உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


 
 
 
 
 
 
 
217 entries.
Ramanujam Parthasarathy from Vijayawada wrote on November 13, 2024 at 6:44 am
டிசம்பர் 2022க்குப்பிறகு சிறுகதைகள்.காம் தளத்தை இப்போதுதான் பார்வையிடுகிறேன். சிறப்பான மாற்றங்களைக் காண்கிறேன். வாழ்த்துகள்!

என் கதைகளில் பெரும்பாலானவை தங்கள் இணையதளத்தில் ஒரே இடத்தில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மறுபிரசுரம் செய்யப்பட்டு இருப்பதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில கதைகள் 1989-1990ல் கணையாழி சிற்றிதழில் பிரசுரம் ஆனவை. பெரும்பாலான கதைகள் 2020-22 காலங்களில் சொல்வனம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் பிரசுரம் ஆனவை. ஒரு கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சாஹித்ய அகாடமியால் வெளியிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் சிறுகதைகள் தளத்தில் மறுபதிப்பு செய்து வைத்திருப்பதற்கு மிகவும் நன்றி.

இன்னொரு மகிழ்ச்சி தரும் விஷயம் நீங்கள் வடிவமைத்திருக்கும் முறை -- design features. மேலும், கதைப்பதிவு நாள், பார்வையிட்டோர் மதிப்பீடு, ஒப்புகை, அச்சிடவும் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பில் பதிவிறக்கவும் வசதி இவை அனைத்தும் கவனமாகச் செய்யப்பட்டு இணையதளத்தின் மதிப்பைக் கூட்டுகின்றன.

கதாசிரியர்கள் சுயவிவரம் பகுதியில் எப்படிப் பதிவிடுவது? உங்களுக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்ப வேண்டுமா?

