கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.சங்கரன்

163 கதைகள் கிடைத்துள்ளன.

அவ ஜெயிச்சுட்டா, மணி!

 

  பரமேஸ்வரனும்,பார்வதியும் நங்க நல்லுரில் ஒரு சின்ன வாடகை வீட்டிலே வசித்து வந்தார்கள்.அவர்களுக்கு குழந்தைகளே பிறக்கவில்லை.கொஞ்ச வருடங்கள் மனம் உடைந்த இருவரும்,வருடங்கள் ஆக,ஆக அந்தத் துக்கத்தை மறந்து வாழ்ந்து வந்தர்கள். பரமேஸ்வரன் ஒரு தனியார் கம்பனியிலே ஒரு ‘ஆபீஸரா’க வேலை செய்து வந்தார். பரமேஸ்வரனின் ஒரே தம்பி ராமசமி,அவர் குடும்பத்துடன் மாம்பலத்தில் வசித்து வந்தார் ராமசாமியின் ஒரே பிள்ளை மணி கல்யாணம் பண்ணிக் கொண்டு, மனைவி சாந்தாவுடன் அப்பா,அம்மாவுடன் ஒன்றாக மாம்பலத்தில் வாழ்ந்து வந்தான். ராமசாமியும்,அவர் மணைவியும்


பாவ மன்னிப்பும் கிடைச்சுது, கூடவே மூணு…

 

  லண்டனுக்கு முப்பது மைல் தூரத்தில் இருந்தது அந்த கவுண்டி.அந்த கவுண்டியிலே வசித்து வந்தான் ஜான். அந்த கவுண்டியிலே மொத்தம் முப்பது வீடுகள் தான் இருந்தது.ஒரு ‘சர்ச்’ம் இருந்தது. அந்த ‘சர்சி’ல் ஒரு ‘பாதர் சுபீரியரும்’,இன்னொரு ‘பாதரும்’ இருந்தார்.’பாதர் சுபீரியர்’ ‘சர்சு’க்கு பாவ மன்னிப்பு கேட்பவர்களுக்கு ‘ஜீஸஸை’ வேண்டிக் கொண்டு ‘பாவ மன்னிப்பு’ அருள் புரிந்து வந்தார். வயது அதிகம் ஆகி விடவே ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் பாவ மன்னிப்பு அருள் புரிந்து விட்டு,மற்ற நாட்களில் ‘பாதரை’


அவசர முடிவு எடுத்தது தப்பு தான்!

 

  அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 சுதா அப்படி கோவத்திலே பேசினதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டான்.மறுபடியும் சுதாவுக்கு ‘போன்’ பண்ணினான் ராஜா.இந்த தடவை சுதாவின் அப்பா தான் ‘போனை’ எடுத்தார். தன் மாமனார் ‘போனில் வந்ததும் ”மாமா,நான் சொல்வதை கொஞ்சம்…”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,அவர் ராஜாவை முழுக்கவே பேச விடவில்லை. அவர் ”சுதா சொன்னது தான் எங்க முடிவும்.இனிமே ‘போனில்’ நீங்க கூப்பிட்டா நாங்க யாரு ம் போனையே எடுக்க மாட்டோம்”என்று சொல்லி போனை வைத்து


அவசர முடிவு எடுத்தது தப்பு தான்!

 

  அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 ராஜா ஆபீஸில் நுழைந்ததும் அவன் பின்னாலே வந்து “குட் மார்னிங்க் சார்” என்று அவனுக்கு வணக்கம் தெரிவித்தாள் அவன் ‘செகரட்ரி’ லதா. ”சார் நீங்க இன்னைக்கு ரொம்ப ‘ட்ரிம்மாக’ இருக்கீங்க.’யூ லுக் க்ரேட் டுடே சார்” என்று ‘ஐஸ்’ வைத்தாள் லதா. “என்ன இன்னைக்கு காத்தாலேயே எனக்கு ஐஸ் வைக்கிறே,என்ன விஷயம் லதா” என்று சொல்லி வழிந்தான் ‘ஆபீஸ்’ மானேஜர் ராஜா. ”நான் ஐஸ்ஸெல்லாம் வக்கலை சார். நான் ’சின்சியரா’த் தான்


உன்னாட்டும் ஒரு ‘ஞான சூன்யமா’…

 

  வேத பாடசாலையிலே பதினைந்து வருடம் வேதம் படித்து விட்டு சென்னைக்கு வந்தார் சிவராம கணபாடிகள்.சென்னைக்கு வந்து கணபதி குருக்கள் இடம் ஒர் ‘அஸிஸ்டெண்டாக’ உபாத் யாய வேலையை செய்து வந்தார். அவருக்கு வயது இருபத்தி மூன்று ஆகும் போது கணபதி குருக்களின் ஒறே பெண்ணான ராஜத்தைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷமே சிவராமன் தம்பதிகளுக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பிறந்தான்.ஒரு குழந்தைக்கு ராமன் என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.