எனது ஒரே மகன் அகஸ்த்தியன் ஒரு பைலட். என் மருமகள் வத்சலா ஒரு டாக்டர்;. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். எனதும், என் மனைவி பூர்ணிமாவினதும் சம்மதத்தோடு தோடும் தான் அவர்கள் திருமணம் நடந்தது. அகஸ்த்தியன் எங்களின் ஒரே மகன் என்றபடியால் சம்மதித்துதானே ஆகவேண்டும். அவர்களுக்கு அகஸ்த்தியன் தம்பதிகளுக்கு அபிமன்யூ என்ற மகன் பிறந்தான். அபி படிப்பில் வெகு கெட்டிக்காரன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே வருவான். பங்களூரில் வசிக்கும் அகஸ்த்தியன் குடும்பம் அடிக்கடி லீவில் சென்னை வருவார்கள். அகஸ்த்தியனுக்கு தான் எப்போதாவது ஒரு நாள் விண்வெளிப் பயணியாக வேண்டும் என்ற கனவு பல காலமாக இருந்து வருகிறது.
“நான் நினைப்பது நடக்குமா அப்பா”? என்று என்னை அடிக்கடி கேட்பான்.
“அகஸ்தியா. உன் கனவு நனவாகுமா என்பதை நாம் நாடி சாஸ்திரக்காரனிடம் கேட்டு விடு
வோமே” என்று அவனுக்குச் சொன்னேன்.
“அப்பா அது நல்ல ஐடியா தான். நாடி சாஸ்திரத்தைப்பற்றி கேள்விபட்டிருக்கிறன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அப்பா” என்றான். மூன்று நாள் லீவில் தனது வருங்காலத்தைப் பற்றி அறியும் திட்டத்தோடு அவன் மட்டுமே சென்னைக்கு வந்தான் .
அவனை அழைத்துக்கோண்டு வைதீஸ்வரன் கோவில் இருக்கும் ஊருக்கு நாமிருவரும் மட்டுமே போனோம். ஏன் மனைவிக்கு பூர்ணிமா உடம்பு சரியில்லாததால் எங்களோடு வரவில்லை. இக்கோவில் உள்ள ஊர் சென்னையில் இருந்து சுமார் 300 கிமீ தூரத்திலும், சீரகாழிக்கு அருகே 7 கிமீ தூரத்திலும் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான கோவிலது. . நாடி சாஸ்திரக்கார்கள் பலர் வாழும்; ஊர். அனேகர் தமது சென்ற காலம் , நிகழ் காலம், வருங்காலத்தைப் பற்றி அறிய இங்கு செல்வதுண்டு. அவர்கள் நாடி சாஸ்திரம் சொல்வதற்கு பாவிக்கப்படுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வட்ட எழுத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள். இது வேதகாலத்தில் சித்தர்களால் எழுதப்பட்டது என்பது பலர் நம்பிக்கை. இந்த சாஸ்திரம் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கிவருகிறது. நாடிச்சென்று சாஸ்திரம் கேட்பதால் நாடிசாஸ்திரம் என்ற பெயர் வந்தது என்பர் சிலர். சாஸ்திரம் கேட்பவர் ஆண் ஆகில் வலது கையின் பெருவிரலின் ரேகையும்,; பெண்ணாகில்;; இடது கையின் பெரு விரல் ரேகையும் பிரதி எடுத்து, ஓலைச்சுவடிகளைத் தேடியபின் பல கேள்விகளை சாஸ்திரம் கேட்க வருபவர்களிடம் கேட்டு, ஆம் அல்லது இல்லை என்று அவர்கள் சொல்லும் பதில்கள் மூலம் தாம் சாஸ்திரம் சொல்லப் போவது சரியானவருக்கா என உறுதி செய்த பின்னர் சாஸ்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
அவ்வூரில்; நாடி சாஸ்திரம் பார்த்துவிட்டு நானும் மகன் அகஸ்தியனும் வீடு திரும்பும் வழியில் அவன் கேட்ட பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லவேண்டி இருந்தது.
“அப்பா, நாடிசாஸ்திரக்காரர், உங்கள் பெயர் சந்திரசேகரன் , அம்மா பெயர் பூர்ணிமா, என் பெயர், என் மனைவி பெயர் எல்லாம் சரியாகச் கொன்னார். உங்களுக்கு நான் ஒருவன்தான் பிள்ளை என்றும், நான் காதலித்து க்டித்த பெண்ணைத் திருமணம் செய்ததாகவும் சொன்னார் . நான் பிரபல வான்வெளி பயனியாவேன் என்றும் என் மகன் வைத்தியத் துஙையில் சேர்ஜனாவான் என்றும் என் மனைவி அரசியலில் ஈடுபட்டு அமைச்சராவாள் என்றார். என் குடும்பத்தின் வருங்காலத்தைப் பற்றி அவரி சொன்னது நடக்குமா என்பது எனக்குச் சந்தேகம். டாக்;டர் தொழில் செய்யும் என் மனைவி வத்சலா எப்படியப்பா அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக முடியும்? எனது மகள் சேர்ஜனாவன் என்று சாத்திரத்தில் சொன்னபடி நடந்தால் நான் சந்தோஷப்படுவேன். அது தான் நான் எதிர்பார்பதும். நாடி சாஸ்திரம் சொன்னவர் பெயர் என்னப்பா”?
“ அவர் பெயர் சிவசங்கர். அவர் எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொன்னது நடந்திருக்கிறது.; பிரானசில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தீர்க்கத்தரிசி மைக்கல் நொஸ்டடெமஸ் என்பவர் பற்றி கேள்விபட்டிருப்பியே. அவரை போல் என்று சொல்”
“நாடி சாஸ்திரம் சொல்லும் போது அவர் கையில் இருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து வாசித்தாரே. அச்சுவடிகள் என்ன அவரின் டைம் மெசினா? கடந்த காலத்துக்கும,; நிகழ்காலத்துக்கும், நிகழப்போகும் காலத்துக்கு கையில் இருக்கும் ஏட்டைபார்த்து சொல்லுகிறாரே அதெப்படி?
“அகஸ்தியா காலத்தில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றிய சார்புக் கொள்கையினை பௌதிக விஞ்ஞானி அல்பேர்ட் அயன்ஸ்டைன் எற்கனவே சமன்பாடுகள் மூலம் விளக்கியிருக்கிறார். ஒளியின் வேகமானது ஒரு செக்கண்டுக்கு சுமார் மூன்று இலட்சம கிமீ. இதுவே நாமறிந்த ஆகிய கூடிய வேகம். ஓளி, ஒரு வருடத்தில் செல்லும் தூரத்தை ஒளி வருடம் என்று வான்வெளியாளர்கள் அழைப்பார்கள். அந்த தூரத்தை ஆங்கிலத்தில் லைட் இயர் (Light Year) என்பார்கள்;.”
என் மகன் பௌதிகத்திலும் விண்வெளித்துறையிலும் அதிக ஆர்வம் உள்ளவன் என்பது எனக்குத் தெரியும். சந்திரனில் முதல் கால் அடி எடுத்து வைத்த ஆரம்ஸ்டோரங் என்பவரைப் பற்றி வாசித்து அறிந்த பின், பைலட்டாக வேலை செய்யும் தானும் ஒரு விண்வெளி வீரனாக வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவான். வானியல் பற்றிய பல நூல்கள் அவன் கேட்டு, நான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆகவே அவனுக்குப் பௌதிகத்துறையில் பேராசிரியரான நான் வாண்வெளிப் பயணம் பற்றி விளக்கம் கொடுத்தேன்.
“அகஸ்தியா நீ விண்வெளி வீரனாக வர வேண்டுமானால் விண்வெளியில் தூரத்தை கணிப்து எப்படி என்று முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும்”, நான் சொன்னேன்.
“அப்பா, நீங்கள் பொளதிகத் துறை பேராசிரியராச்சே. வாண்வெளியில் பூமிக்கும் கிரகங்களுக்கும் இடையிலான தூரத்தை எப்படி கணிப்பது என்று சொல்லுங்கள்.”.
“ கஸ்தியா விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொண்டபடி ஒளியின் வேகம் தான், நாமறிநத வேகங்களில் ஆகக்கூடிய வேகம். ஓளி செகன்டுக்கு சுமார் 300,000 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என பரிசோதனைகள் மூலம் கணித்துள்ளார்கள். ஒரு வருடத்தில் ஒளி பயணம் செய்யும் தூரத்தை கணிப்பதென்றால் 300,000 கிமீ தூரத்தை ஒரு வருடத்தில் உள்ள செகன்டுகளை 300,000 கீமீ ஆல் பெருக்கினால் சுமார் 9.5 டிரிலியம் கிமீ தூரம் வரும்.. இத’ தூரத்தை ஒரு ஒளி ஆண்டு தூரம் என்றார்கள் பல வாண்வெளி ஆராச்சியாளர்கள்.”
“ அடெயப்பா நினைத்து பார்க்க முடியாத அவ்வளவு தூரமா அப்பா”?
“ஆமாம் பூமியில் இருந்து சூரியனதும் ,நட்சத்திரங்களினதும் கிரகங்களினதும் தூரத்தை ஒளி வருடத்திலும் அல்லது வானியல் அலகு எனும் அஸ்டிரோனோமிக்கல் யுளிட்டிலும் (Astronaumical Unit) சொல்லுவார்கள். ஒரு வானியல் அலகு பூமிக்கும் சூரியனுக்கு இடையிலான தூரம் கிட்டத்தட்ட 150 மில்லியன் கிமீ. அதாவது ஓளி சூரியனில் இருந்து பூமியை வந்து சேர கிட்டத்தட்ட 8.3 நிமிடங்கள் எடுக்கும். இத்தூரத்தை ஒரு வானியல் அலகுவாகக் கருதுகிறார்கள். ஒரு ஒளி வருடத்தையும் வானியல் அலகை இணைக்கும் ஒரு ஒளி வருடமானது 63241 வானியியல் அலகுக்கு சமனாகும். பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு போகும் தூரம் சுமார் 29 வானியல் அலகாகும். இவ்வலகை 63241ஆல் பெருக்கினால் ஒளி ஆண்டு தூரம் வரும்.
“முடிவில்லா தூரம் என்று சொல்லுங்கள். இகனால் தான் இந்து மதத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வானியல் தூர கணிப்பைப்பற்றி நான் வாசித்திருக்கிறேன் அப்பா”
“சரியாகச் சொன்னாய். அகஸ்தியா இன்னொன்றை தெரிந்து வைத்துக்கொள். நேரமானது வேகத்தாலும் , ஈரப்பு விசையாலும் பாதிப்படையும். வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, நேர மாற்றம் அதிகரித்து கொண்டே போகும். இதை விண்வெளி வீரர்கள் அவதானித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் மட்டுமே நேர மாற்றத்தை அவதானிக்க முடியும் என்பதில்லை. ஈரப்புச் சக்தி அதிகம் உள்ள பிளக் ஹோல் (Black Hole) என்ற கரும் துளைக்கு அருகே சென்றால் அதன ஈரப்பு விசை நேரத்தை பாதிக்கும்.”
“அப்பா நான் நாடிசாஸ்திரத்தில் சொன்னபடி விண்வெளி பயணியாக வந்தால் நான் யாரும் செய்யாத ஒரு சாதனையைப் படைப்பேன்”
“ என்ன சாதனை படைப்பாய் அகஸ்தியா”?
“ பூமிக்கு அருகே உள்ள கருந்துளைக்கு பயணத்தை மேற் கொண்டு காலத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்து அது உண்மையா என்று அறிய விரும்புகிறேன்”.
“ நல்ல சிந்திக் முடியாத இலட்சியம் தான், ஆனால் அகஸ்தியா நீ நினைப்பது சாத்தியமாகுமா என்பது எனக்கு சந்தேகம். வெகு தூரத்தில் உள்ள கருந்துளையை அடைவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்தால் மாத்திரமே கருந்துளையை அடைய முடியும். அதற்குள் போனால் அதன் ஈரப்பு விசையில் இருந்து தப்பமுடியாது என்பதை நீ அறிந்து கொள்.”
“ தெரியும் அப்பா. நான் பங்களுரில் உள்ள இந்திய விண்வெளி ஆராச்சி நிலையத்துக்கு நான் விண்வெளி வீரனாகும் விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பிக்கப் போறன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள ரொக்ட் விண்வெளிக்கு அனுப்பும் தும்பா என்ற இடத்தில் பயிற்சி கிடைக்கும். அதுசரி அப்பா நீங்கள் பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறை பேராசிரியராயிற்றே கருந்துளை பற்றி மேலும் சொல்லமுடியுமா”
“கருந்துளை (Black Hole) என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந் துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஈரப்புச் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் ‘குவாசார்’ (Quarsar) என்று அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு கருந்துளையை சீனாவில்; உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலை நோக்கி உதவியுடன் கண்டு பிடித்துள்ளனர். கருந்துளைகளை அதன நிறையை வைத்து நான்கு வகையாக வகுத்துள்ளனர். நான்காம் வகையைச் சேர்ந்த சூரியனை விட பல கோடி அதிகமான நிறையுள்ள கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி (Chile) நாடும் உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. நட்சத்திர இறப்பினால் தோன்றும் கருந்துளை; சூரியனின் நிறையிலும் சுமார் மடங்கு கூடியது. சூரியனிலும் பார்க்க பல மில்லியன் நிறை கூடிய கருந்துளைகள் உயர் வகுப்பை சேர்ந்தவை . சூப்பர் நோவாவில் (Super Nova) உள்ள நட்சத்திரஙகள் இறநதபோது தோன்றிய கருந்துளை இதில் ஏ616 மொன் (Mon) என்று பெயரிடப்பட்ட கருந்துளை பூமியில் இருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இகருந்துளை சூரியனின் நிறையை விட 9 முதல் 13 வரை கூடுதலான நிறை உள்ளது என கணித்துள்ளார்கள்;. இதற்கு அடுத்த அருகே உள்ள கருந்துளை 6000 ஒளி ஆண்டுகள் துராத்தில் உள்ளது. இது சூரியனை விட 15 மடங்கு நிறை கொண்டது.
“ கேட்பதற்கு எவ்வளவு சுவர்சியமாக இருக்கிறது அப்பா. இதைபற்றி மேலும் வாசித்தறிய விருப்பப்படுகிறேன். நான் விண்வெளி வீரனாகும் சந்தரப்பம் கிடைத்தால் இதைப்பற்றி அறிந்து வைத்;திருப்பது நல்லதல்லவா. ஒருவேளை என்னை இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் நேர்காணலுக்கு அழைத்து கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கவேண்டாமா”?
“வீட்டுக்குப் போனதும் எனக்கு நினைவு படுத்து, கிப்ஸ் தோர்ன் (Kips Thorn) எழுதிய “கருந்துளையும் நேர பாதிப்பும்” (Black Hole Time Impact) என்ற நூலொன்று எனது லைப்பிரரியில் இருக்கிறது. அதைத் தருகிறேன், அந்நூலை வாசி. அப்போது பிரபஞ்சத்தைப் பற்றி அறிவாய்”, நான் அகஸ்தியனுக்குச் சொன்னேன்.
அகஸ்தியனும் நானும் வீடு திரும்பியதும், இரவு உணவு சாப்பிட்டபின் பின், நித்திரைக்குப் போக முன், அந்நூலை மறக்காமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டான்;. தூங்கமுன் நூல் முழுவதையும் வாசித்துவிட்டு அதை தன் நெஞ்சில் வைத்தபடியே அதன் நினைவாகவே தூங்கிவிட்டான்.
******
ஆகஸ்தியன் எதிர்பார்த்தபடியே ஏ616 மொன் என்ற கருந்துளை நோக்கி பயணிக்க இருக்கும் 3 பேரைக் கொண்ட விண்வெளி வீரர்களில் அகஸ்தியனும் ஒருவனாக தேர்ந்து எடுகக்ப்பட்டான். மற்ற இருவரும்; வடநாட்டவர்கள். மூவரில் குழுவுக்கு பூனாவைச் சேர்ந்த பாரத் என்பவர் கப்டனாக இருந்தார்;. மற்ற வீரரின் பெயர் கல்கத்தாவை சேர்ந்த சௌதிரி.; கருந்துளையைபற்றிய அகஸ்தியனின் அறிவைக் கண்டு பயணிகள் குழுவின் தெரிவுக்காக நேர்காணல் கண்டவர்கள் வியந்தார்கள்.
அவன் விரும்பியபடி அவனது விண்வெளிப் பயணம் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி காலை 9 மணிக்கு கேரளாவில் உள்ள பாம்பா (Pampa) விண்வெளி ரொக்கட்டுகள் பயணிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பமானது என்பதை ரொக்கட்டில் உள்ள கடிகாரம் காட்டியது. அகஸ்தியன் பயணம் செய்த ரொக்கட்டின் பெயர் “சட்டேர்ன்” (SATURN)). கருந்துளை நோக்கிய பயணமாவதாலோ என்னவோ சனியை குறிக்கும் சட்டேர்ன் பெயர் ரொக்கட்டுக்குப் பொருத்தமாக இருந்தது. பெற்றோர்,; மனைவி வத்சலா, மகன் அபிமின்யூ ஆகியொரிடமிருந்து உயிரை பணயம் வைத்து> அகஸ்தியன் விடைபெற்றான். அப்போது நான் ரிட்டையராக ஆறுமாதங்களே இருந்தன.
ஓளியின் வேகத்தின் தொன்னூற்றி எட்டு வகிதத்தில் ரொக்கட் பயணம் செய்தால் சில வருட பயணத்தின் பின் பல கிரங்களைத் தாண்டி கருந்துளையை நோக்கிச் செல்லக்கூடியதாக இருந்தது.
பயணத்துக்கு போதுமான எரிபொருள் இருக்கிறது என்பதை மீட்டர் காட்டியது, குழுவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. குழுவின் கப்டன் பாரத்; பல தடவை வாண்வெளியில் பணம் செய்த அனுபவசாலி. குழுவில் இரண்டாவது பயணி சௌத்ரி, ஒரு பிரமச்சாரி. அவரும் இரு தடவை வாண்வெளியில் பயணம் செய்தவர். அகஸ்தியனுக்கு இப்பயணம் புது அனுபவம். பயிற்சியின் போது ரொக்கட்டில் உள்ள கருவிகளை இயக்குவதையும், மீட்டர்களை வாசிப்பதை பற்றி கற்றுக் கொடுத்திருந்தார்கள். உண்பதற்கு சத்தள்ள மாத்திரைகள் உற்கொள்ளவேண்டியிருந்தது. ஈரப்பு சக்தியில நடக்கக் கூடிய வித்தில் ஆடைகள் அணிந்திருந்தான். அதறகான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. எவ்வளவு தூரம் ரொக்கட்; பயணித்துள்ளது என்பதை ஒளி ஆண்டு; அலகுவில் மீட்டர் காட்டியது. ரொக்கட் பயணிக்கும் வேகத்தை ஒளியின் வேகத்தின் விகிதத்தில் காட்டியது. வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது நேர மாற்றம் பெரிதாகிக் கொண்டு போகும் என்று தன் தந்தை சொன்னது அகஸ்தியன் ஞாபகத்துக்கு வந்தது. அதுவமல்லாமல் கருந்துளையை வெகு சீக்கிரம் போயடையலாம் எனப் பாரத் சொன்னார்
கருந்துளைக்குள் போனால் வெளியேறமுடியாது என்று விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை செய்து பயணிகளை அனுப்பியிருந்தது. 2900 ஒளி ஆண்டு தூரத்துக்கு பயணம் செய்து கருந்துளைக்கு அன்மையில் ரொக்கட்டை நிறுத்தி கருந்துளையை அவதானித்து குறிப்புகள் எடுத்து திரும்பவேண்டும் என்பது குழுவுக்கு ஆராய்ச்சி நிலையம் இட்ட கட்டளை. அதனபடி சட்டெர்ன் ரொக்கட்; கருந்துiளையில் இருந்து 10 ஒளி ஆண்டு தூரத்தோடு பயணத்தை தொடராமல் நிறுத்தியது.
தங்கள் குழுவுக்கு ஐஎஸ்ஆர்ஓ (ISRO) என்ற இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் இட்ட வேலையை சரிவர செய்து முடித்து, திரும்பவும் பூமிக்கு குழு திரும்பிய போது ரொக்கட்டில் உள்ள கடிகாரம் ஜனவரி 20 திகதி 2015 ஆண்டு எனக் காட்டியது. ரொக்கட்டில் இருந்த கடிகாரம் காட்யபடி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கருந்துளைக்குப் போய் வர எடுத்தது என்பதை நினைத்து பார்க்கும் போது தாம் எவரும் கிடைக்காத சாதனையைப் படைத்துவிட்டோம் என குழு நினைத்தது. பூமியை ரொக்கட் வந்தடைந்த போது பாம்பாவில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ பரிபாலன நிலையத்தில் இருந்த கடிகாரம் 2038 ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதியைக் காட்டியது.
“ பூமியின் நேரத்தின்படி நான் என்ன 23 வருடங்கள் இளமையாகிவிட்டேனா? அப்போ நாஙகள் புறப்படும் போது இருந்தவர்கள் இப்போது விண்வெளி ஆராச்சி நிலையத்தில் வேலை செய்யமாட்டார்களே”, என்றார் குழுவின் கப்டன் பாரத்.
23 வருடங்கள் இளமையாகி வீடு திரும்பிய அகஸ்தியனுக்கு இன்னொரு அதிரச்சி காத்திருந்தது, ரொக்கட் இறங்கிய நிலையத்துக்கு தன்னை வரவேற்க மனைவி வத்சலா ஒரு பெரிய கூட்டத்தோடு, பல பொலீஸ் அதிகாரிகள் புடைசூழ வந்திருந்தாள். அவளோடு அபிமன்யு தன் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் வந்திருந்தான். அகஸ்தியனின் கண்கள் அவனது பெற்றோரைத் தேடிற்று. அபிமன்யுவிலும் வத்சலாவிலும்; பல மாற்றங்கள்;. வத்தசலாவின் முகத்தில் வயதின் முதுமை தெரிந்தது. தலை மயிர் நரைத்தவிட்டது.
“ அப்பாவும் அம்மாவும் எங்கே” ? பதட்டத்தோடு அகஸ்தியன் மனைவி வத்சலாவைக் கேட்டான்.
“ அவர்கள் இறந்து 15 வருடங்களாகிவிட்டது” வத்சலா சொன்ன பதில் அவனை அதிர வைத்தது.
“ அது சரி வத்சலா டாக்டரான உனக்கேன் இவ்வளவு பொலீஸ பாதுகாப்பும் கூட்டமும் ”?
“ நான் இப்போ டாக்டராக வேலை செய்வதில்லை . நான் இப்போ மாநில கல்வி அமைச்சர், இவர்கள் என் மக்கள் திராவிட தமிழர் கழக கட்சித் தொண்டர்கள்.” வத்சலாவிடம் இருந்து பதில் வந்தது.
குழப்பம் அடைந்த அகஸ்தியன் அபிமன்யுவைப் பார்த்தான்.
“ அப்பா நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள். என்னை யார் என்று அடையாளம் தெரிகிறதா? நான் தான் உங்கள் மகன் அபிமன்யூ. இது என் மனைவி அகிலா. இவ ஒரு கிட்னி கொன்சல்டன் டாக்டர். அவளுக்கு பக்கத்தில் நிற்பது என் மகன் சேகரனும், மகள் பூர்ணிமாவும். உங்கள் அப்பா அம்மா நினைவாக அவர்கள் பெயரை என் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன். நானும் அகிலாவும் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.”
“அபி நீ இப்ப என்னவாக வேலை செய்கிறாய்”? அகஸ்தியன் மகனைக் கேட்டான்.
“நான் ஒரு ஹார்ட் சேர்ஜன் அப்பா. “அவனிடம் இருந்து பதில் வந்தது
“உங்கள் அனுமதி பெறாமல் உங்களை வரவெற்க நாங்கள் வந்ததுக்கு மன்னிக்கவும்” வதசலா சொன்னாள்.
ஐயோ கடவுளே நாடி சாஸ்திரக்காரன் சொன்னது போல நடந்துவிட்டதா? காலம் அவ்வளவு கெதியிலை கடந்து விட்டது” தன்னையும அறியாமலே புலம்பினான் அகஸ்தியன்.
அவன் புலம்பல் குரல் கேட்டு நானும் மனைவியும் அவன் அறைக்குள் போனோம்.
“தம்பி அகஸ்தியா ஏன் புலம்புகிறாய்? எதாவது கெட்ட கனவு கண்டாயா”?, நான் அவனின் உடலை உசுப்பியபடி கேட்டேன்.
“அகஸ்தியா இப்டித்தான் வெகு நேரம் உன் வீட்டில் தூங்குவாயோ?. காலை பத்து மணியாகிவிட்டது. இதோ சூடான காப்பி கொண்டுவந்திருக்கிறன். குடித்துவிட்டு முதலிலை வத்சலாவுக்கு போன் செய். வத்சலா வைத்தியசாலையில் இருந்து உன்னைக் கேட்டு போன் செய்தவள். எப்போ நீ பிளைட்டில் பங்களுர் திரும்புகிறாய் என்று கேட்டாள்”, பூர்ணிமா மகனுக்கு செய்தி சொன்னாள்.
“ என்ன அதஸ்தியா நான் தந்த கருந்துளை நூல் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டாய் போலத் தெரிகிறது. கருந்துளை பற்றி கனவு ஏதும் கண்டாயா” நான் சிரித்தபடி அவனைக் கேட்டேன்.
அவன் திரு திரு என்று முழித்தான். நடப்பது யாவும் அவனுக்கு குழப்பமாயிருக்கிறது என்பதை அவன் முகம்; காட்டிற்று, அவனுக்குப் பக்கத்தில் உள்ள மேசையில் இரவு பல மணி நேரம் வாசித்த என் “கருந்துளையும் நேர பாதிப்பும்” என்ற நூல் அவனைப்பார்த்து கண்சிமிட்டியது.
(யாவும் கற்பனையே)