ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 4,254 
 

அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13

மணைவியும் ரகுராமனும் விடாமல் நெருக்கி வரவே,அவருக்கு ‘என்ன சொல்லி இவா ரெண்டு பேரையும் மாத்தறது’ என்று புரியாமல் தவித்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் அவர் “சரி நீங்க ரெண்டு பேர் சொன்னபடியே பண்றேன்.அந்த ‘பக வான்’ விட்ட படி ஆகட்டும்” என்று சொன்னார் குப்புசாமி.

உடனே அவர் கொஞ்சம் கூடப் பிடிக்காமல் தன்னிடம் இருந்த எல்லா நிலங்களையும்,தான் இருந்து வந்த வீட்டையும் எல்லாம் வந்த விலைக்கு விற்று விட்டு,எல்லா பணத்தையும் பீரோவில் வைத்து விட்டு,வீட்டை ஒருவருக்கு விற்று விட்டு,வீடு விற்றவா¢டம் வீட்டை அவருக்குத் தர ஒரு மாசம் அவகாசம் கேட்டார்.

வீட்டை வாங்கினவரும் ஒத்துக் கொண்டார்.

குப்புசாமி,மரகதத்தையும்,ரகுராமனையும் அழைத்துக் கொண்டு காலையிலே கிராமத்தை விட்டு கிளம்பி திருவண்ணாமலைக்குப் போய், ஒரு சின்ன வீடும்,ஒரு ‘மெஸ்’ திறக்க ஒரு இடமும் வாடகைக்கு பார்த்தர்.வீடு நன்றாக இருந்தால் ‘மெஸ்’ஆரம்பிக்க ஒரு சின்ன இடம் கிடைக்கவில்லை. ’மெஸ்’ ஆரம்பிக்க ஒரு நல்ல இடம் கிடைத்தால்,பக்கத்திலே ஒரு சின்ன வீடு வாடகைக்குக் கிடைக்க வில்லை.அன்று பூரா நாளும் மூவரும் திருவண்ணாமலையை சுற்றிப் பார்த்தார்கள்.

சாயங்காலம் ஆகி விடவே அவர் மூனு பேரையும் அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு வந்தார் குப்புசாமி.

மூனு நாட்கள் சுற்றிப் பார்த்த பிறகு அவருக்கு ஒரு சின்ன வீடும் ‘மெஸ்’ திறக்க ஒரு இடமும், பக்கம் பக்கமாகக் கிடைத்தது.ரெண்டு இடத்துக்கும் ‘அட்வான்ஸ்’ கொடுத்து விட்டு குப்புசாமி கிராம த்துக்கு வந்தார்.’கிராமத்லே இருக்கிற என் வீட்டையும், நிலங்களையும் வித்துட்டு,தான் குடும்பத்தோ டு திருவண்ணாமலைக்குப் போகப் போவதாக’ பாலு இடமும், ஆத்து வாத்தியார் இடமும்,தனக்கு ரொம்ப தொ¢ந்த நண்பர்கள் இடமும் சொல்லிக் கொண்டு பணத்தையும்,வீட்டிலே இருந்த எல்லா சாமான்களையும் எடுத்துக் கொண்டு,வீட்டை விற்றவா¢டம் வீட்டை ஒப்படை த்து விட்டு மரகத்தையும், ரகுராமனையும் அழைத்துக் கொண்டு,வருத்தப் பிட்டுக் கொண்டே,தான் இத்தனை வருஷமாக இருந்து வந்த கிராமத்தை விட்டு திருவண்ணாமலைக்குக் கிளம்பி வந்தார் குப்புசாமி.

’அவர் மனம் ‘நாம ரகுராமன் சொன்னபடியே பண்ணி இருக்கோம்.பாக்கலாம் என்ன ஆறதுனு. எல்லாம் அந்த பகவான் விட்ட வழி ஆகட்டும்’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

அடுத்த நாள் ஒரு வாத்தியாரை அழைத்துக் கொண்டு வந்து அந்த வீட்டில் பாலைக் காய்ச்சி குடித்து விட்டு,‘புன்யாவசனமும்’ பண்ணி விட்டு,தான் கொண்டு வந்து இருந்த சாமான்களை அந்த புது வீட்டில் வைத்துக் கொண்டு,மரகதத்துடனும், ரகுராமனுடனும் ‘குடித்தனம்’ பண்ணிக் கொண்டு வந்தார் குப்புசாமி.

‘டெலிபோனில்’ குப்புசாமி அக்காவுக்கும், மன்னிக்கும்,தன் பெண் மங்களத்துக்கும்,மாப்பிள் ளைக்கும் ரகுராமன் எடுத்து இருக்கும் முடிவைச் சொல்லி,அதனால் தான் கிராமத்திலே இருந்த வீட்டையும், நிலங்களையும் விற்று விட்டு திருவண்ணாமலைக்கு வந்து விட்டதாயும் சொல்லி,தான் வாடகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கும் வீட்டின் விலாசத்தை சொல்லி,முடிந்த போது ஒரு தடவை தன்னையும்,மரகதத்தையும், ரகுராமனையும் வந்து பார்த்து விட்டு போகும்படி அழைத்தார்.

உடனே ராமசாமி “முடிஞ்ச போது, நான் நிச்சியமா எல்லோரையும் அழைச்சுண்டு திருவண் ணாமலைக்கு வந்து உங்களை எல்லாம் பாத்துட்டு வறேன்” என்று சொல்லி ‘போனை’ வைத்தார்.

‘மெஸ்’ வாங்கி இடத்தை சுத்தமாக சுண்ணாம்பு அடித்தார்கள் குப்புசாமியும் ரகுராமனும்.

‘மெஸ்’ நடத்தி வர வேண்டிய எல்லா சாமான்களையும்,காஸ் அடுப்புகளையும்,ஆறு ‘டேபிள்’ சேர்களையும்,வாங்கிக் கொண்டு வந்து அந்த ‘மெஸ்ஸில் வைத்தார்கள்.

ரகுராமன் ரெண்டு சமையல் காரர்களை சம்பளத்துக்கு ஏற்பாடு பண்ணீனான்.மூவரும் மார் கெட்டுக்குப் போய் ‘மெஸ்’க்கு வேண்டிய மளீகை சாமான்கள்,காய்கறிகள் வாழை இலை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

ஒரு வாத்தியாரை அழைத்து வந்து,ஒரு நல்ல நாள் பார்த்து ‘மெஸ்’ திறக்க ஒரு சின்ன பூஜை யை பண்ணி விட்டு,குப்புசாமியும்,மரகதமும், ரகுராமனும் அந்த மெஸ்ஸூக்கு “குப்புசாமி மெஸ்” என்று பெயர் வைத்து ஆரம்பித்தார்கள்.

வேலைக்கு வைத்துக் கொண்ட சமையல் காரர்கள் சமையல் வேலையை செய்து வந்தார்கள். ரகுராமன் சமையல் வேலையையும்,சாப்பிட வருகிறவர்களுக்கு ‘சப்ளை’ பண்ணி, அவர்கள் சாப்பிட்டது ‘பில்லு’ம் போட்டு வந்தான் வந்தான்.

மரகதம் கல்லாவில் உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட வந்தவர்கள் சாப்பிட்டு விட்டுப் போனதும், அவர்கள் ‘பில்லை’ வாங்கிப் பார்த்து,அவர்கள் கொடுத்த பணத்தை ‘கல்லாவில்’ வாங்கிப் போட்டு விட்டு மீதி சில்லறையை அவர்களுக்குக் கொடுத்து வந்தாள்.

இது வரைக்கும் பணத்தை கையாலே தொடாமல் இருந்து வந்த மரகதத்துக்கு,சாப்பிட வந்தவர் கள் சாப்பிட்டு விட்டு,கொடுத்த பணத்தை வாங்கி,’கல்லா’வில் போட்டு விட்டு மிதி சில்லறையை கொடுத்து வந்த அனுபவம் ஒரு புது அனுபவமாக இருந்தது.

அவள் சந்தோஷப் பட்டுக் கொண்டு வந்தாள்.

குப்புசாமி வாடகைக்குப் பார்த்த வீட்டு ரொம்பவும் சிறியதாய் இருந்தது.அந்த வீட்டில் ஒரு சமையல் அறையும் ஒரு ஹாலும் தான் இருந்தது.மூவரும் இரவு அந்த ஹாலில் படுத்துக் கொண்டு வந்தார்கள்.

‘மெஸ்’ஸூக்கு வாங்கின மளிகை சாமான்கள்,வாழை இலைகள் எல்லாம் தீர்ந்து போனதும், குப்புசாமி தினமும் காலையிலே எழுந்து,’காபி’ குடித்து விட்டு மார்கெட்டுக்குப் போய் ‘மெஸ்ஸூ க்கு வேண்டிய எல்லா சாமான்களையும் வாங்கிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.

கிராமத்தில் வெறுமனே வீட்டில் இருந்துக் கொண்டு,சில நாள் ரெண்டோ,மூனோ மணி மட் டும் நிலத்தை சுத்திப் பார்த்து விட்டு வந்துக் கொண்டு இருந்த குப்புசாமிக்கு,இப்போ செய்து வந்த வேலை மிகவும் அசதியை கொடுத்தது.அதை பிள்ளைக்காகப் பொறுத்துக் கொண்டு வந்தார்.

‘பையன் நடத்தி வரும் ‘மெஸ்ஸாச்சே.அவன் எப்படியாவது முன்னுக்கு வரணுமே.அவன் நாம செய்யற வேலையை செஞ்சு வர முடியாதே.அவன் மெஸ்’ஸில் இருந்து வரணுமே,மரகதத்தாலும் இந்த வேலையை செய்து வர முடியாதே’ என்று ‘பல்லை கடித்துக் கொண்டு’ தினமும் கடைக்குப் போய் ‘மெஸ்’ஸூக்கு வேண்டிய எல்லா சாமான்களையும், காய்கறிகளையும் வாழை இலைகளையும் வாங்கிக் கொண்டு, ஒரு ‘டெம்போவை’ வைத்துக் கொண்டு ‘மெஸ்ஸூக்கு’ கொண்டு வந்துக் கொண்டு இருந் தார் குப்புசாமி.

‘மெஸ்’ திறந்து மூன்று மாதம் ஆகியது.

’மெஸ்’ வியாபாரத்தில் ஒன்னும் அதிகமான லாபம் வரவில்லை.எல்லா செலவுகளும் போக ’மெஸ்’ஸில் போட்ட பணம் மட்டும் தான் வந்துக் கொண்டு இருந்தது.’மெஸ்’ஸில் மீந்த சாப்பாட்டை குப்புசாமியும் மரகதமும்,ரகுராமனும் எல்லா வேளையும் சாப்பிட்டுக் கொண்டு வந்தார்கள். மரகதத் துக்கு வீட்டில் சமைக்கும் வேலை இல்லை.

குப்புசாமி வருத்தப் பட்டுக் கொண்டு வந்தார்.’மூனு மாசம் ஆகியும் இந்த ‘மெஸ்’ஸில் ஒன்னும் லாபம் வறலே.இன்னும் எத்தனை மாசம் ஆகுமோ ‘மெஸ்’ வியாரத்திலே லாபம் வற’ன்னு கவலைப் பட்டுக் கொண்டு வந்தார்.

அன்று ‘ஆயுத பூஜை’.

பூக்கடை,காய்கறி கடை,மளிகைக் கடை எல்லாவற்றிலும் நல்ல கூட்டம்.குப்புசாமி மெல்ல முண்டி அடித்துக் கொண்டு ‘மெஸ்’ஸூக்கு வேண்டிய எல்லா சாமான்களையும், வாங்கிக் கொண்டு வெளியே வர மணி பண்ணண்டு அடித்து விட்டது.அசதி ஒரு பக்கம், பசி ஒரு பக்கம் குப்புசாமியை வாட்டியது.வழக்கமாக கிடைக்கும் சின்ன ‘டெம்போ’கூட அவருக்குக் கிடைக்கவில்லை.வாங்கின சாமான்களை வைத்துக் கொண்டு,காய்கிற வெய்யிலில் நின்றுக் கொண்டு இருந்தார்.

மணி ஒன்று அடித்து விட்டது.நல்ல வேளையாக அவருக்கு ஒரு சின்ன ‘டெம்போ’ வாடகை க்குக் கிடைத்தது.அதில் எல்லா சாமான்களையும்,காய்கறிகளையும், வாழை இலைகளையும் ஏற்றிக் கொண்டு ‘மெஸ்’க்கு கிளம்பி வந்துக் கொண்டு இருந்தார்.

இவ்வளவு நேரம் ஆகியும் குப்புசாமி வரவைல்லையே என்று கடை வாசலையே பார்த்துக் கொ ண்டு இருந்தார்கள் ரகுராமனும் மரகதமும்.

ஒன்னரை மணிக்கு ‘மெஸ்’ வாசலுக்கு வந்து ‘டெம்போவை’ விட்டு மெல்ல இறங்கினார் குப்புசாமி.

’க்ளீனரை’ப் பார்த்து “எல்லா சாமான்களையும் ‘ரூமில்’ வச்சு விட்டு,காய்கறிக¨ளையும்,வாழை இலைகளையும் சமையல் அறையிலே வச்சுடு” என்று வழக்கமாக சொல்லுவது போல சொன்ன குப்பு சாமிக்கு,பட்டினியும்,அசதியும்,வெய்யிலும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டதால்.’டெம்போவை’ விட்டு கீழே இறங்கினதும் அவர் தலை ‘ரங்க ராட்டினம்’ போல சுற்றியது.

அவர் தலை சுற்றலைச் சமாளிக்க முடியாமல் மெல்ல நடத்து வந்து ‘மெஸ்’ படியிலே மல்லாக் காக விழுந்து விட்டார்.

அவர் தலையிலே பலமாக அடிப்பட்டு ரத்தம் வந்துக் கொண்டு இருந்தது.

தன் கணவர் ‘மெஸ் படியிலே மல்லாக்காக விழுவதைப் பார்த்த மரகதம் உள்ளே இருந்த ரகுரா மனைப் பார்த்து “ரகுராமா,அப்பா கீழே விழுந்துட்டு இருக்கா,ஓடி வாடா” என்று கத்தி கூப்பிட்டு விட்டு கல்லாவை விட்டு எழுந்து வந்து,குப்புசாமி விழுந்து இருந்த இடத்துக்கு ஓடி வந்து,தன் புடவையை கொஞ்சம் கிழித்து,குப்புசாமியை மெல்ல தூக்கி தன் மடி மேலே வைத்துக் கொண்டு,தலையி ல் இருந்து ரத்தம் வரும் இடத்தில் பலமாகக் கட்டினாள்.ஆனால் அவர் தலையில் இருந்து ரத்தம் வரு வது நிற்காமல், ரத்தம் இன்னும் கசிந்துக் கொண்டு தான் இருந்தது.

‘மெஸ்’ஸை விட்டு வெளியே வந்த ரகுராமன் காலியாகப் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட் டோவை கையை தட்டி கூப்பிட்டான்.அந்த ஆட்டோ வந்ததும் ஆட்டோ டிரைவர் உதவியுடன் ரகுராமன் தன் அப்பாவை அந்த ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த ஒரு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ அழைத்துப் போய் அங்கு இருந்த டாக்டர் இடம் காட்டினான்.

அந்த டாக்டர் குப்புசாமி நாடியை பிடித்து பார்த்து விட்டு,தன் கழுத்திலே தொங்கிக் கொண்டு இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்து குப்புசாமியை நன்றாக பரிசோதனைப் பண்ணி விட்டு “தம்பி, ரொம்ப சாரி,இவர் இறந்து பத்து நிமிஷம் ஆவுது”என்று சொல்லி விட்டு காதில் வைத்துக் கொண்டு இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’ மெல்ல கழட்டினார்.
டாகடர் சொன்னதை கேட்டு அப்பா உடம்பு பக்கத்தில் அழுதுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான் ரகுராமன்.

‘மெஸ்’ஸில் இருந்தவர்களை எல்லாம் வெளியே போகச் சொல்லி விட்டு,மரகதம் ‘மெஸ்’கதவை பூட்டிக் கொண்டு,ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு,அருகில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ ஓடினாள்.ரகுராமன் தன் கணவர் பக்கத்தில் அழுதுக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் மரகத்ததுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் உடனே “என்ன ரகுராமா நீ அழுதுண்டு இருக்கே.அப்பா இப்போ எப்படி இருக்கார்” என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தாள்.அம்மாவைப் பார்த்ததும் ரகுராமன் “அம்மா,அப்பா நம்ம ரெண்டு பேரையும் தவிக்க விட்டுட்டு போயிட்டார்ம்மா” என்று தன் தகையிலே அடித்துக் கொண்டு அழுதான்.

ரகுராமன் சொன்னதை கேட்ட மரகதத்துக்கு அதள பாதாளத்தில் விழுந்ததைப் போல இருந்ததது.

கொஞ்ச நேரம் ஆனதும் மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு “எங்க ரெண்டு பேரையும் இப்படி தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டேளே.நீங்க ‘வேணாம்’,’வேனாம்’ன்னு சொன்னப்ப நாங்க ரெண்டு பேரும் உங்க பேச்சே கேக்கலையே.பிடிக்காம திருவண்ணாமலைக்கு வந்து,அந்த சின்ன ஆத்லே இருந்து வந்தது உங்களுக்கு பிடிக்கலையா.ரகுராமன் இந்த ‘மெஸ்ஸை’ நடத்தி வந்து, உங்களே கடைக்குப் போய் மளீகை சாமான்களையும்,காய்கறிகள் வாழை இலையையும் எல்லாம் வாங்கி வரச் சொன்னது பிடிக்காமத் தான் நீங்க எங்க ரெண்டு பேரை விட்டுட்டுப் போயிட்டேளா” என்று அவளும் தன் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்’ சிப்பந்தி ஓடி வந்து “இங்கே நீங்க அழக்கூடாது.இது ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்’.இங்கே பல நோயாளிங்க் இருக்காங்க” என்று சொல்லி விரட்டவே ரகுராமனும்,மரகதமும் தங்கள் அழுகையை அடக்கிக் கொண்டார்கள்.

ரகுராமனும் மரகதமும் குப்புசாமியின் ‘பூத உடலை’ ‘நர்ஸிங்க் ஹோமில் இருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

அப்பா ‘பாடிக்கு’ தலை மாட்டிலே உட்கார்ந்துக் கொண்டு “அப்பா.இந்த ‘மெஸ்’ஸூக்கு ஆசை பட்டு உங்க கிட்டே பிடிவாதம் பிடிச்சு வந்தேன்.இப்ப எனக்கு இந்த ‘மெஸ்’ கிடைச்சு இருக்கு.ஆனா நீங்க எனக்கு இல்லையே.எங்களே தனியா தவிக்க வீட்டுட்டு போயிட்டேளே.’ஒன்னு கிடைச்சா. மத்தொன்னை இழக்கணும்’ன்னு எனக்குத் தொ¢யாம போச்சே” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

ரகுராமன் குப்புசாமி இறந்த விஷயத்தை ‘போன்’ பண்ணி தன் அக்காவுக்கு தொ¢வித்தான்.

விஷயம் கேள்விப் பட்ட மங்களத்துக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அழுதுக் கொண்டே மங்களம் ரகுராமன் சொன்ன விஷயத்தை தன் மாமனார்,மாமியார்,கணவன் எல்லோர் இடமும் சொன்னாள்.மங்களம் தன் குடும்பத்தார் எல்லோரையும் அழைத்துக் கொண்டு குப்புசாமி ‘டெலிபோனில்’ சொல்லி இருந்த விலாசத்தை விசாரித்துக் கொண்டு குப்புசாமி வீட்டுக்கு வந்தார்கள்.

மங்களம் தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.”அம்மா,அப்பா நம்மை எல்லாம்இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போக எப்படி மனசு வந்ததும்மா.அப்பா இப்படி திடீர்ன்னு போயிடுவார்ன்னு நான் கொஞ்சமும் எதிர் பாக்கலையேம்மா” என்று கதறி கதறி அழுதாள்.கொஞ்ச நேரம் ஆனதும் தம்பி ரகுராமனைப் பார்த்து “ரகு,அப்பாவுக்கு எப்படிடா,நம்மை எல்லாம் இப்படி தனியா தவிக்க விட் டுட்டு போக மனசு வந்தது” என்று சொல்லி அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.

ராமசாமியும்,விமலாவும் “குப்பு,நீ போன்லே எங்களே ஒரு தடவை முடிஞ்ச போது வந்து பாத்து ட்டுப் போன்னு கூப்பிட்டே.நாங்க எல்லோரும் இப்போ வந்து இருக்கோம்.ஆனா நீ இப்போ இங்கே இல்லையே.ஏன் எங்களே எல்லாம் விட்டுட்டு இப்படி சீக்கிரமா போயிட்டே.இப்போ நாங்க என்ன பண்ணுவோம்” என்று சொல்லி அழுதார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் இருவரும் மரகதத்துக்கும் ரகுராமனுக்கும் ஆறுதல் சொன்னார்கள். குப்புசாமி இருந்த வீட்டில் ஒரு சின்ன ஹால் மட்டும் இருந்ததால் விமலாவும்,ராமசமியும், ராமநாதனு ம் மங்களத்திடம் சொல்லிக் கொண்டு பக்கத்திலே அவர்களுக்கு ரொம்ப தொ¢ந்த ஒருவர் வீட்டில் இரவை கழித்தார்கள்.

அடுத்த நாள் ரகுராமன் தன் அப்பாவை ‘தகனம்’ பண்ணி விட்டு வந்தான்.

ராமநாதனுக்கு வேலையும்,பெண்களுக்கு படிப்பும் இருந்ததால் மங்களம் அம்மாவிடமும் ரகு ராமன் இடமும் சொல்லிக் கொண்டு தன் ‘வேலை விஷயம்’ பற்றி ஒன்னும் சொல்லாமல் எல்லோரையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.

ரகுராமன் அப்பாவுக்கு ‘பன்னண்டு நாட்கள் காரியங்களை’ எல்லாம் மிகவும் ‘சிரத்தையாக’ செய்து முடித்தான்.பதி மூன்றாம நாள் வீட்டை ‘புண்யாவசனம்’பண்ணினான்.அன்றே ‘மெஸ்’ஸூக்கும் ஒரு ‘புண்யாவசனதை’ப் பண்ணினான்.அம்மாவை வைத்துக் கொண்டு மறுபடியும் ‘மெஸ்’ஸைத் திறந்து வியாபாரம் பண்ணிக் கொண்டு வந்தான்.

மங்களம் வீட்டிலேயே இருந்து வந்தாள்.

அவளுக்கு அவளுடைய அப்பா இப்படி அம்மாவையும், ரகுராமனையும் தவிக்க விட்டு விட்டு திடீரென்று தவறிப் போனது மாளாத துக்கத்தைக் கொடுத்து வந்தது.’ரகுராமன எப்படி தனியா அந்த ‘மெஸ்ஸை’ நடத்தி வருவான்.அம்மாவுக்கு அப்பா தவறிப் போன காயம் ஆற ரொம்ப நாள் ஆகுமே. சந்தோஷமா இருந்து வந்த நம்ம குடும்பம் இப்படி திடீர்ன்னு இப்படி ஆயிடுத்தே’ என்று தினமும் கவ லைப் பட்டு வந்தாள்.

அந்த கவலையை மனதில் சுமந்துக் கொண்டே,அவள் தினமும் காலையிலே குளித்து விட்டு, ஈரப் புடவையுடன் சுவாமிக்கு மந்திரங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு வந்து பகவானைப் பார்த்து ‘பகவானே,சீக்கிரமா அந்த விசாரணைக் குழு அவர்கள் கிளைக்கு வந்து எல்லா விஷயங்களையும் கேட்டு,தனக்கு மறுபடியும் ‘ஆபீ ஸ்’ போக ஒரு நல்ல ஆர்டர் குடுப்பா’ என்று வேண்டி வந்தாள்.

அடுத்த நாள் ராமசாமி விமலா கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு,ரமாவை பக்கத்திலே இருந்த ஒரு ‘நர்ஸரி’ பள்ளிக் கூடத்திற்கு அழைத்துப் போக ரெடி ஆனார்.
உடனே மங்களம் அப்பா,நீங்க சுதாவை ரெண்டு வருஷத்துக்கு திருவண்ணாமலை ‘நர்ஸரி’ பள்ளி கூடத்துக்கு காத்தாலே அழைச்சுண்டு போய்,மத்தியானம் பன்னண்டு மணிக்கு அழைச்சு ண்டு வந்துண்டு இருந்தேள்.இந்த மூனு மாசமா ரமாவை ‘நர்ஸரி’ பள்ளி கூடத்துக்கு காத்தாலே அழைச்சுண்டு போய்,மத்தியானம் பன்னண்டு மணிக்கு அழைச்சுண்டு வந்துண்டு இருக்கேள்” என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டே “எனக்கு இப்போ ‘ஆபீஸ்’ போக வேண்டிய வேலை இல்லே.எனக்கு மறுபடியும் வேலைக்கு வரச் சொல்லி ‘ஆரடர்’ வர வரைக்கும்,நான் ரமாவை பள்ளி கூடம் அழைச்சுண்டு போய்,மத்தியானம் பன்னண்டு மணிக்கு அழைச்சுண்டு வறேன்.நீங்கோ நிம்ம தியா ‘ஹிண்டு’ பேப்பரை படிச்சுண்டு வாங்கோ.நான் ரமாவை பள்ளிக் கூடத்லே விட்டுட்டு,ஆத்து சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை எல்லாம் வாங்கிண்டு வந்துடறேன் ”என்று சொல்லி விட்டு,தன் ‘பர்ஸை’ எடுத்துக் கொண்டு காய் கறிகாய்கள் வாங்கும் பையை எடுத்துக் கொண்டு,ரமாவை அழைத் துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள் மங்களம்.

மங்களம் போவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ராமசாமியும் விம லாவும்.அவர்கள் இருவரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.இருவரும் தினமும் சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு வந்தார்கள்.

ரெண்டு மாசம் போனதும் மங்களம் ‘ஆபீஸில்’ இருந்து ‘விசாரணக் குழு’ நடத்தப் போகும் விசாரணைக்கு இந்த மாசம் பத்தாம் தேதி வரும் படி ஒரு ‘லெட்டர்’ வந்தது.அந்த ‘லெட்டரை’ வா ங்கிப் படித்ததும் மங்களம் மிகவும் சந்தோஷப் பட்டாள்.’லெட்டரை’ தன் மாமனார் மாமியாரிடம் காட்டினாள்.

‘லெட்டரை’ப் படித்த அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்

பிறகு மங்களம் அந்த ‘லெட்டரை’ சுவாமி படத்தின் முன்பு வைத்து “அம்மா தாயே ,நீ தான் அந்த ‘விசாரணக் குழு’ எங்களே கூப்பிட்டு விசாரிச்ச அப்புறமா, எனக்கு ஒரு நல்ல பதிலா தரணும். நான் மறுபடியும் அந்த ‘காஷியர் வேலைக்கு’ப் போய் வரணும்.எனக்கு இந்த உதவியே தயவு செஞ்சு, என்னை காப்பாதும்மா “என்று வேண்டிக் கொண்டு கன்னங்களில் போட்டுக் கொண்டாள்.

உடனே ராமசாமி “அந்த விசாரணைக் குழு உங்க மூனு பேரையும் கூப்பிட்டு விசாரிச்சா உண் மை நிச்சியமா வெளியே வர ‘சான்ஸ்’ இருக்கு.அப்படி உண்மை தொ¢ஞ்சுட்டா,அந்த விசாரணக் குழு மங்களத்துக்கு மறுபடியும் வேலைக்கு வர ‘ஆர்டர்’ குடுப்பா.மங்களம் மறுபடியும் அந்த காஷியர் வே லைக்குப் போய் வருவா” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

உடனே விமலா “உங்க வாய் முஹ¥ர்த்தம் சீக்கிரமா பலிச்சு, மங்களம் மறுபடியும் வேலைக்குப் போய் வரணும்”என்று சொன்னதும் மங்களம்” நானும் அந்த ‘லெட்டரை’ அம்பாள் பாதத்லே வச்சு, அப்பா சொன்னா மாதிரியே வேண்டிண்டு வந்தேன்.அப்பா வாய் முஹ¥ர்த்தம் பலிக்கணும்.எனக்கு மறுபடியும் அந்த வேலை கிடைக்கணும்” என்று சொல்லி மனதில் அம்பாளை வேண்டிக் கொண்டாள்.

சாயங்காலம்தன் கணவன் வீட்டுக்கு வந்ததும்,மங்களம் சுவாமி பாதத்திலே வைத்து இருந்த ‘லெட்டரை’ எடுத்துக் கொண்டு வந்து காட்டி,தான் வேண்டிக் கொண்டதையும்,மாமனார் சொன்ன தையும் சொன்னாள்.உடனே ராமநாதன் “எனக்கும் அப்படித்தான் படறது.அந்த ‘விசாரணக் குழு’ உண்மையை நிச்சியமா கண்டுப் பிடிச்சிடுவா.யார் அந்த பணத்தை ‘கையாண்டு’ இருக்காளோ, அவா ளை ‘டிஸ்மிஸ்’ பண்ணிட்டு, மத்த ரெண்டு பேரை மறுபடியும் வேலைக்கு வரச் சொல்லுவா” என்று சொன்னார்.மங்களமும்,ராமசமியும் விமலாவும் ராமநாதன் சொன்னதை கேட்டு மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

முதல் நாள் கோவிலுக்குப் போய் நன்றாக வேண்டிக் கொண்டு வந்தாள் மங்களம்.அடுத்த நாள் காலையில் எழுந்துமாமியார் கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு,’பாத் ரூம்’ போய் குளித்து விட்டு, சுவாமி ரூமுக்குப் போய் மந்திரங்கள் எல்லாம் சொல்லி அம்பாளை நன்றாக வேண்டிக் கொண்டு, ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு தன்னுடைய ‘ஆபீஸ்க்கு’ப் போனாள்.

தலைமை ‘ஆபீஸ்’ல் இருந்து வந்த விசாரணக் குழு மங்களத்தியும்,மற்ற இருவரையும் விசா ரணைக்குக் கூப்பிட்டு மூன்று மணி நேரம் விசாரித்தார்கள்.விசாரனை முழுக்க முடியாததால்,அந்த குழு மூவரையும் அடுத்த நாளும் விசாரணைக்குக் கூப்பிட்டு விசாரித்தார்கள்.

மங்களம் அம்பாளை நன்றாக வேண்டிக் கொண்டு அடுத்த நாளும் ‘ஆபீஸ்’க்குப் போய், ‘விசாரணை குழு’க் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் எல்லாம் பதில் சொன்னாள்.
நாலு மணிக்கு விசாரனை குழு தங்கள் ‘பரிந்துரையை’ இன்னும் ஒரு மாதத்திற்குள் அனுப்பு வதாக சொல்லி விட்டு கிளம்பிப் போய் விட்டார்கள்.மங்களம் வீட்டுக்கு வந்து நடந்த எல்லா விவரத் தையும் சொன்னாள்.மங்களம் சொன்னதை கேட்டு ராமசாமியும்,விமலாவும் மிகவும் கவலைப் பட்டார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமசாமி “இது என்ன கூத்து.ரெண்டு நாள் முழுக்க மூனு பேரையும் கூப்பிட்டு விசாரிச்சு இருக்கா.உடனே அந்த குழு,அவா என்ன முடிவு பண்ணி இருக்கான்னு சொல் லக் கூடாதா.என்னவோ அவா ‘பரிந்துரையை’ இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே அனுப்புவதா சொல்லி ட்டு கிளம்பிப் போய் இருக்காளே” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

சாயங்காலம் ராமநாதன் ‘ஆபீஸி’ல் இருந்து வீட்டு வந்தவுடன்,மங்களம் தன்னுடைய ‘ஆபீ ஸி’ல் நடந்த எல்லா சமசாரத்தையும் ஒன்னு விடாமல் சொன்னாள்.
“இன்னும் ஒரு மாசம் நாம பொறுத்து இருக்கணுமா.மூனு பேரையும் ரெண்டு நாளா விசாரிச்சு மா,அந்தக் குழுவுக்கு யார் அந்த பணத்தை கையாண்டான்னு கண்டு பிடிக்க முடியலே.இப்பவே சொ ல்ல முடியலேன்னா,இன்னும் ஒரு மாசம் ஆனா மட்டும் புதுசா என்ன கண்டுபிடிக்கப் போறா அந்த விசாரணக் குழு” என்று சொல்லி அலுத்துக் கொண்டார் ராமநாதன்.

ஒன்னரை மாதம் ஆகி விட்டது.

மங்களம் ‘இது வரை ஒரு சமாசாரமும் தொ¢யலையே.எப்போ அந்த விசாரணைக் குழு முடிவு தொ¢ய வரும்” என்று தினமும் கவலைப் பட்டுக் கொண்டு வந்தாள்.

அடிக்கடி தன் கணவா¢டம் கேட்டுக் கொண்டு இருந்தாள்.ராமநாதன் “மங்களம் இந்த மாதிரி ‘கேஸ்’ எல்லாம் ‘ஹெட் ஆபீஸ்க்கு’ப் போன,அந்த விசாரணக் குழு அவா பரிந்துரையை சீக்கிரமாவே சொல்ல மாட்டா.ரொம்ப நாளாகும்.நாம அது வரைக்கும் பொறுமையாத் தான் இருந்துண்டு வரணும்”என்று சொல்லி மங்களத்தை பொறுமையாக இருந்து வரச் சொன்னான்.மங்களமும் தன் கணவர் சொன்னது போல தினமும் தவறாமல் சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தாள்.

ரெண்டு மாதம் ஆனதும் மங்களத்துக்கு ஒரு ‘ரெஜிஸ்தர் லெட்டர்’ வந்தது.மங்களம் கை எழுத் து போட்டு விட்டு ‘போஸ்ட்மேனி’டம் இருந்து அந்த ‘லெட்டரை’ ஆவலாக வாங்கிப் பிரித்துப் படித் தாள்.விமலாவும் ராமசாமியும் பக்கத்தில் கவலையோடு நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

மங்களம் லெட்டரை முழுக்கப் படித்து விட்டு,அழுதுக் கொண்டே”எனக்கு வேலே போயிடுத்து” என்று சொல்லி விட்டு “இந்தாங்கோ அந்த ‘லெட்டர்’ என்று சொல்லி விட்டு, தன் மாமனாரிடம் தன க்கு வந்த ‘ரெஜிஸ்தர் லெட்டரை’க் கொடுத்துவிட்டு ‘பெட் ரூமு’க்குள் போய் கதவை சாத்திக் கொண் டாள்.ராமசாமி மங்களம் கொடுத்த ‘லெட்டரை’ கையில் வாங்கி படிக்க ஆரமபித்தார்.

அதற்குள் விமலா ”ஏன்னா,மங்களம் ‘எனக்கு வேலே போயிடுத்து’ன்னு சொல்லி அழுதுண்டு ‘பெட்’ ரூமுக்கு உள்ளே போயிட்டாளே.என்ன விஷயம் சீக்கிரமா படிச்சு சொல்லுங்கோ” என்று தன் கணவரை அவசரப் படுத்தினாள்.ராமசாமி ‘லெட்டரை’ உரக்கப் படித்தார்.

திருமதி மங்களம் ராமநாதன் அவர்களுக்கு,

விசாரணைக் குழு ‘ரிப்போர்டின்’ படி அன்றைய கலெக்ஷனில் ‘பத்தாயிரம் ரூபாய் குறைவாக மூன்று காஷியர்களும் குறைவாக கட்டிய விவகாரத்தை ‘குற்றப் பிரிவு மேலிடம்’ “மன்னிக்க முடியாத பொ¢ய குற்றம்” என்று தீர்மானித்து விட்டு ‘பரிந்துரையை’ எனக்கு அனுப்பி இருக்கிறது.

‘குற்றப் பிரிவு மேலிடம்’ பரிந்துரையின் படி,நான் என் அதிகாரத்தை உபயோகப் படுத்தி மூன் று ‘காஷியர்களையும்’ உடனே பதவி நீக்கம் செய்துள்ளேன்.

இதனால் நீங்கள் இன்னும் பத்து நாளைக்குள் ‘ஆபீஸ்’க்கு வந்து உங்களுக்கு சேர வேண்டிய மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு போகவும்.

இப்படிக்கு சீப் மானேஜர்.

ராமசாமி லெட்டரைப் படித்து முடித்ததும் “இது என்ன விபா£தம்.மங்களம் அந்த பத்தாயிரம் ரூபாயே திருடலே.மத்த ரெண்டு பேர்லே எவனோ ஒருதனோ,இல்லை ரெண்டு பேரும் சேந்தோ தான் திருடி இருக்கா.இப்ப மூனு காஷியருக்கும் வேலை போய் இருக்கே.இது சா¢யே இல்லையே” என்று அலறினாள் விமலா.

உடனே ராமசாமி “ பணம் ‘ஷார்ட்’ ன்னு வந்ததாலே,அதை அந்த கம்பனியின்’ குற்றப் பிரிவு மேலிடம்’ “மன்னிக்க முடியாத பொ¢ய குத்தம்” ன்னு தீர்மானிச்சு இருக்கு.என்ன பண்றது.எல்லாம் நம்ப போறாத காலம்.இனிமே மங்களம் பாவம் ஆத்லே தான் இருந்துண்டு வரணும்.இல்லாட்டா அவ வேறே ஏதாவது ஒரு வேலையை தேடிண்டு தான் வரணும்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

ஒரு அரை மணி நேரம் கழித்து மெல்ல மங்களம் இருந்த ‘பெட் ரூமுக்கு’ப் போய், அவளை எழுந்து வந்து சாப்பிடச் சொன்னாள்.மங்களமும் அழுதுக் கொண்டே மாமியார் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டாள்.“அப்பா,நான் வெறுமனே ஒரு ‘டெந்த்’ தானே படிச்சு இருக்கேன். அந்த காலத்லே என் படிப்புக்கு வேலை கிடைச்சுது. இப்போ எல்லா இடத்திலேயும் வேலைக்கு ஒரு ‘கிராஜு வேட்’ தானே ‘அப்ளை’ பண்ணச் சொல்றா.கல்யாணம் ஆன கையோடு நான் ஒரு ‘கரெஸ்பாண்டஸ்’ ‘கோர்ஸ்’ சேந்து ஒரு ‘கிராஜுவேட்’ ஆயி இருக்கணும்” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *