Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: நகைச்சுவை

448 கதைகள் கிடைத்துள்ளன.

ஆவி வரும் நேரம்

 

 நேரம் 4.20 ஆனது. பள்ளிக்கூடத்தில் மணி ஒலித்தது. அது பணக்கார வீட்டு பசங்க படிக்கிற ஸ்கூல். அதுனால ஸ்கூலுக்கு வெளிய பெத்தவங்க எல்லாம் கார வச்சுக்கிட்டு தங்களோட பிள்ளைகளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நம்ம கதையோட ஹீரோ சந்துரு தன்னோட முதுகுப்பைய போட்டும் போடாமலும் கால் தரையில படுதானு கூட தெரியாம அவ்ளோ வேகமா ஓடி வந்தாரு. இத்தனை கார்களுக்கு மத்தியிலே ஒரே ஒரு ஆட்டோ. ப்பாம் பூ. . .பூ (ஆட்டோ ஒலிபெருக்கி). ஆரவாரமாக ஆட்டோவில்


அத்திரிபச்சான் கல கலா!

 

 கிருஷ்ணனுக்கு சாப்பாட்டு வக்கணை அதிகம். வீட்டில் என்னதான் பஞ்ச பட்ச பணியாரங்கள் மனைவி அனு சமைத்துப் போட்டாலும் வெளியே போய் சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம். எங்கே போய் என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளட்டும். அது அனுவுக்கு ஆட்சேபணையில்லை. வீட்டுக்கு வந்து அந்த ஐட்டங்களோடு அனுவின் சமையலை ஒப்பிட்டு வம்பு செய்யும்போதுதான் அனுவுக்குப் பற்றிக் கொண்டு வரும். “நீ இட்லிக்குப் பண்ணற சாம்பார் சரியேயில்லை. ரத்னா கேஃப்ல ஒரு சாம்பார் போடறாங்க பார். ஜனங்க எல்லோரும் அங்கே சாம்பாருக்குத்


ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்த கதை (பாகம் 2)

 

 பட்டாளமாய் எட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க ராஜா அட்டகாசமாய் ஆரம்பித்தான்.. ‘ இப்ப எப்படி சத்தியம் பண்றதுன்னு சொல்றேன் …இப்பிடி ஒரு கையை நடு வயத்திலே வச்சுக்கனும்…இன்னொரு கையை அவங்கவங்க தலை மேலே வச்சி ….இரு ஷீலா நீ வச்சிருக்கறது நடு வயிறு இல்லே…’ ‘சனியனே …அது நடு வயிறு இல்லடி…நடு வயிறுன்னா தொப்புள்…தொ..ப்..பு..ள்… தொப்புள் இல்லேனண்ணா…’ என்றது வசுமதி..’ ‘கரெக்ட்…’ ‘டேய்… நீ ரொம்பத்தான் ஜாஸ்தியா….அளவில்லாம எல்லாத்தையம் பன்றே….. …வேண்டாம்…அடிபடுவே…’என்றாள் மலர்.. ‘பாரு மலரு …சத்தியம்னா சரியா


சிறுகதைகள் புனைய சில உத்திகள்

 

 சிறுகதைச் செம்மல் நிர்மலா ராகவன் உங்களுக்கு எழுத்தாளராக ஆசையா? ஸோமாஸ்கந்தன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசாமல் எழுத்தாளனாக ஆகிவிட்டால் என்ன? அந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தான். தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது எழுதிவரவும். ஒரே பத்திகூட போதும். இன்ன தலைப்புதான் என்பதும் முக்கியமல்ல. எழுத வேண்டும். அவ்வளவுதான். அவ்வளவுதானே! எந்தப் பெண்ணையாவது நினைத்துக்கொண்டு தினம் ஒரு காதல் கடிதம் எழுதினால் போயிற்று! உதாரணம்: `வெள்ளை’ என்ற தலைப்பில் நான் எழுதியது:


ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்தகதை…(பாகம்- 1)

 

 ‘ என்னடி கொடுமை…. பையிலெ இருந்த பத்தாயிரம் காணல்லை….’ ‘ என் அஞ்சாயிரம் கூட காணல்லே..திருடன் உள்ளேதான் நிம்மதியா இருக்கான்… அவனுக்கு பெரிய இடத்து ஆதரவும் இருக்கு அத்தே….’ ‘ ஓ உங்கம்மா அந்த நாய் கூட சேர்ந்து திருடராளா….கூப்பிடு அவங்களை.. ‘ ‘ விட்ருங்க அத்தை…அவன் என் கார்டைக் குடுன்னு ஆரம்பபிப்பான் உங்க பிள்ளைகிட்ட சிபாரிசுக்குப்போவான்…கலவரம் பன்னிடுவான்..திருடன்…தாங்கமுடியாது..பிராண்டித்தள்ளிடுவான்…பத்தாயிரத்தோட போகட்டும்.. ‘சரி…உன் புருஷனுக்கு போன் போடு…இவனை இப்படியே விட முடியாது…’ ‘சுத்தம் …மொதல்லே ….அவன் சம்பாரிக்கறதை நீ


சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சு

 

 ”ஆடி மாசம் அம்ம னுக்குக் கூழ் ஊத்துறதை விட, புதுசா இந்த வருஷம் ஒரு நாடகம் போட்டா என்ன?” என்று முதல் ஏவுகணையை மணி வீசினான். ”நல்லாதான் இருக்கும். ஆனா, நிறையப் பணம் தேவைப்படுமே!” – என் கவலையைச் சொன்னேன். ”அம்பது நூறுக்குப் பதிலா, ஐந்நூறு ஆயிரம்னு வசூல் பண்ணுவோம். நாடகம் போட்ட மாதிரியும் இருக்கும்; நாம எல்லாரும் நடிச்ச மாதிரியும் இருக்கும்” என இரண்டாவது ஏவுகணை சரவணனிடம் இருந்து வந்தது. ”ஆமாடா… ஊர்ல நமக்கு ஒரு


ராஜாராமனைத் தமிழ் கடித்துக் குதறிய கதை…

 

 ராஜாராமன் காற்று வாங்குவது என்று திட்டம் செய்து கடற்கரை வந்திருந்தான்… தப்பில்லை….மிக அல்பமான ஆசை…அல்ப ஆசை கல்ப கோடி நஷ்டம் என்று அவன் அப்பா சொல்லுவார்….அவனுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்வரப்போகிறது என்று அவனுக்குத் அப்போது தெரியாது..பாவம் ராஜாராமன் அவனுக்கு எப்பபவும் எதுவும் தெரியாதுதான்……. ” தம்பி….இந்த விலாசம் எங்கேன்னு சொல்லமுடியுமா……” தமிழ் நாட்டின் அடிப்படைக் கலாச்சாரமே விலாசம் சொல்லுவது என்ற நாகரீகம் தெரியாதவனா நம்ம ஆள்..தவிர விலாவரியாக விலாசம் சொல்லாதவன் தலை கீழாக நரகம் போவான் என்று


நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

 

 “ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?” சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு இல்லை, வெறும் நூறு கிலோ தான். அவன் உயரத்துக்கு, வயதுக்கு சரியான எடை என்றால், அறுபது கிலோ தான் இருக்கணும். சின்ன வயசுல அவன் இவ்ளோ குண்டு இல்லை, வேலைக்கு போக ஆரம்பித்த மூன்றே வருடங்களில் கடகடவென ஊதிவிட்டான். இப்போது அவனுக்கு கல்யாணத்துக்கு பெண் தேடுகிறார்கள் – உடல் பருமன் குறைத்தால்தான் பெண் வீட்டில் ஒத்துக்


கொக்‍கிகுமாரும், குண்டர்களும்

 

 ரவுடிகளுக்‍கு பெயர் போன அந்த ஏரியாவில் ஒரு காலத்தில் இரவு 10 மணிக்‍கு மேல் யாரும் நடமாடுவதில்லை. அவ்வளவு பயங்கரமான ஏரியா என புகழ்பெற்றிருந்த அந்த பகுதியில் தற்போது குண்டர்களின் அட்டகாசம் தலைவிரித்தாடிக் ‍கொண்டிருக்‍கிறது. அவர்களை தட்டிக்‍கேட்க ஆளில்லை என்கிற சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. இரவு 8 மணிக்‍கு மேல் பெண்கள் நடமாட்டத்தை அப்பகுதியில் காண முடியாது. இரவு 9 மணிக்‍கு மேல் ஆண்கள் நடமாட்டம் கூட சுத்தமாக இருக்‍காது. அந்த அளவுக்‍கு குண்டர்களின் அட்டகாச


முதல் கதை

 

 சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்தால் சிறுகதை எழுதிவிடலாம் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். வாங்கியபிறகுதான் தெரிந்தது அது ஒரு சிறுகதை தொகுப்பு என்று. அவரும் அதை முன்னுரையில் எழுதியிருக்கிறார். ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்தகத்தை குரியர் மேனிடம் வாங்கியபோது சுஜாதாவே நேரில் வந்து டெலிவர் செய்தது போல இருந்தது. புத்தகத்தை ஒரு வரி விடாமல் படிக்கவேண்டும் என்று நினைத்து முன்னுரை வாசித்தபோது, ” ஏமாந்துட்டியா, சரி கவலை படாதே. இந்த புக்க