உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


 
 
 
 
 
 
 
210 entries.
kumaarananthan from mallur, salem wrote on July 21, 2012 at 3:16 am
அன்புள்ள கார்த்தி, நான் கே. பாலமுருகன் இந்தப் பெயரில் நான் எழுதத் துவங்கிய சமயத்திலேயே மலேசியாவைச் சேர்ந்த கே. பாலமுருகனும் எழுதி வந்தார். மேலும் சா. பாலமுருகன் ஏற்கனவே இருந்தார். இந்தப் பெயர்க்குழப்பங்கள் படைப்புகளிலும் குழப்பங்களை உண்டாக்கின.
இப்படியாக செந்தில் என்னுடைய கதை. என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி என்னுடைய கதை இல்லை. அது மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகனுடையது.
இந்தக் குழப்பங்களைத் தவிர்க்கவே நான் குமாரநந்தன் என்கிற பெயரில் எழுதி வருகிறேன். உயிர்மையில் வந்த லக்கி மழையை இயக்குபவன் ஆகிய கதைகளை நீங்கள் கவனித்திருக்கலாம்.
கதைகளை நீங்களாகவே அப்லோட் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படிச் செய்யும் போது குறைந்தபட்சம் அக்கதாசிரியரைப் பற்றிய சரியான தகவல்களைப் பெற்று பதிவேற்றுவது நலம். நன்றி.
ரவி சங்கர் from மதுரை wrote on June 27, 2012 at 1:59 pm
உங்கள் தளம் மிகவும் நன்று , சாண்டில்யன் , ரமணி சந்திரன் ,இந்திரா சௌந்தரராஜன் ,மதன் போன்றோரின் படைப்புக்களை பதிவு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்களால் முடியுமாயின் "காவல் கோட்டம்" படைப்பை பதிவு செய்யுங்கள், அது ஒரு தமிழுக்கு அங்கிகாரம் தரும் படைப்பு
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா from சவுதி அரேபியா wrote on April 29, 2012 at 6:42 am
மிகவும் அற்புதமான ஒரு தளம்!!
பார்த்தேன்!! பிரமித்தேன்!!!

புதுமைப்பித்தன், அழகிரி, அண்ணாத்துரை, அகிலன், சுஜாதா இணைப்புகள் மிகவும் நன்று!!

ஏனைய ஆக்கங்களும் தளத்துக்கு பெருமை சேர்க்கின்றன..

வாழ்த்துக்கள்!! தொடருங்கள் தங்கள் திருப்பணியை!!! சந்ததி வாழ்த்தட்டும்!! வாழ்க வளமுடன்!!
ஃ பிர்தவ்ஸ் ராஜகுமாரன் from கோவை wrote on April 24, 2012 at 5:23 pm
நல்ல முயற்சி. ஏற்கனவே பிரசுரமான கதைகளை அனுப்பலாமா..? அல்லது புதிய கதைகளைத்தான் அனுப்ப வேண்டுமா ..? ஒரு கதை அனுப்பினால் போதுமா ..? இல்லை தொடர்ந்தா..? விவரம் ப்ளீஸ் .

ஃ பிர்தவ்ஸ் ராஜகுமாரன்
Elavarasan from Bangalore wrote on April 17, 2012 at 10:59 am
Thanks
Dr.G.Palani from Thiruchengode wrote on April 9, 2012 at 1:42 pm
உங்கள் சீரிய பணிக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கம்.

திருக்குறள் பிளாக்கில், எந்த ஒரு குறளின் ஓரிரு வார்த்தைகளைக்கொண்டு அந்த குறளை தேடும் வசதி இல்லையா அல்லது என்னால் கண்டு அறிய முடியவில்லையா எனப் புரியவில்லை.

என் மின் அஞ்சல் முகவரிக்கு விவரம் அனுப்ப முடியுமா.

ஒருவேளை, அப்படி ஒரு வசதி இல்லாதிருப்பின், ஏற்படுத்த முடிந்தால் என்னைப்போன்றோர் நன்றியோடு இருப்போம்.

மேலும் அந்த பிளாக்கிலேயே “போஸ்ட் எ கமண்ட்” என்ற ஆப்ஷன் இருக்கிறது. ஆனால், அதை சொடுக்கினால் எந்த விளைவும் இல்லையே. இம்மாதிரி சந்தேகங்களை பதியும் வசதியும் அங்கேயே ஏற்படுத்த முடியுமா எனவும் ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
மரு.கோ.பழநி
கவிஞர் இரா .இரவி from madurai wrote on March 9, 2012 at 4:00 pm
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
சொ பிரபாகரன் from தூத்துக்குடி wrote on March 4, 2012 at 12:07 pm
தமிழ் சிறுகதைக்கு இவ்வளவு வலுவான இணையதளம் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எழுத்துருக்களும் சிறப்பாக உள்ளது.

வாழ்த்துகளுடன்

சொ.பிரபாகரன்
arun from madurai wrote on March 3, 2012 at 12:17 pm
Post GOPI KRISHNAN stories
பூங்கோதை wrote on February 28, 2012 at 9:34 am
வணக்கம்.
இப்படி ஒரு தளம் இருப்பது நேற்றுதான் தெரிந்தது. மிகவும் அருமையாக உள்ளது. தங்கள் சீரிய முயற்சிக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

கதைகள் எழுதப்பட்ட ஆண்டையும் முடிந்த வரையில் குறிப்பிட்டால், நன்றாக இருக்கும்.

திருக்குறள் தளத்தில் முன்னுரையில் மு.வ அவர்களின் பெயர் சற்றுத் தவறாக தட்டச்சப்பட்டுள்ளது.