Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைத்தொகுப்பு: தினமலர்

444 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றங்கள்

 

  கூரியர் ஆள் கொண்டு வந்து கொடுத்த திருமண அழைப்பிதழைப் படித்ததும், அகமகிழ்ந்தார் நாராயணன். “”கனகா… கனகா… இத பார்… யார் பத்திரிகை அனுப்பி இருக்காங்கன்னு,” என்று மனைவியை அழைத்து, அவளிடம் அந்தப் பெரிய பளபளப்பான திருமண அழைப்பிதழை நீட்டினார். “”யாருங்க… உங்க உறவா, இல்ல எங்க பக்கமா?” என்று கேட்டபடி பத்திரிகையை வாங்கி கண்களை ஓடவிட்ட கனகம், புருவங்களை நெரித்தாள். “”யார் இது… உங்க ஆபீஸ்காரங்களா? எனக்குத்தான் உங்க ஆபீஸ் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் அநேகமாகத் தெரியுமே?”


திருமூர்த்தி சன்-ஆப் சித்தப்பா!

 

 “பேரன் பேத்தி எடுத்த வயிசுல, கூத்தியா வெச்சுட்டு, கூத்தடிச்சுட்டுத் திரியறயே… நீயெல்லாம் ஒரு மனுசனா? அந்தப் பேத்துப் பிதுருகளே, உம்பட மம்முத லீலைகளைப் பாத்துட்டு சிரிப்பாச் சிரிக்குதுகளே… இன்னுட்டுமா உனக்கு புத்தி வல்ல? “ஆளுதான் ஆறடி. ஏளங்கணத்துக்கு, பனை மரத்துல பாதி வளந் திருக்கறயே… தவுத்து, உனக்கு அறிவு, நெனவு இருக்குதா? சாதிக்கு ஆகத்த தொளி<லுத்தான் பண்றீன்னு பாத்தா… சாவுகாசம்மு அங்கயே வெச்சுட்டு, அந்த அருத சாதிக்காரி, அறுத்த மூளி கூட கும்மாளமடிச்சு, குதியாளம் போட்டுட்டி ருக்கறயே…


இதுவும் ஒரு சேவைதான்!

 

 காலை நேரம். வீடு பரபரப்பாக இருந்தது. கணவன் – மனைவி இருவரும், வேலைக்கு கிளம்ப வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு போக வேண்டும். 8:30 மணிக்குள் இதெல்லாம் நடந்தாக வேண்டும். மாலினி வழக்கம் போல், 5:30 மணிக்கு எழுந்து, குளித்து, சமையல் வேலை துவங்கியிருந்தாள். பரத் எழுந்து, குழந்தைகளை எழுப்பும் வேலையை செய்தான். சாமிநாதன் விழித்தெழுந்து, பால் வாங்கிவர கிளம்பினார். அவர் தெருவில் இறங்கி மறைந்ததும், பரத்திடம் வந்தாள் மாலினி. “”உங்க அப்பாகிட்ட நீங்க பேசறீங்களா… நான் பேசட்டுமா?”


இதயத்தில் நுழைந்த வைரஸ்!

 

 “”மிஸ்டர் செந்தில்?” “”நான் தான் பேசறேன்.” “” நான் சங்கரி பேசறேன்.” “”சொல்லுங்க மேடம்.” “”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு பைல் காணாமப் போகுது. பாதி வேல பாத்துக்கிட்டிருக்கும் போதே ஆப் ஆயிருது. திடீர் திடீர்ன்னு ஏதோ படம் முன்னால வருது. எனக்கு பயமா இருக்கு செந்தில்.” “”உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்திருக்கு மேடம்.” “”ஐயையோ வைரசா? கம்ப்யூட்டரத் தூக்கி போட்டுட்டு புதுசு வாங்கிரட்டுமா?” “”என்ன மேடம்… வைரசுக்கு பயந்து, கம்ப்யூட்டரத் தூக்கிப் போடுவாங்களா? நம்ம உடம்புலயும்


நிறைவு

 

 “”சுஜி… துபாயிலிருந்து சங்கர் பேமிலியோடு வர்றதாக போன் பண்ணினான். அவன் பெண் நிமாவை டாக்டர்கிட்டே காட்டணுமாம். ஒரு வாரம் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” கண்களை கசக்கியபடி வரும் மகனை கையில் பிடித்தபடி வந்தாள் சுஜி. “”ஏன்… என்ன ஆச்சு. எதுக்கு அழறான்.” “”ம்… முதுகில் ரெண்டு வச்சேன். சரியா படிக் கிறதில்லை. கணக்கிலே நாற்பது மார்க் தான் வாங்கியிருக்கான். எதிலேயும் சூட்டிகை கிடையாது. இப்படி அசமஞ்Œமாக இருக்கான். இவனை எப்படித்தான் கரைசேர்க்கப் போறோம்ன்னு தெரியலை.” அலுத்துக் கொண்டாள் சுஜி.


தகுதி

 

 இருபத்தி ஆறு வயது வரை, எந்த வேலைக்கும் போகாமல், ஊர் சுற்றும் வேலையை மட்டுமே ஒழுங்காய் செய்து வந்த மகன் செல்வ கணபதியை பற்றிய கவலையிலேயே, கண்ணை மூடி விட்டார் ராமசுப்பையா. அவர் இறந்த பின், இருந்த காடு கரையை விற்றதில், கணபதியின் கையில், இருபது லட்சம் ரூபாய் மிஞ்சியது. அவனது ஒரே அக்காவான அரியலூர்க்காரி பங்கு கேட்க வந்து நின்றாள். “வேண்டாம்… அவன் ஏதாவது ஒரு தொழில் செய்து முன்னேறட்டும்… நீ எதுவும் கேட்காதே…’ என்று


குதிரைமுத்து மளிகை ஸ்டோர்ஸ்!

 

 “”என்னாச்சு சுந்தரம்… எத்தனை முறை உங்கிட்ட சொல்லி இருக்கேன். கொஞ்சம் லாங்கா போறப்போ, வண்டியை கண்டிஷன்ல வச்சுக்கோன்னு… இப்போ எவ்வளவு அவஸ்தையா இருக்கு பாத்தியா?” டை முடிச்சை லூசாக்கி, மேல் பொத்தானை கழட்டி, காற்று வாங்கிக் கொண்டான் மனோகர். மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான், மணி பதினொன்று… இரண்டு மணிக்கு சைட்டில் இருந்தாக வேண்டும். சென்னைக்கும், திருப்பந்தளத்திற்கும் இடையே மாட்டிக் கொண்டாகி விட்டது. “”சாரி சார்… நேத்துக் கூட நல்லாத்தான் இருந்தது… வெயிட் பண்ணுங்க சார்… ரெடி பண்ணிடறேன்.”


யாவரும் வெல்லலாம்!

 

 காலையில் காபியுடன் நாளிதழை பிரித்த சண்முகம், தலைப்புகளை பார்வையிட்டபடி, பக்கங்களைப் புரட்டினார். புரட்டும் போது, அதனுள் இருந்து, பிட் நோட்டீஸ் ஒன்று, சரிந்து விழுந்தது; எடுத்தார். அதில், “வருக… வருக…’ என்ற அழைப்போடு, அச்சாகியிருந்த விளம்பரம், அவர் கவனத்தை பிடித்து நிறுத்தியது. காபி டம்ளரை தள்ளி வைத்துவிட்டு, அந்த விளம்பரத்தை வாய்விட்டு படித்தார். “உங்கள் நல்லாதரவுடன் சோளிங்கர் ரோட்டில், கிளை திறப்பு விழா. அனைவரும் திரளாக வருக. கடைத் திறப்பை முன்னிட்டு, எல்லா ரக துணிகளுக்கும், 20


இன்னும் இருக்கின்றனர்!

 

 கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை பூமி மீது செலுத்திய காலை வேளை. அவசரமாக காவல் துறை பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் பெருமாள் சாமி. நேற்று மாலை, பெருமாள்சாமிக்கு வாழ்க்கையில் மிக உன்னதமான நேரமாக இருந்தது. அவரது மகள் ரத்னாவிற்கு நேற்று தான் பெண் பார்க்கும் படலம் நடந்து, மாப்பிள்ளை முடிவாகி இருந்தது. மாப்பிள்ளை, வருமானவரித்துறையில் உதவியாளராக இருந்தார். பெருமாள்சாமி போலீஸ்காரராக இருந்தாலும், அவரது வீட்டில் பெண் எடுக்க சம்மதித்ததற்கு காரணம், ரத்னாவின் குடும்பப்பாங்கான அழகு தான். அடுத்த புதன்கிழமை


புதியதோர் ஆரம்பம்!

 

 மொபைல் போன் கதறியது; ஓடிவந்து எடுத்தாள் தாமரை. “”ஹலோ தாமரை… வீட்டுல தானே இருக்க?” “”ஆமாண்ணே… சொல்லுங்க.” “”ஒண்ணுமில்லே… பசங்க ஸ்கூல்லே என்னவோ பிரச்னையாம், போன் வந்தது. நான் குழந்தைகளை அழைச்சிட்டு வந்திடறேன். வீட்லயே இரும்மா.” “”என்னண்ணா பிரச்னை?” “”வந்து சொல்றேன்,” போன் கட்டாகி விட்டது. “என்ன பிரச்னையாயிருக்கும்! கும்பகோணம் தீவிபத்து மாதிரி, அய்யோ…’ அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. மீண்டும் போன்; கணவரின் நம்பர் ஒளிர்ந்தது. “”ஹலோ… என்னங்க.” “”தாமரை… நான் ஸ்கூலுக்கு போய் குழந்தைகளை அழைச்சிட்டு