மீண்டும் வாழ்த்துகளும் நன்றிகளும்!
Admin Reply by: sirukathai
மிக்க நன்றி ஐயா. உங்களுடைய விபரங்களை புகைப்படத்துடன் sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.
v rajagopal from tenkasi wrote on November 9, 2024 at 12:15 am
'சிறுகதைப் பற்றி' என்று எழுதுவது தவறு.
'சிறுகதை' பற்றி என்று எழுதவேண்டும்.
'குறிப்பிட்ட சிறுகதையை'ப்' பற்றி எழுதலாம்.
Admin Reply by: sirukathai
மிக்க நன்றி.
ரா.நீலமேகம் from கோயம்புத்தூர் wrote on October 27, 2024 at 12:04 am
மனதில் சுயமாகத் தோன்றும் எண்ணங்களையும், அனுபவங்கள் மூலம் கிடைக்கும் நிகழ்வுகளையும் என் போன்ற சிலர் எழுத்துகள் வழியாக அல்லது சின்னச்சின்ன கற்பனைகளும் சிறுகதைகள் ஆக வெளியிட எண்ணுகிறார்கள். ஆனால் பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கும்போது என் எழுத்தை யார் ஊக்குவிப்பார்கள், யார் அங்கீகாரம் செய்து வெளியிட முனைவார்கள் என்ற அச்சம் இருந்தது உண்மை. ஆனால் சிறுகதைகள்.காம் என்ற இந்த இணையதளம் இந்த தயக்கத்தை எளிதாக வெளியேற்றி என்னை ஊக்குவித்து, என்னுடைய கதைகளை பிரசுரம் செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள். என்னைப்போன்ற பல புதிய, அறிமுக சிறுகதை எழுத்தாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தி அவர்களின் அந்த திறமையை வெளிக்கொணர்வதற்கு நல்ல உந்துதல் தருகிறது 'சிறுகதை.காம்' தளம். அவர்கள் மேன்மேலும் புகழ் அடையவும், இப்பணி சிறப்பாக அமைய, பல வெற்றிகள் காண்பதற்கு நான் இறைவனை மனமார வேண்டுகிறேன். மீண்டும் நன்றிகள் பல.🙏
Kangaratnam RAMANANANDAN from Windhoek wrote on October 19, 2024 at 11:22 pm
நன்றி.
எஸ்.மைக்கேல் ஜீவநேசன்.தேனி. from தேனி மாவட்டம் wrote on September 23, 2024 at 10:06 am
வெகு ஜன இதழ்கள் புறக்கணித்த காலங்களில் சிற்றிதழ்களே கை கொடுத்தன. சன்மானம் எதிர் பாராமல் சிற்றிதழுக்கான வளர்ச்சியில் பங்கெடுத்து சிறுகதைகள் பதிவு செய்து குறைந்த பட்ச படைப்பாளனாக அறியவரும் எனை போன்ற எழுத்தாளனுக்கு சிறுகதைகள்.காம் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஒரு வரப்பிரசாதம்தான். மகிழ்கிறேன்!
எஸ்.மைக்கேல் ஜீவநேசன்.தேனி. from தேனி wrote on August 25, 2024 at 9:52 am
கதைகள் பெரு இதழிலோ, சிற்றிதழ்களிலோ பிரசுரம் கண்டாலும் பின் காகிதத்திலேயே உறைந்து போகிறது.அலமாரியில் தூசு படிந்து போகும்,இப்போதெல்லாம் கதைகள் அச்சுஅசலாக இணையத்தில் மின்னுகிறது. எப்போதும் எக் கணமும் உயிர்புடன் வைத்திருக்கிறது. வாசகனை வா! வா! வென அழைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி நல்ல காட்சியாக சாட்சியாக சிறுகதைகள்.காம் இருக்கிறது, பாராடலுக்கு உரியது!
இரா. கலைச்செல்வி from சென்னை wrote on July 14, 2024 at 12:42 pm
சிறுகதைகள் .காம் இணையதளத்தின் சேவையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. எனது ஒவ்வொரு கதையும் இந்த இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பொழுது என்னுள் அத்தனை மகிழ்ச்சி. தள ஆசிரியரின் சேவைக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். சிறப்பான தளம்.
ரா.நீலமேகம் from கோயம்புத்தூர் wrote on April 12, 2024 at 12:20 am
சிறுகதைகள்.காம்..இந்த இணையதளத்தின் பணியின் சிறப்பு அளவிட முடியாத ஒன்று. எவ்வளவோ, என் போன்ற மனிதர்கள், மனதில் உருவாகும் பல நல்ல கருத்துக்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணினாலும், அவைகளை ஆதரிக்க, மேலும் ஊக்குவிக்க, பல உதவிகள் தேவை இக்காலத்தில். ஆனால் எளிய முறையில், புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் பல நல்ல கதைகள், கட்டுரைகளை வெளிக்கொண்டு வருவதற்கு இவர்கள் தரும் ஆதரவை கண்டு பிரமிக்கிறேன். உங்கள் பெருமை மேலும் உயர, கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எனக்களித்த ஊக்கத்தை என்றும் மறவேன். நன்றி!
Anoja thaas from Jaffna srilanka wrote on March 10, 2024 at 8:32 am
புதிய முகமாக அறிமுகமானாலும் எனது எழுத்தாக்கத்திற்கு உதவிய இத்தளத்திற்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Kumutha from Salem wrote on March 2, 2024 at 12:42 am
I wrote novels
Admin Reply by: sirukathai
Please check your email, Thanks.
Antonyraj Maria susai manuvel from Kayathar taluk/ Thoothukudi dist wrote on January 16, 2024 at 7:01 am
மிகச்சிறப்பு.
விஜய் from சென்னை wrote on December 28, 2023 at 9:55 pm
அனைவருக்கும் வணக்கம்,

நாம் சிறுகதைகளுக்குக் கருத்துரை (comment) எழுதி பிரசுரித்தப் பின்னர், அதன் தொடர்ச்சியாக வரும் கருத்துரைகளைக் குறித்து நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால் நாம் எழுதும் அதே சிறுகதைக்கு மற்றவர்கள் கருத்துரைகள் எழுதி இருக்கிறார்களா என்பதைப் பார்க்க மீண்டும் மீண்டும் அந்தக் கதையைத் தேட வேண்டியதாக உள்ளது. இதுவே மின்னஞ்சலில் தானியங்கி முறையில் நமக்கு அந்தத் தகவல் வந்து விழுமேயானால் உதவியாக இருக்கும்.

நன்றி
manohar from mysore wrote on April 6, 2023 at 12:08 am
போட்டிகள் நிறைந்த இக்காலகட்டத்தில் புதிய எழுத்தாளர்களுக்கு இத்தளம் ஊக்கத்தை கொடுக்கிறது. அது மேலும் அவர்களை செம்மைப் படுத்த உதவும். உங்கள் தொண்டு வளர்க.
Saradha from Palani wrote on January 27, 2023 at 5:10 am
வணக்கம் நான் எழுதிய சிறுகதைகளை எப்படி பதிவு செய்வது
Admin Reply by: sirukathai
நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது sirukathaigal@outlook.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம். உங்கள் சிறுகதைகள் ஏதேனும் ப்ளாக்-இல் இருந்தால், அந்த தள முகவரியை அனுப்பலாம், நாங்கள் அங்கே இருந்து கதைகள் எடுத்து கொள்வோம். மேலும் விபரங்களுக்கு கேள்வி-பதில்களை படியுங்கள்.
பொ.கருணாகரமூர்த்தி from பெர்லின் - ஜெர்மனி wrote on December 28, 2022 at 10:51 pm
1. கதாசிரியர்களின் பெயர்களை அகரவரிசையில் பட்டியல் / நிரல் இலக்கமிடும் முறையை மாற்றவேண்டாம்.
2. கதாசிரியர்களுக்கு அவர்களின் எந்த எந்தக்கதைகள் இங்கே தரவேற்றப்பட்டுள்ளன என்பதை ஒரே முறையில்/ கிளிக்கில் காணும் வசதிவேண்டும். நன்றி
Admin Reply by: sirukathai
வணக்கம்,

இங்கே அகவரிசை பட்டியல் தரப்பட்டப்பட்டுள்ளது:
https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்/கதையாசிரியர்கள்/

சிறுகதைகள் தளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கதைகளின் ஆசிரியர்கள் பட்டியல்: https://www.sirukathaigal.com/கதையாசிரியர்கள்

என்றும் அன்புடன்,
ஆதரவுக் குழுமம், சிறுகதைகள்.காம்
Valliraja from Chennai wrote on November 1, 2022 at 11:31 am
வணக்கம்.
நான் சிறுகதைகள் எழுதிவருகிறேன். சிறுகதைகள் தளத்திற்கு புதியவள். ஆடியோ கதைகளும் கூற விரும்புகிறேன். தொடர் கதை எழுதலாமா?
நன்றி.
ஸ்ரீ.தாமோதரன் from Chinniampalayam Post wrote on October 19, 2022 at 6:33 am
திரு.பொன்.குலேந்திரன் அவர்கள் இயற்கை எய்துவிட்டதாக செய்தி வந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு நம் வலைத்தளத்தின் அனுதாபங்களை தெரிவித்து கொள்வோமே.
சிறந்த எழுத்தாளர், அறிவியல் பூர்வமான விசயங்களை சொல்வதில் மிகவும் வல்லவர்.அவர்து ஆன்மா சாந்தியடையட்டும்.
aangarai bairavi from Lalgudi wrote on October 16, 2022 at 10:19 pm
அன்பு நண்பருக்கு வணக்கம். இப்பொழுதுதான் தங்கள் இணையத்தை பார்க்க நேர்ந்தது. நான் தேடிக் கொண்டிருக்கிற பல எழுத்தாளர்களின் படைப்புகள் இதில் இடம் பெற்று இருப்பது இந்த மகிழ்ச்சியை தருகிறது. அதேசமயம் எனக்கு நன்கு நெருக்கமான நண்பர்களின் படைப்புகளும் இங்கே அரங்கேறி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது இப்படி ஒரு இணையம் இருப்பதை அவர்கள் எனக்கு சொல்லவில்லை என்கிற வருத்தத்தையும் சேர்த்து தருகிறது ஆனாலும் என்ன பரவாயில்லை இனி தொடர்ந்து தங்களின் இணையத்தை வாசிக்க முயற்சி செய்கிறேன் வாய்ப்பு இருக்கும் பொழுது அவசியம் நானும் எழுதுகிறேன் நன்றி வணக்கம்!
Jeevitha Rajasekaran from Chennai wrote on June 12, 2022 at 2:53 pm
ரொம்ப நாள் கழித்து சிறுகதை படிக்க தொடங்கி இருக்கேன். ரொம்ப நல்ல இருக்கு. மிக்க நன்றி
Jansirani from Singapore wrote on May 27, 2022 at 10:08 am
Thank you for encouraging new and aspiring writers. My only wish is to see readers giving their comments after reading a story. I suggest you include comment box, to tick Like or Dislike. Also encourage readers to guve stars after reading each stories so as to encouage and motivate writers.
Admin Reply by: sirukathai
Thanks for your feedback. Every story page has a Rate Star (up to 5 Star) at the top and comments section at the bottom in both Mobile app and website. Its up to the readers to use that, at present we do not enforce it.

Readers are highly encouraged to give their feedback to recognize the work of various writers and also about this website.