கில்லாடி திருடன்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 12, 2021
பார்வையிட்டோர்: 33,950 
 
 

டேய் ராகவ் பாத்து குதி டா வாட்ச்மென் பாக்க போறேன்,சரிடா சுதீப்,நா என்ன வச்சு கிட்டா வச்சகம் பண்ணுறேன்,கடவுள் எனக்கு 6 அடி தான் உயரம் குடுத்து இருக்காரு,உன்ன மாரி 7 அடியா உயரம் குடுத்து இருந்தா சீக்கிரம் குதிச்சு இருப்பேன் என்றான்.உடனே சுதீப் இந்த பேச்சுக்கு ஒரு குறையும் இல்ல வேமா குதி ராகவ் என்றான்.இருவரும் குதித்து வீட்டிற்குள் சென்றனர். உடனே ராகவ், என்ன டா மச்சான் வீட்டுல ஒன்னும் இல்ல,பணம்,நகை எதையும் காணாம் நம்ம ஹார்ட் ஒர்க் பண்ணி குதிச்சு திருட வந்தா ஒன்னையும் காணோம்,சரியான பிச்சைக்காரன் வீடா இருக்கும் போல வேஸ்ட் மச்சான் என்றான்,ஆமாட ராகவ், ஒரே டாக்குமெண்ட்டா இருக்கு,இதுக்கு இவ்வளவு பெரிய வீடு, ஒரு வாட்ச்மேன் வேற, சரி வா வேற ஏதாவது நல்ல பணக்கார வீட்டுக்கு போவோம் என்றான் சுதீப்,உடனே சுதீப்,மச்சான் ராகவ் ஏதோ சத்தம் கேக்குது போயி ஒலிச்சுக்குவோம் வா என்றான்,வீட்டுக்காரன் வந்துட்டான் போலயே டா சுதீப் என்று ராகவ் கூற,தெரியுது நீ உன் வாய மூடு ராகவ் என்றான் சுதீப்.ஏண்டா எங்களை பத்தியே தப்பு, தப்பா, நியூஸ் போடுவா அத பாத்துட்டு நா சும்மா இருப்பேனா சாவுடா என்று அந்த வீட்டுக்காரன் சுட, நியூஸ் ரிப்போட்டர் இறந்து விட்டான், உடனே ராகவ், மச்சான் ஆழம் தெரியாம கால விட்டோம் டா இவன் இவ்லோ சுலபமா கொலை பண்ணுறான், நம்ம அவன் வீட்டுல திருட வந்து,இங்க மறைச்சு இருக்கோம்னு, அவனக்கு தெறிந்தது நா நம்ம காலி டா சுதீப் என்றான் ராகவ்,சும்மா இரு டா நம்ம வந்தது எப்பிடி யாருக்கும் தெரியாதோ, அது மாரி போறதும் தெரியாது,நா இந்த வீட்ட பத்தி நல்லா தெறிச்சு தான வந்தேன்,அதே வழியா வீட்டை விட்டு வெளிய போலாம் அமைதியா இரு என்றான் சுதீப்,டேய் இவன் பொணத்த கடல் ல வீசுங்கடா என்று அந்த வீட்டுகாரன் கூற அவனின் அடியாட்கள் அவ்வாறே செய்தனர்,ராகவ்,சுதீப் இருவரும் அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர்.

இப்ப தாண்டா உயிரே வருது என்றான் ராகவ், இவ்லோ ரிஸ்க் எடுத்தும் ஒன்னும் கிடைக்கலையே ராகவ் என்று சுதீப் கூற,விடு மச்சான் பாத்துக்கலாம்,அந்த கொலைகாரன் வீட்டுல ஒரே பேங்க் டாக்மெண்ட் மட்டும் இருக்கும்னு நம்ம என்ன கனவா கண்டோம்,சரி தூங்கு பாத்துக்கலாம் என்றான் ராகவ்.விடிந்தது…..

ராகவ் எங்க போன,இவ்வோலோ நேரம் ஆலையே காணம் என்று சுதீப் கேட்க்க,ராகவ் ஒரு பையை திறந்து காட்ட, அதில் நிறைய பணம் இருப்பதை பார்த்த சுதீப் அதிர்ந்தான்,ஏது?இந்த பணம், எப்பிடி?வந்தது என்று கேட்டதும்,,ராகவ்வோ,நேத்து நம்ம போன வீட்டுல ஒரு கொலை நடந்துச்சுல அதை நா வீடியோ எடுத்துட்டேன்,அவன் கிட்ட டீல் பேசி இவ்ளோ பணம் வாங்கிட்டேன் என்றான்.உடனே சுதீப்,சூப்பர் டா மச்சான்,நீயே?தனியா போயி பணம் வாங்கிட்ட என்றதும்,நன்றி மச்சான் என்றான் ராகவ்,உடனே சுதீப்,பைத்தியக்கார,பைத்தியக்கார, அவனை நீ வீடியோ எடுத்தபோ நா சும்மா இருந்தது அதை வச்சு நம்ம பிரச்னையில இருந்தா யூஸ் பன்னுறதுக்கு தான், அவனை மிரட்டி பணம் பறிக்க இல்ல,நீ போயி கேட்ட உடனே அவன் பணம் குடுத்து இருக்கான்னா அவன் உன்ன வச்சு ஏதோ பிளான் பண்ணி இருக்கான் என்றான் சுதீப்,ராகவோ, இல்ல டா, அப்பிடி இருந்தா அவன் நா பணம் வாங்கும் போது என்னை ஏதாவது பண்ணி இருக்கணும்ல என்றான், உடனே சுதீப்,லூசு அவன் உனக்கு மட்டும் இந்த விஷயம் தெரியுமா?இல்ல வேற யாருக்காவது தெரியமானு செக் பண்ணுறான்,நீயும் அந்த பணத்தை வாங்கிட்டு வந்து உனக்கே தெரியாம என்னையும் சேத்து காட்டிகுடுத்துட்டா டா லூசு பயலே என்றான்.

உடனே ராகவ்,என்னடா சொல்லுற?என்றான். ஆமா இப்ப நம்ம வீட்டை விட்டு வெளிய போனதும்,நம்மலையும் அந்த ரிப்போட்டார் மாரி கொன்னு போட்டுடுவான்,இப்ப கீழ பாரு அவன் ஆலுங்க சுத்தி இருப்பான்ங்க என்றான்.ராகவ்வும் கீழ பாத்தான், அந்த தெருவுக்கு சம்பந்தம் இல்லாம நிறைய பேரு இருந்தாங்க,உடனே ராகவ், இப்ப என்னடா பண்ணுறது,நம்ம கீழ போன செத்தோம்,நா முட்டாள் தனமா நடந்துகிட்டேன் என்றான்.சரி விடு, வீட்டு பின் பக்கம் வழியா தப்பிச்சு போவோம்,அப்புறம் யோசிக்கலாம் என்றான் சுதீப்.இருவரும் தப்பித்தார்கள்..உடனே அவங்களை கொல்ல நிறைய ஆட்களை அனுப்பிவைத்தான் அந்த கொலைகாரன்… அவர்கள் சிக்கவில்லை.டேய் சுதீப் இப்ப என்ன பண்ண?என்று ராகவ் கேட்க,இப்ப வந்து என்ன பண்ணுறதுன்னு கேளு?என்றான் சுதீப்.மச்சான் அந்த ஆதாரம் அவன்கிட்ட குடுத்துடயாட?என்று சுதீப் கேட்டதும்,ராகவும் ஆமா ட என்றான்.நம்ம சாவு உறுதி,இதுல ஒரே நல்ல விஷயம் அவங்களுக்கு நீ மட்டும் தான் தெரியும்,நா எப்பிடி இருக்கேன்னு கூட தெரியாது?அது தான் தான் நமக்கான பிளஸ் பாய்ண்ட் அதை வச்சே நம்ம எஸ்கேப் ஆயிடனும் என்றான் சுதீப்.அதுவரை எங்க தங்குறது என்றான் ராகவ்,உடனே சுதீப்,அந்த கொலைகாரன் வீட்டுக்கு பக்கத்துல ஒரு ஹோட்டல் இருக்குல்ல அங்க தான் என்றான்.மச்சான் அதுக்கு நம்மலே தற்கொலை பண்ணிக்கலாம் என்று ராகவ் கூரியதும்,இல்ல டா அது தான் சேவ்,அந்த கொலைகாரன் ஊரு முழுக்க இந்நேரம் நம்மல தேடி இருப்பான்,நம்ம அவன் பக்கத்துலே இருந்து தான் தப்பிக்கணும்,நம்மட அந்த வீடியோ ஆதாரம் இருந்தாலும் பரவால அதை வச்சு மிரட்டி தப்பிக்கலாம்,அதுவும் இல்ல சோ ஏதாவது பிளான் போடணும் என்றான் சுதீப்.

ராகவும்,சுதீப்பும் அந்த ஹோட்டலில் இருந்து கொண்டு, அந்த கொலைகாரனது வீட்டையும் கவனித்து கொண்டு இருந்தனர்,உடனே சுதீப்,ராகவ் ட எப்பிடி அந்த கொலைகாரன் நம்பர் உனக்கு கிடைச்சது என்றதும்,ராகவ்வும் அது பெரிய விஷயம் இல்ல மச்சான் அவன் பெரிய தொழில் அதிபர் சோ நெட் ல இருந்து தான் எடுத்தேன், அவன் பேரு சரண்,வெளி உலகத்துக்கு நல்லவன்,பணக்காரன்,ஆனா நமக்கு மட்டும் தான் தெரியும் அவன் கெட்டவன், கொலைகாரன்னு என்றான்.உடனே சுதீப் அந்த சரண் நம்பருக்கு கால் பன்னான், ராகவ்க்கு சுதீப்பின் பிளான் என்னனு புரியாம குழம்பினான். சரண் போனை எடுத்து யார்?என்றதும்,நா தான்டா உன் பாட்டனர் என்றான் சுதீப்,சரண் குழம்பினான்,நா தான் உண்ட பணம் வாங்கி இன்னைக்கி எஸ்கேப் ஆனேல அவன் தான் என்றதும், உடனே சரண் நீ என் கையில கிடைச்ச மவனே உனக்கும் சாவு?உன் நண்பனுக்கும் சாவு?என்றான், உன்னால முடிந்தத பண்ணுற என்றான் சுதீப்,என்னடா இவ்ளோ திமிரா பேசுற என்றான் சரண்,ஆமா டா எனக்கும்,என் நண்பனுக்கும் ஏதாவது ஆச்சு நா, நீ கொலை பண்ண வீடியோவ நெட் ல போட்டுடுவேன் என்றான் சுதீப்,அதை தான் நீ ஏண்ட குடுத்தில உண்ட காபி கூட இல்லனு சொன்ன என்றான் சரண்,உடனே சுதீப் ஏண்டா உண்மை சொல்ல நா என்னை காந்தியா,இல்ல நேருவா, நானே திருடன்,உன் வீடியோ ஒரு காபி எண்ட இருக்கு என்றான்.சரி இப்ப உனக்கு என்ன வேணும் என்று சரண் கேட்க,ஒரு 30 கோடி பணம் வேணும் ரெடி பண்ணிட்டு கரெக்ட் டா சாயங்காலம் 6 மணிக்கு தாஜ் மால் கிட்ட வா அங்க தான் கூட்டமா இருக்கும்னு சொல்லி போனை கட் பண்ணிட்டான்.

உடனே ராகவ்,.மச்சான் இப்ப பணம் ரெம்ப முக்கியம்,நம்ம ட அந்த வீடியோ வேற இல்ல,இது அந்த சரணுக்கு தெரிந்தால் நம்ம காலி என்றதும்,சுதீப்போ நா பணத்துக்காக வர சொல்ல ல டா,அவங்களை வர வச்சு இன்கம்டாக்ஸ்க்கு போனை போட்டு விட்டு மாட்டி விட்டு நம்ம அமெரிக்கா போறோம்,அவன் ஜெயிலுக்கு போறான் அது தான் என்னோட பிளான்,அவனை திசை திருப்பினா தான நம்ம தப்பிக்க வசதியா இருக்கும் என்றான்.அந்த சரண்,அவங்கல எங்க பாத்தாலும் கொன்னுட்டுங்கன்னு சொல்லி ராகவ்,சுதீப் இருவரையும் தேடினார்கள் கொலைகார கும்பல்,,சுதீப்பும், ராகவ்வும், அவங்கள அங்க மாட்டிவிட்டு இவங்க அமெரிக்கா போயிட்டாங்க.

மச்சான் இங்க ஏதோ ஒரு சிலையா கடத்துனா அதுக்கு நிறையா பணம் தருவார்கலாம்,நா அதை பத்தி நல்லா விசாரிச்சுட்டேன் என்றான் ராகவ்,சுதீப்பும் ஒத்து கொண்டு அந்த சிலை திருட சொல்லும் கும்பலை பார்க்க சென்றான்.இருவரும் அதிர்ந்தனர்,அங்கு அந்த சரண் தான் அந்த வேலையை செய்ய சொல்லுறது,சரணை கண்டதும் ராகவ் ஒலிச்சுகிட்டான்,,சுதீப் மட்டும் மனதில் பயம் இருந்தாலும் அதை வெளிய காட்டாம, அந்த சிலை கடத்தல் கும்பல் கிட்ட பேசி அறிமுகமானான், அப்பொழுது தான் அவன் சரனுக்காக தான் அந்த சிலையை கடத்த போறானு தெரிந்தது சுதீப்க்கு,சுதீப்பை யாருன்னு சரனுக்கு தெரியாதது சுதீப்புக்கு ஒரு பிளஸ் பாய்ண்ட்,நடந்ததை சுதீப் ராகவ்விடம் கூற ராகவோ மச்சான் இது நமக்கு வேணாம் நம்ம கிளப்பலாம் என்றான்,உடனே சுதீப் ஆடு தானா வந்து சிக்கி இருக்கு நம்மல எப்பிடி ஓட விட்டான்,அவனை ஏதாவது பண்ணனும் என்றான். மச்சான் அவனே சிறையில் இருந்து இப்ப தான் வந்து இருக்கான்,என்னை மட்டும் அவன் பாத்தா,நம்ம ரெண்டு பேரும் காலி என்றான் ராகவ்,டேய் சிலைய நம்ம கடத்த வேணாம,கடத்த போயி அங்க சரண் போட்டோ வா போட்டுட்டு வந்துடுவோம், நம்மல கொன்னுடுவேணு சொன்னால அவன் ஆயுசுக்கும் சிறையில் தான் இருப்பான் இந்த பிளான் மட்டும் கரெக்ட் டா நடந்தா,சூப்பர் டா சிலை கடத்த பணம்மும் வாங்குவோம்,ஆனா சிலையை கடத்தாமா கடத்த சொன்னவன மாட்டிவிடுரோம் ஒரே கல்லு ல ரெண்டு மாங்கா, ஆனா இந்த சரண் நம்ம கிட்டையே வந்து சிக்குறான் பாரு அது அவன் தலை விதி டா என்றான் ராகவ்.

சுதீப் பிளான் படி அனைத்தும் நடந்தது,சரண் மீண்டும் சிறைக்கு சென்றான்.சிறையில் இருந்து வந்தான் சரண்.உடனே ராகவ் எப்பிடி டா மச்சான் எவ்வொலோ பிளான் பண்ணி அவனை மாட்டி விட்டு நம்ம தப்பிச்சாலும் அவன் ஒரே நாள்ல வெளிய வந்துடுறான், முதல்லயாவது உண்ண அவனுக்கு தெரியாது,இப்ப அவனை மாட்டி விட்டது நீ தான்னு தெரியும்,அவன் உன்னையும், என்னையும் கொல்லாமா விட மாட்டான்,இதுல நா வேற அவன் சிறையில் இருந்து வர பல வருஷம் ஆகும்னு அவனை நம்ம முதலில் மாட்டிவிட்டது, இப்ப பிளான் பண்ணி சிக்க வச்சது எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லி கிண்டல் பண்ணேன்,அவனுக்கு ஏதோ பெரிய ஆளுங்க உதவி பண்ணுறாங்க இல்லனா எப்பிடி ஒரே நாள்ல அவன் வெளிய வருவான் என்றான் ராகவ்.உடனே சுதீப்,சரி தான்டா நம்ம இப்ப பெரிய பிரச்னையில தான் இருக்கோம் என்றான்.சரணோ, தேடி கண்டு புடிச்சு,சுதீப்பையும், ராகவ்வையும் சென்று அடைந்தான். அப்பொழுது உங்க சாவு என் கையில தான்,அது உறுதி டா என்று சரண் கூறும் போதே பத்திரிக்கையாளர்கள் நிறைய பேரு அங்க வந்தனர்,உடனே சுதீப்,நீயா எங்களை கண்டு புடிக்கல நான் தான் உண்ண இங்க வர வச்சேன் என்றான்.சரனுக்கு ஒரே குழப்பம்.

உடனே பத்திகையாளர்களிடம் சுதீப் பேசினார்.நா தான் சென்னை சிட்டியோட கமிசினர் சுதீப்,இவர் அஸிஸ்டன்ட் கமிசினர் ராகவ்,நாங்க பெரிய தொழில் அதிபர் சரண் ஊழல் பண்ணுறாங்கன்னு தெரிய வர,அதை பத்தி ரகசியமா விசாரணை பண்ண டிபார்ட்மெண்ட் எங்களை கொண்டு வந்தாங்க.நாங்க அவர் வீட்டுக்கு தெரியாம போயி செக் பண்ணோம்,அப்ப தான் தெரிய வந்தது அவர் சட்ட விரோதமான செயல் நிறைய பண்ணி,நிறைய சொத்து அமெரிக்கால சேத்து வச்சுருகாருன்னு, அதுக்காண டாக்குமெண்ட்,பேங்க் டீடெயில்ஸ் எல்லாம் எண்ட இருக்கு,அப்ப தான் நாங்க வீட்டு உள்ள இருக்கோம்ன்னு தெரியாம அவர் ஒரு பிரஸ் ரிப்போர்ட்டரா கொலை பண்ணாரு,அதுக்கான வீடியோ எவிடன்ஸ் எண்ட இருக்கு,அப்புறம் அந்த வீடியோவ வச்சு அவரை மிரட்டி பணம் கேட்டோம்,அவரை எங்களை தேடி வர வச்சு அவரை ஒரு கேஸ்ல மாட்டி விட்டோம்,அவரு அமெரிக்கால ஒரு சிலையை கடத்தி பணம் சம்பாத்திக்க பாக்குறது அவரு வீட்டுல இருக்குற டாக்குமெண்ட் மூலம் தெறிச்சு நாங்க அமெரிக்கா போயி திருடங்க மாரி நடிச்சு அவன்கல நம்ப வச்சு,நாங்களே கடத்துரோம்ன்னு சொல்லி அவரை ஒரு கேஸ்ல மாட்டி விட்டோம்,இதை எல்லாம் அவரை காப்பாத்த யாரு வராங்கன்னு பாக்க தான், அப்ப தான் சிக்குனா முக்கியமான குற்றவாளி….

அது வேற யாரும் இல்லை,அது நம்ம மினிஸ்டர் புண்ணியகோடி தான், நாங்க இன்கம் டாக்ஸ் ஆபீசர் கிட்ட மாட்டி விட்டப்ப,அமெரிக்காலசிலை திருட்டுட கேஸ்ல மாட்டி விட்டப்ப,அவர் தான் காப்பாத்தி ஒரே நாள்ல வெளிய கொண்டு வந்தாரு,நாங்க சரண் வீட்டுக்கு பக்கத்துல இருக்க பிளாட்ல தங்கும் போது தான் நா பாத்தேன், நைட் 3 மணிக்கு புன்னியகோடி சரணை பாக்க வந்தாரு, புண்ணியகோடி சரணை தன் கைப்பாவையாய் வச்சு இங்க, அப்புறம் வெளிநாடுகள்ள சட்ட விரோதமாக வியாபாரம் பன்னி சொத்து சேத்து வச்சு இருக்காரு,அதுக்கான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரண் வீட்டில இருந்து எடுத்தோம்.சரனுக்கும்,புண்ணியகோடிக்கும் எந்த அளவுக்கு சம்பந்தம் இருக்குணு பாக்க தான் சரணை ரெண்டு கேஸ் ல மாட்டிவிட்டோம்,நாங்க நினைச்ச மாரி எல்லாம் நடந்துச்சு,அவர் தான் சரணை ஒரே நாள்ல வெளிய கொண்டு வந்து தானே சிக்கிட்டாரு,நானும், ராகவ்வும் இப்பிடி தான் இந்த கேஸ்ச கண்டுபிடிச்சோம் என்றார் சுதீப்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *