ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2020
பார்வையிட்டோர்: 3,470 
 

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12

அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருவரும் “குழந்தை தங்க விக்ரகம் போல இருக்கு. குழந்தை நல்ல கலரும் கூட”என்று புகழ்ந்து விட்டு விமலா கொடுத்த ‘காபி’யை குடித்து விட்டு கொஞ்ச நேரம் இருந்தார்கள்.குப்புசாமியும்,மரகதமும் சம்மந்தி ரெண்டு பேர்,முகத்திலேயும் மாப்பிள் ளை,பொண்ணு முகத்திலேயும் சந்தோஷம் இல்லாமல் இருந்ததை கவனித்தார்கள்.

‘சரி,நாம வெறுமனே இவா படற வேதனையை இன்னும் எத்தனை நாள் பாத்துண்டு இங்கே இருக்கறது’ என்று நினைத்து குப்புசாமி “நாங்க இன்னிக்குப் கிராமத்துக்கு போயிட்டு,குழந்தைக்கு ‘தொட்டில் போடற அன்னைக்கும்’ அன்னைக்கும்,புண்யாவசனத்துக்கும்,’நாம கரணத்துக்கும்’ வறோம்.அப்போ உங்க ஆத்லே ரெண்டு வேளை சாப்பிடறோம்.ரகுராமனுக்கு உடம்பு சரி இல்லே. அவனுக்கு நாலு நாளா ஜுரமா இருக்கு.விஷயம் கேள்விப் பட்டு குழந்தையே பாக்க வறாம இருக்கக் கூடாதுன்னு தான் இப்போ வந்தோம்.நாங்க போயிட்டு வறோம்” என்று சொல்லி விட்டு குப்புசாமி மரகதத்தை அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.

ராமசாமி தம்பதிகள் பத்தாம் நாள் குழந்தைக்கு தொட்டில் போட்டார்கள்.ஆத்து வாத்தியாரை அழைத்து வந்து ‘புண்யாவசனத்தையும்’,’நாம கரணத்தையும்’ பண்ணினார்கள். ராமசாமி தம்பதி களும்,ராமநாதன் தம்பதிகளும் பிறந்த குழந்தைக்கு ‘ரமா’ என்கிற பேரை வாத்தியாரிடம் சொல்லி ‘நாமகரணம்’ செய்தார்கள்.
அந்த ரெண்டு விழாவுக்கும் குப்புசாமியும்,மரகதமும் வந்தார்கள்.

ராமசாமியும் விமலாவும் குப்புசாமியையும் மரகதத்தையும் பார்த்து “இப்போ ரகுராமனுக்கு உடம்பு தேவலையா.ஜுரம் குறைஞ்சு அவன் பழையபடி வேலைக்குப் போய் வறானா” என்று விசாரித்தர்கள்.

உடனே குப்புசாமி “ரகுராமனுக்கு இப்போ ஜுரம் தேவலை.அவன் பழையபடி அந்த சமையல் வேலைக்குப் போய் வறான்.இன்னைக்கு அவனுக்கு ஜோலி இருக்கு நான் வரலேன்னு சொல்லிட் டான்.அதான் நாங்க அவனை அழைச்சுண்டு வரலே.நாங்க மட்டும் தான் வந்து இருக்கோம்” என்று சொன்னார்.ரெண்டு விழாவும் முடிஞ்ச பிறகு,சாப்பிட்டு விட்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

அடுத்த நாள் இரவு மங்களம் தன் கணவனைப் பாத்து “இதே பாருங்கோ.நமக்கு ரெண்டும் பொண் குழந்தை பொறந்து இருக்கு.பிள்ளைக் குழந்தை வேணும்ன்னு நாம ஆசை பட்டு,இன்னொ ரு குழந்தையே பெத்துக்க ஆசைப் படறது ரொம்ப முட்டாள்தனம்.’அடுத்ததும்’ ஒரு பொண்ணா பொறந்துட்டா,மூனு பொண் குழந்தைகளுக்கும் துணி மணீகள் வாங்கிக் குடுத்து, நன்னா படிக்க வச்சு,மூனு பேருக்கும் எல்லா நகைகளையும் போட்டு கல்யாணம் பண்ணி வக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும் நமக்கு” என்று சொன்னாள்.
உடனே ராமநாதன் “நீ சொல்றது ரொம்ப சரி மங்களம்.நாம அத்த தப்பே பண்ணை கூடாது. இந்த ரெண்டு பொண் குழந்தைகளுக்கும் துணி மணீகள் வாங்கிக் குடுத்து, நன்னா படிக்க வச்சு, ரெண்டு பேருக்கும் எல்லா நகைகளையும் போட்டு கல்யாணம் பண்ணி வச்சாலே போறும்” என்று சொல்லி மங்களம் சொன்னதை ஆமோதித்தான்.

மூன்று மாத ‘தாய் பேறு’ விடுமுறை முடிந்ததும்,மங்களம் குழந்தையை மாமியார் இடம் விட்டு விட்டு வேலைக்குப் போய் வர ஆரம்பித்தாள்.வேறே வழி இல்லாமல் விமலா அந்த குழந்தையையும் பார்த்துக் கொண்டு சமையல் வேலையையும் செய்து வந்துக் கொண்டு இருந்தாள்.

எல்லோரும் போன பிறகு விமலா “அன்னைக்கு என்னவோ எல்லா தாத்தவும் பண்ணீண்டு வந்ததே,நானும் பண்ணீண்டு வறேன்னு அலுத்துண்டேளே.எல்லா பாட்டிகளும் சின்ன குழந்தையே வளத்துண்டு வற வேலையே இப்போ நானும் தான் செஞ்சுண்டு வறேன்”என்று சொல்லி அலுத்துக் கொண்டதை கேட்டு ராமசாமி “என்ன பண்றது விமலா.மங்களத்துக்கு அவ ‘ஆபீஸ்’லே குடுத்த லீவு முடிஞ்சிப் போச்சு.அவ மறுபடியும் வேலைக்குப் போய் வறணுமே. அவ குழந்தேயே உன் கிட்ட விட்டுட்டு போய் இருக்கா.எனக்கு உன் வருத்தம் புரியறது,இந்த குழந்தை ஒரு பிள்ளை குழந்தையா இருந் தா,உனக்கு அத்தனை வருத்தம் இருக்காது.அந்த பகவான் நமக்கு ஒரு பேரணைக் குடுக்காம இன் னொரு பேத்தியே தானே தந்து இருக்கார்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் போனதும் “எனக்கு இனிமே ராமநாதன் கிட்ட நம்ம ஆசையே சொல்ல முடியா து.மீறி நான் சொன்னா அவன் உடனே என்னேப் பாத்து ‘அப்பா,இன்னோரு குழந்தை பெத்துண்டா அது ஒரு புருஷக் குழந்தையா பொறக்கும்ன்னு நாம எப்படி சொல்ல முடியும் சொல்லுங்கோ.நம்ம போ றாத வேளைக்கு அந்த குழந்தையும் ஒரு பொண்ணா பொறந்துட்டா,என்னாலும் மங்களத்தாலும் அந்த மூனு பொண் குழந்தைகளை நன்னா படிக்க வச்சு,துணீமணீகள் வாங்கிக் குடுத்து,ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாத்து கல்யாணம் பண்ணிக் குடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கேப்பா’ன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன் சொல்லு.அதனால் நான் இனிமே ராமநாதன் கிட்டே இந்த விஷயத் தே பேசவே போறதில்லே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

விமலாவும் “ஆமாம்.இனிமே நீங்க ராமநாதன் கிட்டே இதைப் பத்தி பேசவே கூடாது.நீங்க சொன்னா அவன் அப்படித் தான் சொல்லுவான்.அடுத்த குழந்தை பிள்ளையாப் பொறக்கறது, நம்ம கையிலே இல்லையே சொல்லுங்கோ.நீங்க மறுபடியும் சொன்னா,அவன் அப்படித் தான் நிச்சியமா சொல்லுவான்.அவா ரெண்டு பேரும் தானே இருந்து வந்து அந்த மூனு பொண்களையும் கடைத் தேத்தி விடணும்.நாம ரெண்டு பேரும் இன்னும் எவ்வளவு வருஷத்துக்கு உயிரோடு இருந்து வறப் போறோம் சொல்லுங்கோ.நம்ப ரெண்டு பேருக்கும் வயசாது.தவிர நம்மால் பண உபகாரமும் இல்லே, சாரீர உபகாரமும் இன்னும் ரொம்ப வருஷத்துக்கு இருக்காதே” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.

மூன்று வருடங்கள் கழித்து ராமநாதன் வேலை செய்து வந்த ‘பாங்கு’அவனுக்கு ‘பிரமோஷன்’ கொடுத்து சென்னைக்கு மாற்றி,சென்னை ‘ஆபீஸில்’ சேர ஒரு மாச அவகாசம் கொடுத்தார்கள்.

உடனே மங்களமும் அவர்கள் ஆபீஸில் ‘தன் கணவனுக்கு சென்னைக்கு மாற்றல் ஆகி இரு க்கறதாலே,தனக்கும் சென்னைக்கு மாற்றல் கேட்டு ஒரு விண்ணப்பம் கொடுத்தாள்.மங்களத்தின் விண்ணப்பத்தை அவள் வேலை செய்து வந்த மேலிடம் பா¢சீலனை செய்து,மங்களத்தையும் சென் னையில் ஒரு கிளைக்கு மாற்றி,அந்த கிளையில் சேர ஒரு மாசம் அவகாசம் கொடுத்தார்கள்.

அந்த வார ஞாயிற்றுக் கிழமை,ராமசாமி,விமலா,ராமநாதன், மங்களம் நாலு பேரும் குப்புசாமி இருந்து வந்த கிராமத்திற்குப் போய், ராமசாமி “ராமதானுக்கு ‘பிரமோஷன்’ கிடைச்சு, அவனை சென் னைக்கு மாத்தல் குடுத்து இருக்கா.உடனே மங்களமும் அவா ‘ஆபீஸ்’க்கு இந்த சந்தோஷ சமாசா த்தே சொல்லி கரணம் காட்டி,அவளும் சென்னைக்கு மாத்தல் வாங்கிண்டு வந்து இருக்கா.நாங்க இன்னும் பத்து நாளைக்குள் திருவண்ணாமலை ஆத்தை காலி பண்ணிட்டு சென்னைக்குப் போக லாம்ன்னு இருக்கோம்.இந்த சந்தோஷ சமாசாரத்தே உங்க கிட்டே சொல்லிண்டு போகத் தான் நாங்க நாலு பேரும் ஒன்னா வந்து இருக்கோம்” என்று சொன்னார்.

உடனே குப்புசாமியும் மரகதமும் “கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீங்க நாலு பேரும் ஒரு வேளை எங்காத்லே சாப்பிட்டுட்டு சந்தோஷமா சென்னைக்கு போங்க.சென்னைக்குப் போய் உங்க ‘ஆம்’ ‘அடரஸ்ஸை’ எனக்கு கொஞ்சம் தொ¢வியுங்கோ.எங்களால் முடிஞ்சப்ப நாங்க சென்னை க்கு வந்து உங்களே பாக்கறோம்” என்று ‘கோரஸாக’ சொன்னார்கள்.

நாலு பேரும் மரகதம் பண்ணி இருந்த சமையலை ரசித்து சாப்பிட்டு விட்டு,குப்புசாமி இடமும் மரகதம் இடமும் சொல்லிக் கொண்டு “நாங்க சென்னைக்குப் போனதும் உங்களுக்கு எங்க ஆத்து விலாசத்தே நிச்சியமா ‘போன்’லே சொல்றேன்” என்று ராமசாமி சொன்னார்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு நாலு பேரும் திருவண்ணாமலைகு வந்து சேர்ந்தார்கள்.

அடுத்த வாரமே ராமநாதனும்,மங்களமும் சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்து விட்டு,ஒரு சின்ன வீடாகப் பார்த்து ‘அடவான்ஸ்’ கொடுத்து விட்டு,ஒரு நல்ல நாளாகப் பார்த்து வாத்தியாரை அழைத்து வந்து,அந்த வீட்டில் பாலைக் காய்ச்சிக் குடித்து விட்டு,‘புண்யாவசனம்’ பண்ணி விட்டு, அந்த வார கடைசியிலேயே திருவண்ணாமலைக்கு வந்து, அவர்கள் இருந்த வீட்டை காலி பண்ணி விட்டு,சாமான்களை எல்லம் ஒரு ‘லாரி’யில் ‘புக்’ பண்ணி விட்டு,அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து,’லாரி’யிலே ‘புக்’ பண்ணி இருந்த சாமான்கள் வந்து சேர்ந்தவுடன் அவர்கள் பார்த்து இருந்த வீட்டில் எல்லோரும் ‘செட்டில்’ ஆனார்கள்.

சொன்னது போல ராமசாமி தங்கள் வீட்டு விலாசத்தை குப்புசாமிக்கு ‘போன்’லே சொன்னார்.

ரகுராமன் பாலு மாமாவிடம் இருந்து சமையல் வேலை நுணுக்கங்களையும் நன்ராக கற்று வந்தான்.பாலு மாமாவே ரகுராமனைப் பார்த்து” ரகு,நீ சமையல் எல்லாம் ரொம்ப பேஷாப் பண்றே. இன்னைக்கு ஒன்னும் சமையல் ‘ஜோலி’ இல்லே.நான் உன் ஆத்துக்கு உன்னை அழைச்சிண்டு போய்,உன் அம்மா, அப்பா,கிட்டே இந்த சந்தோஷ சமாசாரத்தே சொல்லப் போறேன்” என்று சொல்லி சமையல் வேலைக்கு வந்த ரகுராமனை அழைத்துக் கொண்டு குப்புசாமி வீட்டிற்கு வந்தார்.

வாசலில் நின்றுக் கொண்டு இருந்த குப்புசாமி பயந்து விட்டார்.

’என்னடா இது, ரகுராமன் சமையல் வேலைகுப் போய் ஒரு மணி நேரம் கூட ஆகலே.பாலு அவனை அழைச்சுண்டு வறாரே’ என்று பயந்துப் போய் தூரத்தில் பாலு வந்துக் கொண்டு இருக்கும் போதே ” ஏன் பாலு,நீ ரகுராமனை என் ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து இருக்கே.அவன் சமையல் வேலையை நன்னா கத்துக்கலையா” என்று கத்திக் கேட்டார்.

குப்புசாமி இப்படி கத்தி சொன்னதை கேட்ட மரகதம் உடனே வாசலுக்கு ஓடி வந்து “என்ன ஆச்சு.நீங்க எதுக்கு பாலு மாமாவைப் பாத்து இப்படி கத்தி கேட்டுண்டு இருக்கேள்” என்று கேட்டாள். பாலு குப்புசாமி வீட்டுக்கு வந்து “நமஸ்காரம் மாமா” என்று தன் கையைக் கூப்பிக் கொண்டு வந்தார். குப்புசாமி பாலுவை வீட்டுக்கு உள்ளே பயத்துடன் அழைத்துக் கொண்டு போனார்.”வா பாலு. உக்கார். என்ன இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா ரகுராமனை அழைச்சுண்டு எங்காத்துக்கு வந்து இருக்கே” என்று ஒரு வித பயத்துடன் கேட்டார்.

“பயப்படாதீங்கோ மாமா.இன்னைக்கு சமையல் ‘ஜோலி’ ஒன்னும் இல்லே.ரகுராமன் இந்த ஏழு வருஷமா என் கிட்டே இருந்து அவன் எல்லா சமையல் வேலை நுணுக்கங்களையும் நன்னா கத்துண் டுட்டு இருக்கான்.சமையலை ரொம்ப பேஷா பண்றான்.அவன் தனியாவே சமையல் வேலை எல்லாம் பண்றான்” என்று சந்தோஷமாக சொன்னார்.

உடனே போன உயிர் மறுபடியும் வந்தது குப்புசாமிக்கு.

