவதிற்கு அறுபத்தி ஐந்து வயது ஆயிற்று.

அவருக்கு ‘கோர்ட்டில்’ மணிக் கணக்காக நின்று வாதாடி வந்ததால்,அவருக்கு ரெண்டு முட்டி யிலும் வலி வர ஆரம்பித்தது.அவர் உடனே தன்னுடைய ‘பாமிலி’ டாகடா¢டம் போய்,தன்னுடைய முட்டி வலியைப் பற்றி சொன்னார்.

டாக்டர் பரமசிவத்தின் ரெண்டு முட்டியையும் ‘எக்ஸ் ரே’ எடுத்துப் பார்த்து விட்டு அவரைப் பார்த்து “சார்,உங்க ரெண்டு முட்டி எலும்பும் ரொம்ப தேஞ்சுப் போய் இருக்கு.இதுக்கு ரெண்டு கார ணங்கள் இருக்கு.ஒன்னு உங்களுக்கு வயசு ஆறது.’ஏஜிங்க் ப்ராப்லெத்தால்’ கூட இருக்கலாம்.இரண் டாவதாக,நீங்க ரொம்ப நேரம் நின்னுக் கிட்டு ‘கோர்ட்டிலே’ கேஸ்களே வாதாடி வரும் போது,நீங்க உங்களுக்குத் தொ¢யாமலே உங்க ரெண்டு முட்டிக்கு நிறைய ‘ஸ்ட்றேயின்’க் குடுத்து வந்து இருக் கீங்க” என்று சொன்னார்.

“அப்போ நான் என்ன பண்ணட்டும் டாக்டர்.இந்த வலியோடத் தான் நான் இருந்துண்டு வரணுமா” என்று கேட்டார் பரமசிவம்.”நீங்க வேணும்ன்னா ரெண்டு முட்டியையும் ‘முட்டி மாற்றல் சிகிச்சைப்’ பண்ணி கிட்டுப் பாருங்கோ.அப்படி பண்ணா உங்களுக்கு வலி இல்லாம இருக்கும்” என்று சொன்னார் டாக்டர்.

பரமசிவம் டாக்டருக்கு ‘பீஸை’க் கொடுத்து விட்டு காரில் ‘ப்லாட்டு’க்கு வந்தார்.

அவர் யோஜனைப் பண்ணீனார்.

‘இனிமே நான் ‘முட்டி மாற்றல் சிகிச்சை’ எல்லாம் பண்ணீண்டு ‘கோர்ட்டு’க்குப் போய் ‘கேஸ்’ களே வாதாடி யாருக்கு பணம் சேத்து வக்கணும்.என்னோட பணம்,சரோஜாவோட பணம்,சரோஜா அம்மா அப்பாவோட பணம் எல்லாமே வெள்ளமா இருக்கு.ரமேஷ் என்னமோ நிச்சியமா மறுபடியும் அமொ¢க்கவே விட்டுட்டு நம்ம கிட்டே வரப் போறதில்லே.நாம ‘மண்டேயேப் போட்டா’, யார் இத்த னை பணத்தே அனுபவிச்சுண்டு வரப் போறா.நாம் பேசாம ஆத்லே இருந்துண்டு ரெண்டு வேளே சந்தியாவந்தனத்தே பண்ணீண்டு,அந்த சுவாமியே வேண்டிண்டு வரலாம்.போற வழிக்காவது நமக்கு கொஞ்சம் புண்னியம் கிடைக்கும்’ என்று நினைத்து.தன் முட்டிக்கு வைத்தியம் ஒன்றும் பண்ணிக் கொள்ளாமல் இருந்து விட்டார் ராமசாமி.

அடுத்த நாள் பரமசிவம் “சுந்தரம்,வரதா,எனக்கு ரெண்டு கால் முட்டியும் ரொம்ப நேரம் நின்னு ண்டு இருந்தா வலிக்கறது.நான் டாக்டர் கிட்டேப் போய் என் கால் முட்டியே காட்டினேன்.அவர் ‘எக்ஸ் ரே’ எடுத்து பாத்துட்டு,‘எனக்கு வயச்சியிடுத்து.ரெண்டு முட்டி எலும்பும் ரொம்ப தேஞ்சுப் போயிடுத்து.அதான் உங்க முட்டி வலிக்கறது’ன்னு சொன்னார்.அதனால் நான் நாளேலே இருந்து கோர்ட்டுக்குப் போகாம,ஆத்லே தான் இருந்துண்டு வரப் போறேன்” என்று சொன்னார்.

உடனே சுந்தரம் “ரொம்ப நல்லது மாமா.நீங்கோ ஆத்லேயே இருந்துண்டு வாங்கோ.வேளா வேளைக்கு நீங்கோ நன்னா சாப்பிட்டுண்டு வந்து, உங்க ரெண்டு காலுக்கும் நிறைய ‘ரெஸ்ட்’ குடுத்துண்டு வாங்கோ” என்று சொன்னார்.

“சுந்தரம் மாமா சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’அத்திம்பேர்.இனிமே நீங்கோ ‘கோர்ட்டு’க்கு எல்லாம் போய் ரொம்ப நேரம் எல்லாம் நின்னுண்டு,வாதாடி எல்லாம் வர வேணாம்.ஆத்லேயே இருந்து வந்து உங்க முட்டிக்கு நிறைய ‘ரெஸ்ட்’ குடுத்துண்டு வாங்கோ.அப்படி’ரெஸ்ட்’ குடுத்தேள்னா,உங்க முட்டி வலி கொஞ்ச குறைவா இருக்கும்.நீங்கோ சாயங்காலத்லே கொஞ்சம் நடந்துண்டு வரலாம்” என்று சொல்லி சமையல் கார மாமா சுந்தரம் சொன்னதை ஆமோதித்தான் வரதன்.

இரண்டு நாள் கழித்து மெல்ல பரமசிவம் கோர்ட்டுக்குப் போய், முட்டி வலியைப் பொறுத்துக் கொண்டு,தன்னிடம் இருந்த பழைய ‘கேஸ்’களே எல்லாம் ரெண்டு மாசம் வாதாடி வந்தார்.அவைக ளை எல்லாம் ஜெயித்த பிறகு,அவர் புதியதாக எந்த ‘கேஸை’யும் எடுத்து கொள்ளவில்லை.

பரமசிவம் தன்னுடைய சீனியர் ‘அஸிஸ்டெண்ட்’ ராமநாதனைக் கூப்பிட்டு “ராமநாதா, நான் இனிமே எந்த புது ‘கேஸை’யும் எடுத்துக்கப் போறதில்லே.எனக்கு ரெண்டு முட்டியிலும் ரொம்ப வலி இருந்துண்டு வறது.நான் டாக்டர் கிட்டே காட்டினேன்.அவர் என் ரெண்டு முட்டி எலும்பும் ரொம்ப தேஞ்சுப் போய் இருக்குன்னு சொல்லிட்டார்.அதனால இனிமே நான் கோர்ட்டுக்கு வராம ஆத்லேயே ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வரப் போறேன்.இனிமே வர புது ‘கேஸ்’களை எல்லாம்,நீ எடுத்துண்டு வாதாடி ஜெயிச்சுண்டு வா.என் ஆசீர்¢வாதம் உனக்கு என்னேக்கும் உண்டு” என்று சொன்னார்.

“சார்,நீங்கோ இல்லாம நான் எப்படி கஷ்டமான ‘கேஸ்’களே ஜெயிக்கப் போறேன்னு தொ¢யலே. நீங்கோ ஆத்லே இருந்து வந்து,உங்க ரெண்டு முட்டிக்கும் நல்ல ‘ரெஸ்ட்’ குடுத்துண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு,பரமசிவம் கார் வரை வந்து அவரை வழி அனுப்பினார் ராமநாதன்.

அடுத்த நாளில் இருந்து பரமசிவம் கோர்ட்டுக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்து, தன் ரெண்டு முட்டிக்கும் நல்ல ‘ரெஸ்ட்’ கொடுத்துக் கொண்டு வந்தார்.

காலிங்க் பெல் அடித்தது.

பரமசிவம் மெல்ல எழுத்துப் போய் வாசல் கதவைத் திறந்தார்.வழக்கத்துக்கு விரோதமாக வரதன் நின்றுக் கொண்டு இருந்தான்.பரமசிவம் “வாடா வரதா,நீ வந்துட்டு இருக்கே.இந்த சுந்தரத் தே இன்னும் காணோமே.அவன் வந்தா தானேடா எனக்குக் ‘காபி’ கிடைக்கும்” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

உடனே வரதன் “நீங்கோ கவலைப் படாதீங்கோ.சுந்தரம் மாமா எனக்கு ‘காபி’ எப்படி போட றது என்பதையும்,சமையல் பண்றது எப்படின்னு சொல்லிக் குடுத்து இருக்கார்.நான் இன்னிக்கு உங்களுக்கு சுந்தரம் மாமா போட்டுக் குடுக்கற மாதிரி ‘காபி’ யேப் போட்டுத் தறேன்” என்று சொல்லி
விட்டு சமையல் ‘ரூமு’க்குப் போனான்.

”வரதா,நீ எனக்குக் ‘காபி’ப் போட்டுத் தறேன்னு சொல்லிட்டு ஒரு கஷாயத்தேப் போட்டு தந்துடப் போறே.எனக்கு பயமா இருக்கேடா” என்று பரமசிவம் சொன்னதும் ”இல்லே அத்திம்பேர், நான் சுந்தரம் மாமா போட்டுத் தர மாதிரியே ‘காபி’யேப் போட்டு தறேன்” என்று சொன்னான் வரதன்.
வரதன் போட்ட‘காபி’ யே குடித்தார் பரமசிவம்.வரதன் போட்ட ‘காபி’, சுந்தரம் போடும் ‘காபி’ மாதிரியே இருந்தது,உடனே அவர் “வரதா,நீ போட்ட ‘காபி’,சுந்தரம் போடற ‘காபி’ மாதிரி யே நன்னா இருந்தது.நீ இப்போ ஒரு நல்ல சமையல் காரனா ஆயிட்டே” என்று சொன்னதும் “ரொம்ப ‘தாங்ஸ்’ அத்திம்பேர்.எங்கே நான் போட்ட ‘காபி’ நன்னா இல்லேன்னு சொல்லப் போறேளோன்னு நான் பயந்துண்டு இருத்தேன்” என்று சொல்லி சிரித்தான் வரதன்.

இரண்டு நிமிடத்துக்கு எல்லாம் பரமசிவத்திற்கு ஒரு ‘போன்’ வந்தது.

பரமசிவம் அந்த ‘போனை’ எடுத்துப் பேசினார்.”மாமா,நான் சுந்தரம் பேசறேன்.நான் உங்க ஆத்து சமையல் வேலேக்கு வர அம்மா கிட்டே சொல்லிண்டு போகலாம்ன்னு நினைச்சு அம்மவை ரெண்டு தரம் கூப்பிட்டேன்.ஆனா அம்மா கண்ணே தொறக்காமப் படுத்துண்டே இருந்தா.நான அம்மா உடம்பே தொட்டுப் பாத்தேன்.அம்மா உடம்பு ‘ஜில்’ன்னு இருந்தது.அவ அசையாம படுத்து ண்டு இருந்தா.அவ மூச்சு நின்னுப் போயிடுத்து” என்று அழுதுக் கொண்டே சொன்னார் சுந்தரம்.

”சுந்தரம்,நீ கவலைப்படாதே.உங்க அம்மா இந்த ஆத்லே நிறைய சா£ர உபகாரம் பண்ணீண்டு வந்து இருக்கா.சரோஜாவும்,வரதனையும் சின்ன வயசிலே ஜாக்கிறதையா பாத்துண்டு வந்து இருக்கா. நிறைய வருஷம் சமையல் பண்ணீண்டு வந்து இருக்கா.ஒரு நாள் கூட லீவு போடாம் இந்த ஆத்துக்கு காத்தாலேயே வந்து சமையலை எல்லாம் பண்ணீண்டு,என் அத்திம்பேரோ,அக்காவோ ‘ஆபிஸ்’லே இருந்து ஆத்துக்கு வந்தப்புறமா,தான் ஆத்துக்குப் போயிண்டு இருந்தா.நான் வரதன் கிட்டே ஒரு லஷ ரூபாய் குடுத்து அனுப்பறேன்.நீ உங்க அம்மாவுக்கு பதி மூனு நாள் காரியங்களையும் சிரத்தை யா பண்ணீண்டு வா.உங்க ஆத்தே ‘புண்யாவசனம்’ பண்ணிட்டு, அப்புறமா எங்காத்துக்கு சமையல் வேலேக்கு வந்தா போறும்” என்று சொன்னார் பரமசிவம்.

உடனே சுந்தரம் அழுதுக் கொண்டே” ரொம்ப தாங்க்ஸ் மாமா” என்று சொல்லி விட்டு ‘போனைக் கட்’ பண்ணினார்.

வரதன் பேர்லே லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘செக்கை’ எழுதிக் கொடுத்து,வரதனைப் பார்த்து “வரதா, நீ ‘பாங்க்’ தொறந்ததும்,ஒரு லக்ஷ ரூபாயை வாங்கிண்டு போய், சுந்தரத்துக்கு கிட்டே குடுத்துட்டு வா.போற வழிலே ஒரு ரோஜாப் பூ மாலையே வாங்கிண்டு போய்,அந்த மாமி ‘பூத உடமபுக்குப் போட்டுட்டு வா” என்று சொல்லி,அவர் எழுதின செக்கை வரதனிடம் கொடுத்தார் பரமசிவம்.

பரமசிவம் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்டு போய் ‘பாங்க்’ திறந்ததும் ஒரு லக்ஷ ரூபாயை ‘ட்ரா’ பண்ணி,போகிற வழியிலே ஒரு ரோஜாப் பூ மாலையை வாங்கிக் கொண்டு,சுத்தரம் வீட்டுக்குப் போய்,சுந்தரத்திடம் லக்ஷ ரூபாயைக் கொடுத்து விட்டு,ஹாலில் ‘படுக்க’ வைத்து இருந்த சமையல் கார மாமியின் ‘பூத உடம்பு’ மேலே போட்டு விட்டு,கையைக் கூப்பி வணங்கினான் வரதன்.

அடுத்த பதி மூன்று நாட்களுக்கும் பரமசிவத்தின் வீட்டில் சமையல் வேலையை பண்ணிக் கொண்டு வந்தான் வரதன்.வரதன் செய்த சமையலை மெல்ல பொறுத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு வந்தார் பரமசிவம்,

பதி மூன்று நாள் காரியங்கள் ஆனவுடன்,சுந்தரம் மறுபடியும் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து, ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார். வரதன் வாசல் கதவைத் திறந்தான்.சுந்தரம் கண்களில் கண்ணீர் தளும்ப நின்றுக் கொண்டு இருந்தார்.

“மாமா,நீங்கோ வரதன் கிட்டே குடுத்து அனுப்பிய லக்ஷ ரூபா ரொம்ப உதவியா இருந்தது. எங்க ஆத்து வாத்தியார்,என் அம்மா ‘தகனத்துக்கே’ இருபதாயிரம் குடுக்கணும்ன்னு கண்டிப்பாச் சொன்னார்.அப்புறமா மீதி பன்னண்டு நாள் காரியங்களுக்கும் ஒரு லக்ஷ ரூபாய் கேட்டார்.நான் அவர் கிட்டே ‘வாத்தியார் என் கிட்டே மீதி எண்பதாயிரம் ரூபா இருக்கு.அதே வாங்கிண்டு,நீங்கோ மீதி பன்னண்டு ‘காரியங்களையும்’ பண்ணி குடுங்கோ’ன்னு கெஞ்சிக் கேட்டதும்,அவர் ‘நான் பண்றேன். ஆனா,நீங்கோ எனக்கு எப்போ முடியறதோ,அப்போ மீதி இருபதாயிரம் ரூபாயே எனக்குத் தறணும்’ ன்னு கண்டிப்பா சொன்னார்.நான் நிச்சியமாத் தறேன்னு ஒத்துண்ட அப்புறம் தான்,வாத்தியார் மீதி நாள் காரியங்களையும்,பதிமூனாம் நாள் ‘புண்யாவசனத்தையும்’,’சுபத்தையும்’ பண்ணி முடித்தார்” என்று கண்களில் கண்ணீருடன் சொன்னார் சுந்தரம்.

உடனே பரமசிவம் “அப்படியா சுந்தரம்.நான் உனக்கு இப்போ ஒரு இருபாதாயிரம் ரூபாய்க்கு உன் பேர்லே ஒரு செக்கேத் தறேன்.நீ ‘பாங்கு’க்குப் போய்,அந்த இருபதாயிரம் ரூபாயே வாங்கிண்டு உங்க வாத்தியார் கிட்டே குடுத்துடு” என்று சொன்னார்.

“ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாமா.உங்களுக்கு உண்மையிலே ரொம்ப பொ¢ய மனசு.என் அம்மா பேர்லே நீங்கோ இத்தனை ‘அபிமானம்’ வச்சு இருக்கறதேப் பாத்தா,எனக்கு உடம்பு பூராவும் சிலுக்கறது. உங்களே மாதிரி நல்லவா இந்த உலகத்லே இன்னும் இருக்கிறதாலேத் தான்,காலா காலத்லே மழை பெய்யறது” என்று சொல்லி பரமசிவம் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்டார் சுந்தரம்.

சுந்தரம் வாத்தியாரைப் பற்றி சொன்னதைக் கேட்ட வரதனுக்கு கோவம் வந்தது.

“அத்திம்பேர்,இந்த வாத்தியார்கள் எல்லாம் என்னேக்கு இந்த மாதிரி ஒரு ‘அபர காரியத்துக்கு’ பணம் ‘டிமான்ட்’ பண்றதே குறைச்சுக்கிறாளோ,அன்னக்குத் தான் ஏழே பிராமணா எல்லாம்,அவ அம்மா,அப்பாவுக்கு ‘பதி மூனு நாள் காரியங்களே’ சிரத்தையா பண்ண முடியும்.அவா குறைச்சுக்காம இருந்து வந்தா,அந்த ஏழே பிராமணா எல்லாம் அவ அம்மாவுக்கோ,அப்பாவுக்கோ வெறுமனே ஒரு ‘தகனத்தே’ப் மட்டும் பண்ணீட்டு,மத்த பன்னண்டு நாள் காரியங்களே பண்ணாம விட்டுடுவா.ஒரு பிராமணானாப் பொறந்த எனக்கு இதே சொல்லவே ரொம்ப கஷ்டமா இருக்கு.என்ன பணறது.அந்த வாத்தியார்களுக்கு அவ்வளவு பணத்தாசை இருக்கு” என்று சொல்லி வருத்தப் பட்டான் வரதன்.

உடனே பரமசிவம் “வாத்தியார்கள் ‘சுப’ காரியங்களுக்கு பணம் கொஞ்சம் கூட கேக்கலாம்.அது தப்பு இல்லே.அவா சந்தோஷமா பண்றதாலே,அவ அதேப் பத்தி கவலைப் படாம் குடுப்பா.ஆனா இந்த ‘அபர’ காரியங்களே பண்றவா துக்கத்லே பண்றா.அவா கிட்டே வாத்தியார்கள் ரொம்ப ‘கண்டிஷ னா’ ‘இவ்வளவு குடுங்கோ’’அவ்வளவு குடுங்கோன்னு’ எல்லாம் கேக்கக் கூடாது.அது ரொம்ப தப்பு. இந்த விஷயத்லே நான் வரதன் சொல்றதே ரொம்ப ‘சரி’ன்னு தான் சொல்லுவேன்.வாத்தியார்கள் இந்த ‘கஷ்டத்தே’ கொஞ்சம் அனுசரிஞ்சுண்டு போகணும்.ஆனா அவா பண்றது இல்லே.எனக்கும் சுந்தரம் சொன்னதைக் கேட்டப்ப கொஞ்சம் வருத்தமாத் தான் இருந்தது” என்று ஒரு கோர்ட்டில் ஒரு ‘லாயரை’ப் போல சொன்னார்.

பரமசிவம் வீட்டிலேயே இருந்து வந்தார்.சாயங்காலம் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு, தன் மச்சினன் வரதனை துணைக்கு அழைத்துக் கொண்டு போய்,காரில் நங்க நல்லுரில் இருந்த கோவில்களுக்கு எல்லாம் போய் ‘வாக்கிங்’க் ஸ்டிக்கை’ வைத்துக் கொண்டு,மெல்ல நடந்துப் போய்,
சுவாமிக்கு அர்ச்சனைப் பண்ணி,நன்றாக வேண்டிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.

இன்னும் இரண்டு வருடம் ஆனதும் பரமசிவத்திற்கு முடி வலி அதிகமாக ஆகி விட்டது. அவரால் ‘வாக்கிங்க் ஸ்டிக்கை’ வைத்துக் கொண்டு நடக்க முடியவில்லை.அதனால் அவர் எங்கும் போகாமல் வீட்டிலே ஒரு ‘வாக்கரை’ வைத்துக் கொண்டு நடந்துக் கொண்டு வந்தார்.

ரமேஷ் தன் பையன் சதாசிவத்திற்கு பதினோறு வயது ஆனதும்,’சின்மயா மிஷன்’ வாத்தியா ரை ஏற்பாடு பண்ணி,அவனுக்குக் கிரமமாக ‘உபனயனம்’ போட்டான்.அன்றில் இருந்து சதாசிவம் அப்பாவுடன் ரெண்டு வேளையும் தவறாமல் ‘சந்தியாவந்தனம்’ பண்ணீ வந்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *