பெண் வீணை

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 14,693 
 
 

(இதைப்புரிந்து கொள்ள இதற்கு முந்திய பாகம் : ஒரு கோலமயிலின் குடியிருப்பு மற்றும் பாகம்: 2 – சேற்றில் மலர்ந்த தாமரை என்ற கதைகளை வாசிக்கவும்)

பாகம் – 3

மேக மூட்டமாக இருந்ததால், டவுனிலிருந்து ஜங்க்ஷனுக்கு நடந்தே சென்றோம். நாம் இருந்த நிலையில் பலர் எங்களையே கவனித்தனர்.

ஹோட்டலில் நடந்த நிகழ்சியை நினைவு கூர்ந்து, இனி நாம் ஜாக்கிரதையாக இருந்து மற்றவருக்கு ஒரு காட்சிப்பொருளாகாமல் பார்த்துக்கொள்வது என முடிவெடுத்தோம். படிக்கச் செல்லும் இடத்திலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க உறுதி செய்து கொண்டோம்.

“…ஆனால் உங்கள் கன்னத்தைக் கிள்ளாமல் என்னால் இருக்க முடியாதே…

“…என் கன்னம் உங்கள் கைக்கு அருகில் உள்ளதா அல்லது உங்கள் லிப்ஸுக்கு அருகிலுள்ளதா…”

‘….என் லிப்ஸுக்கு அருகில் தான் இருக்கிறது. ஸோ ?’

“….வாட் ஸோ…?” டு டீஸ் மை சீக்ஸ், யூஸ் யுவர் காமன் சென்ஸ் டு யூஸ் யுவர் ஹேண்ட் ஆர் யுவர் லிப்ஸ்…. …”

“…அதாவது, கிள்ளுவதை விட கிஸ் பண்ணலாமே என்கிறீர்கள்…”

“…உம்ம்ம்….” மீண்டும் ஜாடை. “..அதற்கு சாதகமாக நானே என் முகத்தை குளோஸ் அப் மாதிரி அருகில் கொண்டு வருவேன்…”

“… கிஸ்ஸிங் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா…?”

“…. அந்த டிங்லிங் சென்ஸேஷன் எனக்கு பிடிக்கும்…”

பெரு மூச்சு விட்ட மல்லிகா, “என் இனத்தவர்களுக்கு இதெல்லாம் அனுபவிக்கும் ராசியில்லை. மரக்கட்டைகள் போல் கிடந்து அவர்களின் உடல்களை மஸ்ஸாஜ் செய்துவிட்டதுபோல் கைகால்களை உதரிக்கொண்டு எழுந்திருப்பர்.” பணம் பெற்றுக்கொண்டு அடுத்தவருக்காக காத்திருப்பர்….’

இனி எதையும் ஒபனாக பேச வழி பிறந்து விட்டது. வெட்கம் என்று ஒன்று இருக்கிறதே, அதையாவது இனி நாமாக ஜாக்கிரதையாய் இருந்து காத்துக் கொண்டால்தான் உண்டு.

“சரி, மல்லிகா அவர்கள் மரக்கட்டைகள் போல் கிடந்திருப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்.”

“….இது என்ன கேள்வி? நடக்கும் தொழிலே அது தானே. அடுத்த வீட்டில் 4 மலையாள குட்டிகள். ஒன்றுக்குமேல் கஸ்டமர் வந்து விட்டால், அவரை அழைத்துக்கொண்டு நமது வீட்டிற்கு வந்து விடுவாள். நான் வீட்டில் இருந்தால், அறைக்குச் சென்று உள்ளிலிருந்து தாழ்பாள் இட்டுக்கொள்வேன். ஷார்ட்ஹேண்ட் ப்ராக்டீஸில் மூழ்கிவிடுவேன். விசித்திரமான சத்தங்கள் வந்தால், என்ன நடக்கிறது என்பதை சாவித் துவாரத்திலிருந்து கவனிப்பேன். ஆகவே, அவர்களின் செய்கைகள், பொஸிஷன்கள் அத்தனையும் எனக்குத் தெரியும்…”

“…அவர்களுக்கு என்ன வயதிருக்கும்?’”

“…20 வயது முதல் 70 வயது வரை உள்ளோர் வருவர். சிலர் காரணமும் சொல்வர். மனைவியர் இதை எல்லாம் செய்வதில்லை, ஆகவே நாம் உங்களைத் தேடுகிறோம், என்பர். சிலர் மனைவிக்கு உடல் நலமில்லை, நம் வேட்கை அதிகமாகும் பொழுது உங்களை நாடுகிறோம் என்பர். அநேகமானோர் மனைவின் செயலின்மையைத்தான் காரணமாக்குவர். இளம் பிள்ளைகள், சும்மா, ஜாலியா இருக்க வந்தோம் என்பர்.”

“…அது சரி, அவர்கள் சொல்வதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்…?”

“….நாலு பெண்கள் கூடிவிட்டால், நமக்கு வேறென்ன பேச்சு, யார் என்ன சொன்னான், எப்படி செய்தான், எப்படியிருந்தது என்ற வர்ணிப்புகள் தான் தினமும் நடக்கும்.” அது போக குழாய் அடியில் ஒரு வீட்டின் இரகசியங்களெல்லாம் அம்பலமாகிவிடும்.” தண்ணீர் பிடிக்க சண்டை வரும் பொழுது இந்த சுவாரஸ்யமான பேச்சுக்களை அனைவரும் தாராளமாக கேட்கலாம்.”

“சென்ற வாரம் ஒரு சுவாரஸ்யமான நிகழ்சி நடந்தது…” ஒரு கஸ்டமர் ஒரு மாத காலமாக வந்துக்கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8 மணிக்கெல்லாம் அவர் மீண்டும் வந்தார். நான் முதல் அறையில் அமர்ந்துகொண்டு ஷார்ட்ஹேண்ட் ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்தேன். அம்மா டிபன் செய்து கொண்டிருந்தாள். அம்மா அவரை அமரச் சொல்லி கிட்சனுக்கு போய் விட்டாள், ஐந்து நிமிடத்தில் வேறு யாரோ பெண் அழுது புலம்பிக்கொண்டு வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்று வந்தவரை திட்ட ஆரம்பித்து, அம்மாவைக் கண்டதும் அவளையும் சேர்த்து ஏசினாள். அம்மா அவளை சமாதானப்படுத்தி, விஷயத்தைக் கேட்டாள். அவள் இவருடைய மனைவி என்றும், அவளை உதறித் தள்ளிவிட்டு இரண்டு மாதமாக அவர் இங்கு வந்து விடுவதாகவும் குற்றம் சாட்டினாள். அவரோ ஒபனாக தன் மனைவி தனக்கு ஈடு கொடுப்பதில்லை, அது வேண்டாம், இது வேண்டாம், அப்படி எல்லாம் செய்வதாக இருந்தால் யாராவது வேசியைத் தேடிப்போங்கள் என்று பல முறை என்னை தூற்றிய பின்னர், நான் எனக்கு ஆர்வமுள்ள இடத்தில் இன்பத்தைத் தேடிக்கொள்கிறேன், இங்கேயும் இவள் வந்து கலாட்டா செய்தால் நான் எங்கே போவது.” இதைக்கேட்ட அம்மா, அவளை அமரச்செய்து, புருஷனை எப்படி எல்லாம் மகிழ்விப்பது என்று சொல்லிக்கொடுத்து, மல ஜலத்தைத் தவிர ஆணில் எதையும் அசிங்கமாக நினக்கக்கூடாது. அவர் தன் ஆர்வத்திற்கும் ஆசைக்கும் எங்கே போவார். அவர் உங்களுடைய கணவர் தானே, எல்லாப் பணிவிடை செய்யும் நீங்கள், அதை மட்டும் அசுத்தம் அருவெறுப்பு என்று நினைத்தால், உங்கள் உடம்பு மற்றும் அங்கங்கள் மட்டும் எல்லாம் ரொம்ப சுத்தமோ? தன் தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு உங்களை பசியோடு விட்டு அவர் சென்று விட்டால் உங்களால் என்ன செய்ய முடியும். அவரை அழைத்துச் சென்று, அவருடைய தேவைகளுக்கு மேல் செய்தாக வேண்டும். பின்னர் அவர் உங்களை விட்டுப் போனால், என்னைக் கேளுங்கள் என்று சொல்லி, அவளுடைய புருஷனிடம் மனைவியின் நலத்தைக் கருதி கட்டில் பெட்டில் சர்கஸ் வேலை எல்லாம் செய்யக்கூடாது என்று அறிவுறை கூறி இருவரையும் சேர்த்துவிட்டு சண்டையில்லாமல் அன்பு காதல் கொண்டு வாழும்படி சொல்லி அனுப்பினாள். இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் இருவரும் வந்தனர். இத்தடவை, சண்டைக்கு இல்லை, அம்மாவுக்கு தேங்க்ஸ் கூறி, தன் கணவர் மிகவும் சந்தோஷமாக தன்னுடன் இருப்பதாகவும், அவர் கேட்டதற்கு மேல் தானே முன் வந்து அதை எல்லாம் செய்வதாகவும் கூறினார். என்னைப்பற்றி விசாரித்து என்னுடைய நல்வாழ்விற்கு வாழ்த்துக்கள் கூறி சென்று விட்டனர்.” எனக்கும் செக்ஸ் வாழ்க்கையின் பரிசோதிக்கப்பட்ட நல்ல டிப்ஸ் கிடைத்தன.”

“ஹம்ம்ம், அப்படி என்னதான் அவர் செய்யச் சொன்னார்?”

“உம்ம்ம், மூஞ்சியைப் பாருங்கள். அது இப்பொழுது வேண்டாம், நேரம் வரும் பொழுது நீங்களும் அதைக் கேட்பீர்கள்.”

“…..அப்படியா? மல்லிகா, உங்களுக்கு கேட்டால் தருகிற உள்ளமா அல்லது நீங்கள் கேளாமல் தருகிற வள்ளலா?

“…சர், இதுவரை என் மனதை படிக்கவில்லையா நீங்கள்? ஒன்று சொல்லுங்கள் சர், இதற்கு முன் உங்களுக்கு பெண்களுடன் பழக்கமுண்டா.”

“…இல்லவே இல்லை, சான்ஸும் இல்லை, நான் மிகவும் ஒழுக்கமானவன், பேச்சிலும் சரி, நடத்தையிலும் சரி. நான் ஒரு கைப்படாத ரோஜா…”

“…அதில் எனக்கு சந்தேகம் இல்லை, இதுவரை பெண்ணைத் தொட்டதும் கிடையாதா…?

“…கிடையாது, உங்களைத்தவிர, அதுவும் அன்று தான். உங்களிடம் நிறைய விஷயங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நான் அவ்வப்போது ஃபுல் அனாடமிகல் டிடெய்ல்ஸ் கேட்கக்கூடும். வெட்கப்படாமல் சொல்ல இயலுமா உங்களால். அத்தனையும் எனக்கு ஏற்படும் சந்தேகங்கள்தான்.

“…உங்களிடம் இனி எனக்கு என்ன வெட்கம். டாக்டரம்மாவே என்னிடம் வெட்கப்படவில்லை. நான் சொல்கிறேன், அனைத்தையும் தியோரியாகத்தான் சொல்வேன், ஜைனகாலஜிஸ்ட் டாக்டர் எனக்கு சொல்லி கொடுத்தவரையில். ஆனால், பிராக்டிகல்ஸ் செய்ய நீங்கள் யாரையும் அணுகக் கூடாது. ஓகேயா…?”

“…ஓகே டன்… நோய் வாய்ப்பட்டால் என்ன செய்வீர்கள். டாக்டரிடம் போவதுண்டா?…”

“….அதான் சொன்னேனே, அநேக நேரங்களில் நானே அழைத்து செல்வேன், நான் படித்திருப்பதால், அனைவரும் என்னிடம் வந்து டாக்டரிடம் அழைத்து போகும் படி கேட்டுக்கொள்வர். ஜைனகாலஜிஸ்ட் லேடி டாக்டருக்கும் என்னைப்பற்றி தெரியும். அவர் நலம் விசாரித்து எனக்கு ஒவ்வொன்றையும் சிறந்த முறையில் விளக்கிக் கூறுவார். எனக்கு படிக்க ஆர்வம் அளித்து சீக்கிரம் படித்து, இந்த நரகத்தை விட்டு வெளியேறும்படி கூறுவார். எனக்கு ஒரு வேலை வாங்கித் தருவதாகவும் கூறுவார். நான் அழைத்துச் செல்பவர்களுக்கு கான்டம் உபயோகிக்க அறிவுறை வழங்குவார்.”

“..கான்டம் என்றால் உங்களுக்குத் தெரியுமா மல்லிகா?”

“…ஓ, தெரியுமே, நிரோத் முதல் டியூரெக்ஸ் வரையிலும், மாலா-D முதல் காப்பர்-T வரையிலும் எனக்கு நன்கு தெரியும். சிலர் தானே முன் வந்து அது வேண்டும் என்று கேட்பர். நம் குட்டிகளே அதை அவர்களுக்கு போட்டுவிடுவர் அப்படி போட்டுவிட கேட்பதிலும் ஆண்களுக்கு ஒரு இன்டரஸ்ட். இதை எல்லாம் தொடர்ந்து பார்த்து, 12 வயதிலிருந்து ஏற்பட்ட வெறுப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. இங்கே வந்த ஆரம்பத்தில், காளி மார்க் சோடாவும், சார்மினார் சிகரெட்டும் வாங்கி வர என்னை கடைக்கு அனுப்புவார்கள்.”

‘சோடா எதற்கு?…”

”…குடிகாரர்களுக்கு, கலந்து குடிக்க. இதை கவனித்த அம்மா, என்னை ரூமில் பூட்டி வைக்க ஆரம்பித்து விட்டாள். பள்ளிக்கூடத்தை விட்டதும், டியூஷனுக்கு அனுப்பி விடுவாள். என்றைக்கும் நான் வீட்டிலிருப்பதை விட வெளியேதான் பாதுகாப்பாக இருப்பேன் என்று, டைபிங், ஷார்ட்ஹேண்ட் படிக்க சேர்த்து விட்டாள். நான் டைபிங் ஹையர் பாஸ் செய்து விட்டேன், நிமிடத்திற்கு 70 வோர்ட்ஸ் டைப் அடிக்க முடிகிறது. தேங்க்ஸ் டு மை லாங் ஃபிங்கர்ஸ். ஷார்ட்ஹேண்ட் லோயராவது தேரவேண்டும்… நான் எழுதும் வேகம் இப்பொழுது நிமிடத்திற்கு 140 வார்த்தைகள் வரை உள்ளது.”

“…எப்படி இவ்வளவு வேகம் உங்களுக்கு கிட்டியது…”

“…வீட்டில் டிரான்சிஸ்டர் ரேடியோ வைத்திருக்கிறேன். டாக்டரம்மா கொடுத்தது. தினமும் 10 நிமிடம், ஆகாஷ்வாணி, ஆல் இன்டியா ரேடியோ ஆகியவைகளின் ஆங்கில செய்திகளை எழுதி பழகுவேன்.”

“…இந்த அறிவு எனக்கு எட்ட வில்லையே மல்லிகா! நான் ஷார்ட்ஹேண்ட் பிராக்டீஸ் செய்யும் பொழுது, ஹிந்தி பாட்டல்லவா கேட்டுக் கொண்டிருப்பேன்!”

“…. உங்கள் ஸ்பீடு 120 வந்து விட்டால், நீங்களும் முயற்சி செய்யுங்கள், ஆரம்பத்தில் சில வார்த்தைகள் தான் எழுத முடியும் பழக பழக, ஸ்பீடு வரும், வார்த்தைகளும் விடுபடாது…”

“…உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்று நம்முடன் பரிட்சை எழுத வந்த அனுராதவிடம் நீங்கள் கூறினீர்களே. அவள் உங்களை வீட்டிற்கும் அழைத்தாளே, போனீர்களா சர்?

“…போனேனே, அது ஒரு கதை. பிரமாதம் ஒன்றும் இல்லை, அப்புறம் இன்னொரு நாளைக்கு சொல்கிறேன்.” நாம் சிற்றுண்டி சாப்பிடும் ஹோட்டலுக்கு பின் புறத்திலுள்ள அடுத்த தெருவில் தான் அவர் வீடு இருக்கிறது. நீங்கள் விரும்பினால் போய்ப் பார்ப்போம்.”

“…எனக்கும் ஹிந்தி சொல்லித் தாருங்கள், பாம்பே போவதற்குள் நன்றாக பேச பழகிக்கொள்கிறேன். எழுத்துக்களை பிக் அப் செய்வதற்கு முன்னர் பேச மட்டும் கற்றுக்கொடுங்கள், அத்துடன், பொருள்களின் பெயர்களையும் சேர்த்து கற்றுக்கொடுங்கள்.”

“..ஸ்போகன் இங்லீஷ் என்னாவது மல்லிகா?”

“…அது கொஞ்சம், இது கொஞ்சம்… ஓகேயா?”

“… ஓகே டன்…”

நேராக ஜங்ஷனுக்கு வந்து த. மு. கட்டிடத்தில் பஸ் ஸ்டாண்ட் பக்கமுள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று காப்பி அருந்தினோம். இருவரும் ஆங்கிலத்திலேயே பேசி சிரித்ததனால், அனைவரும் எங்களையே பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். மல்லிகா காப்பி வாயில் எடுத்து அருந்தும் பொழுதும் அவர் கன்னத்தில் விழுந்த குழி என்னை வெகுவாக மயங்க வைத்தது. மல்லிகாவிடம் அதைச் சொல்லிவிட்டேன். “…சற்றுப் பொறுங்கள்” என்றார். ஞாயிற்றுக்கிழமை ஹிந்து பேப்பரும் வாங்கிக்கொண்டு வழி நெடுக இடையிடையே இங்லீஷும் பேசி இரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அங்கே பிளாட்பாரத்தின் கடைசியில் நெல்லை பெயர் போர்டுக்கு அருகில் தனியாக ஒரு சீட்டில் அமர்ந்தோம். சற்று மக்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன், இருவரும் பேப்பரை தூக்கிப்பிடித்து, மல்லிகா தன் கன்னத்தை எனக்கு குளோஸாக கொண்டுவர, “உம்ம்ம், விளாசுங்கள்” என்றார். கிடைத்த சான்ஸ் தவர விடாமல், என் ஆசை தீர கன்னத்தை ருசி பார்த்தாகி விட்டது. ஒரு மணிக்கு அங்கிருந்து எழுந்து, மீண்டும் சென்ட்ரல் தியேட்டர் பக்கம் வந்தோம். சினிமா பார்க்கலாமா என்றேன். சரி என்று இருவரும் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டு, ஆங்கிலத்திலேயே உறவாடி இரண்டு பால்கனி டிக்கெட் எடுத்துக்கொண்டு, உள்ளே சென்றோம், நாம் ஆங்கிலம் பேசுவதைக்கண்ட சினிமா ஊழியர், எங்களை ஒரு மூலையில் ஒதுங்கிய சீட் பக்கம் கொண்டு சென்று அமரச் செய்தார். அங்கே லைட் எரிந்தாலும், வெளிச்சம் படாது. என்ன சினிமா என்றும் நமக்குத் தெரியாது.

யார் நடித்தது என்ற தகவலும் நமக்கில்லை, எப்பொழுது ஆரம்பித்தது 2 மணி நேரம் என்ன நடந்ததென்றும் நமக்குக் கவலையில்லை, சினிமாவே தலை கீழாக தெரிந்தது. இன்டர்வல் நேரத்தில் லைட் எரிந்தாலும் நமது பக்கம் வெளிச்சம் நேராக படவில்லை, மல்லிகா அவருக்கு நேராக ஹிந்து பேப்பர் தூக்கி பிடித்துக்கொண்டார். மீண்டும் படம் ஆரம்பித்தவுடன் …ஒருவர் மடியிலே ஒருவரடி… என்று நமது கொஞ்சலும் தொடர்ந்தது. அவ்வளவு நேரமும் நமது கைகள் சில்மிஷன் செய்து பதம் பார்த்துக் கொண்டிருந்தன. மல்லிகாவின் கன்னமே ஒரு இடத்தில் நீலமாகியிருந்தது. இந்த புதிய அனுபவத்தை மல்லிகா வெகுவாக ரசித்து, “இது தான் சர் எனக்கு சேஃப்டி வால்வு. இதற்காக நான் பல மாதங்கள் ஏங்கியிருக்கிறேன்…” என்றார். சினிமா ஊழியர் நாம் இருக்கும் பக்கம் வேறு யாரையும் அமரச் செய்யாமலிருந்தது நமக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மாலை 5.30 மணிக்கு வெளியே வந்து, டவுனுக்கு நடந்தே போய் டீ, பிஸ்கெட் சாப்பிட்டு, நிறைந்த மனதுடன், நாளை மீண்டும் சந்திக்க விடைபெற்றோம்.

பஸ்ஸில் ஏரி நல்ல பிள்ளையாக நேரத்தோடு வீட்டை அடைந்தேன். டயர்டாக இருந்ததால், சீக்கிரம் சாப்பிட்டு படுத்துவிட்டேன். கனவுகளிலும் ஊர் சுற்றுவதைப்போலவும் வண்டிகளின் டிராஃபிக் சத்தமும் காதுகளில் ரீங்காரமாக ஒலிக்க தூக்கம் வந்துவிட்டது. மறு நாள் காலையில், 7.30 மணியாகி விட்டது, எழுந்திரு மகனே, ஃபேக்டரிக்கு போகவில்லையா என்று எழுப்பினார் அம்மா. அவர் என்னைத் தொட்டுப்பார்த்து உடம்பு இவ்வளவு சூடாக இருக்கிறதே என்றார். அதைக்கேட்டு நான் எழுந்திருக்க முற்பட்டேன் முடியவில்லை. உடல் முழுக்க சரியான வலி, டெம்பரேச்சர் வேறு. இது என்னவாகிவிட்டது எனக்கு, எப்படி வேலைக்குப் போவது, இன்ஸ்டிடியூட்டிற்கு போவது எப்படி என்று குழம்பிக்கொண்டிருந்தேன். 9 மணிவரை படுத்திருந்து, கஷ்டப்பட்டு 10 மணிக்கு தொழிற்பேட்டை அருகே. வரும் ஈஎஸ்ஐ வேனுக்குச் சென்று, மருந்தை வாங்கிக்கொண்டு டாக்டர் கொடுத்த இரண்டு நாள் லீவு சீட்டை ஃபேக்டரியில் ஒப்படைத்து, வீட்டிற்குத் திரும்பினேன். வழி நெடுக மல்லிகாவின் நினைப்பே. இன்று அவரை காண இயலாதே. எழுந்திருக்கவே முடியலையே என கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். இன்று என்னைக் காணாமல் மல்லிகா என்ன நினைப்பார். தன்னை அனுபவித்து பயந்து விட்டாரோ, வேறு ஏதாவது என்னைப்பற்றி தப்பிதமாக நினைப்பாரோ என்று குழப்பமாக இருந்தது. மருந்து சாப்பிட்டு நன்றாக தூங்கினேன். மாலை 4 மணிக்குத்தான் தூக்கம் கலைந்தது. டெம்பரேச்சர் குறையவில்லை. இன்று இன்ஸ்டிடியூட்டிற்கு போக இயலாது. நாளைத் தான் போக முடியும். ஆகவே, சிறிது ரொட்டி சாப்பிட்டு, மருந்து சாப்பிட்டு மீண்டும் தூங்கி விட்டேன். மறு நாள் டெம்பரேச்சர் குறைய ஆரம்பித்தது. அன்று மாலை உடல் நிலை சரியானாலும், சைக்கிள் மிதிக்க சக்தியில்லாமல் இருந்தது. ஆகவே வீட்டிலேயே இருந்து ஷார்ட்ஹேண்ட் பிராக்டீஸ் தொடர்ந்தேன்.

மூன்றாம் நாள் பஸ் மூலம் இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றேன். டைப் செய்யவே கஷ்டமாக இருந்தது, முடித்து விட்டு திரும்பிப் பார்த்தேன். மல்லிகாவும் சோர்ந்து போய் அமர்ந்திருந்தார். அவராலும் டிக்டேஷன் நோட் செய்ய இயலவில்லையாம். அவரும் 2 நாட்கள் படுத்த படுக்கையாம். இன்ஸ்டிடியூட்டிற்கு அவரும் இரண்டு நாட்கள் வரவில்லையாம். டெம்பரேச்சர், உடல் வலி. இது என்ன உங்கள் இரண்டு பேருக்கும் என்னவாகிவிட்டது என்று சங்கர் எங்களைப் பார்த்துக் கேட்க நாம் இருவரும் குழப்பத்துடன் அவரைப் பார்த்தோம். ஒரே குரலில் இருவரும் “தெரியவில்லை சர்” என்றோம். ஏன் வரவில்லை என்று கேட்டார். மீண்டும் ஒரே குரலில் டெம்பரேச்சர் சர், என்றோம். சங்கர் சிரித்து விட்டார். சரி, நல்லாயிருங்கள் என்று கூறி அமரச்செய்தார். இருவரும் ஜாடையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த ஜோலியின் மகிமைதான் இதற்குக் காரணம் என்று அறிந்துகொண்டோம். மல்லிகாவின் கன்னத்தின் நீல நிறம் மங்கலாக தெரிந்தது. கீழ் உதட்டில் இலேசாக தடிப்பும் தெரிந்தது. சரி, இன்று ஷார்ட்ஹேண்ட் வேண்டாம், ஆங்கிலம் பழகலாம் என்று முடிவெடுத்து உரையாடினோம். மல்லிகா சில வார்த்தைகளையும் பொருள்களின் பெயர்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி கொண்டுவந்திருந்தார். அவைகளை நான் ஹிந்தியில் டிரான்ஸ்லிடரேட் செய்து கொடுத்தேன். உச்சரிப்பும் சொல்லிக்கொடுத்தேன். படிப்பு முடிந்து 8.30 மணிக்கு வெளியே வந்தோம் சங்கருக்கு சற்று டைபிங் வேலை இருந்ததால், அவர் தங்க வேண்டியதாயிற்று. “சரி, நீங்கள் போய் நன்றாக ரெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள், நாளை சந்திப்போம்” என்று விடை கொடுத்தார் சங்கர். சரி சர், குட் நைட் என்று கூறி இருவரும் வெளியே வந்தோம்.

“அந்த மூலை வரை வாருங்கள் சர்..” என்று மல்லிகா அழைக்க, இருவரும் நடந்தே சென்றோம். “சரியான உடல்வலி சர், எழுந்திருக்க முடியவில்லை, இரண்டு நாட்கள் நான் வராமலிருந்ததால், நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கப்போகிறீர்களோ என்று கவலையாக இருந்தது. இன்டரஸ்ட் இல்லாமல் இருக்குமோ என்று நினைப்பீர்களே என்றும் வருத்தமாக இருந்தது.” என்றார்

“அதே தான் என் நிலைமையும் மல்லிகா. அப்படித்தான் நானும் நினைத்தேன். இங்கே வந்த பிறகு தான் நீங்களும் வராமலிருந்ததை தெரிந்துகொண்டேன்.

“ஆனால் ஏனோ இப்படி நமக்கு திடீர் என்று என்ன வந்துவிட்டது?”

“வெகு நேரம் தொடர்ந்து நாம் இருவரும் ஹாட்டாக இருந்திருக்கிறோம். முதல் தடவையானதால் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளவில்லை போலும். “‘இரண்டு மணி நேரம் ஃபிடில் வாசித்திருக்கிறோம், மல்லிகா!! மேலும் நமக்கு திருஷ்டி அதிகம். மற்றவர் கண்களில் பட்டிருக்கிறோம்.”

மல்லிகா மெதுவாக தன் தலைமுடியை, கழுத்திலிருந்த நகர்த்தி, “இது பாருங்கள்” என்று இரண்டு பக்கமும் பார்கச் சொன்னர். அவருடைய சிகப்பான கழுத்தின் இரு பக்கங்களிலும், கன்னத்தின் மீது இருந்தது போல் நீல நிற வடுக்கள் தெரிந்தன.

“..அம்மாவுக்கு தெரிந்து விட்டது சர். தினமும் காலை 8 மணிக்கு நான் எதிர் லைனில் உள்ள 3 பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க போவேன். திங்கள் கிழமை எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தேன். ஜுரம் அடித்தது. அம்மா என் அருகில் வந்து என்னை எழுப்பிச் சென்றார். போனவர் மீண்டும் திரும்பி வந்து, என் உதடு வீங்கியிருப்பதைப் பார்த்து, தாடையைப் பிடித்து, இரு கன்னங்கள் மற்றும், கழுத்துக்கு இருபுறமும் திருப்பிப்பார்த்து விட்டார். சற்று அமர்ந்து, என் தலைமுடியை கோதிக்கொடுத்து, “நேற்று சினிமாவுக்கு போனீர்களா” என்று கேட்டார். ஆமாம் என்று தலையசைத்தேன். அதற்குள் யாரோ அவரை அழைக்க, அப்புறம் பேசலாம், நீ டிபன் சாப்பிட்டு மருந்து வாங்கி வா…” என்று சொல்லி போய்விட்டார்.

“பெண் ஒரு வீணையைப் போலானவள். மீட்டினால் வீணையின் ஒவ்வொரு நாணிலும் வெவ்வேறு விதமான இசை வரும். பெண்ணை மீட்டினாலும் பல சுவைகள் உள்ளதை நான் அன்று தெரிந்து கொண்டேன், சர். என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது எனக்கு. உங்கள் பொன்னான கைகளில் நான் ஒரு வீணையானேன். நீங்கள் மீட்ட மீட்ட பல சுவைகளை அனுபவித்தேன்.”

“…இதைத்தான் 3 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண் என்னிடம் கூறினார். “

“…அது யார் சர், உங்களுக்கு எந்த பெண்ணுடனும் பழக்கம் இல்லை என்றீர்களே?”

“…பழக்கம் தான் இல்லை, பேசினால் தப்பில்லையே. அவளும் வீணையைப்பற்றித்தான் சொன்னாள். அவள் பெயர் கனி, பிரபல கால் கேர்ள், உங்கள் வட்டாரத்தில் கேள்விப்பட்டிருப்பீர்கள்.”

“…. ஒஹ் மை காட்!! அவள் எப்படி உங்களுடன்…?

“…. பொறுமை, மல்லிகா, பொறுமை… அவள் உங்களுக்குத் தெரியுமா?”

“… அவள் பிள்ளைகளுக்கு நான் தானே டியூஷன் சொல்லிக் கொடுக்கின்றேன். என் வீட்டிற்கு எதிர் லைனில் தான் அவள் வீடு. எத்தனைப் பிள்ளைகள் சொல்லுங்கள் பார்க்கலாம்..?”

“…இரண்டு பெண் பிள்ளைகள், மூன்றாவது ஒரு பையன். அவள் பேட்டையில் தான் குடியிருந்தாள். இரண்டு வடுடங்களாக அங்கே காணோம். ..”

“… அவள் இங்கே குடியேறிவிட்டாள். அடிக்கடி, 2 நாள் 3 நாள் பெரிய பார்டிகளுடன் வெளியூர் சென்று விடுவாள். அவள் எப்படி உங்களுக்குத் தெரியும்?!!”

“நான்கு வருடங்களுக்கு முன்னர் அவள் ஒரு பெட்டிக்கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாள். கடையை சரியாக திறப்பதில்லை. கடையில் சரக்கும் கிடையாது. எப்பொழுதும் காலியாகவே இருக்கும். நான் 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பொழுது அவள் கடைக்குப் பேனா நிப் வேண்டும் என்று ‘67-ல் போய் இருக்கிறேன். அப்பொழுது எனக்கு 15 வயது. ‘68 -ல் கடைக்குச் சொந்தக்காரர், அவள் கடையை காலி செய்து அது பல மாதங்க்ளாக மூடியே இருந்தது. அப்பொழுது நான் படிப்பை நிறுத்திவிட்டு, வேலையின்றி சும்மா இருந்தேன். யாரோ ஒருவர் தரகராக செயல்பட்டு அந்த பெட்டிக்கடையை 250 ருபாய்க்கு கடைக்காரரிடம் வாங்கி என்னிடம் கொடுக்க அதில் நான் வியாபாரம் செய்து வந்தேன். ‘67-‘68 –ல் கனி என் கடைக்கு வருவாள், வெற்றிலை பாக்கு சாப்பிட்டு, ஜங்ஷன் பஸ் வரும் வரை கடையாண்டேயே இருப்பாள். குழந்தைகளும் வரும். திரும்பி வரும் பொழுதும் வெற்றிலை பாக்கு வாழைப்பழங்கள், சிகரெட்டு, தீப்பெட்டி ஆகியவை வாங்கிகொண்டு போவாள். அவளைத் தேடி வீட்டிற்கு வரும் கஸ்டமர்களுக்காகவாம். அவள் சந்திக்கும் இக்கட்டான நிலைகள், அவள் இத்தொழிலுக்கு தள்ளப்பட்ட சந்தர்ப்ப சூழ் நிலைகள், மக்கள் அவளுடன் எவ்வாறு நடந்துகொண்டு அழ வைக்கின்றனர் என்று என்னிடம் கூறி, நான் எந்தெந்த இடத்திற்கு போகக்கூடாது என்றும் எச்சரிப்பாள். நெத்தியில் பொட்டு பச்சைக் குத்தியிருப்பாள். அவளிடம் கேட்டாலும் என்னைப்பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். என்னுடன் மிகவும் அன்பாக பேசி அறிவுரை வழங்குவாள். நான் அவளை கனி அக்கா என்று தான் அழைப்பேன்.

“… அவளால் நமக்குள் இன்னும் நெருக்கம் கூடுகிறது இல்லையா?”

“…அவளால் நமக்குள் என்ன நெருக்கம்? அவள் யாரோ, நமக்கு சொந்தம் இல்லை…”

“… இல்லைதான், ஆனால் என்னைப்பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு ரெஃபரென்ஸ்..”

“…சர், யார் சொன்னால் என்ன, என் ராஜா மீது எனக்கு அலாதி அன்பும், நம்பிக்கையும் உண்டு. அம்மா என்ன சொல்லப் போகிறாரோ என்ற கவலை தான் எனக்கு இருக்கிறது.”

“…அவசியப்பட்டால் அம்மாவை சந்தித்து பேச நானும் வருகிறேன்.”

“…வேண்டாம். அம்மாவே முன் வந்து ஏதாவது கேட்டால் பார்ப்போம்.”

இருவருக்கும் மூடு சரியில்லாதது போல் தெரிந்தது. காரணம் ஜுரம்தான். குற்ற உணர்வு ஒன்றும் யாருக்கும் தோன்றவில்லை. ஆனால், பெயர் கெடும் அளவிற்கு போகக் கூடாது என்றும், அந்த மாதிரி செய்கைகளை யோசிக்கவும் கூடாது என்றும் முடிவெடுத்தோம்.

அதற்குள் பேட்டை பஸ் வந்துவிட்டது. டாடா சொல்லி, ஏறிக்கொண்டேன், மல்லிகாவும் திரும்பி, தன் இல்லத்திற்கு சென்று விட்டார்.

மல்லிகா முற்றிலும் என்னிடம் தன்னை அர்பணித்தது போலவே தோன்றினாலும். இப்பழக்கம் தொடர்வது எப்படி சாத்தியமாகும். 2 மாதங்கள் முன்னரே மல்லிகா எச்சரித்ததுபோல், யார்தான் அவரை என் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள். எற்றுக்கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும், நான் எப்படி கேட்க முடியும்? என் வயதென்ன, இது எல்லாம் எனக்கு தேவைதானா? என்னை நானே குழப்பிக்கொண்டு இவைகளெல்லாம் நியாயமான கேள்விகள்தான், யார் கேட்டால் என்ன. ஒரு வேளை, மல்லிகாவின் அம்மாவே கேட்டால், என்னிடம் என்ன பதில் இருக்கிறது? பாம்பே போய், வேலை தேடி, சம்பாதித்து, வாடகை வீடாவது பிடித்து, அதன் பின்னர் பெற்றோரிடம் போராடி, சொந்தங்களை சமாதானப்படுத்தி, அதன் பின்னர் மல்லிகாவின் அம்மாவை திருப்திபடுத்தி, அவர்கள் இருவருடன் நான் வாழ வேண்டும். அல்லது அவர் இருவரும் என்னுடன் இருப்பர். அம்மாவுடன் இருப்பதுதான் மல்லிகாவின் இலட்சியமும். அவரைப்பற்றி தெரிந்தால், என் பெற்றோரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும். எங்களை வீட்டிற்குள் வர விடுவார்களா? இல்லை அவர்களாவது என் வீட்டிற்குள் காலடி வைப்பார்களா? சரி, அது போக, 20 வயதை எட்டிக்கொண்டிருக்கும் எனக்கு சுதாரிக்க இன்னும் குறைந்தது 5 ஆண்டுகளாவது வேண்டுமே. அது வரையில் மல்லிகாவின் வயது 27 ஐ தாண்டிவிடும். அது வரையில் மல்லிகாவின் தாயார் அவளை தன்னுடன் வைத்திருப்பாரா? இதையெல்லாம் யாரிடம் சொல்வது, யார் எனக்கு உதவ முடியும், எப்படி எந்த வகையில் உதவ முடியும் ஏன் யாரும் உதவ வேண்டும்? அது ஒரு நல்ல காரியம் என்று வைத்துக்கொண்டாலும், என் மனதை சமாதானப்படுத்தத்தான் இருக்குமே தவிர, மற்றவர் அவசரத்தால் பாதிக்கப்பட்டவன் என்றுதான் என்னை பழிப்பர். நானில்லாமல் மல்லிகா வேறு வேலையைத் தேடிக்கொண்டு, ஒரு நல்லவரை மணந்து கொண்டு வாழ இயலாதா? அவர் பாம்பே சென்றால், வேலை கிடைக்கும் வரை தான் கஷ்டம், வேலை கிடைத்து விட்டால் அவரைத்தேடி பலர் வருவர். அவர் என்னைவிட வயதிலும் பெரியவர், வேலைக்குத்தேவையான டைபிங் ஹையர் பாஸ் செய்துள்ளார். ஷார்ட்ஹேண்ட் நன்றாக எழுதுகின்றார். ஸ்போகன் இங்கிலீஷ் நன்றாக இருக்கிறது. அவர்தான் பாம்பேக்கு முதலில் போகப்போகிறார். அவருக்கு வேலை கிடைத்து விட்டாலும், நான் டைபிங் கூட தேராமல் அல்லவா இருப்பேன் !!? ஐயோ, என் தலை வெடித்து விடும் போலிருக்கிறது. இத்தனைக் கேள்விகளுக்கும் யார் சரியான பதில் அளிக்கக்கூடும்? மல்லிகாவிடத்திலேயே கலந்தாலோசித்துப் பார்ப்போமா?

“இறைவா! எனக்கு நல் வழி காட்டு. நான் செய்யப்போகும் காரியம் தப்பாக இருந்தால் என்னை தடுத்தி விடு, ஒரு பெண்ணை சேற்றிலிருந்து எடுத்து அவளையும் அவளால் உண்டாகும் சந்ததியினரையும் பழிக்கப்பட்ட தொழிலிலிருந்து பாது காக்க வேண்டும் என்று என் எண்ணம் எனக்கு இருப்பது சரி என்றால், எனக்கு உதவி செய்து காப்பாற்று. எக்காலத்திலும் நான் கெட்டவனில்லை என் இறைவனே… இருப்பினும் “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. நாம் அறிந்து செய்த / அறியாமல் தவறிச் செய்யும் சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக…”

இக்கேள்விகள் அமைதியாக இருந்த என் மனக்கடலில் ஒரு புயலை உண்டாக்கின. ஓங்கிய புயல் அடங்க அதிக நேரம் ஆயிற்று. அத்தனை பிரச்சினைகளுக்கும் பதில் தேட வேண்டிய கட்டாயம் வந்திருப்பதை உணர்ந்தேன். இனி தப்பிக்க இயலாது, இப்படியே விட்டால், பிரச்சினைகள் கூடிக்கொண்டே போகும், எதையும் சால்வ் செய்ய முடியாமல் போகும். நிதார்த்தமான தீர்வு தேவை.

எதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டது போல், மனதில் அமைதியைத் தேடினேன். நாளைப் பார்த்துக் கொள்வோம் இப்பொழுது தூங்கு என் மனமே என்று சொல்லிக்கொண்டே தூங்க முயற்சித்தேன். இரவு 2 மணிக்கு மேல்தான் தூக்கமே வந்தது. அலை மோதும் கொடூர நினைவுகள், அதிக நேரம் தூங்க விடவில்லை.

இலட்சியப் பயணம் – பாகம்-4 – ல் தொடரும்

Print Friendly, PDF & Email

4 thoughts on “பெண் வீணை

  1. Sir I want to read part-4 இலட்சிய பயணம்.bt where is the link sir.plz reply sir.
    Thank u

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *