வியாதி அல்ல…! விதி..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 3,048 
 
 

அந்தக் கம்பெனிக்கு சூப்ரவைசர் வேலைக்கு ஆள் எடுக்கையில் மேனேஜர் சொன்னதைக் கேட்டு அசந்தே போனான் அசோக்.

‘அப்படியா சார்? நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப் படாதீங்க!’ என்று சொல்லி உறுதியளித்து டியூடியில் சேர்ந்தான்.

அந்தக் கம்பெனி தொழிலாளர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை வேலை நேர நடுவே அதிக நேரம் இடைவெளிவிட்டு ஒவ்வொருவராக காணாமற்போய்க் கொண்டே இருந்தார்கள். எல்லோரும் ஒன்றுகூடி ஏதாவது சதி செய்கிறார்களா? கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தார் முதலாளி.

பணியின் ஊடே வெளியே போபவன் வேறெங்கே போய் கூட்டம் கூடுகிறார்கள்.?! போனஸ் கீனஸ் கேட்டு பெரும் பிரச்சனை செய்யப் போகிறார்களா? ஒவ்வொரு இடமாகத் தேடித் தேடி போனான். கடைசியில் எல்லாரும் வாஷ் ரூமிலிருந்து வெளியே வருகிறார்கள். எல்லாருக்கும் என்ன, வியாதியா? பேதியா? கேண்டீன் உணவு எதும் ஒத்துக் கொள்ளவில்லையோ? இனி அதுவேறு பெரும் பிரச்சனை ஆகக் கூடாதே..?! கேட்டு மிரட்டினால்… எல்லாரும் வாஷ்ரூமில் போய் ரெஸ்ட் எடுக்கறொம்கறானுக!

‘ஏண்டா.. ரெஸ்ட் எடுக்க வேற எடம் கிடைக்கலையா? ஒருத்தன் ஒரு நாளைக்கு பதிமூணு தடவையாடா பாத் ரூம் போவீங்க?’ கேட்டால் முழிக்கிறார்கள். அதிலொருத்தன் ‘நாங்க இங்கதான் இருக்கோம்னு எப்படி கண்டுபிடிச்சீங்க புது சூப்ரவைசர்?’ என்றான் குட்டு வெளிபட்ட கோபத்தில்.

‘டேய்.!. லட்சக் கணக்கில் முதலீடு செய்து கம்பெனி நடத்தறான் முதலாளி. மூலைக்கு மூலை அவன் காமரா செட் பண்ணினது திருட்டைச் செக் பண்ண. நீங்க வாஷ் ரூமில் வாழ்வதை அல்ல!! நீங்க என்னடான்ன வாஷ் ரூம்ல தூங்கி அவரை ஏமாத்தினா என்ன நியாயம்? கேட்டால்..

‘நீங்கதானே அதை ‘ரெஸ்ட்’ ரூம்னீங்க?’ என்று பதிலுக்கு மடக்கினான்.

‘அதுனாலதான் இப்ப மேல்நாட்டுக் காரனே அதை ரெஸ்ட் ரூமுக்கு பதில் வாஷ் ரூம்னு பேரை மாத்தீட்டான். ஒழுங்க வேலை செய்யாதவங்களை வாஷ் அவுட் பண்ணீட வேண்டியதுதான்’ அப்படீனதும் கால்ல விழுந்தானுக சிலர்.

ஏமாற்றுதல் வியாதியல்ல!.. இந்த தேசத்தின் விதி… ! ‘போங்கடா, அதான் பஞ்ச் முறை பயன்பாட்டுக்கு வந்துட்டுது!’ என்றதும் பசங்க பறந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *