அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 3,139 
 
 

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12

ஒரு மாசம் ஆனதும் சிவபுரி ‘நர்சிங்க் ஹோமில்’ ராதாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

விஷயம் கேள்விப் பட்டு சாம்பசிவனும் காமாக்ஷியும் கடைக்குப் போய், பிறந்த ஆண் குழந்தை க்குப் போட நாலு குழந்தை ‘ஷர்ட்டு’களை வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

ராமசாமியும்,சாம்பசிவனும்,காமாக்ஷியும் சிவபுரிக்குப் போய், குழந்தைக்கு ‘தொட்டில் போடும் விழாவிலும்’,அடுத்த நாள் வாத்தியார் நடத்தின ‘நாமகரணம்’ விழாவிலும் கலந்துக் கொண்டு, அவர் கள் வாங்கி வந்த நாலு குழந்தை ‘ஷர்ட்டு’ களை ராதாவிடம் கொடுத்து விட்டு,குழந்தையை மூவரும் ஆசீர்வாதம் பண்ணி விட்டு,சாப்பிட்டு விட்டு சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள்.

சுந்தரம் தம்பதிகள் அந்தக் குழந்தைக்கு ‘ராகவன்’ என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.

நான்கு வருடங்கள் ஆனது.

அன்று இரவு காமாக்ஷி தன் கணவா¢ன் காதுகளில் ரகசியமாக தன் உடம்பில் ஏற்பட்டு இருக்கும் ‘மாறுதலை’ச் சொன்னாள்.

“காமு,நாளைக்கு என் ‘டுயூட்டி’ முடிஞ்சதும்,நான் உன்னே ஒரு ‘லேடி’ டாக்டர் கிட்டே காட்ட றேன்.அவ உன்னே ‘செக் அப்’ பண்ணிட்டு சொல்லட்டும்” என்று சாம்பசிவன் சந்தோஷப் பட்டுச் சொன்னார்.

அடுத்த நாளே சாம்பசிவன் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு,காமாக்ஷியை அவர்கள் வசித்து வந்த தெருவிலேயே இருந்த ஒரு ‘லேடி டாக்டா¢டம்’ அழைத்துக் கொண்டு காட்டினான்.அந்த ‘லேடி’ டாக்டர் காமாக்ஷியை நன்றாக ‘செக் அப்’ பண்ணி விட்டு,’டெஸ்டு’கள் எல்லாம் பண்ணினார்.

பிறகு சாம்பசிவனைப் பார்த்து ”கங்கிராஜுலேஷன்ஸ் சார்.இவங்க ‘முழுகாம’ இருக்காங்க.இது பேருக்கு மூனாவது மாசம்.நான் எழுதித் தரும் மாத்திரைகளை இவங்களுக்குக் குடுத்து விட்டு, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ‘செக் அப்’புக்கு அழைச்சுக் கிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு காமாக்ஷியைப் பார்த்து “இனிமே நீங்க ரொம்ப மாடிப் படி எல்லாம் ஏறக் கூடாது.ரொம்ப ‘வெயிட்டும்’ தூக்கக்கூடாது” என்று சொன்னாள்.

காமாக்ஷி வெக்கப் பட்டுக் கொண்டே “சா¢ங்க் டாக்டர்.நீங்க சொன்னா மாதிரி நான் இருந்து வறேன்”என்று சொன்னாள்.

டாக்டர் தன் ‘பீஸையும்’ காமாக்ஷிக்கு பண்ண ’டெஸ்டுகள்’ ‘பீஸையும்’ சொன்ன பிறகு அந்த பணத்தைக் கொடுத்து விட்டு,காமாக்ஷியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு,வரும் வழியில் ஒரு மருந்துக் கடையிலே டாகடர் எழுதிக் கொடுத்த மாதிரைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான் சாம்பசிவன்.

வீட்டுக்கு வந்ததும் சாம்பசிவன் தன் செருப்பை கழட்டி வைத்து விட்டு,தன் அப்பாவிடம் காமாக்ஷி ‘கர்பமாக’ இருக்கும் சந்தோஷ சமாசாரத்தைச் சொன்னான்

ராமசாமி காமாக்ஷியைப் பார்த்து ”நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு காமாக்ஷி.சீக்கிரமா ஒரு பேரனைப் பெத்துக் குடுத்து என் மடியிலே விளையாட விடு” என்று சொன்னதும்,காமாக்ஷி தன் செருப்பை கழட்டி வைத்து விட்டு “உங்க வாய் முஹ¥ர்த்தம் பலிச்சு,அப்படியே ஆகட்டும்ப்பா” என்று வெட்கப் பட்டுக் கொண்டே,கால்களில் போட்டுக் கொண்டு இருந்த செருப்பைக் கழட்டி வைத்து விட்டு,கால்களைக் கழுவிக் கொண்டு சமையல் ரூமுக்குப் போனாள்.

விஷயம் கேள்விப் பட்டு மரகதமும்,மஹா தேவ குருக்களும் சந்தோஷப் பட்டார்கள்.

இருவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, ராமசமி இடமும் சாம்பசிவன் இடமும் சொல்லிக் கொண்டு,காமாக்ஷியை ஒரு வாரத்திற்கு தங்கள் வீட்டு அழைத்துக் கொண்டு போய்,அவளுக்கு வாய்க்குப் பிடித்த சமையலை எல்லாம் பண்ணிப் போட்டு,பிடித்த பக்ஷணங்களை எல்லாம் பண்ணிக் கொடுத்தாள் மரகதம்.

ஒரு வாரம் ஆனதும் மதகதம் காமாக்ஷியை அவள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டாள்.

சாம்பசிவன் அந்த ‘லேடி’ டாக்டர் சொன்னது போல் காமாக்ஷியை ரெண்டு மாதத்திற்கு ஒரு தடவை ‘செக் அப் புக்கு அழைத்துப் போய் கட்டிக் கொண்டு வந்தார்.

காமாக்ஷிக்கு ஐந்து மாதம் ஆனதும் அந்த ‘லேடி’டாக்டர் காமாக்ஷியைப் பார்த்து “உங்களுக்கு மாசம் ஆயி கிட்டு இருக்கு.நீங்க சாயங்காலத்திலே ஒரு மணி நேரமாவது மெல்ல நடந்து வரணும். எப்பவும் சும்மா உக்காந்துக் கிட்டு இருக்கக் கூடாது” என்று சொல்லி தன் ‘பீஸை’ வாங்கிக் கொண்ட தும்,சாம்பசிவன் காமாக்ஷியை ‘லேடி டாக்டர் கிளினிக்கில்’ இருந்து தன் வீட்டு நடத்தியே அழைத்து வந்தார்.

சாம்பசிவன் அடுத்த நாளே சமையலுக்கு ஒரு சமையல் கார மாமியை ஏற்பாடு பண்ணினார்.

காமாக்ஷிக்கு ஏழு மாசம் ஆனதும் மரகதமும்,மஹாதேவ குருக்களும் காமாக்ஷியின் வீட்டுக்கு வந்து ராமசமி இடமும்,மாப்பிளை இடமும் சொல்லி விட்டு காமாக்ஷியை தங்கள் வீட்டு அழைத்து வந்தார்கள்.

மரகதம் காமாக்ஷி வாய்க்குப் பிடித்த சமையலையும்,பக்ஷணங்களையும் பண்ணிக் கொடுத்து, காமாக்ஷியை சாப்பிடச் சொல்லி சந்தோஷப் பட்டாள்.மஹா தேவ குருக்களும்,மரகதமும் காமாக்ஷி யைப் பார்த்து “சீக்கிரமா,ஒரு தங்க விக்ரகம் போல ஒரு பேரனை எங்களுக்குப் பெத்துக் குடு காமு” என்று சொன்னார்கள்.

உடனே காமாக்ஷி தன் மாமனாரிடம் சொன்னது போலவே அம்மாவையும்,அப்பாவையும் பார்த்து “உங்க ரெண்டு பேரோட வாய் முஹ¥ர்த்தம் பலிக்கட்டும்.என் மாமனாரும் நான் டாக்டர் கிட்டே காட்டிட்டு ஆத்துக்கு வந்தப்ப,இதேத் தான் என் கிட்டே சொன்னார்” என்று வெட்கப் பட்டுக் கொண்டேசொன்னாள்.

“மரகதம்,நானும்,நீயும், காமாஷியின் மாமனாரும் காமாஷிக்கு ஒரு பேரன் பொறக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டு அவ கிட்டே சொல்றோம்.ஆனா அந்த பகவான் என்ன நினைச்சுண்டு இருக் காறோ.அவர் இஷடப் படி தான் எல்லாம் நடக்கும்”என்று வேதாந்தாமாக சொன்னார் மஹா தேவ குருக்கள்.

“ஆமாண்ணா,அந்த பகவான் நாம கேட்டதே எல்லாம் நமக்குத் தந்துண்டு இருக்காரா என்ன. இல்லையே.நாம கூட அவரே காமாக்ஷிக்கு அப்புறமா ஒரு பிள்ளேக் குழந்தே வேணும்ன்னு, ரொம்ப வேண்டிண்டு வந்தோம்.ஆனா நமக்கு காமாக்ஷிக்கு அப்புறமா குழந்தையே பொறக்கலையே. இல்லையா சொல்லுங்கோ” என்று சொல்லி விட்டு கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் மரகதம்.

“ஆமாம் மரகதம்,எல்லாத்துக்கும் தெய்வ ‘அனுக்கிரஹம்’ இருக்கணும்.நமக்கு காமாக்ஷிக்கு அப்புறமா குழந்தே இல்லே பொறக்க அவர் ‘அனுக்கிரஹம்’ இல்லையே.இதே ஏத்துண்டு வர நாம நம்ம மனசே பக்குவப் படுத்திண்டு வரணும்”என்று வேதாந்தமாக சொன்னார் மஹா தேவ குருக்கள்.

ஒரு வாரம் ஆனதும் மரகதம் காமாக்ஷியை அழைத்து கொண்டு அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்தாள் மரகதம்.

ஏழாவது மாசம் மஹாதேவ குருக்களும்,மரகதமும் தங்கள் ஒரே பெண்ணுக்கு ஒரு ஜதை கருகு மணி வளையலும்,ஒரு ஜதை வைர வளையலும் வாங்கினார்கள்.