”அப்படியா பாலு.கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ நன்னா ‘ட்ரெயினிங்க்’ குடுத்து இருக் கே.அவனும் நன்னா சமையல் வேலையை கத்துண்டு வந்து இருக்கான்.வாத்தியார் ‘பெஸ்ட்டா’ இரு ந்தா,கத்துக்கற பையனுக்கு என்ன கஷ்டம்”என்று சொல்லி பாலு முதுகிடே தட்டினார் குப்புசாமி.பாலு சொன்ன சந்தோஷ சமாசாரத்தை கேட்டதும்,மரகதம் வழக்கமாக போட்டுக் கொடுப்பதை போல் ‘ஸ்ட்ராங்காக காபி’யை போட்டுக் கொண்டு வந்து பாலு மாமா முன்னால் வைத்தாள்.

பாலு ‘காபி’யை ரசித்துக் குடித்துக் கொண்டு இருக்கும் போது மரகதம் ”நானும் அவரும் ரகு ராமனை உங்க கிட்டே சமையல் வேலை கத்துக்க அனுப்பினோம்.நீங்க அவனுக்கு குடுத்த நல்ல ‘ட்ரெயினிங்க்’தான்,அவனை ஒரு நல்ல சமையல் காரனா ஆக்கி இருக்கு.நாங்க ரெண்டு பேரும் உங் களுக்கு என்ன பிரதி உபகாரம் பண்றதுன்னு தொ¢யாம முழிக்கிறோம்.நீங்க ரொம்ப வருஷம் ரொம்ப நன்னா இருக்கணும்”என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“ மாமி,நீங்கோ குடுத்த ‘காபி’ ரொம்ப நன்னா இருந்தது.உங்க வாய் முஹ¤ர்த்தம் பலிச்சு, நானும் என் குடும்பமும் நன்னா இருந்துண்டு வரணும்” என்று சொல்லி விட்டு ரகுராமனைப் பார்த்து “ரகுராமா,இந்த வாரம் ஞாயித்துக் கிழமை ஒரு ‘ஷ்ஷ்டி அப்த பூர்த்தி’ இருக்கு.நீ என் ஆத்துக்கு காத்தாலேயே வந்துடு.அவா ‘ஷஷ்டி அப்த பூர்த்தி’ காத்தாலேயே பண்ணிக்கப் போறா.நாம சீக்கிரமா சமையலை எல்லாம் பண்ணி முடிக்கணும்” என்று சொன்னதும் ரகுராமன்” மாமா,நான் ஞாயித்துக் கிழ மை காத்தாலே நாலு மணிக்கு எல்லாம் உங்காத்துக்கு வந்துடறேன்,சரியா” என்று சொன்னதும்,பாலு கொஞ்ச நேரம் குப்புசாமியிடம், மரகத்தத்துடனும் பேசிக் கொண்டு இருந்து விட்டு அவர் வீட்டுக்குப் போனார்.

பாலு மாமா கிளபிப் போனவுடன் ரகுராமன் தன் அம்மா அப்பாவைப் பார்த்து “அப்பா, அம்மா, நான் இந்த ஏழு வருஷமா சமையல் வேலை எல்லாம் நன்னா கத்துண்டுட்டு இருக்கேன்.சமையல் வேலைக்கு நான் பாலு மாமா கூடப் போனா,அவர் எனக்கு அவருக்கு வர பணத்தில்,எனக்கும், மத்த ரெண்டு சமையல் காரனுக்கும் கொஞ்சமாத் தான் தறார்.மீதி பணத்தே அவரே வச்சுண்டுறார்.தவிர அவர் இந்த சமையல் வேலையை மட்டும் நம்பிண்டு இல்லே.அவருக்கு ரெண்டு ஏக்கர் நஞ்சை நில மும்,ரெண்டு ஏக்கர் புஞ்சை நிலமும் இருக்கு.அவர் சாப்பாட்டுக்கு இந்த சமையல் வேலை ஒன்னை நம்பிண்டு இல்லே.அதனால்லே நான் என்ன சொல்றேன்னா,நாம எல்லாம் திருவண்ணாமலைக்குப் போய் ஒரு சின்ன ‘மெஸ்ஸா’ தொறந்து,அந்த ‘மெஸ்லே’ நான் இன்னும் ரெண்டு சமையல் காராளை வச்சுண்டு எல்லா சமையலையும் பண்றேன்.நீங்கோ ரெண்டு பேரும் கல்லாவிலே இருந்துண்டு வாங் கோ.ரெண்டு வருஷத்துக்குள்ளே நான் காலை நன்னா ஊனிண்டு விடுவேன்” என்று சொன்னான்.

குப்புசாமிக்குத் தூக்கி வா¢ப் போட்டது.

அவர் உடனே “என்ன சொல்றே ரகுராமா.திருவண்ணாமைக்குப் போய் ஒரு ‘மெஸ்’ தொறக்க றதுன்றது அவ்வளவு சுலபமான காரியமா.அதுக்கு நாம மூனு பேரும் திருவண்ணாமலைக்குப் போய் நாம இருந்துண்டு வறதுக்கு ஒரு சின்ன ‘ஆமா’ப் பாக்கணும்.அதே பண்ண நாம மூனு பேரும் திரு வண்ணாமலையிலே ஒரு ஹோட்டல்லே தங்கணும்.திருவண்னாமலையை பூரா சுத்திப் பாத்து,நாம இருந்து வர ஒரு சின்ன ஆமாப் பாக்கணும்.அந்த ஆத்துக்கு கிட்டே இருக்கிறா மாதிரி ஒரு நல்ல இட மா ‘மெஸ்’ஸ¤க்குப் பாக்கணும்.அப்படி ரெண்டும் கிடைச்சா,அந்த ரெண்டுத்துக்கும் முதல்லே நாம ஒரு ஆறு மாச ‘அட்வான்ஸா’வது தரணும்.இதுக்கு எல்லாம் ரொம்ப பணம் செலவு ஆகுமே.அவ்வளவு பணத்துக்கு இப்போ நாம் எங்கே போறது” என்று பயத்துடன் கேட்டார்.

’இது என்னடா ரகுராமன் ஒரு ‘மெஸ்’ ஆரம்பிக்கலாம்னு கேட்டா,இவர் ஒரு குண்டைத் துக்கிப் போடறாரே’ என்று ஒன்னும் புரியாமல் ரெண்டு பேர் பேசுவதையும் கேட்டுக் கொண்டு விழித்துக் கொண்டு இருந்தாள் மரகதம்.

உடனே ரகுராமன் அப்பாவைப் பார்த்து “அப்பா,சில வருஷம் மழை நன்னா பெய்யறது.சில வருஷம் நன்னா பெய்யறது இல்லே.இந்த ‘நித்திய கண்டம் பூரன ஆயுசு’ வாழக்கையை நாம ஏன் நம்பிண்டு இருக்கணும்.மாமா பண்ண மாதிரி நாமும் உங்க கிட்டே மீதி இருக்கிற நிலத்தை எல்லாம் வித்துட்டு,திருவண்ணாமலைக்குப் போய், ஒரு சின்ன ‘ஆமா’ பாத்து வாடகைக்கு எடுத்துண்டு,பக்க த்லேயே ஒரு சின்ன இடமா பாத்து ஒரு சின்ன ‘மெஸ்’ தொறந்து வியாபாரம் பண்ணி வரலாமே” என்று மறுபடியும் தன் ‘ஐடியா’வைச் சொன்னான்.

“என்னடா சொல்றே.காலம் காலமா இருக்கிற நிலத்தை எல்லாம் வித்துட்டு,நாம எல்லாம்இந்த கிராமத்தே விட்டுட்டு திருவண்ணாமலைக்குப் போய் ஒரு சின்ன ‘ஆமா’ பாத்து வாடகைக்கு எடுத்து ண்டு,பக்கத்திலேயே ஒரு சின்ன இடமா பாத்து ஒரு சின்ன ‘மெஸ்’தொரந்து வியாபாரம் பண்ணி வற தா.எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.கடைசியிலே ‘மெஸ்’ வியாபாரமும் நன்னா நடக்காமே,போட்ட முதல் எல்லாம் பூராவும் போய் நாம ‘நடு ரோடிலே நிக்கறா’ப் போல ஆயிடுத்துன்னா என்ன பண்றது டா.இப்போ ஏதோ கால் வயத்துக்காவது சாப்பிட்டுண்டு வரோம்.அப்புறமா அதுவும் இல்லாம போயிடு த்துன்னா யார் கிட்டே போய் நாம உதவி கேப்போம்.என் அக்கா அத்திம்பேர் கூட இப்போ திருவண் ணாமலையிலே இல்லையேடா” என்று பயத்துடன் அலறினார் குப்புசாமி.

உடனே ரகுராமன் “அப்படி எல்லாம் ஒன்னும் ஆகவே ஆகாதுப்பா.எனக்கு கையிலே சமையல் வேலை இருக்கு.மனசிலே நல்ல ¨தா¢யம் இருக்கு.நீங்கோ சொலறா மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது என்னை நம்புங்கோ.நாம அங்கே சந்தோஷமா இருந்துண்டு வரலாம்.நமக்கு ஒரு கஷ்டமும் வறாது” என்று பிடிவாதம் பிடித்தான்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த மரகதம் பிள்ளை சொன்னத்தைக் கேட்டு,சந்தோ ஷப் பட்டு “ஏன்னா,ரகுராமன் சொன்னா மாதிரி நாம பண்ணா என்ன.அவன் தான் அவ்வளவு நம்பி க்கையாவும்,¨தா¢யமாவும் சொல்றானே” என்று தன் கணவனைப் பார்த்து கேட்டாள்.

உடனே குப்புசாமி “மரகதம்,ரகுராமன் இன்னும் ஒரு சின்ன பையன்.அவன் சொல்றா மாதிரி, ‘மெஸ்’ வியாபாரம் பண்றது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லே.திருவண்ணாமலை ஒரு பொ¢ய ஊர். அங்கே ஏற்கெனவே நிறைய ஹோட்டல்கள் எல்லாம் இருக்கு.நிறைய ‘மெஸ்’ எல்லாம் இருக்கு.நாம புதுசா ஒரு சின்ன ‘மெஸ்ஸை’ தொறந்து,வியாபாரம் பண்ணி முன்னுக்கு வறதுன்றது,அவ்வளவு சுலப மான காரியம் இல்லே.நாம ரொம்ப நிதானமா யோஜனைப் பண்ணி இந்த காரியத்தே பண்ணணும். நாம இந்த விஷயத்லே அவசரப் படக் கூடாது” என்று தன் பயத்தை மறுபடியும் சொன்னார்.

ஆனால் ரகுராமன் பிடிவாதமாக திருவண்ணாமலைக்குப் போய் ஒரு சின்ன ‘மெஸ்’ திறக்க வேண்டும் என்று தினமும் சொல்லி வந்தான்.

குப்புசாமிக்கு அவர் அப்பா அம்மா கொடுத்து விட்டுப் போன நிலத்தை விற்பது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.அதை தவிர அவர் குடும்பத்துக்கே முன் பின் தொ¢யாத ஒரு ‘மெஸ்’ வியாபாரத்தை செய்து வர மனதில் ¨தா¢யமும் இல்லை.அதனால் அவர் ரகுராமன் சொன்னதுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

அந்த ஞாயித்துக் கிழமை ரகுராமன் காலையிலேயே எழுந்து பல்லைத் தேய்த்து விட்டு அம்மா போட்டுக் கொடுத்த ‘காபி’யை குடித்து விட்டு பாலு மாமா வீட்டுக்குப் போய்,அவர் அழைத்துக் கொண்டு போன வீட்டில் ‘ஷஷ்டி அப்த பூர்த்தி’ சமையலை எல்லாம் பண்ணி முடித்து விட்டு,அங்கே யே சாப்பிட்டு விட்டு,மத்தியானம ஒரு மூனு மணிக்கு பாலு மாமா கொடுத்த எரனூரு ரூபாயை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

ரகுராமன் கோவமாக அந்த எரனூரு ரூபாயை தன் அப்பா எதிரிலே போட்டு விட்டு ”அப்பா இந்த எரனூரு ரூபாய்க்கு,நான் காத்தாலே நாலு மணிக்கு எல்லாம் எழுத்து போய் அந்த நெருப்படி யிலே வெந்து,மூனு மணிக்கு ஆத்துக்கு வந்து இருக்கேன்.அதுவே நான் இந்த உழைப்பே என் சொ ந்த ‘மெஸ்’லே போட்டு இருந்தேன்னா,எனக்கு ரெண்டாயிரம் ரூபாய் வந்து இருக்கும்.நான் இத்தனை மணி நேரம் பாலு மாமா கிட்டே உழைச்சதுக்கு என்ன பிரயோஜனம் சொல்லுங்கோ” என்று கத்தி னான்.
குப்புசாமி ஆடிப் போய் விட்டார்.

உடனே மரகதம்” உண்மையாவா ரகுராமா.நீ இந்த உழைப்பே உன் சொந்த ‘மெஸ்’லே போட்டு இருந்தா,உனக்கு ரெண்டாயிரம் ரூபாய் வந்து இருக்குமா” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

உடனே ரகுராமன “ஆமாம்மா,நான் நன்னா யோஜனைப் பண்ணித் தான் சொல்றேன்,நானும் இன்னும் ரெண்டு சமையல் காரா தான் எல்லா சமையலும் பண்ணிண்டு வந்தோம்.பாலு மாமா வெறு மனே எங்களைப் பாத்து ‘அது பண்ணு’ இது பண்ணு’ன்னு சொலிண்டு இருந்தார்.‘ஷ்ஷ்டி அப்த பூர்த்தி’ பண்ணிண்ட மாமா பாலு மாமா கிட்டே மூவாயிரம் ரூபாய் குடுத்ததை நான் என் கண்ணா லேப் பாத்தேன்.எங்க மூனு பேருக்கும் தலா எரனூரு ரூபாயை குடுத்துட்டு,பாலு மாமா மீதி பணத தை எடுத்துண்டு இருக்கார்” என்று கோவமாகச் சொன்னான்.

உடனே குப்புசாமி “ஆமாண்டா,ரகுராமா எல்லா முதலாளிகளும் அப்படித்தான் பண்ணுவாடா. இப்ப என் நிலத்லே விளையற எல்லா நெல்லையும் நான் கூலிக்காராளுக்குக் குடுக்கறது இல்லையே டா.வெறுமனே கூலி தானே தறேன்.அது மாதிரித் தான் பாலு மாமாவும் பண்றார்.இதிலே தப்பு ஒன் னும் இல்லையேடா” என்று சொன்னார்.

உடனே ரகுராமன் கோவமாக “எனக்கு ஒரு கூலிக்காரனா இருக்கப் பிடிக்கலேப்பா.நான் ஒரு சின்ன ‘மெஸ்’ தொறந்து வியாபாரம் பண்ணினா,எனக்கு இன்னும் நிறைய பணம் வரும்.பாலு மாமா வுக்கு மாசத்லே ஒரு பத்தோ,பன்னன்டோ நா¨ளைக்குத் தான் சமையல் வேலே வறது.அந்த பத்து நாள் பன்னண்டு நாள் எனக்கு இந்த மாதிரி எரனூரு ரூபாய் குடுத்து வந்தா,நான் எப்போ வாழ்க்கே லே மூன்னுக்கு வறது.அப்புறமா கல்யாணம் பண்ணிக்கறது.சொல்லுங்கோ பாக்கலாம்.எனக்கும் வய சாயிண்டே இருக்கே ”என்று கத்தினான்.

குப்புசாமிக்கு ரகுராமனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தார்.ரகுராமன் சொன்னதை கேட்டு மரகதம் மிகவும் வருத்தப் பட்டள்.
அவள் உடனே “எனக்கும் ரகுராமன் சொல்றது சரின்னு தான் படறது.அவன் எத்தனை நாளை க்கு இந்த மாதிரி எரனூரு ரூபாய் சமபளம் வாங்கிண்டு இருக்கிறது சொல்லுங்கோ.எனக்கு என்ன வோ ரகுராமன் சொல்றா மாதிரி திருவண்ணாமலைக்குப் போய் ஒரு சின்ன ‘மெஸ்’ஸா தொறக்கலாம் ன்னு தான் தோன்றது” என்று சொன்னதும் குப்புசாமிக்கு கோவம் வந்தது.

அவர் உடனே “என்ன மரகதம் நீயும் ரகுராமன் சொல்றா மாதிரி சொல்றே.அப்படி பணறதுக்கு நான் சித்தே முன்னாடி எத்தனை கஷ்டம் இருன்னுன்னு விவரமா சொன்னேனே.நீ அதே எல்லாம் கொஞ்சமாவது யோஜனைப் பண்ணயா.நீயும் இப்போ நான் உடனே என் கையிலே இருக்கிற நிலத்தை எல்லாம் உடனே வித்துட்டு நாம திருவண்ணாமலைக்குப் போய் ரகுராமனுக்கு ஒரு ‘மெஸ்’ தொறந்து தரணும்ன்னு சொலறயா” என்று கோவத்துடன் கேட்டார்.

ரகுராமனும் மரகதமும் ஒரு பக்கமும்,குப்புசாமி எதிர் பக்கமும் விடாமல் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.

ரகுராமன் யோஜனைப் பண்ணினான்

’இனிமே நாம அந்த பாலு மாமா ஆத்துக்கு சமையல் வேலைக்குப் போகாம ஆத்லேயே பிடிவா தம் பிடிச்சு வரணும்’என்று முடிவு பண்ணினான்.

அன்று ஒரு பையன் குப்புசாமி வீட்டுக்கு வந்து குப்புசாமியைப் பார்த்து “மாமா,பாலு மாமா நாளைக்கு காத்தாலே ஐஞ்சு மணீக்கு எல்லாம் ரகுராமனை சமையல் வேலைக்கு வரச் சொன்னார்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,ரகுராமன் அந்தப் பையனை பார்த்து “எனக்கு நல்ல ஜுரம் அடிக்கறதுடா.என்னால் நாளைக்கு காத்தாலே என்னால் சமையல் வேலைக்கு வர முடியாது.நீ தயவு செஞ்சி பாலு மாமா கிட்டே சொல்லிடு என்ன” என்று சொல்லி விட்டு வந்த பையனை அனுப்பி விட்டான்.
உடனே வந்த பையன் ரகுராமனைப் பார்த்து “நான் பாலு மாமா கிட்டே சொல்லிடறேன்.நீ உன் உடம்பே ஜாக்கிரதையா பாத்துகோ” என்று சொல்லி விட்டு போய் விட்டான்.
குப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர் வந்த பையன் போனவுடனே ரகுராமனைப் பார்த்து “ஏண்டா,உனக்கு ஜுரம்ன்னு பொய் சொல்லி அந்தப் பையனை அனுப்பி இருக்கே.இங்கே ஆத்லே சும்மா இருந்துண்டு வந்து என்ன பண் ணப் போறே.சமையல் வேலைக்குப் போய் வாடா.உனக்கு கையிலே கொஞ்சம் பணமாவது கிடைக்கு மேடா” என்று கோவமாகச் சொன்னார்.
உடனே ரகுராமன் “அப்பா,நான் சமையல் வேலை எல்லாம் நன்னா கத்துண்டுட்டேன்.கத்துக்க இனிமே ஒன்னும் இல்லே.நான் வெறுமனே அந்த நெருப்படியிலே வெந்துண்டு வந்து எரனூறு ரூபாய் கூலியா வாங்கிண்டு வறப் போறதில்லே.நான் ஒரு திருவண்ணமலையிலே ஒரு ‘மெஸ்’ஸை ஆரம்பிச் சு நடத்தி வர ரொம்ப ஆசைப் படறேன்” என்று கோவத்தில் கத்தினான்.

உடனே குப்புசாமி “கேக்க ரொம்ப நன்னா இருக்கு ரகுராமா.நான் இல்லேண்னு சொல்லலே. ஒரு ‘மெஸ்’ தொறக்க,ஒரு ஆம் பாக்க,ரெண்டுத்துக்கும் குறைஞ்சது ஒரு ஆறு மாச ‘அடவான்ஸ்’ குடுக்க எல்லாம் என் கிட்டே எங்கேடா பணம் இருக்கு” என்று சொன்னதும் ரகுராமனுக்கு பொறுமை எல்லையை மீறி விட்டது.

அவன் உடனே”அப்பா,நான் கேக்கறேன்னு என்னை தப்பா எடுத்தாதீங்கோ.நீங்க என்னை மூனு தடவையா பணம் கட்டி எட்டாவது படிக்க வச்சேள்.ஆனா நன்னா படிச்சு ‘பாஸ்’ பண்ணலே. நான் ஒத்துக்கறேன்.உங்க கையிலே இருக்கிற நிலத்தை எல்லாம் வித்துட்டா,உங்க காலத்துக்கு அப்புறமா எனக்கு ‘சொத்து’ ஒன்னும் இருக்காதுன்னு தானே நீங்க நினைக்கிறேள்.நீங்க உங்க சொத்லே பாதியே,அக்கா கல்யாணத்துக்கு வித்து, நகை எல்லாம் பண்ணீ கல்யாணத்தே நன்னா பண்ணேள்.மீதி பாதி சொத்து எனக்குத் தானேன்னு நீங்க வச்சுண்டு வறேள்.எப்படி அக்கா கல்யாண த்துக்கு உங்க பாதி சொத்து உபயோகப் பட்டதோ,அந்த மாதிரி உங்க காலத்திலேயே அந்த பாதி சொத்து எனக்குப் பிரயோஜனப் படட்டுமேப்பா.அந்த நிலத்தை எல்லாம் வித்துட்டு,அந்த பணத்தை என் கிட்டேக் குடுத்துட்டு,நீங்க நிம்மதியா இருந்துண்டு வாங்களேன்.நான் அந்த பணத்தை வச்சுண் டு ஒரு ‘மெஸ்’சை ஆரம்பிச்சு நடத்தி முன்னுக்கு வறேனே” என்று கேட்டதும் குப்புசாமி விட்டார்.

உடனே அவர் ரகுராமனைப் பார்த்து “ரகுராமா.நீ ஒரு நல்ல சமையல் காரன் மட்டும் இல்லே. இப்போ ரொம்ப நன்னா பேசவும் கத்துண்டு இருக்கே.நீ ஒன்னை நன்னா கவனிக்கணும்.நீ சொல்றதே நான் ஒத்துக்கறேன்.இல்லேன்னு சொல்லலே.உன் அக்கா இந்த ஆத்தை விட்டுட்டு வேறே ஆத்துக்கு ப் போறவ என்பதாலே தான் நான் அவளுக்கு சேர வேண்டிய சொத்தே அவ கல்யாணத்துக்கு செலவு பண்ணேன்.ஆனா நீ அப்படி இல்லையேடா.என் கூடவே இருந்து வறப் போறவன் தானே.என் கிட் டே இருக்கிற இந்த மீதி சொத்து எங்கேயும் போய் விடப் போறது இல்லையேடா” என்று சொன்னார்.

ஆனால் ரகுராமன் “எனக்கு இப்பவே பணம் வேணும்’ என்று பிடிவாதம் பிடித்து வந்தான். “மறுபடியும் பாலு மாமா கிட்டே சமையல் வேலைக்குப் போக மாட்டேன்” என்று சொல்லி பிடிவாதமும் பிடித்து வந்தான்.மரகத்ததுக்கு ரகுராமன் சொன்னது ‘சரி’ என்று பட்டது.

அவள் உடனே “ஏன்னா,அவன் கேக்கறது எனக்கும் ரொம்ப நியாயமா படறது.அவனுக்கு சேர வேண்டிய பாதி சொத்தே,அவன் கேக்கும் போதே அவனுக்கு குடுத்தேள்ன்னா, அவன் சொல்றா மாதிரி அவனுக்கு பிரயோஜனப் படுமே.இல்லையா சொல்லுங்கோ” என்று கேட்டவுடன் குப்புசாமி ஆடிப் போய் விட்டார்.

அவர் உடனே “என்ன மரகதம் நீ கூட ரகுராமன் சொல்றதே போலவே சொல்றே.உனக்கும் புத்தி மழுங்கிப் போச்சா என்ன.நாம வச்சுண்டு இருக்கும் மீதி நிலம் எல்லாம் நம்ம காலத்துக்கு அப்பு றமா ரகுரமனுக்கு பிரயோஜனப் படறதுக்கு தான்.இதே நீ நன்னா புரிஞ்சிக்காம ரகுராமன் சொன்ன தையே சொல்றயே.உன்னையும் அவன் பேச்சுத் திறமையாலே மாத்திட்டானா” என்று கிண்டலாக கேட்டார்.

”அப்படி இல்லேன்னா,அவன் பாலு மாமா கிட்டே போய் வெறுமனே ஒரு நாளைக்கு எரனூறு ரூபாய் சமபாதிச்சு வந்து,எப்படி வாழகையிலே முன்னுக்கு வறது சொல்லுங்கோ.அந்த எரனூறு ரூபா யும் தினமும் கிடைக்கறது இல்லையே.அது மாசத்லே பத்து நாளோ,பன்னண்டு நாளோ தானே அவனுக்குக் கிடைச்சு வறது.அவன் சொல்றா மாதிரி ஒரு ‘மெஸ்’ தொறந்து,அவனோட நீங்களும், நானும் அவனுக்கு உதவி பண்ணி வந்தா,அவன் சீக்க்கிரமா கொஞ்சம் பணம் சம்பாதிச்சு,ஒரு கல்யாணத்தே பண்ணிண்டு வாழ்கைலே ‘செட்டில்’ ஆகலாமேன்னு தான் சொன்னே. பெத்த அம்மா நான் அப்படி ஆசைப் பட்டேன்.இதிலே என்ன தப்பு சொல்லுங்கோ. என்னேப் பாத்து ‘உனக்கும் புத்தி மழுங்கிப் போச்சா என்ன’ ன்னு கேக்கறேளே” என்று எதிர் கேள்வி ஒன்றைக் கேட்டாள் மரகதம்.

மரகதம் கேட்டதற்கு பதில் ஒன்று சொல்லமல் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார் குப்புசாமி.

’சரி பிள்ளை சொன்ன ‘ஐடியா’வை ரொம்ப நல்லதுன்னு இவளுக்கும் தோன்றது.அதான் இப் படி நம்மைப் பாத்து எதிர் கேள்வி கேக்கறா’ என்று நினைத்து,ரெண்டு பேர் கிட்டேயும் நிதானமாக குப்புசாமி மறுபடியும் திருவண்ணாமலைக்குப் போய் ஒரு சின்ன ‘மெஸ்’ திறக்க எத்தனை கஷ்டங்கள் இருக்கிறது என்பதை மறுபடியும் விவரமாகச் சொன்னார்.

குப்புசாமி என்ன சொல்லியும் ரகுராமனும் மரகதமும் கேட்கவில்லை.இருவரும் நிலத்தை எல் லாம் விற்று விட்டு பணத்தை ரகுராமன் ஒரு ‘மெஸ்’ திறக்கக் கொடுக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வந்தார்கள்.குப்புசாமிக்கு வேறே வழி ஒன்றும் தொ¢யவில்லை. அவருக்குத் தன் அப்பா வைத்து விட்டுப் போன வீட்டையும்,நிலங்களையும் விற்க மனசே இல்லை.அவர் தவித்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *