(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ரேவதியும், மாலதியும் பள்ளிக்கூட நாட்களிலிருந்து உயிர்த்தோழிகள். பள்ளியை முடித்து, கல்லூரியை முடித்து, பிறகு இருவருக்குமே திருமணம் ஆனது.

இதில் ரேவதி வசதியான குடும்பத்திலும், மாலதி ஒரு நடுத்தர குடும்பத்திலும் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.
‘உனக்கென்னடி கவலை, நீ வசதியான இடத்திலே வாழ்க்கைப்பட்டிருக்கே, அதுவுமில்லாம உன் கணவர் கை நிறைய சம்பாதிக்கிறார். கார், பங்களான்னு கவலையில்லாம மகிழ்ச்சியா வாழுறே! யாருக்குமே வாழ்க்கை அமையறதுன்னா அது உன் வாழ்க்கை மாதிரிதான் அமையணும்!
மாலதி ரேவதியின் வாழ்க்கையினை நினைத்து பெருமைபட்டு பேசி, அதோடு தன் வாழ்க்கையினையும் நினைத்து மனதிற்குள்ளேயே நொந்து கொண்டாள்.
‘மாலதி, என் வாழ்க்கை நீ நினைக்கிற மாதிரி இல்லே, நான் என்னவோ வசதியாக வாழ்றது உண்மைதான். ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையலே.’
என் கணவரின் பேச்சிலே எப்போதுமே ஒரு கனிவு இருக்காது. எங்கள் குடும்பத்தோட ஏழ்மைத் தனத்தைப் பற்றி அவர் எப்போதுமே பழித்துக் கொண்டிருப்பார். நான் அவர் கிட்டே எது வாங்கித் தரக் கேட்டாலும் வாங்கித் தருவாரே ஒழிய அதை விருப்பமாக வாங்கித் தர மாட்டார். எங்க இரண்டு பேருக்கும் எதிலுமே ஒத்துப் போறது ரொம்ப கஷ்டமாயிருக்கு.
‘உன் கணவர் ஏழையாயிருந்தாலும் உன்னை அன்பாக வெச்சிருக்காரே. அதை நினைச்சி உன்னைப் பத்தி ரொம்பவும் பெருமைப்படறேன். வாழ்க்கையிலே அன்புதானே முக்கியம் அது இல்லாத வாழ்க்கையாலே பிரளோஜனம் ஏது?’ ரேவதி சொல்லி முடித்தாள்.
இப்போது மாலதி தன் கணவனை நினைத்து மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டாள்.
– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்