மரகதம் குருக்களைப் பார்த்து “ஏண்ணா,நான் ஒன்னுக் கேட்டா,நீங்கோ மறுக்காம பண்ணு வேளா” என்று கேட்டதும் குருக்கள் “இப்படி மொட்டையாக் கேட்டா, நான் என்ன பதில் சொல்ல முடியும்.விஷயத்தே இன்னதுன்னு விவரமாச் சொன்னா தானே,என்னால் பண்ண முடியுமா இல்லை யான்னு சொல்ல முடியும்.நீ பூர்வ பீடிகை போடறதே நிறுத்திட்டு,விஷயத்தே என் கிட்டே நோ¢டையா சொல்லு மரகதம்” என்று கொஞ்சம் கண்டிப்பானக் குரலில் சொன்னார்.

“நான் என்ன சொல்ல வந்தேன்னா,நாம காமுக்கு பண்ணப் போற பண்டிகை இது ஒன்னு தான்.இதுக்கு அப்புறமா சீமந்தம்,பிரசவம்,தொட்டில் போடற ‘பன்ஷன்’ ‘நாமகரணம்’ எல்லாம் மாப்பிள்ளை ஆத்லே தான் நடக்கப் போறது.அதனால்லே,நாம இந்த ‘வளைக் காப்பை’ சுபமா நம்ம ஆத்லே பண்ணீட்டு,வளைக் காப்புக்கு வந்த எல்லா பொம்ம்ணாட்டிகளுக்கும், அவ கூட வந்த எல்லோருக்கும் நம்ம ஆத்துக்கு பக்கத்லே இருந்த ஒரு சின்ன சத்திரத்லே,ஒரு சமையல் காரரை ஏற்பாடு பண்ணி,வடை பாயச்சதோடு ஒரு கல்யாண சாப்பாட்டைப் போடலாமா” என்று தயங்கிக் கொண்டே கேட்டாள் மரகதம்.

உடனே மஹா தேவ குருக்கள் “இவ்வளவு தானே.பண்ணிட்டாப் போச்சு.நீ நிம்மதியா இருந்துண்டு வா.நான் அதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்றேன்” என்று சொன்னார்.

காமாக்ஷிக்கு ‘வளைக் காப்பு’ வச்சு இருந்த முஹூர்த்த அன்று தன் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சத்திரத்தே ‘புக’ பண்ணி விட்டு,சிதம்பரத்திலே இருந்த ஒரு பிரபல நல்ல சமையல் காரரைக் கூப்பீட்டு “நீங்கோ,என் பொண்ணு ‘வளைக் காப்பு’க்கு அன்னிக்கு,சுமார் நூரு பேருக்கு நுனி வாழை இலையே போட்டு,வடை,பாயசத்தோடு,அமக்களமா கல்யாண சாப்பாடு சமையல் பண்ணிப் போடுங் கோ” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

உடனே அந்த சமையல் காரர் ஒத்துக் கொண்டு “அதுகென்னா மாமா,நான் எல்லா ஏற்பாடும் பண்ணி,அன்னிக்கு நூரு பேருக்கு கல்யாண சமையலை பிரமாதமா பண்ணிப் போடறேன்” என்று சொல்லி விட்டு மஹா தேவ குருக்கள் இடம் இருபதாயிரம் ஆயிரம் ரூபாயை ‘அட்வான்ஸாக’ வாங்கிக் கொண்டுப் போனார்.

மஹா தேவ குருக்கள் ஒரு பெரிய சத்திரத்தில் தான் பண்ணி இருக்கும் கல்யாண சமையல் ஏற்பாட்டை மரகதத்ததிடம் சொன்னார்.மரகதம் மிகவும் சந்தோஷப் பட்டாள்.
‘வளை காப்பு’ வைத்து இருந்த நல்ல முஹ¥ர்த்த நாளில்,மஹா தேவ குருக்கள் தம்பதிகள், ராமசாமியையும்,மாப்பிள்ளையும் ‘வளைக் காப்பு’க்கு வரச் சொல்லி அழைத்து விட்டு வந்தார்.
சிவபுரிக்குப் ‘போன்’ பண்ணி ராதாவையும்,சுந்தரத்தையும்,கணேசன் தம்பதிகளையும் காமாக்ஷியின் ‘வளை காப்பு’க்கு வரச் சொன்னார் ராமசாமி.மஹா தேவ குருக்களும்,மரதமும் எல்லா உறவுக்காரர்களையும்,நண்பர்களையும் காமாக்ஷியின் ‘வளை காப்பு’க்கு அழைத்து இருந்தார்கள்.

எல்லோர் முன்னிலையில் காமாக்ஷியின் ‘வளை காப்பு’ விழாவை,அவர்கள் வீட்டில் பண்ணி விட்டு,சத்திரத்லே ‘வளைக் காப்பு’க்கு வந்து இருந்த அனைவருக்கும் கல்யாண சாப்பாட்டைப் போட்டு,கோலாகலமாகக் கொண்டாடினார்கள் மஹா தேவ குருக்கள் தம்பதிகள்.

ராமசாமியும்,சாம்பசிவனும் காமாக்ஷியின் ‘வளைக் காப்பு’ ‘பன்ஷன்’ இவ்வளவு பிரமாதமாக நடந்ததை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டு,மஹா தேவ குருக்களுக்கும்,மரகதத்துக்கும் தங்கள் நன்றியை சொன்னார்கள்.

அன்று சாயந்திரமே சுந்தரம் ராதாவையும்,அம்மா,அப்பாவையும் அழைத்துக் கொண்டு சிவபுரி க்குப் போனார்.

இரண்டு நாள் கழித்து குருக்களும்,மரகதமும் காமாக்ஷியை அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டார்கள்.காமாக்ஷி வீட்லே ‘ரெஸ்’ட் எடுத்துக் கொண்டு வந்து,காலையிலும் மாலையிலும் நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்..ஏழு மாதம் ஆகி விட்டதால் தான் எடுத்து வந்த ‘ஸ்லோக’ வகுப்பை நிறுத்தி விட்டாள் காமாக்ஷி.

எட்டாவது மாசம் ராமசமியும்,சாம்பசிவனும் ஒரு வாத்தியாரை அவர்கள் வீட்டு வர வழைத்து காமாக்ஷிக்கு ‘கிரமமாக’ சீமந்தம்’பண்ணீனார்கள்.இந்த விழாவுக்கு மஹாதேவ குருக்களும்,மரகதமும் உறவுக்காரகளும்,நண்பர்களும் திரளாக வந்து இருந்தார்கள்.சிவபுரியிலே இருந்து ராதாவும்,அவள் கணவரும்,கணேசன் தம்பதிகளும் வந்து இருந்தார்கள்.

‘சீமந்தத்துக்கு’ வந்து இருந்த அனைவரும் சாம்பசிவனையும் காமாக்ஷியையும் ஆசீர்வாதம் பண்ணீனார்கள்.

மஹா தேவ குருக்கள் ஏற்பாடு பண்ணி இருந்த சத்திரத்தையும்,சமையல் கார மாமாவையும் ஏற்பாடு பண்ணி ‘சீமந்த’ விழாவுக்கு,வந்து இருந்த அனைவருக்கும் கல்யாண சாப்பாடு போட்டார் சாம்பசிவன்.

சீமந்தம் முடித்ததும் சுந்தரம் ராதாவையும்,அம்மா,அப்பாவையும் அழைத்துக் கொண்டு சிவபுரிக்குப் போனான்.

அன்று கலையிலே எழுந்ததும் காமாக்ஷிக்கு பிரசவ வலி எடுத்தது.சாம்பசிவன் அன்று கோவிலுக்குப் போகவிலை.சாம்பசிவனும்,ராமசமியும் சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு ஒரு பெரிய ‘நர்சீங்க் ஹோமில்’ சேர்த்தர்காள்.ராமசமியும் சாம்பசிவனும் அங்கே போட்டு இருந்த சேர்களில் உட்கர்ந்துக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.

விஷயம் கேள்விப் பட்டு மஹாதேவ குருக்களும்,மரகதமும் காமாக்ஷி ‘அட்மிட்’ ஆகி இருந்த ‘நர்ஸிங்க் ஹோமு’க்குப் போய்,ராமசமி சாம்பசிவனுடன் சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.நால்வரும் கண்களை மூடிக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.

சாம்பசிவனுக்கு முன்னால் தன் மணைவியை பிரசவத்திற்கு சேர்த்த ஒருவரும்,அவருடைய அப்பாவும் அம்மாவும் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.அவர்களும் தங்கள் கண்களை மூடிக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.

‘லேபர் வார்ட்டில்’ இருந்து வெளியே வந்தாள் ஒரு நர்ஸ்.

சாம்பசிவன் ஆவலோடு அந்த ‘நர்ஸை’ப் பார்த்து கொண்டு இருந்தான்.அந்த நர்ஸ் அவனை தாண்டி,முன்னாலே வந்து இருந்த வா¢டம் போய் “உங்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பொறந்து இருக்கு.குழந்தையும் அந்த அம்மாவும் நலமா இருக்காங்க.இன்னும் அரை மணி நேரம் கழிச்சு,நான் வந்து சொல்லும் போது,நீங்க எல்லாம் குழந்தையையும்,அந்த அம்மாவையும் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘லேபர் வார்ட்டு’க்குப் போகும் முன்,சாமபசிவன் அந்த ‘நர்ஸை’ப் பார்த்து “’நர்ஸ்’,என் மணைவிக்கு இன்னும் பிரசவம் ஆகலையாங்க” என்று ஆவலோடு கேட்டான்.

அந்த ‘நர்ஸ்’ கொஞ்சம் கர்வி.

அவ உடனே “ஏங்க உங்க சம்சாரத்துக்கு பிரசவம் ஆயி,குழந்தே பொறந்து இருந்தா,நான் உங்க கிட்டே சொல்லா,அவர் கிட்டேயா போய் சொல்லுவேன்.உங்க சம்சாரத்துக்கு இன்னும் பிரசவ வலி சா¢யா வறலே.வந்தாத் தாங்க அவங்களுக்கு பிரசவம் டாக்டர் பாப்பாரு.அவசரப் படாம குந்திக் கிட்டு இருங்க.அவங்களுக்கு பிரசவம் ஆனதும் நான் வந்து உங்க கிட்டே சொல்றேன்.அது வரையிலும் பொறுமையா குந்திக் கிட்டு இருங்க” என்று சொல்லி விட்டு வேகமாக மறுபடியும் ‘லேபர்’ வார்டுக்குப் போய் விட்டாள்.
சாம்பசிவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

அவன் மறுபடியும் வந்து தன் அப்பா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டார்.உடனே மஹா தேவ குருக்கள் “சில பொம்மனாட்டிகளுக்கு,பிரசவ வலி சீக்கிரமா வறாது மாப்பிள்ளை. நாம கொஞ்சம் பொறுமையா இருந்துண்டு வரணும்.நாம அவசரப் படக் கூடாது” என்று சொல்லி விட்டு மறுபடியும் தன் கண்களை மூடிக் கொண்டு மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தார்.

சாம்பசிவன் காமாக்ஷியை ‘நர்சிங்க் ஹோமில்’ சேர்த்து ஆறு மணி நேரம் ஆகி விட்டது.

சாம்பசிவனும்,அவன் அப்பாவும்,குருக்களும் மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தார் கள்.’லேபர் வார்ட்டில்’ இருந்து ‘நர்ஸ்’கள் வெளியே வந்துக் கொண்டும்,மறுபடியும் உள்ளே போய்க் கொண்டும் இருந்தார்கள்.

அவர்களைக் கேட்க ஆசைப் பட்டார் சாம்பசிவன்.ஆனால் முதலில் கேட்ட ‘நர்ஸ்’ மாதிரி, இவர்களும் சொல்லி விடப் போகீறார்களே,என்று நினைத்து தன் ஆசையை அடக்கிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.

காமாக்ஷியை பிரசவத்திற்கு சேர்த்து ஏழு மணி நேரம் ஆனதும்,முதலில் சொல்லி விட்டுப் போன ‘நர்ஸ்’ இப்போது ‘லேபர் வார்டை’விட்டு வெளியே வந்து “உங்க சம்சாரத்துக்கு நல்லபடியா பிரசவம் ஆயி,அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்து இருக்கு.இன்னும் அரை மணி நேரம் கழிச்சு,நான் வந்து சொல்லும் போது,நீங்க எல்லாம் குழந்தையையும்,அந்த அம்மாவையும் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘லேபர் வார்டு’க்குள் போய் விட்டாள்.

சாம்பசிவனுக்கு அரை மணி நேரம் போவது,ஆறு மணி போவது போல இருந்தது.

சொன்னது போல அந்த ‘நர்ஸ்’ அரை மணி நேரம் கழிச்சு வந்து” நீங்க எல்லாம் இப்போ அந்த அம்மாவையும், குழந்தையையும் பாக்கலாம்” என்று சொன்னதும் சாம்பசிவன் அவன் அப்பாவையும், மாமனாரையும்,மாமியாரையும் அழைத்துக் கொண்டு ‘லேபர் வார்டு’க்குள் போய் காமாக்ஷியையும் பிறந்த குழந்தையையும் பார்த்தார்கள்.

எல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் “குழந்தே அழகா கலரா பொறந்து இருக்கா” என்று சொன்னார்கள்.காமாக்ஷிக்கு சந்தோஷமாய் இருந்தது.மரகதம் குழந்தை கையைத் தடவிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.காமாக்ஷி ரொம்ப ‘வீக்காக’ இருந்ததா அவள் வெறுமனே சிரித்தாள்.

அங்கே இருந்த ‘நர்ஸ்’ “நீங்க இங்கே ரொம்ப நேர எல்லாம் இருக்கக் கூடாது.போய் வெளியே காத்துக் கிட்டு இருங்க.இந்த அம்மா குழந்தேக்குப் பால் குடுக்கணும்.நாங்க இவங்களையும்,குழந்தை யையும் இன்னும் மூனு மணி நேரத்லே ‘ரூம்’லே கொண்டு வந்து விடுவோம்.அப்ப நீங்க வந்து இவங் களையும்,குழந்தையேயும் பாக்கலாம்” என்று சொன்னதும், எல்லோரும் வெளியே வந்து காத்துக் கொண்டு இருந்தார்கள்.

சாம்பசிவன் சிவபுரிக்குப் ‘போன்’ பண்ணினான்.அக்கா ‘போனில்’ வந்தவுடன் “அக்கா காமாக்ஷிக்கு இன்னிக்கு காத்தாலே ஒரு பொண் குழந்தேப் பொறந்து இருக்கு.நீங்கோ எல்லாரும் நிச்சியமா ‘புன்யாவசனத்துக்கு’ எங்க ஆத்துக்கு வாங்கோ” என்று சொல்லி வரவேற்றார்.

‘இவளுக்கும் இப்போ ஒரு பொண் குழந்தே தானே பொறந்து இருக்கு.இன்னும் ரெண்டோ மூனோ வருஷம் கழிச்சுத் தானே அடுத்த குழந்தே பொறக்கும்.அந்த குழந்தையாவது ஒரு ஆண் குழந்தையா பொறக்கணுமே’ என்று நினைத்து கவலைப் பட்டாள் மரகதம்.

மூன்று மணி நேரம் ஆனதும் காமாக்ஷியையும்,குழந்தையையும் ஒரு ‘ரூமி’ல் கொண்டு வந்து விட்டார்கள்.எல்லோரும் அந்த ‘ரூமு’க்குள் போய் காமாக்ஷியையும்,குழந்தையையும் மறுபடியும் பார்த்தார்கள்.

“நாம எல்லாரும் காமாக்ஷியேப் பாத்து ஒரு ‘பேரனேப் பெத்துக் குடு’,’பேரனே பெத்துக் குடு’ன்னு ஆசீர்வாதம் பண்ணோம்.ஆனா காமாக்ஷிக்கு ஒரு பொண் குழந்தே பொறந்து இருக்கு.அது பகவான் ‘சங்கல்பம்’.அவர் எந்தக் குழந்தேத் தறாரோ,அந்தக் குழந்தையை அந்தக் குழந்தையே நாம மனசார ஏத்துக்கணும்” என்று சொன்னார் ராமசாமி.

உடனே மஹா தேவ குருக்கள் “நீங்கோ சொல்றது நுத்துக்கு நூறு நிஜமான வார்த்தை.அந்த பகவான் தான் யாருக்கு என்னக் குழந்தே பொறக்கணும்ன்னு நிர்ணயிப்பவர்.நாம இல்லே” என்று சொல்லி விட்டு சாம்பசிவனைப் பாத்து “நீங்கோ உங்க ஆத்லே பதினோ¡றாம் நாள் ‘புண்யாவசனம் ஆகற வரைக்கும் கோவிலுக்குப் போகாதேள்.அப்புறமா கோவில் வேலேக்குப் போக்லாம் உங்களுக்கு இப்போ ‘விருத்தித் தீட்டு” என்று சொன்னதும் சாம்பசிவன் “சா¢ மாமா,நான் கோவில் வேலைக்குப் போகலே” என்று சொன்னான்.

அந்த நேரம் பார்த்து பிரசவம் பார்த்த டாக்டர் ரூமுக்கு வந்து “இவங்க ரொம்ப வீக்கா இருக்கா ங்க.இவங்க இந்த ‘நர்சிங்க் ஹோம்லே’ இன்னும் ரெண்டு நாள் இருக்கட்டும்,நீங்க இவங்களையும், குழந்தையையும் நாளே மறு நாள் அன்னேக்கு காலையிலே வந்து இட்டுக் கிட்டுப் போங்க” என்று சொல்லி விட்டுப் போனார்.

மரகதம் காமாக்ஷியைப் பார்த்து “ஜாக்கிறதையா இருந்துண்டு வாம்மா.நானும் மாப்பிள்ளையும் நாளன்னைக்குக் காத்தாலே இங்கே வந்து உன்னேயும் குழந்தையையும் அழைச்சுண்டு போறோம்” என்று சொன்னாள்.பிறகு எல்லோரும் ‘நர்சிங்க் ஹோமை’ கிளம்பி வீட்டுக்கு வந்தார்கள்.எல்லோரும் போன பிறகு ‘நமக்கு ஒரு பொண் குழந்தே தானே பொறந்து இருக்கு.நம்ம மாமனாரும்,அம்மாவும், அப்பாவும் ஒரு பேரன் வேணும்ன்னு சொன்னாளே.அப்படி பொறக்கலையே’ என்று நினைத்து வருத்தப் பட்டாள் காமாக்ஷி.

நாளை மறு நாள் மரகதம் காத்தாலே ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து பல்லைத் தேய்த்து விட்டு குளித்து விட்டு,சுவாமிக்கு மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு,ஒரு நமஸ்காரத்தை பண்ணி விட்டு, தனக்கும் ஆத்துக்காரருக்கும் ‘காபி’ போட்டாள்.’காபி’யைக் குடித்து விட்டு,பெட் ரூமுக்குப் போய் பத்து நாளைக்கு வேண்டிய துணிமணிகளை எல்லாம் ஒரு பையிலே எடுத்து வைத்துக் கொண்டாள் மரகதம்.

மஹா தேவ குருக்கள் சந்தியாவந்தனம் பண்ணி விட்டு வந்தவுடன் மரகதம் அவருக்கு ‘ஆவி பறக்க’ காபியைக் கொண்டு வந்து அவர் கையிலேக் கொடுத்து விட்டு “நான் மாப்பிள்ளை ஆத்துக்கு ப் போய்,அவரோட ‘நர்ஸிங்க் ஹோக்மு’க்குப் போய் காமாக்ஷியையும்,குழந்தையையும் அழைச்சுண்டு வந்து,அவா ஆத்லே விட்டுட்டு,அவ கூடவே புண்யாவசனம் வரைக்கும் இருந்துட்டு வறேன். காமா க்ஷிக்கு அந்த சின்ன குழந்தேயே வச்சுண்டு வறது சிரமமா இருக்கும்.நான் அவ கூட இருந்துண்டு வந்து ‘குழந்தேயே எப்படி குளிப் பாட்டறது,‘எப்படி வச்சுண்டு தூங்கப் பண்றது’ன்னு எல்லாம் கத்துக் குடுத்துட்டு வறேன்.கூடவே பத்து நாளைக்கும் காமாக்ஷிக்கு ‘பத்திய’ சாப்பாட்டும் போட்டுட்டு வறேன்.காமாக்ஷிக்கு மாமியார் இருந்தா நாம கவலைப் படவேணாம்.இல்லையா சொல்லுங்கோ” என்று கேட்டாள்.

“நீ சொல்றது ‘வாஸ்தவம்’ தான்.நீ போய் வா மரகதம்.இந்த பத்து நாளைக்கு நான் என்னேப் பாத்துண்டு வறேன்.எதுக்கும் கையிலே கொஞ்ச பணம் வச்சுக்கோ” என்று சொல்லி மரகதத்திடம் ஐனூரூ ரூபாய் கொடுத்தார் மஹா தேவ குருக்கள்.

மரகதம் கணவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தாள்.

மரகதம் வருவதைப் பார்த்த ராமசாமியும்,சாம்பசிவனும் “வாங்கோ,வாங்கோ” என்று வரவேற்றார் கள்.”காபி சாப்பிடறேளா” என்று கேட்டதும்”நான் ஆத்லேயே ‘காபி’ குடிச்சுட்டு அவருக்கும் குடுத்துட்டு தான் வந்து இருக்கேன்” என்று சொல்லி தன் துணி பையை ஒரு ஓரமாக வைத்து விட்டு “நான் காமாக்ஷியோட ‘புண்யாவசனம்’ வரைக்கும் கூட இருந்துண்டு,அவளுக்கு அந்த சின்ன குழந்தேயே எப்படி பாத்துக்கறதுன்னு சொல்லிக் குடுத்துட்டு,அப்புறமா எங்காத்துக்கு போகலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னாள்.

“ரொம்ப சந்தோஷம்.என் ஆத்துக்காரி உயிரோட இருந்து இருந்தா,உங்களுக்கு இந்த சிரமம் இல்லாம இருந்து இருக்கும்.என்ன பண்றது.சாம்பசிவன் கல்யாணத்துக்கு முன்னாடியே அவ ‘போய் சேந்துட்டா’” என்று சொல்லி வருத்தப் பட்டார் ராமசாமி.

“அதே நினைச்சி நீங்கோ வருத்தப் படாம இருந்து வாங்கோ.எல்லாம் பகவான் சங்கல்பம்” என்று சொன்னாள் மரகதம்.

கொஞ்ச நேரம் ஆனதும் சாம்பசிவன்,தன்னைத் தயார் பண்ணீக் கொண்டு மரகதத்தை அழைத்துக் கொண்டு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போனான்.அந்த ‘நர்ஸிங்க் ஹோமில்’ அவர்கள் கேட்ட பணத்தைக் கட்டி விட்டு,காமாக்ஷிக்கு பிரசவம் பார்த்த டாக்டரைப் பார்த்து ‘தாங்க் பண்ணி விட்டு காமாக்ஷியின் ரூமுக்குப் போனார்கள்.தன் ஆத்துக்காரரையும்,அம்மாவையும் பார்த்த காமாக்ஷி சந்தோஷப் பட்டு “வாங்கோ,வாங்கோ.நான் அரை மணி நேரமா ரெடியா இருக்கேன்” என்று
சொன்ணாள்.

மரகதம் குழந்தையை தொட்டிலிலே இருந்து எடுத்துக் கொண்டான்.

காமாக்ஷி கட்டிலை விட்டு மெல்ல கீழே இறங்கினவுடன் மூனு பேரும் அங்கே இருந்த ‘நர்ஸை’ப் பார்த்து “நாங்க போயிட்டு வறோம்” என்று சொல்லி விட்டு ‘நர்ஸிங்க் ஹோமை’ விட்டு வெளீயே வந்தார்கள்.சாம்பசிவன் காமாக்ஷியையும்,மரகதத்தையும் குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி விட்டு, கூடவே இன்னோரு ஆட்டோவில் அவர் ஏறி வீட்டுக்கு வந்தார்.

காமாக்ஷியை குழந்தையை வாசலிலேலே வைத்துக் கொண்டு நிற்கச் சொல்லி விட்டு,உள்ளே போய் ஒரு தாம்பாளத்திலே ஆரத்தியை கரைத்து எடுத்துக் கொண்டு வந்து,சாம்பசிவன் வந்ததும் ரெண்டு பேரையும் ஒன்றாக சேர்ந்து நிற்கச் சொல்லி விட்டு,சமையல் கார மாமியுடன் உதவியுடன் ஆரத்தியை சுற்றி விட்டு,காமாக்ஷியின் நெத்தியிலும்,குழந்தையின் நெத்தியிலும் ஆரத்தி ஜலத்தை கொஞ்சமாக இட்டு விட்டு,காமாக்ஷியைப் பார்த்து ”காமு,உன் வலது காலை முன்னே வச்சுண்டு வா.ஜாக்கிறேதே குழந்தே” என்று சொன்னதும் காமாக்ஷி அம்மா சொன்னது போல வீட்டுக்குள்ளே வந்தாள்.மரகதம் குழந்தையை காமாக்ஷி இடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் காமாக்ஷியை “காமு,நான் இப்போ என் ஆத்துக்குப் போகலே. உன்னோட ‘புண்யாவசனம்’ வரைக்கும் இருந்துட்டு,‘குழந்தேயே எப்படி குளிப்பாட்டறது’ ’எப்படி தூங்கப் பணறது’’எப்படி கையிலே வச்சுக்கறதுன்னு எல்லாம் சொல்லிக் குடுத்துப் போறேன்.இந்த சின்ன குழந்தேயே வச்சுக்க உனக்குக் கொஞ்சம் பழக்கம் வரணும்” என்று சொன்னாள் மரகதம்.

உடனே காமாக்ஷி சந்தோஷப் பட்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்ம்மா’.நானே இதெல்லாம் எப்படி பண்ணப் போறேன்னு கவலைப் பட்டுண்டு இருந்தேன்.என் ‘ரூமி’லே இருந்த ‘நர்ஸ்’ கூட என்னேப் பாத்து ‘ஏம்மா,உங்களுக்கு இது முதல் பிரசவம்.உங்க மாமியார் உயிரோடு இல்லேன்னு சொல்¡றீங்க நீங்க தனியா இந்த சின்ன குழந்தேயே எப்படி பாத்துப்பீங்க.நீங்க உங்க அம்மாவே உதவிக்கு வரச் சொல்லுங்க’ன்னு சொன்னா.நல்ல வேளையா நீங்களே வந்து இருக்கேள்” என்று சொல்லி அம்மா வைக் கட்டிக் கொண்டாள்.

மரகதம் பத்தாவது நாள் அன்னைக்கு தனக்கு ரொம்ப தெரிந்த ராஜம் வீட்டுக்குப் போனாள்.

அவளிடம் “ராஜம்,நேக்கு பத்து நாளைக்கு முன்னாடி ஒரு பேத்தி பொறந்து இருக்கா.அந்தக் குழந்தைக்கு இன்னிக்கே தொட்டில் போடறோம்.உன் கிட்டே இருக்கற அந்த ‘ஆவி’ வந்த தொட்டிலை கொஞ்சம் தர முடியுமா” என்று கேட்டவுடன் ராஜம் ரொம்ப சந்தோஷப் பட்டு “அப்படியா.நான் நீச்சியமா தறேன்.உனக்குத் தராம இருப்பேனா” என்று சொல்லி அந்தத் தொட்டிலை கொடுத்தாள்.

மரகதம் வாசலில் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டு,அந்த ஆட்டோவி லே தொட்டிலை ஏற்றீக் கொண்டு காமாக்ஷி வீட்டுக்கு வந்தாள்.வாசலில் மாமியார் ஆட்டோவிலே ஒரு தொட்டிலை ஏற்றிக் கொண்டு வந்ததைப் பார்த்த சாம்பசிவன் உடனே ஓடிப் போய் “இருங்கோ நான் அந்த தொட்டிலை இறக்கி ஆத்துக்குள்ளே கொண்டு வறேன்” என்று சொல்லி விட்டு ஆட்டோ க் காரருக்கு பணத்தைக் கொடுத்து விட்டு தொட்டிலை வீட்டுக்குள்ளே கொண்டு வந்து வைத்தார்.

அன்று மாலை சம்பசிவன் நிறைய பூமாலைகளை வாங்கி வந்து அந்த தொட்டிலுக்கு எல்லா பக்கமும் கட்டி தொங்க விட்டார்.மரகதம் ராஜத்தையும்,தனக்குத் தெரிந்த சில மாமிகளையும் காமாக்ஷி வீட்டுக்கு வரச் சொல்லி குழந்தையை ‘தொட்டிலில் போட்டு’ப் பாட்டுகள் பாடி கொண்டாடினாள். அன்று இரவே மரகதம் தொட்டிலை மாப்பிள்ளை உதவியுடன் ராஜத்தின் வீட்டுக்கு கொடுத்து விட்டு வந்தாள்.

அடுத்த நாள் ராதாவும்,சுந்தரமும்,ராகவனும்,கணேசன் தம்பதிகளும் முதல் ‘பஸ்’ பிடித்துக் கொண்டு,சிதம்பரம் வந்து சாம்பசிவன் வீட்டுக்கு வந்தார்கள்.மஹா தேவ குருக்களும் வந்தார். சமையல் கார மாமி எல்லோருக்கும் ‘காபி’ப் போட்டுக் கொடுத்தாள்

வாத்தியார் வந்ததும் சமையல் கார மாமி அவருக்கு ‘காபி’யைக் கொடுத்தாள்.அந்த ‘காபி’ யைக் குடித்து விட்டு,வாத்தியார் ‘கணீர் என்று மந்திரங்கள் சொல்ல ஆரம்பித்தார்.வீட்டுக்கு ‘புண்யா வசனத்தை’ப் பண்ணின பிறகு,அந்த ‘புண்யாசவன ஜலத்தை’ வந்தவர்களுக்கு எல்லாம் ‘உத்தா¢ணி யில்’ மூன்று தடவைக் கொடுத்து விட்டு,வீடு பூராவும் ‘புன்யாவசன் ஜலத்தை’த் தெளித்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *