கதையாசிரியர் தொகுப்பு: ஆதவன் தீட்சண்யா

20 கதைகள் கிடைத்துள்ளன.

விரகமல்ல தனிமை

 

  அன்பில் ஊறும் மகாவுக்கு, ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க ஞாபகத்தில். காலம் கடந்து நினைத்தால் எது நடக்கும். பங்குனி உத்திர கூட்டம் வேறு. ஈரோடு வரைக்கும் ஸ்டாண்டிங். நெரிசல்ல சிக்கி முழி பிதுங்கிருச்சு. அன்னிக்கு ராத்திரி பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளின லாட்ஜ்ல ரூம் கிடைச்சது. பக்கத்து ரூம்ல, உடம்பு முழுக்க மாட்டிக்கிட்டு ஆட்டுற மாதிரி வளையல் கிணுகிணுப்பு. ஓயாத சிணுங்கல். விரசமான பேச்சு.


வஞ்சம்

 

  மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா தரையிறங்குது பனித்தாரை. வரப்படியில் அண்டின பூச்சிப்பொட்டுக குளுர்தாங்காம சில்லாய்க்கிறதில் காதடையுது. காவாயில் ஜதிபோட்டு ஓடியாரும் தண்ணி வெதுவெதுன்னு பாயுது. வெடிப்புல மண்டியிருந்த தாகம் ஈரம் பட்டதும் இளஞ்சூடா கரையுது காத்தில். சாரையும் நாகமும் விரியனும் மிலுமிலுக்கும் வயக்காடுன்னு தாத்தாவும் தருமனும் சொன்னது நெசந்தான். சீத்துசீத்துனு சீறிக்கிட்டு எலி விரட்டி அலையும் சத்தம். ஆள் பொழக்காட்டம்


ஆறுவதற்குள் காபியைக் குடி

 

  சுண்டக்கா கால்பணம் சுமைக்கூலி முக்காப்பணம். பத்துரூபாய் கடன் வாங்குவதற்குள் வெத்தாளாய் ஆக்கிவிடுவார்கள் வங்கிகளில். அதற்கும் அசையும் சொத்து அசையாச் சொத்து என்ன இருக்கிறது ஜாமீனுக்கென்று குடாய்ந்துவிடுவார்கள். அய்யா துரைமாரே அப்படி எந்த சொத்துபத்தும் இல்லாததால்தான் இப்படி லோனுக்கு லோல்படுகிறேன் என்றால், வெடிக்காத துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் செக்யூரிட்டி கார்டுக்கு வேலையும் வீரமும் ஒருங்கே வந்துவிடும். நம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டுத்தான் அவர் மறுவேலை பார்ப்பார். வங்கியில் நடக்கவிருந்த பெருங்கொள்ளையைத் தடுத்த பெருமிதத்தோடு


சாவும் சாவு சார்ந்த குறிப்புகளும்

 

  தனக்குதானே சுருண்டு இரவாகிக் கறுத்த அகாலம். விடிய வேண்டும் என்ற வேதனையில் அகன்றி புலர்கையில் கதவு தட்டப்பட்டது. குண்டுக்கும் அம்புக்கும் தப்பி கள்ளத்தோணி ஏறிவந்த அகதியின் இதயத்துடிப்பென படபட ஓசை. தட்டுமோசையின் அதிர்வலைகள் ஊடாகவே மனவோட்டத்தை இலக்கிற்கு கடத்தும் பதற்றம். வான்தாவ றெக்கைகளை விசிறியாட்டும் பெயரறியா பறவையொலி மசங்கல் நினைவில் பொடக்கென விழுகிறது விதியைப் போல. திருட்டுப் பருக்கை பொறுக்க விரையும் காகத்தின் கரைவு போலுமுள்ளது. கீல்களும் நாதாங்கியும் பெரிதாய் அதிர, முனகவும் தெம்பற்ற கிழக்கதவு,


புரியும் சரிதம்

 

  போக்குவரத்து விதிகள் ஒழுங்கு செய்யப்படாத நகரின் பிரதான சாலையொன்றில் தேர்க்கால் ஏறிச்செத்த கன்றுக்கு நியாயம் கேட்டு கோட்டைகள்தோறும் பசுக்களால் மறிபட்டது. கழுத்துமணியின் கிங்கிணியை மீறி ஹோவென எழும்பியது ஆராய்ச்சி மணியொலி. பஞ்சபூதங்களின் பாகமெங்கும் கலந்து நிரவிய மணியோசை குறும்பியால் காதடையுண்டிருந்த மன்னர்களுக்கு மரணத்தின் பேரழைப்பாய் கேட்க, நீதிவழுவா நேர்மையாளன் எனும் கீர்த்திக்கு இரையாகி தேரேற்றிக் கொன்றனர் மகன்களை. இளவரசர் சாவுகளில் திருப்திகொண்ட பசுவும் கன்றுமாகிய பெருங்கூட்டம் மன்னர்களை எதிர்த்தடக்கிய மகுடம் தரித்து வேலியையும் சேர்த்தே மேய்ந்து