சைபர் காதலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 23,972 
 
 

“Hi”

“Hi.”

“Do I Know you?”

“Ah இல்ல. Its a random Request. உங்கட கதைகள் வாசிச்சன். Im very much impressed. அதான் உங்க கூட friend ஆகலாம்னு ”

“Oh ok ok thank you ”

“மன்னிச்சுடுங்க உங்கள தொந்தரவு பண்ணி இருந்தா”

“சா சா உங்க complements ku ரொம்ப நன்றிங்க… ”

இப்படி தான் ஆரம்பித்தது கிருஷ்ணனின் சைபர் காதல்….

கிருஷ்ணன் Engineering Training காக தற்காலிகமா இங்கிலாந்தில் வேலை செய்யும் ஒரு பொறியியல் பீட மாணவன். பொழுது போக்கிற்காக அப்பப்போ ஏதும் சிந்தனைகளை கதை என்று நினைத்து எழுதி கதை சொல்லடா தமிழா குழுவில் பகிர்பவன். அவனுடைய நண்பர்களிடம்மட்டும் likes ஐயும் comments ஐயும் வாங்கிக்கொண்டு தன்னை ஒரு எழுத்தாளனாகவே நினைதுக்கொள்பவன். இருப்பினும் ஒரு அறியாத பெண்ணிடம் இருந்து இவ்வாறு வாழ்த்து வருவது என்னமோ இதுவே முதல் முறை. இதனால் அவன் மனதில் ஒரு சிறிய சந்தேகம் இருந்த வண்ணமே இருந்தது.

அந்த பெண்ணினது profile ஐ முழுமையாக சோதனையிட்டான். நடிகைகள் படங்களை தவிர ஒரு படத்தையும் காணாதது அவனை மேலும் சந்தேகம் கொள்ள வைத்தது. மனதில் “alert ஆகிக்கடா ஆறுமுகம்” என்று வடிவேல் டயலாக் ஐ சொல்லிக்கொண்டே அப்பெண்ணுடன் அவதானமாகவே பழகினான்.

அந்த பெண்ணினது பெயர் சந்தியா. பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி. சிரேஷ்ட மாணவர்களின் கட்டுப்பாட்டினால் முகப்புத்தகத்தில் ஏற்றம் செய்த தனது அத்தனை படங்களுக்கும் privacy கொடுத்திருந்தாள்.
சாதாரணமாக சென்று கொண்டிருந்த அவர்களின் உரையாடலில் ஒரு நாள் பொறுமை தாங்காது கிருஷ்ணன் நேராகவே சந்தியாவிடம்

“I couldnt see any of your pics in your profile”

“நிஜமாகவே ஒரு பெண்ணுடன் தான் பழகுகின்றோமா என்ற சந்தேகம் மனதில் தோன்றுகின்றது..” என்றான்.

உடனேயே அவள் தனது அத்தனை படங்களையும் visible செய்து அவனுக்கு காட்டினாள். சந்தியாவின் profile போலி இல்லை என அறிந்து கொண்ட கிருஷ்ணன் அதன் பின் சற்று நெருக்கமாகவே அவளுடன் பழகினான்.

நேர மாற்றம் காரணமாக வேறு நண்பர்களுடன் கதைக்க முடியாமை காரணத்தினாலும், சந்தியாவுக்கும் ஏனோ கிருஷ்ணன் பழகும் விதம், பேசும் விதம் பிடித்தமை காரணத்தினாலும், இருவரும் வேலை மற்றும் விரிவுரை தவிர்ந்த மீதி நேரத்தை அர்ரட்டையிலேயே களித்தனர்.

கிருஷ்ணன் தனது பழைய உடைந்த காதலைப் பற்றியும், சந்தியா தனது ஒரு தலைக் காதலை பற்றியும் கூட சொல்லி விட்டார்கள். இருவரும் அதை சகஜமாகவே எடுத்துக்கொண்டனர். நெருக்கம் அதிகமானதன் விளைவாக ஒருவர் ஒருநாள் வராவிடினும் மற்றவயர் அதை நினைத்து மனம் வருந்தும் நிலைக்கு வந்தனர்.

இவ்வாறு ஒரு நாள் சந்தியா online வராமையினால் அடுத்த நாள் அவள் வருகைக்காக காத்திருந்து சற்று கண்டிப்புடன் காரணம் கேட்டான். அவள் நீண்ட நேர தயக்கத்தின் பின் நேற்று எனது தந்தையின் நினைவு நாள், அதனால் தனது வீட்டுக்கு சென்றிருந்ததாக கூறினாள்.

இத்தனை நாள் இந்த விடயம் அறியாத கிருஷ்ணன் மனம் வருந்தி மனிப்பு கேட்டான்.

“Im sorry, ஏன் இதை பற்றி இவளவு நாள் ஒன்றும் சொல்லயில்ல?”

” மன்னிச்சுடுங்க, என்னோட கம்பஸ் friends கே தெரியாது. எனக்கு அப்பிடி சொல்லிட்டு sympathy தேட விருப்பம் இல்ல. அதான். ஆனா உங்க கிட்ட சொல்லனும்னு தோனிச்சு சொல்லிட்டன்.”

“Thanks”

“எனக்கு பேசுற mood இல்ல, நான் நாளைக்கு பேசட்டுமா?”

“ah Ok sorry again. உங்களுக்கு வாழ்க்கைல எல்லா நல்ல விஷயமும் கட்டாயம் நடக்கும், Im sure you will make your father proud one day. Be supportive to your mother always. Bye for now”

“Thank you for your kind words. I feel better now.

“எனக்கு உங்கள பாக்கணும் போல இருக்கு..”

“எனக்கும்……”

அது வரை மனதில் எந்த எண்ணமும் இல்லது இருந்த கிருஷ்ணனுக்கு அன்று முதல் ஒரு சலனம் ஏற்பட்டது. மேலும் நெருக்கமாக பழகத் தொடங்கினான். என்ன தான் நெருக்கமாக பழகினாலும் இருவரும் ஒருவரையொருவர் தவறாக நினைக்க கூடும் என்ற எண்ணத்தில் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொள்ளவில்லை…

ஆனால் இருவர் மனதிலும் ஒருவரையொருவர் பார்க்கும் ஆசையும் குரலை கேட்கும் ஆசையும் இருந்தது.

நாட்கள் கடந்தன. கிருஷ்ணன் மீண்டும் இலங்கை செல்லும் நாள் கிட்டியது. அவளிடம் தான் வரும் நாளை கூறினான். அவள் சற்றும் தயங்காது உடனேயே “Meet பண்ணலாமா? ” எனக்கேட்டாள்.

கேட்கலாமா வேண்டாமா எனத் தயங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு அவள் அனுப்பியதை வாசித்ததும் இன்பக்கடலில் ஆழ்ந்து போனான். சற்றும் தாமதியாது “for sure, நானே கேட்கலாம்னு இருந்தன்” என்றான்.

விமான நிலையத்திலிருந்து வந்து இறங்கி வீடு சென்று உடைகளை மாற்றிக்கொண்டு அம்மாவிடம் நண்பர்களை காண செல்கின்றேன் எனக் கூறிக்கொண்டு அவளைப்பார்க்க கொழும்பில் உள்ள பிரபலமான ஒரு உணவகத்திற்கு செல்ல வெளிகிட்டான். வந்ததும் வராததுமா என்ன நண்பனை பார்க்க செல்வது என கடிந்துகொண்டதையும் பொருட்படுத்தாது அவசர அவசராமக வெளிக்கிட்டான். சந்தியா தனக்கு பிடிக்கும் என்று சொன்ன “Ferrero Rochers” Chocolate ஐ மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தான்.

கிருஷ்ணன் வருகைக்காக காத்திருந்த சந்தியா முதல் நாள் இரவே தனது நண்பியின் வீட்டிற்கு வந்து தங்கிக்கொண்டாள். சந்திக்கும் நேரத்திற்கு முன்பாக ஒரு சிற்பங்கள் விற்கும் கடைக்கு சென்று அழகிய “மீரா” சிலை ஒன்றை வாங்கிக்கொண்டாள். சிலைக்கு கீழ் எழுதக்கூடிய இடத்தில்,

“இன்று வரை மட்டும் அல்ல,
என்றென்றும், உனக்காக……”
-சந்தியா

என எழுதி அழகாக உறை அணிந்து தனது காதலை இந்த மீரா சிலையின் மூலம் நிச்சயம் தெரிவிக்கும் எண்ணத்தில் சென்றாள். செல்லும் பொழுதெல்லாம் எவ்வாறு தனது காதலை சொல்வது என கற்பனை பண்ணிக்கொண்டே சென்றாள்.

சந்தியாவை பார்க்கும் ஆர்வத்தில் சற்று நேரத்திற்கே உணவகத்திற்கு சென்று அவள் வருகைக்காக காத்திருந்தான் கிருஷ்ணன். பாதையுடன் அமைந்த அந்த உணவகத்தில் கண்ணாடிக்கு அருகில் உள்ள இருவர் அமரும் மேசையினில் இரு “Orange Juice” இனை order செய்து ஆழ்ந்த கற்பனைக்கு சென்றான். காதலை தெரிவிக்கலாமா வேண்டாமா?, இல்லை அவளே அதற்காக தான் அழைத்திருப்பாளா?, எப்படி பேச ஆரம்பிக்கலாம்?, என்னை அடையாளம் காண்பாளா? என மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தான்.

சரியாக கூறிய நேரத்திற்கு பேரூந்தில் இருந்து இறங்கி கிருஷ்ணனை பார்க்க போகும் களிப்பில் ஓட்டமும் நடையுமாக உணவகத்திற்கு விரைந்தாள் சந்தியா. அந்த சிந்தனையில் உணவகத்தையே பார்த்த வண்ணம் சென்ற அவளுக்கு வேகமாக சந்தியில் திரும்பிய வாகனத்தை பார்க்க முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் வானுடன் அடிபட்டு தூக்கி வீசபட்டாள். வாகனத்திலிருந்து பத்து மீட்டர் தொலைவில் இரத்த வெள்ளத்தில் குறை உயிருடன் சற்றும் அசைவின்றி ஒரே பக்கமாக பார்த்த வண்ணம் இருந்தாள். உணவகத்தில் தொலைபேசியில் சந்தியாவின் படங்களை புன்னகையுடன் பார்த்துகொண்டிருந்த கிருஷ்ணனை பார்த்துவிட்டு புன்னகைக்க முற்படும் வேளையில் அவள் மேல் இன்னொரு வாகனம் ஏறிச் சென்றது. அக்கணமே உயிர் பிரிந்தாள்.

இதனைத்தும் அறியாத கிருஷ்ணன் உணவகத்திற்கு வெளியே கூட்டம் கூடுவதை கண்டு விபத்து நடந்திருப்பதை ஊகித்துகொண்டான். ஆர்வம் அழைத்தாலும், சந்தியாவை பார்த்தாக வென்றும் என்ற நினைப்பில் அங்கேயே இருந்து விட்டான்.
வெகு நேரம் ஆகியும் சந்தியாவை காணாத ஏக்கத்தில் ஏமாற்றத்துடன் வீடு சென்றுவிட்டான். கடும் கோபத்திலும் கவலையிலும் அவளின் முகப்புத்தகத்திற்கு சென்று “பிடிக்கேல எண்டா நேர சொல்லி இருக்கலாம் தானே? இப்படி காக்க வைத்து என்னை ஏமாற்றுவதில் என்ன சந்தோசம்? நானா பார்க்க வேணும் என்று கூப்பிட்டன்? இதுவே கடைசி, இனிமேல் உன்னுடன் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை” என கடும் வார்த்தைகளுடன் பெரும் தகவல் ஒன்றை அனுப்பிவிட்டு, படுக்கையில் சாய்ந்துகொண்டான்.
பல மணி நேரம் கழித்து….

” மன்னிச்சுடுடா என்னால வர முடியாம போயிற்று. காரணம் கேட்க வேண்டாம்….” என சந்தியாவின் முகப்புத்தகத்தில் இருந்து தகவல் வந்து இருந்தது…..

உண்மை எதுவும் அறியாத கிருஷ்ணன் கோபம் இருந்தாலும் அவள் மேல் கொண்ட காதலினால் ” சரி நான் நாளைக்கு பேசுறேன் உன்னோட, எனக்கு பயணச் சோர்வாக இருக்கிறது” என்றான்.

அதற்கு “Im sorry again. Catch u tomorrow.” என பதில் வந்தது.

இவ்வாறு சொல்லிவிட்டு timeline ஐ பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சந்தியாவின் நண்பி ஒருவர் ” Rest In Peace Santhiya, We will miss you.” என சந்தியாவின் profile இல் எழுதி இருந்தாள். அதை கிளிக் செய்து பார்க்க முன்னம் அப்பதிவு காணமல் போனது. சந்தியாவின்profile இல் யாரும் பதிவிட முடியாத படி மாறி இருப்பதையும் கவனித்துக்கொண்டான் கிருஷ்ணன்.
உடனடியாக அந்த நண்பியின் profile கு சென்று message இல் “What happend to santhiya? why did you post like that?” என்று கேட்டான்.
அவள் நடந்ததனைத்தையும் கூறினாள். தன்னை காண வரும் போதே விபத்து நடந்ததையும் ஊகித்துக்கொண்ட கிருஷ்ணனுக்கு குழப்பமும் பயமும் பற்றிக்கொண்டது. அப்படியாயின் தனக்கு தகவல் அனுப்புவது யார் என.

மீண்டும் சந்தியாவின் profile இற்கு தகவல் அனுப்பினான்.

“எனக்கு இப்பொழுது உண்மையை கூறு. நீ என்னை பார்க்க வராததன் காரணம் என்ன? கூறாவிட்டால் என்னுடன் பேசுவதை நிறுத்திவிடு.”

சில நிமிடங்கள் கழித்து அவளிடம் இருந்து…

” என் அப்பா திடீர் எண்டு வந்து என்னை கூட்டிக்கொண்டு போய்ட்டார் அவரோட,..”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *