
பெயர்: ஸ்ரீ.தாமோதரன்
பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
- “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது.
- தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன.
- “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
- “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
- “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக இவரது “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவலை தேர்ந்தெடுத்துள்ளது.
- கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள்.
- ‘பாக்யா’ பத்திரிக்கையில் “நானே என்னை அறியாமல்” சிறுகதை வெளிவந்துள்ளது.
- சிறுகதைகள்.காம், வலைதமிழ்.காம், எழுத்து.காம், பிரதிலிபி போன்ற வலைத்தளங்களில் சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் சிறுகதைகள், குழந்தை பாட்டு போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.
ஐயா அவர்களின் கதையை, எனது youtube channel- ல் பதிவிடுவதற்கு எவ்வாறு அனுமதி வாங்க வேண்டும். தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.
oodhamoo@gmail.com வழியாக அனுமதி கேளுங்கள் ஐயா.